திராவிட இந்தியா
ந.சி. கந்தையா
1. திராவிட இந்தியா
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. திராவிட இந்தியா


திராவிட இந்தியா

 

ந.சி. கந்தையா


நூற்குறிப்பு
  நூற்பெயர் : திராவிட இந்தியா
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 164 = 184
  படிகள் : 2000
  விலை : உரு. 80
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

திராவிட இந்தியா


முன்னுரை
திராவிட மக்களின் வரலாற்றை நூறு வகையில் விரித்து எழுதலாம். அவ்வாறு நூல்கள் வெளிவரின் பொதுமக்களும் மாணவரும் திராவிட மக்களின் உண்மை வரலாறுகளை நன்குகற்று உண்மை அறிவர். இன்று பள்ளிக்கூடங்களுக்கு என எழுதப்படும் வரலாற்று நூல்களில் காணப்படுவ திராவிட மக்களைப் பற்றிய உண்மைச் செய்திகள் பல காணப்படுவதில்லை. திராவிட இந்தியா என்னும் இந்நூல் பற்பல ஆராய்ச்சி அறிஞர் ஆராய்ந்து கண்ட உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு கற்போர் எளிதிற் படித்துப் பொருள் விளங்கும் முறையில் அமைந்துள்ளது. திராவிட மக்களின் பொற்காலம் இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின் முன் உள்ளது. சங்ககாலம் திராவிட மக்களின் பொற்காலத்தின் கடைக்காலமாக விருந்த தென அறிகின்றோம். முன்பின் மூவாயிரம் ஆண்டுகள் வரையில் திராவிட மக்களின் பொற்காலம் நிலவிற்று. இந்திய மக்களின் நாகரிகமென்பது திராவிட மக்களின் நாகரிகமே. இவ்வுண்மையை இன்று வரலாற்றாசிரி யர்கள் எடுத்துக்கூற முற்பட்டுள்ளார்கள். பேராசிரியர் சுந்தரம் பிள்ளை, பண்டிதர் சவரிராய பிள்ளை காலம் முதல் அறியப்பட்டிருந்த பற்பல உண்மைகள் பொதுமக்களிடையே பரவாதும் பரப்புவாரற்றும் கிடந்து இன்று பரவுவது ஓர் நற்காலத்தின் அறிகுறியே யாகும்.

சென்னை

ந.சி. கந்தையா.

திராவிட இந்தியா
தோற்றுவாய்

இந்திய மக்கள் வரலாற்றில் திராவிட மக்கள் வரலாறு மிக முதன்மை யுடையது. இன்று இந்திய நாகரிகம் எனப் பெயர் பெறுவது ஆரிய திராவிட நாகரிகங்களின் கலப்பினால் தோன்றியது. ஆரிய நாகரிகத்துக்கு முற்பட்டது திராவிட நாகரிகம். இதிற் சிறிதும் ஐயப்பாடு இல்லை. நீண்ட காலம் திராவிட நாகரிகத்தைப்பற்றிய செய்திகள் அறியப்படாது கிடந்தன; அதனால் திராவிடரின் பண்பாட்டைக் குறித்த செய்திகள் வரலாற்றாசிரி யர்களால் பற்பலவாறு திரித்துக் கூறப்படலாயின. இன்று தமிழரின் நாகரிகத்தைப் புலப்படுத்தும் சான்றுகள் பல கிடைத்துள்ளன. இச்சிறிய நூல் திராவிடரின் நாகரிகச் சிறப்புக்களைப்பற்றிக் கூறுகின்றது.

திராவிடர் பிறப்பிடம்
“திராவிட மக்கள் அயல்நாடுகளிலிருந்து இந்தியாவின் வடபகுதி களை அடைந்தார்கள். பின்பு ஆரியர் என்னும் புதிய சாதியினர் அங்கு வந்தனர். அவர்கள் திராவிடரை வென்று தெற்கே துரத்தினர். அவர்கள் தெற்கே வந்து வாழ்ந்தார்கள். அவர்களே தமிழர் எனப்படுவோர்.” என மேல்நாட்டாசிரியர் சிலர், பல ஆண்டுகளின்முன் உண்மை அறியாது மயங்கி எழுதிவைத்தனர். அக்கொள்கை இன்று சிறிதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருக்கவில்லை. பள்ளிச் சிறுவர்களுக்கு வரலாறு எழுதும் ஆசிரியர் பலர் உண்மையல்லாத பழைய கொள்கையைப் பின்பற்றி எழுதிவருவது வருந்தத்தக்கதே யாகும்.

திராவிட மக்கள் வெளிநாடுகளிலிருந்து வந்து இந்திய நாட்டை அடைந்தார்கள் என்று கூறுவதற்கேற்ற ஆதாரம் ஒன்றேனும் காணப்பட வில்லை. பழைய கற்காலம் முதல் இரும்புக்காலம் வரையில் மக்கள் தொடர்பாகச் செய்து பயன்படுத்திய ஆயுதங்களும் பிறபொருள்களும் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களிற் கண்டு எடுக்கப்பட்டுள்ளன.1

திராவிட மக்கள் அயல்நாடுகளினின்றும் வந்தார்கள் என்று கூறுவோர்க்குத் துணையாயிருப்பது ஆப்கானிஸ்தானத்தின் ஒரு பகுதியில் தமிழுக்கு இனமுடைய பிராகூய் மொழி வழங்குவது. இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின்முன் சிந்து ஆற்று வெளிகளில் திராவிடர் நாகரிகம் பரவியிருந்தது. அங்கு தமிழ் வழங்கிற்று. இம்மக்களின் தொடர்புடைய வர்களே ஆப்கானிஸ்தானத்தில் தங்கி வாழ்ந்தார்கள். அவர்களின் சந்ததியினரே திராவிடத்தின் சம்பந்தமுடைய பிராகூய் மொழியை இன்றும் பேசிவருகின்றனர்.1

திராவிட மக்கள் பழமைதொட்டே இந்திய நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களின் பழைய நாடு குமரி முனைக்குத் தெற்கிலும் பரந்து கிடந்தது.
நாகரிகத்தின் பழமை

மேற்கு ஆசியா எகிப்து முதலிய நாடுகளில் பழைய இடிபாட்டு மேடுகள் தோண்டி ஆராயப்பட்டுள்ளன. அங்கு கிடைத்த பழம் பொருள் களைக்கொண்டு அந் நாடுகளின் நாகரிகம் ஏழாயிரம் அல்லது எண்ணா யிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென ஆராய்ச்சியாளர் துணிந்துள்ளனர். மைசூரிலே சிற்றால்ரக் என்னும் இடத்திலும் சிந்துவெளியிலும் செய்யப் பட்ட அகழ் ஆராய்ச்சிகளால் இந்திய நாட்டின் நாகரிகமும் அந்நாட்டு நாகரிகங்களை ஒத்த பழமையுடையதென அறியப்படுகின்றது. எகிப்து, மேற்கு ஆசியா முதலிய நாடுகளில் நாகரிகத்தைத் தோற்றுவித்தோர் அயல் நாடுகளினின்றும் சென்றவர்களாவர் என்றும், அவர்கள் இந்திய நாட்டி னின்றும், சென்றார்கள் எனக் கொள்வதற்குப்பல ஏதுக்கள் உள்ளவென்றும் சிறந்த மேற்திசை ஆராய்ச்சி அறிஞர் பலர் புகன்றுள்ளார்கள்.2

தமிழும் திராவிடமும்
இன்று தமிழரைக்குறிக்கத் திராவிடர் என்னும் பெயரும் வழங்கு கின்றது. திராவிடம் என்னும் சொல்லைப் பற்றிப்பலர் பலவாறு ஆராய்ந்து கூறியுள்ளார்கள். திராவிடமென்பது தமிழ் என்னும் சொல்லின் உச்சரிப்பு வேறுபாடு என்பதே ஆராய்ச்சி அறிஞர் இறுதியாகக் கொண்ட முடிவு. இன்று திராவிடம் என்னும் சொல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு முதலிய மொழிக் கூட்டத்தைக் குறிக்க வழங்குகின்றது. திராவிடர் என்னும் பெயர் இம் மொழிக் கூட்டத்துக்குரிய மக்களைக் குறிக்கின்றது.1

சூழல்நிலைக்கேற்ப மக்கள் பண்பாடு அடைதல்
உலகில் மக்கள் வாழக்கூடிய இடங்கள் ஐந்து வகையின என்று பழந்தமிழர் கண்டனர். அவர்கள் அவ்வகை நிலங்களைத் திணைகள் என்றனர். திணை என்பது திட் அல்லது திண் என்னும் அடியாகப் பிறந்தது. நிலப்பரப்பு என்பது அதன் பொருள். திட் அல்லது திண் என்பதிலிருந்தே திட்டு, திட்டை, திடர், திண்ணை முதலிய சொற்கள் பிறந்தன. திண் என்பது வலிமையையுங் குறிக்கும். இடங்களின் சூழ்நிலைக்கேற்பவே மக்களின் திருத்தமும் வளர்ச்சியடைந்தது. தண்ணீரில்லாத வறண்ட மணற் பகுதி பாலை எனவும், மலைநாடு குறிஞ்சி எனவும், மலைநாட்டுக்கும் கீழ்நாட்டுக் கும் இடைப்பட்ட குறுங்காட்டு நிலம் முல்லையெனவும், ஆற்றோரங்கள் மருதமெனவும், கடற்கரை நெய்தல் எனவும் வழங்கின. இவ்வகை நிலங் களும் தமிழ்நாட்டில் ஓரளவு உண்டு. மக்கள் தோன்றிய காலம் முதல் தமிழர் தென்னிந்தியாவில் வாழ்ந்துவருகின்றார்கள். அவர்கள் ஒரு நிலத்தினின்று இன்னொரு நிலத்துக்குச் சென்று படிப்படியான சீர்திருத்தங்களை அடைந்தனர்.

மலையும் மலைசார்ந்த நிலமும்
மக்கள் முதல்முதல்குடியேறி வாழ்ந்த இடம் மலை. மிகமிக நீண்ட காலம் மழையினாலும் பருவக்காற்றினாலும் தாக்குண்டதால் தேய்ந்து போன சிறிய குன்றுகள் பல தென்னிந்திய பூமிகளிற் காணப்படுகின்றன. இம் மலை இடங்களுக்குக் கீழே தண்டகம் என்னும் இருண்ட காடு இருந்தது. அங்கு சிங்கம், புலி, யானை, காட்டு எருமை, சிறுத்தை, மனிதனுக்கு அழிவைச் செய்யும் பூச்சி வகைகள் காணப்பட்டன. ஆதிகால மனிதன், வெய்யில், மழை, விலங்குகள் முதலியவைகளினின்று தன்னைக் காப்பாற்றிக்கொள்ளக் கூடிய குகைகள் மலையிடங்களிலிருந்தன. அவன் தண்ணீரைச் சேமித்து வைப்பதற்கு மண் பாத்திரங்களைச் செய்ய அறிந்திருக்கவில்லை. நீரூற் றுகள் வற்றிய காலத்தில் பாறைகளிலுள்ள குழிகளில் நீர் நிறைந்திருந்தது. அவன் அதனைக் கைகளால் அள்ளிப் பருகினான்; காலடியிற் கிடந்த கற் களை எடுத்து அவைகளிலிருந்து கோடரி, ஈட்டிமுனை, அரியும் கருவிகள், சுரண்டும் கருவி முதலியவை களைச் செய்யப் பழகிக்கொண்டான். இந் நிலையிலிருந்து மனிதனின் சீர்திருத்தம் வளர்வதாயிற்று. மிக முற்பட்ட திருத்த காலம் பழைய கற்காலம் எனப்படும். பழைய கற்கால நாகரிகத்தைக் காட்டும் கையினாற் செய்யப்பட்ட பொருள்கள் கடப்பா, நெல்லூர், வட ஆர்க்காடு, செங்கற்பட்டு முதலிய இடங்களிற் கிடைத்துள்ளன.

குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த மக்கள் பழங்கள் விதைகள் கிழங்குகளை உண்டு வாழ்ந்தனர். பருவகால மாறுதல்களால் இவ்வுணவுப் பொருள்கள், சிற்சில காலங்களில் அரிதிற்கிடைப்பவாயின. ஆகவே அவர்கள் ஊன் உணவையும் கொள்ளத்தொடங்கினர். அவர்கள் தற்காப்பின் பொருட்டு விலங்குகளோடு அதிகம் போராட வேண்டியிருந்தது. அதனால் அவர்கள் வேட்டை ஆடுவதில் திறமை பெற்றனர். ஆகவே தொடக்கத்தில் மனித னின் தொழில் வேட்டையாடுவதாகவிருந்தது; அப்பொழுது அவர்கள் ஓரிடத்தில் தங்காது அலைந்து திரிந்தார்கள். உலகம் முழுமையிலும் கண்டெடுக்கப்பட்டுள்ள பழைய கற்கால ஆயுதங்கள் எல்லாம் ஒரே வடிவின. இதனால் ஆதிகால மனிதன் உலகில் எங்கும் அலைந்து திரிபவ னாயிருந்தானெனத் தெரிகின்றது.

குறிஞ்சி நிலச்சூழல், மனித சீர்திருத்தத்திற்கு அடிப்படையாகிய இரண்டு புதியவற்றைக் கண்டுபிடிக்கும்படி செய்தது. அவற்றுள் ஒன்று வில்லும் அம்பும், மற்றது நெருப்பு உண்டாக்குதல். மலைகளில் மூங்கில் அதிகம் வளர்கின்றது. மலையில் வாழும் மக்கள் மூங்கிலின் வளையுந் தன்மையை நோக்கி அறிந்தார்கள். அவர்கள் அதனைப் பிளந்து இரு முனைகளிலும் கொடியைக் கட்டி நீண்ட முட்களை அதில் வைத்து எய்யப் பழகினார்கள். இன்றும் மலைகளில் வாழும் மக்கள் ஒரே அம்பினால் ஒரு புலியைக் கொல்லும் திறமை பெற்றிருக்கிறார்கள்.

ஆதிகால மக்கள் மலையில் தீ உண்டாகி எரிவதைக் கண்டார்கள். மூங்கில் ஒன்றோடு ஒன்று உரோஞ்சுவதால் தீயுண்டாகின்றதென்பதை அவர்கள் அறிந்தார்கள்; ஆகவே தாமும் இரண்டு தடிகளை ஒன்றோடு ஒன்றை உரோஞ்சித் தீ உண்டாக்கலாமென எண்ணினார்கள். தாம் வேட்டை யாடிக் கொன்ற விலங்குகளின் இறைச்சியை வேகச் செய்யும் பொருட்டு அவர்கள் முதலில் நெருப்பைப் பயன்படுத்தினர்.

ஆடவர் வேட்டையாடச் சென்றார்கள். பெண்கள் காட்டிற் சென்று பழங்களைப் பொறுக்கினார்கள்; கிழங்குகளை அகழ்ந்தார்கள்; தாம் வாழிடங்களைச் சுற்றித் தானே விளைந்த மலை நெல், மூங்கிலரிசி முதலி யவைகளையும் சேகரித்தார்கள். பெண்களின் அடுத்த கடமை குழந்தை களை வளர்ப்பது. இவ்வகை நிலையிலிருக்கும்போது அவர்கள் வீடு அமைக்க அறியவில்லை. தென்னிந்திய வெப்ப நிலைக்கு வீடு வேண்டிய தில்லை; மர நிழல்களும் மலைக்குகைகளுமே ஒதுக்கிடங்களாகப் பயன் பட்டன. மக்கள் தொடக்கத்தில் வீடுகளை உறைவிடத்தின் பொருட்டு அமைக்கவில்லை; தமது செல்வமாகிய உணவுப் பொருள்களைப் பத்திரப் படுத்திவைக்கும் பொருட்டு அமைத்தனர். பழைய கற்கால மனிதனுக்கு உணவைச் சேமித்து வைக்கும் தேவை உண்டாயிருக்கவில்லை. வீடு இல்லாமையாலும், அலைந்து திரியவேண்டிய இன்றியமையாமையாலும் வீட்டில் தங்கி வாழ்வதாகிய உணர்ச்சி ஆடவரிடையே எழவில்லை. ஆகவே தாயாட்சி முறையான வாழ்க்கை ஆதியில் வளர்ச்சியடைவ தாயிற்று.

இவ்வகையான வாழ்க்கையை இன்னொன்றும் ஊக்கியது. முற்கால மனிதன் ஆடம்பரமான மணக்கிரியைகளால் கட்டுப்பட்டிருக்கவில்லை. ஆடவரும் மகளிரும் காதலித்து மணந்தனர். சில நாள்களின் பின் உறவி னரை அழைத்து விருந்து இட்டனர். இதுவே முற்காலத் திருமணக் கிரியை யாக விருந்தது. திருமணம் என்றும் நிலையான தன்மையுடையதாக விருக்க வில்லை. தனிப்பட்ட சொத்து இன்மையும் நிலையான வீடு இன்மையும் தாயாட்சி முறையான வாழ்க்கைக்கு நீண்ட காலம் வாய்ப்பு அளித்தன.

தமது மேனியை அலங்கரித்துக் கொள்வதில் ஆடவருக்கும் மகளி ருக்கும் விருப்பு உண்டு; இவ்விருப்புப் பெண்களுக்கு அதிகம். குறப் பெண்கள் ஓய்வு நேரங்களில் ஓடுகளைப் பொறுக்கினார்கள்; அவைகளை மாலையாகக் கோத்து அணிந்தார்கள். அவர்களின் காதலர் வேட்டை யாடுவதிற் கிடைத்த புலிநகம், புலிப்பல் போன்றவைகளைக் கொடுத் தார்கள். அவைகளையும் அவர்கள் கழுத்தில் அணிந்தார்கள். பிற்காலத்தில் இவையே தாலியின் வடிவாகமாறின. தென்னிந்தியப்பெண் தாலிதரித்தல் திருமணம் செய்துகொண்டமைக்கு அடையாளமாகும். பெண்களின் இன்னொரு அலங்காரம் தழைஉடை. தழைஉடை என்பது கொடியிற் கட்டிய தழைகளாலான உடை. இவ்வுடை உடுக்கும் வழக்கம் இன்றும் சில காட்டுச் சாதியினரிடையே காணப்படுகின்றது.

மணலும் மணல்சார்ந்த இடங்களும்
மணலும் மணல்சார்ந்த இடமும் பாலை எனப்படும். இது மக்கள் வாழக்கூடிய இடத்தின் ஓர் உட்பிரிவில் அடங்கும். வேடன் காட்டு விலங்கு களைத் துரத்திச் செல்லும்போது பாலைநிலத்தில் நிலையில்லாது சிலகாலம் தங்குவான். பாலைநிலத்தில் சிலகாலம் தங்குவோர் அல்லது அங்கு வாழ்வோர் மறவர் எனப்படுவர். மறம் வீரத்தை உணர்த்தும். இவர் 1கள்ளர் எனவும் பட்டனர். பாலை நிலம் செழுமையற்றதாதலாலும் பாலைநில மக்கள் போர்த் தொழிலில் சிறந்தவர்கள் ஆதலினாலும் மறவரும் கள்ளரும் செல்வரையும் மற்றநிலங்களில் வாழும் வலியற்றவர்களையும் கொள்ளை யிட்டு வாழ்வாராயினர். இதனால் மறம் என்பது கொடுமையையும் கள்ளர் என்பது திருடரையும் குறிக்க வழங்கலாயின.

காடும் காடுசார்ந்த நிலமும்
குறிஞ்சி நிலத்தில் மக்கள் பெருகியபோது உணவு சுருங்கிற்று. அப்பொழுது மக்கள் அயலிலுள்ள முல்லை நிலத்திற்குச் செல்வாராயினர். அப்பொழுது அவர்கள் சீர்திருத்தத்தில் இன்னொரு படியை அடைந்தனர். எருமை, பசு, ஆடு, செம்மறியாடு போன்ற விலங்குகளை இவர்கள் பழக்கி வளர்த்தார்கள். அவர்கள் குறவராயிருந்தபோது நாய் பழக்கி வளர்க்கப் பட்டது. முல்லை நிலத்தில் ஆடுமாடுகள் விரைவிற் பெருகின. ஆகவே சொத்து உண்டாயிற்று. இதனால் குடும்பங்களும், குடிகளும் தோன்றி வளர்ந்தன.

ஆடவரும் மகளிரும் ஒருவரை ஒருவர் காதலித்தலும், காதலின் அடையாளமாகக் காதலன் புலிநகம், இலையுடை முதலியவற்றைக் காதலிக்குக் கொடுத்துக் கிரியை இன்றி மணந்துகொள்வதுமாகிய மணம் களவு எனப்பட்டது. குறிஞ்சி நிலத்திற்றோன்றிய இவ்வகை மணங்கள் நின்றுபோயின. இப்பொழுது கற்பு ஒழுக்கம் தோன்றிற்று. காதலர் ஒருவ ரோடு ஒருவர் பழகுவதன்முன் மணச் சடங்கு இயற்றப்பட்டது. இலைக ளாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட பந்தரின்கீழ் சுற்றத்தினர் திரண் டிருந்து மணக்கிரியை நடத்தப்பட்டது.

சொத்துச் சேரத்தொடங்கியதும், கற்பு ஒழுக்கம் தோன்றியதும் சமூகம் தந்தை ஆட்சிமுறையாக வளர்வதாயிற்று. தந்தையே ஆடுமாடு களுக்குச் சொந்தமுடையவனாயிருந்தான். நிலங்களைப் பிரித்தால் ஆடுமாடுகள் மேய்வதற்கு முடியாமல் போகும். ஆகவே கூட்டுக் குடும்ப வாழ்க்கை தோன்றிற்று. தந்தை ஆட்சியில் பெரிய குடும்பத்தலைவன் அரசன்போல் ஆயினான். இம் முறையில் அரசன் தோன்றினான். ஆட்சி முறை முதலில் முல்லை நிலத்திலேயே தோன்றிற்று. கோன் என்பது பழைய தமிழ்ச்சொல். இது அரசனைக் குறிக்க வழங்குகின்றது. ஆய்ச்சி என்னும் சொல் இடைச்சியையும் அரசியையும் குறிக்கின்றது.

மற்ற நாடுகளில் இடையரின் வாழ்க்கை இடம்விட்டு இடம் அலைந்து திரிவதாகவிருந்தது. தென்னிந்தியா செழிப்புடையதாயும் எல்லாக் காலங் களிலும் ஆடுமாடுகளுக்கு வேண்டிய உணவு கிடைக்கக் கூடியதாகவும் இருந்தமையால் தென்னிந்திய இடையருக்கு இடம்விட்டு இடம் செல்ல வேண்டிய கட்டாயம் உண்டாயிருக்கவில்லை. ஆகவே தென்னிந்திய இடையரின் வாழ்க்கை ஓரிடத்தில் தங்கியிருப்பதாக அமைந்தது.

இடையர் ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலத்துக்கு ஓட்டிச் சென் றார்கள். மந்தைகள் மேயும்போது அவர்கள் மரநிழலில் தங்கியிருந்தார்கள்; பொழுதுபோக்கின் பொருட்டு மூங்கிற் குழலில் இனிய இராகங்களைப் பாடினார்கள். ஆடு மாடு மேய்ப்பவர்களில் ஒரு பிரிவினர் குறும்பர் எனப் பட்டனர். இவர்கள் மயிர் நீண்டு வளரும் குறும்பு ஆடுகளை வளர்த்தனர். குறும்பு ஆடுகளின் மயிரிலிருந்து கம்பளி நெய்யப்பட்டது.

கடலும் கடல்சார்ந்த நிலமும்
இதற்கு அடுத்த படியில் கடற்கரை நிலம் மக்களால் குடியேறப் பட்டது. இங்கு வாழ்ந்த மக்கள் கரையை அடுத்த கடலில் மீன் பிடித்தார்கள்; பின்பு ஆழமான நீரிற் சென்றார்கள். கடற்கரையில் வாழ்வோர் பரதவர் எனப்பட்டனர். இவர்களின் தொழில்கள் மீன் பிடிப்பதும் மரக்கலஞ் செய்வதுமாயிருந்தன. மிகப்பெரிய மரக்கலங்கள் கட்டுமரங்களாயிருந்தன. இதன்பின் தோலால் மூடப்பட்ட கூடைகள் தோணிகளாகப் பயன்படுத்தப் பட்டன. நெய்தல் நிலத்தில் கிடைக்கும் முக்கிய பொருள்கள் உப்பும் மீனும். பரதவர் இவைகளை மற்ற நிலங்களுக்குக் கொண்டு சென்று பிற உணவுப் பொருள்களுக்குப் பண்டமாற்றுச் செய்தனர். பரதவர் இவ்வாறு வணிகராயினர். அவர்கள் தமது பண்டங்களைப் பொதி மாடுகளில் ஏற்றிச் சென்றனர். இந்தியப் பொருள்களை ஆபிரிக்கா, அராபியா முதலிய மேற்கு நாடுகளுக்கும், கிழக்கே மலாயா, சீனா முதலிய நாடுகளுக்கும் ஏற்றிச் சென்ற கடலோடிகள் தோன்றினார்கள். கடற்கரை நிலங்கள் சில பயிர்ச் செய்கைக்கு ஏற்றவாயிருந்தன. அங்கு பயிரிடப்பட்டது.

