தொல்காப்பியம்/ நச்சினார்கினியர் உரை
பொருளதிகாரம்: புறத்திணையியல்

tolkAppiyam -part 2, with the notes of naccinArkiniyar
poruLatikAram - puRattiNaiiyal
In tamil script, unicode/utf-8 format

தொல்காப்பியம் : பொருளதிகாரம்
நச்சினார்க்கினியர் உரை

source:
தொல்காப்பியம் : பொருளதிகாரம்
அகத்திணையியல் & புறத்திணையியல்
நச்சினார்க்கினியர் உரை

திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்
கழகம், லிமிடெட், திருநெல்வேலி, சென்னை - 1
First Edition: March, 1947. Second Edition: 1955.
(All Rights Reserved)
Published By
The South Indian Saiva Siddhantha Works Publishing Sociey, Ltd
1140 Broadway, Madras-1
Head Office: 24, East Car Street, Thirunelveli
Appar Achakam, Madras - 1 . II Ed. C. 1020.
---------------

தொல்காப்பியம் : நச்சினார்க்கினியர் உரை
பொருளதிகாரம்:
இரண்டாவது : புறத்திணையியல்


56.

இவ்வோத்து முற்கூறிய அகத்திணை ஏழற்கும் புறமாகிய புறத்திணையிலக்கணம் உணர்த்தினமையிற் புறத்திணையிய‌லென்னும் பெயர்த்தாயிற்று. புறமாகிய திணையெனப் பண்புத் தொகையாம். அதனை "முற்படக் கிளந்த' (தொல்-பொ- அகத்-1.) என்புழிப் பிற்படக் கிளந்தனவும் உளவெனத் தோற்றுவாய் செய்து போந்து, அவற்றது இலக்கணங்களும் பெயரும் முறையுந் தொகையும் வருகின்ற சூத்திரங்களால் திறப்படக் கூறுவல் என்றலின், மேலதனோடு இயைபுடைத்தாயிற்று. இச் சூத்திரம் முற்கூறிய குறிஞ்சித்திணைக்குப் புறன் வெட்சித்திணை என்பதூஉம், அதுதான் இப்பகுதித்தென்பதூஉம் உணர்த்து தனுதலிற்று.

(இ-ள்.) அகத்திணை மருங்கின் அரிதல்த‌ப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின்-அகத்திணை யென்னும் பொருட்கட் பிணக்கற அறிந்தோர் கூறிய புறத்திணையது இல‌க்கணத்தைக் கூறுபட‌ ஆராய்ந்து கூறின்; வெட்சி தானே குறிஞ்சியது புறனே - வெட்சியெனப்பட்ட புறத்திணை குறிஞ்சி யெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம்; உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே - அதுதான் அஞ்சுதகத் தோன்றும் பதினான்கு துறையினையுடைத்து. எ-று.

அகத்திணைக்கண் முதல் கரு வுரிப்பொருள் கூறிய‌ குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பவனவற்றிற்கு வெட்சி வஞ்சி உழிஞை தும்பை யென்பன அவ்வவ் விலக்கணங்களோடு ஒருபுடை யொப்புமைபற்றிச் சார்புடையவாதலும் நிலமில்லாத‌ பாலை பெருந்திணை கைக்கிளை யென்பனவற்றிற்கு வாகையுங் காஞ்சியும் பாடாண்டிணையும் பெற்ற இலக்கணத்தோடு ஒருபுடை யொப்புமைபற்றிச் சார்புடைய வாதலுங் கூறுதற்கு 'அரில்தப‌ வுணர்ந்தோ'ரென்றார். ஒன்று ஒன்றற்குச் சார்பாமாறு அவ்வச் சூத்திரங்களுட் கூறுதும். தானே யென்றார், புறத்திணை பலவற்றுள் ஒன்றை வாங்குதலின் பாடாண்டிணை ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும் களவொழுக்கமுங் கங்குற் காலமுங் காவலர் கடுகினுந் தான் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும்* போல்வன ஒத்தலின் வெட்சி குறிஞ்சிக்குப் புற னென்றார். வெட்சித்திணையாவது களவின்கண் நிரைகொள்ளும் ஒழுக்கம்.: இதற்கு அப்பூச் சூடுதலும் உரித்தென்று கொள்க. வேற்றுப்புலத்து வாழும் பார்ப்பார் முதலியோர் அஞ்சி அரண் சேர்வதோர் உபாயமாதலின் உட்குவரத் தோன்றுமென்றார். மக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணுந் துறைபோலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதலாகு மார்க்கமாதலிற் றுறையென்றார்,. எல்லாவழியு மென்பதனை எல்லாத் துறையுங் காவல்போற்றினார் என்பவாகலின். எனவே திணையுந் துறையுங் கொண்டாராயிற்று. அகத்திணைக்குத் துறையுட் பகுதிகளெல்லாம் விரித்துக்கூறிப் பின்னும் பன் முறையாற் பரந்துபட்டு† வரம்பிகந்தனவற்றையுந் தொகுத்துத் துறைப்படுத்துக் கிளவி கூறுக என்றதற்குச் செய்யுளியலுள் துறை யென்பது உறுப்பாகக் கூறினார். புறத்திணைக்கு அங்ஙனம் பரந்துபட விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பலபொருட்பகுதியும் உடைய வென்பது உணர்த்துதற்குத் துறையெனப் பெயராகக் கொடுத்தார். இதனானே அகப்பொருட்பகுதி பலவாயினும் ஒருசெய்யுட் பலபொருள் விராஅய் வரினும், ஒரு துறையாயினாற்போலப் புறத்திணைக்கும் அவ்வப்பொருட் பகுதியும் ஒரு துறையாதலும், ஒரு செய்யுட் பலதுறை ஒருங்குவந்தும் ஒரு துறைப்படுதலுங் கொள்க. இன்னும் இதனானே அகத்திணைக்கு உரியன வெல்லாம் புறத்திணைக்குங் கொள்க. (1)

------------

57

இது வெட்சியெனக் கூறிய புறத்திணைக்குப் பொது இலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்) வேந்து விடு முனைஞர்-- வேந்தனால் விடப்பட்டுமுனைப்புலங் காத்திருந்த தண்டத்தலைவர்;‡ வேற்றுப் புலக்களவின்- பகைநிலத்தே சென்று களவினாலே; ஆ தந்தோம்பல் மேவற்றாகும்-ஆநிரையைக் கொண்டுபோந்து பாதுகாத்தலைப் பொருந்துதலை யுடைத்தாகும் வெட்சித்திணை எ-று.

களவுநிகழ்கின்ற குறிஞ்சிப்பொருளாகிய கந்தருவமணம் வேத விதியானே இல்லறமாயினாற்போல இருபெருவேந்தர் பொருவது கருதியக்கால் ஒருவர் ஒருவர் நாட்டு வாழும் அந்தணரும் ஆவும் முதலியன தீங்குசெய்யத் தகாத சாதிகளை ஆண்டு நின்றும் அகற்றல் வேண்டிப் போதருகவெனப் புகறலும், அங்ஙனம் போதருதற்கு அறிவில்லாத ஆவினைக் களவினாற் றாமே கொண்டுவந்து பாதுகாத்தலுந் தீதெனப்படாது அறமேயாம் என்றற்கு ஆதந்தோம்ப லென்றார்.

அது,

எனச் சான்றோர் கூறியவாற்றா னுணர்க. மன்னுயிர் காக்கும் அன்புடை வேந்தற்கு மறத்துறையினும் அறமே நிகழும் என்றற்கு மேவற்றாகுமென்றார். அகநாட்டன்றிப் புறஞ்சிறைப் பாடியில் ஆநிரை காக்குங் காவலரைக் கொன்றே நிரைகொள்ள வேண்டுதலின் ஊர் கொலையுங்* கூறினார். வேந்துவிடு வினைஞர் என்னாது முனைஞர் என்றதனானே முனைப்புலங் காத்திருந்தோர்† தாமே சென்று நிரை கோடலுங், குறுநிலமன்னர் நிரைகோடலும், ஏனைமறவர் முதலியோர் நிரைகோடலுமாகிய வேத்தியல் அல்லாத பொதுவியலுங் கொள்க. முன்னர் (தொல்-பொ- புறத்-1) வெட்சி குறிஞ்சிக்குப் புறனெனக் களவுகூறிய அதனானே. அகத்திற்கு ஏனைத் திணைக்கண்ணுங் களவு நிகழ்ந்தாற்போலப் புறத்திணை யேழற்குங் களவுநிகழுங்கொ லென்று ஐயுற்ற மாணாக்கற்கு வெட்சிக்கே களவு உள்ளதென்று துணி வுறுத்தற்கு மீட்டுங் களவினென்று இத்திணைக்கே களவு உளதாக வரைந்தோதினார். வேந்துவிடு முனைஞர் என்றமையான், இருபெருவேந்தருந் தண்டத்தலைவரை ஏவி விடுவரென்றும், ஆதந்தோம்பும் என்றதனாற் களவின்கட் கொண்ட ஆவினை மீட்டுத் தந்தோம்புமென்றும், பொருள் கூறுமாறு சூத்திரஞ் செய்தாராகலின், இருபெருவேந்தர் தண்டத்தலைவரும் அவ ரேவலான் நிரைகோடற்கும் மீட்டற்கும் உரியராயினார்; ஆகவே இருவர்க்குங் கோடற்றொழில் உளதாயிற்றாதலின், அடித்துக் கோடலும் மீட்டுக் கோடலும் வெட்சியாயின. ஆயின் 'மீட்டல் கரந்தை'* என்பரால் எனின், அதனையும் இச் சூத்திரத்தானும் வருகின் சூத்திரத்தானும் வெட்சியென்றே ஆசிரியர் கொண் டார்,. மீட்டலை வெட்சிக்கரந்தை என்பாரும் உளர். மீட்டலைக் கரந்தை யென்பார்க்கு அது திணையாயிற் குறிஞ்சிக்குப் புறனா காமை உணர்க. களவி னென்பதற்குக் களவினானெனவுங், களவின்கணெனவும் இருபொருட்டாகக் கூறுதல் உய்த்துக் கொண்டுணர்தலென்னும் உத்தியாம். புறப்பொருட்குரிய அறனும் பொருளுங் கூறத்தொடங்கி, ஈண்டு அறத்தாற் பொரு ளீட்டுமாறுங் கூறினார். (2)
------------

58

இது முன் ஈரேழாமென்ற துறை, இருவகைப்பட்டு இருபத் தெட்டாமென்கின்றது.

(இ-ள்) படை இயங்கு அரவம்- நிரைகோடற்கு எழுந்தபடை பாடிப்புறத்துப் பொருந்தும் அரவமும், நிரைமீட்டற்கு எழுந்த படை விரைந்து செல்லும் அரவமும்;


உதாரணம்:-

இவை கண்டோர் கூற்று.

பாக்கத்து விரிச்சி - நிரைகோடற்கு எழுந்தோர் போந்துவிட்ட பாக்கத்துக் கங்குலின் நல்வாய்ப்புட்& கேட்டலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் இடைப்புலத்துப் புறம்போந்தோர் கூறிய‌வற்றை வாய்ப்புள்ளாகக் கேட்டலும்;

உதாரணம்:-

(பெரும்பொருள் விளக்கம் - புறத்திரட்டு- 756 )

இவை விரிச்சியை வியந்தன.

புடைகெடப் போகிய செலவே - நிரைகோடற்கு எழுந்தோர் ஆண்டுநின்று மீண்டுபோய்ப் பற்றார் புலத்து ஒற்றர் உணராமற் பிற்றைஞான்று சேறலும், நிறைமீட்டற்கு எழுந்தோர் ஆண்டு ஒற்றப்படாமற் சேற‌லும்;

உதாரணம்:-

-----
(பாடம்) @ 'வெவ்வாள்.' #'அடியெதுர்.' $'வாளா துடியர்.' &'கங்குலின் வாய்ப்புள்.'
+'இறையோர்க் களித்தகுமால்.' $$'வல்லையே’
## 'விறல் வெய்யோர் வீங்கிருட்கண்.'

இவை கண்டோர் கூற்று.

புடைகெட ஒற்றின் ஆகிய வேயே- நிரைகோடற்கு எழுந் தோர் பகைப்புலத்து ஒற்றர் உணராமற் சென்று ஒற்றி அவ் வொற்றுவகையான் அவர் உணர்த்திய குறளைச்சொல்லும், நிரைமீட்டற்கு எழுந்தோர் அங்ஙனம் ஒற்றிய ஒற்றுவகையான் வந்து ஓதிய குறளைச்† சொல்லும்;

உதாரணம்:--

இவை கண்டோர் கூற்று.

வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்திறை- நிரைகோடற்கு எழுந்தோர் வேயுரைத்தோரிடத்துச் செய்யுஞ் சிறப்புக்கள் முடிந்தபின்னர் உளதாகிய நிரைப்புறத்து ஒடுங்கிய இருக்கைப் பகுதியும், நிரைமீட்டற்கு எழுந்தோர் தமது நிரைப்புறத்துச் சென்று விரைவொழிந்து இருக்கின்ற இருக்கையும்;

உதாரணம்:--

இது கண்டோர் கூற்று.

------------------
(பாடம்) *'மடிசுரப்பத்' † 'வந்தூதிய குறளை'
‡ 'விரித்தவியும்' §'எரித்தவியும்'

இது மறவர் கூற்று.

முற்றிய ஊர்கொலை- நிரைகோடற்கு எழுந்தோர் அவர் புறஞ்சேரியை வளைத்துக்கொண்டு ஆண்டுயின்ற நிரைகாவலரைக் கொன்று பகையறுத்தலும் நிரைமீட்டற்கு எழுந்தோர் அவ்வூரை விட்டுச் சிற்றூரைக் காத்துக்கோறலும்;

உதாரணம்:--

இவை கண்டோர் கூற்று.

ஆகோள்- நிரைகோடற்கு எழுந்தோர் எதிர்விலக்குவோர் இலராக‡ நிரையகப்படுத்தி மீட்டலும், நிரை மீட்டற்கு எழுந்தோர் தமது நிரையை அற்றமின்றி மீட்டலும்;

உதாரணம்:--

இவை கண்டோர் கூற்று.


தொடலைக் கரந்தையெனக் கரந்தை சூடினமை கூறினார், தன்னுறுதொழிலான் நிரைமீட்டலின்; இது @பொதுவியற் கரந்தையிற் கூறுதும்.

பூசன் மாற்று - நிரை கொண்டுபோகின்றார் தம்பின்னே உளைத்தற்குரலோடு தொடர்ந்து சென்று ஆற்றிடைப் போர் செய்தோரை மீண்டு பூசலைமாற்றுதலும், நிரையை மீட்டுக் கொண்டு போகின்றோர் தம் பின்னர்வந்து போர்செய்தோரை மீண்டு நின்று பூசலை மாற்றுதலும்;

உதாரணம்:-

இவை கண்டோர் கூற்று.

வெட்சிமறவர் வீழ்ந்தமை கேட்டு விடாது பின்வந்தோன்பாடு கூறினமையிற் பூசன்மாற்றாயிற்று.

நோய் இன்று உய்த்தல்- நிரை கொண்டோர் அங்ஙனம் நின்று நின்று சிலர் பூசன்மாற்றத் தாங்கொண்ட நிரையினை இன்புறுத்திக் கொண்டுபோதலும், மீட்டோரும் அங்ஙனம் நின்று நின்று சிலர் பூசன்மாற்றத் தாம் மீட்ட நிரையினை இன்
புறுத்திக்கொண்டு போதலும்;

உதாரணம்:-

-----------
@'அனைக்குரி மரபினது கரந்தை யன்றியும்' என்புழிக் காண்க.
(தொல்-பொ-புறத்-5.)
(பாடம்) #'இரவு' $'மாக்கடை நெருப்பு.'

இவை கண்டோர்கூற்று.

நுவலுழித் தோற்றம் - பாடிவீட்டுள்ளோர் மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரைகொண்டோர் வரவும், ஊரிலுள்ளோர் கண்டு மகிழ்ந்துரைத்தற்குக் காரணமான நிரைமீட்டோர் வரவும்;

உதாரணம்:-

இவை கண்டோர் கூற்று.

தந்து நிறை - நிரைகொண்டோர் தாங்கொண்ட நிரையைத்தம் மூர்ப்புறத்துத் தந்துநிறுத்தலும், நிரைமீட்டோர் தாம் மீட்ட நிரையினைத் தந்துநிறுத்தலும்;

உதாரணம்:-

இவை கண்டோர் கூற்று.


பாதீடு - ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலிற் பாதீடாயிற்று: வேந்தனேவலாற் றாங்கொண்ட நிரையைப் பகுத்துக்கோடலும், மீட்டோருந் தத்தநிரையைப் பகுத்துக்கோடலும் நிரையை இழந்தோர்க்குப் பகுத்துக்
கொடுத்தலும்;

உதாரணம்:-

உதாரணம்:-

இவற்றுண் முன்னையது கண்டோர் கூற்று; ஏனையது மற‌வர் கூற்று.

உண்டாட்டு - நிரைகொண்டார் தாங்கொண்ட நிரையைப் பாத்துத் தாங்கொண்ட மகிழ்ச்சியாற் சுற்றத்தொடு கள்ளுண்டு மகிழ்ந்து விளையாடுதலும், நிரைமீட்டார் வென்று நிரைமீட்ட கொற்றத்தான் உண்டாடுதலும்;

உதாரணம்:-

இது புறம்.

----------
(பாடம்) #'பகர்ந்திடல்.'

இவை கண்டோர் கூற்று.

கொடை-தாங்கொண்ட நிரையை இரவலர்க்கு வரையாது கொடுத்து மனமகிழ்தலும், நிரைமீட்டோர்க்கு வென்றிப் பொருட்டு விளைந்த கொடைப்பகுதியும்;

உதாரணம்:-

இவை கண்டோர் கூற்று.

என ஈரேழ் வந்த வகையிற்றாகும்-என்று கூறப்பட்ட பதினான்கும் மீட்டுமொருகால் விதந்த* இருகூற்றையுடைத்தாகும் வெட்சித்திணை என்றவாறு.

எனவே ஒன்று இரண்டாய் இருபத்தெட்டாயிற்று.

இனித் துறையென முற்கூறினமையின், இது காரியமாக இதற்குக் காரணமாயினவெல்லாம் படையியங்கரவமெனவேபடும்; அவை இருபெருவேந்தரும் போர்தொடங்குங்காற் பூக்கோ ளேவி நிரைகோடல் குறித்தோன் படைத்தலைவரைத் தருக வென்றலும், அவர் வருதலும், அவர் வந்துழி இன்னது செய்க வென்றலும், அவர் வேந்தர்க்கு உரைத்தலும், அவர் படையைக் கூஉய் அறிவித்தலும், படைச்செருக்கும், அதனைக் கண்டோர் கூறலும், அவர் பகைப்புலக் கேட்டிற்கு இரங்கி வருந்தலும், நாட்கோடலும், அவர் கொற்றவைக்குப் பரவுக்கடன் பூண்டலும், பிறவுமாம். களவிற் செல்வோர்க்கும் அரவங் கூறினார், அவர் பாக்கத்தே தங்கி விரிச்சிபெற்றுப் போதலின்.


அவற்றுட் சில வருமாறு:-

இது படைத்தலைவர் படையாளரைக் கூயினது.

இது படைச்செருக்கு; கண்டோர் கூறியது.

இது தெய்வத்திற்குப் பராஅயாது; பிறவும் வருவனவெல்லாம் இதனான் அடக்குக.

இனிப் பாக்கத்து விரிச்சிக்குக் காரணங்களாவன, பாக்கத்துக் சென்றுழி இருப்புவகுத்தலும், பண்டத்தொடு வல்சி ஏற்றிச் சென்றோரை விடுத்தலும், விரிச்சி வேண்டாவென விலக்கிய வீரக்குறிப்பும் விரிச்சிக்கு வேண்டும் நெல்லும் மலரும் முதலியன தருதலும், பிற நிமித்தப் பகுதிகளும், அவை அறிந்தோர்க்குச் சிறப்புச் செய்தலும், பிறவுமாம்.

உதாரணம்:-

----------
(பாடம்) * ‘செங்கோல்.’

இது விரிச்சி விலக்கிய வீரக்குறிப்பு; பிறவும் வந்துழிக் காண்க.

அரசன் ஏவலாற் போந்தோரும் விரிச்சி கேட்டார், இன்ன ஞான்று வினைவாய்க்குமென்று அறிதற்கு.

இனி வேய்க்குக் காரணங்களாவன; வேய்கூறினார்க்குச் சிறப்புச் செய்தல் போல்வன.

உதாரணம் :-

என வரும்.

இனி ஏனைய ஒன்று பலவாய்த் துறைப்பாற் படுவன + வந்துழிக் காண்க.

இங்கனம் புறத்திணைக்குச் சிறுவரவிற்றாதலின் அன்றே 'பாடல் சான்ற புலனெறி வழக்க.' மென்று (தொல்-பொ-அகத்- 53) அகத்திற்குக் கூறியது. நிரைமீட்குங்கால் அறிந்தார் அறிந்தவாற்றானே விரைந்து சென்று மீட்பாராதலின் அரசனை உணர்த்தாதே மீட்டல் பெறுதும்: இவற்றிற்குந் துறைப்பகுதி கொள்க. (3)
------------

59.

இவையும் வெட்சித்திணையா மென்கின்றது.

(இ - ள்.) மறங்கடைக் கூட்டிய துடிநிலையும்; போர்க்களத்து மறவ‌ரது மறத்தினைக் கடைக்கூட்டிய துடிநிலையும்;சிறந்த கொற்றவை நிலையும்-அத்தொழிற்குச் சிறந்த கொற்றவைக்குப் பரவுக்கடன் கொடுக்குங்கால் அவளது நிலைமை கூறுதலும்; அகத்திணைப்புறனே-அவ்விருவகை வெட்சிக்கும் புறனடையாம் என்றவாறு.

--------
(பாடம்) * 'நின்றொற்றி னல்வேய்.' + 'படுமாறு.'
இஃது இருவகை வெட்சிக்கும் பொது; நிரைகொண்டோர்க்கும் மீட்டோர்க்குந் துடிகொட்டிச் சேறலொத்தலின்.

இதனானே வருகின்ற வஞ்சித்திணைக்குங் கொற்றவை நிலை காரணமாயிற்று; தோற்றோர்க்குக் கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும்++ மேற்செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழுபடுவராதலின்.

இனிக் கொற்றவைநிலைப் பகுதியுட் சில வருமாறு :-

இஃது உயிர்ப்பலி. இது பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது.

இது குருதிப்பலி: பொதுவகையான் இருவகை வெட்சிக்கும் வஞ்சிக்கும் பொது. (4)
-----------------
(பாடம்) * 'அருமை தலைத்தரு.' + 'எருமைத் தலைக்கோள்.'
++ 'வேண்டாதார்க்கும்.' $ 'மிச்சிலைகூர்.' @ 'ஆடினிப்பாடி.'

----------

60.

இது முன் இருபெருவேந்தர்க்கும் போர்செயத் தொடங்குதற்குரிய பொதுநிலைமை கூறிய அதிகாரத்தானே புறத்திணைக் கெல்லாம் பொதுவாகிய வழுவேழும் உணர்த்துத னுதலிற்று; இவை வேத்தியலின் வழீஇத் தன்னுறு தொழிலாய் வருதலின் வழுவாயின. இவை அகத்திற்கும் பறுத்திற்கும் உரியவாய் வருவனவும் புறத்திற்கெல்லாம் பொதுவாய் வருவனவுமாதலிற் பொதுவியலுமாயின.

(இ - ள்.) வெறி அறி சிறப்பின் - தெய்வத்திற்குச் செய்யுங் கடன்களை அறியுஞ் சிறப்பினையும்; வெவ்வாய் வேலன் - உயிர்க்கொலை கூறலின் வெவ்வாயினையும் உடையானாகிய வேலன்; வெறியாட்டு அயர்ந்த காந்தளும் - தெய்வ மேறியாடுதலைச் செய்த காந்தளும்;

செவ்வேள்வேலைத் தான் ஏந்திநிற்றலின் வேலனென்றார். காந்தள் சூடி ஆடுதலிற் காந்தளென்றார் வேலனைக் கூறினமையிற் கணிகாரிகையுங்+ கொள்க. காந்தளையுடையமையானும்++ பனந்தோடுடைமையானும்$ மகளிரை வருத்துதலானும் வேலன் வெறியாட்டயர்ந்த என்றதனானும் வேலன் ஆடுதலே பெரும்பான்மை. ஒழிந்தோர் ஆடுதல் சிறுபான்மை யென்றுணர்க.


உதரணம்:-

இது சிறப்பறியா மகளிராடுதலிற் புறனாயிற்று. வேலனாடுதல் அகத்திணைக்குச் சிறந்தது.

உதாரணம்:-

இவற்றுட் சேயோன் கருப்பொருளாக மைவரை யுலகத்துக் கூதிர்யாமம் பொழுதாகச் சிறப்பறியும் வேலன் ஆடுதலின் வெறியாடிய காந்தள் அகத்திற்கு வந்தது, இது வேத்தியற் கூத்தன்றிக் கருங்கூத்தாதலின் வழுவுமாய் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாதலிற் பொதுவியலுமாயிற்று. "வேலன்றைஇய வெறியயர் களனும்" (பத்து-திருமுரு-222.) என்றாற் போலச் சிறப்பறியும் வேலன் தானே ஆடுதலுஞ் சிறுபான்மை புறத்திற்குங் கொள்க.

---------
(பாடம்) *'காரிகை யார்க்காடும்.' +'உலைந்தமை.'

மா வரும் புகழ் ஏந்தும் பெருந் தானையர்- மா முதலியனவற்றால் தமக்கு வரும் புகழைத் தாங்கும் மூவேந்தருடைய பெரும்படையாளர்; உறு பகை வேந்திடை தெரிதல் வேண்டிப் போந்தை வேம்பே ஆர் என மலைந்த பூவும்- அப்புகழ்தான் உறும்பகையிடத்து இன்ன வேந்தன் படையாளர் வென்றார் என்பதற்கு ஓர் அறிகுறி வேண்டிப் போந்தை வேம்பு ஆரென்று கூறிச் சூடின பூவும்;

இதன் கருத்து: ஏழகத்தகரும் யானையும் கோழியும்* பூழும் வட்டும் வல்லுஞ் சொல்லும் முதலியவாற்றால் தமக்குவரும் புகழைத் தாம் எய்துதற்குத் தத்தம் வேந்தர் அறியாமற் படைத்தலைவர் தம்முண் மாறாய் வென்று ஆடுங்கால் இன்ன அரசன் படையாளர் வென்றாரென்றற்கு அவரவர் பூச்சூடி ஆடுவர் என்பதூஉம், அக்கூத்தும் வேத்தியற்கூத்தின் வழீஇயின கருங்கூத் தென்பதூஉம், அது தன்னுறு தொழிலென்பதூஉம் உணர்த்ததியதாம். இதனை இங்ஙனந் தன்னுறுதொழிலாக்காமல் வேந்துறு தொழிலாக்கின் அது தும்பையாம். புகழ்ந்து கூறிற்றெனிற் பாடாண்டிணையாம். ஆசிரியர் வெறிக்கூத்திற்கும் வள்ளிக்கூத்திற்கும் இடையே இதனை வைத்தார் இக்கருத்தானே யென்றுணர்க.

உதாரணம்:--

இது போந்தை மலைந்தாடியது.

இது வேம்பு மலைந்தாடியது.

-------------
(பாடம்) *'யானையும் நாயுங் கோழியும்' முன் அச்சுப்பிரதியில் உள்ளது.

இஃது ஆர்மலைந்தாடியது.

இவை தன்னுறு தொழிலாயவாறு காண்க.

வாடாவள்ளி- வாடுங் கொடியல்லாத வள்ளிக்கூத்தும்;

அஃது† இழிந்தோர் காணுங் கூத்து.

உதாரணம்:--

இது பெண்பாற்குப் பெருவரவிற்று. இதனைப் பிற்கூறினார், வெறியறி சிறப்பன்மையானும் ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாவதல்லது அகத்திணைக்கண் வந்து பொதுவாகாமையும்பற்றி.

வயவர் ஏத்திய ஓடாக் கழனிலை உளப்பட -முன்பு கழல்கால் யாத்தர வீரர் மழலைப்‡ பருவத்தானொருவன் களத்திடை ஓடாது நின்றமைகண்டு அவனைப்புகழ்ந்து அவற்குக் கட்டிய கழனிலைக் கூத்து;

ஓடாமையாற் கட்டின கழல், ஏத்திய நிலையாற் கட்டின கழல். இது வள்ளிப்பின் வைத்தலின் இருபாலாரும் ஆடுதல் கொள்க. கொடி முதலியன அவனை வியந்து கொடுத்தல் அத்துறைப் பகுதியாம்.

உதாரணம்:--

ஓடா உடல் வேந்து அடுக்கிய உன்னநிலையும்- பிறக்கடியிடா உடன்ற வேந்தனை உன்னமரத்துடன் அடுக்கிக் கூறப்பட்ட உன்னநிலையும்;


என்றது, வேந்தன் கருத்தானன்றி அவன் மறவன் வேந்தற்கு நீ வெற்றிகொடுத்தால் யான் நினக்கு இன்னது செய்வலெனப் பரவுதலும், எம்வேந்தற்கு ஆக்கம் உளதெனின் அக்கோடு பொதுளுக எனவும் பகைவேந்தற்குக்கேடு உளதெனில் அக்கோடு படுவதாக எனவும் நிமித்தங்கோடலும் என விரு வகைத் தெய்வத்தன்மையும்; அஃதுடைமையான்* அடுக்கிய உன்ன நிலையுமென்றார்.

உதாரணம்:--

இதனுள்,

என்றது, வேந்தனைப் பரவுக்கடனாக அடுக்கிய உன்னநிலை.

இவை மறவர் செய்தலிற் றன்னுறு தொழிலாம்.

என்பதும் அது.

இரண்டு நிலையாற் பொதுவுமாயிற்று மன்னவன் வெற்றியே கருதாது இங்ஙனம் இருநிலைமையுங் கருதலின் வழுவுமாயிற்று.

மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவைநிலையும் என்றது: மாயோன் விழுப்புகழ்- மாயனுடைய காத்தற் புகழையும்; மேய பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்- ஏனோர்க்கு உரியவாய் மேவிய பெரிய தலைமையிற் கெடாத படைத்தல் அழித்த லென்னும் புகழ்களையும்; மன்பூவைநிலையும் - மன்னர் தொழிலுக்கு உவமையாகக் கூறும் பூவைநிலையும்;என்றது ஒன்றனை ஒன்றுபோற்கூறுந் துறை. மன் எனப் பொதுப்படக் கூறியவதனான் நெடுநிலமன்னர்க்குங் குறுநில மன்னர் முதலியோர்க்குங் கொள்க. பெருஞ்சிறப்பு என்றதனால் படைத்தலுங் காத்தலும் அழித்தலுமன்றி அவரவர் தாமாகக் கூறலும், முருகன் இந்திரன் முதலியோராகக் கூறலுங் கொள்க.

உதாரணம்:--

என இதனுள் *அங்ஙனம் உவமித்தவாறு காண்க.

இது சோழனை மாயோனாகக் கூறிற்று.

இது சேரனை அரனாகக் கூறிற்று.

---------------
(பாடம்) *'என்பதன்கண்'

இது சேரனைப் பலதேவராகக் கூறிற்று.

அவை என்பனவும்.

இஃது உரிப்பொருட் டலைவனை முருகனாகக் கூறியது. இங்ஙனம் புறத்தும் அகத்தும் வருதலிற் பொதுவாயிற்று. இறப்ப உயர்ந்த தேவரை மக்கட்கு உவமையாகக் கூறலின்
வழுவுமாயிற்று.

தாவா என்றதனானே அரசர்புகழைக் காட்டுவாழ்வோர்க்குக் கூறுதலும், அவரை அரசர் பெயராற் கூறுதலுங் கொள்க.

இது முடியுங் குடையும் ஒழித்து அரசர்க்குரியன கூறி இழித்துக்கூறியும் புகழ்மிகுத்தது.

"பல்லிதழ் மென்மலர்" என்னும் (109) அகப்பாட்டினுள் "அறனில்வேந்த னாளும்- வறனுறு குன்றம் பலவிலங் கினவே" எனக் காட்டுத் தலைவனை நாட்டுத் தலைவன் பெயராற் கூறினார்.

ஆர் அமர் ஓட்டலும்- குறுநில மன்னருங் காட்டகத்து வாழும் மறவரும் போர்த்தொழில் வேந்தரைப் பொருது புறங் காண்டலும்;


உதாரணம்:--

இது சீறூர்மன்னன் வேந்தனைப்புறங்கண்டது.

இது மறவன் ஆரமரோட்டல் கூறியது.

இவை தன்னுறுதொழில் கூறியன.

இவை புறம்.

ஆரமரோட்ட லென்பது பொதுப்படக் கூறவே, வேந்தர்க்கு உதவியாகச் செல்வோரையுங் கொள்க.


உதாரணம்:--

இது புறம். வேந்தர்க்குத் துணையாகச் ##செல்வோரைக் கூறியது.

எனக் கலி அகத்தும் வந்தது.

"வயங்குமணி பொருத" என்னும் (167) அகப்பாட்டினுள்,

எனச் சாத்தெறிதலும் அது. இங்ஙனம் பொதுவாதலிற் ++பொதுவியலாயிற்று. வேந்தரோடு பொருதலின் வழுவுமா யிற்று.

ஆ பெய‌ர்த்துத் தருதலும் - வெட்சிமறவ‌ர் கொண்ட நிரையைக் குறுநிலமன்னராயினுங் காட்டகத்து வாழும் மறவராயினும் மீட்டுத்தருதலும்;

உதாரணம்:-

---------
(பாடம்) # 'வேட்டுவர்.' +'பகுவாய்.' &'காய.' $'வன்காழ்ப் பந்தர்'
@'உவந்துழி யுவக்கும்.' ##'செல்வனென்றது.' $$'முனைப்படை.'
&&'கனைத்தொடை.' ++'பொதுவிதி.'

இது குருநில மன்னர் நிரைமீட்டல் கண்டோர் கூறியது.

இதனுட் டன்னூரென்றலிற் குறுநிலமன்னன் நிரைமீட்டுப்பட்ட நிலையைப் பாணர் கையற்றுக் கூறியது.

ஏனைய வந்துழிக் காண்க.

இனிக் கண்டோரும் மறவருங் கூத்தரும் பாணரும் விறலியருங் கூறினும், அவர்தாங் கையற்றுக் கூறினும், அத்துறைப்பாற் படும்.

உதாரணம்:-

இது கண்டோர் கையற்றுக் கூறியது. ஏனைய வந்துழிக் காண்க.

"விசும்புற நிவந்த"$ என்னும் (131) அகப்பாட்டும் அது.

இதனுள் "மறவ‌ர் நாளா வுய்த்த என வேந்துறு தொழில் அல்லாத வெட்சித்திணையும் பொதுவியற் கரந்தைக் கண்ணே கொள்க; இஃது ஏழற்கும் பொதுவாகலின்.

தருதலென்ற மிகையானே நிரையல்லாத கோடலும் அத் துறைப்பாற்படும். "வலஞ்சுரி மராஅத்து" (அகம்-83) என்னுங் களிற்றியானை நிரையுள்,

என யானைக்கன்றைக் கவர்ந்தவாறு காண்க.

இதுவும் வேத்தியலின் வழீஇயினவாறு காண்க.

வேந்தன் சீர் சால் சிறப்பு எடுத்து உரைத்தலும்- வேந்தற்கு உரிய புகழ் அமைந்த தலைமைகளை ஒருவற்கு உரிய‌வாக அவன்றன் படையாளரும் பிறரும் கூறலும்;

இதுவும் வழு; வேந்தர்க் குரிய புகழைப் பிறர்க்குக் கூறின‌மையின்.

-------------
(பாடம்) #'பல்லானின‌ நிரை.' $'நிமிர்ந்த.'

இது புறம். படையாளர் கூற்று.

இதற்கு முடியுடைவேந்தன் சிறப்பெடுத் துரைத்தலென்று கூறின், அது பொதுவியலிற் கூறலாகா தென்றுணர்க.

தலைத்தாள் நெடுமொழி தன்னொடுபுணர்த்தலும் - தன்னிடத்துள தாகிய போர்த்தொழிலின் முயற்சியாலே வஞ்சினங்களைத் தன்னொடு கூட்டிக் கூறலும்;

உதாரணம்:-

என வரும்.

மடல்வன் போந்தைபோல் நிற்பலென நெடுமொழி தன்னொடு புணர்த்தவாறு காண்க. சீறூர் புரவாகக் கொள்ளேன்; தண்ணடை கொள்வேனெனத் தன்னுறுதொழில் கூறினான்.

இதுவும் பொது; புறம்.

வருதார் தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தலென்று இருவகைப் பட்ட பிள்ளை நிலையும் - தன்மேல் வருங் கொடிப்படையினைத் தானே தாங்குதல், வாட்டொழிற்## பொய்த்தலின்றி மாற்றாரைக்கொன்று தானும் வீழ்தலென இரண்டு கூறுபட்ட‌ போரிற் சென்றறியாத மறமக்கள் தாமே செய்யுந் தறுகணாண்மையும்;

வேந்தன் குடிப்பிறந்தோரும் அவன் படைத்தலைவருமாகிய இளையர் செய்யினும் தன்னுறு தொழிலாதலிற் கரந்தையாம்; தும்பையாகாதென்று உணர்க.

உதாரணம்:-

இது வருதார் தாங்கல்.

இது வாள் வாய்த்துக் கவிழ்தல்.

"கெடுக சிந்தை கடிதிவ டுணிவே" என்னும் (279) புறப் பாட்டும் இதன்பாற் படும்.

இவை தன்னுறுதொழில். போரிற் சென்றறியாதவன் சேறலின் வழு.

வாண்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்து பறை தூங்க நாடவற்கு அருளிய பிள்ளையாட்டும்-வாளாற் பொருது உயர்ந்த அரசிளங்குமரனை அந் நாட்டிலுள்ளார் கொண்டுவந்து பறை தூங்கிசையாக ஒலிக்கும்படி அவற்கு அரசுகொடுத்த பிள்ளைப் பருவத்தோனைக் கொண்டாடிய ஆட்டும்;

இதுவும் நாட்டிலுள்ளார் கொடுத்தலிற் றன்னுறு தொழிலாய் வழுவுமாயிற்று.

உதாரணம்:-

என வரும்.

இதனைப் பிள்ளைத்தன்மையினின்று பெயர்த்தலிற் பிள்ளைப் பெயர்ச்சியு* மென்ப.

அனைக்குரி மரபிற் கரந்தையும்- ஆரம ரோட்டல் முதலிய ஏழு துறைக்கும் உரிய மரபினையுடைய கரந்தையும்; கரந்தையாவது தன்னுறுதொழிலாக நிரைமீட்டோர் பூச்சூடுதலிற் பெற்ற பெயராதலின் வெட்சித்திணைபோல ஒழுக்கமன்று.

"அந்தோவெந்தை" என்னும் (261) புறப்பாட்டினுள்,

என்றவாறு காண்க.

அது அன்றி - அக் கரந்தையே அன்றி;

காட்சி- கல்கெழு சுரத்திற் சென்று கற்காண்டலும், அது கொணர்ந்து செய்வன செய்து நாட்டிப், பின்னர்க் கற்காண்டலும் என இருவகையாம்;

உதாரணம்:-

இது கல் ஆராய்கின்றார் காட்சி.

இது கோவலர் படலைசூட்ட என்றலிற் கடவுளாகியபின் கண்டது.

---------
*'பிள்ளைப் பெயர்ச்சி:- போர்தாங்கிப் புள்விலங்கியோனைத்- தார் வேந்தன் றலையளித்தன்று" என்பது புற-வெ-மாலை-கரந்தை-12.
(பாடம்) †'போந்தையந்தார்'

என்பதும் அது.

கால்கோள்- கல்லுறுத்து இயற்றுதற்குக் கால்கோடலும், நாட்டிய பின்னர் அவன் ஆண்டுவருவதற்குக் கால்கோடலும் என இரு வகையாம்;

உதாரணம்:-

இது வரையறை செய்யிய வம்மோ என ஒருவனைத் தெய்வமாக நிறுத்துதற்கு இடங் கொள்ளப்பட்டமையானும், அவ்விடத்துக் கால் கோடலானுங் கால்கோள்.

இது நட்டுக் கால்கொண்டது.

இதன் கண்ணும் அது வந்தவாறு காண்க

நீர்ப்படை- கண்டு கால்கொண்ட கல்லினை நீர்ப்படுத்துத் தூய்மை செய்தலும், பின்னர்ப் பெயரும் பீடும் எழுதி நாட்டிய வழி நீராட்டுதலுமென இருவகையாம்;

உதாரணம்:-

-----------
(பாடம்) *'வரக்கடவா.' †'நன்ன ராட்டி.' ‡'நின்னறைக் கொளீஇ.'

இது நீர்ப்படை.

இது நாட்டி நீராட்டியது.

நடுதல் - கல்லினை நடுதலும், அக் கல்லின்கண் மறவனை நடுதலு மென இருவகையாம்;

உதாரணம்:-

இது கல் நாட்டியது.

இது மறவனை நாட்டியது.

சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை - அவன் செய்த புகழைத் தகும்ப‌டி பொறித்தலும், அக்கல்லைத் தெய்வமாக்கி அதற்குப் பெருஞ் சிறப்புக்களைப் படைத்தலுமென இருவகையாம்;

உதாரணம்:-

இது பெயர் முதலியன பொறித்தது.

இஃது அதற்குச் சிறப்புப் படைத்தது.

---------
(பாடம்) #'பெயர் பொறிப்ப’ $'கோட்டம்.'

வாழ்த்தல்- கால் கொள்ளுங்கால் தெய்வத்திற்குச் சிறப்புச்செய்து வாழ்த்தலும், பின்னர் நடப்பட்ட கல்லினைத் தெய்வமாக்கி வாழ்த்தலுமென இருவகையாம்.

உதாரணம்:-

இது கல்வாழ்த்து.

"பெருங்களிற்றடியில்" என்னும் (263) புறப்பாட்டில் 'தொழாதனை கழிதலோம்புமதி' என வாழ்த்தியவாறு காண்க.*

என்று இரு மூன்றுவகையிற் கல்லொடு புணர- என்று முன்னர்க் கூறப்பட்ட அறுவகை இலக்கணத்தையுடைய கல்லொடு பின்னரும் அறுவகை இலக்கணத்தையுடைய கற் கூடச்; சொல்லப்பட்ட- இக்கூறப்பட்ட பொதுவியல்; எழு மூன்று† துறைத்து- இருபத்தொரு துறையினையுடைத்து என்றவாறு.

ஆரமரோட்டன் முதலிய எழுதுறைக்குரிய மரபினையுடைய கரந்தையும், அக் கரந்தையே யன்றி முற்கூறிய கல்லோடே பிற் கூறிய கல்லுங்கூடக், காந்தளும் பூவும் வள்ளியுங் கழனிலையும் உன்னநிலையும் பூவைநிலையும் உளப்பட இச்சொல்லப்பட்ட பொதுவியல் இருபத்தொரு துறையினை யுடைத்தெனக் கூட்டுக. மாயோனிறம்போலும் பூவைப் பூ நிறமென்று பொருவுதல் பூவைநிலையென்றால், ஏனையோர் நிறத்தொடு பொருந்தும் பூக்களையும் பொருவுதல் கூறல்வேண்டும்; ஆசிரியர் அவை கூறாமையின், அது புலனெறிவழக்க மன்மை யுணர்க. இதனுட் கரந்தைப்பகுதி ஏழும் வேறு கூறினார்; காட்டகத்து மறவர்க்குங் குறுநிலமன்னர்க்கும் அரசன் படையாளர் தாமே செய்தற்கும் உரிமையின். கற்பகுதி வேத்தியற் புறத்திணைக்கும் பொதுவாகலின் வேறுகூறினார். ஏனைய அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகலின் வேறுகூறினார்.

இனித் துறையென்றதனால் ஒன்று பலவாம். அவை, கற் காணச்சேறலும்,‡ இடைப்புலத்துச் சொல்லுவனவுங், கண்டுழியிரங்குவனவுங், கையறுநிலையும், பாணர் கூத*தர் முதலியோர்க் குரைப்பனவும், அவர் தமக்குரைப்பனவும் போல்வன கற்காண்டலின் பகுதியாய் அடங்கும்; கால் கொள்ளுங்காலத்து, மாலையும் மலரும் மதுவுஞ் சாந்தும் முதலியன கொடுத்தலும் அனையோற்கு இனைய கல் தகுமென்றலுந், தமர்பரி்ந்திரங்கலும் முதலியன கால்கோளின் பகுதியாய் அடங்கும்;

நீர்ப்படுக்குங்கால் ஈர்த்துக்கொண்டொழுக்கலும், ஏற்றிய சகடத்தினின்று இழிந்த வழி ஆர்த்தலும், அவர் தாயங்கூறலும் முதலியன நீர்ப்படையாய் அடங்கும்; நடுதற்கண், மடையும் மலரும் மதுவும் முதலியன கொடுத்துப் பீலித்தொடையலும் மாலையும் *காற்றிப் பல்லியம் இயம்ப விழவுச் செய்யுஞ் சிறப்பெல்லாம் நடுதலாய் அடங்கும்; பெயரும் பீடும் எழுதுங்காலும் இப் பகுதிகள் கொள்க; நாட்டப்படுங் கல்லிற்குக் கோயிலும் மதிலும் வாயிலும் ஏனைச் சிறப்புக்களும் படைத்தல் பெரும்படைப்பகுதியாய் அடங்கும்; வாழ்த்தற்கண்ணும் இதுதான் நெடிதுவாழ்கவெனவும் இதன் கண்ணே அவனின்று நிலாவுக வெனவும் பிறவுங் கூறுவனவு மெல்லாம் வாழ்த்துதலாய் அடங்கும்; ஏனையவற்றிற்கும் இவ்வாறே துறைப்பகுதி கூறிக்கொள்க.

இனிப் "பரலுடைமருங்கிற் பதுக்கை" என்னும் (264) புறப்பாட்டினுள் "அணிமயிற் பீலிசூட்டிப் பெயர் பொறித்- தினி நட்டனரே கல்லும்" எனக் கன்னாட்டுதல் பெரும்படைக்குப் பின்னாகக் கூறிற்றாலெனின், நீர்ப்படுத்த பின்னர்க் கற்படுத்துப் பெயர் பொறித்து நாட்டுதல் காட்டு நாட்டோர் முறைமை யென்பது சீர்த்தகு சிறப்பின் என்பதனாற் கொள்க. "பெயரும் பீடு மெழுதி யதர்தொறும் -பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல்" என அகத்திற்கும் (அகம்-131) வருதலிற் பொதுவியலாயிற்று; இவை ஒரு செய்யுட்கண் ஒன்றும் பலவும் வருதலும், அகத்தின் கண் வருதலுஞ் சுட்டி யொருவர் பெயர் கோடலுங், கொள்ளாமையும் உடையவென்று உணர்க.

இப்பொதுவியலின்பின் வஞ்சி வைத்தார், வஞ்சிக்கண்ணும் பொதுவியல் வருவனவுள என்றற்கு அது "வேந்து வினை முடித்தனன்" என்னும் (104) அகப்பாட்டினுட் சுட்டி
யொருவர் பெயர் கூறா வஞ்சி பொதுவியலாய் வந்தவாறு காண்க. (5)

------------

61.

இது, தம்முண் மாறுபாடு கருதி வெட்சித்திணையை நிகழ்த்திய இருபெரு வேந்தருள் தோற்றோ னொருவன் ஒருவன்மேற்செல்லும் வஞ்சித்திணை அகத்திணையுள் இன்னதற்குப் புறனாமென்கின்றது. வஞ்சியென்றது ஒருவர்மே லொருவர் சேறலை.
அதற்கு வஞ்சி சூடிச் சேறலும் உலகியல்.

(இ-ள்.) வஞ்சி தானே-வஞ்சியெனப்பட்ட புறத்திணை; முல்லையது புறனே-முல்லை யெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு.

ஏனை உழிஞை முதலியவற்றினின்று பிரித்தலின் ஏகாரம் பிரிநிலை. பாடாண்டிணைக்குப் பிரிதலின்மையிற் 'பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே' (தொ-பொ-புற-24) என்ப. ஏனைய பிரித்துக் கூறுவர். முதலெனப்பட்ட காடுறையுலகமுங், கார் காலமும், அந்நிலத்திற்கேற்ற கருப்பொருளும், அரசன் பாசறைக்கட் டலைவியைப் பிரிந்து இருத்தலும், அவன் தலைவி அவனைப் பிரிந்து மனைவயி னிருத்தலுமாகிய உரிப்பொருளும் ஒப்பச் சேறலின், வஞ்சி முல்லைக்குப் புறனாயிற்று. வெஞ்சுடர் வெப்பம் நீங்கத் தண்பெயல்பெய்து நீரும் நிழலும் உணவும் பிறவும் உளவாகிய காட்டகத்துக் களிறு முதலியவற்றோடு சென்றிருத்தல் வேண்டுதலின் வஞ்சிக்கும் அம் முதல் கருவுரியும் வந்தனவாம். முல்லைப்பாட்டினுட்,

என்பதனா னுணர்க. (6)
------------

62.

இது முல்லைக்குப் புறனென்றவஞ்சித்திணை இன்ன பொருட்டென்கின்றது.

(இ-ள்.) எஞ்சா மண் நசை-இருபெருவேந்தர்க்கும் இடையீடாகிய மண்ணிடத்து வேட்கையானே; அஞ்சுதகத் தலைச்சென்று-ஆண்டு வாழ்வோர்க்கு அஞ்சுதலுண்டாக அந் நாட்டிடத்தே சென்று; வேந்தனை வேந்தன் அடல் குறித்தன்று - ஒரு வேந்தனை ஒரு வேந்தன் கொற்றங்கோடல் குறித்தன் மாத்திரைத்து வஞ்சித்திணை என்றவாறு.

ஒருவன் மண்ணசையான் மேற்சென்றால் அவனும் அம் மண்ணழியாமற் காத்தற்கு எதிரே வருதலின், இருவர்க்கும் மண்ணசையான் மேற்சேறல் உளதாகலின், அவ்விருவரும் வஞ்சிவேந்த ராவரென் றுணர்க.எதிர் சேறல் காஞ்சி என்பரா
லெனின், *காஞ்சியென்பது எப்பொருட்கும் நிலையாமை கூறுதலிற் பெரிதும் ஆராய்ச்சிப்படும் பொதுவியற் பொருண்மைப் பெயராற் கூறலாகாமை யுணர்க

ஒருவன் மேற்சென்றுழி ஒருவன் எதிர்செல்லாது தன்மதிற்புறத்து வருந்துணையும் இருப்பின், அஃது உழிஞையின் அடங்கும். அது சேரமான்* செல்வுழித் தகடூரிடை அதிகமான்+ இருந்ததாம். இங்ஙனம் இருவரும் வஞ்சிவேந்தரெனவே, மேற்கூறுந் துறை பதின்மூன்றும் இருவர்க்கும் ஒப்பக் கூறலாமென்றுணர்க. (7)
-----------

63.

இது முற்கூறிய வஞ்சித்திணை பதின்மூன்று# துறைத் தென்கின்றது.

(இ-ள்.) இயங்கு படை அரவம்-இயங்குகின்ற இரு படை யெழுச்சியின் ஆர்ப்பரவமும்;

உதாரணம்:-
>br> ------------
*’இவன் தகடூ ரெறிந்த பெருஞ்சேரலிரும்பொறை’ யாவன்.
(பாடம்) + ‘அதியமான்.’ # ‘வஞ்சித்திணைத்துறை பதின் மூன்றென்கின்றது.’

"சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்" என்னும்(31) புறப்பாட்டும் அது.

இப் பதிற்றுப்பத்தும் அது.

இஃது எதிர்செல்வோன் படையரவம்.

எரிபரந்து எடுத்தல் - இருவகைப் படையாளரும் இருவகைப் பகைப்புலத்துப் பரந்து சென்று எரியை எடுத்துச் சுடுதலும்;

இவ்விரண்டற்கும் உம்மை விரிக்க.

உதாரணம்:-

எனவும்,

------------
(பாடம்) #'அலைத்தபனை.’ $'அகழிக்.' &'காரிடை.'

என்னும் (7) புறப்பாட்டினுள்,

எனவும் வரும்.

இவை கொற்றவள்ளைப் பொருண்மையவேனும் உட்பகுதி பலவுந் துறையாய் வருதலின், எரிபரந் தெடுத்தற்கும் உதாரணமாயின.

வயங்க லெய்திய பெருமையானும்- ஒருவர் ஒருவர்மேற் செல்லுங்காற் பிறவேந்தர் தத்தந் தானையோடு அவர்க்குத் துணையாயவழி அவர் விளக்கமுற்ற பெருமையும்:

உதாரணம்:-

எனவரும்

இஃது இருவருக்கும் பொது.

கொடுத்தல் எய்திய கொடைைமயானும்- மேற்செல்லும் வேந்தர் தத்தம் படையாளர்க்குப் படைக்கல முதலியன கொடுத்தலும், பரிசிலர்க்கு அளித்தலும் ஆகிய கொடுத்தலைப் பொருந்திய கொடைத்தொழிலும்;

உதாரணம்:-

எனவரும்.

-----------
(பாடம்) *'கணைபொருத கவின்வண்கையால்.'
†'என்னாய்.' ‡'இரும்புட்பூசல்.'

என்பதும் அது.

அடுத்து ஊர்ந்து அட்ட கொற்றத்தானும்- எடுத்துச் சென்ற இருபெருவேந்தர் படையாளர் வரவறியாமல் இரவும் பகலும் பலகாலும் தாம் ஏறி அந் நாட்டைக் காவல் புரிந்தோரைக்கொன்ற கொற்றமும்,

உதாரணம்:--

என வரும்.

என்னும் பதிற்றுப்பத்தும் அழிவு கூறிய இடம் அப்பாற் படும்.


மாராயம் பெற்ற நெடுமொழியானும் - வேந்தனாற் சிறப் பெய்திய அதனாற், றானேயாயினும் பிறரேயாயினுங் கூறும் மீக்கூற்றுச் சொல்லும்;

சிறப்பாவன ஏனாதி காவிதி முதலிய பட்டங்களும் நாடும் ஊரும் முதலியனவும் பெறுதலுமாம். முற்கூறியது படைவேண்டியவாறு செய்க என்றது. இஃது அப்படைக்கு ஒருவனைத் தலைவனாக்கி அவன் கூறியவே செய்க அப்படை என்று வரையறை செய்தது.

உதாரணம்:-

இது பிறர் கூறிய நெடுமொழி.

இது தண்ணடை பெறுகின்றது. சிறிது சுவர்க்கம் பெறுதல் நன்று என்று நெடுமொழி கூறியது. போர்க்களம் புக்கு நெடுமொழி கூறலும் ஈண்டு அடக்குக.+

பொருளின்று உய்த்த பேராண் பக்கமும் - பகைவேந்தரை ஒரு பொருளாக மதியாது படையினைச் செலுத்தின‌ பேராண்மை செய்யும் பகுதியும்;


உதாரணம்;-

இஃது அதிகமானாற் சிறப்பெய்திய பெரும்பாக்கனை மதியாது சேரமான் முனைப்படை நின்றானைக் கண்டு அரிசில்கிழார் கூறியது.

இதுவு மது.

வரு விசைப் புனலைக் கற்சிறை போல ஒருவன் தாங்கிய பெருமையானும்- தன்படை நிலையாற்றாது பெயர்ந்தவழிவிசையோடும் வரும் பெருநீரைக் கல்லணை தாங்கினாற்போலத் தன்மேல் வரும் படையினைத் தானே தடுத்த பெருமையும்;


உதாரணம்:--

என வரும்,

இது பொன்முடியார் ஆங்கவனைக் கண்டு கூறியது.

என்பதும் அது.

"வருகதில்வல்லே" என்னும் (287) புறப்பாட்டும் அதன் பாற்படும். முன்னர் மாராயம் பெற்றவனே பின் இரண்டு துறையும் நிகழ்த்துவான் என்றுணர்க.

பிண்டம் மேய பெருஞ்சோற்று நிலையும் - வேந்தன் போர் தலைக்கொண்ட பிற்றைஞான்று தானே போர்குறித்த படையாளருந் தானும் உடனுண்பான் போல்வதோர்$ முகமன் செய்தற்குப் பிண்டித்து வைத்த உண்டியைக்& கொடுத்தன் மேயின‌ பெருஞ்சோற்று நிலையும்;

உதாரணம் :-

------------
(பாடம்) # 'வாடி.' $ 'போல வந்தோர்.' & ஏடுகளில் 'உண்டை' என்றுள்ளது.
+ 'விலகுகதிர்.' @ 'காந்தட் கண்ணி.'


என வரும்.

இது பதிற்றுப் பத்து.

துறை யெனவே கள்ளும் பாகும் முதலியனவும் அப் பாற்படும்.

-----------
(பாடம்) # 'அரிகால் வித்தும்.' $ 'நடுங்கும்.' & 'நிரைமகிழ்.'
@ 'கோள் புணர்ந்து.' + 'தழங்குரன் முரசே.' ## 'எண் சிறுவனை.'
$$ "போர்ப்பித் திலவே,' 'போர்ப்பித் திலனே.'


என்பன கொள்க.

வென்றோர் விளக்கமும்- அங்ஙனம் பிண்டமேய இருபெரு வேந்தருள் ஒருவர் ஒருவர் மிகை கண்டு அஞ்சிக் கருமச் சூழ்ச்சியாற் றிறைகொடுப்ப அதனை வாங்கினார்க்கு உளதாகிய விளக்கத்தைக் கூறலும்;

உதாரணம்:-

என வரும்.

-------------
(பாடம்) *'செறிவளை' †'செழுஞ் செந்நெல்லின்' ‡ 'கடுந்தேற் றுறுகிளை' §'உடற்றிசி னோரே' 'கமம்புகை' $'தெறாஅர்.' **'பலிகொடு'
††'பசாசம்போல'


இதுவும் அது.

இவை பதிற்றுப்பத்து.

தோற்றோர் தேய்வும்- அங்ஙனந் திறைகொடுத்தோரது குறைபாடு கூறுதலும்;

உதாரணம்:--

என வரும்.

இது பதிற்றுப்பத்து

குன்றாச் சிறப்பிற் கொற்ற வள்;ளையும்- வேந்தனது குறையாத வெற்றிச் சிறப்பினாற் பகைவர் நாடழிதற் கிரங்கித் தோற்றோனை விளங்கக்கூறும் வள்ளைப்பாட்டும்:

வள்ளை, உரற்பாட்டு. ‡கொற்றவள்ளை தோற்ற கொற்றவன் கொடுக்குந் திறை என்று சொல்வாரும் உளர்.


உதாரணம்:--

என வரும்,.

அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ- அங்ஙனம் வென்றுந் தோற்றும் மீண்ட வேந்தர் தம்படையாளர் முன்பு போர்செய்துழிக் கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக்கொண்டழிந்தவர்களைத் தாஞ் சென்றும் பொருள் கொடுத்தும் வினாவியுந் தழுவிக்கோடலுடனே முற்கூறியவற்;றைத் தொகுத்து;

படைதட் டழிவோர் என்று மாறுக. தழிச்சுதல் தழிஞ்சியாயிற்று. ""பொருகணை தழிச்சிய புண்டீர் மார்பின்" என்றாற் போல;

உதாரணம்:--

என வரும்.

இதுவும் அது.

கழிபெருஞ் சிறப்பின் துறை பதின்மூன்றே-மிகப்பெருஞ் சிறப்பினையுடையவாகிய துறைபதின்மூன்றும் என்றவாறு.


வென்றோர் விளக்கம் முதலிய மூன்றும் ஒழிந்தனவெல்லாம் இருவர்க்கும் பொதுவாய் வருமென்பது தோன்றக் கழிபெருஞ் சிறப்பென்றார்.

இனி இயங்குபடையரவமெனவே இயங்காத வின்ஞாணொலி முதலியனவுங் கொள்க.

இத்திணைக்கும் பலபொருள் ஒருங்கு வந்து ஒரு துறைப் படுத்தலுங்கொள்க. அவை:--கொற்றவை நிலையுங், குடைநாட்கோளும், வாணாட்கோளும், படையெழுச்சி கண்டோர் கூறுவனவும், பகைப்புலத்தார் இகழ்வும், இவைபோல்வன பிறவும் இயங்குபடையரவமாய் அடங்கும்,.

நிரைகோடற்கு ஏவிய அரசருள் நிரைகொண்டோர்க்கும் நிரைகொள்ளப்பட்டோர்க்கும் விரைந்து ஏகவேண்டுதலிற் குடைநாட்கோளும் வாணாட்கோளும் இன்றியமையாதன அன்மையின் ஈண்டுக் கூறாராயினார். அவை உழிஞைக்குக் கூறுப, அதற்கு இன்றியமையாமையின்.

