தமிழ்ச் செல்வம்
(இலக்கியக் கட்டுரைகள்)
ஒளவை சு. துரைசாமி

tamizc celvam (literary essays)
by auvai turaicAmi piLLai
In tamil script, unicode/utf-8 format

தமிழ்ச் செல்வம் (இலக்கியக் கட்டுரைகள்)
ஒளவை சு. துரைசாமி

------------

6. தில்லையில் நாவுக்கரசர்

ஞான சம்பந்தர் காலத்தில் உடனிருந்தவர் திருநாவுக்கரசர். அவர் சமண சமயத்தினின்றும் நீங்கித் திருவதிகையில் சைவராகித் திருப்பதிகங்கள் பாடத் தொடங்கினார் என்பது வரலாறு. அவர் திருப்பாதிரிப் புலியூர் முதலிய பதிகளை வணங்கி வழிபட்டுப் பதிகங்கள் பாடிக் கொண்டு திருவெண் ணெய் நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவனூர் முதலிய திருப்பதிகளில் வழிபாடாற்றித் திருத் தூங்கானை மாடத்தில் சிவக்குறி பெற்று முதுகுன்றப் பெருமானை முழுதும் பரவித் தில்லைப் பதி நோக்கினார். அதனையுரைக்கவந்த சேக்கிழார்,

என்று இசைக்கின்றார். தில்லையம்பலத்தே ஆடு கின்ற பெருமானை வணங்குவது, ஊனும் உயிரும் பெற்ற பயன் என்பது இதனால் விளங்குவது காண லாம். ஊன் உடம்பின் மேலும் உயிர் உணர்வின் மேலும் நிற்கின்றன. உடம்பில் வழி உணர்வு வடிவிற்றாய உயிர் ஞானமும், உயிரில் வழி உடம்பு ஞானத்தின் பயனாகிய இன்பப் பெறும் எய்துமா றில்லை. ஆகவே, இரண்டும் ஒன்றாய் இயைந்தே இறைவனை நினைந்து பாடிப் பணிந்து பயன்பெறல் வேண்டும் என்ற கருத்தால் "ஊனாலும் உயிராலும் உள்ள பயன் கொள் நினைந்து" என்றும், ஞான நிலையம் திருவம்பலமும், ஞானப் பேரின்பம் திருக் கூத்தும் ஆதல் "மெய்ஞ்ஞானமேயான அம்பலமும் உண்ணிறை ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும் தனிக் கூத்தும்" என்பதால் அறியப்படும். அம்பலம் அணைந்து கண்ணாரக் கண்டு கும்பிடுதல் ஊனால் கொள்ளும் பயன்; ஆங்கெய்தும் இன்பக் களிப்பு உயிராற் கொள்ள வரும் பயன்.

திருநாவுக்கரசர் தில்லைப் பெரும் பதியின் எல்லையை அடைகின்றார். அவரது பொன்னிறம் கொண்ட மேனியில் தூய வெண்ணீறு திகழ்கிறது; மார்பில் அக்குமணி வடம் கிடந்து அழகு செய்கிறது; கை உழவாரப்படை தாங்கக் கண்கள் நீர் பொழிய, வாய் சிந்தை சிவன் திருவடிவத்தாய்த் தாங்குகிறது.

இத்திருவுருவத்தை மனக் கண்ணிற் கண்ட தெய்வப் புலமைச் சேக்கிழார்,

என நம்மனத்தே தோன்ற உரைக்கின்றார்.

இப் பெற்றியரான நாவுக்கரசர், மருதவளம் சிறந்த தில்லையெல்லை பூம்பொழிலும் புனற் பொற்கையும் புள்ளுறையும் சோலைகளும் சூழ்ந்து பொற்புற்று விளங்குகிறது. கானில் களிமயில்கள் ஒன்றுக்கொன்று எதிர் நின்றாட வாவிகளில் மலர்ந்து மணம் கமழும் தாமரைகள் மக்களின் முகம் போல் நின்று அவரை வரவேற்கின்றன.
ஒருபால் வளமிக்க வயல்கள் பரந்து தோன்று கின்றன. அவற்றிடையே மலர்ந்து தேன் சொரிய நிற்கும் தாமரை முதலிய பூக்களில் புதியவற்றைத் தேர்ந்து எருமைகள் மேய்கின்றன. அருகில் மூங்கிற் புதர்கள் நின்று விளங்க, அவற்றோடு ஒப்ப வயல்களில் கரும்பு பெருகிக் காடு போல் செழித்துக் கணுக்களில் முதிரும் முத்துக்களைச் சொரிகின்றன. அது, நாவரசராகிய பெரியவர் திருவடியைக் கண்டு நெஞ்சுருகிக் கண்ணால் நிர்துளிப்பது போல் நின்றது என்பாராய், "இங்குப் பெருகிப் புடை முதிர்தரவம் சொரிவன பெரியோரவர் திருவடிவைக் கண்டு உருகிப் பரிவுறுபுனல் கண்பொழிவன என முன் புள்ள வயல் எங்கும்” என்று சேக்கிழார் இன்புற்று இயம்புகின்றார்.

மருதவயல். வழிவரும் வாகீசப் பெருந்தகை. நெல் வயல்களைக் கடந்ததும் நந்தவனம் எதிர் நிற்கக் காண்கின்றார். அதனுட் புகுந்ததும், "அறிவிற் பெரியார் அயல் நெல் பனை வயவனை பிற்படும் வகை" அணைகின்றமை கண்ட குயிலினங்கள் இனிது கூவத் தலைப்படுகின்றன. அவற்றின் இன் பொலி,

என்று உரைப்பது போன்றுளது. கிளிகளும் பூவை களும் "அரகர” என இசைக்கின்றன. அதனோடு, அவற்றின் ஒலி,

என்று பொருளைத் தருகிறது. முன்னைத் தவத்தால் இப்பிறப்பில் சிவத் தொண்டு புரியும் நிலைமை எய்திற்றென்றும் அதன்கண் நின்று உயர்ந்தனர் நாவுக்கரசர் என்பதும் அதன் கருத்து.

இங்ஙனம் கிளியும் பூவையும் பாடும் நந்தவனம் புகுந்து போந்த வானளாவியுயர்ந்த மதில் சூழ்ந்த தில்லை நகரின் குடதிசை வாயிற்புறம் வந்துற்றார். வருகையறிந்த தில்லையுறையும் தவமுதல்வர்களான அடியார்கள் அவரை எதிர் கொள்ள வாயில் கடந்து வயல் பக்கம் சென்ற வழியூடு சென்று நாவரசை எதிர் தொழுது அணைந்தனர். குடதிசைக் கோயில் வாயிற் புறத்து உள்ளது சிவமே நிலவிய வீதி; அங்கே கல்வித்துறை வல்ல பலரும் மறை முதல் கரை கண்டவரும் வாழும் செல்வக் குடிகள் நிறைந்தது. சிற்றம்பலம் மேய செல்வன் கழல் தொழும் செல்வம் மிக்கன அக்குடிகள் என்பாராய்க் "கழல் பேணும் செல்வக் குடி நிறை நல்வைப்பு' என்று சேக்கிழார் சிறப்பிக்கின்றார்.

மணிமாலைகளும் மலர்மாலைகளும் நிறைந்த அவ்வீதியில் பல்வேறு புவனங்கட்கு முதல்வரான இமையவர் முடிகள் தாக்குண்டு உதிரும் மணித்துகள் பரவுகிறது; அதனைக் காற்றுக் கடவுள் துடைக்க வருணன் நீர் தெளித்துப் பணிமாற அதனால் தூய்மை போதாமை கண்டு அடியார்கள் அலசி விடுவதும் புனல்விடுவதும் செய்கிறார்.

திருக்கோயிலை அடுத்துள்ள வீதிகளில் வான வெல்லையிற் பறக்கும் கொடிகளால் ஞாயிற்றின் வெயிற் கதிர் நுழைவது அரிது; அந்த அழகுமிக்க திருவீதியை நாவுக்கரசர் முறைப்படி வணங்கி, மறையொலியும் முனிவரின் ஏத்தொலியும் பெருகி நிற்கும் எழுநிலைக் கோபுரம் கண்டு வணங்கி உள்ளே புகுந்தனர்.

கோபுர வாயிலைக் கடந்ததும் உள்ளே கிடப்பது திருமாளிகை வீதி அதனை வலம் வரும் நாவுக்கரசர் உள்ளத்தே அம்பலக் கூத்தன்பால் உண்டாகிய ஆர்வம் அளவிற் பெருக அலமரல் எய்துகிறது. அன்பு கடல் போற் சிறந்து தோன்ற உடலெங்கும் புலம் உண்டாகிறது. அந்நிலையில் பொற்கோபுர வாயிலை அடையும் நாவரசர், சிவபெருமான் நடம்புரியும் பொன்மன்ற எதிர் தோன்றக் காண்கின்றார்.

திருமிக்க அம்மன்றின்கண் ஒலிபெருகி நிறைந்து நினைவு செல்லுகிறது. அதனைச் சென்று கூடற்கு அன்புமிக்கு எழவும், கூடற் கண் தோன்றும் இன்ப நுகர்ச்சிக்கு ஒத்த சத்துவகுணம் மேம்படுகிறது; அவரும் திருநடம் கண்டு ஆராப்பேருவகையுற்றுத் தொழுவாராயினர். இதனைச் சேக்கிழார் பெருமான், ''நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளிநிறை அம்பலம் நினைவுற நேரே கூடும்படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெறவரும் நிலை கூட. ஆடுங்கழல் புரி அமுதத்திருநடம் ஆராவகை தொழுது ஆர்கின்றார்'' என்று கூறுகின்றார். இதன்கண் திரு என்பது பேராசிரியர் கூறுவது போலக் கண்டார். விரும்பும் - தன்மை . இத்திருவுடன் ஒளியும் பெருகுவது பற்றி நீடும் திருவின் பயன், கண்ட நாவரசின் உள்ளத்தே அன்பு பெருகச் செய்தலால் அங்கே நிறையும் பெருகொளி துக்க மோகங்களைப் பயக்கும் இராசத் தமோகுண இருளைப் போக்கிச் சத்துவகுணத்தை விளங்கச் செய்வது தோன்ற "இன்புறுகுணம் முன்பெறவரும் நிலைகூட'' என்று இயம்புகிறார். இசையும் தாளமும் மெய்ப்பாடும் ஒன்ற நிகழும் ஆடல் பொதுவாக இன்பம் தருவதாகலின், ஆடலரசாகிய சிவபரம் பொருள் அடி எடுத்தாடும் திருக்கூத்து அமுதம் பொழிதலால், "ஆடும் கழல்புரி அமுதத் திருநடம்” என அறிவுறுத்தப்படுகிறது.

ஆதிபந்தமில்லாத அருள் நடனமாதலின் அதன் இன்பத்தை இடையறவின்றிக் கண்டும் நாவுக்கரசர் ஆர்வம் தணியாமை புலப்பட "ஆராவகை தொழுது " ஆர்கின்றார் என்ற பாடுகின்றார்.

இங்ஙனம் பாடி மகிழும் சேக்கிழார் நாவரசர் கூத்தப்பெருமானைக் கண்டு ஆர்வம் பெருக இன்புற்றதை நுணுகி நோக்கி அவருடைய அகமும் புறமுமாகிய கருவி கரணங்களின் செயல்வகை களைத் தனித்தனியாக எடுத்துரைப்பது நாமும் , கண்டு இன்புறத் தக்கதாகும்.

கைகள் தலைமேற் குவிந்துள்ள ; கண்ணில் மழை போல் நீர் ஒழுகுகிறது; இவைகள் புறக்கருவிகள். அகக் கருவிகளான மனம் சித்தம் அகங்காரம் புத்தி என்ற கரணங்களும் அன்பால் உருகுகின்றன; இவ்விரு கருவிகட்கும் இடமாகிய நாவுக்கரசரின் மெய்விழுவதும் எழுவதுமாகவுளது. மனமுதலிய கரணங்கள் அன்பால் உருகினாலன்றிக் கைகள் தலைமேலேறி அஞ்சலி கூப்புதலும், கண்ணில் நீர்பொழிவதும் நிகழாவாதலால், கையும் கண்ணும் கூறியவுடன் கரணங்களைக் கூறுகின்றார். கரணம் நான் காதலால், அவை உருகிய வழிப்பெருக்கம் - மிகுதலால், "பெய்யும் தகையன கரணங்களும்” என்று உரைக்கின்றார். உருகுதற்கேது அன்பு என்பார், "உருகும் பரிவின'' என்கின்றார். அகமும் புறமும் ஒன்றப் பெறுவதுடன், ஆடும்பரமன் திருக்கூத்துக் காணும் பேறும் அது வாயிலாக அவன் ஆடும் அம்பலத்தை மெய்யால் அடைந்து. ஆராவகையால் தொழுது வணங்கும் பேறும் ஒழுங்கு எய்துவது பற்றி, "பேறு எய்தும் மெய்'' என்று விளம்புகின்றார். கரணங்கள் உருகும் பரிவின ஆயினமையின், விசைக் கயிறற்ற பாவைபோல அவரது மெய்தானாகவே விழுவதும் எழுவதுமாயிற்று என்பார், "மெய்யும் தரைமிசை. விழுமுன்பு எழுதரும்” என்கின்றார்.