வயலும் வயல்சார்ந்த நிலமும்
மருத நிலமக்கள் நிலத்தை உழுது பயிரிட்டார்கள். ஆற்றோரங்களில் வாழ்ந்த மக்கள் ஆற்று வெள்ளத்தை வாய்க்கால் வழியாக வயல்களுக்குப் பாய்ச்ச அறிந்திருந்தார்கள். இவ்வாறு மிக மிக முற்காலத்திலேயே பயிர்ச் செய்கை தென்னிந்தியாவில் மிக வளர்ச்சியடைந்திருந்தது. ஆற்றுப் பள்ளத்தாக்குகளுக்கு அப்பால் பஞ்சு விளையும் நிலம் இருந்தது. புதிய கற்கால மக்கள் பஞ்சிலிருந்து நூல் நூற்கவும் நூலால் ஆடை நெய்யவும் அறிந்திருந்தார்கள்.

இப்பொழுது மக்கள் மரங்களால் வீடு கட்டினார்கள். தேவைக்கு அதிகமான தானியம் வீடுகளில் சேமித்து வைக்கப்பட்டது. மற்ற நிலங்களி லுள்ள உப்பு, மீன், வெண்ணெய், தயிர், கல் ஆயுதங்கள் போன்றவைக்குத் தானியம் பண்டமாற்றுச் செய்யப்பட்டது. மருத நிலத்தில் பண்டமாற்றுச் செய்யமுடியாத பண்டங்களை வெளியே கொண்டு செல்லவேண்டிய அவசியம் உண்டாயிற்று. பண்டங்களைக் கொண்டு செல்வதற்கு வண்டிகள் செய்யக் கண்டு பிடிக்கப்பட்டது. உணவுக்குப் பயன்படக்கூடிய மரஞ்செடி களும் கண்டறியப்பட்டன. இவ்வாறு திராவிட நாகரிகம் இந்திய நாட்டிலேயே தோன்றி வளர்ச்சியடைந்தது. இந்தியாவின் அயலிலிருந்து நாகரிகம் இந்தியாவை அடைந்ததென்பதற்கு ஆதாரம் சிறிதும் காணப்படவில்லை.1

பேச்சு
சமையலும், உடையும் அல்லாத இன்னொன்றும் அறியப்பட்டது. அது பேச்சு. பேச்சு இசை சம்பந்தப்பட்டது அல்லது இசை சம்பந்தப்படாத தாக இருக்கலாம். பாடலுக்கு முன் பேச்சு இருந்ததெனப் பலர் கருதுகின் றனர். ஆதியில் பகுதி இசை சம்பந்தமும், பகுதி இசை சம்பந்தமில்லாததுமா யிருந்த பேச்சின் வேறுபாடே பாடலும் வசனமும் என வேறு பலர் கருதுகின் றனர். இதனை நன்கு அறிந்துகொள்ள முடியவில்லை. இலக்கிய வளர்ச்சியில் உரை நடைக்கு முற்பட்டது பாடல் எனத் தெரிகின்றது. பண், பாண் என்பது இசையின் பகுதிக்குப் பெயர். பண் என்பதிலிருந்து பாடு, பாட்டு முதலிய சொற்கள் எழுந்தன. பாடுதல் தமிழரின் ஆதிகாலப் பொழுது போக்குகளில் ஒன்று. பாணர் தொடக்கத்தில் பாடகராயிருந்தனர். நாகரிகம் வளர்ந்தபோது அரண்மனையில் அரசாங்கப் பாடகர் இருந்தனர். தமிழர் நாகரிகம் வளர்ச்சி யுற்றிருந்த காலத்தில் பாணர் அரசரின் நண்பரும் அவருக்கு ஆலோசனை கூறுவோருமாயிருந்தனர்.

சமயம்
மனிதன் ஆயுதம் செய்யும், உணவைச் சமைக்கும், உடை அணியும், பேசும் விலங்காக மாத்திரம் இருக்கவில்லை; சமயமுடைய விலங்காகவும் வாழ்ந்தான். அவன் தான் விரும்பியவைகளைப் பெறவும், தன்னை அச்சுறுத்தும் தீமைகளைப் போக்கவும் வலிய ஆற்றலை வேண்டிக் கொள்ளும் வழிகளையும் அறிந்திருந்தான். அவ்வழிகள் மந்திர வித்தை தொடர்பான கிரியைகள். அவை விருந்து, பாட்டு, கூத்து வடிவிலிருந்தன. பிற்காலத்தில் விருந்து பாட்டு கூத்து என்பன வெவ்வேறாகப் பிரிக்கப் பட்டன. இடங்களுக்கேற்ப ஒவ்வொரு நிலத்திலும் தெய்வங்களும் கிரியை களும் தோன்றின.

பழைய தமிழ் இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையைக் கண்ணாடி போல் காட்டுகின்றன. பழைய தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் மறைந்து போயின. வாணிகம், ஆட்சி, தொழில், ஆட்சி முறைகள் கையாளப்பட்டன. இலக்கியங்கள் பெரும்பாலும் மனப்பாடஞ் செய்யப்பட்டுவந்தன. பழைய இலக்கியங்கள் பல இறந்துபோயின என்பதற்குத் தொல்காப்பியப் பொரு ளதிகாரத்துக்கு உரை எழுதிய பழைய ஆசிரியர்கள் துறைகள் பலவற்றுக்கு ஏற்ற மேற்கோள் காட்டமுடியாமல் இருந்தமையே சான்றாகும். இப் பொழுது கிடைத்துள்ள பழைய இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கை முறைகள் அவர்கள் வாழ்ந்த நிலங்களுக்கேற்பத் தோன்றி வளர்ச்சி யடைந்தன என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன.

பாடல்கள்
தமிழ்நாடு நில அமைப்புக்கேற்பப் பிரிக்கப்பட்டிருந்த காலத்தில் பாடல்கள் தோன்றின. ஒவ்வொரு நிலத்திலும் அந்நிலத்தின் வாழ்க்கைக் கேற்ற பாடல்கள் எழுந்தன. ஆகவே திணை என்பது குறித்த நிலத்துக் குரிய பாடல் வகையைக் குறிப்பதாயிற்று. மனிதனின் காதல், போர் என்பவை களே புலவர் பாடுதற்கு ஏற்ற கருத்துக்களாகக் கொள்ளப்பட்டன. ஆகவே பாடல்கள் இரு வகைப்பட்டன. அகத்திணை, புறத்திணை என்பன அவற் றின் பிரிவுகள். அகம் என்பது காதலுடைய இருவர் மாத்திரம் உணர்ந்து அனுபவிக்கக் கூடியது; புறம் மற்றவரோடு கலந்து பங்குபற்றத் தக்கது. ஐந்து நிலங்களுக்குமுரிய காதற் செயல்கள் ஐந்து எனக்கொள்ளப்பட்டன. குறிஞ்சி நிலத்துக்குரியவை காதலர் ஒருவரை ஒருவர் கண்டு காதலித்து உடன் மணத்தல், மலைக் காட்சி முதலியன. ஆடவரும் மகளிரும் தனித் தனியே எதிர்ப்பட்டு காதலிப்பதற்கு ஏற்ற இடம் மலையாதலில் கூடலும் கூடல் நிமித்தமும் குறிஞ்சி நிலத்துக்கு உரிப்பொருளாகக் கொள்ளப்பட்டன.

காதலன் காதலியை சுரவழியே பெண் வீட்டார் அறியாது கொண் டேகுதல், காதலன் காதலியை விட்டுப் பிரிந்து செல்லுதல் போன்ற பொருள் களைப் பாலைப் பாடல்கள் கூறுகின்றன. பிரிந்து சென்ற காதலன் வருந் துணையும் ஆற்றியிருப்பதாகிய செயலைக் கூறுவது முல்லை. தலை வனைப் பிரிந்த காதலி அவன் வரவை நினைந்து இரங்கியிருத்தல் நெய்தல். மருத நிலத்தில் விதைப்பு முடிந்து அறுப்புக் காலம் வரையில் மக்கள் பொழுது போக்குதற்கு ஏற்ற ஒழிவு உண்டு. அக்காலங்களில் காதலருக் கிடையில் ஊடல் நேரும். இது பெரும்பாலும் தலைவன் பரத்தையருடன் நட்புக் கொண்டிருத்தலால் உண்டாகும்.

திணைக்குரிய மக்களின் பெயர்களிற் சில இக்காலத்தில் சாதிப் பெயர்களாக வழங்குகின்றன. குறவர், மறவர், பரதவர், இடையர், வேளாளர் என்பன அவற்றுட் சில.
திராவிடநாடு மிக முற்காலத்திலேயே நாகரிகம் பெற்றிருந்தது

மிக மிக முற்காலத்திலேயே திராவிடருடையநாகரிகம் மிக உயர் வடைந்திருந்தது. நாட்டின் செழிப்பும் வாணிகமும் செல்வத்தை வளர்க் கின்றன. மக்களின் குழப்பமில்லாத வாழ்க்கையும் செல்வம் வளர்வதற்கு மற்றொரு காரணம். வடநாட்டு மக்கள் அடிக்கடி அன்னியப் படை எடுப்புக் களால் கலக்குண்டார்கள். அவர்கள் கையில் வாளைப் பிடித்துக்கொண்டு வீட்டையும் உறவினரையும் காக்கவேண்டியிருந்தது. அங்கு மக்களுக்கும் சொத்துக்கும் பாதுகாப்பு இருக்கவில்லை. தென்னாட்டு மக்களுக்கு இவ்வகைத் தொல்லை இருக்கவில்லை. நாட்டின் செல்வத்தை வற்றச் செய்யும் பெரியபோர்கள் தென்னாட்டில் நிகழவில்லை. தென் கடல்களில் கடற்கொள்ளைக்காரரும் காணப்படவில்லை. தரையில் அமைதி நிலவிற்று. அக் காலத்தில் அறியப்பட்டிருந்த கடலை அடுத்த நாடுகளோடு தமிழர் வாணிகம் புரிந்தனர். பாபிலோன், எகிப்து, அசிரியா முதலிய நாடுகள் இந்தியாவோடு வாணிகம் புரிந்தன. நாடு செல்வவளமடைந்தது. வடக்கே வாழ்ந்த மக்களைவிடத் தெற்கே வாழ்ந்த மக்கள் செல்வம் படைத்திருந் தனர். கடற் பயணங்கள் தென்மேற்கு இந்தியாவுக்கும் பாபிலோனுக்கு மிடை யில் ஒழுங்காக நடைபெற்றது. மரக்கலமோட்டும் மாலுமிகள் திராவிட மக்களாகவிருந்தனர். தந்தம், குரங்கு, மயில் போன்றவைகளின் தமிழ்ப் பெயர்கள் மேற்குத் தேசங்களில் வழங்கின. நிலம் செழிப்புற்றிருந்தது. கனிகளில் பொன் அரிக்கப்பட்டது. வைரம், முத்து, பவளம் முதலியவும் அதிகம் கிடைத்தன. தேக்கு, சந்தனம் முதலிய மரங்கள் மேற்குத் தேசங் களுக்கு ஏற்றப்பட்டன. தமிழில் காணப்படும் நாடு, ஊர் என்னும் சொற்கள் தமிழரின் பழைய பண்பாட்டை உணர்த்துவன. நாடு என்னும் சொல் நடு என்னும் அடியாகப் பிறந்தது. பலவகை மரஞ்செடிகளை நட்டு உண் டாக்கும் இடம் நாடு எனப்பட்டது. ஊர் என்பதற்கு வயல் சூழ்ந்த இடம் என்பது பொருள். ஊர் என்பது உழு என்னும் அடியாகப் பிறந்தது. ஊர் என்பது உழுதலை உணர்த்தும். முற்காலத்தில் நாட்டைப்பற்றியும் ஊரைப் பற்றியுமுள்ள தமிழருடைய கருத்து இதுவாகும். பழைய சாலதியாவின் தலைநகர் 1ஊர் எனப்பட்டது. உரோமரின் நகரைக் குறிக்கும் பெயர் ஊர்ப்ஸ். இவை ஊர் என்னும் தமிழ்ச்சொல் சம்பந்தமானவை. நாடு என்பதற்கு எதிர்ச் சொல் காடு. காடு என்பதற்குக் கடத்தற்கு அரியது என்பது பொருள். காட்டைக் கெடுத்துப் பயிரிடும் நிலம் நாடு எனப்பட்டது.

இவ்வாறு திராவிடரின் நாகரிகம் இத் தமிழ் நாட்டிலேயே படிப்படி வளர்ச்சியடைந்துள்ளது என அறிந்துகொண்டோம். இனித் தமிழர் நாகரிகத்தின் சிறப்பு இயல்புகளைத் தனித்தனி எடுத்துக் கூறுவோம்.

நாகரிக மடைந்த திராவிடர்
தொலைவிடங்களிற் சென்று குடியேறுதல்

சூழ்நிலைக்கேற்ப மக்கள் எவ்வாறு நாகரிக வளர்ச்சி பெற்றார்கள் என்பதை விளக்கியுள்ளோம். இன்று தென்னிந்திய மக்கள் இலங்கை, மலாயா, மொரிசஸ், தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகளிற் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். மிகப் பழங்காலத்திலேயே திராவிட மக்கள் ஆபிரிக்கா மேற்குப் பாரசீகம், மலாயா, கம்போதியா, சுமத்திரா, யாவா, சீனா முதலிய பல நாடுகளிற் சென்று குடியேறி வாழ்ந்தார்கள். இந் நிகழ்ச்சியை வலியுறுத்தும் சான்றுகள் பல இன்று கிடைத்துள்ளன.

“பண்டை நாளிலே சீரும் சிறப்பும் எய்தியிருந்த மிசிரம் என்னும் எகிப்து நாட்டினம், பாரசீகக் கடற்கரையிலிருந்து அழிந்துபோன சுமேரு (Sumeria) நாட்டிலும், சோழர் குடியேறினமையினாலே. சோழதேயம் என்னும் பெயரினை எய்திப் பிற்காலத்திலே மொழிச் சிதைவினாலே சாலதேயா (Chaldea) என வழங்கப்பட்ட தொல்பதியிலும் சோழர் குலத்தார் கலத்திற் சென்று வெற்றி பெற்றுத் தமது ஆணை செலுத்திய கிரேத்தத் (Crete) தீவிலும் அதற்கணித்தாகிய யவனபுரத்திலும் (Greece) உரோமர் வருவதற்குமுன் பழைய இத்தாலி (Italy) தேசத்திலும் ஐபீரியா எனப்பட்ட பழைய ஸ்பெயின் (Spain) தேசத்திலும் பிறவிடங்களிலும் தமிழ்க்குலத்தார் வாழ்ந்து நாகரிகம் பரப்பினார்களென மேற்றிசை அறிஞர் ஆராய்ச்சியாற் கண்டு வெளியிட்டிருக்கின்றனர்……சிந்துநதி தீரத்திலே பாண்டிய மன்னர் ஆளுகையிலே மீனாடு என்னும் பெயரோடு திகழ்ந்ததும் பின்னாளிலே ‘இறந்தோர் மேடு’ என்னும் கருத்துடைய முகஞ்சதரை (Mohonjo Daro) என்னும் பெயரெய்தியதுமாகிய நாட்டிலே மிதுனராசியானது யாழ் என்னும் பெயரினால் வழங்கப்பட்டு இணையாழுருவத்திலே குறியீடு செய்யப் பட்டதென அறிஞர் கூறுவர்.

“மணிமலர் என்னும் கட்டுரைத் தொகுதியினுள்ளே பண்டைத்தமிழர் பெருமை என்னும் உரையினை எழுதிய சென்னைப் பல்கலைக் கழகத்து வரலாற்றுப்பகுதி ஆசிரியர் வி.ஆர். இராமசந்திர தீட்சிதரவர்கள், ‘தென் னாட்டிலிருந்து தமிழ் நாகரிகம் உரோமா புரிக்கும், கிரேக்க நாட்டிற்கும் பரவியது. இன்னும் தக்கண பீடபூமியைச் சேர்ந்த வேட்டுவர்1 (கிராதர்) என்ற குறிஞ்சி நில மக்கள் யவன தேசத்திற்குச் சென்று தங்கள் அரசை நிலை நிறுத்தித் தங்கள் பெயரையும் அந்நாட்டிற்குக் கொடுத்தார்கள். இதுவே கிரீட் (Crete) தேசம். இதன் நாகரிகத்துக்கும் தமிழர் நாகரிகத்துக்கும் ஒப்புமை மிகுதியாயுள்ளது.’ என எழுதியிருக்கின்றார்கள். வில்லவர் என்னும் சேரர் பெயரை ‘hunters’ என மேனாட்டார் மொழிபெயர்க்க அது திரும்பவும் தமிழிற்கு மொழிபெயர்க்கப்பட்டு வேட்டுவர் என அமைவது இயல்பு. ஆதலினாலே தக்கிண பீடபூமியைச் சேர்ந்த வேட்டுவர் என்ற குறிஞ்சி நில மக்கள் எனத் தீட்சிதரவர்கள் உரையிலே குறிக்கப்பட்டோர் வில்லவராகிய சேரர் குலத்தினரே என்பது தெளிவாகின்றது. சிலப்பதிகாரத்திலும் பதிற்றுப் பத்திலும் காணப்படும் சேரர் மெய்க்கீர்த்தி இவ்வுண்மையினை நிலை நிறுத்துகின்றது. சேரநாடு கேரளம் எனத் திரிவுபட்டதுபோலச் சேரர் தீவு ‘க்ரீத்’ ஆயிருக்கலாம். தமிழ்நாட்டுவேந்தர் யவனர்களைத் தமது கோட்டை வாயில்களிலே காவலாளர்களாக வைத்திருந்த செய்தியும், உரோமாபுரி வேந்தனாகிய ஆகஸ்டஸ் மன்னனுக்குப் பாண்டியன் தூதனுப்பிய செய்தி யும், பிறவும் ஆதாரமாகத் தீட்சிதரவர்கள், ‘மத்தியதரை நாகரிகமென்று இப்போது வழங்கப்படுவது தென்னிந்திய நாகரிகம் என்று துணிவாய்ச் சொல்லலாம்’1 என்று முடிவு கூறுகின்றார்”2

உலகின் பெரும் பகுதியில் திராவிடம் வழங்கியதற்குச் சான்று
மொகஞ்சதரோ அரப்பா முதலிய சிந்துவெளி அழிபாடுகளில் கிடைத் துள்ள முத்திரைகளில் அக்காலத்து வழங்கிய எழுத்துக்கள் பொறிக்கப் பட்டுள்ளன. அவ்வகை எழுத்துக்கள் ஹைதராபாத்து, திருநெல்வேலி முதலிய விடங்களிற் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட மட் பாண்டங்களிற் பொறிக்கப்பட்டுள்ளன. இலங்கையிலே கேகாலையி லுள்ள மலை ஒன்றிலும் இவ்வகை எழுத்துப் பொறிக்கப்பட்டிருப்பதை ஹெரஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். மொகஞ்சதரோ எழுத்துகளை மிக ஒத்த எழுத்துகள் தென்னமெரிக்காவுக்கு அண்மையிலுள்ள ஈஸ்ரர் தீவுகளிற் காணப்பட்டன. எகிப்து, மேற்கு ஆசியா, சின்ன ஆசியா, கிரேத்தா முதலிய நாடுகளில் வழங்கிய பழைய எழுத்துகளுக்கும் மொகஞ்சதரோ எழுத்து களுக்கும் ஒன்றுமை இருப்பதைப் பழைய எழுத்து ஆராய்ச்சியாளர் காட்டி யுள்ளனர். இவ்வெழுத்துக்களை எல்லாம் நன்கு ஆராய்ந்த ஹெரஸ் பாதிரி யார் பழைய சீனம், சுமேரியம், பழைய எல்லம், பழைய அராபி, அசோகன், பிராமி, மினோவன், பழைய எகிப்தியம், இலிபியன், எற்றூஸ்கன் எழுத்துக் களெல்லாம் பழைய திராவிட எழுத்திலிருந்து தோன்றியவை எனக் கூறி யுள்ளார். மேற்கு ஆசிய, மினோவ, மொகஞ்சதரோ, ஈஸ்டர் தீவு எழுத்துகள் எல்லாம் ஒரே தொடக்கத்தைச் சேர்ந்தனவென்றும் அவை அவற்றைப் பயன்படுத்திய மக்களின் போக்கின்படி வெவ்வேறு வகையில் வளர்ச்சி யடைந்தன என்றும் சர்டயான் மார்சல், பேராசிரியர் லாங்கடன் ஜி.ஆர். ஹன்டர் போன்ற ஆராய்ச்சி வல்லார் கருதினார்கள். இக்கொள்கை நாள் வீதம் வலியடைகின்றது. ஒட்டுச் சொற்களுடைய மொழிகள் பெரும் பாலும் திராவிட மொழியினின்றும் பிறந்தனவெனக் கூறலாம்.1

மொகஞ்சதரோ அகழ் ஆராய்ச்சி அறியப்படுதற்குப் பல ஆண்டுகளின் முன்னரேயே பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள்,

“சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே”

எனக் கூறியது மிக வியக்கத்தக்கது. தமிழ்ப் பற்று மிக்குடையவராய் விளங்கிய விருதை சிவஞானயோகிகள் இற்றைக்கு முப்பத்துமூன்று ஆண்டுகளின்முன் கூறியுள்ளது வருமாறு:

“திருமலர் மணமென வொருமையின் மல்கி
எண்ணில் பொழிற்பயிர் பண்ணிக் காக்கும்
ஒப்பில் பெருமை மெய்ப்பொரு ளன்பு
பாங்கி னிலைபெற் றோங்குந் தமிழகத்
தாறறி வுடைமைப் பேறுறு மக்கள்
முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி
இமிழிய லொலிசார் தமிழ்மொழி பேசி
மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந்
தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம்
கூற்று நடையுடை வேற்றுமை யெய்தி
பற்பல வினப்பெயர் பெற்றுப் பெருகினர்.

------------------------------------------------------------------------

முதலிடைக் கழக முன்னீர் கொள்ளப்
படுதலி னிந்தியப் படியின் வளம்வவி
அயனாட் டவரீ ராயிர மாண்டாப்
படையெடுத்துத் துன் புறுத்திய படியால்
நூல்களு மவற்றி னுண்ணிய வழக்கும்
அருகி மறைந்தன வாதலின்”

இந்தியநாடு முழுமையிலும் வாழ்ந்த மக்கள் திராவிடர்
இதுவரையிலும் அகழ் ஆராய்ச்சியினால் அறியப்பட்ட பழைய நாகரிகங்களுள் இந்திய நாகரிகமே மிகப் பழமை உடையது. சிந்துவெளி நாகரிகத்தின் காலம் கி.மு. 3500 என்று சொல்லப்படுகின்றது. சிந்துவெளி நாகரிக காலத்தில் இந்தியா முழுமையிலும் ஒரே மொழியை வழங்கிய ஒரே இனமக்கள் வாழ்ந்தார்கள். அம்மக்கள் திராவிடர் எனப்படுவர். ஆரிய மக்கள் கி.மு. இரண்டாயிரத்தில் அல்லது அதற்குப்பின் இந்திய நாட்டை அடைந்தார்கள். அக்காலத்தில் வடநாடு முழுமையிலும் திராவிட மொழி வழங்கியதென்பதற்குச் சான்று ஆரிய மக்களின் பழைய பாடல்களாகிய வேதங்களில் திராவிடச் சொற்கள் பல இருப்பதும் பிறவுமென ஆராய்ச்சி யாளர் நன்கு ஆய்ந்து நிறுவியுள்ளாhகள்.1 ஆரியர் வருகைக்குப் பின்பே இந்திய நாட்டில் வெவ்வேறு இன மக்கட் கலப்பும் மொழிக்கலப்பும் உண்டாயிற்று. கி.மு. இரண்டாயிரத்தில் வடக்கே இமயத்துக்கும் தெற்கே குமரிக்கும் இடைப்பட்ட பெரு நிலப்பரப்பு திராவிட நாடாக விளங்கிற் றென, தெளிதில் அறியக் கிடக்கின்றது.