இனித் துணைவந்த வேந்தருந் தாமும் பொலிவெய்திய 'பாசறைநிலை'* கூறலும், அவர் வேற்றுப்புலத்திருத்தலின் ஆண்டு வாழ்வோர் பூசலிழைத்து† இரிந்தோடப் புக்கிருந்த
நல்லிசை வஞ்சி‡ முதலியனவும் 'வயங்கலெய்திய பெருமைப்' பாற்படும்.

துணைவேண்டாச் செருவின்றி நாடகவழக்கு; துணை வேண்டுதல் உலகியல்வழக்கு. நீயே புறவினல்ல லன்றியும் பிறவும்" (46) என்னும் புறப்பாட்டும் "வள்ளியோர்ப் படர்ந்து" (47) என்னும் புறப்பாட்டும் முதலியன. 'துணைவஞ்சி' என்பார்க்கு அவை மேற்செலவின்கண் அடங்காமையிற் பாடாண்டிணை யெனப்படு மென்றுரைக்க.

இனி மேற்செல்வான் மீண்டுவந்து பரிசில் தருமென்றல் வேத்திய லென்றாகலிற் பரிசிலர்க்குக் கொடுத்தலும் படைக்கல முதலியவற்றோடு கூறினார்,.


இனிக் கடிமரந்தடிதலுங், களிறும் மாவுந் துறைப்படிவனவற்றைக் கோறலும், புறஞ்சேரியைச் சுடுதலும் முதலியனவும் அடுத்தூர்ந்தட்ட கொற்றத்தின்பாற்படும். அவை *கருவூரிடைச் சேரமான் யானையை யெறிந்தாற் போல்வன.

இனிப் புண்பட்டோரை முன்னர்ச்செய்த படைவலங்கூறி அரசராயினும் உழையராயினும் புகழ்வனபோல்வனவுந் தழிஞ்சிப் பாற்படும். 'இதனை முதுமொழிவஞ்சி'† என்பர். ஆண்டுக் கொடுத்தல்‡ முற்கூறிய கொடையாம். இத்தழிஞ்சியை 'அழியுநர் புறக்கொடை அயில்வா ளோச்சாக்- கழிதறு கண்மை' (புற-வெ-மாலை-வஞ்சி-20) யெனின், அது ஒருவன் றாங்கிய பெருமைப்பாற்படு மென்றுணர்க.

இச் சூத்திரத்து ஆன் எல்லாம் இடைச்சொல். இது செவ்வெண் உம்மை எண்ணினை இடையிட்டுக்கொண்டது,.

இனி ஏனையவற்றிற்கும் ஆன் உருபுகொடுத்து அதற்கீற்பப் பொருள் கூறலும் ஒன்று. (8)

-------------

64.

இஃது உழிஞைத்திணை அகத்திணையுண் மருதத்திற்குப் புறனா மென்கின்றது.

(இ-ள்) உழிஞை தானே- உழிஞை யென்று கூறப்பட்ட புறத்திணை; மருதத்துப் புறனே- மருதமென்று கூறப்பட்ட அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு.


இருபெருவேந்தர் தம்முண் மாறுகொண்டவழி எதிர் செலற் காற்றாது போய் மதிலகத்திருந்த வேந்தன் மதில் பெரும்பான்மையும் மருதத்திடத்த தாதலானும், அம்மதிலை முற்றுவோனும் அந்நிலத்திருத்தலானும், ஒருவன் வாயில் வேண்டத் திறவாது அடைத்திருந்த ஒப்புமையானும், உள்ளிருந்தவனும் புறப்பட விரும்புதலானும், மருதம்போல் இதற்கும் பெரும்பொழுது வரைவின்மையானுஞ், சிறுபொழுதினும் விடியற்காலமே போர்செய்தற்குக் காலமாதலனும் உழிஞை மருதத்திற்குப் புறனாயிற்று மருதநிலத்து மதிலாதல் "* அகநாடு புக்கவ ரருப்பம் வௌவி" யனப் பாட்டிற் கூறியவாற்றானும், "பிணங்குகதிர்க் கழனி நாப்ப ணேமுற்- றுணங்குகலனாழியிற் றோன்று மோரெயின் மன்னன்" (புறம்-338) என்றதனானுங் "கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி யகத்தார், நிலைக் கெளிதா நீர தரண் (திருக்குறள்-அரண்-5) என்றதனானு முணர்க. மற்று எதிர்சென்றானை வஞ்சிவேந்தன் என்னு மெனின், அஃது இருவருந் தத்தம் எல்லைக்கண் எதிர்சென்றி இறுப்பரென்றலின் வஞ்சியாகாதாயிற்று. (9)

------------

65.

இது மேற்கூறிய உழிஞைத்திணையது பதுவிலக்கணம் உணர்த்துகின்றது.

(இ-ள்) முழுமுதல் அரணம்- வேற்றுவேந்தன் குலத்துக்கெல்லாம் எஞ்சாது முதலாய் வருகின்ற முழு அரணை முற்றலும் கோடலும்- சென்ற வேந்தன் வளைத்தலும் இருந்த வேந்தன் கைக்கொண்டு காத்தலுமாகிய; அனைநெறி மரபிற்று ஆகும் என்ப- இரண்டு வழியாகிய இலக்கணத்தை உடைத்து அவ் வுழிஞைத்திணை என்று கூறுவர் புலவர் என்றவாறு.

முழு அரணாவது மலையுங் காடும் நீருமல்லாத அகநாட்டுட் செய்த அருமதில்†. அது வஞ்சனைபலவும் வாய்த்துத், தோட்டி முண் முதலியன பதித்த காவற்காடுபுறஞ்சூழ்ந் ததனுள்ளே இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ்சூழ்ந்து, யவனர் இயற்றிய பல பொறிகளும் ஏனைய பொறிகளும் பதண மும் ஏப்புழை ஞாயிலும் ஏனிய பிறவும் அமைந்து, எழுவுஞ் சீப்பு முதலியவற்றால் வழுவின்றமைந்த வாயிற் கோபுரமும் பிறவெந்திரங்களும் பொருந்த இயற்றப்பட்டதாம்.

இனி மலையரணும் நிலவரணுஞ் சென்று சூழ்ந்து நேர்தலில்லா ஆரதர் அமைந்தனவும் இடத்தியற்றிய மதில்போல வடிச்சிலம்பின் அரணமைந்தனவும் மீதிருந்து கணை சொரியும் இடமும் பிறவெந்திரங்களும் அமைந்தனவும் அன்றிக் காட்டரணும் நீரரணும் அவ்வாறே வேண்டுவன அமைந்தனவாம். இங்ஙனம் அடைத்திருத்தலும் அவனைச் சூழ்ந் தழித்தலுங் கலியூழி தோறும் பிறந்த சிறப்பில்லா அரசியலாதலின் இவை வஞ்சமுடைத்தாயிற்று.


சிறப்புடை அரசியலாவன, மடிந்த உள்ளத் தோனையும் மகப்பெறாதோனையும் மயிர்குலைந்தோனையும் அடிபிறக்கிட்டோனையும் பெண்பெயரோனையும் படையிழந் தோனையும் ஒத்தபடையெடாதோனையும் பிறவும் இத்தன்மையுடையோரையுங் கொல்லாது விடுதலுங் கூறிப், பொருதலும் முதலியனவாம்

இனி ஆகுமென்றதனான் எதிர்சென்ற வேந்தன் பொருது தோற்றுச் சென்று அடைத்திருத்தலும் உழிஞையாம். மற்றை வேந்தன் வளையாது மீளின் அவனடைத்தது உழிஞையாகா தென்றுணர்க. (10)
---------------

66.

இது முற்கூறிய முற்றலுங் கோடலும் ஒருவன் தொழிலன்றென்பதூஉம் முற்கூறியபோல ஒருதுறை இருவர்க்கு முரியவாகாது, ஒருவர்க்கு நான்குநான்காக எட்டாமென்பதூஉங் கூறுகின்றது.

(இ-ள்.) அதுவே தானும்-அவ்வுழிஞைத் துறைதானும்; இருநால் வகைத்து-மதில்முற்றிய வேந்தன் கூறு நான்கும் அகத்தோன்கூறு நான்குமென எட்டு வகைத்து என்றவாறு.

அது மேற்கூறுப. (11)

----------------

67.

இது முற்கூறிய நாலிருதுறைக்கும் பெயரும் முறையுந் தொகையுங் கூறுகின்றது.

(இ-ன்.) கொள்ளார் தேஎங் குறித்த கொற்றமும்-பகைவர் நாட்டினைத் தான் கொள்வதற்கு முன்னேயுங் கொண்டடான் போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக்* குறித்த வெற்றியும்; தன்னை இகழ்ந்தோரையுந் தான் இகழ்ந்தோரையும் கொள்ளாரென்ப.

-
உதாரணம்:--
என வரும்.

"கழிந்தது பொழிந்தென" என்னும் (203) புறப்பாட்டினுள்

என்பதும் அது.

"ஆனாவீகை யடுபோர்" என்னும் (42) புறப்பாட்டும் அது.

இராமன் இலங்கை கொள்வதன்முன் வீடணற்குக் கொடுத்த துறையும் அது.

உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பும்- அவ்வாறு குறித்த குறிப்பினை முடிக்கின்ற வேந்தனது சிறப்பினை அவன் படைத்தலைவன் முதலியோரும் வேற்று வேந்தன்பால் தூது செல்வோரும் எடுத்துரைத்தலும்;

உதாரணம்:--

என வரும்.

என்பதும் அது, மாற்றார் மதிலும் அகழுஞ் சுட்டிக் கூறலின்.

----------
(பாடம்) *'போர்மண்டி மாக்களங்கொள்'


இது புறத்துழிஞையோன்கண் தூதன்* அவன்சிறப்பு எடுத்துரைத்தத.

இது தூதருரை கேட்ட அகத்துழிஞையோன் திறங் கண்டோர் கூறியது.

இவை புறம்.

தொல் எயிற்கு இவர்தலும்- ஒரு காலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப்பகலுள் அழித்துமென்று கூறி அஃது அழித்தற்கு விருப்பஞ் செய்தலும்;

உதாரணம்:-

எனவரும்.

---------------
(பாடம்) *'தூதானவன்' †'மருங்கின்' ‡'களைந்தனனே'


இப் பொன்முடியார் பாட்டும் அது.

இதனாற் பூச்சூடுதல் பெற்றாம்.

தோலின் பெருக்கமும்- அங்ஙனம் மதின்மேற் சென்றுழி மதிலகத்தோர் அப்புமாரி விலக்குதற்குக் குடுகுங் கேடகமும் மிடையக்§ கொண்டுசேறலும்;

உதாரணம்:-

என வரும்.;


இதுவும் அது.

அரணத்தோர் $தத்தம் பதணத்து நிற்றலிற் றோல் கூறிற்றிலர்.


இந்நான்கும் முற்றுவோர்க்கே உரியவெனக் கொள்க.

அகததோன் செல்வமும்-அகத்து உழிஞையோன் குறைவில்லாத பெருஞ்செல்வங் கூறுதலும்;

அவை படை குடி கூழ் அமைச்சு நட்பும் நீர்நிலையும் ஏமப்பொருண் மேம்படு பண்டங்களும் முதலியவாம்.

உதாரணம்-

என்னும் புறப்பாட்டும் அது.

அன்றி முரணிய புறத்தோன் அணங்கிய பக்கமும்-மாறுபட்ட புறத்தோனை அகத்தோன் தன் செல்வத்தான் அன்றிப் போர்த்தொழிலான் வருத்திய கூறலும்;

உதாரணம்:-

என வரும்.

இது சேரமான், பொன்முடியாரையும் அரிசில் கிழாரையும் நோக்கித் தன்படைபட்ட தன்மை கூறக் கேட்டோற்கு அவர் கூறியது.

திறப்பட ஒரு தான் மண்டிய குறுமையும் - அகத்திருந்தோன் தன்ன ரணழிவு தோன்றியவழிப் புறத்துப் போர்செய்யுஞ் சிறுமையும்;

உதாரணம்:-

என வரும்.

உடன்றோர் வருபகை பேணார் ஆர் எயில் உளப்பட - புறத்தோன் அக*த்தோன்மேல் வந்துழி அவன் பகையினைப் போற் றாது அகத்தோன் இகழ்ந்திருத்தற்கு அமைந்த மதிலரண் கூறுத லகப்பட;

உதாரணம் :-

---------
(பாடம்) # 'செறுத்தெழுந் தார்ப்ப.' $ 'ஏறுபோய்.' & 'சூட்டி.' +'பிறையாக.'
@ 'திருந்த.' ## 'தனக்கிரிந்த தானை.'

இஃது அகத்தோன் செல்வம் போற்றுதற்கு ஏதுவாகிய முழுவரண் கூறுதலிற் செல்வத்துள் அடங்காதாயிற்று.

இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது.

சொல்லப்பட்ட நாலிருவகைத்தே--மேலிருநால்வகைத்தென்று சொல்லப்பட்ட இருநான்கு பகுதியதாம் உழிஞைத்திணை என்றவாறு,.

முற்கூறிய தொகயேயன்றி ஈண்டுந் தொகைகூறினார், அந்நாலிரண்டுமேயன்றி அவைபோல்வனவும் நாலிரண்டு துறை தோன்று மென்றற்கு. அவை புறத்துவேந்தன் தன் துணையாகிய அரசனையாயினுந் தன் படைத்தலைவரையாயினும் ஏவி அகத்து வேந்தற்குத் துணையாகிய அரசரது முழுமுதலரண் முற்றலும் அவன்றா னதனைக் காவல் கோடலும் நிகழ்ந்தவிடத்தும் இவ் விருநான்கு வகையும் இருவர்க்கு முளவாதலாம்.

உதாரணம் முற்காட்டியவே வேறுவேறு காட்டினும் அமையும். இத்திணைக்குப் 'படையியங்கரவ' (புறத்திணை-8) முதலியனவும் அதிகாரத்தாற் கொள்க. அது,

எனவரும்.

*இனித் தேவர்க்குரியவாக உழிஞையிற்றுறைகள் பலருங் கூறுவராலெனின், அவை உலகியலாகிய‌ அரசியலாய் எஞ்ஞான்றும் நிகழ்வின்றி ஒருகால் ஒருவர் வேண்டியவாறு செய்வனவாகலிற் †'றமிழ் கூறு நல்லுலகத்'தன அல்லவென மறுக்க. இனி ‡முரசுழிஞை வேண்டுவா ருளரெனின் முரசவஞ்சியுங் கோடல் வேண்டுமென மறுக்க.

இனி §ஆரெயிலுழிஞை ¶முழுமுதலரணம் என்றதன்கண்அடங்கும்.

இனி இவற்றின் விகற்பிப்பன வெல்லாம் அத் துறைப்பாற்படுத்திக்கொள்க. (12)

------------

68

---------
* ஐயனாரிதனார் உழிஞைப் படலத்துக் கந்தழி, முற்றுழிஞை, காந்தள் என்பனவற்றான் மணிவண்ணன், அவிர்சடையான், மாத்தடிந்தான் இவர் செயலினைக் கூறியவாற்றான் உணர்க.
†'தமிழ்கூறு நல்லுலகத்து' என்பது பாயிரம் (பனம்பாரனார்)
‡ ஐயனாரிதனார் முரசவுழிஞை கூறினார். (புறப்பொருள்-வெ-மாலை-உழிஞை-4)
§ புறப்பொருள்-வெ-மாலை-உழிஞை-11 தொல் -பொருள்-புறத்-10.
(பாடம்) $ 'நாள்கோளன்றியும்'

இஃது எய்தாத தெய்துவித்தது; உழிஞைத்திணையுள் இருபெரு வேந்தர்க்கும் ஒன்றாய்ச் சென்று உரியவான துறை இதற்கு முன்னர்க் கூறாமையின்.

(இ-ள்.) குடையும் வாளும் நாள்கோள் அன்றி-தன் ஆக்கங்கருதிக் குடிபுறங்காத்து ஓம்பற்கெடுத்த குடை நாட்கொள்ளுதலும் அன்றிப் பிறன்கேடு கருதி வாணாட் கொள்ளுதலும் அன்றி;

புறத்தோன் புதிதாக அகத்தே புகுதற்கு நாள்கொள்ளுமென்க. தன்னாட்டினின்றும் புறப்படுதற்கு நாட்கோடல் உழிஞையெனப் படாதாகலின். அகத்தோனும் முற்று விடல் வேண்டி மற்றொரு வேந்தன் வந்துழித் தானும் புறத்துப் போதருதற்கு நாட்கொள்ளும். நாள்கொளலாவது நாளும் ஓரையுந் தனக்கேற்பக்கொண்டு செல்வுழி அக்காலத்திற்கு ஓர் இடையூறு தோன்றியவழித் தனக்கு இன்றியமையா தனவற்றை அத்திசை நோக்கி அக்காலத்தே முன்னே செல்லவிடுதல்;

உதாரணம்:-

இது புறத்தோன் குடை நாள்கோள்.

இஃது அகத்தோன் குடை நாட்கோள்.

இது புறத்தோன் வாணாட்கோள்.

இஃது அகத்தோன் வாணாட்கோள்.

மடையமை ஏணிமிசை மயக்கமும்-மீதிடு பலகையோடும் மடுத்துச் செய்யப்பட்ட ஏணிமிசைநின்று புறத்தோரும் அகத்தோரும் போர்செய்தலும்;

உதாரணம்:-

இதுபுறத்தோர் ஏணிமயக்கம்.

இஃது அகத்தோர் ஏணிமயக்கம்.

இனி இரண்டும் ஒருங்கு வருதலுங் கொள்க.

உதாரணம்:-

என வரும்.

கடைஇச் சுற்று அமர் ஒழிய வென்றி கைக்கொண்டு முற்றிய முதிர்வும்-புறத்தோன் தன்படையைச்செலுத்திப் புற மதிலிற் செய்யும் போரின்றாக, அகத்தோன்படையை வென்று அப் புறமதிலைக் கைக்கொண்டு உண்மதிலை வளைத்த வினை முதிர்ச்சியும், அகத்தோன் தன்படையைச் செலுத்திப் புறமதிலிற்செய்யும் போரின்றாகப், *புறத்தோன் படையைத் தள்ளி வென்று அப்புறமதிலைக் கைக்கொண்டு வளைத்த வினைமுதிர்ச்சியும்;

உதாரணம்:-

இது புறத்தோன் முற்றிய முதிர்வு.

இஃது அகத்தோன் முற்றிய முதிர்வு.

அன்றி முற்றிய அகத்தோன் வீழ்ந்த நொச்சியும்-புற மதிலிலன்றி உண்மதிற்கட் புறத்தோனால் முற்றப்பட்ட அகத் தோன் விரும்பின மதில்காவலும், அவன் காத்தலின்றித் தான் சூழப்பட்ட இடத்திருந்த புறத்தோன் போர்செய்தலை விரும்பிய உள்ளத்தைக் காத்தலும்;

நொச்சியாவது காவல்; இதற்கு நொச்சி ஆண்டுச் சூடுதலுங் கொள்க, அது மதிலைக்காத்தலும் உள்ளத்தைகாத்தலுமென இருவர்க்கு மாயிற்று. இக்கருத்தானே "நொச்சி வேலித் தித்த னுறந்தை" (அகம்-122) என்றார் சான்றோரும்.

உதாரணம்:-

இஃது அகத்துழிஞையோன் எயிற்காத்த நொச்சி.

இது புறத்தோன் மனங்காத்த நொச்சி.

இது சூடின நொச்சியைப் புகழ்ந்தது.

மற்று அதன் புறத்தோன் வீழ்ந்த புதுமையானும்-இடை மதிலைக் காக்கின்ற அகத்துழிஞையோன் நின்ற இடத்தினைப் பின்னை அம்மதிலின் புறத்திருந்தோன் விரும்பிக்கொண்ட புதுக்கோளும், அங்ஙனம் புறத்தோன் கொண்ட அவ்விடத்தினைப் பின்னை யகத்தோன் தான் விரும்பிக்கொண்ட புதுக்கோளும்;

பிற்பட்ட துறைக்குப் புறத்தோன் அதனையென மாற்றிப் பொருள் கொள்க. முன்னர்ப் புறமதிலின் போர்போல இடை மதிலினும் போர் கூறினார்.

உதாரணம்:-

இது புறத்தோன் வீழ்ந்த புதுமை.

இஃது அகத்தோன் வீழ்ந்த புதுமை.

நீர்ச் செரு வீழ்ந்த பாசியும்-கொண்ட +மதிலகத்தை விட்டுப் போகாத புறத்தோரும் அவரைக் கழியத் தாக்கல் ஆற்றாத அகத்தோரும் எயிற்புரத்து அகழின் இருகரையும் பற்றி நீரிடைப் படர்ந்த நீர்ப்பாசி போன்று அக்கிடங்கின்கட் போரை விரும்பின பாசியும்;

பாசிபோல் நீங்காமல் நிற்றலிற் பாசி யென்றார்.


உதாரணம்:-

இஃது இருவர்க்கும் ஒக்கும்.

வேறு வேறு வருமெனினுங் காண்க.

அதாஅன்று ஊர்ச்செரு வீழ்ந்த மற்றதன் மறனும்-அம்மதிற் புறத்தன்றி ஊரகத்துப் போரை விரும்பிய அப்பாசி மறனும்;

பாசியென்றார், நீரிற் பாசிபோல இருவரும் ஒதுங்கியும் தூர்ந்தும் பொருதலின்.

உதாரணம்:-

இது புறத்தோன் பாசிமறம்.

இஃது அகத்தோன் *பாசிமறம்.

அகமிசைக்கு+ இவர்ந்தோன் பக்கமும்-புறஞ்சேரிமதிலும் ஊரமர்மதிலும் அல்லாத சோயிற் புரிசைகளின்மேலும் ஏறி நின்று போர்செய்தற்குப் பரந்துசென்றோன் கூறுபாடும்;

உதாரணம்:-

இது புறத்தோன் அகமிசைக்கிவர்தல்.

----------
(பாடம்) * ‘அகத்தோர்.’ + ;அகன்மிசைக்கு.’ # ‘சாயின்.’


இஃது அகத்தோன் அகமிசைக்கிவர்தல்.

இகன் மதிற் குடுமி கொண்ட மண்ணும் மங்கலமும்-- அங்ஙனம் இகல்செய்த மதிற்கண் ஒருவன் ஒருவனைக் கொன்று அவன் முடிக்கலம் முதலியான கொண்டு, பட்ட வேந்தன் பெயரானே முடிபுனைந்து நீராடும் மங்கலமும்;

உதாரணம் :-

இது புறத்தோன் மண்ணும் மங்கலம்.

இஃது அகத்தோன் மண்ணும் மங்கலம்.

வென்ற வாளின் மண்ணோடு ஒன்ற – இருபெருவேந்தருள் ஒருவன் ஒருவனை வென்றுழி அங்ஙனம் வென்ற கொற்றவாளினைக் கொற்றவையுமே னிறுத்தி நீராட்டுதலோடே கூட;

உதாரணம் :-

இது புறத்தோன் வாண்மங்கலம்.

இஃது அகத்தோன் வாண்மங்கலம்.

ஒன்றென$ முடித்தலான் இருவர் வேற்குஞ் சிறுபான்மை
மண்ணுதல் கொள்க.

---------
(பாடம்) * 'வாளவுணர்.' + 'குறித்து.' ++ 'படவந்த.' & ''ஒன்றின.'
@ 'வான்கொடுத்த.' $ 'ஒருவன்பால்.'


என வரும்.

தொகைநிலை என்னுந் துறையொடு தொகைஇ- அவ்வாண் மங்கலம் நிகழ்ந்த பின்னர் இருவருள் ஒருவர் பரந்துபட்ட படைக்கடற் கெல்லாஞ் சிறப்புச் செய்வான் ஒருங்கு வருகெனத் தொகுத்தல் என்னுந் துறையொடு முற் கூறியவற்றைத் தொகுத்து;

உதாரணம்:--

இது புறத்தோன் தொகைநிலை.

இஃது அகத்தோன் தொகைநிலை.

வகைநால் மூன்றே துறை என மொழிப- அங்ஙனம் ஒன்று இருவகைப்பட வந்து பன்னிரண்டேயாம் உழிஞைத்துறை என்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.


முற்றலையுங் கோடலையும் இருவகையென்றார். துறையென்றதனான் அவற்றின் பகுதியாய் வருவனவும் அத்துறைப்பாற் படுத்துக*. உழையரை அழைத்து நாட்கொள்க என்றலும் அவர் அரசர்க்கு உரைப்பனவுங் குடைச்சிறப்புக் கூறுவனவும் முரசு முதலியன நாட்கோடலும் பிறவுங் குடைநாட் கோட லாய் அடங்கும். இது வாணாட் கோடற்கும் ஒக்கும். பொரு வார்க்கும் அல்லுழிப் போவார்க்குங் குடை பொதுவாகலின் முற்கூறி மேல் வருகின்ற போர்த்தொழிற்கே சிறத்தலின் வாளினைப் பிற் கூறினார். இவை போர்த்தொழிற்கு ஏதுவாகலின் முற்கூறினார். எயிலுட் பொருதலும்† புட்போல உட்பாய்தலும் ஆண்டுப் பட்டோர் துறக்கம் புகுதலும் பிறவும் பாசிமறத் தின்பாற் படும். ஏறுந் தோட்டியுங் கதவும் முதலியன கோடல் அகமிசைக்கு இவர்ந்தோன் பக்கத்தின்பாற்படும். படிவம்‡ முதலியன கூறல் குடுமிகொண்ட மண்ணு மங்கலத்தின்பாற் படும். புறத்தோன் இருப்பிற், றொகைநிலைப்பாற்படும்.'துறை யென மொழிப' என எல்லாவற்றையுந் துறையென்று கூறுகின்றவர் தொகைநிலை; யென்னுந் துறையெனத் தொகை நிலையை விதந்தோதினார்,. அது பலவாகாது இரண்டு துறைப் பட்டு வேறு வேறு துறையாம் என்றற்கு. அது தும்பைத் தொகைநிலைபோல் இருபெருவேந்தரும் உடன்வீழ்தலுஞ் சிறு பான்மை உளதாமென் றுணர்க. எதிர்செல்லா தடைத்திருந் தோன் புறப்பட்டுப்படுதல்சிறுபான்மையாதலின், இதனையும் வேறோர் துறையாக்கிப் பதின்மூன் றென்னாராயினார்,.

உதாரணம்:--

எனவரும்.

இது வேறுவேறு வருதலுஞ் சிறுபான்மை. இன்னுந் துறை யென்றதனானே புறத்தோன் கவடிவித்துதலுந் தொகை நிலைப்பாற்பட்டுழி அகத்தோர்க்குச் செல்லாமை கொள்க.

அது, "மதியேர்வெண்குடை" என்னும் (392) புறப்பாட்டினுள்.

எனவரும்.


ஒன்ற வென்றதனான் அகத்தோன் வாண்மண்ணுதல் சிறுபான்மை என்று கொள்க.

இனி மகண்மறுத்தன் மதிலை முற்றுதன் மகட்பாற்காஞ்சிக்கண் அடங்கும். யானையுங் குதிரையும் மதிர்போர்க்குச் சிறந்தன அன்மையிற் கொள்ளாராயினர். ஈரடியிகந்து பிறக்கடி யிடுதலுங் கேடு என்று உணர்க. (13)

------------

69.

இது தும்பைத்திணை அகத்திணையுள் இன்னதற்குப் புறனாமென்கின்றது. இதுவும் *மைந்துபொருளாகப் பொருதலின்† மண்ணிடை யீடாகப் பொரும் வஞ்சிக்கும் ‡மதிலிடையீடாகப் பொரும் உழிஞைக்கும் பிற்கூறினார்.

(இ-ள்) தும்பைதானே நெய்தலது புறனே- தும்பையென்னும் புறத்திணை நெய்தலெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு.

தும்பையென்பது சூடும் பூவினாற் பெற்ற பெயர். நெய்தற்குரிய பெருமணலுலகம்போலக் காடும் மலையுங் கழனியு மல்லாத களரும் மணலும் பொருகளமாக வேண்டுதலானும், பெரும் பொழுதுவரை வின்மையானும், எற்பாடு போர்த்தொழில் முடியுங் காலமாதலானும், இரக்கமுந் தலைமகட்கே பெரும்பான்மை உளதாயவாறுபோலக் கணவனை இழந்தார்க்கன்றி வீரர்க்கு இரக்கமின்மையானும், அவ்வீரக்குறிப்பின் அருள்பற்றி ஒருவர் ஒருவரை நோக்கிப் போரின்கண் இரங்குப வாகலானும்,. ஒரு வரும் ஒழியாமற் பட்டுழிக்கண்டோர் இரங்குப வாகலானும், பிற காரணங்களானும் நெய்தற்குத் தும்பை புறனாயிற்று. (14)
---------------

70.

இஃது அத்தும்பைக்குப் பொதுவிலக்கணங் கூறுகின்றது.

(இ-ள்) மைந்து பொருளாக வந்த வேந்தனை- தனது வலியினை உலகம் மீக்கூறுதலே தனக்குப் பெறுபொருளாகக் கருதி மேற்சென்ற வேந்தனை; சென்று தலையழிக்குஞ் சிறப்பிற்றென்ப- அங்ஙனம் மாற்றுவேந்தனும் அவன் கருதிய மைந்தேதான் பெறுபொருளாக எதிர்சென்று அவனைத் தலைமை தீர்க்குஞ் சிறப்பினையுடைத்து அத்தும்பைத்திணை என்று சொல்லுவர் ஆசிரியர் என்றவாறு.


வரல் செலவாதல் "செலவினும் வரவினும்" (தொல்- சொல்-கிளவி-28) என்பதன் பொதுவிதியாற் கொள்க. மைந்து பொருளாக என்பதனை வந்த என்பதற்குஞ் சென்று என்பதற்குங் கூட்டுக*; அஃது இருவர்க்கும் ஒத்தலின். எனவே இருவரும் ஒருகளத்தே பொருவாராயிற்று.

இது வேந்தனைத் தலைமையாற் கூறினாரேனும் ஏனையோர்க்குங் கொள்க; அவரும் அதற்குரியராதலின்.