இனி, அம்பலத்தின்கண் ஆடும் பெருமான் திருநடத்தை, "மின் தாழ் சடையொடு நின்றாடும் ஐயன் திருநடம்" என்று இசைக்கின்றார். இருந்தும் கிடந்தும் ஆடல்வகையுண்டு எனினும், அவை பலரும் கண்டு இன்புறற்கு ஆகாமையின், கூத்த பிரான் நின்றாடுகின்றான் என்றும் ஆடுங்கால் அவன் திருமுடியிலுள்ள செஞ்சடை உலகெங்கும் உயிர் தோறும் ஒளிசெய்யுமாற்றால், ஒலியாலும் நிறத் தாலும் ஒரு புடையொக்கும் விண்ணிற்றோன்றும் மின்னலைத் தாழச் செய்தலின், “மின் தாழ் சடை" என்றும் குறிக்கின்றார்.

தாழநின்று ஆடும் ஐயன் திருநடம் பன்முறை வணங்கியெழும் நாவுக்கரசர்க்கு உள்ளத்தே ஆர்வம் பெருகுகிறது; பெருமானுடைய திருமுகக் குறிப்பு | என்று வந்தாய் என்பது போலவும் உளது; இதனால் அவர் மனத்தெழும் ஆர்வம் அளவிறந்து விடுகிறது. அதனால் "அவர் ஆர்வம் பெருகுதல் அளவின்றால்" என்று தெரிவிக்கிறார் ஆசிரியர் சேக்கிழார். இறைவனது திருமுகத் தருட்குறிப்பு அவரது அருள் நலத்தைக் காட்ட, அதனால் கழிபேரின்பம் எய்தும் வாகீசப் பெருந்தகை,

என்று தொடங்கும் விருத்தத் திருமொழியையும்,

என்று தொடங்கும் விருத்தத் திருமொழியையும் பாடுகின்றார்.

இவ்வாறு மனமகிழ்வால் மைந்துற்றுப் பாடிய திருநாவுக்கரசர், தில்லைச் சிற்றம்பலத்துக்குத் தாம் வந்த காரணத்தை

என்று தொடங்கும் திருநேரிசையைப் பாடலுற்றார். விருத்தத் திருமொழிகள் தமது பத்தி நலத்தைப் பெருகக் காட்டாது சொல் நலத்தையே காட்டு கின்றன என்ற கருத்தாலோ, ஆராமையாலோ, எடுத்த எடுப்பில் "பத்தனாய்ப் பாடமாட்டேன்" என்று ஓதிக் கூத்தப் பெருமானை , நீ எனது பத்தி எல்லைக்கு அப்பால் மேம்பட்டுள்ளாய் என்பார். பரமனே என்றும், யோகியராவார் கருவிகரணங் களின் நீங்கி அறிவை மறைக்கும் மலத்தை வாட்டி அகக் காட்சியில் இன்புறுவாராக, போகங்களில் கலந்து ஒன்றாய் நின்றும் போகக் காட்சியொழியாத யோகம் புரிகின்றவனை என்பார்" பரமயோகி'' என்றும் எடுத்துரைக்கின்றார். ஞானசம்பந்தரும் இதனை வியந்து, "நல்லூர்ப் பெருமணத்தான் நல்லபோகத்தன் யோகத்தையே புரிந்தானே" என்று இயம்புகின்றார்.

பரம் யோகியாகிய உன்பால் பத்தி கொள்வ தாயின், அவ்யோக நெறியே பொருத்தமாயிருக்க, யான் அது செய்யாது திருக்கோயில் திருவலகிடல் மெழுகல் உழவராம் செய்தல் முதலிய எளிய செயல்களையே செய்கின்றேன் யோக ஞான நெறிகளை மேற்கொள்வேனல்லேன் என்றற்கு "எத்தினால் பத்தி செய்தேன்" என்றும், இதுபற்றி என்னை இகழ்ந்து அருளாமை கூடாது என்பார், "என்னை நீ இகழவேண்டா '' என்றும் கூறுகின்றார். முத்திச் செல்வனும் அதற்கு முதல்வனும் அவனாதல் அவற்றையே தமக்கு நல்க வேண்டும் என்பதற்கு முத்தனே முதல்வர் என்றும் இதற்கு அம்பலத்தே ஆடும் ஆடல் காட்சி வாயிலென்பது தோன்ற "தில்லை அம்பலத்து உன் ஆடல் காண்பான் அடிய னேன் வந்தவாறே" என்றும் உரைக்கின்றார்.

இங்ஙனம் பத்தனாய்ப் பாடமாட்டேன் என்றனர். அடுத்த பாட்டில், பத்தி பண்ணற்குரிய கருத்துடைமை தோன்றவும் நான் பாட இயலாதவன் என்பார், "கருத்தனாய்ப் பாடமாட்டேன்" என்றும், அதற்குக் காரணம் நீ ஒருத்தராலும் கருவிகரணங் களைக் கொண்டு அழியும் அறிவுக்கு எட்டாதவன் என்பார் "ஒருத்தரால் அறியவொண்ணாத் திருவுரு உடைய சோதி" என்றும், ஆயினும், நீ எம்போல்வார் அறிதல் வேண்டும் என்ற பேரருளால் தில்லை யம்பலத்துக் கூத்தாடும் பெருமானாக உருவு கொண்டு அருள்புரிகின்றாய் என்பார். "தில்லை தன்னுள்.. சிற்றம்பலத்தே திருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்தவாறு” என்றும், அதற்குத் தில்லைப் பதியைத் தேர்ந்து கொண்டதற்குக் காரணம் அதன் திருத்தமுடைமை என்றற்குத் "திருத்தமாம் தில்லை" என்னும் கூறுகின்றார்; வைதிகமும் சைவமும் கை கலந்து களிநடம்புரியும் எல்லையாதல் தோன்றத் திருத்தமாம் தில்லை எனப்பட்டது. எதுகை நோக்கி பெருமானது கூத்து திருத்தம் எனப்பட்டது. காணும் அவாமிகுதியால் நேர்பட வந்தவாறு என்றார்.

யான் வந்த காரணத்தைக் கேட்குமுறையில் என்னை நின்வாய் திறந்து கேட்பாயாகில் என்பார் . "கேட்குமா கேட்டியாகில்" என்றார். என்று வந்தாய் என்று கேட்பது போலப் பெருமானது திருக்குறிப்பு இருந்தமையின், இவ்வாறு கூறினார் என்றலும் ஒன்று. அதற்கு விடை கூறும் நாவுக்கரசர், நினது உமையாள் காண ஆடும் நலமும் அதனிடைச் சுரக்கும் இன்பத்தையும் நான் ஒருவரும் கூறக் கேட்டதில்லை ; ஏனெனில், யான் என் கிளைகளாக இருந்த சமன் சான்றோர் குழலினின்றும் பிரிந்த தில்லை என்பார், "கேட்டிலேன் கிளைபிரிவேன்" என்றும், பின்னர் நின் திருவருள் வாய்த்தமையின், நின் திருவடியை நெஞ்சில் நிலைபெறக் கொண்டேனாக திருக்கூத்துக் காணும் வேட்கை எழுதலால் நான் வந்தேன் என்றற்கு, "நாட்டினேன்... நெஞ்சினுள்ளே. ஆடுமாறு" என்றார்.

ஒன்றைச் செய்யுமிடத்துச் சிறிது நேரம் அதன்கண் ஒன்றி நிற்பதும் இடையீடுபட்ட வழித் திகைத்துப் பிறிதொன்றைப் பற்றிச் செல்வதும் மனத்துக்கு இயல்பு. அவ்வாறின்றி மேற்கொண்ட நின் திருவடிக்குரிய பணியை என் சிந்தை கலக்கறாது செறிவுடன் செய்தற்கு நீ அருகுதுல் வேண்டும் என்று அடுத்த பாட்டில் வேண்டுகின்றனர். செய்தற்குரிய பணிவகை யறியாமல் மயங்குகின்றார். அதனால் "யாது நான் செய்வது என்றும், அதனை அறியத் தமது நிலைமைக்கு இரங்கி என்னே என்றும், நடம்புரியும் இறைவன் திருவடியைக் காண்கின்றார். சிறிது நிற்பினும் கால்வலி காணும் தம்மைப் போல இறைவன் திருவடி இரவும் பகலும் இடையறாது ஆடல்புரிவதால் வருத்துமே என ஐயுற்று, "தில்லைச் சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் ஆட அடியினை அலசுங் கொல்லோ " என வருந்துகிறார்.

இறைவன் ஆடும் சிற்றம்பலத்தை அடைந்தவர், "இறைவ, உலகவர் ஏத்த நீ ஆடுமாற்றைக் கண்ட வாறே திரிந்து நாளும் நின் திருப்பாதம் கருத்திற் கொண்டிருந்து நின் அருட்குறிப்பின் வழி நின்று ஆடிப்பாடிக் கூடுவேன் என்று கண்டவா. ஆடுமாறே" என்று பாடுகின்றார். எண்டிசையோரும் கண்டு ஒத்த ஆடும் முறையைக் கண்டதனால், அங்ஙனமே அதனை எங்கும் காணத்திரியுமாறு தோன்றக் "கண்டவாதிரிந்து' என்றும், ஆடும் நிறம் கண்ட வாறே கண்ட அப்பொழுதே கரணம் திரிந்து கருத்திடை நின்னைக் கொள்வேனாயினேன் என்றும் குறித்தவாறு.

பார்த்திருந்து வந்தவாறே.

இதன்கண், சிற்றம் பலத்துக் கூத்தா நான் கூட வந்தவாறு உன் கூத்துக் காண்பான் வந்தேன்; அதனால், நான் பார்த்திருந்து பரவுவன்; பாடியும் ஆடியும் உன்னை மூர்த்தியே என்பன்; மூவரில் முதல்வன் என்பன்; நீயும் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய்; இனி ஒரு குறையும் இல்லை என்றும் இயம்புகிறார்.

பொய்யினை... வந்தவாறே

பரம, அம்பலத்தே நின் ஆடல் காண்பான் நான் வந்தவாறு இது; வந்து காண்டலால், யான் பொய்தவிர்த்து அகத்தடிமை செய்ய நீ அருளல் வேண்டும்; ஆதிமுதலும், ஆதிமூர்த்தியும் நீயாதலால் உனக்கு இது அருமையன்று; பொய் தவிர்த்தலான்றி மெய்யடிமை யாதல் நில்லாமை பற்றிப் பொய் யினைத் தவிர விட்டுப் புறமலா அடிமை செய்ய அருளிச் செய் என்றார். புறமலா அடிமை, அகத் தடிமை; மெய்யடிமை.

மனத்தினால் …. வந்தவாறே

மனத்தே திகைப்புண்டு நாடோறும் மாண்பலா நெறியிற் சென்று மக்கள் இடர்ப்பட்டு ஓலமிடு கின்றனர்; அதுகண்டு கலங்குகின்ற நான் வேறு செயல்வகை அறியேன்; அதனால் நின் இலயம் காண்பான் வந்தேன் என்று இப்பாட்டிற் கூறு கின்றார்.

நெஞ்சினை.. ஆடுமாறே.

என் நெஞ்சைத் தூயதாக்கி நன்னினைவுகளை நினைப்பிக்காமல், வேற்று நினைவுகளால் வேதனையை நான் எய்தச் செய்கின்றாயாதலால், அதனின் நீங்கற்கு அஞ்சொலாள் காண அம்பலத்தே நீ ஆடும் ஆடல் காண்பான் வந்தேன். நினது அருட்கூத்து என் நெஞ்சினை நேர்ப்படுத்தும் என்று இப்பாட்டில் கூறுகின்றார்.