புதிய மக்களின் வருகையால் உண்டான மாறுதல்கள்
புதியமக்களுக்கும் வடக்கே வாழ்ந்துகொண்டிருந்த திராவிட மக்களுக்குமிடையில் போர்கள் நிகழ்ந்தன. ஆரியருடைய வேதபாடல் களால் அக்காலத்தில் திராவிடர் உயர்ந்த நாகரிகம் பெற்றுவிளங்கினார்கள் எனத் தெரிகின்றது.2 நாகரிகத்தில் உயர்நிலை அடைந்திருந்த திராவிடரை வெல்வது ஆரியமக்களுக்கு இயலாததாகவிருந்தது. நாளடைவில் இருசாதியாருக்கிடையில் திருமணக்கலப்புகளால் தொடர்புகள் உண் டாயின.3 திராவிடப் பெண்களை ஆரிய ஆடவரும் ஆரியப் பெண்களைத் திராவிட ஆடவரும் மணந்தனர். திராவிடருடைய சமூகம் தாயாட்சி முறை யினது. ஆரியருடைய சமூகம் தந்தைஆட்சி முறையினது. திராவிடப் பெண்கள் மூலம் ஆரிய ஆடவருக்குப் பிறந்தவர்கள் தந்தை ஆட்சி முறைப்படி ஆரியர் எனப்பட்டனர். ஆரியப்பெண்கள் மூலம் திராவிடத் தந்தையாருக்குப் பிறந்தவர்கள் திராவிடர் தாயாட்சி முறைப்படி ஆரியர் எனப்பட்டனர். இவ்வகையான கலப்புப் பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்தது. விந்தியமலைக்கு வடக்கே உள்ள மக்கள் தம்மை ஆரியர் எனக் கூறிக் கொள்வாராயினர். ஆனால் அவர்களிடத்தில் ஆரியக் குலத்தினருக்குரிய குணங்குறிகள் மிகச்சிறிதே காணப்பட்டன.1

மக்களிடை கலப்பு உண்டானபோது மொழிகளும் கொள்கைகளும் கலப்பவாயின. திராவிட மொழிச் சொற்கள் பல திரித்து வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட மிகப்பல சொற்கள் இன்று வடமொழியிற் காணப்படுகின்றன. அச்சொற்களுக்கு மூலம் அறியமுடியாமல் இருக்கிறது. இந்தோ ஆரியமொழிக்கு இனமுடையதாக ஐரோப்பிய நாடுகளில் வழங்கும் ஆரியமொழிகளில் இச்சொற்கள் காணப்படவில்லை.2

புதிதாக வந்த மக்களைவிட வடக்கே வாழ்ந்துகொண்டிருந்த திராவிட மக்கள் பலர். மக்கட் கலப்பினால் சில மாற்றங்கள் உண்டாகி மொழி மாறுபட்டபோதும் வாழ்க்கை முறையில் அவர்கள் திராவிட சமூகத்தினர் போலவே காணப்பட்டனர். புத்தர் காலமக்கள் வாழ்க்கையைப்பற்றி ரைஸ் டேவிட்ஸ் என்பார் கூறியிருப்பது இதனை வலியுறுத்துகின்றது.3

வடநாட்டில் வழங்கியமொழி சமக்கிருதமா?
வடநாட்டிலே மக்கள் வழங்கிய மொழி சமக்கிருதமென்று பலர் நினைக்கிறார்கள். இக்கருத்துத் தவறுடையது. சமக்கிருதம் ஒருபோதும் பேச்சு மொழியாகவிருக்கவில்லை. அது குருமாருக்குரிய சாதிமொழி யாகவே இருந்தது. இந்தியநாட்டு மொழியின் திரிபுகளாகிய பிராகிருதம் எனப்பட்ட மொழிகளே பேசப்பட்டுவந்தன.4

ஆரிய மொழியைச் சேர்ந்தனவென்று கருதப்படும் வடஇந்திய மொழிகளின் இலக்கண அமைப்பு திராவிட மொழி இலக்கணத்தை ஒத்துள்ளதென்றும், ஒரு மொழியின் குடும்பத்தொடர்பை அறிவது இலக் கண அமைப்பினாலல்லது சொற்களைக் கொண்டு அறிதல் கூடாதென்றும், வடஇந்திய மொழிகள் திராவிட மொழிகளின் திரிபு என்றும் பி.தி. சீனிவாச ஐயங்கார் துணிந்துள்ளார்.1

பாரசீகர் வடநாட்டின் சிலபகுதிகளை வென்று சில காலம் ஆட்சி நடத்தினார்கள். பின்பு கிரேக்கர் படைஎடுப்பு நேர்ந்தது. பின்பு சித்தியர், மங்கோலியர், அவுணர் (Huns) முதலிய பல சாதியினர் வடநாட்டின்மீது படை எடுத்துவந்து நாட்டில் சிற்சில பகுதிகளிற் குடியேறி இந்திய மக்க ளோடு கலந்தார்கள். இதனால் அலக்சாந்தர் படை எடுப்புக் காலம் முதல் மேலும் மக்கட் கலப்பும் மொழிக் கலப்பும் இந்திய நாட்டில் உண்டாயின.

இந்திய மக்களின் குல முறையான ஆராய்ச்சி நடத்திய ரைஸ்லி என்பார் இன்று இந்தியாவில் காணப்படும் குலப்பிரிவினரை கீழ்வருமாறு பிரித்துள்ளார்; படத்திற் காண்க.

திராவிடருக்கு முற்பட்ட திராவிடர் என்னும் கொள்கை
திராவிடர் இந்திய நாட்டுக்கு அயலிலிருந்து வந்தார்கள். அவர் வருகைக்குமுன் நிகுரோவக் குணங்குறிகளுள்ள ஒருசாதியினர் அங்கு வாழ்ந்துகொண்டிருந்தார்கள் என்றும், அவர்கள் திராவிடருக்கு முற்பட்ட திராவிடர் (Pre-Dravidians) எனப்படு வர் என்றும், அம் மக்களே இன்று மலைகளில் வாழ்வோரென்றும் ஒரு சிலர் எழுதிவருகின்றனர். இக் கொள் கைக்கு ஆதாரம் ஒரு சிறிதும் கிடைக் கவில்லை. திராவிட மக்கள், வாழும் இடங்களுக்கேற்ப, ஐந்து வேறு வகைத் திருத்தங்களுடையவர்களாக வளர்ச்சியடைந்தார்கள் என முன் கூறியுள்ளோம். அவர்களில் குறிஞ்சி பாலை நிலமக்களே மற்ற மக்களின் தொடர்பின்றிப் பழைய முறையில் வாழ்ந்து புதிய சில பழக்கவழக்கங் களுடையராய் வருகின்றனர். அவர் களின் உடல், நிறம், வளர்ச்சி முதலியன அவர்களின் உணவு, வாழ்க்கை நிலை போன்றவை ஏதுவாக உண்டானவை. திரு. வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் அவர்கள் கூறுவது வருமாறு. “திராவிடருக்கு முற்பட்ட திராவிடர் (Pre - Dravidans), பழைய திராவிடர் (Proto-Dravidans) என்னும் கொள்கைகள் இருபதாம் நூற்றாண்டுக் கற்பனை. பழம்பொருள் ஆராய்ச்சியாளராவது வரலாற்றுக்காரராவது தென்னிந்தியாவில் ஒன்றுக்குப்பின் ஒன்றாகத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக் காலங்களில் புதிய மக்கள் புகுந்து மாறுதல் களைக் கொண்டுவந்தார்கள் என்று சொல்வதற்கேற்ற ஆதாரம் ஒன்றும் காட்டமுடியாது. பழைய கற்காலப் பண்பாட்டுக்குப்பின் புதிய கற்காலப் பண்பாடும் அதற்குப்பின் இரும்புக் காலப் பண்பாடும் முறையே ஒன்றை ஒன்று தொடர்ந்து வந்தன என்று கொள்வதற்கு ஏற்ற சான்றுகளே காணப் படுகின்றன. பழம் பொருளாராய்ச்சி இக் கொள்கைக்கு வலி அளிக்கின்றது. காடுகளிலும், மலைகளிலும் வாழும் மக்கள் குலமுறையாகத் தென்னிந்திய மக்களோடு பொருந்தாதவர்கள் என்று கொள்ளுதல் சாலாது. புதிய கற்காலம் முதல் தென்னிந்தியாவில் ஐந்து வகையான பண்பாடுகள் இருந்து வருகின்றன வென்பதைத் தென்னிந்திய மக்களைப்பற்றி ஆராய்ச்சி செய்வோர் நன்கு அறிவர். வேட்டையாடியும் மீன் பிடித்தும் வாழ்வோர் பழைய கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்தவர். அவர்கள் தொடர்பாகக் காடு களிலும் கடற்கரைகளிலும் வாழ்ந்தமையால் அவர்களின் மனப்பாங்கும் வாழ்க்கைப் பழக்கங்களும் தனிமுறையில் வளர்ச்சியடைந்தன. நிறத்தைப் பற்றி நாம் ஆராயவேண்டியதில்லை. இது சூழலின் வெப்பநிலை, கை யாளும் தொழில் சம்பந்தங்களால் உண்டாவது. பயிரிடும் தொழில் பரவின தால் பழைய பொருளாதார வழிகள் முற்றாக மாறுதலடைந்தன என்று கொள்ளுதல் முடியாது. சில சூழல்களில் விடப்பட்டோர் பழைய தொழில் களையும் பழக்க வழக்கங்களயும் பற்றித் தம் வாழ்க்கையை நடத்தினர். வேளாளர், காராளர், ஆயர்வேறு வகையான பண்பாடுகளை எய்தினர். பாலை நில மக்கள் குறிஞ்சி மக்களோடு கலந்து ஒன்றுபட்டனர். தமிழ் நாட்டில் பாலை என்று தனி நிலம் இல்லை. ஆகவே கடற்கரைகளிலும் மலைகளிலும் வாழும் மக்களைத் திராவிடருக்கு முற்பட்ட திராவிடர் என்று கூறுதல் சாலாது”1

பி.தி. சீனிவாச ஐயங்கார் ஆரியருக்கு முற்பட்ட தமிழர் பண்பாடு என்னும் நூலிற் கூறியிருப்பது வருமாறு:

2“தமிழ் மொழிக்குரிய மக்களைப்போலவே அம்மொழியும் தென்னிந்தியாவிலேயே தோன்றி யாதும் குழப்பமின்றி உயர்ந்த இலக்கிய வளர்ச்சி நிலையை அடைந்தது. கற்காலம் முதல் தமிழ்க்குலம் ஒரே தொடக்கத்தைச் சேர்ந்ததாக இருந்து வருகின்றது. தமிழ் மொழியைப் பயின்ற அயல் நாட்டு ஆராய்ச்சியாளர் சிலர் தமிழ் மொழியை வழங்கிய பழைய மக்கள் மத்திய ஆசியாவினின்று, வந்தார்கள் என்றும், அதற்குக் காரணம் பலுச்சிஸ்தானத்தில் வழங்கும் பிராகூய் மொழியில் தமிழுக்கு இனமுடைய பல சொற்கள் காணப்படுகின்றன வென்றும் தம்மனம்போல் கூறினர். பிராகூய் மொழியில் தமிழுக்கு இனமுடைய சொற்கள் காணப்படு தல், தமிழ் இந்தியமொழியன்று எனக் கூறுவதற்குப் போதுமான ஆதார மாகாது. இரண்டு தலைமுறைக்கு முற்பட்ட ஆராய்ச்சியாளர் உலகில் வாழ்ந்த பழைய மக்கட் குலத்தினரை எல்லாம் வேறு எங்கோ இருந்து வந்த வர்கள் எனக் கூறுவது இயல்பாக இருந்தது. அவர்களுக்குத் தென்னிந்தியா வில் கற்காலப் பண்பாடு எவ்வளவில் பரவியிருந்ததென்றும், தமிழின் பழைய அடிப்படையில் தமிழ்ர் தென்னிந்தியாவில் அறியமுடியாத காலம் முதல் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதற்குப் போதிய சான்றுகளுள்ளன வென் பதையும் அவர்கள் அறியாதிருந்தார்கள். புதிய கற்காலப் பண்பாட்டுக்கு மத்திய இடம் தென்னிந்தியாவே. கடப்பா பழைய மத்திய காலப் பழங்கற் காலப் பண்பாட்டுக்கு மத்திய இடமாகும். எகிப்திலே நீல ஆற்றங் கரையி லிருந்து மறைந்துபோன பழைய நாகரிகத்தின் சின்னங்கள் சில இன்றும் தக்காணத்தில் உள்ளன. எலியட் சிமித் என்பார் கிழக்கு ஆப்பிரிக்க மக்க ளிடையே காணப்பட்டனவும், இன்றும் தக்காணத்திற் காணப்படுகின்றனவு மாகிய திராவிட மக்களின் நம்பிக்கைகள் பழக்க வழக்கங்களையும் எடுத்துக் காட்டி இரு மக்களுக்கும் தொடக்கம் ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆறாயிரம் ஆண்டுகளின் முன் திராவிடர் நாகரிகம்
திராவிட மக்களின் மிகப் பழைய நாகரிகத்தைப்பற்றி மொகஞ்ச தரோ, அரப்பா, சங்குதரோ முதலிய அழிபாட்டு மேடுகளிற் கண்டுபிடிக்கப் பட்ட பழம்பொருள்கள் வெளியிடுகின்றன. அரப்பா மொகஞ்சதரோ முதலிய நகரங்களில் திராவிடமக்கள் வாழ்ந்தார்கள். அக்காலத்தில் அவர்கள் எகிப்தியர், பாபிலோனியர்களை ஒத்த அல்லது அவர்களிலும் உயர்ந்த நாகரிகமுடையவர்களாக வாழ்ந்தார்கள். அக்காலத்தில் இரும்பு பயன்படுத்தப் படவில்லை. நகரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீடுகள் செங்கற்களால் கட்டப்பட்டன. அவைகளுக்கு மாடிகளும் மாடிகளுக்குச் செல்லப் படிக்கட்டுகளுமிருந்தன. மாடிகளிலிருந்து கழிவு நீர் கீழே செல்வ தற்குச் சூளையிட்ட மண்குழாய்கள் பொருத்தி வைக்கப்பட்டிருந்தன. கூரைவழியாக வழியும் நீர் பீலிகளில் விழுந்து பின் குழாய்கள் வழியே கீழே சென்றது. ஒவ்வொரு வீட்டுக்கும் கிணறும் குளிக்குமறையும் இருந்தன. கழிவுநீர், கால்வாய்கள் வழியாக வீதியிலுள்ள பெரிய கால்வாயில் விழுந்தது. கால்வாய்கள் செங்கற் பதிக்கப்பட்டிருந்தன. தண்ணீர் சென்று விழும் இடத்தில் செங்கற்பதித்த குழி இருந்தது. பாரமான பொருள்கள் குழியில் தங்கிநின்றன. சுத்தஞ் செய்வோர் அக் குழிகளில் தங்கிநிற்கும் அழுக்குகளைச் சுத்தஞ் செய்தனர். வீடுகளுக்கு மலக்கூடங்களும் இருந்தன.

பெரிய வீதிகள் 33-அடி அகலமுடையன. சிறிய வீதிகள் 18-அடி அகலமுடையன. மக்கள் வாற்கோதுமையையும், கோதுமையையும் விளைவித்தார்கள். ஆடு, மாடு, எருமை முதலிய விலங்குகள் வீடுகளில் வளர்க்கப்பட்டன. யானைகள் பழக்கி வேலை செய்விக்கப்பட்டன. மக்கள் பஞ்சு விளைவிக்கவும் பஞ்சிலிருந்து நூல் நூற்கவும் நூலிலிருந்து ஆடை செய்யவும் அறிந்திருந்தார்கள். அவர்கள் எகிப்து, பாபிலோன், பாரசீகம் முதலிய நாடுகளோடும் தென்னிந்தியாவோடும் வாணிகம் புரிந்தார்கள். ஒருவகைச் சுண்ணாம்புக் கல்லிற் செதுக்கப்பட்ட முத்திரைகளும், நாட்டியமாடும் பாவனையுள்ள பாவைகள், சுவாத்திக அடையாளமிட்ட பொருள்களும், எருமை காண்டாமிருகம் யானை மாடு போன்ற வடிவங் களும் எழுத்துக்களும் வெட்டப்பட்ட முத்திரைகளும், கல், பொன், செம்பு, வெண்கலம், வெள்ளி முதலியவைகளால் செய்யப்பட்ட பாத்திரங்களும் இவைபோன்ற அழகிய பொருள்களும் காணப்பட்டன. அக் கால மக்கள் இவ் விருபதாம் நூற்றாண்டு மக்களைவிடப் பலவகையில் உயர்ந்த நாகரிக நன்னிலை அடைந்திருந்தார்கள் என ஆராய்ச்சியாளர் நவின்றுள்ளார்கள்.1 சிந்துவெளி நகரங்களின் காலம் கி.மு. 3500 வரையில்.

பிற்காலத்தில் இந்திய நாட்டை வந்தடைந்த ஆரிய மக்களும் அவர் களின் சந்ததியினரும் அப்பழைய நாகரிக முறைகள் பலவற்றைக் கைக் கொண்டனரென்றும் அதற்குச் சான்று அவர்களின் வேதபாடல்களில் காணப்படுகின்றதென்றும் ஆராய்ச்சி அறிஞர் கூறுவர். திராவிட மக்களைப் பற்றிய சில குறிப்புகள் வேதங்களிற் காணப்படுகின்றன. பாரதம், இராமா யணம் என்னும் நூல்களில் தென்னாட்டு அரசர்களைப்பற்றியும் தென் னாட்டைப்பற்றியும் சில குறிப்புகள் காணப்படுகின்றன. அந்நூல்கள் காலத் துக்குக் காலம் எழுதிச் சேர்க்கப்பட்டன வாதலின் அவைகளிற் கூறப்படு வன சிறந்த வரலாற்றுச் சான்றுகளாகமாட்டா.

“மாபாரதத்தையும் இராமாயணத்தையும் நாம் கி.மு. 5ஆம் நூற் றாண்டைய நூல்கள் எனக்கொள்ளலாம். அந்நூல்களின் எப் பகுதி எக் காலத்தில் செய்யப்பட்டது என்னும் ஐயப்பாடும் உண்டாகின்றது. அவை களில் கூறப்படும் இந்திய நாட்டின் பிரிவுகள் கி.மு. நாலாம் நூற்றாண்டு வரையில் உறுதியாக அமைந்திருந்தனவென்று கொள்ளலாம். சாதகக் கதைகள் பதினாறு இராச்சியங்களையும் வேறு சில நாடுகளையும் பற்றிக் கூறுகின்றன. அவைகளை எல்லாம் இந்திய படமொன்றில் ஒழுங்குபட வைத்துப் பார்த்தால் மிகத் தெற்கே உள்ள நாடு கோதாவரிக்குத் தெற்கே போகவில்லை. பழைய பௌத்த இலக்கியங்கள் விந்தியத்துக்குக் கீழே உள்ள நாடுகளைப் பற்றி அறியா.

பாணினிக்குத் தென்னாட்டைப் பற்றித் தெரியாது அவர் தெற்கே உள்ளனவாகக் குறிப்பிட்ட இடங்கள் கச்சா, அவந்தி, கோசலம், கரூசா, கலிங்கம் என்பன. இவை விந்தத்துக்கு வடக்கே உள்ளன. பாணினிக்கு இரண்டு நூற்றாண்டுகளின் பின் விளங்கிய கார்த்தியாயனர் தென்னாட்டைப் பற்றி அறிந்திருந்தார். பதஞ்சலி காலத்தில் தென்னாடு நன்றாக அறியப் பட்டிருந்தது. பதஞ்சலியின் காலம் கி.மு. 150. கார்த்தியாயனரின் காலம், கி.மு. 350. பண்டாக்கரது கொள்கையின்படி பாணினி கி.மு. 7ஆம் நூற்றாண்டில் விளங்கினார்.1 அக் காலத்தில் வடநாட்டவரால் தென்னாடு சிறிதும் அறியப் படாதிருந்தது. மெகஸ்தீனஸ் காலத்தில் தென்னிந்தியாவைப்பற்றி வட நாட்டவர் சிறிது அறிந்திருந்தார்கள். சாணக்கியரின் அர்த்த சாத்திரத்தில் தென்னாட்டைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது. அசோகரின் கல்வெட்டுக்களில் சேர சோழ பாண்டியர் நாடுகள் குறிக்கப்பட்டுள்ளன.2

தமிழ்நாட்டெல்லை
கி.மு. 1000 வரையில் விந்தியமலைக்கு வடகே உள்ள நாடுகள் ஆரியாவர்த்தம் என்னும் பெயர் பெற்றிருந்தன. விந்தியத்தக்குத் தெற்கே தமிழ் வழங்கிற்று. கி.மு. 1000 வரையில் எபிரேய மொழியில் சென்று வழங்கிய பெயர்கள் தமிழாகவே காணப்படுகின்றன. தொல்காப்பியம் செய்யப்படுகின்ற காலத்தில் தமிழ்நாட்டின் வட வெல்லை திருப்பதி மலை யாகவிருந்தது. அக்காலத்தில் தெலுங்கு தனிமொழியாகப் பிரிந்துவிட்டது. ஒருகாலத்தில் தமிழ்நாட்டெல்லை கிருட்டிணா ஆறுவரையில் இருந்த தெனச் சிற்பநூலிற் காணப்படுவதாக ஆசிரியர் உ.வே. சாமிநாத ஐய ரவர்கள் சங்ககாலத்தமிழும் பிற்காலத் தமிழும் என்னும் நூலிற் குறிப் பிட்டுள்ளார். ஒன்பதாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட இலக்கியங்கள் தெலுங்கு மொழிக்கு இல்லை. 1சங்கச் செய்யுட்களில் வேங்கடத்துக்கு வடக்கே வடுகர் நாடு இருந்ததெனக் காணப்படுகின்றது.

பழம் பொருள் ஆராய்ச்சி வரலாற்று ஆராய்ச்சிக்கு எவ்வகையில் துணைபுரிகின்றதோ அவ்வாறே பழைய இலக்கியங்களும் அதற்குத் துணைபுரிகின்றன. சங்கநூல்களைக் கொண்டு இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் தமிழகத்தின் பண்பாடு எவ்வகையினதென நாம் தெள்ளிதில் அறியக்கூடும்.

சங்ககாலத்தில் தமிழ்நாடு
2கிருட்டிணா ஆற்றுக்குத் தெற்கே கன்னியாகுமரி வரையிலுமுள்ள நிலப்பரப்பு மூன்று பெருவேந்தராலும் ஏழு குறுநில மன்னராலும் ஆளப் பட்டது. இவர்களை அன்றிப் பல சிற்றரசர்களும் இருந்தார்கள். கடற் கரையை அடுத்தவும் வெளியாகவுள்ளவும் பகுதிகளே பெரிய அரசரால் ஆளப்பட்டன. மலைகளும் காடுகளும் குறுநில மன்னருக்கு உரியனவா யிருந்தன. கிழக்குக் கடற்கரை ஓரமாகக் கிருட்டிணா ஆறுதொடக்கம் இராமநாதபுரப்பகுதியிலுள்ள தொண்டி வரையிலுள்ள நாடு சோழர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இதன் மத்தியில் காஞ்சி ஆளுகைக்குட்பட்ட திருக்கோயிலூரைச் சூழ்ந்த மலைநாடு மலையமானுக்கு உரியதாயிருந்தது. சோழ இராச்சியத்துக்குத் தெற்கே பாண்டிய நாடு இருந்தது. இது கடற்கரையி லிருந்து கடற்கரை வரையும் பரந்து இக்கால மதுரை திருநெல்வேலி திருவி தாங்கூர் முதலிய மாகாணங்களும் கோயமுத்தூர் கொச்சி முதலியவற்றின் பகுதிகளும் அடங்கியதாயிருந்தது. மேற்குத் தொடர்ச்சி மலையில் ஆயின் மலை நாடு இருந்தது. தாலமி ஆயை அய்ஒய் (Aioi) எனக் குறிப்பிட் டுள்ளான். திருநெல்வேலியிலுள்ள கொற்கைத் துறை முகத்தை அடுத்து எவ்விநாடு இருந்தது. பழனி மலையைச் சுற்றிப் பேகன் நாடு இருந்தது. இதற்கு வடக்கே கடற்கரையை அடுத்துச் சேரநாடு இருந்தது. இதுபாலக் காட்டுவெளிக்கு ஊடாக சேலம் கோயமுத்தூர் வரையும் நீண் டிருந்தது. தென் மைசூரில் தொடங்கி ஒன்றின் பக்கத்தே ஒன்றாக இருங்கோவேளின் அரயம் நாடும், பாரியின் பறம்பு நாடும், அதியமானின் தகடூரும் (தருமபுரி), ஓரியின் கொல்லிமலை யும் இருந்தன. முதல் மூன்று நாடு களும் மைசூர் எல்லைக்குள் இருந் தன. இவ்வெல்லைக்கு அப்பால் கிழக்கே கங்கர் நாடும் தெற்கே கொங்கு நாடும் இருந்தன. தமிழ்நாட் டின் மேற்கேயுள்ள வட எல்லைப் புறம் துளுவ நாட்டரசனாகிய நன்னனுக்கும், கிழக்கேயுள்ள வட எல்லைப்புறம் வேங்கடத்துப் புல்லிக்கும், உரியனவாயிருந்தன. அதற்கு வடக்கே ஆரிய நாடும் (வடுகர்நாடு), தண்டாரணியமும் இருந்தன.

தென்னாட்டில் படையெடுப்புகள்
மௌரிய சந்திரகுப்தன் காலம்வரையில் தென்னாட்டில் அயல் நாட்டுப் படை எடுப்புகள் நேரவில்லை. சந்திரகுப்தனுடைய மரணத்துக்குப் பின் அவன் மகன் பிந்துசாரன் தமிழ்நாட்டின்மீது படை எடுத்தான். இதன்மேல் இடையிடையே வடநாட்டவர் படை எடுப்புகள் நேர்ந்தன. சேர, சோழ, பாண்டிய அரசர் ஆரியரைவென்று வில்லும் புலியும் மீனுமாகிய தத்தம் கொடிகளை மேருவில் நாட்டியும் அக் குறிகளை அம்மலையில் தீட்டியும் உள்ளார்கள் எனக் தமிழ்ப் பழம் பாடல்களில் காணப்படுவன ஆரியர் தமிழர் போர்களையே குறிக்கின்றன. சேர அரசருள் செங்குட்டு வனும், பாண்டிய அரசருள் நெடுஞ்செழியனும், சோழ அரசருள் கரிகாலனும் ஆரியரை வென்றதாக வரலாறு உண்டு.

