நியாயப்பிரமாணம்

ஆயர் பால் சி. ஜோங்


【2-1】<லூக்கா 10:25-30> நாம் சட்டத்தின் படி வாழ்ந்தால், அதனால் நம்மை இரட்சிக்க முடியுமா?

 

<லூக்கா 10:25-30>

அப்பொழுது நியாய சாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நியாயப் பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும், உன் முழுச் சிந்தையோடும் அன்பு கூர்ந்து, உன்னிடத்தில் அன்பு கூறுவதுப் போல பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்கு பிறன் யார் என்று கேட்டான். இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசேலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டும் போனார்கள்


 • மனிதர்களின் மிகப்பெரிய பிரச்சினை என்ன?
 • அவர்கள் அதிக தவறான மாயைகளில் வாழ்கிறார்கள்.

லூக்கா 10:28, “அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய்என்கிறது.

மனிதர்கள் அதிக தவறான மாயைகளில் வாழ்கிறார்கள். அவர்கள் இந்தக் காரியத்தில் இலகுவில் தாக்கப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் புத்திசாலிகள் போல் காணப்பட்டாலும் இலகுவில் வஞ்சிக்கப்பட்டு தம் மோசமான பக்கத்தைக் குறித்து அறியாதவர்களாய் உள்ளனர். நம்மைக் குறித்து தெரியாமல் பிறந்தாலும் அதனைத் தெரிந்தவர்கள் போல் வாழுகிறோம். மக்களுக்குத் தம்மைத் தாமே தெரியாததால், வேதாகமம் நம்மை பாவிகள் என்கிறது.

மக்கள் தமக்குள் உள்ள சொந்தப் பாவங்களைக் குறித்து பேசுகிறார்கள். சில சமயங்களில், மக்கள் நல்லவைகளை செய்ய இயலாதவர்களாக தோன்றினாலும் அவர்கள் தம்மை நல்லவர்களாக காட்டிக்கொள்வதில் சிரத்தையாயிருக்கிறார்கள். அவர்கள் தம் நற்செயல்களைப் புகழ்ந்து வெளிகாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் தம்மைப் பாவிகள் என்று கூறிக்கொண்டாலும் மிக நல்லவர்களைப் போல் நடிக்கிறார்கள்.

அவர்களுக்கும் தம்மில் நன்மை இருப்பதோ அல்லது நல்லது செய்வதற்கான திறமையோ இல்லை என்பது தெரியும். ஆனாலும் அவர்கள் மற்றவர்களை வஞ்சிக்க முயல்கிறார்கள். அது ஏன்? சில சமயம் தம்மைத் தாமே வஞ்சிக்கிறார்கள். நாம் முற்றிலும் தீயவர் இல்லை, நம்முள் சில நல்லவைகள் இருக்க வேண்டும்.

ஆகவே, மற்றவர்களைப் பார்த்து தமக்குள் கூறுவர் கோஷ், அவன் அதனைச் செய்யாதிருப்பானாக, அவன் அதனை செய்யாதிருந்திருந்தானானால் அது அவனுக்கு நலமாய் இருந்திருக்கும். அவன் இப்படி பேசியிருந்தானானால் அவன் எங்கோ இருந்திருப்பான். நற்செய்தியை இப்படியாகப் பிரசங்கிப்பது நல்லது என்று எண்ணுகிறேன். எனக்கு முன்னால் அவன் விடுவிக்கப்பட்டவன். ஆகவே அவன் விடுவிக்கப்பட்ட ஒருவனைப் போல் நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். நான் சிறிது காலத்திற்கு முன்பே விடுவிக்கப்பட்டவன், ஆனால் நான் மேலும் கற்றேனானால், அவன் செய்வதை விடவும் அதிக அளவு நல்லது செய்வேன்.

அவர்கள் தம் இருதயத்தில் கத்தியைத் தீட்டுகிறார்கள். சிறிது பொறுத்திருங்கள். உங்களைப் போல் நானில்லை என்று காண்பீர்கள். நீங்கள் எனக்கு முன்னதாக இருப்பதாக நினைக்கிறீர்கள், இல்லையா? சிறிது பொறுத்திருங்கள். வேதாகமத்தில் கடைசியில் வருபவன் முந்தியவனாக இருக்கிறன் என்று எழுதியிருக்கிறது. அது எனக்குப் பொருந்துமென்று எனக்குத் தெரியும். பொறுத்திரு நான் உனக்கு காட்டுவேன்.மக்கள் தம்மைத் தாமே வஞ்சிக்கிறார்கள்.

அவன் மற்றவன் இருக்கும் இடத்திலிருந்தால் அவனும் அப்படியேச் செய்வானானாலும், அவன் மற்றவனை இன்னும் தீர்க்கிறான். அவன் ஆராதனைப் பீடத்தில் நிற்கும்போது திடீரென உதவியின்றி நடுங்குவதைக் கண்டு தன் நிலைக்குறித்து அறிய வருகிறான். போதகர்கள் கர்த்தரை மட்டுமே நோக்கவேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சிந்திக்கலாகாது. அவர்கள் அப்படிச் செய்தால், அவர்களால் பிரசங்கிக்க முடியாது.

நல்லது செய்யும் திறமை இருக்கிறதா என்று மக்களிடம் கேட்டால், அநேக மக்கள் தம்மிடம் இல்லை என்றே கூறுவார்கள். ஆனால் அவர்களுக்கு தம்மிடம் அத்திறமை இருக்கிறது என்ற மாய உணர்வு இருக்கிறது. ஆகவே, அவர்கள் மரிக்கும் வரை கடினமாக முயல்கிறார்கள்.

அவர்கள் தம்மிருதயத்தினுள் நற்குணம்இருப்பதாகவும் நல்லது செய்யும் திறமை தமக்கிருப்பதாகவும் நினைக்கிறார்கள். அவர்கள் தாமே போதுமானவர்கள் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் எத்தனைக் காலத்திற்கு முன் மறுபடியும் பிறந்தவர்களாக இருந்தாலும், கர்த்தருடைய ஊழியத்தில் எத்தனை முன்னேறியவர்களாக இருந்தாலும் கர்த்தருக்காக இதனைச் செய்யமுடியும் அதனைச் செய்ய முடியும்என்று நினைக்கிறார்கள்.

ஆனால் கர்த்தரை நம் வாழ்விலிருந்து அகற்றிவிட்டால், நம்மால் உண்மையாகவே நன்மை செய்ய முடியுமா? மனிதர்களில் நன்மை இருக்கிறதா? நற்காரியங்கள் செய்து அவனால் வாழ்ந்திருக்க முடியுமா? மனிதர்களுக்கு நன்மை செய்யும் திறமை இல்லை. எப்போழுதெல்லாம் மனிதர்கள் தாமாகவே எதையாவது செய்ய நினைக்கிறார்களோ, அப்பொழுதெல்லாம் அவர்கள் பாவஞ் செய்கிறார்கள்.

அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டவுடன் இயேசுவை புறம்பேத்தள்ளிவிட்டு தாமாகவே நன்மை செய்ய முயல்கிறார்கள். நம்மிடம் தீமையைத் தவிர வேறொன்றுமில்லை. நம்மால் தீமை மட்டுமே செய்ய முடியும். நம்மால் (இரட்சிக்கப்பட்டவர்களுங்கூட உட்பட), பாவம் மட்டுமே செய்யமுடியும். அது நம் மாம்சத்தின் உண்மைச் சுபாவமாயிருக்கிறது.


 1. நாமெப்போதும் எதனைச் செய்கிறோம், நன்மையையா அல்லது தீமையையா?
 2. தீமை.

கர்த்தரைத் துதிப்போமாக என்னும் நம் துதியின் நூலில் இப்படியான ஒரு பாடல் இருக்கிறது.

இயேசு இல்லாவிட்டால் நாம் இடறிப்போவோம். பாய் இல்லாமல் கடலில் செல்லும் கப்பலைப் போன்று நாம் மதிப்பில்லாதவர்கள்.” இயேசு இல்லாமல் பாவஞ்செய்ய மட்டுமே நம்மால் முடியும். நாம் இரட்சிக்கப்பட்டதாலேயே நீதிமான்களானோம். உண்மையில் நாம் தீயவர்கள்.