இதனைச் சிறப்பிற் றென்றதனான் அறத்திற் றிரிந்து வஞ்சனையாற் கொல்வனவுந் தேவராற் பெற்ற வரங்களாற் கொல்வனவுங் கடையூழிக்கட்டோன்றிய ஆதலிற் சிறப்பிலவாம்,. அவையுஞ் சிறுபான்மை கொள்க. (15)

---------

71

இது தும்பைக்காவதோர் இலக்கணங் கூறுதலின் எய்திய தன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

(இ-ள்) கணையும் வேலுந் துணையுற மொய்த்தலின்-- பலரும் ஒருவனை அணுகிப் பொருதற்கஞ்சி அகல நின்று அம்பானெய்தும் வேல்கொண் டெறிந்தும் போர் செய்ய, அவ் வம்பும் வேலும் ஒன்றோடொன்று துணையாகத் தீண்டுமாறு செறிதலின்;† சென்ற உயிரின் நின்ற யாக்கை- சிறிதொழியத் தேய்ந்த உயிரானே துளங்காது நிலைநின்ற உடம்பு; இருநிலந் தீண்டா யாக்கை அருநிலை வகையோடு- வாளுந் திகிரியு முதலையவற்றால் ஏறுண்ட தலையேயாயினும் உடலேயாயினும் பெரிய நிலத்தைத் தீண்டாதெழுந்து ஆடும் உடம்பினது பெறற்கரும் நிலையுடைத்தாகிய கூறுபாட்டோடே கூடி; இருபாற்பட்ட ஒரு சிறப்பின்று- இரண்டு கூறுபட்ட ஒரு சிறப்பிலக்கணத்தை யுடைத்து முற்கூறிய தும்பைத்திணை என்றவாறு.

எனவே, முற்கூறிய மைந்துபொருளாகப் பொருதலினும் நின்ற யாக்கை சிறத்தலும் இருநிலந் தீண்டா யாக்கை அதனிற் சிறத்தலுங் கூறினார். இது திணைச்சிறப்புக் கூறியது. மொய்த்தலி னென்றது, யாக்க யற்றாடவேண்டுதலிற் கணையும் வேலுமன்றி வாள்முதலியன ஏதுவாகக்கொள்க. பிற்கூறியதற்கு அட்டை அற்றுழியும் ஊருமாறுபோல் அலீகனிற அற்றுழியும் உடம் பாடுதலின் அட்டையாட லெனவும் இதனைக் கூறுப.


இனி மேற்றுறை கூறுகின்றது மைந்துபொருளாக வந்ததுஞ் சென்றதுமாகிய பொது இலக்கணத்திற்கே என்றுணர்க. நிரை கொள்ளப்பட்டோன் பொருகளங் குறித்துப் போர்செய்தலும் அவன் களங்குறித்தது பொறாது நிரைகொண்டானுங் களங்குறித்துப் போர்செய்தலும் வெட்சிப்புறத்துத் தும்பையாம். வஞ்சியுள்ளும் விழுப்புண்பட்ட வீரரை நோக்கி வேந்தற்குப் பொறாமை நிகழ்ந்து துறக்கம் வேண்டுழி நிகழ்ந்த தும்பையும் வஞ்சிப்புறத்துத் தும்பையாம். முற்றப்பட்டோனை முற்று விடுத்தற்கு வேறோர் வேந்தன் வந்துழி, அவன் புறம்போந்து களங்குறித்துப் போர்செய்யக் கருதுதலும், அவன் களங்குறித் துழிப் புறத்தோனும் களங்குறித்துப் போர்செய்யக் கருதுதலும் உழிஞைப்புறத்துத் தும்பையாம். இவையெல்லாம் மண்ணசையும் அரண்கோடலுமன்றி மைந்துபொருளாகச் சென்று துறக்கம்வேட்டுப் பொருந் தும்பைச்சிறப்புக் கூறிற்று.

மேற்காட்டுந் துறைகளெல்லாம் இச்சூத்திரத்துக்கூறிய இரண்டற்கு மன்றி மைந்துபொருளாயதற்கேயா மென்றுணர்க.

உதாரணம்:--

"எய்போற் கிடந்தானென் னேறு" (புறம் பொருள்-வெ-176)

என வருவன கணையும் வேலும் மொய்த்துநின்றன.

கிடந்தானென்புழி நிலந் தீண்டாவகையின் நின்ற யாகைக்யாயிற்று.

இது வஞ்சிப்புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டாவகை.

இஃது உழிஞைப்புறத்துத் தும்பையாம் இருநிலந் தீண்டாவகை.

இது திணைக்கெல்லாம் பொது அன்மையிற் றிணையெனவாம் படாது; திணைக்கே சிறப்பிலக்கணமாதலிற் றுறையெனவும் படாது; ஆயினுந் துறைப்பொருள் நிகழ்ந்து கழிந்தபிற் கூறியதாமென் றுணர்க. (16)

----------

72.

இது மைந்துபொருளாகிய தும்பைத்திணைக்குத் துறை இனைத்தென்கின்றது.

(இ-ள்) தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை நிலையும்- தானைநிலை யானைநிலை குதிரைநிலை என்று சொல்லப்பட்ட போர்செய்த்ற்கு ஆற்றா அரசர்* தலைபனிக்கும் மூன்று கூறுபாட்டின்கண்ணும்;

நோனார் உட்குவ ரெனவே நோன்றார் உட்காது நிற்பாராயிற்று. அவர் போர்கண்டு சிறப்புச்செய்யுந் தேவரும் பிணந்தின் பெண்டிரும் படையாளர் தாயரும் அவர் மனைவியருங் கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியருங் கண்டோரும் பிறரு மென்று கொள்க.

துறக்கம்புகு வேட்கையுடைமையிற் காலாளை முற்கூறி, அதன் பின்னர் மதத்தாற் கதஞ்சிறந்து தானும் போர்செய்யும் யானையைக் கூறி, மதஞ்சிறவாமையிற் கதஞ்சிறவாத குதிரையை அதன்பிற் கூறினார். குதிரையானன்றித் தேர் தானே செல்லாமையிற் றேர்க்கு மறமின்றென்று அது கூறாராயினார்.

நிலை யென்னாது வகை யென்றதனான் அம்மூன்று நிலையுந் தாமே மறஞ்சிறப்பப் பொருதுவீழ்தலும், அரசனேவலிற் றானை பொருது வீழ்தலும், யானையுங் குதிரையும் ஊர்ந்தாரேவலிற் பொருதலும். படையாளர் ஒருவரொருவர் நிலைகூறலும் அவர்க்கு உதவலு மென இப்பகுதியெல்லாங் கொள்க.

இனி இவைதாமே கறுவுகொண்டு பொருவுழித்+ தானை மறம் யானைமறங் குதிரைமற மென்று வெவ்வேறு பெயர்பெறு மென்று கொள்க.#

இனித் தாயர் கூறுவன மூதின் முல்லையாம்; மனைவியர் கூறுவன இல்லாண் முல்லையாம்; கண்டோர் கூறுவன வல்லாண்முல்லையாம்; பாணர் கூறுவன பாண்பாட்டாம் என்க.

இவை கூறி ஏனைக கூத்தர்முதலியோர் கூறுவன கூறார் மன ஞெகிழ்ந்து போவாரு முளர். அவை ஓரோர் துறையாக முதனூற்கண் வழங்காமையினானும் அவற்றிற்கு வரையறை யின்மையானும் இவர் தானைநிலை யென அடக்கினார். இச்சிறப்பான் இதனை முற்கூறினார். அத் தானை சூடிய பூக்கூறலும், அதனெழுச்சியும், அரவமும், அதற்கரசன் செய்யுஞ் சிறப்பும், அதனைக் கண்டு இடைநின்றோர் போரை விலக்கலும், அவர் அதற்குடம்படாமைப் போர்துணிதலும், அத்தானையுள் ஒன்றற்கிரங்கலும், அதற்குத் தலைவரை வகுத்தலும், வேந்தன் சுற்றத்தாரையுந் துணைவந்த அரசரையும் ஏத்துவனவும், நும்போர் ஏனைநாட்டென்றலும், இருபெருவேந்தரும் இன்ன வாறு பொருதுமென்று கையெறிதலும் போல்வன வெல்லாம் இத்துறைப்பாற் படும்.

உதாரணம் :-

இது பூக் கூறியது.

இதனைத் திணைப்பாட்டு மென்ப.

இது சிறப்புச்செய்தது.

இது விலக்கவும் போர் துணிந்தது.

இஃது இரண்டனுள் ஒன்றற்கு இரங்கியது.

இது பெருந்தேவனார் பாட்டு; குருக்கள் தமக்குப் படைத் தலைவரை வகுத்தது.


இனி போர்த்தொழிலாற் றானைநிலை வருமாறு :-

எனவும்,

எனவும் வரும்.


----------
(பாடம்) *'கையிற் றொட்டா' † 'பெயரை யிட்டிழைப்போரும்' ‡'டியாத்த'
§'தழீஇய' 'அறியாதமர்' $'ஒருதிற நிற்ப'
**'நிரைகாழ் மாலையெங் கேள்வனை'


என வரும்.

இஃது உதவியது.

இனி யானைநிலைக்குங் குதிரைநிலைக்குந் துறைப்பகுதியாய் வருவனவுங் கொள்க. அஃது அரசர்மேலும் படைத்தலைவர் மேலும் ஏனையோர்மேலும் யானை சேறலுங் களிற்றின்மேலுந் தேரின்மேலுங் குதிரைசேறலுந் தன்மேலிருந்து பட்டோருடலை மோந்து நிற்றலும் பிறவுமாம்.

உதாரணம் :-

----------
(பாடம்) * 'துவந்தானு மாகுமால்.' + 'செம்ம லுடைத்தால்.' ++ 'வானுறை வாழ்க்கை.'

இவை யானைநிலை.

இவை குதிரைநிலை.

"நிலம்பிறக் கிடுவது போல" என்னும் (303) புறப்பாட்டும் அது.

இவை தனித்துவாராது தொர்நிலைச் செய்யுட்கண் வரும். அவை தகடூர்யாத்திரையினும் பாரதத்தினுங் காண்க. புறநானூற் றுள் தனித்து வருவனவுங்¶ கொள்க.

வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான் மீண்டெ றிந்த தார்நிலை- தன்படை போர்செய்கின்றமை கண்டு தானும் படையாளர்க்கு முன்னேசென்று வேலாற் போர்செய்து வென்றி மிகுகின்ற வேந்தனை மாற்றோர் சூழ்ந்துழி அதுகண்டு வேறோரிடத்தே பொருகின்ற தன் றானைத்தலைவனாயினும் தனக்குத் துணைவந்த அரசனாயினும் போரைக் கைவிட்டுவந்து வேந்தனோடு பொருகின்றாரை எறிந்த தார்நிலைக்கண்ணும்;


தாரென்பது முந்துற்றுப் பொரும்படையாதலின் இது தார்நிலையாயிற்று.

உதாரணம் :-

என வரும்.

இதுவும் அதன்பாற்படும்.

அன்றியும் இருவர் தலைவர் தபுதிப்பக்கமும்--இருபெருவேந்தர் தானைத்தலைவருந் தத்தம் வேந்தர்க்காகித் தார்தாங்கு>தலே யன்றி அத்தலைவரிருவருந் தம்மிற்பொருது வீழ்தற் கண்ணும்;

பக்கமென்றதனான் அவரு ளொருவரொருவர் வீழ்தலுங் கொள்க.

உதாரணம் :-

-----------
(பாடம்) * 'கையின்று.' + 'உடல்வயிற்.'

இப் பாரதப்பாட்டினுள் அவ்வாறாதல் கண்டுகொள்க.

இனித் தலைவரேயன்றிப் பிறரும் அவ்வாறு பொரினும் அதன்பாற் படுத்துக.

உடைபடை ஒருவன் புக்கு ஒருவனைக் கூழைதாங்கிய எருமையும் - தனது உடைந்த படைக்கண்ணே ஒரு படைத் தலைவன் சென்று நின்று அங்ஙனங் கெடுத்த மாற்றுவேந்தன் படைத்தலைவனை அவன் எதிர்கொண்டுநின்ற பின்னணியோடே தாங்கின கடாப்போலச் சிறக்கணித்து நிற்கு நிலைமைக் கண்ணும்;

ஒருவனொருவனைத் தாங்கின எருமையென முடிக்க.

உதாரணம் :-

என வரும்.

படையறுத்துப் பாழிகொள்ளும் ஏமத்தானும்-கைப்படையைப்போக்கி மெய்யாற் போர்செய்யும் மயக்கத்தின் கண்ணும்;

பாழி, வலி; இஃது ஆகுபெயர்.

உதாரணம் :-

என்னும் பாரதப்பாட்டுக் கொள்க.

----------------------
(பாடம்) * 'ருட்குறும்.' + 'தழீஇயர்.' ++ 'பார்த்து.'
& 'பல்படையைக் காத்துய்த்.' @ 'பாய்ந்திழிந்த.'

என்பதும் அது.

களிறெறிந் தெதிர்ந்தார் பாடும்- மாற்றுவேந்தன் ஊர்ந்துவந்த களிற்றைக் கையெறிந்தானுங் கடுக்கொண்டெதிர்ந்தானும் விலக்கி அவனையும் அக்களிற்றையும் போர்செய்தோர் பெருமைக் கண்ணும்;

உதாரணம்:--

என வரும்.

இப் பாரதப்பாட்டும் இதன் பாற்படும்

இது களிறெறிந்தான் பெருமை கூறுதலின் யானைநிலையுள் அடங்காதாயிற்று.

களிற்றொடு பட்ட வேந்தனை அட்ட வேந்தன் வாளோர் ஆடும் அமலையும்- அங்ஙனம் நின்று களிற்றொடுபட்ட வேந் தனைக் கொன்ற வேந்தன் படையாளர் வியந்து பட்டோனைச் சூழ்ந்துநின்று ஆடுந் திரட்சிக்கண்ணும்;

அமலுதல் நெருங்குதலாதலின், அமலை யென்பதூஉம் அப்பொருட்டாயிற்று;

------
(பாடம்) *'தோய்ந்துகள னனைத்தினும்'

உதாரணம்:--

என வரும்.

இப் பாரதப்பாட்டும் அது.

வாள்வாய்த்து இருபெருவேந்தர் தாமுஞ் சுற்றமும் ஒரு வரும் ஒழியாத் தொகைநிலைக் கண்ணும்- இருபெருவேந்தர் தாமும் அவர்க்குத் துணையாகிய வேந்தருந் தானைத்தலைவருந் தானையும் வாட்டொழின்முற்றி ஒருவரும் ஒழியாமற் களத்து வீழ்ந்த தொகைநிலைக் கண்ணும்;

உதாரணம்:--

எனவரும்,.
---------------
(பாடம்) *கழிய' †'விறற்போர்'

செருவகத்து இறைவன் வீழ்ந்தெனச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும்- போரிடத்தே தன்வேந்தன் வஞ்சத்தாற் பட்டானாகச் சினங்கொண்ட மனத்தனாய்ப் பெரும்படைத் தலைவன் தலைமயங்கிப் பொருத நல்ல புகழைப் பெற்ற நிலைமைக்கண்ணும்;

அது குருகுலவேந்தனைக் குறங்கறுத்தஞான்று இரவு ஊரெறிந்து பாஞ்சாலரையும் பஞ்சவர்மக்க ளைவரையுங் கொன்று வென்றி கொண்ட அச்சுவத்தாமாவின் போர்த்தொழில் போல்வன. தன்னரசன் அறப்போரித்துப் படாது வஞ்சனையாற் படுதலின், அவனுக்குச் சினஞ்சிறந்தது இச்சிறப்பில்லாத தம்பையும் இக்கலியூழிக்கா மென்பது 'சென்று தலையழிக்குஞ் சிறப்பிற்று' (தொல்-பொ-புற-15) என்புழிக் கூறிற்று.

உதாரணம்:-

----------------
(பாடம்) *'பாகடகு' †'திறங்கெழு' ‡'ஊர்ப்புக் காவயின்'


இப் பாரதப்பாட்டினுள் அவ்வாறாதல் காண்க.

ஒருவற்குப் பல் படை உடைதலின் மற்றவன் ஒள்வாள் வீசிய நூழிலும் - அங்ஙனம் நல்லிசை எய்திய ஒருவற்கு வஞ்சத்தாற் கொன்ற வேந்தன் பல்படை புறங்கொடுத்தலின்+ அவரைக் கோறல் புரிதல் அறனன்றென்று++ கருதாது அவன் வாளாற் றடிந்து கொன்று குவித்தற்கண்ணும்;

வஞ்சத்தாற் கொன்ற வேந்தனைக் கொன்றமைபற்றித் தனக்குக் கெட்டோரையும் அடங்கக் கோறற்கு உரியானை நல்லிசை முன்னர்ப் பெற்றோனென்றார். நூழிலாவது, கொன்று குவித்தல்.

என்றாற்போல.

உதாரணம் :-

எனவரும்.

புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே – பொருந்தித் தோன்றுமத் பன்னிரு துறையினையுடைத்துத் தும்பைத்திணை என்றவாறு.


இன்னும் உளப்படப் புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்து எனவுங் கூட்டிப் பன்னிரண்டன்கண்ணும் முற் கூறிய வெட்சித்திணை முதலியவற்றான் நிகழுந் தும்பையும் வந்துகூடப் பின் அவற்றிற்கு முரியவாய்ப் பொருந்தித்தோன்றும் பன்னிரு துறையினையுடைத்துத் தும்பைத்திணை என்றும் பொருள்கொள்க. பொருள் இடமாகத் துறை இடத்தியல் பொருளாங்கால் ஏனைத் திணைக்கட் கூறினாற்போல ஒன்று நிகழ்ந்தபின் ஒன்றுநிகழாது இரண்டு படைக்கும் பொருந்த ஒரு காலத்து இத்திணை நிகழுமென்றற்குப் 'புல்லித்தோன்றும்' என்றார். பல்பெருங் காதமாகிய நெடுநெறியிடைத் துணிந்த இடத்தையும்* துறையெனப் பலதுறை யென்பதுபோல இச் சூத்திரத்துத் துறையைத் தொகுதியுடன் அறுதிகாட்டிற்றென்றுணர்க. இவ்விலக்கணம் மேல்வருகின்ற திணைகட்கும் ஒக்கும். (17)

------------

73.

இவ் வாகைத்திணை பாலையெனப்பட்ட அகத்திணைக்குப் புறனாமென்கின்றது.

(இ-ள்) வாகை தானே- இனிக் கூறாதுநின்ற† புறத்திணையுள் வாகையெனப்பட்டது தானே: பாலையது புறனே- பாலையென்னும் அகத்திணைக்குப் புறனாம் என்றவாறு.

என்னை? பாலைக்குப் புணர்ச்சியின் நீங்கி இல்லறநிகழ்த்திப் புகழெய்துதற்குப் பிரியுமாறுபோலச், சுற்றத்தொடர்ச்சியின் நீங்கி அறப்போர்செய்து துறக்கம்பெறுங் கருத்தினாற் சேறலானும், வாளினுந் தாளினும் நிறையினும் பொறையினும் வென்றியெய்துவோரும் மனையோரைநீங்கிச் சேறலானும் பிரிவுள தாயிற்று.

பாலை தனக்கென ஓர் நிலமின்றி நால்வகைநிலத்தும் நிகழுமாறு போல, முற்கூறிய புறத்திணை நான்கும் இடமாக வாகைத் திணை நிகழ்தலிற் றனக்கு நிலமின்றாயிற்று. "நாளு நாளு மாள்வினை யழுங்க, வில்லிருந்து மகிழ்வோர்க் கில்லையாற் புகழ்‡ என ஆள்வினைச் சிறப்புக்கூறிப் பிரியுமாறு போல இதற்குத் துறக்கமே எய்தும் ஆள்வினைச் சிறப்புக் கூறலுங்கொள்க. பாலை பெருவரவிற்றாய்த் தொகைகளுள் வருமாறுபோல வாகையும் பெருவரவிற்றாய் வருதலுங் கொள்க. (18)

----------

74.

இஃது அவ் வாகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறு கின்றது.

------------
(பாடம்) *'நெடுநெறியிடத்துள் நிகழ்ந்த இடத்தவும்'
†'கருதிநின்ற' ‡ இந்நூல் 10-ஆம் பக்கத்திற் காண்க.

(இ-ள்) தாவில் கொள்கைத் தத்தங் கூற்றை- வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு வருணத்தோரும் அறிவருந் தாபதர் முதலியோருந் தம்முடைய கூறு பாடுகளை; பாகுபட மிகுதிப் படுத்தல் என்ப- இருவகைப்பட மிகுதிப்படுத்தலென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

இருவகையாவன, தன்னைத்தானே மிகுதிப்படுத்தலும் பிறர் மீக்கூறுபடுத்தலுமாம். இனி இருவகைக்குள் உறழ்ச்சியாற் பெற்ற வென்றியை வாகையெனவும் இயல்பாகப் பெற்ற வென்றியை முல்லையெனவுங் கூறுவர். படுதலென்னாது படுத்தலெனப் பிறவினையாற் கூறினார், அவர் தம்மினுறழாதவழியும் ஒருவன் அவரை உறழ்ந்து உயர்ந்தோன் இவனென்றுரைத்தலும் வாகையென்றற்கு; ஒன்றனோடு ஒப்பு ஒரீஇக் காணாது மாணிக்கத்தினை நன்றென்றாற்போல உலகமுழுதும் அறியும் உயர்ச்சியுடைமையும் அது. தாவில் கொள்கையெனவே இரணியனைப்போல வலியானும் வருத்தத்தானுங் கூறுவித்துக் கோடல் வாகையன்றாயிற்று. (19)

------------

75

இது வாகைத்திணைக்குப் பொதுவிலக்கணங் கூறினார், இன்னும் அதற்கேயாவதோர் சிறப்பிலக்கணம் பொதுவகையாற் கூறுகின்றது; மேற்கூறி வருகின்றாற்போலத் துறைப்படுத்திக் கூறுதற்கேலாத பரப்புடைச் செய்கை* பலவற்றையுந் தொகுத்து ஒரோவொன்றாக்கி எழுவகைப்படுத்திக் கூறுதலின்.

(இ-ள்) அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்- ஆறு கூற்றினுட்பட்ட பார்ப்பியற் கூறும்;


ஆறுபார்ப்பியலென்னாது வகையென்றதனான் அவை தலை இடை கடையென ஒன்று மும்மூன்றாய்ப் பதினெட்டாம் என்று கொள்க; அவை ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் கொடுத்தல் கோடல் என ஆறாம். இருக்கும் எசுரும் சாமமும் இவை தலையாய ஒத்து; இவை வேள்வி முதலியவற்றை விதித்தலின், இலக்கணமுமாய், வியாகரணத்தான் ஆராயப்படுதலின்* இலக்கியமுமாயின. அதர்வமும் ஆறங்கமுந் தரும நூலும் இடையாய ஒத்து; அதர்வம் வேள்விமுதலிய ஒழுக்கங்கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடுஞ்சூழும் மந்திரங்களும் பயிறலின் அவற்றோடு கூறப்படாதாயிற்று.

ஆறங்கமாவன, உலகியற்சொல்லை ஒழித்து வைதிகச் சொல்லை ஆராயும் நிருத்தமும் அவ்விரண்டையும் உடனாராயும் ஐந்திரத்தொடக்கத்து வியாகரணமும், போதாயனீயம் பாரத்து வாசம் ஆபத்தம்பம் ஆத்திரேயம் முதலிய கற்பங்களும், நாராயணீயம் வாராகம் முதலிய கணிதங்களும், எழுத்தாராய்ச்சியாகிய பிரமமும், செய்யுளிலக்கணமாகிய சந்தமுமாம்.

தருமநூலாவன, உலகியல்பற்றி வரும் மனுமுதலிய பதினெட்டும்; இவை வேதத்திற்கு அங்கமானமையின் வேறாயின.

இனி இதிகாச புராணமும் வேதத்திற்கு மாறுபடுவாரை மறுக்கும் உறழ்ச்சிநூலும் அவரவர் அதற்கு மாறுபடக்கூறும் நூல்களும் கடையாய ஒத்து. எழுத்துஞ் சொல்லும் பொருளும் ஆராய்ந்து இம்மைப்பயன் தருதலின்† அகத்தியந் தொல்காப்பியம் முதலிய தமிழ்நூல்களும் இடையாய ஒத்தாமென்றுணர்க; இவையெல்லாம் இலக்கணம். இராமாயணமும் பாரதமும் போல்வன இலக்கியம்.

இனித் தமிழ்ச்செய்யுட்கண்ணும் இறையனாரும் அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும் வான்மீகனாருங் கவுதமனாரும் போல்வார் செய்தன தலையும், இடைச்சங்கத்தார் செய்தன இடையுங், கடைச்சங்கத்தார் செய்தன கடையுமாகக் கொள்க.

இங்ஙனம் ஓத்தினையும் மூன்றாகப் பகுத்தது, அவற்றின் சிறப்புஞ் சிறப்பின்மையும் அறிவித்தற்கு. இவற்றுள் தருக்கமுங் கணிதமும் வேளாளர்க்கும் உரித்தாம்.


இனி ஓதுவிப்பனவும் இவையேயாகலின் அவைக்கும் இப் பகுதி மூன்றும் ஒக்கும். ஓதுவித்தலாவது கொள்வோனுணர்வு வகை அறிந்து அவன் கொள்வரக் கொடுக்கும் ஈவோன்றன்மையும் ஈதலியற்கையுமாம். வேட்டலாவது, ஐந்தீயாயினும் முத்தீயாயினும் உலகியற்றீயாயினும் ஒன்றுபற்றி மங்கல மரபினாற் கொடைச்சிறப்புத்தோன்ற அவிமுதலியவற்றை மந்திரவிதியாற் கொடுத்துச் செய்யுஞ் செய்தி; வேளாண்மைபற்றி வேள்வியாயிற்று,. வேட்பித்தலாவது, வேள்வியாசிரியர்க்கோதிய இலக் கணமெல்லாம் உடையனாய் மாணாக்கற்கு* அவன் செய்த வேள்விகளாற் பெரும்பயனைத் தலைப்படுவித்தலை வல்லனாதல்; இவை மூன்று பகுதியவாதல் போதாயனீயம் முதலியவற்றானுணர்க. கொடுத்தலாவது, வேள்வியாசானும் அவற்குத் துணையாயினாரும் ஆண்டுவந்தோரும் இன்புறுமாற்றான் வேளாண்மையைச்செய்தல். கோடலாவது, கொள்ளத் தகும் பொருள்களை அறிந்துகொள்ளுதல். உலகுகொடுப்பினும் ஊண் கொடுப்பினும் ஒப்பநிகழும் உள்ளம் பற்றியுந், தாஞ் செய்வித்த வேள்விபற்றியுங் கொடுக்கின்றான் உவகைபற்றியுங், கொள் பொருளின் ஏற்றிழிவு பற்றியுந், தலை இடை கடை யென்பனவுங் கொள்க.

இனி வேட்பித்தன்றித் தனக்கு ஓத்தினாற்கோடலுங் கொடுப்பித்துக் கோடலுந் தான் வேட்டற்குக் கோடலுந் தாயமின்றி இறந்தோர் பொருள்கோடலும் இழந்தோர் பொருள் கோடலும் அரசு கோடலுந் துரோணாசாரியனைப் போல்வார் படைக்கலங் காட்டிக் கோடலும் பிறவுங் கோடற்பகுதியாம்.

பார்ப்பியலென்னாது பக்கமென்றதனானே பார்ஒப்பார் ஏனை வருணத்துக்கட்கொண்ட பெண்பால்கட்டோன்றின வருணத் தார்க்குஞ் சிகையும் நூலும் உளவேனும் அவர் இவற்றிற்கெல்லாம் உரியரன்றிச் சிலதொழிற்கு உரியரென்பது கொள்க.

உதாரணம்:--

இஃது அந்தணர்க்குக் கூறிய பொது.

இஃது ஓதல்.


இனி ஓதற் சிறப்பும் ஓதினாற்கு உளதாஞ் சிறப்புங் கூறுதலுங் கொள்க.

இஃது ஓதுவித்தல்.

இஃது ஓதுவித்தற் சிறப்பு.

இதனுள் வேட்டவாறும் ஈந்தவாறுங் காண்க.

இது பர‌சுராமனைக் காசிபன் வேட்பித்த பாட்டு.

"நளிகட லிருங்குட்டத்து" என்னும் (26) புறப்பாட்டினுள், அந்தணன் வேட்பித்தலும் அரசன் வேட்டலும் வந்தது.

இஃது ஈதல்.

இஃது ஈதற் சிறப்பு.

இஃது ஏற்றல்.

இஃது ஏற்றற் சிறப்பு.

ஓதுவித்தலும் வேட்பித்தலும் ஏற்றலும் அந்தணர்க்கே உரிய.


ஐவகை மரபின் அரசர் பக்கமும்- ஓதல் வேட்டல் ஈதல் காத்தல் தண்டஞ்செய்தல் என்னும் ஐவகையிலக்கணத்தையுடைய அரசியற்கூறும்.

வகையென்றதனான் முற்கூறிய மூன்றும் பொதுவும், பிற்கூறிய இரண்டுஞ் சிறப்புமாதல் கொள்க.

பார்ப்பார்க்குரியவாக விதந்த வேள்வியொழிந்த வேள்விகளுள் இராசசூயமுந் துரங்கவேள்வியும் போல்வன அரசர்க்குரிய வேள்வியாம். கலிங்கங் கழுத்து யாத்துக் குளம்புங் கோடும் பொன்னணிந்த புனிற்றாநிரையுங், கனகமும் கமுகு முதலியனவும் அன்னமும் செறிந்த படப்பை சூழ்ந்த மனையுந், தண்ணடையுங் கன்னியரும் பிறவுங்கொடுத்தலும் மழுவாணெடியோனொப்ப உலகு முதலியன கொடுத்தலும் போல்வன அவர்க்குரிய ஈதலாம். படைக்கலங்களாலும் நாற்படையானுங் கொடைத் தொழிலானும் பிறவற்றானும் அறத்தின் வழாமற் காத்தல் அவர்க்குரிய காப்பாம். அங்ஙனம் காக்கப்படும் உயிர்க்கு ஏதஞ்செய்யும் மக்களையாயினும் விலங்கையாயினும் பகைத்திறத்தையாயினும் அறஞ்செய்யா அரசையாயினும் விதிவழியால் தண்டித்தல் அவர்க்குரிய தண்டமாம். இஃது அரசர்க்கு அறமும் பொருளும் இன்பமும் பயக்கும்.