களப்பிரர்
கி.பி. நாலாம் நூற்றாண்டில் களப்பிரர் என்னும் ஒரு கூட்டத்தினர் கிளம்பித் தொண்டை நாடு ஒழிந்த மற்றை மூவேந்தர் நாடுகளையும் அடிப்படுத்தி ஏறக்குறைய இருநூறு ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். களப்பிரர் எங்கிருந்து வந்தார்கள் என்பதும், பிறவும் அறியமுடியாமல் இருக்கின்றன. கடுங்கோன் களப்பிரரை வென்று பாண்டிய இராச்சியத்தை அவரிடமிருந்து மீட்டான்.

பல்லவர்
கி.பி. மூன்றாம் நூற்றாண்டுமுதல் பல்லவர் காஞ்சியைத் தலைநக ராகக்கொண்டு தொண்டைநாட்டை ஆண்டு வந்தனர். தொண்டைமான் இளந்திரையன் மணிபல்லவத்து நாககுலப்பெண்ணுக்கும் சோழனுக்கும் பிறந்தவனென்று சங்கநூல்களிற் காணப்படுகின்றது. மணிபல்லவ அரச குடும்பப் பெண்வழித் தோன்றிய இளந்திரையனின் சந்ததியினர் பல்லவர் எனப்பட்டார்களாகலாம். பல்லவம் கொடியைக் குறிக்கும். பல்லவர் ஆட்சி ஒன்பதாம் நூற்றாண்டில் மறைந்துபோயிற்று. பல்லவம் என்பதன் மறு பெயரே
தொண்டை என்பது எஸ்.கே. ஐயங்கார் கருத்து.

சாளுக்கியர்
ஆந்திர நாட்டின் மேற்குக்கரையில் விந்தயமலைக்குத் தெற்கிலும் சேரநாட்டு எல்லைக்கு வடக்கிலும் சாளுக்கியர் என்னும் ஒரு கூட்டத்தினர் அதிகாரமுடையவராய் கி.பி. 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் ஆட்சி புரிந்தனர். சாளுக்கியருக்கும் பல்லவருக்கும் போர்கள் நடந்தன. புலுகேசி என்னும் சாளுக்கிய வேந்தன் மகேந்திரவன்மன் என்னும் பல்லவ அரசனோடு பொருது கிழக்கே கிருட்டிணாவுக்கும் கோதாவரிக்கும் இடையிலுள்ள வெங்கி நாட்டைக் கைப்பற்றி அதனைத் தனது தம்பியை ஆளும்படி நியமித்தான். அது காலத்தில் கிழக்கு சாளுக்கிய நாடு எனப்படுவதாயிற்று.

ஊர் அமைப்பு
கோயிலைச்சுற்றி அல்லது அரசனுடைய அரண்மனையைச்சுற்றியே நகரங்கள் எழுந்தன. ஒவ்வொரு கிராமத்துக்கும் கோயில் மத்திய இடமாக விருந்தது.1 மக்கள் கோயில்களைச்சுற்றிக் குடியேறினார்கள். ஒவ்வொரு தொழில் செய்வோரும் தனித்தனி வீதிகளில் வாழ்ந்தார்கள். கிராமத்தின் நடுவில் வெளியிருந்தது. அது மன்றம் எனப்பட்டது. அங்கு நிழல்மரம் நின்றது. அதைச் சுற்றித் திண்ணையிடப்பட்டிருந்தது. ஓய்வு நேரங்களில் மக்கள் அங்கே கூடிப் பொழுதுபோக்கினார்கள். அங்கு ஊர்க்கூட்டங்களுங் கூட்டப்பட்டன. நியாயத்தீர்ப்பும் அங்கு செய்யப்பட்டது. பள்ளிக்கூடங் களும் அங்கு நடத்தப்பட்டன. எல்லாவகையான நிகழ்ச்சிகளுக்கும் கிளர்ச்சி களுக்கும் மன்றம் மத்திய இடமாயிருந்தது. அங்கு அருள்தறி நிறுத்தி வழிபடப்பட்டது. கிராமத்தில் நடக்கவேண்டிய ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சியைப் பற்றியும் அங்கு கூட்டங்கள் கூட்டி ஆலோசிக்கப்பட்டன. கிராமங்கள் கிராமசபைகளால் ஆளப்பட்டன. பெரும்பாலும் அவ்வக் கிராமங்களிலுள்ள கடவுளின் பெயரால் கிராமங்களின் பெயர்கள் அறியப் பட்டன. ஒவ்வொரு கோயிலும் ஓர் அரண்மனையின் அமைப்பைப் போலக் கட்டப்பட்டது. அரசனுடைய மாளிகையும் கோயில் எனப்பட்டது.

நகரம்
அரசனுடைய மாளிகை அல்லது அரண்மனையைச் சுற்றி மதில் இடப்பட்டிருக்கும். அதற்கு அடுத்து அரச குடும்பத்தினரும் அரசனது கருமத்தலைவர்கள் வாழும் வீதிகளும் இருக்கும். இவ்வீதிகளைச்சுற்றி மதிலிடப்பட்டிருக்கும். மதிலுக்கு வெளியேயுள்ள வீதிகளில் பற்பல தொழில் புரியும் மக்கள் வாழ்வார்கள். அங்கு கடைகளும் கடைத்தெருக் களும் உண்டு. பகைவர் இலகுவில் அழிக்கவும் ஏறவும் முடியாத மதில் நகரைச் சூழ்ந்து இருந்தது. மதிலின் வாயில்களுக்கு பெரிய மரங்களால் இரும்பு சேர்த்துச் செய்யப்பட்ட கதவுகள் இடப்பட்டிருந்தன. அவை பழைய கோயில்களிலிடப்பட்டுள்ள கதவுகள் போன்றவை. உள்ளே திரண்ட மரங்களால் அவை தாழிடப்பட்டிருந்தன. கோட்டை வாயிலில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. மதிற்சுவர்கள் வீரர்நின்று போர்செய்தற்கேற்ற அகலமுடையனவாயிருந்தன. கொதி எண்ணெயை இறைப்பனவும், நெருப்பை வீசுவனவும், கல் எறிவனவும், அம்பு உமிழ்வனவும் போன்ற பொறிகள் பல மதிற்சுவர்களில் அமைக்கப்பட்டிருந்தன. வெளிமதிலைச் சுற்றிப் பெரிய அகழ் இருந்தது. இது ஆழமுடையதாகவும் நீர் நிறைவுடையதாகவும் இருந்தது. நீரில் பெரிய முதலைகளும் மீன்களும் இருந்தன. கோட்டைவாயிலிலிருந்து அகழியைக் கடக்கக் கூடியதாகப் பலகை இடப்பட்டிருந்தது. போர்க்காலங்களில் பலகை எடுக்கப்பட்டது. அகழில் வெளியே முள்மரங்கள் நடப்பட்டுள்ள காவற்காடு இருந்தது. அங்கு வேட்டுவர் வாழ்ந்தனர். அதற்கு வெளியே விளை நிலங்கள் இருந்தன.

கி.பி. 1225இல் இந்தியாவுக்கு வந்து திரும்பிய1 சீனப் பிரயாணி ஒருவன் எழுதியிருப்பது கொண்டு அக்காலக் கோட்டை எவ்வா றிருந்ததென்று. நாம் அறிந்து கொள்ளலாம்.

“இங்கு (சோழநாட்டில்) ஏழுசுற்றுமதில்களுள்ள நகரம் உண்டு. வடக்கிலிருந்து தெற்குநோக்கியுள்ள வெளிமதிலின் நீளம் பன்னிரண்டு லி (LI) கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் மதிலின் நீளம் ஏழு ‘லி’ ஒவ்வொரு சுற்று மதிலுக்குமிடையில் நூறடி வெளியுண்டு. ஏழு மதில்களில் நான்கு செங்கல்லாற் கட்டப்பட்டவை; இரண்டு களிமண்ணால் எடுக்கப்பட்டவை; மத்தியிலுள்ளது மரத்தினாற் கட்டப்பட்டது. அங்கு பழமரங்களும் பூ மரங்களும் நடப்பட்ட சோலை உண்டு. முதல் இரண்டு சுவர்களுக்கு இடையிலுள்ள வெளியில் மக்களின் வீடுகள் உண்டு. அவை அகழியாற் சூழப்பட்டுள்ளன. மூன்றாம் நான்காம் சுவர்களுக் கிடையிலுள்ள வெளியில் அரசாங்க கருமகாரர்களின் வீடுகளுண்டு. ஐந்தாவது மதிலுக்குள் அரசனுடைய குமாரர் வாழ்கின்றனர். ஆறாவது சுவருக்குள் கோயில்களும் பூசாரிகளின் வீடுகளும் உண்டு. ஏழாவது சுவருக்குள் நானூறுவீடுகள் அடங்கிய அரண்மனை உண்டு.”

மௌரியசந்திரகுப்தனுடைய அரண்மனையைப்பற்றிச் சொல்லப் படும் விபரமும் பிறவும் சங்க இலக்கியங்களிலும உதயணன் கதையிலும் கூறப்படுவனவற்றை ஒத்திருக்கின்றன. அவற்றை இங்கு தருகின்றோம்.

“அரசனுடைய அரண்மனை பெரிய பூஞ்சோலையின் நடுவில் உள்ளது. அங்கு பழகிய மயிற் சேவல்களும் அழகிய கோழி இனங்களும் உலாவித் திரிந்தன. நிழல் மரங்களின் கொம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கிடந்தன. அங்கு நாட்டப்பட்டுள்ள மரங்கள் எப்பொழுதும் பச்சையாக இருக்கும். அவை ஒருபோதும் இலை உதிர்த்துவதில்லை. அங்கு பறவைகள் பல வாழ்கின்றன. அவை கிளைகளில் கூடுகட்டியுள்ளன. அங்கு பல குளங்கள் உண்டு. அவைகளில் மிகப் பெரிய பழகிய மீன்கள் விடப்பட்டுள்ளன. அரசனுடைய குமாரரல்லாத பிறர் அக் குளங்களில் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

அரசனுடைய அரண்மனையை அலங்கரிக்கும் முலாம் பூசப்பட்ட தூண்களில் பொன்கொடிகள் சுற்றியிருக்கின்றன. அவைகள்மீது வெள்ளி யால் செய்யப்பட்ட பறவைகள் இருக்கின்றன. அரண்மனையைச்சுற்றி மதிலும் அகழும் உள்ளன. அரண்மனையின் பின்புறத்தில் பெண்கள் உறையும் அறைகள் உண்டு. அங்கு கூனும் குறளும் இருப்பர். பெண்கள் உறையும் அறைகளுக்கு வெளியே இராசகுமாரரும் இராசகுமாரிகளும் உறையும் அறைகள் இருந்தன. அவைகளுக்கு வெளியே கொலுமண்டப மும் கருமகாரரின் அறைகளும் இருந்தன. அரசனுக்குத் தனி அறைகள் இருந்தன.

அரண்மனையில் பல இரகசிய அறைகளும், சுரங்க வழிகளும், உள்ளே வெளியுள்ள தூண்களும், மறைவான படிக்கட்டுகளும், கீழே விழுந்து விடக்கூடிய தரையும் இருந்தன.-Chandra Gupta Maurya and his time-p 194.-R K. Mookerji.

அரசனும் ஆட்சியும்
அரசனுடைய அதிகாரம் எல்லா அதிகாரங்களுக்கும் மேலாக விருந்தது. தந்தைக்குப்பின் மகன் என்றவாறு அரசுரிமை தலைமுறை தலைமுறையாக வந்தது. அரசனுடைய கடமை துட்டரைத் தண்டிப்பதும் மக்களின் அமைதியைக் காப்பதுமாகும். அரனுடைய விருப்பமே நாட்டின் சட்டம்; அதனை மறுத்தல் எவருக்கும் முறையாகாது. போரில் அரசனே படையை நடத்திச் சென்றான். சமாதான காலத்தில் எல்லாத் தீர்ப்புகளுக்கும் அவனே தலைவனாக விருந்தான்.

அரன் இருக்கும் மண்டபம் மிகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவனைச் சூழ்ந்து பல ஆடம்பரங்கள் இருந்தன. மக்கள் அதனையே விரும்பினார்கள்.1 அரசன் இருக்குமிடம் கொலு, அரசிருக்கை அல்லது ஒலக்கம் எனப்பட்டது. அரசிருக்கைவேளை அல்லாத மற்றக் காலங்களில் அரசன் மக்களோடு அளவளாவினான். நகரத்தில் நடக்கும் விழாக்களிலும் அவன் கலந்துகொள்வான். அவனுடைய வெற்றிக்காகவும் நீண்ட வாழ்விற்காகவும் கோயில்களில் துதிகள் சொல்லப்பட்டன. அரசன் தங்கும் மாளிகைகள் அவன் நாட்டின் பல இடங்களில் இருந்தன. நாடு போரின்றி அமைதியுற்றிருக்கும் காலங்களில் அரசன் பெருமக்களோடு நாடு முழுவதையும் சுற்றிவந்தான். ஆட்சி அவன் அதிகாரத்தில் இருந்தபோதும் ஒழுங்கும் நீதியும் நிலவின. அரசனைச் சூழ்ந்து பிரபுக்கள், பெருமக்கள், கரும வினைஞர் முதலியோர் இருந்தனர். முக்கியமான கருமங்களைச் செய்வதன் முன் அவன் உடன் கூட்டத்து அதிகாரிகள் என்னும் கூட்டத் தாரோடு ஆலோசனை செய்தான். அனுபவமும் கல்வியும் உள்ளவர்களே ஆலோசனையாளராக அவனால் தெரியப்பட்டனர். கூட்டங்கள் அரசிருக்iக மண்டபத்தில் நடந்தன. அரச கட்டளைகள் நீண்ட ஆலோசனைக்குப் பின்னரே வெளியிடப்பட்டன. கட்டளைகள் வெளியானதும் பெருந்தரம் அல்லது பிரமராயன் எனப்பட்ட அமைச்சன் அவைகளைத் திருமந்திர ஓலைக்காரன் என்னும் மூலஒலை காப்பாற்றும் அதிகாரியால் பொத்தகத்தில் எழுதும்படி செய்தான். பின்பு அவை படி எடுக்கப்பட்டு விடையில் அதிகாரிகளால் இராச்சியத்தின் பல பகுதிகளுக்குப் போக்கப் பட்டன. அக் கட்டளைகள் கிராமக் கூட்டங்களுக்கும் அறிவிக்கப்பட்டன. இக் கூட்டங் களுக்கு அரசனுடைய மக்கள் அல்லது உறவினரே தலைவராகவிருந்தனர். அக் கட்டளைகள் முக்கியமுடையனவும் நிலையானவுமாயின் அவை கோயிற் சுவர்களில் எழுதப்பட்டன.

அரசனுக்குப் பொது அமைச்சர், அந்தரங்க அமைச்சர் முதலியோர் இருந்தனர். அரண்மனையில் தலைமைப் பெருந்தனம் (கருவூலம்) இருந்தது. அங்கிருந்து போர் வீரர், கருமகாரர் முதலியோர் சம்பளத்துக்கும் அரண்மனைச் செலவுக்கும் பணம் எடுக்கப்பட்டது. மாகாணங்களில் சிறுந்தனங்கள்1 இருந்தன. இவை பெரும்பாலும் கோயில்களிலிருந்தன. இவைக்குப் பொருள் பெரும்பாலும் இறையிலி நிலங்களாலும், நன்கொடை களாலும் வந்தது. இப்பொருளில் கோயிற் செலவு போக மீதி மக்கள் நலத்திற்காகப் பயன்படுத்தப்பட்டது.

அரசாங்கத்தில் மதிப்பும் ஒழுக்கமும் வாய்ந்த ஒற்றர் இருந்தனர். இவர்கள் மாகாணத் தலைவர்களினைப் பற்றிய செய்திகளை அறிந்து அரசனுக்குத் தெரிவித்தார்கள். அரசன் மாறுவேடம் பூண்டு இரவிற்சென்று மக்களின் எண்ணங்களை அறிந்தான். ஒற்றர் துறவிகள், வணிகர் போன்று வேடந்தாங்கி அயல் நாடுகளிற் சென்று பகை அரசரின் மறைவான செய்திகளை அறிந்து வந்தனர். அரசனைத் தலைவனாகக்கொண்டு ஆட்சி செய்யும் முறையை ஆரிய மக்கள் திராவிடரிடமிருந்து அறிந்தார்கள் என்பதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றன. 1அவர்கள் தமது மொழியை யும் திராவிடரின் உதவியைப் பெற்றுத் திருத்திக் கொண்டனர்.2

மண்டல ஆட்சி
ஆட்சிக்குட்பட்ட நிலம் ஆளுகையின் பொருட்டு 3மண்டலங்கள் அல்லது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. மண்டலங்கள் நாடுகளாகவும் வளநாடுகளாகவும் பிரிக்கப் பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் பல கிராம சபைகள் இருந்தன. பல கிராமங்கள் சேராத கிராமம் தனியூர் எனப்பட்டது. கிராமங்கள் சேரிகளாகவும் குடும்புகளா(வட்டங்கள்)கவும் பிரிக்கப்பட்டிருந்தன. சில கோட்டங்கள் அரசனின் மேற்பார்வையின்கீழ் நாட்டுக்குரிய தலைவனால் (குறுநில மன்னன்) ஆளப்பட்டன. மற்ற மண்ட லங்களுக்கு அரசன் மண்டலிகரை நியமித்தான். அவர்களின் ஆட்சிக் காலம் அவர்களின் ஒழுக்கத்தையும் அரசனின் நல்லெண்ணத்தையும் பொறுத்திருந்தது. அரசன் மண்டலங்களின் போக்கைத்தான் செய்யும் சுற்றுப் பயணங்களாலும் ஒற்றர்களாலும் அறிந்தான்.

மண்டலிகன் வரிகளைத் தண்டினான்; நியாயத் தீர்ப்புச் செய்தான்; நாட்டில் அமைதியும் நியாயமும் நிலவும்படியும், ஆட்சி தொடர்பான கருமங்களை நன்கு நடைபெறும்படியும் செய்தான்.

மண்டலங்கள் முழுமையிலும் சுற்றுப் பயணஞ்செய்து மக்களோடு தொடர்பு வைத்திருத்தல், கணக்கு களைப் பரிசோதித்தல், சபைகளைக் கண்காணித்தல் முதலியன அவனுடைய கடமைகள். அவன் கோயிற் கணக்கு களையும் பரிசோதித்தான். கோயிற் கருமங்களின் குறைபாடுகள் ஐந்து பேரடங்கிய கூட்டத்தோடு மண்டலிக ரால் ஆராயப்பட்டன.

மண்டலிகருக்கு அடுத்தபடியி லுள்ளவர் நாட்டுத் தலைவர். அவர் நாடுகண்காட்சி அல்லது நாடுவாகை எனப்பட்டார். நாட்டுத் தலைவர்கள் நாட்டின் ஆட்சிமுறையைக் கண்காணித்தார்கள்.

கிராமசபை
ஒவ்வொரு கிராமத்தின் ஆட்சிக்கும் கிராமசபை பொறுப்பா யிருந்தது. மாகாண அதிகாரிகள் படைத் தலைவரோடு மாகாணம் முழுமை யும் பயணஞ்செய்து விசாரணைகள் செய்தும் கணக்குகளை மேற்பார்த்தும் வந்தனர். கிராமசபைகள் கோயில்களில் கூடின. கிராம சபை உறுப்பினரின் எண் கிராமங்களுக்கு ஏற்றவாறு இருந்தது. சில சமயங்களில் ஐந்நூறு பேர் வரையில் இருந்தனர்.

அங்கத்தவர்களைத் தெரியும் வாய்ப்புக்காகக் கிராமம் பல குடும்பு (வட்டங்கள்)களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு குடும்பும் சபைக்கு அங்கத்தவர் ஆகக்கூடியவர்களின் பெயர் எழுதிய ஓலைநறுக்குக் கட்டொன்றை அனுப்பிற்று. கல்வியும் சொத்தும் இருப்பது உறுப்பினனாவ தற்குத் தகுதியை உண்டுபண்ணிற்று. கால்வேலிக்கு அதிகம் வரிகொடுக்கும் நிலமுள்ளவன் அல்லது தனது சொந்த நிலத்தில் வீடுகட்டி வாழ்பவன் தெரிவுக்குத் தகுதியுடையவனாகக் கொள்ளப்பட்டான். அங்கத்தவனாகத் தெரியப்படுபவன் 35 வயதுக்கும் 70 வயதுக்கும் இடைப்பட்டவனாயிருத் தல் வேண்டும். அவன் கடந்த மூன்று ஆண்டுகளில் சபை உறுப்பினனாக இருந்தவனாதல் கூடாது. குடும்புகளுக்குச் சீட்டுகள் மூலம் அறிவிக்கப் பட்டபின் கூட்டம் கூட்டப்பட்டது. அதற்கு எல்லாக் கோயில் நம்பிகளும் அழைக்கப்பட்டனர். அவர்களில் முதியவன் சபைக்குத் தலைமை வகித் தான். அச் சீட்டுகள் எல்லாம் ஒரு வெறும் பானைக்குள் இடப்பட்டன. பின்பு சிறுவன் ஒருவன் அவைகளுள் ஒன்றை எடுத்தான். அப் பெயர் வாசிக்கப்பட்டது. அப் பெயருடையவன் குடும்பின் அங்கத்தவனாகத் தெரியப்பட்டான். இவ்வாறு ஒவ்வொரு குடும்பின் அங்கத்தினரும் தெரியப் பட்டார்கள்.

குளங்களைக் கண்காணிப்போர்
குளங்கள் ஆண்டுதோறும் திருத்தப்படுவதை மேற்பார்ப்பதற்கு ஒரு சபை இருந்தது. அது குளத்தில் சேற்றை அப்புறப்படுத்துதல், நீர்ப் பாய்ச்சுதல், பயிரிடுவோருக்குச் சமமாக நீர் அளித்தல் முதலியவற்றைக் கண்காணித்தது. வீதிகளை அமைத்தல் அவைகளை அகலமாக்குதல் முதலியவைகளை மேற்பார்க்கும் சபையும் இருந்தது.

குடும்புவாரியாக அங்கத்தவர் தெரியப்பட்ட பின்பு சபை அவர் களைப் பலவேறு வேலைகளைப் பார்க்கும்படி தெரிவுசெய்தது. ஒவ்வொரு அங்கத்தவனும் கடமை பார்க்கும் காலம் 360 நாள்களாகும். இச் சபையின் நிகழ்ச்சிகள் ‘கர்ணத்தான்’ என்னும் கணக்கனால் எழுதி வைக்கப்பட்டன. கோயில் நீங்கலாகக் கிராமத்தின் நிர்வாகம் சபையின் பொறுப்பில் இருந்தது.

நியாயத்தீர்ப்பு
அரசன் தானே நேரில் நியாயத் தீர்ப்புச் செய்தான். உடன் கூட்டத்தார் அவனுக்கு ஞாயத்தீர்ப்பில் உதவிபுரிந்தனர். சிறிய வழக்குகள் ஒவ்வொரு சேரியையும் மேற்பார்க்கும் சபையால் விளங்கித் தீர்ப்பளிக்கப்பட்டன. கொலைவழக்குகள் கிராமசபையால் விசாரணை செய்யப்பட்டன; சில சமயங்களில் மாகாணத் தலைவர் விசாரணை செய்தார். முதன்மையான வழக்குகள் படைத்தலைவனால் (சேனாபதியால்) ஐவர் அடங்கிய சபைபின் உதவியோடு விசாரணை செய்யப்பட்டன. மிக முக்கியமான வழக்குகளே அரசனுடைய விசாரணைக்கு விடப்பட்டன. அரசன் நாடுகளைச் சுற்றிப் பயணம் செய்யும் காலங்களில் அவை விசாரணை செய்யப்பட்டன.

திருட்டுக்குற்றத்துக்குப் பணம் அபராதம் விதிக்கப்பட்டது. அத் தண்டம் தரும ஆசனம் எனப்பட்டது. ஒப்பந்தங்களைமீறிய குற்றங் களுக்குப் பணம் அபராதம் விதிக்கப்பட்டது; சில சமயங்களில் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. கண்ணுக்குக்கண் கையுக்குக்கை என்பது போல உறுப்புகளைக் களைந்துவிடுவது பொதுவான சட்டமாக விருந்தது. கொதி எண்ணையில் கைவைத்தல் போன்ற குற்றச்சோதனை அறியப்படாத தன்று. கொலைக்குத் தண்டனை கொலையாகவிருந்தது. வேண்டுமென்று செய்யப்படாத கொலைக்கு 16 பசு மாடுகள் அபராதம் விதிக்கப்பட்டது. இறந்தவரின் உயிர் ஆறுதல் அடைதற்குக் கிராமக் கோயிலில் எப்பொழுதும் எரியும்படி நெய்விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. இராசத்துரோகத்துக்குச் சட்டப்படி தண்டனை விதிக்கப்பட்டது. இராசத்துரோகஞ் செய்தவரின் சொத்துக்கள் விற்கப்பட்டன. அவ்வாறு கிடைத்தபொருள் கோயில்களுக் கும் அறநிலையங்களுக்கும் கொடுக்கப்பட்டன. நகரக் காவலர் (Police) தலைவன் தண்டநாயகன் எனப்பட்டான். நகர்க்காவலர் வீதிகளைக்காவல் புரிந்தனர். அவர்கள் பதிகாவல் என அறியப்பட்டார்கள்.