அப்போஸ்தலனாகிய பவுல் கூறினான். ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல் விரும்பாத தீமையையே செய்கிறேன்.” (ரோமர் 7:19) ஒருவன் இயேசுவுடனிருந்தால் பரவாயில்லை. ஆனால் அவன் அவருடனில்லாதிருக்கும்போது, அவன் கர்த்தருக்கு முன் நன்மை செய்ய முயல்கிறான். அவன் அதிகமாக முயலும்போது தான் அதிக தீமைச் செய்வதை அறிந்துகொள்கிறான்.

தாவீது இராஜனும் கூட அத்தகைய சுபாவமுடையவனாகவே இருந்தான். அவன் நாடு சமாதானத்துடனும் செழிப்புடனும் இருந்தபோது, அவன் வீதிகளுக்குச் சென்றான். அங்கு அவன் கவர்ச்சிகரமான ஒரு படத்தைக் கண்டு இன்பமடைந்தான். அவன் கர்த்தரை மறந்தபோது அவன் அதனை விரும்பினான்! அவன் உண்மையாகவே தீமையானவன். அவன் உரியாவைக் கொன்று அவன் மனைவியை அபகரித்தான். ஆனால் அவனுளுள்ள தீமையைக் காணக் கூடாதவனாக இருந்தான். அவன் தன் செய்கைகளுக்காக சாக்கு கூறிக்கொண்டிருந்தான்.

அப்பொழுது ஒரு நாள் நாதான் என்னும் தீர்க்கதரிசி அவனிடம் வந்து கூறினான். ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள். ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். ஐசுவரியவானுக்கு ஆடு மாடுகள் வெகுதிரளாயிருந்தது. தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத் தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப் போல இருந்தது. அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடு மாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல் பண்ணுவித்தான் என்றான்.” ( 2 சாமுவேல் 12:1-4)

தாவீது கூறினான் இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன்அவனுடைய கோபம் பெரிதாய் வளர்ந்தது, ஆகவே அவன் கூறினான், “அவனிடத்தில் அத்தனை இருக்கிறபடியால், அவற்றிலிருந்து ஒன்றை அவன் எடுத்திருக்கலாம். ஆனால் அவன் தன் விருந்தாளிக்கு சமைக்க அந்த தரித்திரனின் ஒரே ஆட்டுக்குட்டியை எடுத்தான். அவன் மரணமடைய வேண்டும்!நாதான் அவனிடம் கூறினான். நீயே அந்த மனுஷன்நாம் இயேசுவைப் பின்பற்றாது அவருடன் இருக்க விரும்புவது, மறுபடியும் பிறந்தவர்களாலும் ஆகாத காரியம்.

விசுவாசிகள் உட்பட அது அனைத்து மக்களுக்கும் பொருந்தும். இயேசு இல்லாமல் நாம் இடறி தீமையானவற்றையே செய்வோம். ஆகவே நம்மிடமுள்ள பாவங்களைப் பொருட்படுத்தாது. இயேசு நம்மை இரட்சித்தால் நாம் நன்றியறிதல் உள்ளவர்களாய் இருப்போமாக. நான் சிலுவை நிழலில் ஓய்வெடுக்க விரும்புகிறேன்.” கிறிஸ்து அளித்த விடுதலையின் நிழலில் நம் இருதயங்கள் ஓய்வெடுக்கின்றன. ஆனால் நிழலைவிட்டு வெளியேறி நம்மை நோக்கிப் பார்த்தோமானால், நம்மால் எப்போதும் இளைப்பாற முடியாது.


கர்த்தர் சட்டத்திற்கு முன், விசுவாசத்தின் நீதியை நமக்களித்தார்

 1. எது முந்தியது, விசுவாசமா அல்லது சட்டமா?
 2. சட்டம்.

அப்போஸ்தலனாகிய பவுல் சட்டத்திற்கு முன் விசுவாசத்தின் நீதியை கர்த்தர் நமக்களித்தார் என்று கூறினான். விசுவாசத்தின் நீதி முதலில் வந்தது. அதனை அவர் ஆதாமிற்கும் ஏவாளுக்கும் கொடுத்தார். பிறகு காயீன் மற்றும் ஆபேலுக்கு, பிறகு சேத்திற்கும் ஏனோக்கிற்கும்... நோவா வரைக்கும்..., பிறகு ஆபிரகாமிற்கு, பிறகு ஈசாக்கிற்கு, பிறகு யாக்கோபிற்கும், அவனின் பண்ணிரண்டு மகன்களுக்கும். சட்டமில்லாதிருந்த போதிலும் கர்த்தருக்கு முன்பாக அவரின் வார்த்தைகளின் மீதிருந்த விசுவாசத்தின் மூலம் அவர்கள் நீதிமான்களானார்கள். அவருடைய வார்த்தைகள் மீதிருந்த அவர்களின் விசுவாசத்தின் மூலம் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு இளைப்பாறுதல் அடைந்தனர்.

காலப்போக்கில் யாக்கோபின் சந்ததியினர் யோசேப்பின் நிமித்தம் 400 வருடங்களாக எகிப்தில் அடிமைகளாயிருந்தனர். பிறகு கர்த்தர் அவர்களை மோசே மூலம் கானானுக்கு வழி நடத்தினார். ஆயினும், 400 வருட அடிமை வாழ்வில் விசுவாசத்தின் நீதியை அவர்கள் மறந்து போயினர்.

ஆகவே, கர்த்தர் தம் அதிசயத்தின் மூலம் அவர்களைச் செங்கடலைக் கடக்கச் செய்து அவர்களை வனாந்தரத்திலும் வழி நடத்தினார். அவர்கள் பாவமாகிய வனாந்திரத்தை அடைந்தபோது, சீனாய் மலையில் அவர்களுக்கு சட்டத்தைக் கொடுத்தார். அவர் 613 விரிவான பிரிவுகளை அடங்கிய பத்து கட்டளைகளை அவர்களுக்கு அளித்தார். நானே உன் தேவனாகிய கர்த்தர், ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன். மோசே சீனாய் மலைமேலே வரட்டும், நான் உங்களுக்குச் சட்டத்தைத் தருவேன்.கர்த்தர் இஸ்ரவேலர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார்.

அவர் சட்டத்தைக் கொடுத்ததன் மூலம் பாவத்தை அறிகிற அறிவு” (ரோமர் 3:20) பெற்றார்கள். அவர் எதனை விரும்புகிறார், எதனை விரும்பவில்லை என்று அவர்களை அறியச் செய்யவும் அவருடைய நீதியையும் பரிசுத்ததையும் வெளிப்படுத்தவுமே அவர் அதனைக் கொடுத்தார்.

எகிப்தில் 400 வருடங்களாக அடிமைகளாக இருந்த இஸ்ரவேலின் எல்லா மக்களையும் செங்கடலைக் கடக்க செய்தார். அவர்கள் ஆபிரகாமின் தேவனையோ, ஈசாக்கின் தேவனையோ, யாக்கோபின் தேவனையோ சந்தித்ததில்லை. அவர்களுக்கு அவரைக் குறித்து தெரியாது.

அவர்கள் 400 வருடங்களாக அடிமைகளாக வாழ்ந்திருந்தபோது கர்த்தரின் நீதியைக் குறித்து மறந்து போனார்கள். அச்சமயத்தில் அவர்களுக்கு தலைவன் இருக்கவில்லை. யாக்கோபும் யோசேப்பும் அவர்களின் தலைவர்களாயிருந்தபோதிலும் அவர்கள் மரித்து போயினர், யோசேப்பு தன் மகன்களான மனாசேயிற்கும் எப்ராயீமிற்கும் விசுவாசத்தைக் குறித்து கூற மறந்து போனான் என்று தெரிகிறது.