மண்ணுண்ட... ஆடுமாறே

மண்ணுண்டமாலும் மலர் இருந்த அயனும் விண்ணுண்ட திருவே விரும்பி முயன்றமையின் நின் உருவம் காணமாட்டாராயினர்; திருமிக்க அம்பலத் தின் பண்ணுண்ட்பாடலோடு நீ ஆடும் திறம் காணின் அவர் விரும்பிய அடிமுடியும் காணலாம் என்று இப்பாட்டில் கூறுகின்றார்.

இவ்வண்ணம் பாடிப் பரவிய நாவுக்கரசர். திருவம்பலத்தின் முற்றத்திலும் பக்கங்களிலும் உழவாரப்பணி செய்து பின் திருவீதியிலும் அதனைச் செய்து மகிழ்வாராயினர். இத் திருப்பணியால் தமக்குத் திருவருளின்பம் எய்துதலால் பெருமகிழ்ச்சி கொள்வது நாவரசரின் நல்லுள்ளம்.

இந்நிலையில் சிற்றம்பலம் அடியார்க்கு வேண்டும் உணவும் உடையும் உறையுளும் தந்து வாழ்விக்கும் சிறப்புடைமை கண்டு வியக்கின்றார். உழவாரப் பணி மேன்மேலும் உலகையே மிகுவிக் கின்றது; கண்ணிர் வெண்ணீற்றைக் கரைத்துக் கொண்டு ஒழுகுகிறது. "பெருந்திருத் தொண்டு செய்து விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்டலாட'' மகிழ்கின்றார் எனச் சேக்கிழார் உரைக்கின்றார்.

இவ்வாறு பன்னாள் கழிகின்றது. இந்நாளில் ''அன்னம் பாலிக்கும்'' என்று திருக்குறுந் தொகையைப் பாடினார்.

1. அன்னம். பிறவியே
இப்பாட்டில் சிற்றம்பலம் அன்னமும் பொன் னும் பூமிசை பெருக நல்கும்; இதன் காட்சி அன்பு பெருகுவித்தலால், இடையறாது கண்ட இன்புறுதற்கு இப்பிறவி இன்னமும் கிடைக்குமோ.

தில்லை அன்னமும் சிற்றம்பலம் பொன்னும் பாலிக்கும்; அம்பலக் காட்சி அன்பு பெருகுவிக்கும்; இவற்றைப் பெற்று இன்புறும் பிறவி இன்னும் கிடைக்குமா? என்று கூறுகின்றார்.

2. அரும்பற்றப்பட... எம்பிரானையே
இப்பாட்டில், அரும்புகள் விலக்கப்பட நின்ற மலர்கள் கொண்டு, சுரும்பு தாதுண்ட பூக்களை விலக்கிக் காமனைக் காய்ந்தவனான எம்பிரானைத் தூவி வழிபடுவீராக என்று நமக்கு அறிவுறுத்து கின்றார்.

அம்பலம் இருக்கும் கோயில் திருமூலட்டானம் பெரும் பற்றப் புலியூர், அது புலியூர் என்றும் வழங்கும்.

3. அரிச்சுற்ற... உய்ம்மிளே .
இதன் கண் வினையால் அரிப்புண்டு வருந்தும் நீர் எரியிடைப் படுமாறு இறந்துவிட்டனரென்று பலரும் சிரித்து ஒழிக்கா முன் திருச்சிற்றம்பலம் சென்றடைக என்று இயம்புகின்றார்.

4. அல்லல் பூண்டேனுக்கே
சிற்றம்பலர்க்கு எல்லையில்லா அடிமை பூண்டேனாதலால் அல்லலோ அருவினையோ, தொல்லை வினைத்தொத்தமோ ஒன்றும் ஒரு தீங்கும் செய்யாது என்று தெளிவுற்றுக் கூறுகின்றார்.

5. ஊனிலாவி... வைப்பரே
இதன்கண், சிற்றம்பலவனாகிய என் நாதனை என் உடம்பில் உயிர் இருக்குங்காறும் நான் பரவிப் பணிந்து கொண்டிருப்பேன்; அவர் என்னை வானுலகத்தே வாழவும் செய்விப்பர் என்கிறார்.

6. சிட்டர்... காலனே
இப்பாட்டில் சிட்டரும் வானவரும் தொழும் சிற்றம்பலவன் சேவடி கைதொழச் செல்லும்
அச்சிட்டர் பால் காலன் அணுகான் என்கிறார்.

7. ஒருத்தனார் ... அறிவரே
இப்பாட்டின்கண், சிற்றம்பலவனார் உலகுக்கு ஒரு சுடராயினும் ஒருத்தனார், திருத்தனார்; விருத்தனார்; இளையார்; விடமுண்ட அருத்தனார்; அவர் அடியாரை அறிந்த அருள் புரிவதில் தவறார் என்று கூறுகின்றார்.

8. விண்ணில் நீத்தோர்...ஒருவனே
இதன்கண், வெள்ளழலின் உருவாகி இருவர்க்கு அறிவொணாது, அம்பலத்துள் நிறைந்து நின்றாடுவன் ஒருவன் என்று உரைக்கின்றார்.

9. வில்லை. உண்மையே
இதன்கண் வில்லை வட்டமுறை வளைத்து அவுணரது வட்டமான மதில் மூன்றையும் மாய்த்த வனது தில்லை வட்டத்தைத் தொழுவார் வினை அவர் வட்டம் கடந்து ஓடுமென்பது உண்மை என்பர்.

10. நாடி... இருக்கவே.
தில்யம்பலத்தாடி பாதம் என் நெஞ்சுள் இருக்கையில் நாரணனும் நான் முகனும் தேடித் திரிந்து காண வல்லரோ என்று இயம்புகிறார்.

11. மதுரவாய்... உய்ம்மினே
இதன்கண், மங்கை பங்கின்னும் சதுரனுமான அம்பலவன் மலையை ஆர்த்தெடுத்த இராவணன் முடி பத்தும் இறுமாறு மிதித்த சேவடியைச் சென்றடையின் என நம்மைத் தெருட்டுகின்றார்.

இன்னோரன்ன குறுந்தொகைகள் பாடி இன்புற்ற நாவுக்கரசர், தில்லையின் நீங்கி வேட்களம் பணிந்து கழிப்பாலைக்குச் சென்று வழிபட்டுக் கொண்டிருந்தார். ஓரிரு நாட்களில் அவர்க்குத் தில்லைப்பதியின் நினைவு வந்துவிட்டது.

தில்லைப்பெருமானே நினைவுக் கெட்டாத நிலையினனாதலால், நினைத்தற்கரியன்; அவனது நினைவு எழுந்ததும் அவரால் கழிப்பாலையில் இருக்க முடியவில்லை. கடலில் வாழினும் கரையை நினைந்து போந்து வளைகள் முத்தின் கொழுந்து களை மனப்படப்பையில் சொரியும் காட்சி கழிப் பாலையில் அவனது அருட்கடலில் திளைக்கினும், அவருள்ளம் தில்லையம்பலத்தை நோக்கிச் சென்று அவனைப்பாடவே விரும்பி அவரை உந்திற்று. இதனைச் சேக்கிழார் "மனைப்படப்பில் கடற் கொழுந்து வளைசொரியும் கழிப்பாலை” என்று குறிக்கின்றார்.

கழிப்பாலை ஞாழல் மரங்கள் நிறைந்த சோலை சூழ்ந்தது; அதனூடு அவர் நுழைந்து வருகையில், எப்பொழுது சென்ற தில்லை காண்பது என்ற வேட்கை மிகுந்து அவரை மருகவே, நினைப்பவர் மனம் கோயில் கொள்ளும் அம்பல வாணனை நினைந்து பனைக்கை மும்மத வேழம் உரித்தனன் என்று தொடங்கும் குறுந்தொகையைப் பாடலா னார். அதனைச் சேக்கிழார், "கழிப்பாலை மருங்கு நீங்கி ,

என்று உரைக்கின்றார்.

1. பனைக்கை... உய்வனோ
இப்பாட்டில், வேழம் உரித்தவனும், நினைப் பவர் மனத்தில் கோயில் கொள்பவனும், அனைத்துப் பொருளையும் தனக்கு மேனியாகக் கொள்பவனும் ஆகிய அம்பலக் கூத்தனைத் தினையளவு காலமும் மறந்து உயிர் வாழேன் என்கிறார். நினைப்பவர் நெஞ்சில் நினைந்த அப்பொழுதே நேர்படத் தோன்றி நிற்கும் நீர்மையன் என்றற்கு நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் என்றும், விரைவு பற்றிக் கொள்பவன் என்னாது கொண்டவன் என்றும் கூறுகின்றார். உருவும் அருவுமாகிய எப்பொருளிலும் அப்பெருமான் வீற்றிருப்பது பற்றி அனைத்தும் வேடமாம் என்றும், அப் பெற்றியோன் தமக்குள்ளே இருப்பவும் அவனை நினையாதிருத்தல் உய்தியில் குற்றமாதலால் தினைப் பொழுதும் மறந்து உய்வானோ என்றும் கூறுகின்றார்.

2. தீர்த்தனை உய்வனோ
இதன்கண், கூத்தப்பெருமானைச் சிவன், சிவலோகன், தீர்த்தன், மூர்த்தி, முதலாய் ஒருவன் என்றும், பார்த்தனுக்கருளிய பரமன் என்றும் கூறி அவனைக் கொடியனாய் மறந்து உய்யேன் என்கிறார்.

தீர்த்தன், உயர்ந்தவன்; கங்கையாய தீர்த்தம் உடையவன் என்றுமாம். மூர்த்தங்களுக்-கெல்லாம் முதல்வனாய் ஒருவனாய் நிற்றல் பற்றி முதலாய ஒருவன் என்றும், அடிசேர்வார் உறையும் உலகத்தை யுடையவனாதலால் சிவலோகன் என்றும் செப்பு கின்றார்.

3. கட்டும்... உய்வனோ
இதன்கண், யாரும் விரும்பாத இடுகாட்டில் விரும்பிக் கையில் எரியேந்தி ஆடும் பரமன், சிட்டர் விரும்பும் சிற்றம்பலத்தும் கூத்தாடுவன் என்கிறார். எட்டனைப் பொழுது, எள்ளத்தனைச் சிறுபோது.

4. மாணி... உய்வனோ
இதன்கண், பால் கறந்து ஆட்டிய மாணியாகிய சண்டேசுரர்க்கு உலகமெல்லாம் ஆளும் திருவை நல்கியது குறிக்கின்றார். நீருலகம், நீணுலகம். ஆணி ''உழுவார் உலகத்தார்க்கு ஆணி" என்றாற் போல.

5. பித்தனை... உய்வனோ
இதன்கண் பெருங்காடு அரங்காக உடையனா யினும் யாவர்க்கும் முத்தியளிக்கும் முதல்வன் என்றற்கு முத்தனை என்றும், யாவர், சித்தத்துள்ளும் சிறக்க இருத்தலால் சித்தன் என்றும், அவனுக்கும் உயிர்கட்கும் உள்ள தொடர்பு தந்தைக்கும் மகற்கும் உள்ளதாம் என்றற்கு அத்தன் என்றும் கூறுகிறார்.

6. நீதியை உய்வனோ
இதன்கண் எங்கும் நீக்கமற நிறைந்திருக்குமாறு விளங்க நிறைவை என்றும், இன்ன தன்மையன் என்று அறிவொண்ணாமை பற்றி ஒருவர்க்கும் அறிவொண் ணான் என்றும், அவன் அருளால் அறியலுறுவார்க்கு அருட்பேர் ஒளியாய்த் தோன்றலின் சோதியை என்றும் கூறுகின்றேர். பொன்னில் வேய்ந்த அம்பல மாதலின் செம்பொன்னின் அம்பலம் என்று குறிக்கப் படுகிறது.

7. மைகொள் .... உய்வனோ
மை, கருமை. பை, படம். செம்பொன் நிறைந்த திருத்தலின் திருமகட்கு இடமாதல் தோன்றச் செய்ய மாதுறை சிற்றம்பலம் என்றும், தலைமை பற்றி ஐயன் என்றும் குறிக்கின்றார்.

8. முழுதும் உய்வனோ
இதன்கண், முன்பெல்லாம் செம்பொன் எனப் பொதுப்படக் கூறினாராகலின், அதன் தனிச் சிறப்புணர்த்த ஈண்டுத் தூய செம்பொன் என்றும், முன்னரே எழுதித் திட்டமிட்டு மேய்ந்தது என்றற்கு எழுதி மேய்ந்த சிற்றம்பலம் என்றும் கூறுகின்றார்.