படை
தமிழ் அரசர் ஒருவரை மற்றவர் கீழ்ப்படுத்தும்படி பெரும்பாலும் போர் விளைத்தனர். தேர், யானை, குதிரை, காலாள் எனப் படை நால்வகைப் பட்டது. யானை வீரன் புலித்தோற் சட்டை அணிந்து யானைமீது இருந்தான். அவனைச் சூழ்ந்து படைக்கலந் தாங்கிய வீரர் சென்றனர். தேர்கள் நிறமூட்டிய துணிகளில் அலங் கரிக்கப்பட்டிருந்தன. அவை போர்க்களத் துக்கு நிரையாகச் சென்றன. போரில் வில், வேல், ஈட்டி, வாள், கவண், முதலிய பல வகை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. படைகள் அணி, உண்டை, ஒட்டு முதலிய பல அணிவகுப்புகளாக நின்று போர்செய்தன. முன் அணி ஆக்கம், கொடிப்படை, தார், தூசி எனப்பட்டது. பின்படை கூழை எனப்பட்டது.

நாடு இராணுவ சம்பந்தமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. 1படைத்தலைவன் அரசனோடு நேரில் தொடர்பு வைத்திருந்தான். படை யின் பெரும் பகுதி காலாள். முன்னே குதிரைப் படையும் யானைப் படையும் சென்றன. தேர்கள் பெரிதும் பயன்படுத்தப்படவில்லை. அராபியர் கிரேக்கர் முதலிய அயல் நாட்டினரும் படையில் இருந்தார்கள். தூதுவரை அவ மானப்படுத்துவதும் கொல்வதும் நீதிக் கேடாகக் கொள்ளப்பட்டது. இச் சட்டத்தை மீறுவதால் போர்கள் மூண்டன.

வரி
நிலவரி தானிய வகையாகக் கொடுக்கப்பட்டது. பெரும்பாலும் விளைவில் ஆறிலொன்று வரியாகக் கொள்ளப்பட்டது. பட்டினங்களும் தோப்புகளும் பணவகையில் வரியை இறுத்தன. வரிக் கணக்கு எழுதும் ஏடு வரிப் பொத்தகம் எனப்பட்டது. வரிதண்டும் கருமிகள் (உத்தியோகத்தர்) இருந்தார்கள். ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பெரிய வீதியில் சுங்கம் தண்டப்பட்டது. சுங்கம் கொடாவிடின் பண்டங்களை அப்புறங் கொண்டு செல்லமுடியாமல் இருந்தது.

போரில் கிடைத்த கொள்ளைப் பொருள், அரசாங்கத்துக்குரிய நிலங்கள், காடு, முத்துக் குளிப்புப் போன்ற வகையிலும் அரசனது கருவூலத்துக்குப் பொருள் வந்தது. இவைகளல்லாமல் கடை வரி, நெசவு வரி, செக்கு வரி போன்ற வரிகளும் வழக்கில் இருந்தன. கண்ணாலக் கடம் என்னும் கலியாண வரியும் இருந்தது.1

நீர்பாய்ச்சும் வாய்ப்பு
அரசர் பயிருக்கு நீர்ப்பாய்ச்சும் வசதிகளைஅதிகம் செய்தனர். கரிகாற் சோழன் கட்டிய காவிரி அணை கிட்டிய காலம் வரையில் இருந்தது. ஆறுகளும், கிளை ஆறுகளும் நீர்ப்பாய்ச்சும் வாய்ப்பின் பொருட்டு மறித்துக் கட்டப்பட்டன. திரிச்சினாப்பள்ளியில் கங்கைகொண்ட சோழபுரத் திலுள்ள குளத்தின் அணைக்கட்டுப் பதினாறு மைல் நீளமுள்ளது. பல வெட்டு வாய்க்கால்களும் வெட்டப்பட்டன. செல்வர் வீதி ஓரங்களில் கிணறுகள் வெட்டிச் சுமைதாங்கி அமைத்தார்கள். வீதிகளின் அபாயமான இடங்களில் போர்வீரர் நிறுத்தப்பட்டிருந்தனர். ஆகவே போக்கு வரத்துச் செய்வோர் திருடர் பயமின்றிச் சென்றனர். கால்வாய் வெட்டுதல் ஏரி வெட்டுதல் போன்றவைகள் மக்களால் கட்டாயப்படுத்திச் செய்விக்கப் பட்டன. அவ்வகைவேலை ஊழியம், ஆள்மாஞ்சி எனப்பட்டது. ஆற்றுக் கால்வெட்ட, ஏரிகுழிவெட்ட, சுமை தூக்க என்னும் சொல்வழக்குகள் பட்டையங்களில் காணப்படுகின்றன. அரசருக்குப்புரியும் கட்டாய ஊழியம் இலங்கையில் இராசகாரியம் எனப்பட்டது.

பொழுதுபோக்கு
மற்போர், சிலம்பம், தேரோட்டம், யானைப்போர், குதிரை ஓட்டம், மாட்டுப் போர், ஆட்டுப் போர், கோழிப் போர், காடை கவுதாரிப்போர் என்பன மக்களின் பொதுவான பொழுது போக்குகளாகும். பெண்கள் வீட்டில் அடைக்கப்பட்டு இருக்கவில்லை; அவர்கள் அம்மானை, பந்து, பாட்டு, ஆட்டம், கும்மி, குரவை விளையாட்டுகளிற் பொழுது போக்கினர்; கிளி, நாகணவாய் முதலியவைகளை வளர்த்தனர்.

போக்குவரத்து
முற்காலப் போக்குவரத்து பெரும்பாலும் கால்நடை, வண்டி, பல்லக்கு, தண்டிகை, கழுதை, எருது, யானை, குதிரை, தேர் வகைகளா யிருந்தன. ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குப் பண்டங்கள் கொண்டு செல்வதற்குப் பொதிமாடுகளும் கழுதைகளும் வண்டிகளும் பயன்படுத்தப் பட்டன. அரசரும் பெருமக்களும் தேர் பல்லக்கு, யானை முதலியவை களில் சென்றனர்.

கடலிற் செல்வதற்குப் பலவகை மரக்கலங்கள் இருந்தன. மரக்கலங் களின் முன்புறம், சிங்க முகம், யானை முகம், குதிரை முகம் போன்று செய்யப் பட்டிருந்தது. மரக்கலங்களுக்குப் பாய் மரங்களும் பாயும் இருந்தன.

அளவைகள்
எண்ணெய், நெய், தயிர் போன்றவையும் தானியங்களும் அளந்து விற்கப்பட்டன. பொன் வெள்ளி முதலியவை நிறுத்துவிற்கப்பட்டன. தானிய அளவை; 5 செவிடு 1 ஆழாக்கு; 2 ஆழாக்கு 1 உழக்கு; 2 உழக்கு 1 உரி; 2 உரி 1 நாழி; 8 நாழி 1 குறுணி; 2 குறுணி 1 பதக்கு; 4 குறுணி அல்லது 2 பதக்கு 1 தூணி; 3 தூணி அல்லது 12 குறுணி 1 கலம்.

பழைய பட்டையங்கள் சிலவற்றால் பெரும்பாலும் பொருள்கள் பண்டமாற்றுச் செய்யப்பட்டனவென்று அறிகின்றோம். 2 படி அரிசிக்கு 5 படி நெல்லுக் கொடுக்கப்பட்டது. 5 படி நெல்லுக் குத்துவதற்கு அரைப்படி அரிசி கூலியாகக் கொடுக்கப் பட்டது. ஒரு நாழி நெல் அரிசி கூலியாகக் கொடுக்கப் பட்டது. ஒரு நாழி நெல் 1/16 நாழி நெய்யுக்கும், ஒரு நாழி தயிர் 10ப் பாக்கு, 20 வாழை இலை அல்லது 1/16 நாழி நெய்க்கும் பண்டமாற்றுற் செய்யப்பட்டது. நெல்லும் தயிரும் ஒரே பெறுபதி உடையனவாயிருந்தன வென்பது குறிப்பிடத்தக்கது. நாள் வாழ்க்கைக்கு வேண்டிய பண்டங்களை வாங்குவதற்கு நெல் பயன்படுத்தப்பட்டது. பணப்புழக்கம் இருந்தபோதும் பொதுவாக நெல்லே பணத்தைப்போலப் பயன்படுத்தப்பட்டது.

பொன் வெள்ளி நிறை: 1 கழஞ்சு 20 மஞ்சாடி; 1 மஞ்சாடி 2 குறுணி; 1 மா 1/10 மஞ்சாடி; 1 காணி 1/40 மஞ்சாடி.

1 “அக்காலத்தே நிறுத்தல், முகத்தல் முதலிய அளவுகட்கும், பொன் இரத்தினங்கள் நிறுத்தற்கும், பொன் மாற்று நோக்குதற்கும் அரசாங்கத்தா ரால் நியமிக்கப்பட்ட மரக்கால் முதலியன விருந்தன. அரசன் முத்திரையிட்ட மரக்காலுக்கு இராசஇராசன் காலத்தில் இராசகேசரி என்பது பெயர். இதற்குச் சமானமான தஞ்சாவூர்க் கோயில் மரக்காலுக்கு ஆடவல்லான் என்பது பெயர். ஆனால் நாடுதோறும் மரக்கால் பெயர்கள் மாறுபட்டிருந்தன. அரசாங்க முத்திரையிட்ட எடைக்கல்லுக்குக் குடிஞைக்கல் என்று பெயர். தஞ்சாவூர்க் கோயிலில் இதற்குச் சம எடையுள்ள கல்லுக்கு ஆடவல்லான் என்பது பெயர். (இப் பெயர்கள் சிவபிரான் பெயராலிடப்பட்டன) பொன்மாற்றுக்கு வைத்திருந்த ஆணிக்குத் தண்டவாணியென்பது பெயர்.”

தமிழர் திருமணம்
பருவம் அடைந்த ஆடவரும் மகளிரும் ஒருவரை ஒருவர் காதலித்துச் சிறிதுகாலம் பிறர் அறியாது சேர்ந்து ஒழுகுவார்கள் என்றும் பின் ஆடவன் தனது காதலியைத் தனது ஊருக்கு யாருமறியாது கொண்டு சென்று அங்கு மணந்துகொள்வான்; அல்லது மணமகளது பெற்றோரின் இசைவைப் பெற்று அவள் இல்லத்திலேயே அவளை மணந்துகொள்வான் என்றும் சங்கச் செய்யுட்கள் கூறுகின்றன. இப் பாடல்கள் பழைய மரபைப் பின்பற்றிச் செய்யப்பட்டனவேயன்றி அக்காலத் திருமணம் அவ்வாறு நிகழ்ந்ததெனத் துணிதல் முடியாது.

அக் காலத்தில் ஆடவன் ஒருவன் மணஞ் செய்ய வேண்டியிருந்தால் அவன் சில முதியோரைப் பெண்கேட்கும்படி பெண்வீட்டுக்கு அனுப்பு வான். பெண்ணின் பெற்றோர் பெண்கொடுக்க இசைந்தனராயின், கணி எனப் பட்ட சோதிடனால் குறிக்கப்பட்ட நல்லநாளிலே மணமகன் தனது சுற்றத்தா ருடன் மணமகள் வீட்டுக்குவந்து பெண்ணை மணந்து தனது வீட்டுக்குக் கொண்டுபோவான். திருமணத்துக்கு முன் பெண்ணுக்கு விலையாக மணமகன் பரியம் எனப் பொருள் வழங்குவான். இவ்வாறு கொடுக்கப்படும் பொருள் சில இடங்களில் வளர்ப்புக்கூலி எனவும் வழங்கும். பெண்களை விலைகொடுத்து வாங்கி மணத்தலாகிய வழக்கத்தின் நிழலே பரியம் எனச் சிலர் கூறுவர். திராவிட மக்களுள் சில கூட்டத்தினர் பெண்களை விலை கொடுத்து வாங்கி மணந்துகொள்ளும் வழக்கம் இன்றும் காணப்படுகின்றது. முற்காலத்தில் புரோகிதரின் உதவியின்றியே திருமணங்கள் நடந்தன. அக் காலத் திருமணச்சடங்கு எவ்வாறிருந்த தென்பதைச் சங்க நூல்களைக் கொண்டு அறிதல்கூடும். அகநானூற்றில் கூறப்பட்டுள்ளதை இங்கு தருகின்றோம்.

“சோறு பருப்பிட்டுச் சமைக்கப்பட்டது. பலர்கூடி உண்டபின்பும் சோறு குவிந்துகிடந்தது. நிரையாகக் கால்களை நட்டுப் பந்தரிடப்பட் டிருந்தது. தரையில்வெண்மணல் பரப்பப்பட்டிருந்தது. விளக்குகள் கொளுத்தி வைக்கப்பட்டன.

பூரணை நாளின் விடியற்காலையில் தீயகோள்கள் அகன்ற நல்ல நேரமாக விருந்தது. தலையிலே குடத்தையும் கையிலே மட்பாத்திரத்தையும் வைத்துக்கொண்டு பெண்கள் வந்தார்கள். அவர்கள் கையில் வைத்திருந்த பாத்திரத்தை ஒருவர் கையிலிருந்து ஒருவர்கைக்கு மாற்றினார்கள். அப்பொழுது முதிய பெண்கள் பெரிய ஆரவாரஞ்செய்தனர். பின்பு ஆண்மகவை யீன்றவர்களும், வயிற்றில் அழகுதேமல் உடையவர்களும் அழகிய நகைகள் அணிந்தவர்களுமாகிய பெண்கள் முன்னே வந்தார்கள். மணமகளின் தலையில் நீரை ஊற்றினார்கள். அப்பொழுது நீரில் கிடந்த பூவும் நெல்லும் கூந்தலில் கிடந்து விளங்கின. அப்பொழுது அவர்கள் “நீ கற்பில்வழுவாது கணவனுக்கு இனியளாகவிருந்து நெடுங்காலம் வாழ்வா யாக” என வாழ்த்தினாhகள். அன்று மாலைக்காலம் வந்தது. பெண்கள் வந்து கூடினார்கள். “நீ வீட்டுக்குப் பெருந்தலைவியாகுக” என்று வாழ்த்தினார்கள். சுற்றத்தவர் அவள் கையைப் பிடித்து மணமகனிடம் கொடுத்தார்கள்.” (அகம். 86)

“நல்ல அரிசியைச் சமைத்த நெய்கலந்த சோற்றைச் சுற்றத்தவர் முதியவர்களுக்குக் கொடுத்தார்கள். நற்சகுனம் காட்டும் பறவைகள் தெளிந்த வானத்தே பறந்தன. திங்கள் உரோகிணியோடு சேருகின்ற குற்றமில்லாத நல்ல நேரம் வந்தது. பெருக்கிச் சுத்தஞ்செய்த வீடு அலங்கரிக்கப்பட்டது. எல்லோரும் கடவுளைத் தொழுதார்கள். பெரிய மேளமும் மணமுரசும் ஒலித்தது. மணவினையைக் காண விரும்பிய பெண்கள் விரைந்துவந்து கூடினார்கள். அறுகங்கிழங்கை வெள்ளிய நூலாற்கட்டி வாகைப் பூவின் மேல் வைக்கப்பட்டதும், மணல் பரப்பப்பட்டதுமாகிய பந்தலின்கீழ் தமர் அவளை மணமகனிடம் கொடுத்தார்கள். மணவினையைக் கண்ட பெண்கள் தமது வீடுகளுக்குச் சென்றார்கள்.” (அகம். 136)

அலங்காரம்
தமிழ் மக்கள் தமது உடம்பையும் தாம் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளையும் அலங் கரித்தார்கள். வீட்டுச் சுவர்களில் அழகிய ஓவியங்கள் எழுதப் பட்டன. பெண்கள் முற்றங்களில் அழகிய கோலங்களிட்டனர். வீடு களைத் தாங்கும் தூண்கள், கை மரங்கள், நிலைகள், கதவுகள், வீட்டின் முன்புறங்கள் தானும் அழகிய வேலைப்பாடுகள் பெற்றிருந்தன. தென்னிந்தியக் கோயில்களில் சுவர்களிலும் மதில்களிலும் கோபுரங்களிலும் அழகிய உருவங்கள் வெட்டப்பட்டிருத்தலை நாம் காணலாம். இந்தியச் சிற்பிகள் கற்களை மரத்தைப்போலப் பயன்படுத்தி அதில் பல கண்கவரும் வேலைப்பாடுகள் செய்துள்ளார்கள். வீட்டில் பயன் படுத்தும் கட்டில், முக்காலி, நாற்காலி, மணை, ஆயுதங்களின்பிடி, நீர் அருந்தும் பாத்திரங்களும் அழகிய வேலைபாடுகளுடையனவாயிருந்தன. தென்னிந்தியக் கோயில்களிலும், அமராவதி, அசந்தா, எல்லோரா முதலிய இடங்களிலும் காணப்படும் சிற்பங்கள் திராவிட மக்களின் அலங்கார விருப்பத்தைத் தெரிவிக்கின்றன.1

பெண்கள் தமது கூந்தலைப் பலவகையாக வாரி முடிந்தார்கள். கூந்தல்மீது பலவகைப் பூக்களைச் செருகி வேய்ந்தார்கள். சுறாமீன், வலம்புரிச்சங்கு, பிறை, இருபக்கமும் யானை குடத்திலிருந்து நீர் கொட்டு வதும் நடுவே இலக்குமி வீற்றிருப்பதுமாகிய வடிவுடைய சீதேவியார் போன்ற அணிகலன்களை அணிந்தார்கள். கொண்டையில் பலவகைப் பூக் களையும் மாலையையும் சூடினார்கள்; சந்தனம் குங்குமம் முதலியவை களைப் பூசி உடலை அழகுபடுத்தினார்கள்; உடம்பில் மஞ்சள்பூசிக் குளித் தார்கள். மார்பு, தோள்களில் தொய்யில் என்னும் ஒருவகை குழம்பைப் பூசி அதன்மேல் கரும்பு பூங்கொடி முதலியவைகளை எழுதி அழகு செய்தார்கள். காதில் தோடு அல்லது குழை அணிந்தார்கள். வறிய மக்கள் காதில் ஓலையைச் சுருளாக்கிச் செருகினார்கள். முத்துமாலை, பவளமாலை, சங்கிலி, குறங்குசெறி, கவானணி, பட்டிகை, சதங்கை, கிண்கிணி, சிலம்பு, கழல், வளை, மோதிரம், மேகலை என்பன அவர்கள் அணிகலன்களிற் சில. திருப்பாதம், திருமுடி, புள்ளித் தொங்கல், கொற்றக்குடை, பொற்பூ, திரள் மணிவடம், காறை, அடிக்காறை, அன்னம், கிளி, சோனகச்சிடுக்கு, மகுடம், வாளி, வடுகவாளி, சூடகம், கண்மலர், சுட்டி, தாலி, தாலிமணிவடம், கண்ட ஞாண், பொட்டு, பதக்கம், ஏகாவலி, கால்வடம், கமலம், செடி, வாகுவலயம், துடர் என்பன போன்ற பல அணிகலன்களும் அணியப்பட்டன.

இசை
2ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு இசை வழங்கிற்று. குறிஞ்சி நிலமக்கள் குறிஞ்சிப் பண்பாடினார்கள். முல்லைநில மக்கள் முல்லைப் பண்பாடினார்கள். அது இன்று மத்தியமாவதி எனப்படும். மருதநில மக்கள் மருதப் பண்பாடினாhகள். அது கேதாரம் எனப்படும். நெய்தலுக்குரிய பண் இன்று புன்னாகவராளி எனப்படும். பலவகை மேளங்கள் வழங்கின. வெவ்வேறு ஓசைகளைப் பிறப்பிக்கும் பறைகள் வெவ்வேறு காலங் களில் கொட்டப்பட்டன. மாடுகளைக் கொள்ளையிடும் போது கொட்டப்படுவது ஏறுகோட்பறை, வெறியாடும்போது அறையப்படு வது முருகியம். மணக் காலத்தில் சாற்றப்படுவது மணமுழவு. தேரிழுக்கும் போது முழக்கப்படுவது தேரோட்டுப்பறை. நெல்லறுக்கும் போது தட்டப்படுவது நெல்லரிக்கிணை. அரசன் வெளிக்கிளம்பும்போது ஒலிக்கப்படுவது புறப்பாட்டுப்பறை. மீன் பிடித்தற்குச் செல்லும்போது கொட்டப்படுவது மீன் கோட்பறை. சூறை ஆடும்போது அடிக்கப்படுவது சூறைகோட்டை.

போர்க்காலத்தில் யானை, குதிரை, காலாட்படை களுக்கு உற்சாகம் மூட்டும் பொருட்டுப் பலவகை வாத்தியங்கள் ஒலிக்கப்பட்டன. அவை இயம், இசைக் கருவி, வாத்தியம், வாச்சியம் எனப்பட்டன. அவை தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, மிடற்றுக் கருவி, துளைக்கருவி என நால்வகைப்பட்டன. தமிழ ருக்குடைய ஏழிசைகள் குரல், துத்தம், கைக்கிளை, குரல், உளை, விளரி, தாரம். மூங்கில், கொன்றைப்பழத் தின் கோது முதலியவைகளால் செய்யப்பட்ட குழல் களும் வழங்கின. எக்காள வகைகளுள் தாரை, காளம், காகாளம், அம்மியம், சின்னம் முதலியவையும், கொம்புவகையில் கோடு, இரலை, வயிர் முதலியவும் இருந்தன. நரம்புக் கருவியில் சிறப்புடையது யாழ் 1அவைகளுக்கு ஏழு, இருபத்தொன்று அல்லது அதற்கு மேற்பட்ட நரம்புகள் இருந்தன.

பறை, முரசு, பேரிகை, ஆகுளி, எல்லரி, சல்லிகை, கிணை முதலியன மேளவகைகளுட்சில. இன்னும் இலங்கைத்தீவில் வழங்கும் மேளவகை யில் எழுபதுக்கு மேலுண்டு. தாரை உடுக்கை முதலியன பாணர் கையில் கொண்டுதிரிந்து அடித்துப்பாடும் சிறியமேளங்கள்.