அவர்கள் கர்த்தரின் நீதியை மறந்துபோனபடியால், அவர்கள் தம் கர்த்தரை மீண்டும் கண்டுபிடித்து அவரை சந்திக்க வேண்டியவர்களாயிருந்தனர். அவர்கள் விசுவாசத்தை மறந்துபோனபடியால் கர்த்தர் அவர்களுக்கு முதலில் நீதியின் விசுவாசத்தைக் கொடுத்து பிறகு அவர்களுக்கு சட்டத்தை அளித்தார். அவர் அவர்களைத் திரும்பவும் தன்னிடம் வரவழைக்க சட்டத்தை அளித்தார்.

இஸ்ரவேலரை இரட்சிக்கவும், அவர்களைத் தம் மக்களாக்கவும், ஆபிரகாமின் மக்களாக்கவும், அவர்களை விருத்தசேதனம் பண்ணும்படி கூறினார்.

அவர்களை அழைத்ததன் நோக்கம், முதலில் சட்டத்தினை நிலை நாட்டுவதன் மூலம் அவர்கள் கர்த்தரை அறியச்செய்து, இரண்டாவதாக அவருக்கு முன்பு அவர்கள் தாம் பாவிகள் என்பதை உணரச் செய்யவே. கர்த்தர் அவர்களுக்கு அளித்த பாவ நிவாரண பலியின் மூலம் அவர்கள் விடுதலையாகி அவர் முன் வந்து அவரின் மக்களாக அவர் விரும்பினார். அவர் அவர்களைத் தம் மக்களாக்கினார்.

இஸ்ரவேல் மக்கள் சட்டத்தின் (பலியிடும் முறை) மூலம் வரப்போகும் மேசியாவை விசுவாசித்து விடுதலைப் பெற்றனர், ஆனால் காலப்போக்கில் பலியிடும் முறை கூட மங்கிப்போயிற்று. அது எப்போது அப்படியாயிற்று என்று பார்ப்போம்.

லூக்கா 10:25 இல் அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும் படிஅந்த நியாயசாஸ்திரி ஒரு பரிசேயனாவான். பரிசேயர் பழைய பழக்கவழக்கங்களை பாதுகாக்கிற மக்களாகவும் அவரின் வார்த்தைகளின் படி வாழ முயல்பவர்களுமாயிருந்தனர். அவர்கள் தம் நாட்டை முதலில் பாதுகாத்து பின்பு அவரின் சட்டப்படி வாழ முயன்றனர். மேலும் அங்கு உக்கிரமான பித்தர்கள் தம் தரிசனத்தை நடத்திக்காட்ட முயற்சிப்பவர்களாயிருந்தனர்.

 

 1. யாரைச் சந்திக்க இயேசு விரும்பினார்?
 2. மேய்ப்பரில்லாத பாவிகளை அவர் சந்திக்க விரும்பினார்.

அவர்களைப் போன்ற மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள். இந்நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்களை இரட்சிக்க வேண்டும்.என்ற சொற்றொடர்களுடன் சமுதாய இயக்கங்களை அவர்கள் வழி நடத்துகின்றனர். இயேசு ஏழைகளையும் ஒடுக்கப்பட்டவர்களையும் இரட்சிக்கவே வந்தாரென அவர்கள் நம்புகின்றனர். ஆகவே, அவர்கள் இறையியல் கல்லூரிகளில் இறையியல் பயின்று அரசியலில் பங்கேற்று, சமுதாயத்தின் ஒவ்வொரு களத்திலும் நசுக்கப்பட்டவர்களை விடுதலைச் செய்யமுயல்கிறார்கள்.

அவர்கள்தான் நாம் இரக்கம் நிறைந்த சட்டத்தின் மூலம் வாழ்வோமாக... அவரின் வார்த்தைகளின் படி சட்டத்தினால் வாழ்வோமாகஆனால் சட்டத்தின் சரியான பொருள் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் சட்டத்தின் சொற்களின் படி வாழ முயல்கிறார்களே தவிர சட்டத்தின் தெய்வீக வெளிப்படுத்துதலை அங்கீகரிப்பதில்லை.

ஆகவே கிறிஸ்துவிற்கு 400 வருடங்களுக்கு முன்பு, அங்கு கர்த்தரின் ஊழியர்களான, தீர்க்க தரிசிகள் இருக்கவில்லை என நாம் கூறலாம். இப்படியாக அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆட்டு மந்தைகளானார்கள்.

அவர்களிடம் சட்டமோ அல்லது தலைவனோ இருக்கவில்லை. அக்காலத்திலிருந்த கபட்டு மதத்தலைவர்கள் மூலம் கர்த்தர் தம்மை வெளிப்படுத்தவில்லை. தேசம் ரோமப் பேரரசின் ஒரு காலனியாகியது. ஆகவே, வனாந்திரத்திலும் இயேசுவை பின் தொடர்ந்த இஸ்ரவேல் மக்களிடம் அவர் அவர்களை பசியுடன் அனுப்பமாட்டேன் என்று கூறினார். மேய்ப்பனில்லாத மந்தையின் மீது அவர் இரக்கப்பட்டார். அக்காலத்தில் அநேகர் துயரத்தில் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

முக்கியமாக நியாயசாஸ்திரிகளுக்கும் அத்தகைய நிலையிலிருந்த மற்றவர்களுக்குமே பரம்பரை உரிமை இருந்தது; பரிசேயர் இஸ்ரவேலர்களினதும், யூதாயிசத்தினதும் பரம்பரையினராக இருந்தனர்.

லூக்கா 10:25 இல் நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு நன் என்ன செய்யவேண்டும்?” என்று நியாயசாஸ்திரி இயேசுவிடம் கேட்டான். இஸ்ரவேல் மக்களில் தன்னைவிட சிறந்தவன் யாருமில்லை என்பது அவன் நினைப்புபோல் தோன்றுகிறது. ஆகவே, (விடுதலையடையாத) இந்த நியாய சாஸ்திரி அவருக்கு சவால்விடும் வகையில், “நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

அந்த நியாயசாஸ்திரி நம்மையே பிரதிபலிக்கிறான். அவன் இயேசுவிடம் நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். இயேசு அவனிடம் நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன?” என்று கேட்டார்.

அவன் அவருக்கு பதிலளித்தான், “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும், உன் முழுச் சிந்தையோடும் அன்பு கூர்ந்து”, மேலும் உன்னிடத்தில் அன்பு கூறுவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக.

அவர் அவனிடத்தில் அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். இயேசு கூறினார், அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.


 1. நியாயப்பிரமாணத்தில் நீ வாசித்திருக்கிறது என்ன?”
 2. பாவிகளான நம்மால் நியாயப் பிரமாணத்தைக் கைப்பிடிக்க முடியாது.

தானொரு நன்மையே செய்ய முடியாத பாவக்குவியலான தீயவன் என்று தன்னைக் குறித்தே தெரியாத போதிலும் இயேசுவிற்கு சவால் விட்டான். ஆகவே இயேசு அவனிடம் நியாயப் பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன?” என்று கேட்டார்.

   நீ வாசித்திருக்கிறது என்ன?” இதன் பொருள் நீ சட்டத்தை எப்படித் தெரிந்து அதனை எப்படி புரிந்துகொண்டிருக்கிறாய் என்பதாகும்.

இந்நாளில் அநேக மக்கள் செய்வது போலவே, அந்த நியாய சாஸ்திரி, கர்த்தர் தான் கடைபிடிக்கும் பொருட்டே சட்டத்தைக் கொடுத்தார் என்று நினைத்தான். ஆகவே, அவன் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச் சிந்தையோடும் அன்பு கூர்ந்து, உன்னிடத்தில் அன்பு கூறுவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூறுவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.