'வகை' யென்றதனானே களவுசெய்தோர் கையிற் பொருள் கோடலும், ஆறிலொன்றுகோடலுஞ் சுங்கங்கோடலும் அந் தணர்க்கு இறையிலி கொடுக்குங்கால் இத்துணைப்பொருள் நும் மிடத்து யான் கொள்வலெனக் கூறிக்கொண்டு அதுகோடலும், மறம்பொருளாகப் பகைவர்நாடு கோடலுந் தமரும் அந்தணரும் இல்வழிப் பிறன்றாயங்கோடலும் பொருளில்வழி வாணிகஞ் செய்துகோடலும் அறத்திற்றிரிந்தாரைத் தண்டத்திற்றகுமாறு பொருள்கோடலும் போல்வன கொள்க. அரசியலென்னாது பக்கமென்றதனான் அரசர் ஏனைவருணத்தார்கட் கொண்ட பெண்பாற்கட் டோன்றிய வருணத்துப்பகுதியோருஞ் சில தொழிற்குரியர் என்றுகொள்க.

உதாரணம்:--

எனவரும்.

எனவும் வருவனவற்றுள் ஓதியவாறும் வேட்டவாறுங் காண்க.

இதுவும் வேட்டல்.

‡"விசையந்தப்பிய" என்னும் பதிற்றுப்பத்து ஈகை கூறிற்று.

-----------
(பாடம்) *'விசும்புமெய்' †'நோற்றோள்'
‡'விசையம் பற்றிய', என்றே ஏடுகளில் உள்ளது.இது காவல்கூறிற்று.

"கடுங்கண்ண கொல்களிற்றான்" என்னும் (14) புறப்பாட்டுப் படைக்கலங் கூறியவதனாற் காத்தல் கூறியவாறுங் காண்க.

இதனுண் மறத்திற் சென்று நாட்டை அழித்தவாறும், அறத்திற் றிரிந்த வேந்தனையழித்து அவன் நாட்டைக் குடியோம்பிக் காத்தவாறுங் கூறிற்று.

இது தண்டம்.

இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்- ஓதலும் வேட்டலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வாணிகர் பக்கமும், வேதம் ஒழிந்தன ஓதலும் ஈதலும் உழவும் நிரையோம்பலும் வாணிகமும் வழிபாடுமாகிய அறுவகை இலக்கணத்தையுடைய வேளாளர் பக்கமும்;

வாணிகரையும் வேளாளரையும் வேறுகூறாது இருமூன்று மரபினேனோரெனக் கூடவோதினார், வழிபாடும் வேள்வியும் ஒழிந்த தொழில் இருவர்க்குமொத்தலின்.

இனி வேளாளர்க்கு வழிபாடு கொள்ளாது பெண்கோடல் பற்றி வேட்டல் உளதென்று வேட்டலைக்கூட்டி ஆறென்பாருமுளர். வழிபாடு இருவகை வேளாளர்க்கும் உரித்து. இனி வேட்டலைக் கூட்டுவார் அரசராற் சிறப்பெய்தாத வேளாளர்க்கே வழிபாடு உரித்தென்பர்.

பக்கமென்பதனான் *வாணிகர்க்கும் வேளாளர்க்கும் அன்னியராகத் தோன்றினாரையும் அடக்குக; ஈண்டுப் பக்கத்தாராகிய குலத்தோர்க்குந் தொழில்வரையறை அவர் நிலைகளான் வேறுவேறு படுதல்பற்றி அவர்தொழில் கூறாது இங்ஙனம்
பக்கமென்பதனான் அடக்கினார். இவை ஆண்பால்பற்றி உயர்ச்சி கொண்டன.

உதரணம்:-

இது வாணிகரீகை.

இது வேளாளர் ஓதலின் சிறப்புக் கூறியது.

---------
(பாடம்) *'வாணிகர்க்கு, வேளாளர் கன்னியர்கட் டோன்றினாரையும்'

இஃது இருவர்க்கும் +ஈதற்சிறப்புக் கூறிற்று.

இது வேளாளர் நிரைகாத்தது.

இஃது உழவுத்தொழிற் சிறப்பு இருவர்க்குங் கூறியது.

இது வாணிகச்சிறப்பு இருவர்க்குங் கூறியது.

இது வழிபாடு கூறியது; ஏனைய வந்துழிக் காண்க.

மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும் - காமம் வெகுளி மயக்கமில்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வுமென்னும் மூவகைக் காலத்தினும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன் பக்கமும்;

தேயத்தைக் 'கிழவோ டேஎத்து' (இறையனாரகப்-8) என்றாற்போலக் கொள்க.

உதாரணம் :-

என வரும்.

--------
(பாடம்) * 'ஈதல் கூறிற்று.'


இதுவும் அது.

கலசயோனியாகிய அகத்தியன் முதலியோரும் அறிவரென்றுணர்க.

நாலிருவழக்கிற் றாபதப் பக்கமும்- அவ்வறிவர் கூறிய ஆகமத்தின்வழிநின்று வீடுபெற முயல்வார்க்கு† உரியவாகிய எண்வகை மார்க்கத்துத் தவம்புரியுங்கூறும்.

வழக்கென்றதனான் அந்நாலிரண்டுந் தவம்புரிவார்க்கு உரி யனவுந் தவஞ்செய்து யோகஞ்செய்வார்க்கு உரியனவுமென இருவகையவென்று கொள்க.

அவற்றுள் தவஞ்செய்வார்க்கு உரியன ஊணசையின்மை, நீர்நசையின்மை, வெப்பம்பொறுத்தல், தட்பம்பொறுத்தல், இடம்வரையறுத்தல், ஆசனம் வரையறுத்தல், இடையிட்டு மொழிதல், வாய்வாளாமை என எட்டும், இவற்றிற்கு உணவினும் நீரினுஞ்சென்ற மனத்தைத்தடுத்தலும், ஐந்தீநாப்பணும், நீர்நிலையினும் நிற்றலுங், கடலுங் காடும் மலையும் முதலியவற்றில் நிற்றலுந், தாமரையும் ஆம்பலும் யாமையும் முதலிய ஆசனத்திருத்தலும், உண்டற்காலை உரையாடாமையுந், துறந்த காற்றொட்டும் வாய்வாளாமையும் பொருளென் றுணர்க.

இனி யோகஞ்செய்வார்க்குரியன, இயமம், நியமம் ஆசனம் வளிநிலை தொகைநிலை பொறைநிலை நினைதல் சமாதி என எட் டும். இவற்றை,

------------------------
(பாடம்) *'விலங்கு' †'வீடு முயல்வார்க்கு' ‡'யுணர்தல்' §'அரசர்க்'


என்பனவுங் கொள்க.

எனவும்,

எனவும்,

-----------
(பாடம்) * 'தசைப்பது.' + 'கடும்புகை.' ++ 'கூழைத் துதிப்பானும்.' & 'நூறிய.'


எனவும்,

எனவும்,

எனவும் வரும்.

ஏனைய வந்துழிக் காண்க.

அறிமரபிற் பொருநர்கட் பாலும் - தாந்தாம், அறியும் இலக்கணங்களாலே போர்செய்வாரிடத்துக் கூறுபாடும்;

அவை சொல்லானும் பாட்டானுங் கூத்தானும் மல்லானுஞ் சூதானும் பிறவாற்றானும் *வேறலாம்.

உதாரணம் :-

இது சொல்வென்றி.

இது பாடல்வென்றி.

இஃது ஆடல்வென்றி.

------------
(பாடம்) * 'பொரலாம்.' + 'வேற்றுமையாற் - பண்டங்கு.' ++ 'ஈர்ஞ்சுவையும்.'


இது மல்வென்றி.

இது சூதுவென்றி.

அனைநிலை வகையோடு ஆங்கு எழுவகையில் தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்- அக்கூறுபட்ட ஆறுபகுதியும் நிலைக்கள‌மாக அவற்றுக்கண் தோன்றிய வேறுபட்ட கூறு பாட்டோடு முன்னைய ஆறுங் கூட்டி அவ்வெழுகூற்றால் துறை பல திரண்ட தொகை பெற்றது அவ்வாகைத்திணை என்று கூறுவா ராசிரியர் என்றவாறு.

அனையென்றது சுட்டு. நிலை - நிலக்களம், நிலையது வகை.
ஆங்கென்றதனை அனைநிலைவகையொ டென்பதனகண் வகைக்கு
முன்னே கூட்டுக. ஓடு எண்ணிடைச்சொல்லாதலின் முன்
ணெண்ணியவற்றொடு கூட்டி ஏழாயிற்று.

இனிப் பார்ப்பனப்பக்கத்து வகையாவன பார்ப்பார்க்கும் பார்ப்பனக் கன்னியிடத்துக் கற்பு நிகழ்வதற்கு முன்னே கள‌வில் தோன்றினானும், அவள் பிறர்க்குரியாளாகிய காலத்துக் களவில் தோன்றினானும், அவள் கணவனை இழந்திருந்துழித்# தோன்றினானும், ஒழிந்த மூவகை வருணத்துப் பெண்பாற்கண்ணும் இவ்வாறே தோன்றினாரும், அவரவர் மக்கட்கண் அவ்வாறே பிறழத் தோன்றினாருமாகிய சாதிகளாம். இன்னோருந் தத்தந் தொழில்வகையாற் பாகுபட மிகுதிப்படுத்தல் வாகைத் திணையாம். ஒழிந்த பகுதி ஐந்தற்கும் இஃதொக்கும். இன்னும் பெண்பாலுயர்ந்து ஆண்பாலிழிந்தவழிப் பிறந்த சாதிகளும் அனைநிலைவகைப்பாற்படும். யோகிகளாய் உபாயங்களான் முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலியோர் அறிவன்றேயத்து அனை நிலைவகையோராவர்; அவர்க்கு மாணாக்கராகித் தவஞ்செய்வோர் தாபதப்ப‌க்கத்தாராவர். தகர்வென்றி பூழ்வென்றி கோழிவென்றி முதலியன பாலறிமரபிற் பொருநர்கண் அனை நிலைவகையாம்.------------
76.

-------------------
# 'உதாரணம் வந்துழிக் காண்க.'

இது மேல் தொகுத்துக் கூறிய எழுவகைத் திணையுள் அடங்காதவற்றிற்கு முற்கூறிய துறைகளேபோலத் தொடர் நிலைப்படுத்தாது மறத்திற்கு ஒன்பதும் அறத்திற்கு ஒன்பதுமாக இருவகைப் படுத்துத் துறை கூறுகின்றது.

(இ-ள்) கூதிர் வேனில் என்று இரு பாசறைக் காதலின் ஒன்றிக் கண்ணிய மரபினும்- கூதிரெனவும் வேனிலெனவும் பெயர்பெற்ற இருவகைப் பாசறைக்கண்ணுங் காதலால் திரிவில்லாத மனத்தனாகி ஆண்டு நிகழ்த்தும் போர்த்தொழில் கருதிய மரபானும்;

கூதிர், வேனில் ஆகுபெயர். அக்காலங்களிற்சென்றிருக்கும் பாசறையாவது தண்மைக்கும் வெம்மைக்குந் தலைமைபெற்ற காலத்துப் போகத்திற் பற்றற்று வேற்றுப்புலத்துப் போந் திருத்தல். இக் காலங்களிற் பிரிதல் வன்மையின் இது வென்றியாயிற்று. தலைவிமேற் காதலின்றிப் போரின்மேற் காதல்சேறலின் ஒன்றெயென்றார். இக்காலத்துச் சிறப்புப்பற்றி இரண்டையும் ஓதினாரேனும் ஓர்யாட்டை எல்லை இருப்பினும் அவற்று வழித்தோன்றிய ஏனைக் காலங்களும் இரண்டாகி அவற்றுள் அடங்குமென்பது ஆசிரியர் கருத்தாயிற்று.

எனத் தலைவியை நினைவன வாகைக்கு வழுவாம். அகத்திற்கு வழுவன்றென்றற்கு மரபென்றார். *ஏனையகாலங்களாற் பாசறைப்பெயர் இன்றென்றற்கு இரண்டானும் பெயர் கூறினார். இங்ஙனங் கூறவே முற்கூறிய துறைபோலத் தொடர் நிலைப்படுத்தலின்றாய் இதனானே பலவாகி ஒருதுறைப்படுத்தலும் இன்றாயிற்று.

இனி இருத்தற்பொருண் முல்லையென்பதேபற்றிப் பாசறைக்கண் இருத்தலாற் பாசறைமுல்லையெனப் பெயர் கூறு வாரும் உளர்.


உதாரணம்:--

என வரும்.

எனவும் வரும்,

ஏரோர் களவழி(த் தேரோர் தோற்றிய வென்றி) யன்றிக் களவழித் தேரோர் தோற்றிய வென்றியும்- வேளாண்மாக்கள் விளையுட்காலத்துக் களத்துச் செய்யுஞ் செய்கைகளைத் தேரேறி வந்த கிணைப்பொருநர் முதலியோர் போர்க்களத்தே தோற்றுவித்த வென்றியன்றிக் களவழிச் *செய்கைகளை மாறாது தேரேறி வந்த புலவர் தோற்றுவித்த வென்றியானும்;

என்றது நெற்கதிரைக்கொன்று களத்திற் குவித்துப் போர் அழித்து, அதரிதிரித்துச் சுற்றத்தொடு நுகர்வதற்கு முன்னே கடவுட் பலிகொடுத்துப் பின்னர்ப் பரிசிலாளர் முகந்து கொள்ள வரிசையின் அளிக்குமாறுபோல, அரசனும் நாற் படையையும் கொன்று களத்திற் குவித்து எருது களிறாக †வாள்பட ஓச்சி அதரிதிரித்துப் பிணக்குவையை நிணச்சேற்றொடு உதிரப் பேருலைக்கண் ஏற்றி ஈனாவேண்மான் இடத்துழந் தட்ட கூழ்ப்பலியைப் பலியாகக்கொடுத்து எஞ்சிநின்ற யானை குதிரைகளையும் ஆண்டுப்பெற்றன பலவற்றையும் பரிசிலர் முகந்துகொள்ளக் கொடுத்தலாம்.


உதாரணம்:--

என வரும்,.

"நளிகட லிருங்குட்டத்து" என்னும் (26) புறப்பாட்டுப் பலி கொடுத்தது.

களவழிநாற்பது புலவர் களவழியைத் தோற்றுவித்தது.

என வரும்.

தேரோர்வென்ற கோமான் முன்தேர்க் குரவையும்- தேரின்கண் வந்த அரசர் பலரையும் வென்ற வேந்தன் வெற்றிக் களிப்பாலே தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரோடு கை பிணைந்தாடுங் குரவையானும்;

உதாரணம்:--

--------------------
(பாடம்) *'நீடலின்' †'கணநரி,' 'புகாநரி'


என வரும்.

ஒன்றிய மரபிற் பிந்தேர்க் குரவையும்-தேரோரைவென்ற கோமாற்கே பொருந்திய இலக்கணத்தானே தேரின் பின்னே கூழுண்ட கொற்றவை கூளிச்சுற்றம் ஆடுங் குரவை யானும்;

உதாரணம்:-

என வரும்.

என்பதும் அது.

பெரும்பகை தாங்கும் வேலினாலும்-போர்க்கணன்றியும் பெரியோராகிய பகைவரை அத்தொழிற்சிறப்பான் அஞ்சுவித்துத் தடுக்கும் வேற்றொழில் வன்மையானும்;

காத்தற்றொழிலன்றி அழித்தற்றொழில் பூண்ட முக்கட் கடவுட்குச் சூலவேல் படையாதலானும் முருகற்கு வேல் படையாதலானுஞ் சான்றோர் வெற்படையே சிறப்பப் பெரும்பான்மை கூறலானும் வேலைக் கூறி ஏனைப்படைகளெல்லாம்,

--------------
(பாடம்) * ’மடங்காப் பெருமையின்.’ + ’கொண்டாடினர்.’
# ‘குடர்த்தலைமாலை துயல்வரச் சூடி யுணர்த்தின.’

என்னும் உத்தியாற் பெறவைத்தார்.

உதாரணம்:-

இது பாரதம்.

என்பதும் அது.

"இவ்வே, பீலியணிந்து" என்னும்(65) புறப்பாட்டும் அது.

அரும்பகை தாங்கும் ஆற்றலானும்-வெலற்கரும் பகைவர் மிகையை நன்குமதியாது எதிரேற்றுக்கொள்ளும் அமைதியானும்;

உதாரணம்:-

என வரும்.

"களம்புக லோம்புமின்" என்னும்(87) புறப்பாட்டும் அது.

வாழ்க்கை புல்லா வல்லாண் பக்கமும்-உயிர்வாழ்க்கையைப் பொருந்தாத வலிய ஆண்பாலின் கூறுபாட்டானும்; பக்கமென்றாதனாற் தாபதப்பக்கமல்லாத போர்த்தொழிலாகிய வல்லாண்மையே* கொள்க.

------------
(பாடம்) * ‘சில்வினை.’ + ’ஈர்க்கு.’

உதாரணம்:-

இப் பாரதத்துள் அது காண்க.

ஒல்லார் நாணப் பெரியவர்க் கண்ணிச் சொல்லிய வகையின் ஒன்றோடுபுணர்ந்து தொலலுயிர் வழங்கிய அவிப்பலியானும்- பகைவர் நாணும்படியாக உயர்ந்தோரான் நன்குமதித்தலைக் கருதி இன்னது செய்யேனாயின் இன்னது செய்வலெனத் தான் கூறிய பகுதியிரண்டனுள் ஒன்றனோடே பொருந்திப் பல பிறப்பினும் பழகிவருகின்ற உயிரை அங்கியங்கடவுட்குக்# கொடுத்தட் அவிப்பலியானும்;

நாணுதலாவது நம்மை அவன் செய்யாதே நாம் அவனை அறப்போர் செய்யாது வஞ்சனையால் வென்றமையில் அவன் தன்னுயிரை அவிப்பலி கொடுத்தானென நாணுதல்.

உதாரணம்,-

இப் பாரதத்துள் ஒருவன் இன்னது செய்வலென்று அது செய்ய முடியாமையின் அவிப்பலி கொடுத்தவாறு காண்க.

இதுவும் அது.

ஒல்லாரிடவயிற் புல்லியபாங்கினும்-பகைவராயினும் அவர் சுற்றமாயினும் வந்து உயிரும் உடம்பும் உறுப்பும்போல் வன வேண்டியக்கால் அவர்க்கவை மனமகிழ்ந்து கொடுத்துநட்புச்செய்தலானும்;

----------- (பாடம்) * ‘வல்லானே.’ +’புண்ணியமாம்.’
# ‘அங்கிக் கடவுள்.’

உதாரணம் :-

இப் பாரதத்துப் பகைவனாற் படுதலறிந்துந் தன் கவசகுண்டலங் கொடுத்தமை கூறினமையிற் புல்லியபாங்காயிற்று. அது வீரம்பற்றிய கருணையாகலின் வாகையாயிற்று.

இத்துணையு மறத்திற்குக் கூறியன.

பகட்டினானும் மாவினானும் துகட்டபு சிறப்பிற் சான்றோர்
பக்கமும் - எருதும் எருமையுமாகிய பகட்டினானும் யானையுங்
குதிரையுமாகிய மாவினானுங் குற்றத்தினீங்குஞ் சிறப்பினால்
அமைந்தோரது கூறுபாட்டானும்;

இவற்றான் உழவஞ்சாமையும் பகையஞ்சாமையுமாகிய வெற்றி கூறினார். பக்கமென்றதனாற் புனிறுறாவுங் காலாளுந் தேருங் கொள்க.

உதாரணம் :-

என்பதும் அது.

----------------
(பாடம்) * 'நன்றி.' + 'பெயர.' ++ 'தெய்வயாழின்.'

கட்டில் நீத்த பாலினானும் - அரசன் அரசவுரிமையைக் கைவிட்ட பகுதியானும்; அது பரதனும் பார்த்தனும் போல்வார் அரசு துறந்த வென்றி.

உதாரணம்:-

இஃது அரசு கட்டினீத்தபால்.

என்பதும் அது.

எட்டுவகை நுதலிய அவையத்தானும்- எண்வகைக் குணத்தினைக் கருதிய அவையத்தாரது நிலைமையானும்;

அவை குடிப்பிறப்புக் கல்வி ஒழுக்கம் வாய்மை தூய்மை நடுவுநிலைமை அழுக்காறின்மை அவாவின்மை எனவிவையுடையராய், $அவைக்கண் முந்தியிருப்போர் வெற்றியைக் கூறுதல்.

உதாரணம்:-

-----------------
(பாடம்) * 'மண்ணக வளாக நிறைய நுண்வெயிற்- றுகளினு
நொய்தா லம்மதானே- யிஃதெவன் குறித்தனன் கொல்லோ மொய்தவ.'
# 'விடாஅது திருவே."
$ 'உடையாரவைக்கண் முந்தியிருப்பதோர் வெற்றி.' & "நாளினும்."என இதனுள் எட்டும் வந்தன.

கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமையானும்- வேத முதலியவற்றாற் கட்டுதலமைந்த ஒழுக்கத்தடு பொருந்திய காட்சியானும்;

கண்ணதுதன்மை கண்மையெனப்படுதலின் அதனைக்
கண்ணுமையென உகரங்கொடுத்தார். எண்மை வன்மை வல்லோர் என்பது எளுமை வலுமை வல்லுவோர் என்றாற்போல.

இவை மனத்தான் இவ்வொழுக்கங்களைக் குறிக்கொண்டு ஐம்பொறியினை வென்று தடுத்தலாம் அவை இல்லறத்திற்கு உரியவாக நான்கு வருணத்தார்க்குங் கூறிய அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை. பிறர்மனை நயவாமை, வேஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறையுடைமை முதலியனவாம்.

உதாரணம்:-

-----------------
(பாடம்) *'உடனய லிருக்கை யொருநா ளாமெனின்'


என இது தொகுத்துக் கூறியது.

இடையில்வண்புகழ்க் கொடைமையானும்- இடையீ டில்லாத வண்புகழைப் பயக்குங் கொடைமையானும்;

உலகமுழுதும் பிறர்புகழ் வாராமைத் தன்புகழ் பரத்தலின் இடையி லென்றார்.

வண்புகழ்-வள்ளிதாகிய புகழ்; அது வளனுடையதென விரியும். இக்கொடைப் புகழுடையான் மூப்புப் பிணி சாக்காட்டுக்கு அஞ்சாமையின் அது வாகையாம்.

உதாரணம்:-

என வரும். இது புறம்.

----------------
(பாடம்) *'கிளைமையோன்,'

பிழைத்தோர்த் தாங்குங் காவலானும்- தம்மைப் பிழைத்தோரைப் பொறுக்கும் பாதுகாப்பானும்;

காவலாவது இம்மையும் மறுமையும் அவர்க்கு ஏதம் வாரா மற் காத்தலாதலால், இஃது ஏனையோரின் வெற்றியாயிற்று.

உதாரணம்:-

"அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்த றலை" (குறள்-பொறை-1)

என வரும்.

பொருளொடு புணர்ந்த பக்கத்தானும்- அரசர்க்குரியவாகிய படை குடி கூழ் அமைச்சு நட்பு முதலியனவும் புதல்வரைப் பெறுவனவுமாகிய பொருட்டிறத்துப்பட்ட வாகைப் பகுதியானும்;

பக்கமென்றதனான் மெய்ப்பொரு ளுணர்த்துதலுங்கொள்க.

உதாரணம்:-

நாடு அரண்முதலாகக் கூறுவனவெல்லாந் திருவள்ளுவப் பயனிற் காண்க.

என வரும்.


அருளொடு புணர்ந்த அகற்சியானும்- அருளுடைமையோடு பொருந்திய துறவறத்தனும்:

அருளொடு புணர்தலாவது ஓருயிர்க்கு இடர்வந்துழித் தன்னுயிரைக் கொடுத்துக் காத்தலும் அதன் வருத்தந் தன‌தாக வருந்துதலும் பொய்யாமை கள்ளாமை முதலியன‌வுமாம். இக்கருத்து நிகழ்ந்த பின்னர்த் துறவுள்ளம் பிறத்தலின் இதுவும் அறவெற்றியாயிற்று.

உதாரணம்:-

ஏனையவும் இதன்கண் அடக்குக.

காமம் நீத்த பாலினானும் - அங்ஙனம் பிறந்தபின்னர்& எப்
பொருள்களினும் பற்றற்ற பகுதியானும்;

உதாரணம் :-

என வரும்.

பாலென்றதனால் உலகியலு ணின்றே காமத்தினைக் கைவிட்ட பகுதியுங் கொள்க.

------------
(பாடம்) #'தானக் கூருகிர்.' $ 'ஆருயிர்க்காவல்.'
& துறவுள்ளம் பிறந்த பின்னர் என்றவாறு.

என வரும்.

என்று இருபாற்பட்ட ஒன்பதிற்றுத் துறைத்தே- முன்னர் ஒன்பானும் பின்னர் ஒன்பானுமாக இரண்டு கூறுபட்ட ஒன்பதாகிய பதினெட்டுத் துறையினையுடைத்து வாகை என்றவாறு.

இதனுள் ஏது விரியாதனவற்றிற்கும் ஏது விரித்தவாற்றான் இருபாற்பட்ட பதினெட்டாத லுடைத்தென முடிக்க. (21)

---------------

77.

இத்துணையும் உரிப்பொருள்பெற்ற அகத்திணைக்குப் புறங்கூறி, இஃது உரிப்பொருளில்லாத பெருந்திணைக்குப் புறனிது வென்கின்றது. இது வாகைக்குப் பின்வைத்தார், வீரக்குறிப்பு நிலையாமைக் குறிப்போடு உறவுடைத்து என்றற்கு.

(இ-ள்) காஞ்சிதானே பெருந்திணைப் புறனே- எழுதிணையுட் காஞ்சிதானேயெனப் பிரிக்கப்பட்ட புறத்திணை பெருந்திணைக்குப் புறனாம் என்றவாறு.

அதற்கு இது புறனாயவாறு* என்னையெனின், எண்வகை மணத்தினும் நான்குமணம்பெற்ற பெருந்திணைபோல இக்காஞ்சியும் அற முதலாகிய மும்முதற்பொருளும் அவற்றது நிலை யின்மையுமாகிய ஆறனுள்ளும் நிலையின்மை மூன்றற்கும் உரித்தாய் எல்லாத்திணைகட்கும் ஒத்த மரபிற்றாகலானும், 'பின்னர் நான்கும் பெருந்திணை பெறும்' (தொல்.-களவியல்-14) என்ற நான்குஞ் சான்றோர் இகழ்ந்தாற் போல அறம் முதலியவற்றது நிலையின்மையுணர்ந்து அவற்றை அவர் இகழ்தலானும், 'ஏறிய மடற்றிற' (தொல்-அகத்-51) முதலிய நான்குந் தீய காமமாயினவாறுபோல உலகியனோக்கி நிலையாமையும் நற்பொருளன்றாகலானும், உரிப்பொருள் இடைமயங்கி வருதலன்றித் தனக்கு நிலமில்லாத பெருந்திணைபோல அறம்பொரு ளின்பம் பற்றியன்றி வேறுவேறு நிலையாமையென்பதோர் பொருளின்றாதல் ஒப்புமையானும், பெருந்திணைக்குக் காஞ்சி புறனாயிற்று. 'கைக் கிளை முதலாப் பெருந்திணையிறுவாய்' (தொல்-அகத்-1) ஏழனையும் அகமென்றலின் அவ்வத்திற்கு இது புறனாவதன்றிப் புறப்புறமென்றல் ஆகாமையுணர்க. இது மேலதற்கும் ஒக்கும். (22)

-----------
(பாடம்) *'அஃது அகத்துக்குப் புறனாயவாறு'

-----------

78.

இது முற்கூறிய காஞ்சிக்குப் பொது இலக்கணங் கூறுகின்றது*

(இ-ள்) பாங்கருஞ் சிறப்பின்- தனக்குத் துணையில்லாத வீட்டின்பம்† ஏதுவாக; பல்லாற்றானும்- அறம் பொருள் இன்பமாகிய பொருட்பகுதியானும் அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக்கையுஞ் செல்வமும் இளமையும் முதலியவற்றானும்; நில்லா உலகம் புல்லிய நெறித்து- நிலைபே றில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை யுடைத்துக் காஞ்சி என்றவாறு.

எனவே வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர் சாற்றுங் குறிப்பினது‡ காஞ்சியாயிற்று. பாங்கு-துணை.

உலகிற்கு நிலையாமை கூறுங்கால் அறமுதலாகிய பொருட் பகுதி ஏதுவாகக் கூறினன்றி உலகென்பதற்கு வடிவு வேறின்மையிற் பல்லாற்றானுமென்று ஆன் உருபு கொடுத்தார். கெடுங்காற் கணந்தோறுங் கெடுவனவுங் கற்பந்தோறுங் கெடுவனவுமா மென்றற்கு ஆறென்றார். நிலைபெற்ற வீட்டினான் இவற்றின் நிலையாமையுணர்தலின் வீடு ஏதுவாயிற்று. பல்லாற்றனுமென்றதனாற் சில்லாற்றானும் வீடேது வாகலின்றி நிலையாமைக்குறிப்பு ஏதுவாகலுங் கொள்க. இஃது அறிவன் தேயமுந் தாபதப்பக்கமும்பற்றி நிலையின்மைக் குறிப்புப் பெற்றாம்.

உதாரணம்:-

-------
(பாடம்) *'இலக்கணம் உணர்த்துகின்றது.' †'பேரின்பம்.' ‡'குறிப்பாயினது'
§'முகனக', 'முதலாக.' 'வழியிடை.' $'வயங்கு மணியாத்து.'

இதனுள் உண்டென உரைப்பரால் உண‌னர்ந்தோ ரென்ற‌லின் வீடுபேறு ஏதுவாகத் தாபதர் போல்வார் நில்லா உலகம் புல்லியதாயிற்று. வீடுபேறு நிமித்தமாகச் சான்றோர் பல‌ வேறு நிலையாமையை அறைந்த& மதுரைக்காஞ்சி இதற்கு உதாரணமாம். (23)

-------------

79.

-------------
(பாடம்) # 'முன்பின்.' $'உள்ளேன்.' &'அறிந்த‌.' +'புண்கழித்து.'

இது முற்கூறிய காஞ்சித்திணை வீடேதுவாகவன்றி வாளாது நிலையின்மை தோன்றக் கூறும்பகுதி கூறுகின்றது. இதுவும் வாகையைத் தொகுத்தோதிய பொதுச்சூத்திரம்போலத் துறையொடும் படாது நிலையின்மைப்பொருளை வகுத்தோதிய சூத்திர‌மென்றுணர்க.