9. காருலாம் உய்வனோ
கொன்றை கார்காலத்து மலர்வது பற்றிக் காருலாம் மலர்க் கொன்றை என்கிறார். தேரோடும் திருவீதியையுடைய தில்லையைத் தேருலாவிய தில்லை என்கிறார். வாயால் உண்ணப்படாது உணர்வால் சுவைக்கப்படுதலின் ஆர்கிலா அமுது என்றார்.

10. ஓங்கும்... உய்வனோ
இங்கே, தொண்டல்லது வேறு துணை யில்லாமை பற்றிப் பாங்கிலாத் தொண்டனேன் என்றார்.

இவ்வாறு பாடிக் கொண்டே நடந்து தில்லையை அடைந்த நாவுக்கரசர், சிற்றம்பலத்தை நெருங்கியதும், அரியானை என்று தொடங்கும் தாண்டகத்தைப் பாடலுற்றார். தாண்டகப் பாவினும் சிறியவும் பெரியவும் என இருவகையுண்டு. அவற்றைப் பிறரெல்லாம் குறுந்தாண்டகம் நெடுந் தாண்டகம் என்பர். நாவரசர் பாடியவை நெடுந் தாண்டகமாகவும், சேக்கிழார் பெரிய திருத் தாண்டகம் என்று குறித்து, அதனை அடியார்கள் எப்போதும் ஓதியோதிச் சிந்தைக்கண் நீங்காதவாறு பாடுவர் என்ற கருத்துப் புலப்பட "அவர்தம் சிந்தை பிரியாத பெரிய திருத்தாண்டகச் செந்தமிழ்" என்று குறிக்கின்றார். செந்தமிழ் என்றதனால், இத் தாண்டகம் அரிய செஞ்சொற்களே கொண்ட மைந்தது என்பது பெற்றாம்.

இதன்கண், அரியவற்றுள் எல்லாம் அரிய பொருளாதலின் பரம்பொருளை அரியானை என்றும், அந்தணர் சிந்தையுள் அகலாமை பற்றி ''அந்தணர்தம் சிந்தை யானை'' என்றும், அவர்தம் அகத்துறையும் மறைநூற்பொருளில் உள்ளீடாக இருத்தலால் அருமறையின் அகத்தானை என்றும், அகத்தேயும் அணுவுக்கணுவாய் எழுந்தருளுதலால் அணுவை என்றும் கூறுகின்றார். தத்துவப் புலவர் பலரும் சிவதத்துவத்துக்கு அப்பாற் சென்றில் ராகலின், அதற்கப்பாலாய் உள்ள பரசிவ நிலையை எண்ணி "யார்க்கும் தெரியாத தத்துவளை'' என்றார். தத்துவம் கடந்து நோக்கும் யோகக் காட்சியில் காண்பார்க்குத் தேனும் பாலுமாய் இனிமை செய்தலின் தேனைப் பாலை என்றும், அவ்விடத்தும் ஒளி வடிவிற்றோன்றுதலின் திகழ் ஒளியை என்றும் ஓதுகின்றார்.

இதுகாறும் அகக்காட்சி கூறிய நாவுக்கரசர், புறக்காட்சிக்கு ஐம்பெரும் பூதமாயும் அவற்றை இயக்கும் திருமால் முதலிய தேவர்களாயும் அவர் கட்குப் பெரிய தலைவனாயும் இருத்தலால் பெரிய யானை என்றும், இப் பெற்றியுடைய பெருமானைப் பிறந்த நாள் முற்றும் பேசிப் பேசிக் கழிக்க வேண்டியிருத்தலால் பேசாத நாளெல்லாம் பிறவா நாள் என்றும் பேசுகின்றார்.

இதன்கண் கற்றோர்க்கு வரம்பாய் அறிவின்பம் நல்கிக் கல்லார் நெஞ்சில் நில்லாமையின், சிவனைக் கற்றானை என்றார். பேரருளாளனாதலின் அற்றார்க் கும் அலந்தார்க்கும் அருள் செய்வானை என்றும், தனிமுதலாதல் விளங்க மற்றோரும் தன்னொப்பார் இல்லாதானை என்றும், செய்வினையின்றி வினைப் போகமே நுகரும் இயல்பால் வானவர் மறுத்தற்குரிய ராயினும், அவர் தாமும் மறவாது தாமும் வணங்கி வழிபடப் பெறுதலின் வானவர்கள் எப்பொழுதம் வணங்கியேத்தப் பெற்றானை என்றும் கூறினார்.

இதன்கண் மான் தோல் உடையாக , காலில் கனைகழல் ஒலிப்ப, உமையவள் அமர்ந்து காண அமரர் வணங்க இறைவன் அம்பலத்தே ஆடும் நலம் சிறப்பிக்கப்படுகிறது. மட்டித்தல், மடங்குதல்.

இதன்கண், உமைபொடு கூடியிருந்தே யோக மூர்த்தியாய் விளங்குதலின் அருந்தவர்கள் தொழு தேத்தும் அப்பன் தன்னை என்றார். கருவி கரணங் களின் யோகமின்றித் தவமின்மையின் யோகியரை அருந்தவர் என்றார். அருந்தவரை நெறிகாட்டி யோகக் சால்புடைய ராக்குதலால் அப்பன் என்றார். அப்பன், தந்தை சான்றோனாக்குவன் தந்தை

பூதங்கள் தோறும் நிற்றல் அவர்க்கும் பெருந் தகைமையாதலால் பிறவுமாய பெருந்தகை என்றார்.

அடியார்தம் அருந்துணை; என முன்னும் கூட்டுக. அடியார்க்கு அறிவருளி நெறிகாட்டி உய்க்கும் செயலால் சிவனை அருந்துணையென்றார். அல்லல் பிறவி நோயுமாம்.

ஞானமாய மருந்தருளிப் பிறவி நோயை நீக்குதலால் அருமருந்தென்றார். சுற்றத் தொடர் பறுத்து இருவகைப் பற்றம் அற்று, புலன்களை அடக்கி, பெண் போகத்தை மாற்றிப் பொது நீக்கிடும் இறைவனது நிலை எல்லோர்க்கும் பெருந்துணை புரிவது இதன்கண் கூறப்படுகிறது.

இதன்கண் வானம் மண் முதலிய துளங்கினும் துளங்காவியல்பினதாதலின் துளக்கில்லா விளக் கென்றார்.

இதன் கண் துறந்தோர் இயல்பு கூறி அவர் கட்குப் பெரும்பயன் நல்கும் திறம் கூறப்படுகிறது.

இதன்கண் அடியவர் எத்திறத்தாராயினும் அவர்க்கு அணியனாய் அருளுவதும், அமுதுண்டு செய்வினையின்றி வாழும் தேவர் அறிவுக்கு அளக்க வொண்ணாமையும், பாரும் விண்ணும் பரவ நட்டம் புரிவதும் கூறப்படுகின்றன. இறைவனுடைய குணஞ் செயல்கள் எண்ணிறந்தன வாகலின் அவன் எண்ணில் பேரான் எனப்படுகின்றான்.

இதன்கண், மூவுலகும் அவனே என்றும், அவ்வாறு தன்னைப் பிறர் ஆக்காது தானே ஆயதன்மை விளங்க மூவுலகம் தானாய் முதல்வன் என்றும் கூறுகின்றார். முருகனிடம் ஞானம் பெற்ற குறிப்புத் தோன்ற ஞானம் பெற்றானை என்கிறார் போலும்.

நிறம் கார்முகில்போற் கரிதாயினும் ஒளி யுடைமை பற்றிக் காரொளிய திருமேனிச் செங்கண் மால் என்றார். செங்கண், இயல்பாகவே சிவந் திருப்பது என்பர் பரிமேலழகர். சிந்திப்பவர்க்குச் சிந்தனைக்கண் தோன்றும் மயக்கங்களை ஞானத் தால் தெளிவித்து ஒளிபெறுவிப்பது பற்றிச் சிவனைச் சிந்தை தனை மயக்கம் தீர்க்கும் ஏரொளி என்றார். 'அண்டமார் இருளுடுகடந்து உம்பர் உண்டு போலும்" ஒண்சுடராகலின், அப்பால் நின்ற பேரொளியை என்றார்.

தாண்டகம் பாடித் தமிழால் வழிபட்டு வரும் நாளில், செஞ்சடைக்கற்றை எனத் தொடங்கும் திருநேரிசையைப் பாடி அப்பதிகத்தில் சிற்றம் பலத்தே அருள் திகழத் துளங்கெரியாடுதலால், நஞ்சுடைக் கண்டனாரைக் கண்ணாரக் காணலாம் என்று கூறுகின்றார்.

அப்பதிகத்துள் , தில்லையை , மஞ்சடை சோலைத் தில்லை (1) ; நாறு பூஞ்சோலைத் தில்லை (அ); கடிகொள் பூந்தில்லை (3); செய்யெரிதில்லை (4); காரிடம் தில்லை (6); மதர்த்து வண்டறையும் சோலைமல்குதில்லை (7); சிறைகொள் நீர்த்தில்லை (8); நீடிரும் பொழில்கள் சூழ்ந்த மதியந் தோய்த்தில்லை (11) என்று சிறப்பிக்கின்றார்.

இவ்வாறு கூத்தப் பெருமானை இடையறவின்றி வாய் மலர்ந்து பாட நெஞ்சு அன்பு சூழ்ந்து உருக, கண்ணிலே நீர் நிறைந்து சொரிய திருக்கை உழவாரப்பணி செய்யத் திருநாவுக்கரசர் தில்லையில் பன்னாள் தங்கிச் சீர்காழியில் சம்பந்தர் தோன்றி ஞானசம்பந்தரானது கேள்வியுற்று அவரைக் காணச் சென்றார். சென்றவர் வேறுபல பதிகட்குச் சென்று முடிவில் திருப்புகலூரில் சிவன் சேவடி அடைந்தார். மீட்டும் அவர் தில்லைக்கு வந்த குறிப்பு வரலாற்றில் இல்லை.
-------------

7. தில்லையில் சுந்தரர்


திருவெண்ணெய்நல்லூரில் சிவபெருமானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட பின் நம்பி ஆரூரர் சுற்றத் தொடர்பு அகன்று, திருத்துறையூர் திருவதிகை முதலிய பதிகளில் இறைவனைப் பாடிப் பரவிக் கொண்டு தில்லைப்பதியின் எல்லையை அணுகி னார். அப்பொழுது அவர் செவியில் தில்லை நகரில் எழும் பல்வேறு ஒலிகள் கேட்டன. அவற்றை யாழொலி, முழவொலி, வேதவொலி, கீதவொலி எனப் பிரித்துணர்ந்து உரைக்கும் சேக்கிழார், ''நரம்புடையா ழொலிமுழவின் நாதவொலி வேத வொலி, அரம்பையர்தம் கீத ஒலி அறாத்தில்லை" என்று தெரிவிக்கின்றார். தில்லைப்பதியின் எல்லையை "மல்லலம் பதியின் எல்லை" என்று சேக்கிழார் சிறப்பிக்கின்றார். மல்லல், வளமை.

தில்லை மருத நிலத்தூராதலின், சுற்றிலுமுள்ள வயல்கள் நீர் நிறைந்துள்ளன ; அதன்கண் கயல் மீன்கள் வாழ்கின்றன; அவற்றைப் புள்ளினங்கள் மேய்வான் இருப்பனவற்றால் நீர் அலம்பித் திரையெழுப்புகிறது. அதனிடையே வாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்றன; மலங்குகள் வேறு மல்கி யுள்ளன.

மலங்குகளை நினைவார்க்கு உயிர்களைப் பற்றி வருத்தும் மலங்கள் நினைவிலெழுதலின், அவற்றை அறக்கெடுக்கும் நலம் தில்லையம்பதிக்கு உண்டு என்று தெளிவுறுத்தற்குத் 'தொழுவார்கள் தம் மும்மை மாமலங்கள் அறவீடருள் தில்லை" என்று கூறுகின்றார்.

நிற்க, தில்லை எல்லைக்குட் புக்க ஆரூரர், எதிரே தோன்று நந்தன வனங்களைக் காணுகின்றார். கருத்தில் மகிழ்ச்சியிருக்கிறது. அவ்வனத்தில் வன்னி, கொன்றை, வாழை, சண்பகம் ஆரம் (சந்தனம்) பலாசம், செருந்தி, மந்தாரம், கன்னி காரம் (கோங்கு) புன்னை முதலிய மரங்கள் நின்று மலர்ந்து அழகு செய்கின்றன. அவை தில்லைப் பெருமானுக்கு மலர் வழங்கி மாண்புறுத்தலால் அவற்றையும் ஆரூரர் பணிந்து செல்கிறார். மணம் கமழும் மலர்மாலை பால் மாவிருப்புடையாரதலால், கற்பு, முல்லை, கூவிளம், வில்வம், மாலதி, மல்லிகை, கரவீரம், அலரி முதலிய அம்பலர்க்கு மணமலர் வழங்கும் மரங்கட்கு வணக்கம் செய்கின்றார் என்பது தோன்ற மணம் கமழ்தாரான் என்று ஆரூரரைக் குறிக்கின்றார்.