சட்டத்தில் எந்த குறைபாடும் இல்லை. அவர் நமக்கு குறைவற்ற சட்டத்தை வழங்கினார். அவர் நம்மிடம் கர்த்தரை முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் முழுப் பலத்தோடும், முழுச் சிந்தையோடும் அன்பு கூர்ந்து நம் அயலானையும் நாம் நம்மில் அன்பு கூறுவதுபோல், அன்புக் கூறச் சொன்னார். கர்த்தரை நம் முழு இருதயத்தோடும் அன்பு கூர்வது மிகச் சரியானது. ஆனால் இந்த பரிசுத்தமான வார்த்தைகளைக் கடைப் பிடிக்க முடியாது.

நீ வாசித்திருப்பது என்ன?” என்பதன் பொருள் சட்டம் சரியானது, ஆனால் அதை நீ எப்படி புரிந்துகொண்டிருக்கிறாய்? கர்த்தர் அதற்கு கீழ்ப்படியும் பொருட்டு தனக்கு அதனைக் கொடுத்ததாக நினைத்தான். நம்முடைய குறைபாடுகளை தெரிந்து கொள்வோம் என்பதற்காகவும் நம்முடைய மீறுதல்களை முழுமையாக வெளிப்படுத்தவும் கர்த்தரின் சட்டம் வழங்கப்பட்டது. அது நம் பாவங்களை வெளிப்படுத்துகிறது. நீ பாவம் செய்தாய். நான் கொலை செய்யாதே என்று கூறியபோது நீ கொலை செய்தாய். எனக்கு ஏன் கீழ்ப்படியவில்லை?”

மக்களின் இருதயங்களிலுள்ள பாவங்களை சட்டம் வெளிப்படுத்துகிறது. நான் இங்கு வரும்போது, நன்கு பழுத்த பூசனிப்பழத்தைக் கண்டேன் என்று கொள்க. கர்த்தர் சட்டத்தின் மூலம் எச்சரித்தார், “அந்த பூசனிப்பழத்தை சாப்பிடும்படி பறிக்காதே. அதனைச் செய்தால் அது என்னை வெட்கப்படுத்தும்.” “ஆமாம், பிதாவேஇந்த வயல் இன்னாருக்கு சொந்தமானது, ஆகவே அதனை நீ பறிக்கவே கூடாது.” “ சரி, பிதாவே.

நாம் அவற்றைப் பறிக்ககூடாது என்று சட்டம் கூறுவதைக் கேட்கும் நொடியில், அதனைப் பறிக்கவேண்டும்போல் ஒரு வலுவான ஆவலை உணருகிறோம். ஒரு ஸ்பிரிங்கை அழுத்தினால், அதற்கு எதிர்விசையாக அது மேலெழுகிறது. மனிதர்களின் பாவங்கள் அத்தகையது.

நாம் தீமைச் செய்யக்கூடாது என்று கர்த்தர் கூறினார். கர்த்தர் பரிசுத்தர், அவர் முழுமையானவர். அவருக்கு அப்படிச் செய்யும் திறமை இருக்கிறது, ஆகவே அவரால் அப்படி கூறமுடியும். மறுபுறம் நாம் எப்பொழுதும் பாவஞ்செய்யாதிருக்க முடியாது. மேலும் எப்பொழுதும் நன்மை செய்யமுடியாது. நம் இருதயத்தில் எப்பொழுதும் நன்மை இருப்பதில்லை. சட்டம் எப்பொழுதும் கூடாது என்று கூறுகிறது (அது எப்பொழுதும் என்ற வார்த்தையுடன் ஒப்பந்தம் செய்துள்ளது) ஏன்? மக்களின் இருதயத்தில் இச்சை இருக்கிறது. நம் இச்சையின் படி செய்கிறோம். நம் இருதயத்தில் விபசாரம் இருப்பதால் விபசாரத்தில் ஈடுபடுகிறோம்.

நாம் வேதாகமத்தைக் கவனமாக படிக்கவேண்டும். நான் முதலில் இயேசுவை விசுவாசித்தபோது வார்த்தையின்படி விசுவாசித்தேன். இயேசு எனக்காக சிலுவையிலறையப்பட்டார் என்று விசுவாசித்தபோது கண்ணீர் வழிந்தோடுவதைத் தடுக்க முடியவில்லை. நானொரு தீயவனாக இருந்தபடியால் எனக்காய் அவர் சிலுவையில் மரித்தார்... என்னுடைய இருதயம் பெரும் வலியைக் கண்டபடியால் நான் அவரை விசுவாசிக்கத் தொடங்கினேன். பிறகு நான் சிந்தித்தேன். நான் விசுவாசிப்பேனேயாகில் வார்த்தையின் படி விசுவாசிப்பேன்.

யாத்திராகமம் 20 ஐப் படிக்கும் போது, “என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம் என்று அது கூறிற்று. இவ்வார்த்தைகளுக்கேற்ப மனம் வருந்தி ஜெபித்தேன். அவருக்கு முன்பாக வேறு கடவுள்களுடன் இருந்தேனா அல்லது அவருடைய பெயரை வீணாக கூப்பிட்டேனா, அல்லது வேறு எந்த கடவுள்களுக்கும் முன்பாக தலை வணங்கினேனா என்று கண்டுபிடிக்கும்படி என் நினைவை ஆராய்ந்தேன். என் மூதாதையர்களுக்கு மரியாதைச் செலுத்தும் விதமாக அநேக சடங்குகளில் மற்றக் கடவுள்களை வணங்கியதை உணர்ந்தேன். மற்றக் கடவுள்களை வைத்திருந்த பாவத்திற்கு உள்ளானேன்.

ஆகவே மனம் வருந்தி ஜெபித்தேன், “கர்த்தரே, நான் சிலைகளை ஆராதித்தேன். நான் அதற்காக தீர்க்கப்படவேண்டியவன். என்னுடையப் பாவங்களை மன்னியும். அதனை நான் மறுபடியும் செய்யவே மாட்டேன்.இப்படியாக ஒரு பாவத்தைச் சமாளித்தாயிற்று.

அவருடையப் நாமத்தை வீணிலே அழைத்தேனா என்று சிந்திக்க முயன்றேன். அப்பொழுது ஒன்று நினைவுக்கு வந்தது, நான் கர்த்தரை விசுவாசிக்கத் தொடங்கியபோது, புகைப் பிடிக்கும் பழக்கம் என்னிடமிருந்தது. என் நண்பர்கள் என்னிடம் கூறினர், “நீ புகைப்பதன் மூலம் கர்த்தருக்கு கேவலத்தை கொண்டு வருகிறாயா? ஒரு கிறிஸ்தவன் எப்படி புகைப் பிடிக்கலாம்?”

அது அவருடைய பெயரை வீணில் வழங்குவதாயிற்று, அப்படி இல்லையா? ஆகவே, நான் மறுபடியும் ஜெபித்தேன், “கர்த்தரே, நான் உம்முடையப் பெயரை வீணில் வழங்கினேன். என்னை மன்னியும். நான் புகைப்பிடிப்பதை நிறுத்தி விடுகிறேன்.ஆகவே நான் புகைப்பிடிப்பதை நிறுத்த முயன்றேன். ஆனாலும் ஒரு வருட காலத்திற்கு தீ வைப்பதை தொடர்ந்து கொண்டிருந்தேன். அது மிகவும் கடினமாகவும், புகைப்பிடிப்பதை நிறுத்துவது சாத்தியமில்லாத ஒன்றாகவும் இருந்தது. ஆனால் கடைசியில் புகைப்பிடிப்பதை முற்றிலும் நிறுத்துவதில் வெற்றி பெற்றேன். இப்படியாக மீண்டும் ஒரு பாவத்தைச் சமாளித்தாயிற்று.

அடுத்தது ஓய்வு நாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.அதன் பொருள் ஞாயிற்றுக்கிழமைகளில் எதனையும் செய்யலாகாது; வியாபாரம் செய்யவோ, பணம் சம்பாதிக்கவோ கூடாது... ஆகவே அவற்றைச் செய்வதை நிறுத்திவிட்டேன்.