(இ-ள்.) மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமையும்- பிறராற் றடுத்தற்கரிய கூற்றம் வருமெனச் சான்றோர் சாற்றிய பெருங்காஞ்சியானும்;

கூற்றாவது, வாழ்நாள் இடையறாது செல்லுங் காலத்தினைப் பொருள்வகையாற் கூறுபடுத்துங் கடவுள்; அதனைத்தான் பேரூர்க் கூற்றம்போலக் கொள்க. கூற்றத்திற்குக் காலமென்பது வேறன்மையிற் 'காலம் உலகம்' என (தொல்-சொல்- கிளவி- 58.) முன்னே கூறினார்.

---------------
(பாடம்.) #'தலைமகன் புலம்பிய முதுபாலை நிலையும்.' $ 'சிறுவன்.'

உதாரணம் :-

இது வீடேதுவா கவன்றி வீடுபேற்று நெறிக்கட் செல்லும் நெறியேதுவாகக் கூறியது.

"இருங்கடலுடுத்த" என்னும் (363) புறப்பாட்டும் அது.

கழிந்தோர் ஒழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும் - இளமைத்தன்மை கழிந்து அறிவுமிக்கோர் இளமைகழியாத அறிவின் மாக்கட்குக் காட்டிய முதுகாஞ்சியானும்;

முதுமை மூப்பதலான் அது காட்சிப்பொருளாக இளமை நிலையாமை கூறிற்றாம்.+

உதாரணம் :-

இது வீடுபெறுதற்கு வழிகூறியது.

பண்புறவரூஉம் பகுதி நோக்கிப் புண்கிழித்து முடியும் மறத்தினானும் - நன்றாகிய குணம் உறுநிலையாகப்## பெறுகின்ற பகுதி யாராய்ந்து பெறுதற்குப் பட்ட விழுப்புண் தீர்ந்து வாழும் வாழ்க்கை நிலையின்மையின் அதனை வேண்டாது புண்ணைக் கிழித்து இறக்கும் மறக்காஞ்சியானும்;இஃது யாக்கை நிலையின்மையை நோக்கிப் புகழ்பெறுதல் குறித்தது. இதனை வாகைதுதிணைப்பின்னர் வைத்தார்; இக்காஞ்சியும் வாகையொடு மயங்கியுங் காஞ்சியா தல்பற்றி.

உதாரணம் :-

இது போர் முடிந்தபின் களம்புக்கு நடுகல் ஆயினானைக் கண்டு உடம்பினது நிலையின்மையினையும் பண்புறவருதலையும் நோக்கி இறந்தமை கூறலிற் காஞ்சியாயிற்று.

ஏமச் சுற்றம் இன்றிப் புண்ணோற் பேஎய் ஒம்பிய பேஎய்ப் பக்கமும் - கங்குல யாமத்துக் காத்தற்குரிய சுற்றக்குழாமின்மையின் அருகுவந்து புண்பட்டோனைப் பேயானே காத்த பேய்க்காஞ்சியானும்;

பேய் காத்ததென்றலின் ஏமம் இரவில் யாமமாயிற்று; ஏமம் காப்புமாம். ஓம்புதலாவது அவனுயிர் போந்துணையும் ஓரியும் நரியுங் கிடந்தவன் தசையைக் கோடலஞ்சிப் பாதுகாத்தலாம்.

இது சுற்றத்தாரின்மை கூறலிற் செல்வநிலையாமை யாயிற்று. பக்கமென்றதனாற் பெண்டிர் போல்வார் காத்தலும் பேயோம்பாத பக்கமுங் கொள்க.

உதாரணம் :-

என வரும்.


ஏனைய வந்துழிக் காண்க.

இன்னன் என்று இரங்கிய மன்னையானும் - ஒருவன் இறந்துழி அவன் இத்தன்மையோனென்று ஏனையோர் இரங்கிய கழிவு பொருட்கண்வந்த மன்னைக்காஞ்சியானும்;

இது பலவற்றின் நிலையாமைகூறி இரங்குதலின் மன்னைக் காஞ்சியென வேறுபெயர் கொடுத்தார். இது பெரும்பான்மை மன் என்னும் இடைச்சொற் பற்றியே வருமென்றற்கு மன் கூறினார்.* இது மன்னையெனத் திரிந்து காஞ்சியென்பத-னோடடுத்து நின்றது.† இஃது உடம்பொடு புணர்த்தல்.

என இப் புறப்பாட்டு மன் அடுத்து அப்பொருடந்தது.

இது மன் அடாது அப்பொருடந்தது.

"செற்றன் றாயினும்" என்னும் (226) புறப்பாட்டு முதலியனவும் அன்ன.

இதனை ஆண்பாற் கையறுநிலை யெனினும் அமையும்.

இன்னது பிழைப்பின் இதுவாகியரேனத் துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத்தானும் - இத்தன்மைய தொன்றினைச் செய்தலாற்றேனாயின் இன்னவாறாகக் கடவேனெனக் கூறிய வஞ்சினக் காஞ்சியானும்;


அது தான்செய்யக் கருதியது பொய்த்துத் தனக்கு வருங்குற்றத்தால் உயிர்முதலியன துறப்ப னென்றல். சிறப்பு – வீடு பேறன்றி உலகியலிற் பெருஞ்சிறப்பு.

உதாரணம் :-

"நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்" "மடங்கலிற் சினைஇய" என்னும் (72,74) புறப்பாட்டுக்கள் உயருஞ் செல்வமும் போல்வன நிலையும் பொருளென நினையாது வஞ்சினஞ் செய்தன.

இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணோற் றுன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும் - இனிதாகிய நகையினையுடைய மனைவி தன் கணவன் புண்ணுறறோனைப் பேய் தீண்டுதலை நீக்கித் தானுந் தீண்டாத காஞ்சியானும்;

என்றது, நகையாடுங் காதலுடையாள், அவனைக் காத்து விடிவளவுஞ் சுற்றுதலன்றி முயங்குதற்கு உள்ளம் பிறவாதபடி அவன் நிலைமையை எய்தினானென்றவாறு.

இதுவும் ஆண்பாற்காஞ்சியாம். இக் காஞ்சி யென்பதனை முன்னும் பின்னுங் கூட்டுக.

-----------
(பாடம்) *'தீங்கினி யாஅமொடு.' +'மனைச்செரீஇய.' ++'யாங்கு மருப்பு.'
@'கைபயப் பெயர்த்து. @'மையிழு திழுகி.'

என வரும்.

நீத்த கணவற் றீர்த்த வேலிற் பேஎத்த மனைவி ஆஞ்சியானும்-உயிர்நீத்த கணவன் தன்னுறவை நீக்கின வேல்வடுவாலே மனைவி அஞ்சின ஆஞ்சிக்காஞ்சியானும்;

எஞ்ஞான்றும் இன்பஞ்செய்த கணவனுடம்பு அறிகுறி தெரியாமற் புண்பட்டு அச்சநிகழ்தலின், யாக்கை நிலையாமை கூறியதாம். பேஎத்த என்பது உரிச்சொன் முதனிலையாகப் பிறந்த பெயரெச்சம். அஞ்சின, ஆஞ்சி யென நின்றது.

என வரும்.

இனி ‘வேலிற்பெயர்த்த மனைவி’ யென்று பாடமோதி, அவ்வேலான் உயிரைப்போக்கின மனைவி யென்று கூறி, அதற்குக்

என்பது காட்டுப.

நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பாலானும்- பெண்கோளொழுக்கத்தினெத்து மறுத்தல் பற்றிப் பகைவனாய் வலிந்து கோடற்கு எடுத்துவந்த அரசனோடு முதுகுடித் தலைவராகிய வாணிகரும் வேளாளருந் தத்தம் மகளிரைப் படுத்தற்கு அஞ்சிய மகட்பாற் காஞ்சியானும்;

வேந்தியலாவது உயிர்போற்றாது வாழ்தலின், அவரது நிலையினை நோக்கி, அவரோடொத்து மகளிரைப் படுத்தற் கஞ்சி மறுப்பாராதலின் அஞ்சியவென்றும், மேல்வந்த வென்றுங் கூறினார். அம்முது குடிகள் தாம் பொருதுபடக் கருதுதலின் உயிரது நிலையாமை உணர்ந்த காஞ்சி யாயிற்று. பாலென்றத னான். முதுகுடிகளேயன்றி 'அனைநிலைவகை' (தொல்-புறத் திணை-20) யெனப்பட்டார் கண்ணும் இத்துறை நிகழ்தல் கொள்க.

-------------
(பாடம்) * ’காக்க வம்மோ.’ † ‘தொழில்.’ ‡ ‘இன்னு முடம்பு.’

உதாரணம் :-

என் வரும்.

இதனுள் "நிரலல் லோர்க்குத் தரலோ வில்லென" என்றலின், அரசர்க்கு மகட்கொடைக் குரியரல்லாத அனைநிலை வகையோர்பாற் பட்டது.

முலையும் முகனுஞ் சேர்த்திக் கொண்டோன் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ ஈரைந்தாகு மென்ப – தன் கணவன் தலையைத் தன்முகத்தினும் முலையினுஞ் சேர்த்திக்கொண்டு, அத்தலையான் மனைவி யிறந்த நிலைமையானுந் தொகைபெற்றுக் காஞ்சி பத்துவகைப்படுமென்று கூறுவாராசிரியர் என்றவாறு.


தலை, அவள் இறத்தற்கேதுவாகலின் அது வினைமுதலாயிற்று. மேல் துறை இரண்டென்பாராகலின், இவை பத்தும் ஒருதுறையாமென்றற்கும் இவை ஆண்பாற்குரிய வென்றற்கும் ஈரைந்தென வேறோர்தொகை கொடுத்தார். அவன் தலையல்லது உடம்பினை அவள் பெறாமையின், அவன் யாக்கைக்கு நிலையின்மை யெய்தலின், இதுவும் ஆண்பாற்கே சிறந்ததாம். மனைவி இறந்துபடுதலும்* அதனாலெய்துதலின் மேல்வருகின்ற பெண்பாற்கும் இயைபுபடப் பின்வைத்தார். இதற் கியைபுபடத் தொடாக்காஞ்சியும் ஆஞ்சிக்காஞ்சியும் பெண்பாலொடுபட்ட ஆண்பாற் காஞ்சியாதலின் முன்வைத்தார். இவை ஒருவகையாற் பெண்பாற்கண்ணு நிலையின்மையுடைய வாயினும் இரண்டிடத்தும் ஓதிச் சூத்திரம் பல்காமற், சிறப்புடைய ஆண் மகற்கே ஓதிப் பெண்பாற் பகுதியுந் தழீஇயினா ரென்றுணர்க. இனி வருகின்ற பத்தும் பெண்பாற்கே யுரிமையின் அவற்றிற்கும் ஈரைந்தென்பதனைக் கூட்டிமுடிக்க.

உதாரணம்:-

என வரும்.

பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் ஆய்ந்த பூசன் மயக்கத்தானும் -பெரும்புகழுடையவனாகி மாய்ந்தானொருவனைச் சுற்றிய பெண்கிளைச் சுற்றங் குரல்குறைவுபட்ட கூப்பீட்டு †மயக்கத்தானும்;

என்றது, சுற்றத்தார் அழுகைக்குரல் விரவியெழுந்த ஓசையை. ஆய்ந்தவென்பது உள்ளத னுணுக்கம். 'மாய்ந்த பூசன் மயக்க' மென்று பாடமாயிற், சுற்றம் ஒருங்கு மாய்ந்த வழிப் பிறரழுத பூசன் மயக்கமென்று கொள்ளினும் அமையும். ஈண்டு மாய்ந்த மகனென்றதூஉஞ் சுற்றப்படுவானை அறிவித்தற்கே; ஆண்பாலும் உடன்கூறியதன்று. மேலனவற்றிற்கும் இஃதொக்கும்.

-----------
(பாடம்) *'இறந்துபாடும்' †'கூப்பிட்ட மெய்மயக்கத்தானும்.'

உதாரணம்:--

என வரும்.

†"மீனுண் கொக்கின் றூவியன்ன " (277) புறப்பாட்டும் அது.

தாமே ஏங்கிய தாங்கரும் பையுளும்- அச்சுற்றத்தாருமின்றி மனைவியர் தாமே தத்தங் கொழுநரைத் தழீஇயிருந்து அழுதது கண்டோர் பொறுத்தற்கரிய நோயானும்;

தாமே யெனப் பன்மை கூறினார், ஒருவர்க்குத் தலைவியர் பலரென்றற்கு. ஏகாரஞ் சுற்றத்திற் பிரித்தலிற் பிரிநிலை.

இது செல்வமும் இன்பமும் ஒருங்கு நிலையாமை கூறியது.

என வரும்."கதிர்மூக் காரல் கீழ்ச்சேற் றொளிப்ப" என்னும் (249) புறப்பாட்டும் அது.

தாமே யேங்கிய என்பதற்குச் சிறைப்பட்டார் தாமே தனித்திருந்த தென்றுகூறிக்,

என்னும் புறப்பாட்டுக் காட்டுவாரும் உளர்.

கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தமும்- மனைவி தன்கணவன் முடிந்தபொழுதே உடன் முடிந்துபோகிய செலவுநினைந்து கண்டோர் பிறர்க் குணர்த்திய மூதானந்தத்தானும்;

ஆனந்தம்- சாக்காடு. முதுமை கூறினார். உழுவலன்புபற்றி. இப்படியிறத்தலின் இஃது யாக்கை நிலையின்மை.

உதாரணம்:--

என வரும்.

நனிமிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபாலையும்- மிகுதிமிக்க* அருநிலத்தே தன் கணவனை இழந்து தனித்த தலைமகள் தன் தனிமையை வெளிப்படுத்தின முதுபாலையானும்;

புலம்பிய வெனவே அழுதல் வெளிப்படுத்தல்† கூறிற்று. பாலையென்பது பிரிவாகலின், இது பெருமபிறி தாகிய பிரிவாதல் நோக்கி முதுபாலை யென்றார். நனிமிகு சுரமென்று இரு கால்‡ அதனருமை கூறவே, பின்பனிப் பிரிவு அதற்குச் சிறந்த
தன்றாயிற்று.§


இதுவும் இன்பமுஞ் செல்வமும் ஒருங்கு நிலையின்மை கூறிற்று.

என வரும்.

கழிந்தோர் தீஎத்து அழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும்- கணவனோடு மனைவியர் கழிந்துழி† அவர்கட்பட்ட அழிவுபொருளெல்லாம் பிறர்க்கு அறிவுறுத்தித் தாம் இறந்துபடா தொழிந்த ஆயத்தாரும் பரிசில்பெறும் விறலியருந் தனிப்படருழந்த செயலறு நிலைமையானும்;

ஒழிந்தோரென வரையாது கூறினமையிற் கழிந்தோராற் புரக்கப்படும் அவ்விருதிறத்தாரையும் உடன்கொள்க. கழிந்தோரென்ற பன்மையால் ஆண்பாலுந் தழீஇயினார்; கையறுநிலை அவரையன்றி அமையாமையின். ஆண்பாற் கையறுநிலை மன்னைக்காஞ்சியுள் அடங்கும். அழிவாவன புனல்விளையாட்டும், பொழில விளையாட்டுந், தலைவன்வென்றியும் போல்வன.

உதாரணம்:-

எனவரும்.

காதலி இழந்த தபுதார நிலையும்- தன் மனைவியைக் கணவனிழந்த தபுதார நிலையானும்;

என்றது தாரமிழந்தநிலை. தன் காதலியை இழந்தபின் வழிமுறைத் தாரம் வேண்டின், அது காஞ்சிக் குறிப்பன்று என்றற்கும் எஞ்ஞான்றும், மனைவியில்லாதானுந் தபுதார நிலைக்கு உரியனாயினும், அது காஞ்சியாகாதென்றற்குந், தபுதார நிலையென்றே பெயர்பெறுதன் மரபென்றற்குங், காதலியிழந்த நிலையுமென்றே ஒழியாது, பின்னுந் தபுதாரநிலையு மென்றார். தலைவர் வழிமுறைத்தாரமும் எய்துவாராகலின் அவர்க்கு நிலை யாமை சிறப்பின்மையின் ஆண்பாற் காஞ்சியன்றாயிற்று.


இஃது யாக்கையும் இன்பமும் ஒருங்கு நிலையின்மையாம்.

உதாரணம் :-

என வரும்.

காதலன் இழந்த தாபதநிலையும் - காதலனையிழந்த மனைவி தவம் புரிந்தோழுகிய நிலைமையானும்;

இருவரும் ஓருயிராய் நிகழ்ந்தமையின் உயிரும் உடம்பும் இன்பமுஞ் செல்வமும் ஒருங்கிழந்தாள் தலைவியேயாம்.

இதனை இல்லறம் இழத்தலின் அறநிலையின் அமையு மென்ப.

உதாரணம் :-

என வரும்.

நல்லோள் கணவனொடு நனியழற் புகீஇச் சொல்லிடையிட்ட பாலைநிலையும் - கற்புடைமனைவி தன்கணவன் இறந்து அவனோடு எரிபுகுதல் வேண்டி எரியை விலக்கினாரோடு உறழ்ந்துகூறிய புறங்காட்டு நிலையானும்;

எல்லா நிலத்தும் உள தாகி வேறுதனக்கு நிலனின்றி வருதலானும் நண்பகல்போல வெங்கனலான் வெதுப்புதலானும் புறங்காட்டைப் பாலை யென்றார்; பாலைத்தன்மை எய்திற்று என்றற்கு நிலையென்றார்.

உதாரணம்:-

என வரும்.

மாய்பெருஞ் சிறப்பிற் சிறுவற் பெயரத் தாய் தப வரூஉந் தலைப்பெயல் நிலையும் - பொருகளத்துப் பொருதுமாயும் பெருஞ்சிறப்பிற் றீர்ந்து தன்மகன* புறங்கொடுத்துப் போந்தானாக, அதுகேட்டுத் தாய் சாக்காடு துணிந்து சென்று மகனைக் கூடுங் கூட்டமொன்றானும்; இனி அவன்பிறர்சிறப்பு மாய்தற்குக் காரணமாகிய பெருஞ்சிறப்பொடு களப்பட்டுத் துறக்கத்துப் போயவழி அவனோடு இறந்துபட வரும் தாயது தலைப்பெயனிலைமை யொன்றானும்;

இவ் விருகூறும் உய்த்துக்கொண்டுணர்த லென்னும் உத்தி. நிலையென்றதனால் அவள் இறந்துபடாது மீட‌லுஞ் சிறுபான்மையாம் காஞ்சி யென்றுகொள்க, அஃது அன்பிற்கு
நிலையின்மையாம்.

இத் தகடூர் யாத்திரை கரியிடை வேலொழியப் போந்ததற்குத் தாய்தபவந்த தலைப்பெயனிலை,

-------------
(பாடம்) #'அடகிடைக்.'

இத் தகடூர்யாத்திரை துறக்கத்துப்பெயர்ந்த நெடுங்கோளன்$ தாய் இறந்துபட்ட தலைப்பெயனிலை.

இப் புறப்பாட்டு மீண்டது.

"ஈன்றுபுறந்தருதல்" என்னும் (312) புறப்பாட்டும் அது.

மலர்தலை உலகத்து மரபு நன்கறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு - அகன்ற இடத்தினையுடைய உலகங்களிடத்து வரலாற்றுமுறைமையினைப் பலரும் பெரிதுணரும் படியாகப் பிறந்தோரெல்லாரும் இறந்துபோகவும் எஞ்ஞான்றும் இறப்பின்றி நிலைபெற்ற புறங்காட்டினை வாழ்த்துத‌லானும்;

உதாரணம்:-

என வரும்.

--------
(பாடம்) #'புலாவழித் தாவா.' $'நெடுங்கேரளன்.' &'உலைந்தனன்.'

இதுவும் அது.

தொகைஇ ஈரைந்து ஆகுமென்ப – தொகைபெற்றுக் காஞ்சி பத்துவகைப்படுமென்று கூறுவர் ஆசிரியர்; நிறையருஞ் சிறபிற் றுறை இரண்டு உடைத்தே - ஆதலான்& அக் காஞ்சி நிறுத்தற்கு எதிர் பொருளில்லாத பெரிய சிறப்பினையுடைய ஆண்பாற்றுறையும் பெண்பாற்றுறையுமாகிய இரண்டு துறையினையுடைத்து என்றவாறு.

எனவே முற்கூறிய பத்தும் இப்பத்துமாக இருபதென்பதுங் கூறினாராயிற்று. நிறையருஞ் சிறப்பென்றதனானே மக்கட்குந் தேவர்க்கும் உள்ள நிலையாமையே காஞ்சிச் சிறப்புடைத்தாகக் கூறப்படுவது; ஏனை அஃறிணைப்பகுதிக்கண்ணுள்ள‌ நிலையாமை காஞ்சிச்சிறப்பன்று என்றுணர்க. (24)
---------------

80.

இது மேற் புறத்திணை யிலக்கணந் திறப்படக் கிளப்பின் (தொல்-புறத்திணை-1) என்புழிக் கிடக்கைமுறை கூறிய முறையான் இறுதிநின்ற பாடாண்டிணைக்குப் பொதுவிலக்கணம் உணர்த்துவான் அதற்குப் பெயர் இன்ன தெனவும், அது கைக்கிளைப்புறனாமெனவும், அஃது இத்துணைப் பொருளுடைத்தென‌வுங் கூறுகின்றது.

(இ-ள்.) பாடாண்பகுதி கைக்கிளைப்புறனே பாடாணெனப்பட்ட புறத்திணையது கூறு கைக்கிளையென்று கூறப்பட்ட அகத்திணைக்குப் புறனாம்; நாடுங்காலை நாலிரண்டு
உடைத்து - தன்னை நாடிச் சொல்லுவார் செய்யுளுண் முடிந்த பொருள் பாடாணாகவே நிறுப்ப நாடுங்காலத்து எண்வகைப் பொருளுடைத்து என்றவாறு.


பாடாணென்பது பாடுதல் வினையையும் பாடப்படும் ஆண் மகனையும் நோக்காது, அவனதொழுகலாறாகிய திணை யுணர்த் தினமையின் வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. ஒருதலைவன் பரவலும்# புகழ்ச்சியும் வேண்ட, ஒரு புலவன் வீடுபேறு முதலிய பரிசில் வேண்டலின் அவைதம்மின் வேறாகிய ஒருதலைக்காம மாகிய கைக்கிளையோ டொத்தலிற் பாடாண்டிணை கைக்கிளைப் புறனாயிற்று. வெட்சி முதலிய திணைகளுஞ் சுட்டி யொருவர் பெயர் கொடுத்துங் கொடாதும் பாடப் படுதலிற் பாடாண்டிணையாயினும், ஒருவனை ஒன்று நச்சிக் கூறாமையின், அவர் பெறுபுகழ் பிறரைவேண்டிப் பெறுவதன்றித் தாமே தலைவராகப் பெறுதலின், அவை கைக்கிளைப்புறன் ஆகாமை உணர்க. இவ் விருகூறுந் தோன்றப் பகுதியென்றார். புகழை விரும்பிச் சென்றோர் வெட்சி முதலியவற்றைப் பாடின், அவை கைக்கிளைப்புறன் ஆகாதென உணர்க.

இதனானே புறத்திணை ஏழற்கும் பெயரும் முறையும் ஒருவாற்றாற் கூறினாராயிற்று. நாலிரண்டாவன இப்பாடாண்டிணைக்கு ஓதுகின்ற பொருட்பகுதி$ பலவுங் கூட்டி ஒன்றும், இருவகை வெட்சியும் பொதுவியலும் வஞ்சியும் உழிஞையுந் தும்பையும் வாகையுங் காஞ்சியுமாகிய பொருள்கள் ஏழுமாகிய‌ எட்டுமாம்.

இனி இக்கூறிய ஏழுதிணையும் பாடாண்டிணைப் பொருளாமாறு காட்டுங்கால் எல்லாத்திணையும் ஒத்ததாயினும், அவை பெரும்பான்மையுஞ் சிறுபான்மையுமாகி வருதலும் அவை இரண்டும் பலவும் ஒருங்குவருதலும் பாடாண்டிணைக்கு மேற் கூறும் பொருளும் விராய் வருதலுமாமென்று உணர்க.

உதாரணம்:-

இது கூற்றுவகையானன்றிக் குறிப்புவகையான் ஒன்று பயப்பானாக்கி நினைத்துரைத்தலின் வெட்சியும் வாகையும் வந்த பாடாண்டிணையாம்.

------------
(பாடம்) #'பாடுதலும்.' $'பொருளும் பகுதியும்.' &'அவலெறி யுலக்கை.'
+'குழறலின்.' 'குமுறலின்.'

இதில் இமயவரம்பன் றம்பி பலயானைச் செல்கெழு குட்டுவனைப் பாலைக்-கௌதமனார் துறக்கம் வேண்டினாரென்பது குறிப்பு வகையாற் கொள்ள‌ வைத்தலின் இது வஞ்சிப்பொருள் வந்த பாடாணாயிற்று.

"இலங்கு தொடிமருப்பின்" என்னும் பதிற்றுப்பத்து உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பாகிய உழிஞையாயினும் பதின் றுலாம் பொன் பரிசில் பெற்றமையிற் பாடாணாயிற்று.

இது வாகைத்துறைப் பாடாண்பாட்டு.

இப் பதிற்றுப்பத்து நூறும் இவ்வாறே வருதலிற் பாடாண்டிணையேயாயிற்று. புறத்துள்ளும் இவ்வாறு வருவனவும் உணர்க. (25)

--------

81.

இது முன்னர் எட்டெனப் பகுத்த பாடாண்டிணையுள் ஏழொழித்துத் தன் பொருட்பகுதிகள் எல்லாங் கூடி ஒன்றாமென்ற பாடாண்டிணை தேவரும் மக்களு மென இருதிறத்தார்க்கே உரிய என்பார் அவ்விரண்டினுள் தேவர்பகுதி இவையென்ப துணர்த்துகின்றது.

(இ-ள்) அமரர்கண்முடியும் அறுவகையானும்- பிறப்பு வகையானன்றிச் சிறப்புவகையால் தேவர்கண்ணே வந்து முடிதலுடையவாகிய அறுமுறை வாழ்த்தின்கண்ணும்; புரைதீர் காமம் புல்லிய வகையினும்- அத்தேவரிடத்தே உயர்ச்சி நீங்கிய பொருள்களை வேண்டுங் குறிப்புப் பொருந்தின பகுதிக் கண்ணும்; ஒன்றன் பகுதி ஒன்றும் என்ப- மேற் பாடாண் பகுதியெனப் பகுத்து வாங்கிக்கொண்ட ஒன்றனுள் தேவரும் மக்களுமெனப் பகுத்த இரண்டனுள் தேவர்க்கு உரித்தாம் பகுதியெல்லாந் தொக்கு ஒருங்குவருமென்று கூறுவார் ஆசிரியர் என்றவாறு.

அமரர்கண்ணே வந்து முடியுமெனவே அமரர் வேறென்பதூஉம் அவர்கண்ணே வந்து முடிவன வேறென்பதூஉம் பெற்றாம். அவை முனிவரும் பார்ப்பாரும் ஆனிரையும் மழையும் முடியுடை வேந்தரும் உலகுமாம். இவை தத்தஞ் சிறப்பு வகையான் அமரர்சாதிப் பால வென்றல் வேதமுடிவு. இதனானே பிறப்புமுறையாற் சிறந்த அமரரை வாழ்த்தலுஞ் சொல்லாமையே முடிந்தது தந்திரவுத்தி வகையான். வகையென்ற தனானே அமரரை வேறு வேறு பெயர் கொடுத்து வாழ்த்தலும் ஏனைப் பொதுவகையாற் கூறி வாழ்த்தினன்றிப் பகுத்துக் கூறப்படாமையுங் கொள்க. புரை, உயர்ச்சியாதலின் உயர்ச்சியில்லாத காமமாவது மறுமைப்பயன்பெறுங் கடவுள்வாழ்த் துப்போல் உயர்ச்சியின்றி இம்மையிற் பெறும்பயனாதலின் , இழிந்த பொருள்களிற் செல்லும் வேட்கைக் குறிப்பு. புல்லிய வகையாவது, அம்மனக்குறிப்புத் தேவர்கண்ணே பொருந்திய கூறாது தன் பொருட்டானும் பிறன்பொருட்டானும் ஆக்கத்து மேல் ஒருவன் காமுற்றவழி அவை அவற்குப் பயன்கொடுத்த லாம். இது ஒன்றனுடைய பகுதியென்க. இத்துணைப் பகுதி யென்று இரண்டிறந்தன எனக்கூறாத, வாளாதே பகுதியென் றமையில் தேவரும் மக்களுமென இரண்டேயாயிற்று, அத் தேவருட் பெண்டெய்வங் 'கொடிநிலை கந்தழி' என்புழி அடங் கும். மக்களுட் பெண்பால் பாடுதல் சிறப்பின்மையிற் "செயிர் தீர் கற்பிற் சேயிழை கணவ" (புறம்-3) என்றாற்போலச் சிறு பான்மை ஆண்மக்களோடுபடுத்துப் பாடுப. வகை யென்ற தனான் வாழ்த்தின்கண் மக்கட்பொருளும் உடன்றழுவினும் அவை கடவுள் வாழ்தாமென்று கொள்க.

உதாரணம்:-

இது கடவுள் வாழ்த்து.

தொகைகளிலுங் கீழ்க்கணக்கிலும் உள்ள கடவுள் வாழ்த்தெல்லாம் இதன்கண் அடக்குக.

இனி அறுமுறை வாழ்த்தும் வருமாறு.:-

ஏனைய வந்துழிக் காண்க.

இது கடவுள் வாழ்த்தி ஒழியாது தனக்குப் பயன்படுவோன் ஒருவனையுங் கூட்டி வாழ்த்தலின் புரைதீர்காமம் புல்லிய வகையாயிற்று. (26)

--------------

82.

இது மேல் 'ஒன்றன்பகுதி' (தொல்-புறத்திணை-26) என்புழித் தோற்றுவாயாகச் செய்த இருபகுதியுண் மக்கட் பகுதி கூறுகின்றது.

(இ-ள்) பரவலும் புகழ்ச்சியும் கருதிய பாங்கினும்- ஒரு தலைவன் தன்னைப் பிறர் வாழ்த்துதலும் புகழ்ந் துரைத்தலுங் கருதிய பக்கத்தின்கண்ணும்; வகைபட முன்னோர் கூறிய குறிப்பினும்- அறம்பொருளின்பங்களின் கூறுபாடு தோன்ற முன்னுள்ளோர் கூறிய குறிப்புப்பொருளின் கண்ணும்; செந்துறை நிலைஇ- செவ்வன கூறுந்துறை நிலை* பெற்று; வழங்குஇயல் மருங்கின்- வழங்குதல் இயலுமிடத்து; ஆங்கு வண்ணப்பகுதி வரைவின்று- அச்செந்துறைக்கண் வருணங்களின் கூறுபாடு நிகழ்ந்தன நீக்கு நிலைமையின்று என்றவாறு.