நந்தவனத்தை அடுத்து நகரைச் சூழ்ந்து கிடக்கும் அகழி காட்சி தருகிறது. அது பெருங்கடல் போந்து வலங் கொள்வது போலவுளது. கடல் வளம் கொளற்குக் காரணம் யாது? உலகுக்கெல்லாம் தனிநாயகியான உமையம்மை கண்டு மகிழவும், புவனங்களெல்லாம் உய்தி பெறவும், பெருமான் ஆடல் புரிகின்றான்; நான்மறைகளும் ஆடும் சேவடியலப்பும் சிலம்பின் ஒலியைப் பேணிப் பரவு கின்றன; ஆகவே, நாமும் வலம் வந்து வணங்குவோம் என்று கருத்தால் வலம் கொள்கிறது என்பாராய், "இடமருங்குதனிநாயகி.. புடை சூழும்” என்று உரைக் கின்றார்.

கிடங்கில் கரையெடுத்து வானளாவி உயர்ந்த மதில் நிற்கிறது. உயர்ச்சி பற்றி முகிலினம் அதன் உச்சியிற் படிந்து தவழ்கிறது.

மதிலும் கிடங்கும் தரும் இனிய காட்சி ஆரூரரின் தமிழ் உள்ளத்தில் அளவிறந்த அன்பு பெருகு விக்கிறது. மகிழ்ச்சி மிகுகின்றார்.

அகழியின்கண் தாமரைகள் மலர்ந்து விளங்கு கின்றன; அவற்றின் தாது படிந்துண்ட வண்டினம் கரையில் நின்று மலரும் கைதையிற் படிந்து மேனி வெளிதாகிப் பூத்தோறும் சென்று சென்று பாடு கின்றன. வண்டின் காட்சி சிவனடியார்களின் செயலை உள்ளுறுத்து நிற்பது சேக்கிழார்க்குத் தெரிகிறது. தாமரை மலர் செல்வமனையாகவும், அதன்கண் உறைந்த வண்டினம் செல்வத் தொண்டர் களாகவும் கைதைப் பொடி கலந்து வெண்ணிறம் பெற்றது வெண்ணீற்றில் மூழ்கிய திறமும் பூத்தொறும் வண்டு சென்று முரல்வது அத்தொண்டர் பரவும் தூய செயலாகவும் தோன்றி நம் அறிவைப் பணி கொள்கிறது.

நகர்ப்புறத்தே தோன்றும் காட்சிகள் பல இருக்க, கமல வண்டு தாதும் காட்சி எடுத்தோதப் பட்டதற்குக் காரணம், அம்பலத்தாடும் இறையருள் தேனாகவும் அதனையுண்டு பாடும் நான்மறையாளர் வண்டாகவும் தோன்றுவதே என்பார், "மன்றுளாடுமது... மருங்கே" என்றார்.

புறக் காட்சி அகத்தே நிகழும் அருணிலையை நினைப்பித்தலால், ஆரூரர் சிந்தையில் அன்பு பெருகிக் குழைந்து வடக்கு வாயிலை அடைகின்றார். வாயில்கள் நான்கும் நாற்றிசையை விளக்க , கொடிகளிற் கட்டிய மணி நாவொலி மறைமுழக்கம் போன்று ஒலிக்க நான் முகந்தோறும் மறையோதும் நான்முகன் போல்வது கண்டு அயன் பொன்.
வாயில்கள்" என்று உரைக்கின்றார்.

வடதிருவாயிலை எய்தியதும் அவரைத் தில்லை வாழ் அடியார்கள் வணங்கி எதிர் கொண்டனர்; சுந்தரரும் அவர்களை வணங்கி மகிழ்ந்தார். இவ்விரு திறத்தாருள் தொண்டர் முன் வணங்கினரா? ஆரூரர் வணங்கினரா? என்றோர் ஐயம் இங்கே எழும்; அதனை நீக்கக் கருதிய சேக்கிழார், ''அடியார் அவர்களோ நம்பி ஆரூரர் தாமோ முன்பு இறைஞ்சினர் யாவர் என்று அறியாமுறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்தனர்" என்று உரைக்கின்றார்.

பின்பு நம்பி ஆரூரர் வாயிலின் அகத்தே அகன்று கிடக்கும் திருவீதி (பிராகாரம்) புகுந்தார். அங்கே எம்மருங்கும் முழக்கமே பெருத்திருந்தது; அவை மறையொளியும், வானதுந்துபி முதலிய முழக்கொலியும், பூமாலைகளில் மொய்க்கும் வண்டொலியும், தொண்டர் போற்றிசைக்கும் ஒலியும் எனப் பலவாம். வானத்து இந்திரன் உறையும் பொன்கோயில் போலும் மாளிகைகள் வானளாவி நிற்க, அவற்றின் உச்சியில் கட்டப்பட்ட கொடிகள் ஒலிக்கின்றன. யோக சிந்தையரான வேதியர்கள் வளர்க்கும் ஓமப்புகை சென்று வானத்தில் படிந்த கருமுகில் போல் பரவுகின்றன; அவற்றிடையே தோன்றும் மாளிகைக் கொடிகள் மின்னல் அடங்குவன போல் விளங்குகின்றன. ''மாளிகைக் கொடிகள் ...... விளங்கும்'' என்று சேக்கிழார் கூறுகின்றார்.

மாளிகையின் மேலிடத்தேயுள்ள நாசிகளில் தோகை மயில்கள் நிற்கின்றன; ஆகுதி செய்யும் வேள்விச் சாலைகளில் அரசிக்கட்டையின் தீச்சுடர் எழுகிறது; வாயில்கள் தோறும் மணித்தாமங்கள் தொங்ககின்றன; மேடைகளில் எல்லாம் கலசங்கள் இருந்து காட்சிதருகின்றன; நேர் வரிசைகளில் செவ்விய ஒளி தோன்றுகிறது; சாலைகள் தோறும் செந்நெல்குவை மலைபோல் நிற்கின்றன; பந்தர் தோறும் தண்ணிய புனல் தரப்படுகிறது; நெடிய இடைவெளிகளில் தேவர்களும் சிறந்து திகழ்கின்றனர்.

உலகில் அழகுடையவென எத்தனையோ பொருள்களும் இடங்களும் கூறப்படுகின்றன. உலகு களும் எத்தனையோ பல உள்ளன. அவ்வழகுகள் அனைத்தும் ஒருங்கே திரண்டு மண்ணில் தில்லைப் பதியகத்தை வந்தடைந்தது போலும் அழகு மலிந் துளது. அவற்றிடையே தூய அன்பர்கள் போற்றிப் பரவும் பொன்னம்பலம் நடுவில் இருக்கிறது; அதனைச் சுற்றி ஓர் அழகிய வீதியுண்டு. நம்பி ஆரூரர் அதனை அடைந்ததும் அடியற்ற மரம் போல் வீழ்ந்து வணங்கினார். பின்பு அதனை வலம் வந்து திருவாயிலை அடைந்தார்.

எதிரே சிற்றம்பலம் தெரியக்கண்டதும், அதன் கண் கூத்தப்பிரானது ஆடற்கோலம் கட்புலனாக, அவருடைய கைகள் தாமே குவிந்தன. திருக்கூத்தால்
வயகம் வாழ்கிறது ; மறைகளில் ஞானவொலியை எழுப்பும் சிலம்பு ஒலிக்க அறிவு வெளியில் ஆடும் பெருமானை அறிவால் காண்கின்றார். ஆன்மவறிவு வழி நிற்கும் கண்கள் ஆடும் பெருமான் திருவடியில் திளைக்கின்றன; மனமுதலிய அந்தக் கரணங்கள் அக்காட்சியில் கலந்துவிடுகின்றன. ஆன்மவட்டத்தில் ஊறிப் பெருகும் மெய்யன்பு மிக்கெழுந்து உந்துதலால், அம்பலத்தை அடைதற்குரிய களிற்றின் முகவடிவில் அமைந்த படியே அடைந்து நம்பி யாரூரர் வணங்கி எழுகின்றார்.

அந்நிலையில் அவருடைய உடலும் கருவி கரணங்களும் தம்மில் ஒடுங்கி ஒன்றுகின்றன. உடற்கண் கண் அமைந்த கண் காது முதலிய பொறிவழியியங்கும் அறிவு ஏனையவற்றை விடுத்து நீங்கிக் கண் ஒன்றே இடமாக நிற்கிறது; அதற்கு உடலாக இருக்கும் அந்தக் கரணங்களில் மனம் அலங்காரம் புத்தி முதலியன தம்மில் கரைந்து சித்தம் ஒன்றேயாய்க் கண்வழி இயங்கும் ஆன்ம அறிவாற் காணப்பட்ட கூத்தப்பிரான் திருவுருவைச் சித்தம் சிந்திப்பதில் தோய்ந்து நிற்கிறது. கரணங்களின் இயக்கம் சத்துவம் முதலிய குணநிலைக்கேற்பத் தெளிவும் கலக்கமும் மயக்கமும் பெறுதலால், சிந்தனையில் தெளிவு நிலவுமாறு, தாமசம் இராசதம் என்ற இரண்டின் இயக்கத்தை ஒடுக்கிச் சத்துவ மொன்றே நிலைபெறுகிறது. ஆகவே, சத்துவ விளக்கத்தில் தெளிந்த சிந்தனை வழியாக ஆன்ம அறிவு கண் வழிப்புறத்தே சென்று அம்பலத்தாடியின் அருமைத் திருவுருவைப் பற்றியதும், பேரின்பம் அவ்வறிவின் கண் ஊறிப் பெருகுகிறது ; இன்ப வெள்ளத்தில் மூழ்கித் திளைக்கின்றார் ஆரூரர், இதனைச் சேக்கிழாரடிகள், "ஐந்து பேரறிவும் மலர்ந்தார்" என்று எடுத்துரைக்கின்றார்.

கண் காது முதலிய அறிகருவிகள் ஐந்தாகலின் அவற்றின் வழியாக அருவமும் உருவமுமாகிய உலகம் கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியப் படுதலால் "ஐந்து பேரறிவு' என்றும், அப்பேரறிவு கண்ணிடமே ஒன்றி நிற்குமாறு விளக்க, கண்களே கொள்ள என்றும் கூறுகின்றார்.

பொறிவழியாகப் பரந்து இயங்கும் அறிவை ஒருமுகப்படுத்துவதும், ஒருமுகமாக நிற்பதைப் பலதலையாகப் பிரிப்பதும் அந்தக் காரணமாகலின், அதனைப் பின்னர்க் கூறுகின்றார். அவை மனம், சித்தம், அகங்காரம், புத்தி என நான்கு நிலைத்தாய்ப் படி முறையில் அமைந்தன. மனத்தை அடுத்துச் சித்தமும் அதனையடுத்து அகங்காரமும் அதன் மேல் புத்தியும் நிற்கும். மனம் பற்றிய பொருளைச் சிந்திப்பது சித்தம்; சிந்தித்தவற்றைக் கொள்வது அகங்காரம் ; உறுதி செய்வது புத்தி. மனம் ஒரு பொருளைப் பற்றச் சித்தம் சிந்தித்தலைச் செய்யப் புத்தி தெளிந்து நிச்சயிக்கும். இவை நான்கும் தமக்குரிய செயற்பாடின்றிக் கூத்தப் பெருமானது கூத்தினைக் கண்டு சிந்தையே யாய் நால்வகையாய் விரிந்து கழியும் மனோசாத்தி அவ்வாறாகாது சிந்தையிலே தேக்கிச் செயல்படுவது காட்ட, சிந்தையேயாக என்று கூறுகிறார்.

இங்கே கூறிய வாயிற் காட்சி, மானதக் காட்சி என்ற இரண்டையும் தொழிற்படச் செய்வது குணதத்துவம். சத்துவம் தாமதம் இராசதம் என்று மூன்றாகி முறையே தெளிவு கலக்கம் மயக்கம் என்று மூன்று நிலையைக் கருவிகட்கு உண்டாக்கும். குணப்பகுதி மூன்றாகிக் கணந்தோறும் மாறும் செயலாதாகலின் அச்செயலெல்லாம் ஒடுங்கித் தெளிவு நிலை ஒன்றையே நிலவுவித்து மனமும் பொறியும் திருக்கூத்தில் தோய்விக்குமாறு விளங்க, குணம் ஒரு மூன்றும் திருந்து சாத்துவிகமேயாக என்றார்.