பிறகு அங்கே உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக.என்றிருக்கிறது. அவர்கள் தொலைவிருக்கும் போது அவர்களைக் கனம் பண்ணினேன். ஆனால் அவர்களுக்கருகில் நானிருக்கும்போது அவர்கள் என்னிருதயத்தின் வேதனைக்கு மூலமாயிருந்தார்கள். ஓ என் நல் மனமே, நான் கர்த்தருக்கு முன் பாவஞ்செய்தேன். கர்த்தரே, என்னை மன்னியும்.நான் மனம் வருந்தி ஜெபித்தேன்.

என்னுடைய பெற்றோர்கள் மரித்துபோனதால் அவர்களிருவரையும் கனம் பண்ணமுடியவில்லை. நான் என்னச் செய்வேன்? “கர்த்தரே, இந்த உபயோகமில்லாத பாவியை மன்னியும். எனக்காக நீ சிலுவையில் மரித்தீர்.நான் எத்தனை நன்றியறிதல் உள்ளவனாக இருந்திருக்கிறேன்.

இப்படியாக, ஒவ்வொருப் பாவமாக சமாளித்தாயிற்று என்று நினைத்தேன். அங்கே மற்றச் சட்டங்களும் இருக்கின்றன, கொலைச் செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, இச்சியாதே... இவற்றில் ஒன்றைக் கூட கடைப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்தேன். முழு இரவும் ஜெபித்தேன். ஆனால் மனம் வருந்தி ஜெபம் செய்வது உண்மையில் சந்தோஷமளிப்பதில்லை என்பது உங்களுக்குத் தெரியும். அதனைக் குறித்து நாம் பேசுவோமாக.

இயேசு சிலுவையிலறையப் பட்டதை நினைக்கும் போது, அது எத்தனை வேதனை மிக்கது என்று என்னால் அனுதாபப்பட முடிந்தது. அவருடைய வார்த்தைகளின்படி நடக்க முடியாத எனக்காய் அவர் மரித்தார். எனக்கு உண்மையான சந்தோஷத்தை அளித்தமைக்காக அவரை எத்தனையாக நேசித்து நன்றியுடனிருக்கிறேன் என்று நினைத்து இரவு முழுவதும் அழுதேன்.

முதல் வருடம் ஆலயம் செல்வது பொதுவாக இலகுவாயிருந்தது. ஆனால் அவற்றைத் திரும்பச் திரும்பச் செய்துக் கொண்டிருந்தமையால், அதனைக் குறித்து கடினமாக சிந்தித்தப்படியால் அடுத்த இரண்டு வருடங்களும் ஆலயம் செல்வது மிகவும் கடினமாயிருந்தது.

கண்ணீர் இன்னும் வராதபோது, மலைகளுக்குச் சென்று 3 நாட்கள் உபவாசமிருந்து ஜெபித்தேன். அப்பொழுது அழுகை மீண்டும் வந்தது. என்னுடைய கண்ணீரில் ஊறிய பிறகு, சமுதாயத்திற்கு மீண்டும் வந்து, ஆலயத்தில் அழுதேன்.

என்னைச் சுற்றியிருந்தவர்கள் நீ மலையில், ஜெபிப்பதால் மிகவும் பரிசுத்தவனாகி விட்டாய் என்றார்கள். மீண்டும் கண்ணீர் நின்றுவிட்டது. மூன்றாம் வருடம் மிகவும் கடினமாகிவிட்டது. நான் எனது நண்பர்களுக்கும் எனது சக கிறிஸ்தவர்களுக்கும் செய்த தவறுகளை எண்ணி மீண்டும் அழுவேன். 4 வருடங்களுக்குப் பின் இந்த கண்ணீரும் வற்றிப்போயிற்று. என்னுடைய கண்களில் கண்ணீர் சுரப்பிகள் இருந்தாலும் அவை மேலும் வேலைச் செய்வதை நிறுத்தின.

5 வருடங்களுக்குப் பிறகு, நான் எத்தனை முயன்றும் என்னால் அழுக முடியவில்லை. அதன் பிறகு என் மூக்கு ஒழுக ஆரம்பித்தது. அதன் பிறகு மேலும் இரண்டு வருடங்களுக்குப் பிறகு, என் மீதே நான் வெறுப்புக்கொண்டு மீண்டும் வேதாகமத்திற்குத் திரும்பினேன்.

 


பாவத்தைக் குறித்து அறியவே சட்டம்

     

 1. சட்டத்தைக் குறித்து நாமறிந்துக் கொள்ளவேண்டியவை யாவை?
 2. சட்டத்தை நாம் கடைபிடிக்கவே முடியாது.

 

ரோமர் 3:20 இல், பாவத்தை அறிகிற அறிவு நியாயப் பிரமாணத்தினால் வருகிறபடியால் என்று நாம் வாசிக்கிறோம். இதனை அப்போஸ்தலன் பவுலின் சொந்த வார்த்தைகளாக நான் கருதி நான் தேர்ந்தெடுத்த வார்த்தைகளை விசுவாசித்தேன். ஆனால் என்னுடைய கண்ணீர் காய்ந்துபோன பின்பு என்னுடைய விசுவாச வாழ்வைத் தொடரமுடியாதவனாக இருந்தேன்.

ஆகவே, நான் மீண்டும் மீண்டும் பாவஞ்செய்து கொண்டேயிருந்தேன். மேலும் நான் என் இருதயத்திற்குள் பாவஞ்செய்வதையும் சட்டத்தின்படி வாழ்வது இயலாத காரியம் என்றும் கண்டு கொண்டேன். என்னால் அதனைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. சட்டத்தை நாம் கடைப்பிடிப்பதற்காகவே அது வழங்கப்பட்டிருக்கிறது என்று நான் விசுவாசித்தபடியால் அதனைத் தள்ளிப்போடவும் என்னால் முடியவில்லை. முடிவில், வேதாகமத்தில் காணப்படும் நியாயசாஸ்திரியைப் போலானேன். விசுவாச வாழ்வைத் தொடர்வது மிகவும் கடினமாயிற்று.

ஆகவே, இத்தகைய கடினத்தில் இருந்து தப்பும் வகையில், நீர் மற்றும் ஆவியினால் மறுபடியும் பிறப்பதைக் குறித்து பிரசங்கிக்கும் போதகரைக் கண்டுபிடிப்பதில் தடபுடலாக இருந்தேன். நம்முடைய எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்பட்டன என்று பிரசங்கிக்கும் போதகர் ஒருவரைச் சந்தித்தேன்.

நான் பாவமில்லாதவன் என்று எப்போதெல்லாம் கேட்டேனோ, அப்போது அது ஒரு புதிய தென்றல் காற்று என்னிருதயத்தில் வீசுவது போலிருந்தது. நியாயப் பிரமாணத்தைப் படிக்கும்போது என்னிலிருந்த அநேகப் பாவங்களைக் குறித்து உணரத் தொடங்கினேன். என்னிருதயத்தினுள் பத்துக் கட்டளைகள் அனைத்தையும் மீறியிருந்தேன். இருதயத்தினுள் பாவஞ்செய்வதும் ஒரு பாவமாகும், நான் சட்டத்தின் விசுவாசியாகிப் போனேன்.

சட்டத்தை நான் கடைப்பிடித்தபோது நான் மகிழ்ச்சியுடையவனாயிருந்தேன். ஆனால் என்னால் சட்டத்தைக் கடைப் பிடிக்க முடியாதபோது, துன்பத்தினுள்ளும் எரிச்சலுடனும் கவலையுடனுமிருந்தேன். இதன் பலனாக, அவற்றினால் சோர்ந்து போனேன். ஆரம்பத்திலிருந்தே இல்லை, இல்லை. சட்டத்திற்கு வேறு பொருள் இருக்கிறது. அது நீ பாவக்குவியல் என்று காட்டுகிறது; உன்னிடம் பண ஆசை எதிர்பாலாரிடம் ஆசை, எது அழகாயிருக்கிறதோ அதன் மீது ஆசை இருக்கிறது. கர்த்தருக்கும் மேலாக நேசிப்பவை உன்னிடமிருக்கின்றன. இவ்வுலகின் காரியங்களுக்கு பின் செல்ல விரும்புகிறாய், சட்டத்தை உனக்கு கொடுத்ததன் காரணம், அதனைப் பின்பற்ற அல்ல. ஆனால் நீ ஒரு பாவி என்றும் உன்னிருதயத்தில் தீமையிருக்கிறதென்றும் உன்னைத் தெரிந்து கொள்வதற்கேஎன்று நான் போதிக்கப் பட்டிருக்கவேண்டும்.