பரவல் முன்னிலைக்கட் பெரும்பான்மை வரும். பரவலும் புகழ்ச்சியுந் தலைவன்கண்ணவாய்ப் பரிசில் பெறுதல் பாடுவான் கண்ணதாகலின் ஒருதலைக் காமமாகிய கைக்கிளைக்கு புறனாயிற்று. முன்னோர் கூறிய குறிப்பும் பாடப்படுவோன்கண் வேட்கை யின்மையிற் கைக்கிளையாம். குறிப்பென்றார், அறம் பொருள் இன்பம் பயப்பச்செய்த செய்யுளைக் கேட்டோர்க்கும் அஃது உறுதிபயத்தலைக் குறித்துச் செய்தலின். செந்துறையாவது விகாரவகையான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது உலகினுள் இயற்கைவகையான் இயன்ற மக்களைப் பாடுதல் இது செந்துறைப் பாடாண் பாட்டெனப்படும்.

"வண்ணமுந் துணையும் பொரீஇ யெண்ணா" (பத்து- குறிஞ்சி-31) என்பவாகலானும் ஐவகை நிறத்தினையும் வண்ண மென்பவாகலானும் வண்ணமென்பது இயற்சொல்: வருணமென்பது வடமொழித்திரிபு.

ஆங்கு வண்ணப்பகுதி வரைவின்றெனவே வருகின்ற காமப்பகுதியிடத்து வண்ணப்பகுதி வரையப்படுமாயிற்று; கைக்கிளைக் கிழத்தியை உயர்ந்தோன் வருணத்துப்படுத்துக் கூறாதது, ‘அனைநிலை’ (தொல்-புறத்திணை-20) வருணப்படுத்துத் தோன்றக்கூறலின்.

உதாரணம்:-

பரவற்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு; இதனை வாழ்த்தியலென்பர்.

இது புகழ்ச்சிக்கண்வந்த செந்துறைப் பாடாண்பாட்டு. இயைபியன்மொழி யென்பதும் அது.

இது வகைபட முன்னோர் கூறிய குறிப்பின்கண்வந்த செந் துறைப் பாடாண்பாட்டு.

இது முனிவர் கூறுமாறுபோலக் கூறிப் பரவலும் புகழ்ச்சி யுங் கூறாது மறுமைப்பயன் பிறர்க்குறுதி பயப்பக் கூறலிற் கைக்கிளைப் புறனாய்ப் பாடாணாயிற்று.

இவை செந்துறை மார்க்கத்து வண்ணப்பகுதியாகிய பாடல் பற்றி வருமென்பதூஉம் வெண்டுறை மார்க்கமாகிய நாடகத்துள் அவிநயத்துக்குரியவாகி வருமென்பதூஉங் கூறின், அவை ஈண்டுக்கூறல்† மயங்கக் கூறலாம். அன்றியும் ஏனை அறுவகைத் திணைக்கும் இங்ஙனங் கூறாது இத்திணைக்கே உரித்தாகக் கூறுதற்கோர் காரணமின்மையானும் அங்ஙனங் கூறாரென்ப. பரவலும் புகழ்ச்சியும் அவ்வப் பொருண்மை கருதினாரைத் தலைவராக வுடைமையானும், ஏனையது அக்குறிப் பிற் றன்றாகலானும், அதற்குப் பாட்டுடைத்தலைவர் பலராயி னும் ஒருவராயினும் பெயர்கொடுத்துங் கொடாதுங் கூறலானும் வேறு வைத்தாரென்க. இத்துணை வேறுபாடுடையதனைப் பரவல் புகழ்ச்சியொடு கூடவைத்தார்.


அவை முன்னோர் கூறிய குறிப்பினுள்ளும் விராய்வரும் என்றற்கு. இன்னும் அதனானே பாடாண்டிணைப்பொருண்மை மயங்கிவரினும் முடிந்த பொருளாற் பெயர்பெறுமென்று கொள்க.

"நிலமிசை வாழ்நர்" என்னும் (43) புறப்பாட்டுப் புலவன் அரசனை வைதுஆறி அது நன்குரைத்தல். அது இயற்கை வகையானன்றிச் செயற்கைவகையாற் பரவலும் புகழ்ச்சியுந் தொடர்ந்த முன்னோர் கூறிய குறிப்பு.

இன்னும் மயங்கி வருவனவெல்லாம் இதனான் அமைக்க. (27)

------------

83.

இது முற்கூறிய கடவுட்கும் மக்கட்கும் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

(இ-ள்) காமப்பகுதி- முன்னர்ப் 'புரைதீர் காம' (தொல்-புறத்திணை-26) மென்றதனுட் பக்குநின்ற புணர்ச்சி வேட்கை; கடவுள் பாங்கினும் வரையார்- கட்புலனாகிய கடவுளிடத்தும் நீக்கார்; ஏனோர் பாங்கினும் வரையார் என்மனார் புலவர்- மக்களிடத்தும் நீக்காரென்று கூறுவர் புலவர் என்றவாறு.

பகுதி ஆகுபெயர். அது கடவுண்மாட்டுக் கடவுட் பெண்டிர் நயப்பனவும், அவர்மாட்டு மானிடப்பெண்டிர் நயப்பனவுங், கடவுண் மானிடப்பெண்டிரை நயப்பனவும் பிறவுமாம்.

இன்னும் பகுதியென்றதனானே எழுதிணைக்குரிய காமமுங் 'காமஞ்சாலா இளமையோள்வயிற்' (தொல்-அகத்திணை-50) காமமுமன்றி இது வேறோர் காமமென்று கொள்க.

உதாரணம்:-

என வரும்.

என வரும்.

இது பெருங்கோழி நாய்கன் மகள் †ஒருத்தி ஒத்த அன்பினாற் காமமுறாதவழியுங் குணச்சிறப்பின்றித் தானே காமமுற்றுக் கூறியது, இதனானடக்குக.

இன்னும் ஏனோர்பாங்கினும் என்பதனானே கிளவித்தலைவனல்லாத பாட்டுடைத் தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறுவனவுங் கொள்க.

-----------
(பாடம்) *'அடுதொறு முயங்கல்.'
†'இவள் பெயர் நக்கண்ணையார். புறநானூற்று 96-ஆம் பக்கத்துப் பிரதி பேதத்தானுணர்க.

உதாரணம்:-

இது குறிப்பினாற் பாட்டுடைத்தலைவனைக் கிளவித் தலைவனாகக் கூறியது.

"மீளிவேற் றானையர் புகுதந்தார்
நீளுயர் கூட னெடுங்கொடி யெழவே." (கலி-36)

என்பதும் அது.

இவ்வாறு வருவதெல்லாம் இதனான் அமைக்க. (28)

------------

84.

இது முன்னிற்சூத்திரத்திற் பக்குநின்ற காமத்திற்கன்றிப் 'புரைதீர் காம'த் (தொல்-புறத்திணை-26) திற்குப் புறனடை கூறுகின்றது.

(இ-ள்.) குழவிமருங்கினும் கிழவதாகும்-குழவிப் பருவத்துங் காமப்பகுதி உரியதாகும் எ-று.

மருங்கென்றதனான் மக்கட்குழவியாகிய ஒருமருங்கே கொள்க: தெய்வக்குழவி யின்மையின். இதனை மேலவற்றோ டொன்றாது வேறு கூறினார், தந்தையரிடத்தன்றி, ஒரு திங்களிற் குழவியைப்பற்றிக் கடவுள் காக்க என்று கூறுதலானும், பாராட்டுமிடத்துச் செங்கீரையுந் தாலுஞ் சப்பாணியும் முத்தமும் வரவுரைத்தலும், அம்புலியுஞ் சிற்றிலுஞ் சிறுதேருஞ் சிறுபறையுமெனப் பெயரிட்டு வழங்குதலானு மென்பது.

இப்பகுதிகளெல்லாம் 'வழக்கொடு சிவணிய' (தொல்-புறத் திணை-31) என்னுஞ் சூத்திரத்தாற் பெறுதும். இப்பருவத்துக்கு உயர்ந்தவெல்லை மூவகை வருணத்தாரும் இருபிறப்பாளராகின்ற பருவமாம். வேளாளர்க்கும் மூவகையோர்க்குரிய பருவமேகொள்க. குழவிப்பருவங் கழிந்தோர் அது வேண்டியக்காலும் அக்குழவிப் பருவமே கருதிப் பாடுக வென்றதற்குக் கிழவதாகுமென்றார். இதற்குப் பரிசில்வேட்கை அக்குழவிக் கணன்றி அவன் தமர்க்கண்ணுமாமென் றுணர்க.

உதாரணம்:-

--------
(பாடம்) *'வையையின்.' †'கண்ணாடி.'

அந்தரத்தானா னென்றான் அம்புலி வேறாயும் ஒருகாலத்தே விளையாட்டு நிகழ்த்துமென, மதுரையிற் பிட்டுவாணிச்சி மகற்கு மங்கலக் குறிப்பாற் சான்றோர் கூறியது. (29)

--------------

85.

இது புரைதீர் காமத்திற்கன்றிப் பக்குநின்ற காமத்திற்குப் புறனடை கூறுகின்றது.

(இ-ள்) பக்குநின்ற காமம் ஊரிற் பொதுமகளிரொடு கூடிவந்த விளக்கமும் பாடாண்டிணைக்கு உரித்தென்றுகூறுவர் ஆசிரியர் எ-று.

தோற்றமுமென்றது, அக்காமந் தேவரிடத்தும் மக்களிடத்தும் விளங்கும் விளக்கத்தை. அது பின்னுள்ளோர் ஏழு பருவமாகப் பகுத்துக் கலிவெண்பாட்டாகச் செய்கின்ற உலாச்
செய்யுளாம்.

இச் சூத்திரத்திற்குத் தலைவர் பிறந்த ஊரும் அவர் பிறப்புமென்று பொருள்கூறின், மரபியற்கண்ணே 'ஊரும் பெயரும்' (தொல்-மரபியல்-27) என்னுஞ் சூத்திரத்து ஊர்பெறுதலானும்,* முன்னர் 'வண்ணப்பகுதி' (தொல்-புறத்திணை-27) என்பதனாற் பிறப்புப் பெறுதலானும் இது கூறியது கூறலா மென்றுணர். (30)

---------------

86.

இது 'அமரர்கண் முடியும்' (தொல்-புறத்திணை-26) என்னுஞ் சூத்திர முதலியவற்றுக்கெல்லாம் புறனடை.

(இ-ள்.) கடவுள் வாழ்த்தும் அறுமுறை வாழ்த்தும் முதலாக ஊரொடு தோற்ற மீறாகக் கிடந்தனவெல்லாஞ் சான்றோர் செய்த புலனெறிவழக்கோடே பொருந்திவந்த பகுதிக் கண்ணேயான பொருள்களாம். எ-று.

எனவே புலனெறிவழக்கின் வேறுபடச் செய்யற்க என்பது கருத்து.

கடவுள் வாழ்த்துப் பாடுங்கான் முன்னுள்ளோர் பாடியவாறன்றி முப்பத்துமூவருட் சிலரை விதந்துவாங்கிப் பாடப் பெறாது.

இனி அறுமுறைவாழ்த்துப் பாடுங்கான் முன்னுள்ளோர் கூறியவாறன்றி ஆவிற்கினமாகிய எருமை முதலியனவும் வாழ்த்தப்படா.


இனிப் புரைதீர் காமம் புல்லியவகையும் ஒருவன்றொழுங் குலதெய்வத்தை* நோக்கியன்றி வரைவின்றிக் கூறப்படாது.

இனிச் செந்துறைப்பாடாண்பாட்டு முன்னுள்ளோர் கூறியவாறன்றி இறப்ப இழித்தும் இறப்ப உயர்த்தும் கூறப்படாது.

இனிக் காமப்பகுதிக் கடவுளரைக் கூறுங்காலும் பெண்டெய்வத்தோடு இயல்புடையாரைக் கூறினன்றி எண்வகை வசுக்கள் போல்வாரையும் புத்தர் சமணர்+ முதலியோரையுங் கூறப்படாது.

இனி மக்களுள் ஒருவனைத் தெய்வப்பெண்பால் காதலித்தமை கூறுங்காலும் மக்கட்பெண்பாற்குக் காதல் கூறுங்காலும் முன்னோர் கூறியவாறன்றிக் கூறப்படாது.

இனிக் குழவிப்பருவத்துக் காமங் கூறுங்காலும் முன்னர்க் காப்பும் பின்னர் ஏனையவுமாக முன்னுள்ளோர் கூறியவாறன்றிக் கூறப்படாது.

இனி ஊரொடு தோற்றமும் பரத்தையர்க்கன்றிக் குலமகளிர்க்குக் கூறப்படாது.

இன்னுஞ் ‘சிவணியவகைமை’ என்றதனானே முற்கூறிய வற்றோடே நாடும் ஊரும் மலையும் யாறும் படையுங் கொடியுங் குடையும் முரசும் நடைநவில் புரவியுங் களிறுந் தேருந் தாரும் பிறவும் வருவன வெல்லாக் கொள்க.

உதாரணம்:-

இவை நாடும் யாறும் அடுத்துவந்தன.

இஃது ஊர் அடுத்துவந்தது.

-----------
(பாடம்) *’குலத்தெய்வ.’ +’அமணர்.’ # ‘நாட்டு.’

இது மலை யடுத்தது.

இது படையடுத்தது.

இது கொடியடுத்தது.

இது குடையடுத்தது.

இது முரசடுத்தது.

இது புரவியடுத்தது.

இது களிறடுத்தது.

இது தேரடுத்தது.

---------
(பாடம்) *'(கொடிப்போல.' +'கோதை' யென ஏடுகளிலுள்ளது.
++'பொலிவொடுதோன்றி.'

இது தாரடுத்தது.

இவற்றுட் சிலவற்றை வரைந்துகொண்டு சின்னப்பூ வென்று பெயரிட்டு இக்காலத்தார் கூறுமா றுணர்க. (31)

----------------

87.

இது சுட்டி ஒருவர் பெயர்கொள்ளும் பாடாண்டிணைக்குரிய மெய்ப்-பெயர்களிடமாகவும் அகத்திணை நிகழுமென்கின்றது.

(இ-ள்) மெய்ப்பெயர் மருங்கின்- புறத்திணைக்குரிய மெய்ப்பெயர்களின் மருங்கே; வழி வைத்தனர்- புறத்திணை தோன்றுதற்கு வழியாகிய அகத்திணையை வைத்தார் முதனூலாசிரியர் என்றவாறு.

என்றது எனக்கும் அதுவே கருத்தென்பதாம். வழியென்பது ஆகுபெயர் மெய்ப்பெயராவன புறத்திணைக்குரிய பாட்டுடைத்தலைவர் பெயரும் நாடும் ஊரும் முதலியனவாம்.

இதன் கருத்துச் 'சுட்டியொருவர் பெயர்கொளப் பெறாஅர்' (தொல்-அகத்திணை-54) என அகத்திணையியலுட் கூறினமையிற் கிளவித்தலைவன் பெயரை மெய்ப்பெயராகக்
கொள்ளாது ஏனைப் புறத்திணையாற்கொண்ட மெய்ப்பெயரிடம் பற்றி அகத்திணைப் பொருணிகழவும் பெறுமென்பதாம்.

உதாரணம்:- "*அரிபெய் சிலம்பின்" என்னும் (6) அகப் பாட்டினுள் தித்தனெனப் பாட்டுடைத்தலைவன் பெயரும், பிண்ட நெல்லினென நாடும், உறந்தையென ஊருங், காவிரி யாடினை யென யாறுங் கூறிப், பின்னர் அகப்பொருள் நிகழ்ந்தவாறுங் கொள்க.

'மருங்கு' என்றதனாற் பாட்டுடைத்தலைவன் பெயர்கூறிப் பின்னர் நாடு முதலியன கூறன் மரபென்று கொள்க. அதுவும் அச் செய்யுளாற் பெற்றாம்.

----------
* இச் செய்யுளை 21-ஆம் பக்கத்திற் காண்க.

இதனுட் கூடலிடத்துத் தலைவி யென்பது கூறினார்.

இதனுள் வென்வேலான் குன்றென மலை கூறினார்.

இதனுள் ஆறு கூறினார்.

"புனவளர் பூங்கொடி' என்னும் (27) மருதக்கலியும் அது.

இதுமுதலிய மூன்றும் புகாரிற் றலைவியெனக் கூறியவாறு காண்க

இன்னுஞ் சான்றோர் செய்யுட்கள் இங்ஙனம் வருவனவெல்லாம் இதனால் அமைக்க. இக்கருத்தினாற் செய்யுள் செய்த சான்றோர் தமக்கும் பாடாண்டலைவர்கண் நிகழ்ந்த ஒருதலைக் காமமேபற்றி அகத்திணைச் செய்யுள் செய்தாரேனும் 'தம்மிசை பரந்துலகேத்த வேதினாட்டுறைபவ'ரென்று இவை பாடாண்டிணையெனப் பெயர்பெறா என்றற்கு இது கூறினார். (32)

-----------

88.

இது தேவரும் மக்களுமெனப் பகுத்த முறைமையானே அப்பகுதி யிரண்டுங் கூறி இன்னும் அத்தேவரைப்போல் ஒரு வழிப் பிறக்கும் பிறப்பில்லாத தெய்வங்களும் பாடாண்டிணைக்கு உரிய ரென்கிறது.

(இ-ள்) கொடிநிலை- கீழ்த்திசைக்கண்ணே நிலைபெற்றுத் தோன்றும் வெஞ்சுடர்மண்டிலம்; கந்தழி- ஒருபற்றுக் கோடின்றி அருவாகித் தானேநிற்குந் தத்துவங் கடந்த பொருள்; வள்ளி- தண்கதிர்மண்டிலம்; என்ற வடு நீங்கு சிறப்பின் முதலன மூன்றும்- என்று சொல்லப்பட்ட குற்றந்தீர்ந்த சிறப்பினையுடைய முற்கூறப்பட்ட மூன்று தெய்வமும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே- முற்கூறிய அமரரோடே கருதுமாற்றால் தோன்றும் என்றவாறு.

என்றவழிக் கீழ்த்திசைக்கண்ணே தோன்றும் மண்டில மென்றாற்போலக்* கொடிநிலை யென்பதூஉம் அப்பொருடந்ததோர் ஆகுபெயர்.

இனி எப்புறமும் நீடுசென்று எறித்தலின் அந்நீடனிலைமை† பற்றிக் கொடிநிலையென்பாருமுளர்,

"குவவுமென் முலையள் கொடிக்கூந் தலளே." (குறுந்-132)

என்றாற்போல வள்ளியென்பதுவுங் கொடியை; என்னை? பன் மீன்தொடுத்த‡ உடுத்தொடையைக் கொடியெனப்படுதலின், அத் தொடையினை இடைவிடா துடைத்தாதலின் அதனை அப்பெயராற் கூறினார்; முத்துக்கொடியெனவும் மேகவள்ளியென வுங் கூறுமதுபோல. கந்தழி அவ்விரண்டற்கும் பொதுவாய்
நிற்றலின் இடையே வைத்தார்.இனி அமரரென்னும் ஆண்பாற்சொல்லுள் அடங்காத பெண்பாற்றெய்வமும் வள்ளியென்னுங் கடவுள்வாழ்த்தினுட் படுவனவாயின பாடா ணெனப்படா வாயினுமென்பது; என்னை? ஞாயிறு நெருப்பின்றன்மையும் ஆண்டன்மையும் உடைமையானுந், திங்கள் நீரின்றன்மையும் பெண்டன்மையும் உடைமையானுமென்பது. அல்லதூஉம் வெண்கதிர் அமிர்தந் தேவர்க்கு வழங்கலானும் வள்ளி யென்பதூஉமாம் என்பது.

உதாரணம்:-

இது கொடிநிலை வாழ்த்து.

இத கந்தழி வாழ்த்து.

இது வள்ளிவாழ்த்து.

இது வள்ளிப்பாற்பட்ட பெண்பாற் கடவுள் வாழ்த்து. (33)

--------

89.

இஃது எய்தாதது எய்துவித்தது; தேவர்க்கும் உரியவாம். ஒருசார் அப்பாடாண்டிணைக் கொற்றவள்ளை யென்றலின்.

(இ-ள்) கொற்றவள்ளை-அதிகாரத்தாற் கைக்கிளைக்குப் புறனாய் வெட்சிமுதல் வஞ்சி யீறாகிய பாடாண் கொற்றவள்ளை; ஓரிடத்தான-மேற்கூறி நின்ற தேவர் பகுதிக் கண்ணதன்றி அவரின் வேறாகிய மக்கட் பகுதிக்கண்ணது என்றவாறு.

எனவே, உழிஞை முதலிய பாடாண் கொற்றவள்ளை நற்றிளைஞருங் கூளிச்சுற்றமுங் ஒன்றனை நச்சிப் புகழ்ந்து வாளாதே கூறுதலும், ஈண்டுக் கூறுகின்ற கொற்றவள்ளை புலவன் ஒன்றனை நச்சி வெட்சி முதலிய ஏழனானும் புகழ்ந்துரைத்தலுமாயிற்றாதலிற் 'படையியங் கரவம்' (தொல்-புறத்திணை.3) முதலாக வஞ்சியிற் 'குன்றாச்சிறப்பிற் கொற்றவள்ளை' யீறாகக் கிடந்த பொருட்பகுதியெல்லாம் பாடாண்டிணையாகப் பாடுங்கான் மக்கட்கேயுரிய என்பதூஉம். உழிஞை முதலியவற்றைப் பாடாண்டிணையாகப் பாடுங்கால் அவை மக்கட்குந் தேவர்க்கும் ஒப்ப உரியவென்பதூஉங் கூறுதலாயிற்று. என்னை? அரசியலாற் போர்குறித்து நிரைகோடலும் மீட்டலும் மேற்செல்லும் வஞ்சியுந் தேவர்க் கேலாமையாயினும், அவுணரான் முற்றப்பட்ட துறக்கத்தினை அகத் துழிஞை யரணாக்கி மனுவழித் தோன்றிய முசுகுந்தனோடு இந்திரன் காத்தாற் போல்வனவும் பிறவுந் தேவர்க்குக் *கூறுதலான் அவரும் மதின்முற்றியவழிப் போர் தோன்றுதலும் ஆண்டு வென்றி யெய்துதலும் உடையராதலிற் பாடாண் பொருட்கும் உரியாரென நேர்பட்டது.

இச்சூத்திரம் மக்கட்கெய்திய பொருண்மையை மீட்டுங் கூறி நியமித்ததாம். ஆகவே வெட்சிமுதல் வஞ்சியிற் கொற்ற வள்ளை ஈறாய பொருண்மை உழிஞைமுதற் பாடாண்டிணைக்குரியராகி இடைபுகுந்த தேவர்க் காகாவென விதிவகையான் விலக்கியதாம். எனவே, தேவர்க்கு உழிஞைமுதலிய கொற்ற வள்ளை ஆமென்பதூஉங் கூறினாராயிற்று.

கொடிநிலை முதலிய மூன்றற்குமன்றிக் கடவுளெனப் பட்டாரை அதிகாரங்கொண்ட அளவேயாமென் றுணர்க.

-----------
* ஏடுகளிற் 'கூறு' என்பதன்பின் சிறிதிடம் எழுதாது விட்டுத் தானவரும் மதின்முற்றிய வழி' யென எழுதப்பட்டுள்ளது.

உதாரணம்:-

இது புலவன் பொருணச்சிக் கூறலிற் பாடாண்கொற்ற வள்ளை, 'வல்லா ராயினும் வல்லுந ராயினும்', 'காலனுங் காலம்' என்னும் (57, 4) புறப்பட்டுக்களும் அது. (34)

------------

90.

இது முன்னிற் சூத்திரத்து அதிகாரப்பட்டு நின்ற மக்கட் பாடாண்டினைக் குரிய துறை கூறுகின்றது.

(இ-ள்) கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப்பழித்தலும்- பிறர்க்கு ஈவோரைப் பிறரி னுயர்த்துக்கூறிப் பிறர்க் கீயாதாரை இழித்துக் கூறலும்;

சான்றோர்க்குப் பிறரை யிழித்துக்கூறற்கண் ணது தக்க தன்றேனும் நன்மக்கள் பயன்பட வாழ்தலுந் தீயோர்* பயன் படாமல் வாழ்தலுங் கூறக்கேட்டு ஏனையோரும் பயன்பட வாழ்தலை விரும்புவரென்பது பயப்பக்கூறலின் இவர்க்கு இங்ஙனங் கூறுதல் தக்கதாயிற்று. இதனை ஏத்தலும் பழித்தலும் ஏத்திப் பழித்தலுமென மூவகையாகக் கொள்க.


உதாரணம்:--

இது கொடுப்போர் ஏத்தியது.

என்பதுவும் அது.

இவை கொடாஅர்ப் பழித்தல்.

------------------
(பாடம்) *'கருங்களிறு'

இஃது ஆயைப் புகழ்ந்து ஏனைச்செல்வரைப் பழித்தது.

இதுவும் அது.

அடுத்து ஊர்ந்து ஏத்திய இயன்மொழி வாழ்த்தும் - தலைவனெதிர்சென்று ஏறி அவன் செய்தியையும் அவன் குலத்தோர் செய்தியையும் அவன்மேலே ஏற்றிப் புகழ்ந்த இய‌ன்மொழி வாழ்த்தும்;

என்றது, இக்குடிப்பிறந்தோர்க்கெல்லாம் இக்குணங்கள் இயல்பென்றும், அவற்றை நீயும் இயல்பாக உடையை யென்றும், அன்னோர்போல எமக்கு நீயும் இயல்பாக ஈ யென்றும் உய‌ர்ந்தோர் கூறி அவனை வாழ்த்துதலின் இயன்மொழி வாழ்த்தாயிற்று. இதனை உம்மைத்தொகையாக்கி இயன் மொழியும் வாழ்த்துமென இரண்டாக்கிக்கொள்க.

இஃது ஒருவர் செய்தியாகிய இயல்பு கூறலாலும் வண்ணப் பகுதியின்மையானும் பரவலின் வேறாயிற்று.

உதாரணம்:-

இவை போல்வன வெல்லாம் இயன்மொழி.

இது முன்னுள்ளோர்க்கும் இயல்பென்பதுபடக் கூறிய‌ இயன்மொழிவாழ்த்து.

-----------
(பாடம்) #'இருந்தண் சிலம்பின்.'

இஃது இன்னோர்போல எமக்கு ஈ யென்ற இய‌ன்மொழி வாழ்த்து.

இது படர்க்கையாகிய இயன்மொழி வாழ்த்து.

இது பிறருஞ் சான்றோர் சென்ற நெறி யென்றமையின் அயலோரையும் அடுத்தூர்ந்தேத்தியது. இன்னும் வேறுபட‌ வருவனவெல்லாம் இதன்கண் அட‌க்குக.

சேய்வரல் வருத்தம் வீட வாயில் காவலற்கு உரைத்த‌ கடைநிலையானும் - சான்றோர் சேணிடை வருதலாற் பிறந்த‌ வருத்தந்தீர வாயில் காக்கின்றவனுக்கு என் வரவினை இசையெனக்கூறிக் கடைக்க ணின்ற கடைநிலையும்;

இது வாயிலோனுக்குக் கூறிற்றேனும் அவ்வருத்தந் தீர்க்கும் பாடாண்டலைவனதே துறையென்பது பெற்றாம்.

இழிந்தோரெல்லாந் தத்தம் இயங்களை இய‌க்கிக் கடைக் கணிற்றல் 'பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும்' (தொல்- பொரு-புற-36) என்புழிக் கூறுதலின், இஃது உயர்ந்தோர்க்கே கூறியதாம்.

உதாரணம்:-

என வரும்.

இது தலைவனை எதிர்ப்பட்டுக் கூறாது வாயிலோனை நோக்கிக் கூறலிற் பரிசில் கடாயதின்றாம்.

ஆண் அசை; ஏழனுருபாக்கி எல்லாவற்றிற்கும் விரித்துலுமொன்று.

கண்படை கண்ணிய கண்படைநிலையும் - அரசரும் அரச‌ரைப் போல்வாரும் அவைக்கண் நெடிது வைகியவழி மருத்துவரும் அமைச்சரும் முதலியோர் அவர்க்குக் கண்டுயில் கோட‌லைக் கருதிக் கூறிய கண்படை நிலையும்;

கண்படை கண்ணிய என்றார், கண்படை முடிபொருளாக இடைநின்ற உண்டிமுதலியனவும் அடக்குதற்கு.


உதாரணம்:-

என வரும்.

கபிலை கண்ணிய வேள்வி நிலையும் - சேதாவினைக் கொடுக்கக் கருதிய கொடைநிலை கூறுதலும்;

இது வரையா ஈகையன்றி இன்னலுற்றாற் கொடுக்கவென உயர்ந்தோர் கூறு நாட்காலையிலே கொடுப்பதாமாதலின் வேறு கூறினார் கண்ணிய என்றதனாற் கன்னியர் முதலோரைக் கொடுத்தலுங் கொள்க.

வேலின் ஓக்கிய விளக்கு நிலையும்-வேலும் வேற்றலையும் விலங்காதோங்கியவாறு போலக் கோலோடு விளக்கும் ஒன்று பட்டோங்குமாறு ஓங்குவித்த விளக்குநிலையும்,

இன், உவமப்பொருள். இது கார்த்திகைத் திங்களிற் கார்த்திகை நாளின் ஏற்றிய விளக்குக் கீழுமேலும் வலமுமிடமுந் திரிபரந்து சுடர்ஓங்கிக் கொழுந்து விட்டெழுந்ததென்று அறிவோராக்கங் கூறப்படுவதாம்.

உதாரணம்:--

என வரும்.

வேலின் வெற்றியை நோக்கிநின்ற விளக்குநிலையெனப் பொருள் கூறி,

என்பது காட்டுவாரும் உளர். அவர் இதனை நிச்சம் இடுகின்ற விளக்கென்பர்.

வாயுறை வாழ்த்தும்-’வாயுறை வாழ்த்தே ***வேம்புங் கடுவும்’ என்னும் (112) செய்யுளியற் சூத்திரப்பொருளை உரைக்க.

இதற்கு ஒரு தலைவன் வேண்டானாயினும் அவற்கு உறுதி பயத்தலைச் சான்றோர் வேண்டி வாய்மொழி மருங்கினான் அவனை வாழ்ச்சிப்படுத்தலின் இதுவுங் கைக்கிளைப்புறனாகிய பாடாணாயிற்று. செவியுறைக்கும் இஃதொக்கும்.