கலக்கமோ மயக்கமோ இன்றி உள்ளதன் உண்மையை உள்ளவாறு கண்டு சிந்தித்துத் தெளிவு பெறுவிக்கும் கருவியாதல் பற்றித் திருந்து சாத்துவிகம் என்றார்.
இங்ஙனம் குணமும் கரணமும் பொறியும் ஆகிய மூன்றும் ஒன்றி ஒருமுகப்பட்டு நோக்குமிடத்து கூத்தப் பெருமானது அருட் கூத்து நோக்கும் அறிவின்கண் இன்பம் சுரத்தலால் ஆனந்தக் கூத்து என்றும், அவ்வாடலும் முடிவின்றியும் வேறு ஒப்புக் காண்டற்கின்றியும் பெருமையுற்றுப் பிறங்கிடுவது பற்றி எல்லையில் தனிப் பெருங்கூத்து என்றும் சேக்கிழார் கூறுகின்றார். கரணமும் கருவியும் ஒன்றிக் காணக்காணச் சிவானந்தம் உவட்டெடுத்துப் பெருக அதன்கண் திளைத்து மகிழ்ந்து உளம் உருகி உடல் பூரித்த ஆரூரை, "மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்" என்றார். உலகியல் மகிழ்ச்சியில் மலர்ந்தார்க்கு மறுகணத்தே நெகிழ்ச்சியும் சோர்வு முண்டாதலால் சிவபோகமகிழ்ச்சி மாறிலா மகிழ்ச்சி எனப்பட்டது.

இவ்வண்ணம் மகிழ்ச்சியால் மலர்ந்த ஆரூரர், சிவபரம் பொருளின் அருட்கூத்துக் காணும் பேரின்பத்தில் திளைத்த தமது மெய்யறிவு கைவரப் பெற்றுத் தாம் கண்டு துய்த்து மகிழ்ந்த திருக்கூத்தின் சிவபோகத்தின் நலம் பாராட்டலுற்று, "தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்தன் திருநடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பமாம் என்று கண்களில் நீர் சொரியக் கைகள் தலைமேற்குவிய, வாய் இனிய பண் கலந்து பாடப் பரவினர்; பின்பு மெய்யாற் பணிந்தார். திருநடம் கும்பிடும் பேறு எய்தியதால் மண்ணில் கிடைத்த பிறவி தனக்குத் தூயதும் இன்பமுமாம் என்கிறார். மண்ணில் பிறவி தூயதன்று என்னும் கொள்கை பற்றி.

பணிந்து எழுந்தக்கால், "ஆரூரில் நம் பால்வருக" என்றொரு சொல் வானில் பிறந்தது. கேட்டதும் ஆரூரர் திருவாரூர் நோக்கிப் புறப்பட்டு இறைவனைத் தொழுது அம்பலத்தை வலங்கொண்டு வெளிப் போந்து எழுநிலை கோபுரம் கடந்தார். அக்கோபுரம், வானுலகம் பணிய உயர்ந்த பொன்மலை போலக் காட்சியளித்தது. மேனி நிலத்திற் படிய விழுந்து வணங்கினவர் திருவீதியைப் பணிந்து தெற்குத் திருவாயில் வழியாகச் சென்று தில்லையின் எல்லையை இறைஞ்சிக் கொள்ளிட நதிக்கரை அடைந்தார்.

நாடெங்குமுள்ள சிவன் கோயில்கட்குச் சென்று வழிபாடாற்றிவரும் நம்பியாரூரர், திருமுது குன்றத்தே இறைவன் தந்து பொன் பெற்று அத் திருவாரூர்க் குளத்திற் பெறுவேன் என முதுகுன்றத் தருகிலோடும் மணிமுத்தாற்றிற் பெய்துவிட்டுத் தில்லை நோக்கி வருவாராயினர். வழியில் கடம்பூர் பரவிக் கொண்டு தில்லையை அடைந்த ஆரூரர், திரு வீதியைத் தாழ்ந்து வணங்கிப் "புள்ளிய வினைவாய் ஓங்கும்" திருவாயிலை நண்ணி அதன் முன்னர்த் தமது திருமார்பு பொருந்த மண்மேல் வீழ்ந்து வணங்கினார். வணங்கி எழுந்தவர், திருமாளிகைப் பத்தியைச் சுற்றி வந்து, கையாற் தொழுது கும்பிட்டு, சிற்றம்பலத்தின் முன்னிற்கும் கோபுரத்தின் ஊடே சென்று பொன்னம்பலத்தை அடைந்தார். உள்ளத்தே ஊறிய இன்பம் பெருக்கெடுத் தொளிர, கண்களில் நீர் சொரிய நின்றார்.

அன்பு மேலும் மேலும் பெருகுதலால் வாய் குளறி நிலத்தில் படிய வீழ்ந்து பணிந்து, இறைவன் திருக்கூத்தின் கண் உள்ள விருப்பத்தால் திண்மை யெய்தவே வஞ்சமிலாரைக் கண்டவிடத்து எய்துவது போலும் மனநிறைவு கொண்டார். அன்பால் பரவும் உள்ளத்துக்கு உரம் மிகுவிப்பது பற்றி இறைவன் திருக்கூத்தை, "வேட்கை உரனுறுதி திருக்கூத்து" என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார்.

இங்ஙனம் மனநிறைவெய்தியதும் நம்பி ஆரூர் அம்பலத்தானைப் பாடத் தொடங்கியதும். பேரூரில் அவனைக் கண்ட நிலை நினைவெய்தவும் அந்நினை வோடே பாடுவாராயினர்.

1. புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றமாகலின், தருமன் தமர் செக்கிலிடும் போது தடுத்தாட் கொள்வான்.

மடித்தாடும் அடிமைக்கண் அன்றி - மேன் மேலும் ஆசைகளில் வீழ்ந்து ஐம்புலங்கட்கு அடிமை யாய் வருந்துவதின்றி வாழ்நாள் முழுதும் தருமனார் தமர் கைப்பட்டுத் துன்புறாமல் தடுத்தாட் கொள்வான்.

2. காமத்தில் பேராது சென்றாற் போலன்றி - விரும்பிய போகப் பொருளில் மீளாது சென்று வீழ்ந்தாற் போலன்றி - போலாது)

இடையறா நினைவால் அன்பராய்ச் சென்று அடிவீழும் திருவினாரை நமன்தமர் ஓராது செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்.

3. நரியார்தம் கள்ளத்தால் பக்கான பரிசு ஒழிந்து - நரியின் கள்ளத்தால் ஒன்றியிருந்த எருதுகள் பிரிந்து தனித்து மடியுந்தன்மை நீங்கி, திரியாத அன்பராய்ச் சென்று அடி வீழும். சிந்தையான நமன்தமர் வருத்தும் போது தடுத்தாட் கொள்வான்.

4. நமன்தமர் நம்மைக் கட்டியகட்டு அறுப்பிப் பான் ; அருமையான தனது சிவலோகத்தைத் தருவான்; ஆதலால் சிற்றம்பலத்துப் பெருமானை நமக்கு உரியனாகப் பெற்றாம்.

பல்லவர்க்குத் திறைகொடாமன்னவரை மறுக்கம் செய்யும் பெருமையார் வாழும் புலியூர்ச் சிற்றம்பலம் என்க.

5. கூற்றத்தை உருண்டோட உதைத்து உகந்து உலவா இன்பம் தருவான்; நமன்தமர் செக்கிலிடும் போது தடுத்தாட் கொள்வான்; ஆகையால் பெருமானைப் பெற்றாம்.

6. உள்ளமே, என்னை உய்த்து ஆடித் திரியாதே; ஊன் கண்ணோட்டம் ஒழி.
ஊனுடம்பின் நிலையாமை கண்டு இரங்கி அதனை நிலையுமாறு பண்ணும் நினைவு செயல் களில் ஈடுபடுதலை யொழிக.

7. மூவாயிரவர்க்கு மூர்த்தி யென்னப்பட்ட வனும் பத்திபாவிப்பார் பாவமும் வினையும் கெடுத்த வனும் இராவணனை அடர்த்தவனுமாகிய புலியூர்ப் பெருமானைத் தலைவனாகப் பெற்றாம்.

8. கல்குழையுமாறன்றி மெல்லக் கருதக்கூடிய வர்க்கு எற்றாலும் குறைவில்லை-யென்பர்; புலியூர்ப் பெருமாளைத் தலைவனாகப் பெற்றமையால் அவன் நம்மைத் தடுத்தாட் கொள்வான்.

கல்கனியக் குழைதல் மிக்க அன்புடையார்க்கே அமையும்; நமக்கு ஆகாதுதான்; ஆயினும் நாம் கருது மளவில் கருதினால் அதுவே போதும்; எத்துணைச் சிறிதாயினும் குறைவில்லை என்று சிவஞானச் செல்வர் கூறுவர்; அது பற்றிக் கவலற்க.

9. இறைவன் நாடுடைய நாதன்; அவன்பால், மனமே, நீ நன்று என்றும் செய்வாயாக; தருமன் தமரிடமிருந்து தடுத்தாட் கொள்வான். பெரு மானைப் பெற்றாமாதலால்.

தாடுடைய தருமன், தாவடியிட்டுச் செல்லு தலையுடைய நமன். ஒரு தாவடிதாட்டு எனப்படும். தாட்டு தாடு என வந்தது. தாடு, வலிமையுமாம்.

10. பெருமானைச் சிற்றம்பலத்தே காணப் பெற்றாமாகலின் தருமன் தமரிடமிருந்து தடுத்தாட் கொள்வான்.

ஆரூரன் தம்பிரான் ஆரூரன் - ஆரூரருக்குத் தலைவனாகிய திருவாரூர் இறைவன்.
# # #

காஞ்சிவாய்ப் போரூரில் நம்பியாரூர் கண்ட காட்சியின் இயல்பைச் சேக்கிழார் இனிது எடுத்து உரைக்கின்றார்.

ஆருரர் திருப்பாண்டிக் கொடுமுடி வணங்கி நமச்சிவாயத் திருப்பதிகம் பாடிப் பரவிக் கொண்டு காஞ்சிவாய்ப் பேரூரை அடைகின்றார்.

அவர் வரவு அறிந்த பேரூர் வாழும் மெய்த்தவர் பலரும் சூழ்வரத் திருக்கோயிலுட்புகுந்த நம்பிகள், தில்லைமன்றுள் சிவபரம்பொருள் நின்றாடும் நீடிய கோலம் கண்டார். கைகள் தலையில் குவிந்தன; கண்கள் உவகைக் கண்ணீரைச் சொரிந்தன.

கைதொழுத ஆரூரர் தரைமிசை வீழ்ந்து எழுந்திருக்கவும், உள்ளத்தே கரைகடந்து பெருகிய அன்பு அவரது என்பினையுருக்கிற்று; அவரது மெய்யுணர்வின் ஒரு வகை உயரிய இன்பம் பொங்கி எழுந்தது.

உணர்வின்கண் எழும் இன்பம் யாவும் ஐம்புலன்களால் அறியப் பிறக்கம் இயன்பின; ஆனால், மெய்யுணர்வில் ஊறும் மேதக்க இன்பம் அவ்வாறு பொறிபுலன்களால் அளந்தறியப்படாமை பற்றி, "பூண்ட ஐம்புலனில் புலப்படா இன்பம்" என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார்.

இந்த இன்பப் பெருக்கம், கூத்தப் பெருமான் புரியும் ஆனந்தக் கூத்திடைத் தோன்றுதலால், அதனைக் காணும் பேறு ஆரூரர்க்கு அரிதிற் கிடைத் தமை விளங்க "தாண்டவம் புரியும் தம்பிரானாரைத் தலைப்படக் கிடைத்தலின்" என்றார்.

அக்காலையில் ஆரூரர் சிவனடியார்க்குரிய கோலமே பூண்டிருந்தாராகலின் அவரைச் "சைவ ஆண்டகை" என்றார்.