யாராவது எனக்கு அப்போது போதித்திருந்தார்கள் என்றால், 10 வருடங்களாக நான் கஷடப்பட்டிருக்க மாட்டேன். இந்த அறிவை நான் பெறும் வரை இப்படியாக 10 வருடங்களாக சட்டத்தின் கீழ் வாழ்ந்திருந்தேன்.

நான்காவது கட்டளை ஒய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக என்பதாகும். இதன் பொருள் ஒய்வு நாளில் நாம் வேலை எதுவும் செய்யக் கூடாதென்பதாகும். அதன் பொருள், அதிக தூரம் செல்வதானால் நாம் நடக்கவேண்டும், வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது. ஆகவே, நான் மதிப்பு மிக்கவனாக வேண்டுமென்றால் பிரசங்கிக்கும் இடம் வரை நடந்து போக வேண்டும் என்று நினைத்தேன். நான் சட்டத்தைப் பிரசங்கிக்கப் போகிறேன். இப்படி நான் பிரசங்கிப்பவற்றைப் பின்பற்ற வேண்டுமென நினைத்தேன். அது எத்தனைக் கடினமானது என்றால், அதனை விட்டுவிடலாம் என்று நினைத்தேன்.

இங்கு நீ வாசித்திருக்கிறது என்ன?” என்று எழுதியிருக்கிறது. இந்தக் கேள்வியைப் புரிந்து கொள்ளாததினால் 10 வருடங்கள் கஷ்டப்பட்டேன். நியாயசாஸ்திரி கூட இதனைத் தவறுதலாக புரிந்து கொண்டிருந்தான். சட்டத்திற்கு கீழ்ப்படிந்து கவனமாக வாழ்ந்தால், கர்த்தர் முன்பு ஆசீர்வதிக்கப் பட்டவனாயிருப்பேன் என்று அவன் நினைத்தான்.

இயேசு அவனிடம் நீ வசித்திருக்கிறது என்ன?” என்று கேட்டார். ஆமாம், நீ சரியாகச் சொன்னாய்; எழுதப்பட்டிருப்பதை அப்படியே நீ எடுத்துக் கொண்டிருக்கிறாய். முயற்சிசெய்து அதனைக் கடைப்பிடி. அதன்படி செய்தால் வாழ்வாய், அப்படிச் செய்யாவிட்டால் நீ மரிப்பாய். பாவத்தின் சம்பளம் மரணம். அப்படிச் செய்யாவிட்டால் நீ மரிப்பாய்.” (வாழ்க்கைக்கு எதிரானது மரணம், இல்லையா?)

ஆனால் நியாயசாஸ்திரி அப்போதும் அதனைப் புரிந்துகொள்ளவில்லை. இந்த நியாயசாஸ்திரி நாமே நீயும், நானும். நான் இறையியலை 10 வருடங்கள் படித்தேன். நான் எல்லாவற்றையும் முயற்சித்தேன், எல்லாவற்றையும் படித்தேன். மேலும் எல்லாவற்றையும் செய்தேன்: உபவாசம், காட்சிகள் காணுதல், மற்ற பாஷைகளில் பேசுதல்... நான் 10 ஆண்டுகளாக வேதாகமத்தை வாசித்து எதையோ நிறைவேற்றுவேன் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஆவிக்குரிய வாழ்வில் நானொரு குருடன்.

அதனாலேயே, அவரே நம் கர்த்தராகிய இயேசு என்று காணச்செய்யும் ஒருவரை, பாவி ஒருவன் சந்திக்க வேண்டும். அவன் பின்னால் உணருகிறான். ஆகா! நம்மால் சட்டத்தைக் கடைப்பிடிக்கவே முடியாது. நாம் எத்தனைக் கஷ்டப்பட்டு முயற்சித்தாலும், நாம் முயற்சிசெய்தே மரிப்போம். ஆனால் இயேசு நீராலும் ஆவியாலும் நம்மை இரட்சிக்கும்படி வந்தார்! அல்லேலூயா!நம்மால் நீர் மற்றும் ஆவியின் மூலம் மறுபடியும் பிறக்க முடியும். அதுவே கர்த்தரின் பரிசாகிய இரக்கம். ஆகவே நாம் கர்த்தரைத் துதிப்போம்.

நான் இந்த வழியுடனேயே பட்டதாரியாக அதிர்ஷ்டசாலியாக இருந்தேன், ஆனால் அநேகர் இறையியலை தம் வாழ்நாள் முழுவதும் படிப்பதில் செலவிட்டாலும் சாகும் நாள் வரையிலும் உண்மையை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. சிலர் மறுபடியும் பிறக்கவே இல்லையாயினும் அவர்கள் பல்லாண்டுகளாகவோ வம்ச வம்சமாகவோ அப்படி நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பாவியாகிய நம்மால் சட்டத்தைக் கடைப்பிடிக்க முடியாது என்று உணரும்போது நாம் பட்டதாரியாகிறோம். பிறகு இயேசுவின் முன்னின்று நற்செய்தியாகிய நீர் மற்றும் ஆவியைக் குறித்து கேட்கவேண்டும். நாம் இயேசுவை சந்திக்கும்போது, நாம் எல்லாத் தீர்ப்புகளினின்றும் எல்லா அழிவுகளினின்றும் பட்டதாரியாகியிருப்போம். நாம் மிக மோசமான பாவிகளாயிருந்தாலும், அவர் நம்மை நீர் மற்றும் இரத்தம் மூலம் இரட்சித்ததால் நாம் நீதிமான்களானோம்.

விசுவாச வாழ்க்கையில் மனிதர்களைத் தவறச் செய்வது எது?

 

 

 

 

 

 

பாவம்.

  அவருடைய சித்தத்தின்படி நம்மால் வாழவே முடியாதென்று இயேசு நம்மிடம் கூறினார். அவர் இதனை நியாயசாஸ்திரியிடம் கூறினார். ஆனால் அவன் இதனைப் புரிந்துகொள்ளவில்லை. ஆகவே இயேசு அவனுக்கு புரிய உதவும்படியாக ஒரு கதையை அவனுக்கு கூறினார்.


 1. விசுவாச வாழ்க்கையில் மனிதர்களைத் தவறச் செய்வது எது?
 2. பாவம்.

         “ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப்போனார்கள்”. (லூக்கா 10:30) இம் மனிதன் கள்ளர்களால் அடிக்கப்பட்டு குற்றுயிரானது போல் தாமும் தம் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டதாக அவனிடம் கூறினார்.

ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்குச் சென்றான். எரிகோவானது உலகச் சம்பந்தமான நகரம். மேலும் எருசலேம் மதத்தின் நகரமாகவும்; விசுவாசத்தின் நகரமாகவும், சட்டத்தினிமித்தம் பெருமைப் பாராட்டுபவர்களின் நகரமாகவும் இருந்தது. இது என்ன கூறுகிறது என்றால் நாம் இயேசுவை நம் மதமாக நம்பினால் நம்மால் அழிவதைத் தவிர வேறில்லை.

ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். எருசலேம் அதிக மக்களுள்ள மிகப்பெரும் நகரமாயிருந்தது. அங்கு ஒரு தலைமை ஆசாரியனும், அநேக ஆசாரியர்களும், லேவிகளும் மற்றும் மதத்தின் அநேக சிறந்த மக்களும் அங்கிருந்தனர். அங்கு சட்டத்தைக் குறித்து, நன்கு தெரிந்த அநேகர் இருந்தனர். அங்கு, அவர்கள் சட்டத்தின்படி வாழ முயன்றனர். ஆனால் அவர்கள் அதில் தோல்வியுற்று எரிகோவை நோக்கிச் சென்றனர். அவர்கள் இவ்வுலகில் (எரிகோ) தொடர்ந்து விழுந்து, கள்ளர் கையில் அகப்படுகிறார்கள்.