உதாரணம்:-

இதனுள் நிரயங் கொள்வாரோ டொன்றாது காவலையோம்பென வேம்புங் கடுவும்போல வெய்தாகக்கூறி அவற்கு உறுதி பயத்தலின் வாயுறை வாழ்த்தாயிற்று.

என்னும் புறப்பாட்டும் அது,

தத்தம் புதுநூல் வழிகளாற் புறநானூற்றிற்குத் துறை கூறினாரேனும், அகத்தியமுந் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலாகலின், அவர் சூத்திரப்பொருளாகத் துறைகூறவேண்டு மென்றுணர்க. ‘செவியுறைதானே’ (தொல்-பொ-செ-114)
என்னும் சூத்திரப் பொருண்மை இவ்வுதாரணங்கட்கு இன்மை உணர்க.


செவியறிவுறூஉம்- இதற்குச் 'செவியுறைதானே' என்னும் செய்யுளியற் (114) சூத்திரப்பொருளை உரைக்க.

ஒருவுதலை ஒரூஉதலெனவும் ஒரூஉவெனவுங் கூறுமாறுபோல, உறுவும் உறூதலெனவும் உறூஉவெனவுங் கூறப்படும்.

உதாரணம்:--

----------------------
(பாடம்) *'தெரிகோற்சமன்' †'பற்றிலியரோ' ‡'ஏஎ' §'பணீஇயரத்தை' ++'முதல்வர்' $'இயவுணின்' **'செலீஇயரத்தை'

இதனுள் இயல்பாகிய குணங்கூறி அவற்றோடு செவியுறையுங் கூறினான், செவியுறைப்பொருள் சிறப்புடைத்தென்று அவன்கருதி வாழ்தல்வேண்டி.

ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்-தெய்வவழிபாடு உடைத்தாயினும் மக்கள் கண்ணதேயாகித் தோன்றும் பாட்டுடைத்தலைவன் முன்னிலையாகத் தெய்வம் படர்க்கையாக வாழ்த்தும் வாழ்த்தும்;

தெய்வஞ் சிறந்ததேனும் மக்கள் அதிகாரப்படுதலின் அவர் கண்ணதேயாதற்கு ‘ஆவயின் வரூஉம்’ என்றார். இதற்கு ‘வழிபடு தெய்வம்’ என்னும் செய்யுளியற் (110) சூத்திரப் பொருளை யுரைக்க.

இதுவுந் தலைவன் குறிப்பின்றித் தெய்வத்தால் அவனை வாழ்விக்கும் ஆற்றலுடையார்கண்ணதாகலிற் கைக்கிளைப் புறனாயிற்று.

உதாரணம்:-

என வரும்.

கைக்கிளை வகையோடு உளப்படத் தொகைஇ-மேற் காமப்பகுதியென்ற கைக்கிளையல்லாத கைக்கிளையின் பகுதியோடே வாயுறை வாழ்த்துஞ் செவியறிவுறூஉம் புறநிலை வாழ்த்துங்கூட நான்காகிய தொகைபெற்ற நான்கும்;

வாயுறை வாழ்த்து முதலிய மூன்றுந் தத்தம் இலக்கணத்திற் றிரிவுபடா; இக்கைக்கிளை திரிவுபடுமென்றற்கு எண்ணும் மையான் உடனோதாது உளப்படவென வேறுபடுத்தோதினார். அகத்திணையியலுள் இருபாற்குங் கூறிய கைக்கிளையுங், ‘காமஞ் சாலா இளமையோள்வயிற்’ (தொல்-பொ-அகத்-50) கைக்கிளையும், ‘முன்னைய நான்கும்’ (தொல்-பொ-அகத்-52) என்ற கைக்கிளையும், ‘காமப்பகுதி’ (தொல்-பொ-புறம்-28) என்ற கைக்கிளையும், களவியலுண் ‘முன்னைய மூன்றும்’ (தொல்-பொ-கள-14) என்ற கைக்கிளையும் போலாது எஞ்ஞான்றும் பெண் பாலார் கூறுதலின்றி இடைநின்ற சான்றோராயினும் பிறராயினுங் கூறுதற்கு உரித்தாய் முற்காலத்து ஒத்த அன்பினராகிக் கடைநிலைக்காலத்து ஒருவன் ஒருத்தியைத் துறந்ததனால் துறந்த பெண்பாற் கைக்கிளையாதலின் திரிபுடைத்தாயிற்று. இது முதனிலைக்காலத்துத் தான்குறித்து முடித்துப் பின்னர் அவளை வருத்தஞ்செய்து இன்பமின்றி யொழிதலான் ஒருதலைக் காமமாயிற்று.

உதாரணம்:-

இது கண்ணகி காரணமாக வையாவிக்கோப் பெரும் பேகனைப் பரணர் பாடிய கைக்கிளைவகைப் பாடாண்பாட்டு.

'கன்முழை யருவி' யென்னும் (147) புறப்பாட்டும் அது.

தொக்க நான்கும் உள என மொழிப- அந்நான்கும் முற்கூறிய ஆறனோடே தொக்குப் பத்தாய்ப் பாடாண்பகுதிக் கண்ணே உளவாய் வருமென்று கூறுவர் ஆசிரியர் என்றவாறு.

'தொக்க நான்' கென்றதனான் இந்நான்கும் வெண்பாவும் ஆசிரியமுந் தொக்குநின்ற மருட்பாவானும் வருமென்பதூஉங்கொள்க. இவற்றை மேல்வருகின்றவற்றோடு உடன்கூறாராயினார், அவை இழிந்தோர் கூறுங் கூற்றாகலின். (35)

--------------

91

இதுவும் அது.

(இ-ள்) தாவில் கிடந்தோர்க்கு நல்லிசை கருதிய சூதர் ஏத்திய துயிலெடை நிலையும்- தமது வலியாலே பாசறைக்கண் ஒரு மனக்கவர்ச்சியின்றித் துயின்ற அரசர்க்கு நல்ல புகழைக் கொடுத்தலைக் கருதிய சூதர் அத்துயிலெடுப்பின் ஏத்தின துயிலெடை நிலையும்;

'கிடந்தோர்க்' கெனப் பன்மைகூறவே அவர் துயிலெடுப்புத் தொன்றுதொட்டு வருமென்பதூஉஞ் சூதர் மாகதர் வேதாளிகர் வந்திகர் முதலாயினோருட் சூதரே இங்ஙனம் வீரத்தால் துயின்றாரைத் துயிலெடுப்புவரென்பதூஉம், யாண்டும் முன்னுள்ளோரையும் பிறரையுங் கூறப்படுமென்தூஉங் கொள்க. அவர் அங்ஙனந் துயின்றமை பிறர்க்கும் புலப்படப் புகழல் அவர் கருத்தாகலின் ஒரு தலைக் காமம் உளதாயிற்று.

உதாரணம்:-

எனவரும்.

கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்று பயனெதிரச் சொன்ன பக்கமும்- ஆடன்மாந்தரும் பாடற்பாணரும் கருவிப் பொருநரும் இவருட் பெண்பாலாகிய விறலியுமென்னும் நாற் பாலாருந் தாம்பெற்ற பெருஞ் செல்வத்தை எதிர்வந்த வறியோர்க்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச்சென்று தாம் பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடும்;

கூத்தராயிற் பாரசவரும்* வேளாளரும் பிறரும் அவ் வாடற் றொழிற்கு உரியோர்களும் பாரதிவிருத்தியும்† விலக் குயற்கூத்துங் கானகக்கூத்துங் கழாய்க்கூத்தும் ஆடுபவராகச் சாதி வரையறையிலராகலின் அவரை முன்வைத்தார்; பாணரும் பொருநருந் தத்தஞ் சாதியில் திரியாது வருதலிற் சேரவைத் தார்; முற்கூறிய முப்பாலோருட் கூத்தராயினார் எண்வகைச் சுவையும் மனத்தின்கட்பட்ட குறிப்புக்களும் புறத்துப் போந்து புலப்பட ஆடுவார்; அது விறலாகலின் அவ் விறல்பட ஆடுவாளை விறலியென்றார்.. இவளுக்குஞ் சாதிவரையறை யின்மையிற் பின்வைத்தார். பாணரும் இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப்பாணருமெனப் பலராம். பொருநரும் ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம்பாடுநரும் பரணிபாடுநருமெனப் பலராம். விறலிக்கு அன்னதோர் தொழில் வேறுபாடின்றித் தொழி லொன்றாகலின் விறலியென ஒருமையாற் கூறினார்,.


ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச் சென்றுபயனெதிரச் சொன்ன பக்கமும்- இல்லறத்தைவிட்டு்த் துறவறமாகிய நெறியிடத்து நிற்றல் நன்றென்றுங் கண்டகாட்சி தீதென்றும் மாறுபடத் தோன்றுகையினாலே தான் இறைவனிடத்துப்பெற்ற கந்தழியாகிய செல்வத்தை யாண்டுந்திரிந்து பெறாதார்க்கு இன்ன விடத்தே சென்றாற் பெறலாமென்று அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று அக் கந்தழியினைப் பெறும்படி சொன்ன கூறுபாடும்;

பக்கமென்றதனானே அச்செய்யுட்களைக் கூத்தராற்றுப்படை பாணாற்றுப்படை பொருநராற்றுப்படை விறலியாற்றுப்படை முருகாற்றுப்படையென வழங்குதலும் ஆற்றினருமையும் அவனூர்ப் பண்புமுதலியனவுங் கூறுதலுங் கொள்க.

உதாரணம்:-

இவை கூத்தராற்றுப்படை.

----------
(பாடம்) *'ந‌ல்லா றெனினும்' திருக்குறள், 222.

"மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை." (பத்து-சிறுபாண்-1)

இவை பாணாற்றுப் படை.

இவை பொருநராற்றுப் படை.

இவை விறலியாற்றுப் படை.

கூத்தராற்றுப்படை தடுமாறுதொழிலாகமற் கூத்தரை ஆற்றுப் படுத்தென விரிக்க. ஏனையவும் அன்ன.


முருகாற்றுப்படையுட் "புலம்பிரிந் துறையுஞ் சேவடி' யெனக்கந்தழிகூறி, 'நின்னெஞ்சத் தின்னசைவாய்ப்பப் பெறுதி' யெனவுங் கூறி, அவனுறையும் இடங்களும் கூறி, ஆண்டுச் சென்றால் அவன் 'விழுமிய பெறலரும் பரிசி னல்கும்' எனவுங் கூறி, ஆண்டுத் தான் பெற்ற பெருவளம் அவனும்பெறக் கூறியவாறு காண்க. இதனைப் புலவராற்றுப்படை என்று உய்த்துணர்ந்து பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை யென்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க. இனி முருகாற்றுப்படை யென்பதற்கு முருகன்பால் வீடு பெறுதற்குச் சமைந்தான் ஓரிரவலனை ஆற்ழறுப்படுத்த தென்பது பொருளாகக்கொள்க. இனிக் கூத்தர் முதலியோர் கூற்றாகச் செய்யுட் செய்யுங்கால் அவர்மேல் வைத்துரைப் பினன்றிப் புலனுடை மாந்தர் தாமே புலனெறி வழக்கஞ் செய்யாமையுணர்க.

இனி இசைப்புலவர்க்கும் நாடகப்புலவர்க்கும் இங்ஙனங் கூறலமையாது; அவருள் உயர்ந்தோரல்லாதாரும் அத்தொழிற்குப் பெரும்பான்மையும் உரியராய் நடத்தலின்,

நாளணி செற்ற நீக்கிச் சிறந்த பிறந்த நாள்வயிற் பெருமங்கலமும்- நாடொறுந் தான் மேற்கொள்ளுகின்ற செற்றங்களைக் கைவிட்டுச்* சிறந்த தொழில்கள் பிறத்தற்குக் காரணமான நாளிடத்து நிகழும் வெள்ளணியும்;

அரசன் நாடோறும் தான் மேற்கொள்கின்ற செற்றமாவன சிறைசெய்தலுஞ் செருச்செய்தலுங் கொலைபுரிதலும் முதலியன. சிறந்த தொழில்களாவன சிறைவிடுதலுஞ் செருவொழிதலுங் கொலையொழிதலும் இறைதவிர்த்தலுந் தானஞ்செய்தலும் வேண்டின கொடுத்தலும் பிறவுமாம்.

மங்கலவண்ணமாகிய வெள்ளணியும் அணிந்து எவ்வுயிர்க் கண்ணும் அருளே நிகழ்தலின் அதனை வெள்ளணி யென்ப. ஆகுபெயரான் அப்பொருள் கூறிய செய்யுளும் வெள்ளணி யாயிற்று.

உதாரணம்:--

இது சிலம்பி கூடிழக்குந்துணை அடங்கலும் வெளியாயிற் றென்றலின் வெள்ளணியாயிற்று.

------------------
(பாடம்) *'செற்றங்களைக் கையிட்டு' என்பது முன் அச்சுப் பிரதிப் பாடம். இது பொருந்தவில்லை.

இது சிறைவிடுதல் கூறிற்று.

இது செருவொழிந்தது.

இதனுள் இழிகுலத்தோன் பறைசாற்றினமை கூறுதலின் இழிந்தோர் கூறுதல் ஒழிந்த மங்கலங்கட்கும் ஒக்கும். பெருமங்கல மென்றதனானே பக்கநாளுந் திங்கடோறும் வரும் பிறந்த நாளும் பாடலுட் பயிலாமை யுணர்க.

சிறந்த சீர்த்தி மண்ணும் மங்கலமும்- அரசர்குச் சிறப் பெய்திய மிக்க புகழை எய்துவிக்கும் முடிபுனைந்து ஆடும்நீராட்டு மங்கலமும்;

இதனைப் பிறந்தநாளின் பின்வைத்தார் பொன்முடிபுனைந்த ஞான்று தொடங்கி யாண்டுதோறும் இது வருமென்றற்கு குறுநில மன்னர்க்காயின் அவர்க்குரிய பட்டத்தோடு கூடிய மண்ணுமங்கலமுங் கொள்க.

உதாரணம்:--

எனவரும்.

இதனானே யாண்டு இத்துணைச் சென்றதென்று எழுதும் நாண்மங்கலமும் பெறுதும்.

நடை மிகுத்து ஏத்திய குடைநிழன் மரபும்- உலகவொழுக்கத்தை இறப்ப உயர்த்துப் புகழ்ந்து கூறப்பட்ட குடைநிழல திலக்கணமும்;

இங்ஙனம் புனைந்துரைத்தற்கு ஏதுவாயது நிழலாம்; என்னை? அந்நிழல் உலகுடனிழற்றியதாகக் கூறுதலும்பட்டுக்குடி புறங்காத்தற்குக் குறியாகக் குடைகொண்டேனென்று அக் கொற்றவன் குறிக்கவும் படுதலின்.

மரபென்றதனாற் செங்கோலுந் திகிரியும் போல்வனவற்றைப் புனைந்துரையாக்கலுங் கொள்க.

உதாரணம்:-

என வரும்.

எனவும்,

எனவும்,

எனவும்,

எனவும் இவை குடையையும் செங்கோலையுந் திகிரியையும் பனைந்தன.

மாணார்ச்சுட்டிய வாண்மங்கலமும்--பகைவரைக் குறித்தவாள் வென்றியாற் பசிப்பிணி தீர்ந்த பேய்ச்சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்தும் வாண்மங்கலமும்;

இது பிறர் வாழ்த்தப்படுதலிற் கொற்றவையைப் பரவும் 'வென்ற வாளின் மண்'(புறத்திணை-13)ணென்பதனில் வேறாயிற்று. புகழ்ச்சிக்கட் பகைவரை இகழ்ந்து புகழ்தலின் 'மாணார்ச்சுடடிய' என்றார்.

உதாரணம்:--

என வரும்.

இது பிறர் கூறியது.

இது பாணியிற் பயின்றுவரும்.

மன்னெயில் அழித்த மண்ணு மங்லமும்—மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையேரான் உழுது வெள்ளைவரகுங் கொள்ளும் வித்தி மங்கலமல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடுமங்கலமும்;

அழித்ததனான் மண்ணுமங்கலம்.

உதாரணம்:--

என்று எயிலழித்தவாறு கூறி,

எனவே, ஒருவாற்றான் மண்ணியவாறுங் கூறியவாறு காண்க.

குடுமிகொண்ட மண்ணுமங்கலம் எயிலழித்தல் கூறாமை யின் இதனின் வேறாயிற்று.

பரிசில் கடைஇய நிலையும் - பரிசிலரை நீக்குதலமையாது நெடிது கொண்டு ஒழுகிய தலைவற்குப் பரிசில் வேட்டோன் தன் கடும்பினது இடும்பை முதலியன கூறித் தான் குறித்த பொருண்மையினைச் செலுத்திக் கடாவினநிலையும்;

கடைக்கூட்டு நிலையும் - வாயிலிடத்தே நின்று தான் தொடங்கிய கருமத்தினை முடிக்கும் நிலையும்;

இதுவும் இழிந்தோர் கூற்றாயிற்று, இருத்தலே அன்றிக் கடாவுதலின். நிலையென்றதனானே பரிசில்பெறப் போகல் வேண்டுமென்னுங் குறிப்பும் பரிசினிலையும் பல்வகையாற் கூறுதல் கொள்க.

உதாரணம்:-

இது பரிசில் கடாநிலை.

இது கடைநிலை.

இது போகல்வேண்டுங் குறிப்பு.

-----------
(பாடம்) *'ஊண்முறை விடுத்த லின்றியும்."
#'பெரும் பிறங்கிடையே.' என்பது முன் அச்சுப்பிதியிற் கண்ட பாடம். ஆனால் அது சிறந்த‌தன்று.
$'விசும்போ டெருவை' &'தீர்க்குவோ னதனால்.'
@'இருநிலங் கூலமாறி.' + 'கொண்ட வருமழை.' ##'முழக்கிடை."

இது மேலும் இக்காலத்தும் இங்ஙனந் தருவலென்றானெனக் கூறினமையின் அவன் பரிசினிலை கூறிற்று.

என்னும் புறப்பாட்டும் அப்பரிசினிலையைக் கூறியது காண்க.

பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றும் இருவகை விடையும் - அங்ஙனம் பரிசில் பெற்றபின் அவனும் அவன் கொடுத்த பெருவளனை உய‌ர்த்துக்கூறி உலக வழக்கியலால் தோன்றும் இரண்டு வகைப்பட்ட விடையும்;

இருவகையாவன, தலைவன் தானே விடுத்தலும் பரிசிலன் தானே போகல் வேண்டுமெனக் கூறிவிடுத்தலுமாம்.

உதாரணம்:-

இது தானே போவென விடுத்தபின் அவன் கொடுத்த வளனை உயர்த்துக் கூறியது.

இது யான் போகல்வேண்டுமெனக் கூறி விடுத்தபின், அவன் தந்த வளனை உயர்த்துக்கூறியது. 'நடைவயின் தோன்று' மென்றதனாற் சான்றோர் புலனெறிவழக்கஞ்செய்துவரும் விடைகள் பலவுங் கொள்க. அவை பரிசில் சிறிதென்று போகலும், பிறர்பாற் சென்று பரிசில்பெற்றுவந்து காட்டிப் போகலும், இடைநிலத்துப் பெற்ற பரிசிலை இடைநிலத்துக் கண்டார்க்குக் கூறுவனவும், மனைவிக்கு மகிழ்ந்து கூறுவனவும், பிறவும் வேறுபட வருவனவெல்லாங் கொள்க.

உதாரணம்:--

இது சிறிதென்ற விடை.

இது பிறன்பாற் பெரிதுபெற்றுச் சிறிது தந்தவற்குக் காட்டிய விடை.

"வேழம் வீழ்த்த விழுத்தொடைப் பகழி" என்னும் (152) புறப்பாட்டு இடைநிலத்திற் பரிசுபெற்றமை கண்டார்க்குக் கூறியது.

இது மனைக்குக் கூறியது.

நாளும் புள்ளும் பிறவற்று நிமித்தமும் அச்சமும் உவகையும் எச்சமின்றிக் காலங் கண்ணிய ஓம்படை உளப்பட- நாணிமித்தத்தானும் புண்ணிமித்தத்தானும் பிறவற்றினிமித்தத் தானும் பாடாண்டலைவர்க்குத் தோன்றிய தீங்குகண்டு அஞ்சிய அச்சமும் அது பிறத்தற்குக் காரணமாகிய அன்பும் ஒழிவின்றிப் பரிசிலர்க்கு நிகழ்தலின் அவர் தலைவர் உயிர்வாழுங் காலத்தைக்கருதிய பாதுகாவன் முற் கூறியவற்றோடேகூட;

ஒருவன் பிறந்தநாள்வயின் ஏனைநாள்பற்றிப் பொருந்தாமை பிறத்தலும், அவன் பிறந்த நாண்மீனிடைக் கோண்மீன் கூடியவழி அவன் நாண்மீனிடைத் தீதுபிறத்தலும், வீழ்மீன் தீண்டியவழி அதன்கண் ஒரு வேறுபாடு பிறத்தலும் போல்வன நாளின்கண் தோன்றிய நிமித்தம். *"புதுப்புள் வருதலும் பழம்புட் போதலும் " பொழுதன்றிக் கூகை குழறலும் போல் வன புள்ளின்கண் தோன்றிய நிமித்தம்; ஓர்த்து நின்றுழிக் கேட்ட வாய்ப்புள்ளும் ஓரிக்குர லுள்ளிட்டனவுங் கழுதுடன் குழீஇய குரல்பற்றலும் வெஞ்சுடர் மண்டிலத்திதுக் கவந்தம் வீழ்தலும் அதன்கண் துளைதோன்றுதலுந் தண் சுடர் மண்டிலம் பகல் நிலவெறித்தலும் போல்வன பிறவற்றுக்கண் தோன்றிய நிமித்தம்.

உவகை, அன்பு இந்நிமித்தங்கள் பிறந்துழித் தான் அன்பு நிகழ்த்தினான் ஒரு பாடாண்டலைவனது வாழ்க்கை நாளிற்கு ஏதம் வருங்கொலென்று அஞ்சி அவற்குத் தீங்கின்றாகவென்று ஓம்படை கூறுதலின் அது காலங்கண்ணிய ஓம்படையாயிற்று. எஞ்ஞான்றுந் தன் சுற்றத்து இடும்பை தீர்த்தானொருவற்கு இன்னாங்கு வந்துழிக் கூறுதலின், இற்றைஞான்று பரிசிலின் றேனும் முன்னர்ப் பெற்ற பரிசிலை நினைந்து கூறினானாமாகவே கைக்கிளைக்குப் புறனாயிற்று. இவன் இறத்தலான் உலகுபடுந் துயரமும் உளதாகக் கூறலிற் சிறந்த புகழுங் கூறிற்று.


"நெல்லரியு மிருந்தொழுவர் " என்னும் (24) புறப்பாட்டினுள் "நின்று நிலைஇயர்நின் னாண்மீன்" என அவனாளிற்கு முற்கூறிய வாற்றான் ஓரிடையூறு கண்டு அவன்கண் அன்பால் அஞ்சி ஓம்படை கூறியது.

உதாரணம்:-

இதனுட் பாடாண்டலைவனது நாண்மீனை வீழ்மீன் நலிந்தமை பற்றிக் கூறியது.
---------------
(பாடம்) *'கால்பிதிர்வுபொங்கி' †'மகளிர்க் கமர்துணை யாகி'

இப் புறப்பாட்டும் அது.

புதுப்புள் வந்ததும் பழம்புட் போயதுங் கண்ட தீங்கின் பயன் நின்மேல் வாராமல் விதுப்புறவறியா ஏமக் காப்பினையாக என்று ஓம்படை கூறியது. அது மேல் நின்னஞ்சுமென்று அச்சங்கூறி வெளிப்படுத்ததனான் உணர்க.


என்னும் புறப்பாட்டுப் பகைநிலத்தரசற்குப் பயந்தவாறு கூறிப் பின்னர்த் திரியாச் சுற்றமொடு விளங்கி நடுக்கின்றி நிற்பாயென அச்சந்தோன்றக் கூறி ஓம்படுத்தலின் ஓம்படை வாழ்த்தாயிற்று. "காலனுங் காலம்" என்னும் (41) புறப்பாட்டும் அது.

ஞாலத்து வரூஉம் நடக்கையது குறிப்பிற் கால மூன்றொடு கண்ணிய வருமே- உலகத்துத் தோன்றும் வழக்கினது கருத்தினானே மூன்று காலத்தோடும் பொருந்தக் கருதுமாற்றான் வரும் மேற்கூறிவருகின்ற பாடாண்டிணை என்றவாறு

என்றது, இவ்வழக்கியல் காலவேற்றுமைபற்றி வேறுபடுமாயின், அவையும் இப்பொருள்களின் வேறுபடா என்பதுணர்த்தியவாறு.

அவை, பகைவர்நாட்டுப் பார்ப்பார் முதலியோரை ஆண்டு நின்றும் அகற்றிப் பொருதல் தலையாய அறம்; அதுவன்றிப் பொருள் கருதாது பாதுகாவாதான் நிரயைத் தான் கொண்டு பாதுகாத்தல் அதனினிழிந்த இடையாய அறம்; அதுவன்றிப் பிறர்க்கு அளித்தற்கு நிரைகோடல் நிகழினும் அஃது அதனினுமிழிந்த கடையாய அறமெனப்படும். இனிப் பகைவன் போற்றாத நாட்டைக் கைக்கொண்டு தான் போற்றச் சேறலும் பொருள் வருவாய் பற்றிச் சேறலும் வஞ்சித்துச் சேறலும் போல்வன ஒன்றனின் ஒன்றிழிந்த ஞாலத்து நடக்கைக் குறிப்பு; மாற்றரசன் முற்றியவழி ஆற்றாதோன் அடைத்திருத்தலும், அரசியலாயினும் அவன் வென்றியுள்ளமொடு வீற்றிருத்தலுந், தனக்கு உதவிவரவேண்டியிருத்தலும், ஆற்றலன்றி ஆக்கங் கருதாது காத்தேயிருத்தலும் ஒன்றனினொன்றிழிந்த நடக்கைக் குறிப்பு.

இனி வாகைக்குப் பார்ப்பன ஒழுக்க முதலியன நான்கற்கும் வேறுபட வருதலுங் கொள்க. காஞ்சிக்கும் அவரவர் அறிவிற்கேற்ற நிலையாமை கொள்க; உயிரும் உடம்பும் பொருளுமென்ற மூன்றும்பற்றி. இது பாடாண்டிணையுட் கூறினார், எல்லாத்திணைக்கும் புறனடையாதல் வேண்டி. இனிக் கடவுள் வாழ்த்திற்குத் தலை இடை கடைகோடலும், அறுமுறை வாழ்த்திற்கும் அவற்றின் ஏற்றிழிவு பற்றிக் கோடலும் பிறவுஞ் சான்றோர் செய்யுட்கண் வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க. முற்கூறியனவெல்லாம் ஓம்படையுளப்படக் கண்ணிய வருமென்பது. (31)

இரண்டாவது புறத்திணையியற்கு, ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த காண்டிகை முடிந்தது.


சூத்திர முதற்குறிப்பு அகரவரிசை.
சூத்திர ம் சூத்திர ம்
அகத்திணை மருங் 56 குடையும் வாளும் 68
அடியோர் பாங்கி 23 குழவி மருங்கினுங் 84
அதுவே தானு 66 கூதிர்வேனி 76
அமரர்கண் முடியு 81 கைக்கிளை 1
அயலோர் ஆயினும் 38 கொடிநிலை கந்தழி 88
அவற்றுள் ஓதலுந் 26 கொடுப்போரேத்திக் 90
அவற்றுள் நடுவண் 2 கொண்டுதலைக் 15
அறுவகைப்பட்ட 75 கொள்ளார்தேஎங் 67
ஆயர்வேட்டுவர் 21 கொற்றவள்ளை 89
இயங்குபடை யரவ 63 தலைவரும் விழும 39
இருவகைப் பிரிவும் 11 தன்னும் அவனும் 36
உயர்ந்தோர்க் குரிய 31 தாவில் கொள்கை 74
உரிப்பொருள் 13 தாவினல்லிசை 91
உழிஞை தானே 64 தானே சேறலும் 27
உள்ளுறுத் திதனோ 48 தானை யானை 72
உள்ளுறை உவமம் 46 திணைமயக்குறுத 12
உள்ளுறை தெய்வ 47 தும்பைதானே 69
ஊரொடு தோற்றமு 85 தெய்வம் உணாவே 18
எஞ்சாமண்ணசை 62 நடுவுநிலைத்திணையே 9
எஞ்சியோர்க்கும் 42 நாடக வழக்கினும் 53
எத்திணை மருங்கினும் 35 நிகழ்ந்ததுகூறி 44
எந்நில மருங்கிற் 19 நிகழ்ந்ததுநினை 43
ஏமப் பேரூர்ச் 37 படையியங்கரவம் 58
ஏவல் மரபின் 24 பனியெதிர் பருவமும் 7
ஏறியமடற்றிறம் 51 பாங்கருஞ் சிறப்பிற் 78
ஏனையுவமந் 49 பாடாண் பகுதி 80
ஏனோர் பாங்கினும் 22 பின்பனி தானும் 10
ஒன்றாத்தமரினும் 41 புணர்தல் பிரிதல் 14
ஓதல் பகைவே 25 புறத்திணை மருங்கிற் 55
கணையும் வேலும் 71 பெயரும் வினையு 20
கலந்த பொழுதும் 16 பொருள் வயிற்பிரி 33
காஞ்சிதானே 77 பொழுதும் ஆறும் 40
காமஞ்சாலா 50 மக்கள் நுதலிய 54
காமப் பகுதி 83 மரபுநிலை திரியா 45
காரும் மாலையும் 6 மறங்கடைக் கூட்டிய 59

பக்கம் பக்கம்
மன்னர் பாங்கிற் 30 மேவிய சிறப்பி 28
மாயோன் மேய 5 மைந்து பொருளாக 70
மாற்றருங் கூற்றஞ் 79 வஞ்சிதானே 61
முதல்கரு வுரிப் 3 வழக்கொடு சிவணிய 86
முதலெனப்படுவ 17 வழங்கியன் மருங்கி 82
முதலெனப் படுவது 4 வாகைதானே 73
முந்நீர் வழக்கம் 34 வெறியறி சிறப்பின் 60
முழுமுதலரண 65 வேந்துவிடு முனைஞர் 57
முன்னைய நான்கும் 52 வேந்து வினையியற் 32
மெய்ப்பெயர்மருங் 87 வைகுறு விடியன் 8
மேலோர் முறைமை 29

This file was last updated on 18 March 2015.
.