இங்ஙனம், இறைவனது அருட்கூத்தைக் கண்டு இன்ப வெள்ளத்தில் மூழ்கிய ஆரூரர் எய்திய உவகைகையைத் தமது புலமையாற் காணலுற்ற சேக்கிழார் அது மனமொழிகளின் எல்லை கடந்து நிற்கும் பெருமையை வியந்து, "அந்நிலைமை விளைவையார் அளவற்றிதுரைப்பார்" என்று ஆர்வம் பெருகியுரைக்கின்றார். அந்நிலையில் ஆரூரர், வாய்மலர்ந்து.
-------------------

8. கயிலையும் அரசும்

வரலாற்றுக் காலத்திலிருந்தே தமிழகத்திற்கும் வடக்கில் இமயத்திற்கும் தொடர்புண்டு. இமயத் தாபதர் தென்குமரி போந்து நீராடுவதும், தென்னகத் துறவியரும் வேந்தரும் வடவிமயம் சென்று கங்கை நீராடுவதும் மரபாக இருந்து வந்துள்ளன. தென் தமிழ் வேந்தர் வடவிமயத்தில் தங்கள் புலி வில் கெண்டை முத்திரைகளைப் பொறிப்பது சிறப்புடைச் செயலாக மேற்கொண்டு வந்தனர்.

பின்பு சமய வாழ்வு உலகியல் வாழ்விற் சிறப்பிடம் பெற்றது. அரசியல் பொருளியல் முதலிய வாழ்வியல்களைக் கைதுறந்து சமயம் கூறம் புராண வரலாறுகட்குத் தலைமையிடம் தந்து பயில்வது முறையாகக் கொண்டனர். சமயஞானிகள் வடவிமயத்தினின்றும் தென் குமரி நோக்கிப் படர்ந்து தமது சமயவுண்மைகளையும் வரலாறுகளையும் மக்களிடையே பரப்பினர். அவ்வாறே தென்னாட்டுச் சமய வாழ்வினர் வடபுலநோக்கிச் சென்று ஆங்கு வழங்கிய சமய தத்துவ சாத்திரங்களைப் பயின்றனர். வைதிக சமயங்களாகிய சைவ வைணவங்களே யன்றிச் சயின் புத்த சமயங்களும் தழைத்து ஓங்கிய போது, வடபுலம் தென்புலம் என்ற வேற்றுமை யின்றிச் சமயவுண்மைகள் நமது பாரத நாடு முழுதும் பரவி நின்றன. எண்ணிறந்த சமய நோக்குடைய புராணங்கள் பெருகின. விண்ணுலகும் மண்ணுலகும் புராண வுலகில் சமவாழ்வு நடத்தின. விண்ணவர் மண்ணவரோடும் மண்ணவர் விண்ணவரோடும் தம்மிற் கலந்து உறவாடினர். முனிவர்களும் தேவர் களும் விஞ்சையர்களும் எனப் பல்வேறு இனத்தவர் பாரத நாட்டுப் பண்பமைந்த மக்களாகக் கலந்து வாழ்ந்தனர். புராணங்கள் நாட்டிய பெளராணிக சமயவாழ்வில், சிவன் திருமால் பிரமன் இந்திரன் முதலிய தேவர்கள், தேவ லோகத்தவராயினும் நமது பாரத நாட்டில் ஆங்காங்கு இடம் கொண்டு வாழ்ந்தனர். சிவன்கயிலையிலும், திருமால் கடலிலும் பிரமன் தாமரைப் பூவிலும், இந்திரன் கிழக்கிலும் இருந்தனர். சிறப்புடைய நகரங்களில் சிவன் முதலிய கடவுளரைத் திருமால் முதலிய தேவர்கள் தவம் கிடந்து வழிபட்டு வரம் பெற்ற வரலாறுகளைத் தலபுராணங்கள் விரிவாகப் பேசுகின்றன. அயைாவும் வடமொழிப் புராணங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. வேண்டுவோர் அவற்றைத் தங்கள் தங்கள் மொழியில் பெயர்த்து எழுதிக் கொண்டனர். பெருங்காடு களிலும் மலைகளிலும் பெரிய பெரிய ஆற்றல் வாய்ந்த முனிவர்கள் வாழ்ந்தனர். அவர்களும் தேவர்களைப் போலச் சிவன் முதலிய தேவதேவர்கள் வாழிடங்களுக்கு வந்து அவர்களை வழிபட்டுச் செல்வர். நாடாளும் வேந்தர்களும் தேவதேவர்களோடு முனிவர்களையும் இருடிகளையும் முறை யாக வழிபட்டு வரம் பெற்றுச் சென்றனர்.

இங்ஙனம் தேவ தேவர்களையும் முனிவர் களையும் பிறஞானச் செல்வர்களையும் அவர்கள் உறையும் இடங்கட்குச் சென்று வழிபட்டு வருவ தென்பது உயரிய கடமையாக உருவாயிற்று. சமய வொழுக்கம் உரைக்கும் நூல்கள், இதனைச் ''சரியாசாரம்" என்று வகுத்து உரைப்பனவாயின. வைதிக சமயத்தவர்க்கே யன்றிப் பவுத்த சயின் சமயத்தவரும் இந்தச் சரியாசாரத்தை மேற் கொண்டனர். அவர்களிடையே போதிசத்துவர் இருந்த கயையும், வர்த்தமான வீரருக்குரிய பாடலியும் மேன்மையுற்றன. இவ்வாறே சைவரும் வைணவரும் சிறப்புடையதலங்கள் பலவற்றிற்குச் சென்று தேவதேவனாகிய சிவனையும் திருமாலையும் வழிபடும் சமயவொழுக்கத்தைக் கைக்கொண்டனர்.

இதனை இவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் கற்றுக் கொண்டனர் என்பதற்கில்லை. ஒருவர்க் கொருவர் முன் பின் என்று சொல்ல முடியாதவாறு சமய புராண வரலாறுகள் பின்னிப் பிணங்கிக் கிடக்கின்றன. அகத்தியர் தென்னாடு வந்ததும் தருமபாலன் நாலந்தா சென்றதும், குமரிலபட்டர் வடநாடு புகுந்ததும், திருமூலர் தென் தமிழ்நாடு
வந்ததும், காரைக்காலம்மையார் வடகயிலை நோக்கிச் சென்றதும் பௌராணிகவுலகில் காலத் தொடு படாது கலந்து வந்த வழக்காறுகளாகும்.

அவ்வகையில் 1300 ஆண்டுகட்கு முன் பல்லவராட்சி புகழ் பரந்து பொலிந்து விளங்கிய காலத்தில் திருநாவுக்கரசர் தமிழ்நாட்டில் சிவ பெருமான் எழுந்தருளும் திருக்கோயில்கட்குச் சென்று திருப்பதிகம் பாடிச் செந்தமிழ்ச் சைவத் தொண்டு ஆற்றிவந்தார். அக்காலத்தே சீர்காழியில் தோன்றிச் சிவனருளால் உமையம்மை தந்த சிவஞானப்பாலையுண்டு திருஞானசம்பந்தர் நாவுக்கரசர் போலவே திருக்கோயில் சென்று திருப்பதியம் ஓதும் திருப்பணி செய்தார். இருவரும் செந்தமிழ் நாட்டு எல்லைக்குள் இருந்து இனிய சைவப்பணி புரிந்து வருகையில் திருநாவுக்கரசர்க்கு வடவியமத்தில் சிவனுறையும் திருக்கயிலை சென்று காண வேண்டுமென்ற வேட்கையுண்டாயிற்று. காரைக்காலம்மையார் கயிலை சென்ற வரலாறு அவர் கருத்தை உருக்கிற்றுப் போலும். காளத்தி சென்று கண்ணுதற் பெருமானை வழிபட்ட நாவுக்கரசர் கயிலை நோக்கிச் செல்வாராயினர். சிவபெருமான் "பேணுதிருக்கயிலை-மலை வீற்றிருந்த பெருங்கோலம் காணுமது காதலித்தார், கலைவாய் மைக்காவலனார்'' என்று சேக்கிழார் தெரிவித் திருக்கின்றார்.

கயிலைகாணச் செல்வார்க்கு இக்காலத்துள்ள வாய்ப்புக்களும் உடை உணவு வகைகளும் 1300 ஆண்டுகட்கு முன் இல்லை . ஆயினும் நாவுக்கரசர், கயிலை காணும் காதலே ஊக்கமும் உறுதியும் வாய்ப்புமாகக் கொண்டு கயிலை நோக்கிச் செல்லலானார். காதலும் ஊக்கமும் பிறவும் கருத் தளவில் துணை செய்தன; அவற்றை உள்ளே தாங்கிச் செல்லும் நாவரசரின் முதுமை சான்ற நல்லுடல் செலவு ஆற்றும் வலியுடையதாக இல்லை . அதுவும் தேய்ந்து கெட்டது.

என்று சேக்கிழார் நமக்கு அறிவிக்கின்றார்.

இங்கே தருமயாதீனத் தலைவர் கயிலைக்கு முனிவர்கள் திருப்பனந்தாள் தம்பிரான் சுவாமி களுடன் கயிலைக்குச் சென்று அதனடியில் நின்று எழுந்த நிழற்படம் மனக்கண்ணில் காட்சி தருகிறது. எங்கும் பனிபரந்து தண்ணென் காற்று வீச, அச்சூழ்நிலைக்கமைந்த உடையுடுத்து அவர்கள் கயிலையைக் காண்பது நமக்கு மகிழ்ச்சி தருகிறது. அன்று திருநாவுக்கரசர், இன்று தவம் பெருகு கயிலைக்குருமணியும் தம்பிரான் சுவாமிகளும் சென்று காண்பது போலக் காணும் திறம் இல்லாமை நினைக்கும் போது நெஞ்சு வருந்துகிறது. இன்றைய பெருமக்கட்கு முன்னோடியாய்க் கயிலை நோக்கிச் சென்ற நாவுக்கரசரைச் சேக்கிழார் பெருமான் "கலை வாய்மைக் காவலனார்'' என்று பாராட்டி யுரைக்கின்றார்.

உடல் தேய்ந்து புரண்டு செல்வதன்றி வேறு போக்கிலா நிலையில் நாவுக்கரசர் வருந்துங்கால் வேதியர் ஒருவர் தோன்றி,

என்று சொல்லி, “மீளும் அத்தனை உமக்கு இனிக் கடன்'' என வற்புறுத்தினார். உடல் உறுப்புக்கள் தேய்ந்து குறையினும் உள்ளமும் ஊக்கமும் ஒரு சிறிதும் குறையாத நாவுக்கரசர்,

எனத் தமது மனக்கோளைத் திண்மையுடன் எடுத்தியம்பினார். சிறிது போதில் விண்ணில் ஒரு குரல் எழுந்து, "ஓங்கு நாவினுக்கு அரசனே, எழுந்திரு” எனப் பணித்தது. நாவரசரும் மறாது பணிந்த வுள்ளத்தராய்,

என வேண்டினார். "கயிலையில் இருந்த அம் முறைமை, பழுதில் சீர்த் திருவையாற்றிற் காண்க என இறைவன் ஆணையிட்டருளினார். அங்கே தடம்புனல் ஒன்று நாவரசர் கண்முன் தோன்றிற்று. அதன்கண் மூழ்கிய அவர் திருவையாற்றில் ஒருமலர்ப் பொய்கையிற் கரையேறினார்.

கரைக்கண் திருவையாற்றில் அவர் காண்பன் அனைத்தும் தத்தம் துணையுடன் காட்சி தருவது கண்டார். அதனைச் சேக்கிழார், "அப்பதி நிற்பவும் சரிப்பவும் ஆன, புடையமர்ந்ததும் துணையொடும் பொலிவன கண்டார்" எனப் புகழ்கின்றார். காண்பன பலவும் துணையொடும் பொலிதற்குக் காரணம் யாதென நினைக்கும் உள்ளத்துக்கு,

எனவுரைத்து ஆசிரியர் பெருமான் ஐயம் அறுக்கின்றார்.

திருவையாற்றுத் திருக்கோயில் நாவுக்கரசர்க்குத் திருக்கயிலையாய்த் தோற்றமளித்தது. தேவரும் மாதவரும் கயிலையிலுள்ளவாறே காட்சி தந்து இன்புறுத்தினர். உமாதேவி-யுடன் வீற்றிருந்த சிவபெருமானைக் கண்ணாரக் காண்கின்றார். இதனை,

என வரலாறு கூறுகிறது.


