புத்தகசாலை

தனித்தமைந்த வீட்டிற்புத் தகமும் நானும்
சையோகம் புரிந்ததொரு வேளை தன்னில்,
இனித்தபுவி இயற்கையெழில் எல்லாம் கண்டேன்;
இசைகேட்டேன்! மணம்மோந்தேன்! சுவைகள் உண்டேன்!
மனித்தரிலே மிக்குயர்ந்த கவிஞர் நெஞ்சின்
மாகாசோதி யிற்கலந்த தெனது நெஞ்சும்!
சனித்ததங்கே புத்துணர்வு! புத்த கங்கள்
தருமுதவி பெரிது! மிகப்பெரிது கண்டீர்!

மனிதரெலாம் அன்புநெறி காண்ப தற்கும்
மனோபாவம் வானைப்போல் விரிவ டைந்து
தனிமனிதத் தத்துவமாம் இருளைப் போக்கிச்
சகமக்கள் ஒன்றென்ப துணர்வ தற்கும்,
இனிதினிதாய் எழுந்தஉயர் எண்ண மெல்லாம்
இலகுவது புலவர்தரு சுவடிச் சாலை;
புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.

தமிழர்க்குத் தமிழ்மொழியிற் சுவடிச் சாலை
சர்வகலா சாலையைப்போல் எங்கும் வேண்டும்.
தமிழிலிலாப் பிறமொழிநூல் அனைத்தும் நல்ல
தமிழாக்கி வாசிக்கத் தருதல் வேண்டும்,
அமுதம்போல் செந்தமிழிற் கவிதை நூற்கள்,
அழகியவாம் உரைநடையில் அமைந்த நூற்கள்,
சுமைசுமையாய்ச் சேகரித்துப் பல்கலை சேர்
துறைதுறையாய்ப் பிரித்தடுக்கி வைத்தல் வேண்டும்.

நாலைந்து வீதிகளுக் கொன்று வீதம்
நல்லதுவாய் வசதியதாய் இல்லம் வேண்டும்.
நூலெல்லாம் முறையாக ஆங்க மைத்து
நொடிக்குநொடி ஆசிரியர் உதவு கின்ற
கோலமுறும் செய்தித்தாள் அனைத்தும் ஆங்கே
குவிந்திருக்க வகைசெய்து தருதல் வேண்டும்.
மூலையிலோர் சிறுநூலும் புதுநூ லாயின்
முடிதனிலே சுமந்துவந்து தருதல் வேண்டும்.

வாசிக்க வருபவரின் வருகை ஏற்றும்
மரியாதை காட்டிஅவர்க் கிருக்கை தந்தும்,
ஆசித்த நூல்தந்தும் புதிய நூல்கள்
அழைத்திருந்தால் அதையுரைத்தும், நாளும் நூலை
நேசித்து வருவோர்கள் பெருகும் வண்ணம்
நினைப்பாலும் வாக்காலும் தேகத் தாலும்
மாசற்ற தொண்டிழைப்பீர்! சமுதா யச்சீர்
மறுமலர்ச்சி கண்டதென முழக்கஞ் செய்வீர்!

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

About Library

Tamil Bookshelf is an open and voluntary initiative to collect and publish free electronic editions of ancient tamil literary classics. We've helped hundreds of authors just like you to realise their dreams of reading their books worldwide.


Digital Library

These digital libraries is among the world’s greatest repositories of knowledge for the specialized fields they support. Collectively they are among India’s greatest scientific and cultural treasures. They belong to the nation, and through their expanding on-line presence and digitization initiatives more and more people from across the country and around the world are able to access their vast resources.

Motivation

Tamil Bookshelf is a library containing thousands of popular and award-winning titles that are free for reader from in-need communities. These eBooks can be read without checkouts or holds. The goal of Tamil Bookshelf is to encourage a love of reading and serve as a gateway to reader reading even more often, whether in school, at libraries.

Expectation

Tamil Bookshelf truly span the range of scientific and cultural pursuits of humanity from aerospace, anthropology, and art history to business history and botany, cultural history, design, philately, zoology, and much, much more. As well as visiting scholars, educators, students, and others pursuing or advancing knowledge in their fields.

அனைவருக்கும் கல்வி என்பது மனித இனம் முழுவதற்கும் கல்வி வழங்குதல் என்பதை குறிக்கின்றது.

நமது சமூக கட்டமைப்பில் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் எனும் முக்கோண கோட்பாட்டின் சமூகத்தின் இயல்பாக நிலைநிறுத்துவதே கல்வி தான். தனி மனித பலவீனத்தை அகற்றி தனி மனிதர்கள் சமூகக் கட்டுக்கோப்புக்கு உரியவராக மாற்றும் பணியை கல்வி மட்டுமே முன்னெடுக்கின்றது. வாழ்க்கையை மேம்படுத்துகின்ற நமது குணங்களை சீர்படுத்தி மனதை ஆற்றுப்படுத்துகின்றது. மனிதம் நிறைந்த சமூக கட்டமைப்பு உருவாகுவதற்கு சமூகத்துக்கான சமூக உணவாக இருப்பது புத்தகங்கள் மட்டுமேயாகும். வீட்டுக்கொரு நூலகத்தை நாம் முன்னிருத்த வேண்டும். புத்தக வாசிப்பென்பது சமூக சுவாசமாக மாற்றப்பட வேண்டும். அப்பொழுது மட்டுமே கல்வியின் மீது கட்டப்பட்ட அறிவார்ந்த சமூகம் உருவாகும்.

மகாத்மா காந்தி கல்வி பற்றி தனது கருத்தில் கல்வியானது சகல பிரிவுகளிலும் தனியாளிடமுள்ள ஆற்றல்களில் உச்ச விருத்தி கல்வி மூலம் நிறைவேற்றப்படல் வேண்டும் எனக் கூறினார்.


Reading Books

1. Children who read often and widely get better at it.

After all, practise makes perfect in almost everything humans do, and reading in no different.

2. Reading exercises our brain.

Reading is a much more complex task for the human brain rather than watching TV, for example. Reading strengthens brains connections and builds NEW connections.

3. Reading improves concentration.

Children have to sit still and quietly so that they can focus on the story when they are reading. If the read often, they will develop the skill to do this for longer.

4. Reading teaches children about the world around them.

Through reading a variety of books children learn about people, places, and events outside of their own experience.

5. Reading improves vocabulary and language skills.

Children learn new words as they read. Subconsciously, they absorb information on how to structure sentences and how to use words and other language features effectively in their writing and speaking.

6. Reading develops a child's imagination.

As we read our brains translate the descriptions we read of people, places and things into pictures. While we are engaged in a story we are also imagining how a character is feeling. Young children then bring this knowledge into their everyday play.

7. Reading helps children to develop empathy.

As children develop they begin to imagine how they would feel in that situation.

8. Reading is a fun.

A book or an e-reader doesn't take up much space and is light to carry, so you take it anywhere so you can never be bored if you have a book in your bag.

9. Reading is a great way to spend time together.

Reading together on the sofa, bedtimes stories and visiting the library are just some ways of spending time together.

10. Children how read achieve better in school.

Reading promotes achievement in all subjects, not just English. Children who are good readers tend to achieve better across the curriculum.