அம்மனிதன் எருசலேமிலிருந்து எரிகோ செல்லும் வழியில் கள்ளரிடம் பிடிபட்டு அவன் ஆடைகள் உரியப்பட்டான். அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டுஎன்பதன் பொருள் அவன் தன் நீதியை இழந்து போனான் என்பதாகும். சட்டத்தின்படி வாழ்வதோ, சட்டத்திற்கு ஏற்றவாறு வாழ்வதோ, நம்மால் இயலாது. ரோமர் 7 இல் அப்போஸ்தலனாகிய பவுல் கூறுகிறான். நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன், ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது.

அவருடைய வார்த்தையில் வாழ்ந்து நன்மை செய்ய விரும்புகிறேன். ஆனால் ஒரு மனிதனின் இருதயத்தில் பொல்லாத சிந்தனைகள், விபசாரங்கள், வேசித்தனம், கொலை பாதகம், களவு, பொருளாசை, துஷ்டத்தனம், கபடு, காமவிகாரம், வன்கண், தூஷணம், பெருமை, மதிகேடு ஆகியவை உள்ளன. (மாற்கு 7:21-23 ).

அவை நமது இருதயத்திலிருப்பதாலும், அவ்வப்போது, அவை வெளிப்படுவதாலும், நாம் விரும்புகிறதைச் செய்யாமல், நாம் வெறுக்கிறதை செய்கிறோம். நம் இருதயத்திலுள்ள தீமைகளை மீண்டும் மீண்டும் செய்கிறோம். சாத்தான் செய்ய வேண்டியதெல்லாம் சிறிது விசை கொடுக்க வேண்டியது மட்டுமே.எல்லா மனிதர்களின் இருதயத்தினுள் உள்ள பாவங்கள்

 

இல்லை.

சட்டத்தின்படி நம்மால் வாழ முடியுமா?


 1. சட்டத்தின்படி நம்மால் வாழ முடியுமா?
 2. இல்லை.

மாற்கு 7 இல், மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்த மாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும்என்று கூறப்பட்டுள்ளது.

மனிதனுடைய இருதயத்தில் பொல்லாத சிந்தனை, விபசாரம், வேசித்தனம், கொலை, களவு, பொருளாசை, துஷ்டத்தனம், கபடு, காமவிகாரம், வன்கண், தூஷணம், பெருமை, மதிகேடு ஆகியவை இருப்பதாக அவர் கூறுகிறார். நம்முடைய இருதயங்களில் கொலை இருக்கிறது.

கொலை செய்யாதவர்கள் யாருமில்லை. தாய்மார்கள் தம் பிள்ளைகள் ஏசுவார்கள் இல்லை. அதனைச் செய்யாதே. நாசமாய்ப் போக, அதனைச் செய்யாதே என்று கூறினேன்.மேலும், “நீ இங்கே வா. நான் திரும்பத்திரும்ப அதனைச் செய்யாதே என்று கூறினேன். அதற்காக உன்னைக் கொல்லப் போகிறேன்.இது கொலை. உங்களுடைய அறிவில்லாத சொற்கள் மூலம் உங்கள் பிள்ளைகளைக் கொல்கிறீர்கள்.

நம்மிலிருந்து வேகமாக நம் பிள்ளைகள் ஔடிப்போவதால் நம் பிள்ளைகள் வாழ்ந்திருக்கவேண்டும்; ஆனால் நாம் நம் எல்லாக் கோபங்களையும் அவர்கள் மீது காட்டினால், அவர்கள் மடிந்து போவர். கர்த்தருக்கு முன்பாக நாம் அவர்களைக் கொன்றவர் ஆவோம். சில சமயம் நாம் நம்மையே பயமுறுத்துவோம். ஓ என் கர்த்தரே! அதனை ஏன் நான் செய்தேன்?” நம் பிள்ளைகளை அடித்த பிறகு அவர்களின் காயங்களைப் பார்த்து அப்படிச் செய்வதற்கு நானொரு பைத்தியக் காரனாக இருக்கவேண்டும் என்று நினைப்போம். நம்மிருதயத்தில் கொலை இருப்பதால் அப்படிச் செய்கிறோம்.

ஆகவே நான் விரும்புகிறதைச் செய்யாமல் நான் வெறுக்கிறதையே செய்கிறேன்.என்பதன் பொருள் நாம் தீயவர்களானபடியால் நாம் தீமையானவற்றையே செய்கிறோம். நம்மைப் பாவஞ்செய்யத் தூண்டுவது சாத்தானிற்கு எளிய காரியம்.

கொரியாவின் மிகப்பெரிய மதகுருவான சங்சூல் செய்ததைப் போன்று பாவ விடுதலைப் பெறாத ஒருவன் 10 வருடங்களாக குடிசை ஒன்றிற்குள், சுவரை நோக்கிப் பார்த்து தியானம் செய்கிறான். அவன் சுவரைப் பார்த்து தன் முகத்தை வைத்து உட்கார்ந்திருப்பது நல்லது, ஆனால் யாரேனும் அவனுக்குச் சாப்பாட்டை எடுத்து வரவும், அவன் அழுக்கை எடுத்துச் செல்லவும் வேண்டும்.

அதற்கு அவன் யாருடனாவது தொடர்பு வைத்திருக்க வேண்டும். அது ஒரு மனிதனாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் அது ஒரு அழகிய பெண்ணாயிருந்தால் என்னவாகும். அவளை தற்செயலாக அவன் பார்த்தால் அவன் அதுவரை உட்கார்ந்திருந்தது வீண். அவன் நினைக்கிறான், “நான் விபசாரம் செய்யக்கூடாது; அது என்னிருதயத்தில் இருக்கிறது, அதனை நான் அகற்றிப்போட வேண்டும். அதனை அசைக்கவேண்டும். இல்லை! என் மனதை விட்டுப் போ!

அவளைப் பார்க்கும்போது அவன் தீர்மானம் பறந்து போகிறது. அப்பெண் சென்றதும், அவன் தன் இருதயத்தைப் பார்க்கிறான். 5 வருட கடினமுயற்சி எந்த பயனும் இல்லாமல் போயிற்று.

ஒரு மனிதனின் நீதியை எடுத்துப்போடுவது சாத்தானிற்கு எளிய காரியம். சாத்தான் செய்ய வேண்டியதெல்லாம் சிறிது தூண்டுவதே. ஒரு மனிதன் பாவ விடுதலைப் பெறாமல் கடின முயற்சி செய்தால் அவன் தொடர்ந்து பாவத்திற்குள் விழுகிறான். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தசமபாகத்தை தவறாமல் கொடுக்கிறான். 40 நாட்கள் உபவாசமிருக்கிறான், 100 நாட்கள் அதிகாலை ஜெபம்... ஆனால் வாழ்க்கையின் அழகியவற்றினால் சாத்தான் அவனை இச்சிக்கச் செய்கிறான்.

இக்கம்பெனியில் உனக்கு ஒரு முக்கியப் பதவியைக் கொடுக்க விரும்புகிறேன். ஆனால் நீ ஒரு கிறிஸ்தவன். உன்னால் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய முடியாது. உன்னால் முடியுமா என்ன? அது ஒரு மிகப்பெரிய பதவி. நீ வேண்டுமானால் 3 ஞாயிற்றுக்கிழமை வேலைச் செய்யலாம். மாதத்திற்கொரு முறை மட்டும் ஆலயம் செல். அதற்கு பதில் நீ ஒரு சிறந்த பெருமையை அனுபவித்து நல்ல பெரிய சம்பளத்தையும் பெறுவாய். அதற்கு என்ன கூறுகிறாய்?” இதில் 100 இற்கு 100 வாங்கப்படுவர்.