தோற்கருவிகள்

“பேரிக்கை படக மிடக்கை யுடுக்கை
சீர்மிகு மத்தளஞ் சல்லிகை கரடிகை
திமிலை குடமுழாத் தக்கை, கணப்பறை
தமருகந் தண்ணுமை தாவி றடாரி
யந்தரி முழவொடு சந்திர வளைய
மொந்தை முரசே கண்விடு தூம்பு
நிசாளந் துடுமை சிறுபறை யடக்க
மாசி றகுணிச்சம் விரலேறு பாகந்
தொக்க வுபாங்கந் துடிபெரும் பறையென
மிக்க நூலோர் விரித்துரைத் தனரே”

உடை
பருத்தி இந்திய நாட்டில் உண்டாகும் செடி, மற்றைய நாட்டுமக்கள் ஆடை இல்லாமல் இருந்தபோது அல்லது தோலை உடையாகக் கொண் டிருந்த காலத்தில் இந்திய மக்கள் பஞ்சை நூலாக்கவும், நூலால் ஆடை நெய்யவும் ஆடைக்குப் பலவகைச் சாயங்கள் ஊட்டவும் அறிந்திருந்தனர். இதற்குச் சான்று பழைய சிந்துவெளி நகரங்களிற் கிடைத்துள்ளது. இந்திய நாட்டு வெப்பநிலைக்கேற்ப மக்கள் அற்ப உடையையே அணிந்தனர். ஆடவர் முழங்கால்வரையும் உடை உடுத்து அரையில் கச்சுக்கட்டியிருந் தனர். மிகப்பழங்கால மக்கள் தலையைச்சுற்றி நாடாக்கட்டியிருந்தனர். பின்பு நாடா பாகை ஆக மாறிற்று. பெண்கள் அரையில் மாத்திரம் உடை அணிந்தனர். பெண்களிற்சிலர் மார்பைக் கச்சுக்கட்டி மறைத்தனர். பெரும் பாலும் பெண்கள் அரைக்குமேல் உடை அணியவில்லை. இதனை சான்சி, அமராவதி, பிற்காலச் சிற்பங்களிலும் கோயிற் சுவர்களிலும் கோபுரங்களி லும் காணப்படும் உருவங்களையும் கொண்டு நாம் நன்கு அறியலாம். இறவுக்கை அணியும் வழக்கம் அக்காலத்தில் அரண்மனைகளிலிருந்த கிரேக்கப் பெண்களால் கொண்டுவரப் பட்டிருக்கலாமெனச் சிலர் கருது கின்றனர். அக்காலத்தில் கிரேக்கப் பெண்கள் இந்திய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டமையை ஸ்ராபோ (Strabo) போன்ற வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.1

2 “பருத்தி இந்திய நாட்டுக்கு உரிய செடி. மற்றைய நாடுகளில் மக்கள் தோல்களை உடுக்கும்போது அல்லது உடையின்றியிருக்கும்போது தமிழ் மக்கள் பஞ்சிலிருந்து நூல்நூற்று நூலால் அழகிய ஆடைகளைச் செய்து உடுத்தார்கள்.3 தற்காலக் குடியிருப்புகளில் நூல்நூற்கும் கதிர்கள் கண் டெடுக்கப்பட்டன. மொகஞ் சதரோ காலத்திலேயே மக்கள் பஞ்சிலிருந்து ஆடை நெய்யவும், அதற்குச் சாயமூட்டவும், அழகிய வேலைப்பாடுகள் செய்யவும் அறிந்திருந்தார் களென்பது அங்குகிடைத்த மண்பாவைகளைக் கொண்டு நன்கு அறியப்படுகின்றது. மக்கள் ஆடை நெய்ய அறி வதன்முன் மரப்பட்டைகளை யும் தழைகளையும் உடுத்தார் கள். பஞ்சு உடைக்குமுன் மரவுரி தோன்றிய தாதலின் அது துறவிகளுக்கும் தூய உடை யாகப் பிற்கால மக்களால் கருதப்பட்டது. ஆடையைக் குறிக்க ஐம்பதிற்கு மேற்பட்ட பெயர்கள் தமிழிற் காணப்படு கின்றன. ஒவ்வொரு பெயரும் அக்காலத்தில் வழங்கிய வெவ் வேறு வகை ஆடையைக் குறிக்க வழங்கியிருத்தல் வேண்டும். சங்ககால இலக்கியங்கள் பாலாவிபோன்ற ஆடை, இழை சென்ற இடம் அறியமுடி யாது நுண்ணிய நூலால் நெய்யப்பட்ட ஆடைகளைப் பற்றிக் கூறுகின்றன. முல்லை நிலத்தில் வாழ்ந்த மக்கள் ஆட்டு மயிரி லிருந்து கம்பளி நெய் தார்கள். ஆடைகள் வெளுத்துக் கஞ்சியிடப்பட்டன. ஆடவர் வெளுத்துக் கஞ்சியிட்ட மடியைக் குலைத்து அரையிற்கட்டி அதன் மேல் ஒரு ஆடையை வரிந்து கட்டினார்கள். ஆடவர் சட்டை தரிக்கவில்லை சட்டை தரித்தல் ஊழியம் புரிவோருக்குரியதாக விருந்தது. இறவுக்கை அணிதல் இரண்டாயிரம் ஆண்டுகளின் முன் இந்திய அரசரின் மெய்காப்பாளரா யிருந்த கிரேக்கப் பெண்களால் புகுத்தப்பட்டதாகலாம். பழைய ஓவியங் களிலும் சிற்பங்களிலும் இறவுக்கை காணப்படவில்லை. பெண்கள் தமது தனங்களை அசையவொட்டாமல் கச்சுக்கட்டியிருந்தார்கள். ஆடவர் தலைப்பாகை அணிந்தார்கள். உத்தரியம் தரித்தார்கள். கோவணம் கட்டினார்கள்.1

பயிர்ச்செய்கை
தமிழ் மக்கள் பயிர்ச் செய்கையையே முதன்மையான தொழிலாகக் கொண்டனர். “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என வள்ளுவரும் உழவின் சிறப்பை முதன்மையாகக் கூறியுள்ளார். பிற்காலத்து விளங்கிய கம்பரும் ஏரெழுபதில் வேளாண் சிறப்பை நன்கெடுத்தியம்பியுள்ளார். பயிரிடும் நிலங்கள் நன்செய், புன்செய் என இருவகைப்படும். நெல் விளையும் வயல் நன்செய் எனவும் மற்றைய தானியங்கள் விளையும் நிலம் புன்செய் எனவும் பட்டன. பயிரிடப்படாத நிலம் தரிசு எனப்பட்டது. வேள் என்பது நிலத்தைக் குறிக்கும் பெயர். நிலத்தைத் திருத்திப் பயிரிடுவோர் வேள் ஆளர் எனப்பட்டனர். ஆளர் என்பதற்கு ஆள்பவர் என்று பொருள். வெள்ளத்தை ஏரி குளங்களில் தேக்கி வைத்து வெள்ளத்தை ஆண்டமை யின் வேளாளர் வெள்ளாளர் எனவும் படுவர். நிலங்களையுடைய வேளாளர் வேள் அல்லது வேளிர் எனப்பட்டனர். இவர்கள் குறுநில மன்னராகவும் இருந்தனர். வேளாளர் கொடையாற் புகழ்பெற்றோர். இதனால் வேளாண்மை என்னும் சொல்லுக்குக் கொடை, உபகாரம் என்னும் பொருள்கள் உண்டு. “இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி-வேளாண்மை செய்தல் பொருட்டு” என்னும் குறளில் வேளாண்மை உபகாரம் என்னும் பொருள் தருதல் காண்க. சேர சோழ பாணடிய அரசர் வேளாண் மரபில் தோன்றியவர்களே யாவர்.

சாதி
தமிழ் நாட்டில் நிலம் ஐந்து வகையினதாக விருந்ததென முன்னோ ரிடத்திற் கூறினோம். ஒவ்வொரு நிலமக்களும் வெவ்வேறு பெயரால் அறியப்பட்டார்கள். ஒரு நிலத்தில் வாழும் மக்கள் இன்னொரு நிலத்தில் வாழ்ந்த மக்களுக்குத் தாழ்ந்தவரென்றோ உயர்ந்தவரென்றோ கொள்ளும் கொள்கை அக் காலத்தில் உண்டாகவில்லை. செல்வம், வறுமை, ஒழுக்கம், ஒழுக்கக் கேடு என்பவை போன்ற தன்மைகளால் உயர்வு தாழ்வுகள் கொள்ளப்பட்டன. உயர்குடி என்பது பாவம் பழிகளுக்கு அஞ்சும் குடி என்பது பொருள். வள்ளுவர் தமது நூலில் அடிக்கடி குறிப்பிடும் குடிப் பிறப்பு இவ்வியல்பினதாதலை அறிய மாட்டாதார் அது வடநாட்டார் வருணத்தைத் தழுவியதென மருண்டு கூறுவர். “பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையால்” என வள்ளுவர் பிறப்பினால் சாதியுண்டென்பாரை மறுத்தமை காண்க.

மக்கள் படிப்படியே திருத்தமடைந்து பயிர்ச் செய்கை வளர்ச்சி யடைந்தது. பெரும்பாலும் நகர் மருத நிலத்திலேயே தோன்றிற்று. உலகிலே பழைய நாகரிகச் சிறப்புப் பெற்று விளங்கிய நகரங்கள் எல்லாம் வேளாண்மை செழித்தோங்கிய ஆற்றோரங்களிலேயே விளங்கின. வேளாண்மையால் செழிப்புற்ற நாடுகளில் வாணிகத்தின் பொருட்டும் உணவின் பொருட்டும் பற்பல தொழில் புரியும் மக்கள் வந்து தங்குவா ராயினர். தந்தையின் தொழிலை மகன் செய்தல் என்பதுபோலக் கால்வழி கால் வழியாக ஒவ்வொரு குடும்பமும் பெருகியபோது ஒவ்வொரு குடும்ப மும் தனித்தனிச் சாதியாகப் பெருகியது. நிகண்டு நூல்களிற் காணப்படும் சாதிப்பெயர்கள் தொழில்களையே குறித்தல் காண்க. தனித்தனிக் கூட்ட மாகப் பெருகிய மக்கள் தத்தமக்குள்ளேயே திருமணங்கள் செய்துகொள் ளும் வழக்கம் நீண்ட காலமாக இருந்து வருதலாலும் சாதிக் கட்டப்பாடு வலி அடைந்தது.

தமிழ் நாட்டில் அந்தணர் அரசர் வணிகர் வெள்ளாளர் என்னும் நான்கு பெரும் பிரிவினர், இருந்தனர். இவர்களல்லாத கைத்தொழிலும் ஏவற்றொழிலும் செய்யும் மக்களும் இருந்தனர். முன் கூறிய நால்வரும் உயர்ந்தோரென்றும், பின் கூறிய இருவகையினரும் தாழ்ந்தோரென்றும் கொள்ளப்பட்டனர்.
அந்தண ரென்போர் துறவிகள். கோயிற் பூசை செய்யும் மக்களையும் குறிக்க இப்பெயர் பிற்காலத்தில் வழங்குவதாயிற்று. ஆட்சி புரிவோர் அரசர் எனவும், வாணிகம் புரிவோர் வணிகர் எனவும், வேளாண்மை செய்வோர் வேளாளர் எனவும் பட்டனர். இப்பிரிவுகள் பெரும்பாலும் நகரங்களிலேயே காணப்பட்டன.

இச்சாதிப் பிரிவுகள் மருத நிலத்திலேயே பெரும்பாலும் தோன்றி வளர்ச்சியடைந்தன. வடநாட்டவர் தொடக்கத்தில் நிறம்பற்றிப் பிரித்திருந்த வருணங்களும் தமிழரது தொழில் பற்றிய சாதிகளும் வேறுபாடுடையன. வருணம் என்பதற்கு நிறம் என்பது பொருள். வடநாட்டவரின் வருணத் துக்குப் பிறப்பே காரணம். வடநாட்டவரின் பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர என்னும் நாற் பிரிவுகளே தென்னாட்டு அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் பிரிவுகள் எனப் பிற்காலத்தவர் மயங்கினமையால் பல தடுமாற்றங்கள் உண்டாயின.

அந்தணர், பார்ப்பார், பிராமணர் என்னும் பெயர்கள் பற்றிய மயக்கம்
அந்தணர் என்போர் துறவிகளாவர் என்பது சங்க நூல்களாலும், திருக்குறளாலும் பிறசான்றுகளாலும் அறியக் கிடக்கின்றது. தமிழ் நாட்டில் கோயிற் பூசைசெய்வோர் கோயில்களை மேற்பார்த்தல் பற்றிப் பார்ப்பார் என்னும் பெயர் பெற்றிருந்தனர். தொடக்கத்தில் இன்னவர்தான் பார்ப்பா ராயிருக்கலாம் என்னும் நியதி இருக்கவில்லை. கோயில்களை மேற் பார்க்கும் குடும்பத்தினர் பெருகி ஒரு பிரிவாகப் பிரிந்தனர். இவர்கள் கடவுட் பணி செய்தமைபற்றி உபசார வழக்கில் அந்தணர் என்படுவாராயினர். பார்ப்பார் துறவிகளல்லர். பிராமணர் தமிழ் நாட்டவரல்லர். இவர்கள் வட நாடுகளிலிருந்து தென்னாடுகளில்வந்து குடியேறினோர். தில்லைமூவா யிரவர், 48,000வர், 8,000வர், 3,700வர் என இக்கூட்டத்தினர் பட்டையங்களில் குறிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் பார்ப்பனக் குடும்பங்களோடு கலந்துள் ளார்கள் மத்திய காலத் தமிழ்நாட்டு அரசர் வடமொழிக்கு மதிப்புக் கொடுத்துப் பிராமணரை ஆதரித்தமையால் பார்ப்பன வகுப்பினரும் தம்மைப் பிராமணர் எனக் கூறுவராயினர். இதுவே அந்தணர் பார்ப்பார் பிராமணர் என்போரின் வரலாறாகும்.

வாணிகம்
“இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளின்முன் இந்தியா தூரக்கிழக்கு, தூரமேற்கு நாடுகளோடு முதன்மையான கடல் வாணிகம் நடத்தினது என்றுகாட்டுவதற்குள்ள நல்ல சான்றுகள் உள்ளன. கம்போதியா, யாவா, சுமத்திரா, போர்ணியோ, யப்பான், தென்சீனா, மலாயா, அராபியா, பாரசீகத் திலுள்ள முதன்மையான பட்டினங்கள், ஆபிரிக்காவின் கிழக்குக்கரை என்பவைகளில் இந்தியர் வாணிகத்தின் பொருட்டுக் குடியேறியிருந்தார்கள். அவர்கள் இந்நாடுகளோடு மாத்திரமன்று. அக்காலத்தில் அறியப்பட்டிருந்த உலகம் முழுவதோடும், உரோம இராச்சியங்களோடும் வாணிகம் நடத்தி னார்கள்”1

“இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின் முன் சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் அயல் நாடுகளோடு ஒழுங்குபட்ட முறையில் வாணிகம் நடத்தினார்கள் என அறிகின்றோம்.”2 சிந்துவெளி நகரங்கள் வாணிகத்துக்கும் கைத்தொழிலுக்கும் மத்திய இடங்களாகவிருந்தன. உள்நாட்டுப்போக்குவரத்துக்கு இரண்டு சக்கரங்களுள்ள வண்டிகள் பயன்படுத்தப்பட்டன. அவ்வண்டிகள் இன்று சிந்துவில் பயன்படுத்தப்படும் வண்டிகளைப் போன்றவை. இன்று சிந்து ஆற்றில் ஓடு கின்ற ஓடங்களும் அக்கால ஓடங்களை ஒத்தனவே. கடற் கரையை அடுத்த நாடுகளிலிருந்து உணவுப் பொருள்களைப் பெறும் முறையில் மாத்திரம் வாணிகம் நடைபெறவில்லை. அயல் நாடுகளிலிருந்து உலோகப் பொருள்களும் பிறவும் பெறப்பட்டன. பலுச்சிஸ்தானத்திலும் இராசபுத்தானத்திலுமிருந்து உலோகங்களும், தென்னிந்தியாவிலிருந்து சங்கும், உல்லாச வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் பிற இடங்களி லிருந்தும் பெறப்பட்டன. பாரசீகத்திலும் ஆப்கானிஸ்தானத்திலும் இருந்து நிறக்கற்களும், சீனாவிலும் பர்மாவிலும் இருந்து நீலக்கற்களும் பெறப் பட்டன. முத்திரை வெட்டும் கற்கள், சுற்றிவரக்குமிழி வைத்த பானைகள், பாண்டங்கள் செய்யும் கற்கள் போன்ற இந்தியப் பொருள்கள் கி.மு. 3500 வரையில் பாபிலோனுக்குச் சென்றன என்று அறிகின்றோம்.1

“எகிப்துக்கும் இந்தியாவுக்கும் இடையில் முற்காலத்தில் போக்குவரத்து நடைபெற்றதெனத் தெரிகிறது. அலக்சாந்திரியாவில் சந்தித்த படித்த இந்தியர்கள் மூலம் தான் பல செய்திகளைக் கேட்டு அறிந்துகொண்டதாகத் தாலமி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவிலிருந்து சமயயாத்திரிகர்கள் சிரியாவி லுள்ள ஹெராபொலிசுக்குச் (Hierapolis) சென்றார்கள் என்று லூசியன் (Lucian) கூறியுள்ளார். கிறித்து பிறப்பதற்குமுன் இந்தியர் அபிசீனியாவோடு வாணிகம் புரிந்தார்கள் என்பது கிறித்துவ வேதங்களிற் காணப்படுகின்றது. இந்தியர் அராபியாவிலும் குடியேறியிருந்தார்கள். கிறித்துவ ஆண்டின் தொடக்கத்தில் அவர்கள் சீனக் கடற்கரை நாடுகளில் குடியேறத் தொடங்கி னார்கள். கி.மு. 350 இல் வரலாறு எழுதிய பரோசஸ் (Berossus) பாபிலோனில் அன்னியர் கூட்டமாகக் குடியேறியிருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார். கி.மு. 63 இல் பிறந்த ஸ்ராபோ (Strabo) என்பார் உரோம நாட்டுத் தங்கம் இந்தியாவுக்கு அதிகம் செல்வதைப்பற்றிக் கவலைப்பட்டார். பிளினி கூறியிருப்பது வருமாறு: இந்தியாவுக்குப் பயணஞ் செய்பவர்கள் ஒசெலிஸ் (Ocelis) என்னும் துறைமுகத்தில் இறங்குவது நல்லது. கிப்பாலுஸ் என்னும் பருவக்காற்று வீசுமானால் நாற்பது நாட்களில் முசிறித் துறைமுகத்தை அடையலாம். இதன் சூழல்களில் கடற் கொள்ளைக்காரர் இருக்கின்றார்கள். ஆதலால் அது இறங்குவதற்குத் தகுந்த இடமன்று. நான் இதை எழுதுகின்ற காலத்தில் அங்கு ஆள்கின்ற அரசனின் பெயர் செலிபுத்துருஸ். வேறு ஒரு வாய்ப்பான துறைமுகம் நெல்சிண்டி பக்காரி (Nelcyndi Bacare) இத் துறைமுகம் தொலைவிலே உள்ள மதுரையிலிருந்து ஆட்சிபுரியும் பாண்டியனுக்குரியது. புளுற்றா என்பவர் “ஆகஸ்தசின் பரிவாரங்களுள் ஒருவரான புத்த சன்னியாசி. அவர் நாட்டுக்குள்ள வழக்கப்படி நெருப்பில் விழுந்து இறந்துபோனார். அவருடைய சமாதிக் கட்டிடம் இங்கு கிடக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“கடல் வாணிகம் பெரிதும் திராவிடர் வசம் இருந்தது. அதில் ஆரியர் சிறுபங்கு பற்றினார்கள். அராபியா, ஆபிரிக்கா, சீனக் கரைகளில் குடியேறிய இந்தியரிற் பெரும்பாலோர் திராவிடராதல் வேண்டும். வடநாட்டு வாணிகத் தைவிடத் தென்னாட்டு வாணிகம் முதன்மையுடைய தென்றும், இரத்தினக் கற்கள் போன்ற விலையுயர்ந்த பண்டங்கள் தெற்கிலிருந்து வந்தன என்றும் வடநாடு தோல், கம்பளி என்பவைகளை அளித்தனவென்றும், இரத்தினக் கற்கள், சங்கு முதலியன தெற்கிலிருந்து வந்தனவென்றும் கௌடலியர் குறிப்பிட்டுள்ளார். தாம்பிரபரணி ஆறு, இலங்கை, பாண்டியநாடு என்பன அவரால் குறிக்கப் பட்டுள்ளன.

“இந்தியாவிலிருந்தே நல்ல யானைகள் மேற்குத் தேசங்களுக்கும் கொண்டுபோகப்பட்டன. தந்தம், குரங்கு, மயில் முதலியவை இந்திய நாட்டுக்குரியவை. இவைகளைக் குறிக்க எபிரேய (Hebrew) மொழியில் வழங்கிய சொற்கள் எபிரேயம் அல்ல! திராவிடம். இந்தியாவிலிருந்து ஒரு மயில் எகிப்துக்கு அனுப்பப்பட்டது. அது யூபிதர் கடவுளுக்கு நேர்ந்து விடப்பட்டது. பாபிலோனுக்கு மயில் அனுப்பப்பட்டதைப்பற்றிப் பவேரு சாதகம் கூறுகின்றது. இந்நூல் கி.மு. 400 வரையில் செய்யப்பட்டது. கிரேக்க மொழியில்வழங்கும் ஒரிசா என்பது அரிசி என்னும் திராவிடத்தின திரிபு. கிராம்பும் சாதிக்காயும் மலாய தீவுகளில் முற்காலத்தில் கிடைப்பனவா யிருந்தன. அவை கி.பி. 180இல் அலக்சாந்திரியாவுக்குக் கொண்டுபோகப் பட்டன. ஆகவே கி.பி. முதல் நூற்றாண்டில் இந்திய மலாய வாணிகம் நடைபெற்றிருக்கலாம். அபிசீனியாவின் தலைநகராகிய அக்சமில் (Auxam) நடப்பட்டுள்ள ஒரு கல்லில் எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல் கி.பி. முதல் நூற்றாண்டில் நாட்டப்பட்டது. அவ்வெழுத்துக்கள் இந்தியாவைக் குறிப்பிடுகின்றன. எகிப்தில் தலைநகராகிய மெம்பிஸ் அழிபாடுகளில் இந்திய ஆடவர் மகளிரைக் காட்டும் ஓவியங்கள் காணப்படுகின்றன என்றும், அங்கு இந்தியர் குடியேறியிருந்தார்களென்றும் பிளிண்டேர்ஸ் பெற்றி (Flinders Petrie) என்பார் கூறியுள்ளார். புளுற்றா காலத்தில் வாழ்ந்தவராகிய டையோ கிறிஸ்தோதம் (Dio Chrysostom) அலக்சாந்திரியாவில் நடமாடிய பல நாட்டு மக்களிடையே இந்தியரைத் தான் பார்த்ததாகக் கூறியுள்ளார்.”1

“கோடைகாலச் சூரிய அயன காலத்தில் ஆண்டுதோறும் நூற்றி யிருபது மரக்கலகங்கன் மோயிஸ் ஹர்முஸ் (Mois Harmos) என்னும் செங் கடற் கரையிலுள்ள எகிப்திய துறைமுகத்திலிருந்து புறப்பட்டன. பருவக் காற்றின் உதவியைப் பெற்று அவை நாற்பது நாள்களில் இந்தியத் துறை முகங்களை அல்லது இலங்கைத் தீவை அடைந்தன. மரக்கலங்கள் விலை உயர்ந்த பண்டங்களுடன் திரும்பி வந்தன. பண்டங்கள் செங்கடற்கரையி லிருந்து நீல நதிக்கு ஒட்டகங்களிலேற்றிக் கொண்டு போகப்பட்டன. அவை நீல ஆற்று வழியாக அலக் சாந்திரியாவை அடைந்து பின் உரோம நாட்டுத் தலைநகரைச் சேர்ந்தன.” இவ்வாறு உரோமன் வரலாற்றாலரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இஞ்சி, மிளகு, கறுவா போன்றவைகளுக்கு மேற்கு நாடுகளில் மிகத் தேவையிருந்தது. வயிரம், முத்து, பட்டு என்ப வற்றையும் அவர்கள் எவ்வளவு பொருள் கொடுத்தும் வாங்க ஆயத்தமாக விருந்தார்கள். கிழக்குத் தேசங்களிலிருந்து சென்ற பண்டங்கள் ஒன்றுக்கு நூறு மடங்கு இலாபத்துக்கு விற்கப்பட்டன. இதனால் கவரப்பட்டு மிகப் பலர் கிழக்குக் காடுகளோடு வாணிகத்தில் ஈடுபட்டிருந்தார்கள் அவர்களுக்கு வேண்டிய பண்டங்களை சேர நாடும் பாண்டிய நாடும் அளித்தன. குமரி, கொற்கை, காயல் பாம்பன் என்னும் துறைமுகங்கள் அதிக வருவாயளித்தன. கிறித்துவ ஆண்டின் ஆரம்ப காலக் கிழக்கு நாடுகளின் வாணிகம் உரோமர் வசம் இருந்தது. வயிரங்களுக்கு அடுத்தபடியில் முத்து விலை ஏறப் பெற்றதாயிருந்தது. உரோமப் பெண்கள் பட்டு ஆடைகளை உடுக்க விரும் பினார்கள். அவர்கள் பொன் எடைக்குப் பட்டை நிறுத்து வாங்கினார்கள் இரத்தினங்கள் இழைத்துச் செய்யப்பட்ட அணிகலன்கள் தென்னிந்தியாவி னின்றும் உரோமுக்கு அனுப்பப் பட்டன. கோயமுத்தூர்ப் பகுதியிலுள்ள பாடியூரில் கிடைக்கும் கோமேதகத்தை உரோம வணிகர் அதிக விலை கொடுத்து வாங்கினார்கள். இந்தியப் பொருள்கள் உரோமில் நூறு மடங்கு விலைக்கு விற்கப்பட்டதென்றும் ஆண்டில் எட்டு இலட்சம் தங்க நாண யத்தை இந்தியா வாணிக மூலம் இழுத்து விடுகின்றதென்றும் அவ்வாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

சமயக்கொள்கைகள்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே திராவிட மக்கள் உலகம், உயிர், இறைவன் என்னும் முப்பொருள் உண்மைகளை ஆராயும் உயர்ந்த சமயக்கொள்கை உடையவர்களாயிருந்தார்கள். மொகஞ்சதரோ, அரப்பா முதலிய இடங்களிற்கிடைத்த முத்திரைக் கற்களில் பலவகை விலங்குகளின் இடையே ஆலமரத்தின் கீழ் யோகத்தில் வீற்றிருக்கும் கோலமுடைய வடிவம் ஒன்று காணப்படுகின்றது. இவ்வடிவம், கடவுள் உயிர்களுக்குத் தலைவன் (பசுபதி) என்னும் கருத்தை விளக்குகின்றதென ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்கள். அக்காலத்திலேயே மக்கள் யோகத்தின் தன்மைகளையும் அதனால் பெறும் ஆற்றல்களையும் நன்கு அறிந்திருந்தார்கள். பழைய தமிழரின் சமயக்கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே பௌத்த சைன மதக்கொள்கைகளும் எழுந்தன. புத்தர் அரசமரத்தின் கீழ் யோகத் திருந்தார். சைனக் கடவுள் அசோகமர நிழலில் இருப்பவர் என்னும் கொள்கைகள் மொகஞ்சதரோ மக்கள் கொண்டிருந்த கருத்தைப் பின் பற்றியவே. கடவுள் யோகத்திலிருப்பதாகக் காட்டும் வடிவம் கடவுளாய் வருதற்கும் யோகப்பயிற்சி அவசியம் என்பதை அக்கால மக்கள் கொண் டிருந்தார்கள் என்பதை உணர்த்துதல் கூடும். பௌத்த, சைன மதங்கள் பழைய திராவிட மதக்கொள்கைகளைத் தழுவி எழுந்தன வென்பதை வரலாற்றாசிரியர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

பழையகாலத்தில் சமயக்கருத்துக்கள் ஏட்டில் எழுதி வைக்கப்படாது ஆசிரிய மாணாக்கமுறையில் சொல்லிக் கொடுக்கப்பட்டுவந்தன. இவ்வாறு தலைமுறை தலைமுறையாக வந்த சமய உண்மைகள் மறைகள் எனப் பட்டன. உபநிடதங்கள் எனப்பட்ட சமயநூல்களிற் சொல்லப்படும் கருத்துக்கள் திராவிடரின் கொள்கைகளே. அக்காலத்தில் பிராமணர் அரசவகுப்பினரின் பாதங்களிலிருந்து உபநிடத உண்மைகளைப் பயின்றார்கள். உபநிடத ஞானங்கள் பிராமணரால் அறியப்படாதவை. இக்கருத்துக்களே தமிழ் மக்களின் சமயக்கருத்துகளாகும். அக் கொள்கைகள் இப்பொழுது சைவ சித்தாந்தக் கொள்கைகள் என வழங்கும். சைவசித்தாந்தக் கொள்கைகள் வரலாற்றுக் காலத்துக்கு முன் தொட்டுத் தமிழ் மக்களிடையே வழங்கிவரும் உயர்ந்த கருத்துக்கள் என டாக்டர் பாப் கூறியுள்ளார்.

