About Books
Third slide
சில நேரங்களில் சில மனிதர்கள் - எழுத்தாளர் ஜெயகாந்தனின் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவல். Anti-Brahminism நாவல் என்று சர்ச்சைக்கும் உள்ளானது. அதே பெயரில் படமாக்கப்பட்டு தேசிய விருதும் பெற்றது.
Third slide
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
Third slide
கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். இது சோழரின் படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமானை கதைத் தலைவனாகக் கொண்ட புதினமாகும். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அநபாயரும் அவரது படைத்தலைவரான கருணாகர பல்லவனும் அவர்களுக்கு உதவுவது கதையின் ஒரு பகுதியாகும். இம்முயற்சிக்கு அநபாயரின் தோழரான அமீர் என்ற அராபியரும் அவரது ஆசானாகிய அகூதா என்ற சீனரும் உதவுகின்றனர். கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.
Third slide
இது மனிதனின் கதை. வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன், உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது. நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி.நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில மனிதன் கண்டுபிடித்துள்ள மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம்தான். வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களிலேயே மிகக் கடுமையான குற்றம் நவீன வேளாண்மையில் விலங்குகள் நடத்தப்படுகின்ற விதம்தான். தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களைவிட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை.
Third slide
கருணாமிர்த சாகரம் முத்தமிழ் அல்லது மொழி இசை மற்றும் நாடகத்தின் முக்கிய பிரிவுகளில் ஒன்றான இசை அல்லது இசைத்தமிழ் பற்றிய ஒரு கட்டுரை.
Third slide
இந்த கதையில் ஜெர்மன் பேராசிரியர் ஓட்டோ லிடன்ப்ராக், பூமியின் மையத்தை நோக்கி எரிமலைக் குழாய்கள் இருப்பதாக நம்புகிறார். அவர், அவரது மருமகன் ஆக்செல் மற்றும் அவர்களின் வழிகாட்டி ஹான்ஸ் ஆகியோர் ஐஸ்லாந்திய எரிமலை ஸ்னஃபெல்ஸ்ஜாகுலில் இறங்குகிறார்கள், வரலாற்றுக்கு முந்தைய விலங்குகள் மற்றும் இயற்கை ஆபத்துகள் உட்பட பல சாகசங்களை எதிர்கொள்கின்றனர். இறுதியில் தெற்கு இத்தாலியில், ஸ்ட்ரோம்போலி எரிமலையில் மேற்பரப்புக்கு வருகிறார்கள்.
Third slide
வாழ்க்கை வாழ்வதற்கே. எப்படியும் வாழலாம் என்று இல்லாது இப்படித்தான் வாழப்போகிறேன் என்று எண்ணி வாழ்வோர் குறைவே. என்னை நான் அறிந்து என்னை அன்பு செய்யப்போகிறேன் என்ற அவா எனக்குள் புத்துயிரைத் தருகிறது. மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக வேண்டுமானால், அவனது வாழ்வில் எத்தனை பேர்களுடன் உண்மையான அன்பு கொண்டுள்ளான் என்பதைப் பொறுத்திருக்கிறது.
Third slide
கிருஷ்ணமூர்த்தியின் போதனைகளின் இந்த விரிவான பதிவு சிறந்த தத்துவஞானியின் சிந்தனைக்கு ஒரு சிறந்த, பரந்த அறிமுகமாகும்.
Third slide
ஒழுக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட ஆட்சி முறைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்தப்படும் செயல் அல்லது செயலற்ற தன்மை. மனித மற்றும் விலங்குகளின் நடத்தைகளை ஒழுங்குபடுத்துவதற்கு ஒழுக்கம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும், இது ஒவ்வொரு செயல்பாடு-கிளைக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட செயல்பாடு, அறிவு மற்றும் பிற ஆய்வு மற்றும் அவதானிப்புத் துறைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஒழுக்கம் என்பது சுய, குழுக்கள், வகுப்புகள், துறைகள், தொழில்கள் அல்லது சமூகங்கள் உள்ளிட்ட எந்தவொரு ஆளும் நிறுவனத்திற்கும் தேவைப்படும் எதிர்பார்ப்புகளின் தொகுப்பாகும்.
Welcome To Tamil Bookshelf
Read Beautiful Rich Media Flipping Books In Tamil Bookshelf

Choose the Resource

Christianity

Bible and Books
Bible In All Languages, Christian Books, Audio Bible, Bible Chart and More.

Story Books

Novel and Books
Adventure, Fiction, Historical Fiction, Poetry, Philosophy and More.

Indian Music

Carnatic and Hindustani
For Learning Music: books, Ragas, Lyrics, Notes, Songs and More.

Learn Tamil

Learning to speak Tamil?
Checkout our free online Tamil lessons. Easiest and Fastest Way to Learn Tamil.!