இது வேலைச் செய்யவில்லையெனில், பெண்களிடம் மயங்கிப்போகிறவர்கள் இருக்கிறார்கள். சாத்தான் அவர்கள் முன் ஒரு பெண்ணை வைக்கிறான். அவன் காதல் கொண்டு தன் தலையை அவள் கால்களில் வைத்து, கர்த்தரை ஒரு நொடியில் மறந்துவிடுகிறான். இப்படியாகவே ஒரு மனிதனின் நீதி உரிக்கப்படுகின்றது.

நாம் நியாயப்பிரமாணத்தின்படி வாழ முயற்சி செய்தோமானால், முடிவில் நம்மிடம் இருப்பதெல்லாம், பாவங்களினால் உண்டான காயங்கள், வலி மற்றும் வறுமை; நாம் எல்லா நீதிகளையும் இழந்து போவோம். ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள்.

நாம் கர்த்தருடைய சித்தப்படி எருசலேமில் வாழ முயற்சி செய்தாலும், நம்முடைய பலவீனத்தின் நிமித்தம் ஒவ்வொரு நேரமும் நாம் விழுந்து, அழிந்து போகிறோம்.

பிறகு கர்த்தருக்கு முன் மனம் வருந்தி ஜெபிக்கிறோம். கர்த்தரே, நான் பாவஞ்செய்தேன். தயவாக என்னை மன்னியும்; அதனை மீண்டும் செய்யவே மாட்டேன். இதுவே கடைசி என்று உமக்கு உறுதி கூறுகிறேன். இந்த முறை மட்டும் என்னை மன்னியும் என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஆனால் அது நீடித்திருக்காது. பாவஞ்செய்யாமல் மனிதர்களால் இவ்வுலகில் வாழ முடியாது. இரண்டொருமுறை அவர்களால் அதனைத் தவிர்க்க முடியலாம், ஆனால் மீண்டும் பாவஞ்செய்யாமலிருப்பது சாத்தியமில்லை. ஆகவே, பாவங்கள் மீண்டும் செய்யப் படுகின்றன. கர்த்தரே, தயவுசெய்து என்னை மன்னியும்.இது தொடர்ந்து கொண்டிருந்தால் ஆலயத்திலிருந்து (மதம்) நழுவிப்போவர். அவன் பாவத்தினிமித்தம் கர்த்தரிடமிருந்தும் விலகி, கடைசியில் நரகத்தில் முடிவடைவான்.

எரிகோவிற்கு செல்வது என்பதன் பொருள், மதசார்பற்ற உலகில் விழுவது என்பதாகும்; உலகிற்கு அண்மையில் வருவதும் எருசலேமிலிருந்து அதிகத் தூரத்திற்கும் செல்வதாகும். தொடக்கத்தில் எருசலேம் மிகவும் அண்மையிலிருக்கிறது. ஆனால் பாவஞ்செய்வதும், மனம் வருந்துவதும் திரும்பத் திரும்ப சுழலும் போது, எரிகோவின் வீதிகளில் நாமிருப்பதைக் காணுவோம்; உலகின் ஆழத்திற்குள் விழுந்து போனோம்.

தாமே முயற்சி செய்வதைக் கைவிடுபவர்கள்.

இரட்சிக்கப்படுவது யார்?


 1. இரட்சிக்கப்படுவது யார்?
 2. தாமே முயற்சி செய்வதைக் கைவிடுபவர்கள்.
        

எரிகோவிற்குச் செல்லும்பொழுது அம்மனிதன் யாரைச் சந்தித்தான்? திருடர்களைச் சந்தித்தான். சட்டத்தின்படி வாழாத ஒருவன் தாழ்மையுள்ள நாயாகிறான். அவன் குடிக்கிறான், எங்கு வேண்டுமானாலும் தூங்குகிறான், எங்கும் சாப்பிடுகிறான். இந்நாய் மறுநாள் மீண்டும் எழுந்து குடிக்கிறது. தாழ்த்தப்பட்ட நாய் தன் சொந்த அழுக்கைச் சாப்பிடுகிறது. அதனாலேயே அவன் நாயாகிவிடுகிறான். தான் குடிக்கக் கூடாது என்று அவனுக்குத் தெரியும். மறுநாள் காலையில் அவன் மனம் வருந்தினாலும் மீண்டும் குடிக்கிறான்.

இது எரிகோவுக்குச் செல்லும் வழியில் திருடனைச் சந்தித்த மனிதனுக்கு ஒப்பானதாகும். அவன் காயங்களுடன் குற்றுயிராக விடப்பட்டான். அவன் இருதயத்தில் பாவம் மட்டுமே இருக்கிறது. மனிதர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.

மக்கள் இயேசுவை விசுவாசித்து எருசலேமில் சட்டத்தின்படி வாழ்கிறார்கள், ஆனால் அவர்கள் இருதயத்தில் பாவத்துடன் விடப்பட்டுள்ளனர். அவர்களுடைய மத வாழ்க்கைக்கு அவர்கள் காண்பிப்பதெல்லாம் பாவத்தினால் உருவான காயங்களே. இருதயத்தில் பாவமுள்ளவர்களெல்லாம் நரகத்தினுள் வீசப்படுவர். இது அவர்களுக்குத் தெரிந்தாலும் என்ன செய்வதென்று அவர்களுக்குத் தெரியாது. நீங்களும் நானும் அங்கிருந்தோமா? ஆம். நாமெல்லோரும் ஒரே மாதிரியாகவே இருந்தோம்.

கர்த்தரின் சட்டத்தைத் தவறுதலாக புரிந்துக்கொண்ட நியாயசாஸ்திரி தன் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டு, காயங்களுடன் நரகத்தில் முடிவடைவான். அது நாமே, நீயும் நானும்.

இயேசுவால் மட்டுமே நம்மை இரட்சிக்கமுடியும். நம்மைச் சுற்றிலும் அநேக அறிவு பொருந்திய மக்கள் இருந்து அவர்களுக்குத் தெரிந்தவற்றை நமக்கு காண்பிக்கின்றனர். அவர்கள் கர்த்தரின் சட்டப்படி வாழ்வதாக காட்டிக் கொள்கின்றனர். அவர்களால் தமக்குத் தாமே நேர்மையானவர்களாக இருக்க முடியாது. ஒரு மண்வெட்டியை மண்வெட்டி என்று அவர்களால் கூறமுடியாது, ஆனால் வெளித்தோற்றத்தில் விசுவாசம் நிறைந்தவர்கள் என்று காட்டிக் கொள்ள குனிந்து ஒழுங்குப் படுத்துகிறார்கள்.

எரிகோ செல்லும் வழியில் பாவிகள், கள்ளர்களால் அடிக்கப்பட்டவர்கள், ஏற்கெனவே இறந்து போனவர்கள் இருக்கின்றனர். நாம் கர்த்தருக்கு முன் எத்தனை உடைந்து போகிறவர்களாயிருக்கிறோம் என்று அறிந்துகொள்ள வேண்டும்.

அவருக்கு முன்பாக நம் ஒத்துக்கொள்ளவேண்டும். கர்த்தரே, நீர் என்னை இரட்சிக்கவில்லையெனில் நான் நரகம் செல்லுவேன். தயவுசெய்து என்னை இரட்சியும். கல் மழை பெய்தாலும் சரி புயல் வீசினாலும் சரி, நீர் என்னை உண்மையான நற்செய்தியைக் கேட்க அனுமதித்தால், எங்கும் செல்வேன். நீர் என்னைக் கைவிட்டால், நான் நரகம் செல்லுவேன். என்னை இரட்சிக்கும்படி உம்மிடம் கெஞ்சுகிறேன்.

யாருக்கு தாம் நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று தெரிகிறதோ, யார் தம் சொந்த வழிகளை விட்டு கர்த்தரைப் பற்றிக் கொள்கிறார்களோ அவர்களே இரட்சிக்கப்படுபவர்கள். நம்மால் நம்மை எப்பொழுதும் இரட்சித்துக் கொள்ள முடியாது.

நாம் திருடர்களிடம் சிக்கிக்கொண்ட மனிதனை ஒத்தவர்கள் என்று அறிந்து கொள்ளவேண்டும். *