தமிழருடைய மதம் எல்லாமக்களுக்கும் பொதுவானது. இதுவே வள்ளுவரதும், தொல்காப்பியரதும் மதமாகும். திருக்குறளில் வினைப் பயன், மறுபிறப்பு, உயிரின் அழிவின்மை, பாவ புண்ணியம், இறைவன், இருவினைகளையும் பற்றாமல் இறைவன் நிற்கும் தன்மை, தவம், தவத்தி னால் பெறும் ஆற்றல் போன்றவை கூறப்பட்டுள்ளன. மந்திர விததைகளி னாலோ கடவுளுக்குக் காணிக்கைகள் கொடுப்பதினாலோ உயிர்கள் உயர் நிலை அடைய மாட்டா வென்பதே அறிவுடையோர் மதமாகும்.

தொடக்கத்தில் சமயம் அச்சம், உதவியற்ற தன்மை போன்ற ஏதுக் களால் தோன்றி வளர்ந்தது; பின்பு சிறிது சிறிதாகப் பண்பாடடைந்து உயர் நிலை அடைந்தது. இக்கொள்கைகளை முள்ளுள்ள தாழை மரத்தில் பூத்த நறும™முள்ள பூவுக்கு ஒப்பிடலாம். இன்றைய மக்களின் குறைபாடு பூவைப் போற்றாது தாழையின் முள்ளுள்ள இலைகளைப் போற்றுதல் போன் றிருப்பதே.

உணவு
மக்கள் தாம் வாழ்ந்த இடங்களுக்கு ஏற்ப வெவ்வேறு வகை உண வினை உண்டுவந்தார்கள். தாவரம் ஊன் என்னும் இருவகை உணவுகளும் பெரும்பாலும் கொள்ளப்பட்டன. இவற்றுள் தாவரவகையே உணவின் பெரும் பகுதியாகவும் ஊன் கறிவகைபோன்று சிறிதளவாகவும் இருந்தன. சங்ககால இலக்கியங்களால் வேளான் வகுப்பினர் பார்ப்பனர் என்னும் இருவகுப்பினரல்லாத மற்றையோரெல்லாம் ஊன் உணவு கொண்டார்கள் எனத் தெரிகிறது. ஊன் உணவு கொள்ளுதல் சிறந்ததன்று என்னும் கொள்கை நிலவியிருந்ததென்பது திருக்குறளால் நன்கு தெரிகின்றது.

கறிவகைகளுக்கு மிளகு பயன்படுத்தப்பட்டது. மிளகுக்குக் கறி என்பது மற்றொரு பெயர். முற்காலத் தமிழ் மக்கள் மிளகாயைப்பற்றி அறியார். ஐரோப்பியர் மூலம் மிளகாய் இந்தியாவை அடைந்தது. மிளகாய்ச் செடி தென்னமெரிக்காவுக்குரியது. இதன்காய் மிளகுபோல் காரமாயிருத்தல் பற்றி மிளகாய் (மிளகு+காய்) எனப்பட்டது. ஐரோப்பியர் இந்தியாவினின்றும் மிளகை வாங்கிச் சென்றார்கள். கிரேக்கரும் உரோமரும் இதனை அதிகம் விரும்பினமையால் இதற்கு ‘யவனப்பிரியா’ என்னும் இன்னொரு பெயரும் வழங்கிற்று. யவனர் என்பது கிரேக்கரையும் உரோமரையும் குறிக்க வழங்கிய பெயர். மிளகைக் குறிக்கக் கிரேக்கர் பிப்பிலி என்னும் பெயரை வழங்கினர். பிப்பிலி என்பது திப்பிலி என்பதன் திரிபு. பிப்பிலி என்னும் கிரேக்க சொல்லின் திரிபே பெப்பர் என்னும் ஆங்கிலச்சொல். முற்காலத்தில் மிளகு ஐரோப்பிய மக்களின் சொகுசான உணவுப் பொருளாக விருந்தது. மத்திய காலத்தில் அது அவர்களுக்கு இன்றியமையாத உணவுப் பொரு ளாக விருந்தது. முதலில் வெனீசிய வணிகரும், பின்பு போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் மிளகை மேற்கு ஆசிய நாடுகளுக்குக் கொண்டு சென்று வாணிகம் புரிந்தனர். பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒல்லாந்தர் மிளகின் விலையை இருமடி ஆக்கினமையால் ஆங்கிலரால் 1599இல் ‘கிழக்கிந்திய வாணிகக் கம்பனி’ தொடங்கப்பட்டது. அதனால் இந்தியா வில் ஆங்கிலர் ஆட்சி தோன்றி வளர்வதாயிற்று.

நிகண்டு நூல்களில் சோறு, சிற்றுண்டி வகைகளைக் குறிக்கப் பற்பல பெயர்கள் காணப்படுகின்றன. அவைகள் எல்லாம் வெவ்வேறு வகையாகச் செய்யப்பட்ட உணவுவகைகளைக் குறிக்கின்றன. “அறுசுவை உண்டி யமர்ந்து இல்லாளூட்ட” என்னும் நாலடியார் அடியினால் செல்வர் அறு சுவையுள்ள உணவுகளை உண்டார்கள் என அறிகின்றோம்.

கறிவகைகளுக்குத் தாளிதம் செய்யப்பட்டது. தேன், காய், பிஞ்சு, பழம், கிழங்கு, தளிர், இலை முதலியன உணவாகப் பயன்படுத்தப்பட்டன. தமிழில் மதுவகைகளைக் குறிக்க அறுபது பெயர்கள் வரையில் காணப் படுகின்றன. இதனால் அக்காலமக்கள் மதுவை அதிகம் உண்டார்கள் எனத் தெரிகின்றது. நெல், தேன், பழவகைகள், பூவகைகளிலிருந்து மதுவகைகள் செய்யப்பட்டன. அவை சாடிகளில் ஊற்றிக் காரமேறும்படி நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டன. “தேட்கடுப்பன்ன நாட்படுதேறல்” எனக் கள்ளின் காரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலக் கள் வகைகள் இக்காலச் சாராய வகை போன்று வாலையிலிட்டு வடிக்கப்பட்டவையல்ல; இக்காலபீர் (beer) என்னும் மதுப்போன்றவை.

அயல்நாட்டுப் பயணக்காரர் இந்திய மக்களின் பழக்க வழக்கங்களைப்பற்றிக் கூறியுள்ள சில குறிப்புகள்:
1இற்சிங் என்னும் சீனயாத்திரிகன் கூறியிருப்பது வருமாறு: விருந்து கொடுப்போர் புத்தகுருமாரை வணங்கி அவர்களை வீட்டுக்கு அழைக் கிறார்கள். விருந்தில் பெரும்பாலும் செப்புப் பாத்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவை சாம்பலிட்டு மினுக்கப்படுகின்றன. ஒவ்வொரு குருவும் ஒவ்வொரு மணையில் இருப்பார். ஒருவரோடு ஒருவர் முட்டாதபடி மணைகள் எட்ட இடப்படுகின்றன. மட்பாத்திரங்கள் ஒருமுறைக்குமேல் பயன்படுத்தப்படுவதில்லை. ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் குழியில் வீசப்படுகின்றன. பயன்படுத்திய மட்பாத்திரங்களை ஒருபோதும வைத்திருத்தல் கூடாது. பிச்சை இடும் இடங்களில் இவ்வாறு வீசப்பட்ட பாத்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. சீனாதேசத்தில் செய்யப்படுவன போன்ற உயர்ந்த மட்பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டபின் சுத்தஞ்செய்து வைக்கப் படுகின்றன. விருந்தினர் சாப்பிடும் இடம் சாணியால் மெழுகப்பட்டிருக் கும். வாயிலில் பெரிய பானைகளில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். குரு மார் வந்ததும் அவர்கள் தமது மேல் அங்கியின் கட்டுகளை அவிழ்ப் பார்கள். அவர்கள் தமது கைகளைப் பயறு அல்லது மண்ணைத்தேய்த்துக் கழுவுவார்கள். குருமார் தமது குண்டிகையிலுள்ள நீரைப் பயன்படுத்துவர்; அல்லது விருந்துக்கு அழைத்தவர் தண்ணீரை ஊற்ற அதனைப் பயன் படுத்துவர். பின்பு அவர்கள் மணைகளில் அமர்வர். அவர்களுக்கு முன்னால் உண்ணும் தட்டுகள் வைக்கப்படும். உண்பதன்முன் கடவுளைத் துதிப்பது வழக்கமன்று. விருந்துக்கு அழைத்தவர் உணவைப் பரிமாறுவார். பரிமாறும்போது பெருவிரற் பருமையுள்ள இஞ்சித்துண்டும் ஒருகரண்டி உப்பும் கொடுக்கப்படும். உப்புக் கொடுப்பவன் தலைமைக் குருவின்முன் கைகட்டி முழங்கால் படிந்து நின்று வணங்குவான்; அப்பொழுது அவர் எல்லாருக்கும் உணவைச் சரிவரப் பரிமாறு என்று சொல்வார். எல்லோருக் கும் உணவு படைத்தபின் உண்ணவேண்டுமென்று காத்திருக்க வேண்டிய தில்லை.

மார்க்கோபோலோ கூறியிருப்பது: மலபாரில் எல்லா ஆடவரும் மகளிரும் நாளில் இருமுறை குளிக்கிறார்கள். அவ்வாறு செய்யாதவர் தாழ்ந்தவர் எனக் கொள்ளப்படுகின்றனர். அவர்கள் வலது கையால் உண்கின்றனர். எக்காரணம் பற்றியாவது அவர்கள் உணவை இடக்கையால் தொடமாட்டார்கள். அவர்கள் இடக்கையை அசுத்தமான தேவைகளுக்குப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொருவனும் நீர் பருகுவதற்குத் தனிமையான ஏனம் வைத்திருக்கிறான். இன்னொருவன் பயன்படுத்தும் ஏனத்திலிருந்து இன்னொருவன் நீர் உண்ணமாட்டான். நீர் உண்ணும்போது அவர்கள் ஏனத்தை வாயில் முட்டவிடமாட்டார்கள்; வாய்க்குச் சிறிது தூரத்தில் பிடிப் பார்கள். எவனாவது ஏனத்தை வாயில் வைத்தல்கூடாது; நீர் குடிப்பதற்கு அதனை அன்னியனிடம் கொடுக்கவும் கூடாது, அன்னியனிடம் ஏனம் இல்லாவிடின் அவர்கள் நீரை அவன் கையில் ஊற்றுவார்கள். அவன் கையை ஏனமாகக் பயன்படுத்துவான்.

1மக்கள் மிகவும் நுட்பமாகச் சமையல் செய்கிறார்கள். அவர்கள் நூறுவகையாகச் சமையல் செய்கிறார்கள். தினமும் சமையல் வெவ்வேறு வகையாகவுள்ளது.

முடிவுரை
திராவிட மக்களே இந்திய நாட்டின் ஆதிமக்கள். இம்மக்கள் இற்றைக்கு ஆறாயிரம் ஆண்டுகளின் முன் சிறந்த நாகரிகவளம் பெற்று விளங்கினார்கள். திராவிடர் நாகரிகப் பண்பாடுகள், சமயக்கருத்துக்கள், கலைகள் என்பன புதிதாக இந்தியநாட்டை வந்தடைந்த மக்கள் திராவிட மக்களோடு கலந்து தோற்றுவித்த புதிய சந்ததியினரால் சிற்சில வேறுபாடு களுடன் கைக்கொள்ளப்பட்டன. இன்று அவைகளே, இந்தியக்கலை, இந்திய மதக்கொள்கைகள், இந்திய நாகரிகம் என்னும் பெயர்கள் பெற்று விளங்குகின்றன.1 இந்திய நாகரிகத்துக்கு மாத்திரமன்று பழைய உலக நாக ரிகத்துக்கே திராவிட அடிப்படை உண்டு என்பதை ஏற்ற மேற்கோள் களுடன் இச்சிறிய நூலில் விளக்கியுள்ளோம்.
எஎஎஎ
1
2
1. Recent excavations near Chitaldrug in Mysore reveal six levels of buried cities, rising from stone age impliments and geometrically adorned pottery apparently as old as 4000 B.C., to remains as late as 1200 A.D-கூhந ளவடிசல டிக உiஎடைணையவiடிn
ஞ-396 - றுடைட னுரசயவே.
1. In fact evidences point to the date when the so called southern tongue was spoken all over India in the north as well as the south-J. Lazarus, B.A., D.D.
1. The descriptions of Megasthenes prove that even at its highest development Hindu Civilization was more Turanian than Aryan; and the Pre-aryan Turaian civilization of India must have been similar to the pre-semitic, Turanian civilization of Babylonia, Chaldaea and Assyria……..
Industrial arts of India P. 232.-George C.M. Birdwood C.S.I.
A variety of Causes, partly political and partly literary, has tended to the belittlement of peninsular India’s contribution to the history both India and of the whole world at large. The line is ripe for South India to champion her own cause and assert her claims to recognision.
-F.R. Richards, I.C.S., M.A., M.R.S., F.R.A.I -Quarterly journal of the mythic society.-Vol. 6.P. 156.
1. Culture suggests agriculture, but civilization suggests the city. In one aspect civilization is the habit of civility and civility is the refinement which townsmen, who made the world thought possible in the Civitas or city-The Story of Civilization-P. 2-Will Durant.
1. நிலத்தை ஆண்டமையின் பயிரிடுவோர் வேளாளர் எனவும் பட்டனர். வேள்-மண்.
1. இஃது இலசரஸ் (J. Lazarus, B.A., D.D,) என்னும் அறிஞர் தென்னிந்திய ஆராய்ச்சிகள் (South Indian researches) என்னும் இதழ் ஒன்றில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை ஒன்றின் சுருக்கமாகும்.
1. பல ஆயிரம் ஆண்டுகள் என்பதற்கு இன்று சான்றுகள் கிடைத்துள்ளன.
Sidelights of Dravidian Problem-F.J. Richards M.A.R.A S.F.R.A. I.-Quarterly Journal of Mythic Society Vol.6-P. 156.
1. Martyrdam of man - 22nd impression pp. 40, 41 - W. Reade.
1. Canarese passages have been found in a greek farc written in an Egyptian papyrus.
1. The fact is now scarcely to be doubted that the rich oriental merchandise of the days of king Heram and king Solomon had its starting place in the seaports of
the Dekhan; and that with a high degree of probability some of the most esteemed of the spices which were carried into Egypt by the Mediantish merchants of Genesis xxxvii 25, 28, and by the sons of patriarch Jacob (gen xi. iii. ii.) had been cultivated in the spice gardent of the Dekhan.-Indian shipping -P. 95., R.K. Mukerji.
1. Hunters Orissa vol - p 197. Hunter remarks “This and others of the inscriptions prove, in the opinion of the scholar to whom we owe their decipherings, that Kalinga was at the time an emporium of trade. We know from other sources
that, shut out as Orissa was from the general policy of India, it boasted of fabric which it could not send as valuable present to the most civilized monarchs of the interior. So fine was the lines which the prince of Kalinga sent to the king of Oudh, that a priestess who put on the gauzy fabric was accused of appearing naked.-Cosmos Analysis of the Dulva-Journal Asiatic Society of Bengal.
1. G.R. Hunter-New review vol. 3
2. Hisiorical researches vol. 11 p 45 Professor Heeran
3. Hisiorical researches vol. 11 p 309 Professor Heeran
4. Hisiorical researches vol. 11 p 310 Professor Heeran
5. Hindu Superiority vol. 11 p. 178. Har Bilas Sarda, B.A

1.  The remaining quarter of the modern vocabulary occupies itself chiefly with such terms for which Indo-aryan languages had no expressions including legal phraseology, names of Places, trees, animals. etc borrowed from the languages of the rulers of neighbouring tribes - A new approach to the study of middle and modern Indo-aryan-Dr. S.M. Katre M. A. Ph.D
2.  A. Clemens Schoener Partenkirchen.
3.  Periplus of Pseudo-Skylax BC. 4th C.
4.  Tamerai 3. Tabula peutingeiana 4. Scythia Dymirice.
5.  Extracts from the works of K. N. Sivaraja Pillai.
6.  Tamil studies pp 1-2, M. Srinivasa aiyangar.
7.  The journal of the Oriental research magazine-1924-P.T.S Iyengar.
8.  Sanskrit element in the Vocabularies of the Dravidian Languages - Anuvaratha vinayakam Pillai M. A.
9.  Nagavarma, the Kannada grammarian (12th century) speaks of three and a half mother languages-Sanskrit, Prakrit Apabhramasa and Paisacika, and of fiftysix daughter languages which arose from them including Tamil Telugu and Kanada
    Ketana the Telugu grammarian (13th Century) says that Sanskrit is the mother of all languages. The anonymous Malayali grammarian who wrote Lilatilakam (14th Century) also holds the view that Malyalam is derived from Sanskrit-Malaylam and other Dravidian languages-Proceedings and Trasactions of the ninth all India Oriental Conference, Trivandram. Dec. 1937-P 1235.
10. எ, ஒ, ழ், ற், ன்
11. Some scholars have fancied that Telugu and other so called Dravidian languages are quite independent of Tamil. This is the old song of grown up children turning proud and disowning all relationaship to their ancestry. If all Sanskrit words and derivatives are eliminated from these languages the residue of words left will be found to be ancient Tamil words, now considered obsolete or found in the poetry of bygone days-South Indian research vol. 1-Rev-J Lazarus B. A. D.D
12. K. N. சிவராச பிள்ளை.

ஊர் என்னும் நகரிலே சமாதி ஒன்றில் காணப்பட்ட வெள்ளி இடபம்

பொன் உறையிட்ட பொன் வாள்
1. Crete.
2. பேராசிரியர் ஹாலின் சுமேரிய திராவிடக்கொள்கைக்கு வலியாகப் பல புதிய சான்றுகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. இவைகளுள் சுமேரிய திராவிட மொழிகளுக் குள்ள தொடர்புகள் முக்கியமானவை. சிறப்பாகத் தமிழுக்கும் சுமேரிய மொழிக்கும் தொடர்பு காணப்படுகிறது. The Quarterly journal of the Mythic Society, Vol. XIX. No.3.
சுமேரியாவிற் கிடைத்த உருவச்சிலைகளின் முக இரேகை இன்று திராவிட மொழிகளில் ஒன்றை வழங்கும் தென்னிந்தியன் ஒருவனுடையதை ஒத்துள்ளது.
சுமேரியர், தரை வழியாகவும் கடல் வழியாகவும் மேற்கு ஆசியாவை அடைந்த இந்தியர் என்று கருதுவது தகாத செயலாகமாட்டாது - The History of the Near East-Professor Hall.
சுமேரியர் திராவிட இனத்தைச் சேர்ந்தோராவர். Aryanization of India-N.K. Dutt.
1. இலங்கைத் தீவுக்கும் எல்லம் என்று பெயர்.
2. இந்தியர் தாம் செல்லும் வழியில் நமது நாகரிகத்தை எல்லத்தில் விட்டுச் சென்றார்கள். மக்கள் மிக மிக முற்காலத்தில் நாகரிகம் அடைந்த நாடுகளுள் இந்தியா ஒன்று என்பதில் ஐயம் இல்லை. கிழக்கிலிருந்து மேற்கை நாகரிகப்படுத்துவதற்கு வந்த மக்கள் இந்திய உற்பத்திக்குரியவர்கள் எனக் கருதுவது இயல்பாகும். பழைய சுமேரியரின் தோற்றம் இன்றைய இந்தியரின் தோற்றம் போல இருந்தது என்பதை நினைக்குமிடத்து இக் கருத்து வலிபெறுகின்றது - கிட்டிய கிழக்குத் தேசங்களின் வரலாறு - The History of the Near East by Professor Hall.
1. Heradotus - B.C. 480. 2. Berosus - B.C. 250
1. Oppert. 2. Frankfort.
1. அராபியாவில் வாழ்ந்த பழைய மக்கள் செமித்தியர் எனப்படுவர். 2. Urukagina.
1. Acade 2. Akkad. 3. Gudea. 4. Chaldees.
1. Ur-engur. 2. Amorites.
1. இவன் பாபிலோனிய முதல் அரசன்; செமித்திய குலத்தவன்.
1. Arm-chairs 2. Tell-el-ubaid.
1. தேர் எல்பஃறியிலுள்ள ஹஸ்விதப் இராணியின் சமாதிக் கட்டடச் சுவரில் எழுதப் பட்டுள்ள வைகளுள் காணப்படும் பண்டு என்பது இந்தியா அல்லாத வேறு இடமாக இருத் தல் முடியாது. எகிப்தியர் நீண்ட காலமாகத் தமது தாய்நாடுகளோடு வாணிபம் நடத்தி னார்கள். அவர்கள் குறிப்பிட்டுள்ள அரசர் பெயர்கள், மரங்கள் முதலியவை இந்தியா வுக்குரியனவாகவே காணப்படுகின்றன. இதனால் எகிப்திய நாகரிகம் பழைய இந்தியாவி னின்றும் சென்றதென்ப தற்கு யாதும் ஐயம் இல்லை. Theosophist; March 1891.
பழைய அபிசீனியர் அபூசின் ஆற்றோரங்களினின்றும் சென்று ஆப்பிரிக்காவிற் குடியேறியவர்களாவர். அபூசின் (Abuisin) என்பது இலக்கிய காலத்தில் சிந்து ஆற்றைக் குறித்து வழங்கிய பெயர். Heeran’s Historical Researches, Vol. P. 310
2. Delta 3. Hours.
1. Heradotus. 2. Manes. 3. Abydos. 4. Enzip-merpeba.
1. Paraoh. 2. Heeraconpolis. 3. Pyramid. 4. Sneveru. 5.Khuba.
6. Khafre. (2867-2811 B.C.) 7. Gizeb.
1. Thutmose.
1. Officials.
1. Brush. 2. வாலுள்ள தவளைக் குஞ்சு.
1. Thoth
1. Chaldea.
2. திராவிடரே தென்னிந்தியாவின் பழங்குடிகள். அவர்களிடையே நாகரிகம் வளர்ந்தது. அந்நாகரிகம் பிற்காலத்தில் மெசபெதோமியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு செமித்திய நாகரிகத்துக்கு அடிப்படையாயிற்று. - People of India P.471-H. Risely.
சிந்துப் பிரதேசத்திலிருந்து நமது நாகரிகம் பாபிலோனியா எகிப்து முதலிய தேசங்களுக்குப் பரவியது. பாபிலோனியாவில் கி.மு. 700இல் ஒரு தமிழ்க் குடித்தனமிருந்தது - திரு வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் M.A. வரலாற்று ஆராய்ச்சியாளர், பல்கலைக் கழகம், சென்னை.
பழைய திராவிடர் காலத்துக்குக் காலம் இந்தியாவினின்றும், சுமேரியா, பாலத்தீனம் முதலிய நாடுகளில் சென்று குடியேறினார்கள் கிறித்துநாதர் வரையில் திராவிட நாகரிகம் அந் நாடுகளில் புலப்படுமாறு பரவியிருந்தது - The Quarterly Journal of the Mythic Society, Vol. XIX. No.3.
1. Ruins.
1. நடு பருத்து இரு பக்கங்களும் ஒடுங்கியது.
1. Progress of Archaelogy P. 17, Stanley Casson
2. History of Civilization P. 584, William Durant.
3. Rama Varma’s Research Institute Bulletin, Vol. 3.

சுமேரிய அரசி ஒருத்தியின் வடிவம்

எகிப்தியன் ஒருவனின் உடை

சமாதி அறையிற் கிடைத்த பொன் வெள்ளி ஏனங்கள்

பிரமிட் சமாதி

அரசன் ஒருவனின் வடிவம், முடியில் இருப்பது பாம்பு அடையாளம்.

எகிப்திய எழுத்தாளன்

எகிப்திய கண்காணி ஒருவன்

எகிப்தியரின் யாழ்; தமிழரின் யாழும் இவ்வகையினதே

எகிப்தியரின் பாம்புத் தெய்வமும் பருந்துத் தெய்வமும்

1.  சிந்துவெளி மக்கள் வழங்கிய எழுத்துகளின் வாசிப்பு வலமிருந்து இடம். (2) வசனம்; வாசிப்பு வலமிருந்து இடம்; வாசிக்கப்பட்ட பொருள் இடமிருந்து வலம் எழுதப்பட்டுள்ளது. கடைசியிலுள்ளவை. (1) சிந்துவெளி (2) ஈஸ்டர் தீவு எழுத்துகள்.

ஒருவகைக் சுண்ணாம்புக் கல்லில் வெட்டப்பட்ட முத்திரைகள். விலங்கு வடிவங்களுக்கு மேற்காணப்படுவன அக்கால எழுத்துக்கள்.

பாரசீகம்
ஆப்கானிஸ்தான்
பாம்பாய்
மொகஞ்சதரோ
சிந்து ஆறு
சிந்து
பஞ்சாப்பு
அரப்பா
திபேத்து
ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டம்

தலையாட்டும் விலங்கு (விளையாட்டு பொருள்)

சிந்துவெளி மக்களிற் பெண்பாலர் பயன்படுத்திய அணிகலன்களிற் சில

மயிர் மழிக்கும் கத்தி

போர்வை அணிந்திருக்கும் மனித வடிவம் தலையிற் கட்டியுள்ள நாடாவே அரச முடியாக வளர்ச்சி யடைந்தது! போர்வை பூணூலாகத் திரிந்தது.
பக்கத்தில் காட்டப்பட்ட மனித வடிவத்தின் முன்புறத் தோற்றம்.

நிறக் கல்லில் வெட்டப்பட்ட குரங்கு

1.  We have a continuity of culture from Paleolithic to neolithic, from neolithic to megalithic and megalithic to iron age in South India-Origin and Spread of the Tamils-V.R. Ramachandra Dikshitar. M.A.
2.  I ask what is the objection to state that a branch of Dravidians from south went to North and North-West and settled there? Diffusion of Dravidians in Rajaputana and Central India in prehistoric times is seen from the dialects Villi and Santal prevalent today, bearing close affinity to Dravidian languages. Add to this, the Mohenjo daro script which is very probably Dravidian.-Ibid pp. 10, 11.
3.  If we take into consideration all these circumstances and examine them critically one has to assume that the authors of these early cultures in the East Mediterranean were emigrants from South India speaking Dravidian dialects. The language migrated and with it the peoples who spoke that language. So my humble thesis is that civilization of the future was borne not on the shores of the Mediterranean but on the coasts of the Indian peninsula and on the banks of its mihghty rivers the Kaveri, Thambraparni, the Periyar and Amarovathi, not to speak of the Krishna, Godavari and Narbada-Ibid p.27.
4.  The word Dravida is the name for the speakers of a group of South Indian languages - Tamil, Malayalam, Kanarese and Telugu. No stretch of imagination is required to believe that of them Tamil is the oldest dialect and in my opinion the parental dialect. Though a claim has been recently made for the ancientness of the Kannada tongue, still it is safe to assert that Malayalam, Kanarese and Telugu became cultivated languages only a thousand years ago, when the influence of Sanskrit language had reached its high water mark in the Peninsula. So the term Dravidian we can definitely say, originally stood for the Tamil language and its descendants. - Ibid p. 14.
5.  கள்வர் என்னும் பெயர் வலியை உணர்த்தும்; கள் என்னும் அடியாகப் பிறந்தது - களிறு, (போர்க்)களம் முதலிய சொற்கள் கள் என்னும் அடியாகப் பிறந்தவை. மதுவைக் குறிக்கும் கள் என்பதற்கு வலியைத் தருவது என்பது பொருள். பி.தி. சீனிவாச ஐயங்கார்.
6.  ….whose growth in South India is evidenced by the presences of the artifacts of the palaeolithic, neolithic and early iron ages throughout the country, and is traceable in the earliest strata of Tamil language and literature, show us that the growth of civilization in the Tamil land is entirely due to geographical causes operating in situ and not to historical events such as incursions of foreigners-Environments and Culture-P.T.S. Aiyengar.
7.  The very name ur spells like a pukka Tamil name-Ibid.
    1 Elsewhere I have suggested that the Kirata tribes of South India might have been the people who were responsible for the Cretan civilization and Crete derived its name probably after this tribe - Ibid p.49.
    The term Elam in Mesopotamia is suggestive and shows that to be a name given possibly by the emigrants from Ceylon who settled there and were responsible for the growth of the Town. For is not Ceylon known as Ilam (ஈழம்) in literature and epigraphy? The people of Elam were non Semitic and closly related to Sumerian culture. Their language was agglutinative but did not belong to the group of Alarodian like the Sumer tongue. In the same way Caria adjoining Lycia was very probobly Cera after a settlement from Kerala-Ibid p. 39.
8.  We therefore conclude that the so called Mediterranean race had its origin in peninsular India, which was a part of the original Dravidian home which was in the submerged continent and connected south India with Africa, when the Indo Gangetic basin had not probably been formed. So the Dravidian element is not to be found in Indian culture alone but is largely traceable in Cretan, Aegean, Sumerian, Baby-lonian, Egyptian, Polynesian and other cultures of ancient world-Ibid p. 29
9.  யாழ்நூல்-ப. 26, 49, விபுலானந்த அடிகள்.
10. The linguistic affinity between Somali language and Tamil is remarkable. A distinct contribution of the ancient Dravidian to world culture is the Dravidian tongue. The group of agglutinative dialects with a few exceptions look to the ancient Tamil language primarily as their parent. Can we say that the service of Dravida was to give the tongue to the tongueless? -Origin and spread of the Tamils P. 39
11. Dialects of the same family of languages were spoken throughout India, except in the Vindyan regions, in the Neolithic age; and that is what has been called Dravidian family-Stone age in India p. 43. P.T.S. Ayangar.
    It will thus appear that the Dravidian speakers were the latest occupants of India before the Indo-Europeans arrived…It will thus appear that the civilization of the Indus valley was associated with speakers of the Dravidian languages…Lastly the Brahmi script of later Vedic civilizations is itself traced to Indus valley pictographs…Thus the non aryan of the Rlgveda may be in a sense taken to the non Aryan responsible for the Indus civilization-Hindu civilization-pp 38, 30. Radha Kumud Mukerji.
12. He had to subdue or assimilate the aboriginal element. But the overthrow of the black skin was no means an easy task for the Aryan; The non-aryan of the Rigveda was fully fortified in the stronghold of his own civilization which was meterially quite advanced. Remnants of this civilization are traced in the ruins of cities unearthed at Harappa and Mohenjo-Daro-Ibid p 69.
13. There was also inevitably at work a process of fusion between the Aryan and the non aryan by intermarriage or by alliance-Hindu civilization-Ibid.
14. The Aryan ethnical type which closely intermingled with the non-aryan population before the caste system was fully developed never constituted more than a small fraction even of the population of the north - A short history of India Havell p. 29.
    But as Dravidian society was matriarchal such intermarriages, with or without consent always exerted powerful influence in the Aryanisation of India, for in the course of time all the highest Dravidian families, both in the north and south claimed Aryan descent on-their mother‘s side and and adopted Aryan custiom and religion - Ibid p. 31.
15. As a rule however the Aryan in adopting a Dravidian word changed it considerably in order to suit it to their tongue and whenever such a word was imperfectly understood and negligenlty reproduced the change became still greater.-Kannada Eng. Dictionary. p XV-Rev E. Kettel.
16. Rhys Davids gives of an account of the life in the days of Buddha which probably holds true generally for the Dravidian communities-The children of the Sun.-p. 337. W.J. Perry M.A.
17. The Vedic language was a “caste language” a “scholastic dialect of a class” employing forms of different linguistic periods, an artificially archaic dialect,
    handed down from one generation to the other within the class of priestly singers - Macdonnel.
    Sankrit came into prominance about five thousand years ago in northern India. It appeared from the beginning not as an Indian vernacular, but as the hand maiden of the Arya cult, a literary language, used as the vehicle of the aspirations of the Rishis when they appealed to the gods to satisfy their longings in this world and the next. The Hindus have called it the language of the gods-deva bhasa-and this apparently means that there is no evidence of its employment as a vernaculur by common men in their ordinary secular life before it became the language of the mantras by means of which men spoke to the gods-Stone age in India p. 45-P.T.S. Iyengar.
18. The so called Gaudian dialects now spoken in Northern India from Punjab down to Aryavarta agree in grammatical structure with the so called Dravidian dialects of south India. The family relationships of languages can best be ascertained not so much by similarities of their vocables but by and examination of the essential structure of the languages, by their schemes of accidence of gender, number and cases of nouns and adjectives, of voices, mood number gender, tenses and other inflections of verbs, of their essential structure-such as the order of words in sentences and the methods of formation of idioms. A comparative study of modern North Indian and South Indian dialects reveals the fact that their fundamental grammatical structure is so verymuch the same that it is possible to translate from oneof these languages into any other by the simple process if the substitution of one word for another-a procedure absolutely impossible when translation from Sanskrit or English into any of the spoken dialects of ancient or modern India-Stone age in India. p. 44.
19. Origin and Spread of the Tamils p. 28. 2. Pre Aryan Tamil culture p. 12.
20. The excavations at Mohenjo Daro have revealed the state of things of a date long anterior to that of the Birth of Buddha. In the words of Dr. Hirananda Sastri, the late Epigraphist of the Government of India. “There is no known structure in the pre-historic Egypt or Mesopatamia or elsewhere to compare
    with the well built commodious houses of the citizens of Mohenjo Doro. Their sanitary baths and the elaborate system of drainage show that even the ordinary town folk there enjoyed a degree of comfort and luxury unknown in other parts of the then civilized world”. That was some what about B.C. 5000. Bulletin No. 3 of Sri Rama Varma Research Institute.
21. கி.மு. 4 ஆம் நூற்றாண்டென்பது பெரும்பாலார் துணிவு.
22. The beginnings of South Indian History pp. 64-9 S.K. Aiyangar.
23. Telugu does not take its available literature much anterior to ninth century A.D. The beginnings of South Indian History. p. 35. S.K. Aiyengar.
24. Ibid.
25. கோயிலில்லாத ஊரிற் குடியிருக்க வேண்டாம் (ஒளவையார்)
26. Chau Ju - Kua.
27. சோயுகுவா (Chau Ju Kua 1225 A.D.) என்னும் சீனப் பிரயாணி இலங்கை அரசனைப் பற்றிக் கூறியிருப்பது பின்வருமாறு: “அரசன் பல நிற ஆடைகளை உடுத்திருக்கிறான்; சிவப்புத் தோலாற்செய்து பொன்வாரிட்ட செருப்பைத் தரித்திருக்கிறான்; வெளியே செல்லும்போது பல்லக்கில் அல்லது யானைமீது செல்கின்றான்; வைடூரியம், நீலம் சிவப்பு முதலிய மணிகள் பதித்துச்செய்த நகைகளைப் பூண்டிருக்கிறான். கிழக்கிலும் மேற்கிலும் கொலுமண்டபங்கள் உண்டு, இரண்டு மண்டபங்களிலும் பொன் மரங்கள் நாட்டப் பட்டுள்ளன, அவைகளின் கொம்புகளும் அடிமரமும் பொன் மயமானவை; பூக்களும் இலைகளும் காய்களும் வைடூரியம் நீலம் சிவப்பு என்னும் மணிகளால் அமைக்கப்பட்டவை. அரசன் உலாவும் தரையும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. அம்மரங்களின் அடியில் பொன் சிங்காசனங்கள் உண்டு. அவன் காலையில் கிழக்கு மண்டபத்திலும் மேற்கு மண்டபத் திலும் கொலுவிருக்கிறான். அரசன் இருக்கும்போது சோடிப்புகள் வெளியே மின்னும். பொன்மரங்களும் கண்ணாடி மறைப்புக்களும் ஒன்றின் நிழல் ஒன்றில் பட்டுச் சூரிய உதயம்போல் விளங்கும்.
    மேற்கூறியபடி பிரயாணி மலையாள அரசனைப்பற்றிக் கூறியிருப்பது வருமாறு:
    அரசன் உடம்பைப் போர்த்திருக்கிறான்; அவன் காலில் செருப்புத் தரித்திருக்கவில்லை. அவன் தலையில் தலைப்பாகை தரித்திருக்கிறான்; அரையில் ஆடை உடுத்திருக்கிறான். அவை இரண்டும் வெண்ணிறமுடையன. சில சமயங்களில் அவன் வெள்ளைச் சட்டை அணிகிறான். அவைகளுக்கு நீண்டு ஒடுங்கிய கைகளுண்டு. வெளியே செல்லும்போது அவன் யானைமீது செல்கின்றான். அப்பொழுது அவன் பொன்முடி அணிகிறான். அது முத்தினாலும் இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அவனுடைய கையில் பொன்நாடாக் கட்டப்பட்டிருக்கிறது; அவனுடைய காலில் பொன்சங்கிலி கிடக்கிறது. அவனுடைய சின்னங்களில் சிவப்புத்தடியில் மயிலிறகு கட்டியகொடி ஒன்று. அதை இருபது பேர் நின்று காவல்புரிகின்றனர். அவனைத் திடகாத்திரமுள்ள ஐந்நூறு அன்னியநாட்டுப் பெண்கள் காவல் புரிகின்றனர். முன்னே செல்பவர்கள். நாட்டியமாடிக் கொண்டு வழியைக் காட்டிச் செல்கின்றனர். நாட்டியப் பெண்களுக்கு முன்னால் அரசனின் கருமத்தலைவர் கொண்டு செல்லப்படுகிறார்கள். அவர்கள் துணியினால் செய்யப்பட்ட ஏணைபோன்ற தூக்கில் இருத்தப்பட்டு பொன்னாலும் வெள்ளியினாலும் அலங்கரிக்கப்பட்ட கம்புகள் மூலம் சுமக்கப்படுகிறார்கள்.”
    அரசனுடைய மெய்காப்பாளர் பெண்களாக விருந்தனர் என மெகஸ்தீனஸ் கூறியுள்ளார். ஸ்ராபோ (Strabo) என்பார், “அரசனுடைய மெய்காப்பாளர் பெண்கள். அவன் வேட்டைக்குச் செல்லும்போது பெண்கள் அவனைச் சூழ்ந்து செல்கின்றனர். சில பெண்கள் தேரிலும், சிலர் குதிரை மேலும், சிலர் யானைமேலும் ஆயுதம் தாங்கியவர்களாகச் செல்கின்றனர்” என்று கூறியுள்ளார். கௌடலியர் கூறியிருப்பது கொண்டு கிரேக்க வரலாற்றுக்காரர் கூறியிருப்பது வருமாறு: அரசன் படுக்கையைவிட்டு எழுந்ததும் வில்லுத் தாங்கிய பெண்கள் அவனை எதிர்கொள்ள வேண்டும். பெண் அடிமைகளே அவனைக் முழுக்காட்ட வேண்டும், படுக்கையை விரிக்கவேண்டும், அவனது உடைகளை வெளுக்கவேண்டும், அவனை பூமாலைகளால் அலங்கரிக்கவேண்டும். கௌடலியர் கூறுகின்றபடி அரண்மனை யில் மூன்று தரங்களான பெண் வேலையாட்கள் இருந்தார்கள். இவர்களில் கணிகையர்
    எனப்பட்ட கீழ்த்தரத்தினர் அரசனுக்குக் குடை பிடிப்பர். அவனுக்குப் பக்கத்தே எச்சில் உமிழும் பொன் குன்டிகையைப் பிடித்து நிற்பர். இவர்களுக்கு அடுத்த உயர்தரத்தினர் அரசன் மாளிகையில் இருக்கும்போது பக்கத்தே ஆலவட்டங்களோடு நின்று அவனைச் சனத்திலும் தேரிலும் இருக்கும்போது சேவிப்பர். இவர்களில் மூப்படைகின்றவர்கள் அரசனுடைய களஞ்சியத்தில் அல்லது அடுக்களையில் வேலை செய்யும்படி விடப்படுவர்.” (Chandra Gupta Maurya and his times pp. 97-8.)
28. Subtreasruies.
29. The Vedic theory is found in the Aitareya brahmana. It asserts that the Devas i.e. their worshippers, the Hindus, originally had no king. In their struggle against the Asuras-when the Devas found that they were repeatedly defeated that they came to the conclusion that it was because the Asura had a king to lead them, they were successful. Therefore they decided to try the same experiment and they agreed to elect a king. It has a historical reference. It would refer to the tribal stage of the Aryans in India and it would suggest that the institution of kingship was borrowed from the Dravidians-Hindu polity-p. 5. K.P. Jayaswal M.A.
30. Dravidian characteristics have been traced alike in Vedic and classical Sanskrit in the Prakrits or early popular dialects and in the modern vernaculars derived from them. The presence of the second series of dental letters the so called cerebrals in the language of the Rigveda and their absence from any other Indo- European language is ascribed to Dravidian influence-The quarterly Journal of the Mythic society Vol. XVI. Kalipada Mitre M.A.B.L.
31. இராச்சியம் பல மண்டலங்களாகவும், மண்டலங்கள் கோட்டங்களாகவும், கோட்டங்கள் கூறுகளாகவும், கூறுகள் நாடுகள் வளநாடுகளாகவும் வகுக்கப்பட்டிருந்தன. நாடுகளும் வளநாடுகளும், பல நகரங்களும் கிராமங்களுமுடையனவாயிருந்தன. அவற்றுட் பெரிய நகரங்கள் தனியூர் என்றும் மற்றவை ஊர்கள் பற்றுக்கள், குறைப்பற்றுக்கள் என்றும் பெயர் பெறும், -சோழவமிச சரித்திரச் சுருக்கம் - பக். 50 - கோபிநாதராவ்.
32. படைத் தலைவர்கட்கு மகா சாமந்தன், சேனாதிபதி, சாமந்தன், தண்ட நாயகன் எனப் பல பெயர்கள் வழங்கிவந்தன. மகாசாமந்தன் என்பவன் எல்லாப் படைகட்கும் தலைவன். சிறுபடைகளைத் தண்ட நாயகர், சாமந்தர் என்போர் ஆளுவர் போலும்-படையாளர் போரில்லாக் காலங்களிற் பயிர்த் தொழில்கள் முதலிய செய்துகொண்டிருப்பது வழக்கம். சோழவம்ச சரித்திரச் சுருக்கம்-ப. 69.
33. போரில் மடிந்த வீரர்க்கும் நிரைமீட்சி வேட்டை முதலியவைகளில் இறந்த வீரர்கட்கும் அரசனாலாயினும் இறந்தவன் பந்துக்களாலாயினும் அவர்களுடைய ஞாபக சின்னமாக அவர்களைப் போல உருச்சமைத்துக் கல்லொன்று நடுவது வழக்கம்-மேற்கூறியபடி.
    சோழ அரசர் காலத்து இருந்த வரிகள் சில: அங்காடிப்பட்டம் (சந்தைவரி), உப்பாயம், இலாஞ்சினைப்பேறு, சந்திவிக்கிரகப்பேறு, பஞ்சுபிலி, வாசல்வினியோகம், படையிலார் முறைமை, கூற்றிலக்கை, கடைக்கூட்டிலக்கை, தண்டவிலக்கை, விடைப்போர், மாதப்பட்டி, அரைக்கால்வாசி, ஊசி வாசி, விலைத் தண்டம், நீராணி, காவேரிக்குலை, தேவகுடிமை, ஆனைக் கூடம், குதிரைப்பந்தி.
    விசயநகர அரசர் காலத்து வரிகள் சில: பதிகாவல், காரணயோதி, தலையாரிக்காம், நாட்டுக்கணக்குவரி, அழுக்கு நீர்ப்பாட்டம், பிடாரிவரி, விபூதிக்காணிக்கை, ஆதிபச்சை, கார்த்திகைப் பச்சை, திருப்புதியீடு (முதலில் பழுக்கும்பழம்), பிரசாத காணிக்கை, தறிக்கடமை, செக்குக்கடமை, அரிசிக்கடமை, பொன்வரி, செம்பொன்வரி, புல்வரி, நூல்வரி, பட்டுநூல் வரி, மரக்கலவரி, படிக்காணிக்கை (போர்வீரருக்கு ஆம்செலவு), கோட்டை மகமை, நாட்டுச்சிக்கம், தோரணக்காணிக்கை, தரிசனக் காணிக்கை, கோட்டைக்கு, வெட்டிவரி, ஊசிவரி, குதிரை விலாடம். வரிகளையன்றி மக்கள் கூலியின்றிக் கட்டாயவேலையும் வாங்கப்பட்டார்கள். அவ்வேலை வெட்டி, முட்டி, வெகாரிஎனப்பட்டது. அவ்வேலை செய்பவர் வெட்டிமுட்டி ஆள் எனப்பட்டனர்.
34. சோழ வமிச சரித்திரச் சுருக்கம். பக். 66.
35. The sculpture of Sanchi and Amaravathi and the Ajanta Cave paintings and the sculptures of Orissa (Buvaneswar) prove that in its forms also Hindu jewelry has remained unaltered during the last two thousand years. The ornaments of Sanchi are of the same archaic character as those still made in central India and the Central Provinces and by the aboriginal tribes of the Bengal and Bombay presidency while those of Amaravathi shows more elaboration and finish of Dravidian jewelry of Madras presidency. -Industrial arts of India-p. 188.
36. P.T.S, Iyengar.
37. Indian musical instruments are remarkable for beauty and variety of their forms which the ancient sculptures and paintings at Ajanta show how they remained unchanged for the last two thousand years. The harp is identical in shape with Assyrian harp represented on the Nineveh sculptures and the Vena of equal antiquity. The Hindus claim to have invented the fiddle - bow - Industrial arts of India - p. 232. George. C.M. Bird Wood.
38. According to Strabo, young female musicians of western origin were articles of import, certain to please in India. Professionally there was little to choose between them and the young well-made girls intended for debauchery offered by the Greeks to the kings of the ports of Gujarat along with musical instruments-Kannada passages in the Oxyrhyncus Papyri no. 413.p. 17.
39. P.T.S. Aiyengar.
40. Our knowledge of the costumes of Mohenjo Daro people is scanty as naked figures preponderate. A shawl is worn by a male figure covering the left shoulder
    and passed under the right arm. It is difficult to say what was worn under the shawl, but the heroes and deities wore a thin strip of cotton on their loins. Some very rare fiqurines are depicted wearing kilt or drawers. The hair was tied with a woven fillet. The woven sari terminating well above the knees always fastened with girdles and in one case with a kamarband is also seen. The narrow strip of cloth used as sari at Mohenjo Daro very much resembles the niva mentioned in Vedic literature. Vol. 1. p. 53-Dr. Motichandra M.A. Ph.D.
41. Cotton manufacture did not obtain a real footing in Europe until last century at a date before history. The art was carried from India to Assyria and Egypt; but it was not until the thirteenth century that the cotton plant was introduced into southern Europe where its wool was at first used to make paper. The manufacture of it into cloth in imitation of the fabrics of Egypt and India was first attempted by the Italian States in the thirteenth century-Industrial arts of India p. 241.
42. Indian shipping. p 4-R.K. Mookerji M.A.
43. The light of the most ancient East P. 2/0- V. Gordon & Chile.
44. Peagent of India’s commerce shows that within historic times Peninsular India has been in direct contact with East Africa, Somaliland, Abyssinia, Egypt, Arabia, Babylonia, Indonasia and China, to say nothingof the Makran coast and the influence of the routes. The panorama of possible cultural influence is wide-Side lights of the Dravidian problem-F.A. Richards-Quarterly Journal of the Mythic society Vol. 6.
45. Kannada passages in the Oxyrhyncus Papyri No. 413.
46. Itsing. கி.பி. 6ஆம் நூற்றாண்டு
47. Chau Ju - Kua.
    A variety of causes partly political and partly literary, has tended to the belittlement of penisular india‘s contribution to the history both of India and of the whole world at large. The time is ripe for South India to champion her own cause and assert her claims to recognition-Side lights of the Dravidian Problem-F.R. Richards. i. I.C.S.
    போர் வீரன்

குதிரை வீரன் (எல்லோரா)

ஆந்திர நாணயம் (கி.பி. 200)

ஆந்திர நாணயம் (கி.பி. 200)

நாட்டியம் (சோழர் கால ஓவியம்)
யாழ்

வீட்டு வேலை செய்யும் பெண்கள்
(சான்சிச் சிற்பம் கி.மு. 200)

குறிப்புகள்