கண்ட நாவரசர் அன்புருவாகிச் செந்தமிழ்த் தேன் பிலிற்றும் திருப்பாதங்களும் தாண்டகங்களும் பாடலானார். காணப்படுவன பலவும் சிவமும் சத்தியமாய்க் காட்சி தருவதை வியந்தவர்,

என்று கயிலையாய்க் காட்சிதரும் திருக்கோயிலுள் புகுகின்றதைப் பாடுகின்றார். அவர் புகும் போது அவர்க்கு முன்னே பலரும் பூவும் நீரும் சுமந்து சிவனை உமா தேவியொடும் பிணைத்துப் பேரன் புடன் பாடிக் கொண்டே செல்கிறார்கள். பிறைக் கண்ணி சூடிய பெருமானை உமாதேவியுடன் சேர்த்துப் பலரும் பாடிச் செல்கின்றார்கள். அவர் பின்பு யான் கோயிற்குள் புகுகின்றேன் என்பது நாவரசரின் உள்ளத்து நிறைந்து வழியும் சிவப் பேரின்பத்தையே இனிது தெரிவிக்கின்றது ஒருபால் "மலையடியில் களிறுகள் பிடியொடு வருது தெரிகிறது. ' இவ்வாறே கோழிபெடை-யொடு கூடிக் குளிர்ந்து வருவதும், வரிக்குயில்கள் பெடையொடு ஆடி வைகி வருவதும், பேடைகள் மயிற் சேவலொடும் கூடி வருவதும் பிறவும் காணக் காண நாவரசர்க்கு இன்பம் மிக்குப் பொலிகின்றது. அன்பு அளவு கடந்து பெருகுகிறது. அதனை உணர்ந்து

என்று பாடுகின்றார்.

பாட்டுத் தோறும் உயிர்கள் பலவும் ஆணும் பெண்ணுமாய்க் கூடி மகிழ்ந்து வரக் கண்ட நாவுக்கரசர், அதுவே இறைவன் திருவடிக்காட்சி என்பாராய், "கண்டேன் அவர் திருப்பாதம்” என வுரைக்கின்றார். உலகுயிர்கள் ஆணும் பெண்ணுமாய் அன்பும் இன்பமும் உற்றுக் கூடிக் குலவித் தோன்றும் காட்சி சிவமும் சத்தியும் கலந்த சிவயோகக் காட்சி என்ற உண்மையைப் புலப்படுத்துவது காண்கின்றார்.

அக்காட்சியில் உளதாகும் பயன், காணப்படும் உலகினும் கண்டறிந்தோர் உரைத்த நூல்களினும் காணப்படாத நள்ளரிய சிவானந்த ஞான மாதல் புலப்பட, "கண்டறியாதன கண்டேன்'' எனக் கனிந்துரைக்கின்றார். காணாதன காட்டலும், கேளா தன கேட்பித்தலும் திருவடிக்காட்சியின் விளைவு என்பதைச் சான்றோர்களின் திருப்பாடல்கள் தெளிவாக வுரைத்தலின், நாவரசர் கயிலைக் காட்சியில் வைத்துக்

எனக் கட்டுரைக்கின்றார்.

கயிலையை நினைந்து பாடும் திருநேரிகையில், அப்ப மூர்த்திகள், இராவணனது அறியாமையையும் அவனைச் சிவபெருமான் திருத்திய அருளுடைமை யையும் நினைந்து பரவுகின்றார். ஒருபால் இராவணன் கண் சிவந்து கயிலையை எடுப்பதும் உமைதேவி அஞ்சுவதும் நாவரசர் நினைக்கின்றார்.

என்று பாடுகின்றார். உடனே, அத்துணை ஆற்றலும் ஆர்வமும் உடையனாதலால் அரக்கனாயினும் திருந்துதற்குரியன் எனச் சிவன் திருவுள்ளம் கொண்டு நின்றான்; அதனை நாவுக்கரசர், நன்குணர்ந்து, "திருத்தனாய் நின்ற தேவன்" என்றும், திருத்தி உய்வித்த சிறப்புத் தோன்றச் சிவன் "திருவிரல் ஊன்ற வீழ்ந்தான்" என்றும் உரைக்கின்றார். திருவருள் நலத்தை "வருத்துவான் ஊன்றினானேல் மறித்து நோக்கு இல்லையன்றே” என்று சிறப்பிக்கின்றார்.

இவ்வாறே திருக்கயிலாயத் திருத்தாண்டகம் அடிதோறும் சிவஞானக் கருவூலமாகத் திகழ்கிறது.

என்ற திருத்தாண்டகம் எத்துணை ஆழமிக்க அரிய ஞானக் கருவறையாய் விளங்குகிறது காண்மின்.
------------------

9. நம்பியாண்டார் நம்பியும், ஞானசம்பந்தரும்

இன்றைக்கு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகட்கு முன்னே நம் தமிழ் நாட்டில் தோன்றித் தமிழும் சைவமும் உய்யத் திருநெறித் தமிழோதி நம்மை உய்வித்த பெருமக்களான சமய குரவர் நால்வர் பாலும் பேரன்பும் அதனால் அவர்பால் பேரீடுபாடு முற்று அவர்களை வியந்து பல தமிழ் நூல்கள் எழுதிய சான்றோர் பலராவர். அவருள் நம்பியாண் டார் நம்பிகள் தொன்மையும் முதன்மையு முடைய வராவர். இவர் தாம் பாடியருளிய திருத்தொண்டர் திருவந்தாதியில் ஞான சம்பந்தரையும் நாவரசரையும் நம்பியா-ரூரரையும் வியந்து பாடியுள்ளார். இன்னும், பதினோராந் திருமுறையில் ஞானசம்பந்தரையும் நாவரசரையும் இவர் புகழ்ந்து பாடிய நூல்கள் தொகுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள்ளே திருவந்தாதி நீங்கலாக ஏனையவை ஞான சம்பந்தருக்கும் நாவரசுக்கும் உரியனவாய் இருத்தலை நோக்கின் . இவ்விரு பெருமக்கள் பாலும் நம்பிகட்குப் பெரு மதிப்பும் பேரீடுபாடும் உண்டென்பது புலப்படுகிறது.

நம்பியாண்டார் நம்பிகள் இற்றைக்குத் தொள்ளாயிரமாண்டுகட்கு முன்பே. சோழநாட்டுத் திருநாரையிலே ஆதிசைவர் குடியிலே பிறந்தவர். இதனை "நாரையூரினில் ஆதிசைவமறையோன்பால், வையமெலா மீடேறச் சைவம் வாழ மாமணிபோல்” பிறந்தருளினாரெனத் திருமுறை கண்ட புராணம் கூறுகின்றது. பத்தாம் நூற்றாண்டின் பிற்பாதியிலும் பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இருந்த இராசராச சோழன் காலத்தே இருந்தவர். அவன் மூவர் முதலிகள் வழங்கியருளிய சைவத் திருமுறைகளைப் பெறுதற்குத் துணை செய்தவர். முதலேழு திருமுறைக்கும் நம்பியாண்டார் நம்பிகளே திருவருள் துணையாகக் கொண்டு இசை வகுத்தா ரென்றும் கூறுவர்.

நம்பியாண்டார் நம்பிகளின் பெற்றோர் பெயர் முதலியன விளங்கத் தெரிந்தில். இவர் இளமையில் லேயே திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் திருவருள் பெற்றுப் பொல்லாப்பிள்ளையார் மேல் பாடிய திருவிரட்டை மணிமாலையும் தொகுக்கப் பெற்றிருக்கிறது. இராசராசன் திருமுன்பே திருமுறை தொகுக்கப்பெற்றதென்பது. "நம்பிகழல் மன்னர் பிரான் மகிழ்ந்திறைஞ்சச் சித்தி தரும் இறை மொழிந்த திருமுகப்பாசுரமுதலா, உய்த்த பதிகங்களையுமொரு முறையாச் செய்க எனப் பத்திதருந் திருமுறைகள் பதினொன்றாப் பண்ணினார்'' என்ற திருமுறை கண்டபுராணத் திருவிருத்தத்தால் அறிகின்றோம்.

நம்பியாண்டார் நம்பிகள் பொல்லாப் பிள்ளையார் திருவருள் பெற்று அவர்பால் கலைத்துறை பலவும் கற்றுப் புகழ் நிறுவிய பின்பு இராசராசன் வேண்டுகோட்கிசைந்து பிள்ளையார் அருளால் திருமுறை கண்டனர். அதன் பயனாக அவர் நம்பியாரூரர் அருளிய திருத்தொண்டத் தொகையின் பொருளாக, உணர்ந்தவற்றைத் திருத் தொண்டர் திருவந்தாதியாகத் தொடுத்துப் பாடி யருளினார்.

நம்பியாண்டார் நம்பிகள் இராசராசன் பொருட்டுத் திருமுறை கண்டதும் பண் வகுத்தது மாகிய செயல்கள் செய்ததோடு திருச்சிற்றம்பல முடையான் பேரில் திருவிருத்தமும், ஞானசம்பந்தர் நாவரசர் என்ற இருவர் பேரிலும் பல நூல்களும் செய்துள்ளார். இது முன்பும் கூறப்பட்டது. இவர் இயற்றியனவாகப் பதினோராந் திருமுறையில், பத்து நூல்கள் காணப்படுகின்றன. அவற்றுள், பொல்லாப் பிள்ளையாரைத் திருவிரட்டைமணி மாலையாலும், திருச்சிற்றம்பலமுடையானைக் கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தாலும், திருத்தொண்டர்களைத் திருவந்தாதியாலும், திருநாவுக்கரசரைத் திருவேகாதச மாலையாலும் அவர் பாராட்டிப் பரவியிருக் கின்றார். எஞ்சி நிற்கும் ஆறு நூல்களும் ஞானசம்பந் தரைப் பாராட்டிப் பரவுவனவேயாகும். திருவந்தாதியிற் காணப்படாத திருவாதவூரை, கோயிற்றிருப் பண்ணியர் விருத்தத்தில்.

என்று பாராட்டியுள்ளார்.

இவ்வாற்றால் நோக்கின், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், திருவாதவூரர் ஆகிய நால்வரையும் நம்பியாண்டார் நம்பி பாராட்டி யிருப்பது தெளிவாகும். ஆயினும், ஞானசம்பந்தரை மட்டில் ஆறு தமிழ் நூல்களாற் சிறப்பித்துப் பரவி யிருப்பது, அவர்பால் இந்நம்பிகட்கு இருந்த தனி மதிப்புப் பெரிதென்பது துணியப் படும்.

இவையாறும் ஆளுடைய பிள்ளையார் திருவந் தாதி, திருச்சண்பை விருத்தம், திருமும்மணிக் கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத் தொகை யென்பனவாகும். இவையாவும் ஞான சம்பந்தர் வரலாறு, அவர் செய்த அருட்செயல், அருளிய திருப்பதிகம், பிறந்த சீர்காழிப்பதியின் சிறப்பு முதலியவற்றைப் பாராட்டிப் புகழ்கின்றன. இவற்றுள்ளும் ஆளுடைய பிள்ளையார் திருத் தொகையில் வரலாற்று நிகழ்ச்சி முற்றும் கூறப்படுகின்றன. ஏனையவற்றுள், சிற்சிலவே சிறப்பிக்கப் படும், திருமும்மணிக்கோவைக்கண் ஞான சம்பந் தரின் செயல்வகை சிலவற்றை யழகுறக் கூறுவர்.

ஞானசம்பந்தரின் செயல்களுட் சிற்சிலவற்றைத் திருவந்தாதியில்,

என்றும், திருக்கலம்பகத்தில்,

என்றும் ஓதுகின்றார்.

இவற்றுள் சில செய்திகளையே நம்பியாண்டார் நம்பிகள் பல விடங்களில் பல படியாகப் பாராட்டு கின்றார். இவற்றுள் முன்னணியில் நிற்பது சம்பந்தர் ஞானப்பால் உண்டதாகும். இதனை மட்டில் ஐந்தாறு இடங்களில் பாராட்டிப் பேசுகின்றார். ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையின்கண் ஞானமுண்ட திறத்தை இனிமையுற விரித்துக் கூறலுற்று,

என்று பாடுகின்றார்.

உலக வாழ்வில் ஈடுபட்டு இன்ப துன்பங்களால் மலம் நீங்குதற்குரிய பக்குவமுற்று இறைவன் திருவருட்பேற்றுக்கு இலக்காவது உயிர்த்தொகை கட்கு இயல்பு. அவ்வாறின்றி, நம் சம்பந்தப்பெருமான் குழவிப் பருவத்திலேயே ஞானம் கைவரப்பெற்றது மிக மிக அரிய செயலாகும். அவ்வருமையால், பெரியாரும் அரியருமாய் விளங்கும் அவரது பெருந் தகைமை அறிந்து வழிபடுவதும் அரிதாக இருக்க, எனக்கு அது எளிதாக வந்துவிட்டது என்று மகிழ்ச்சி சிறக்கும் நம்பிகள், திருவந்தாதியில்.

என்றும், திருச்சண்பை விருத்தத்தில்

என்றும் பாராட்டி யுரைக்கின்றார்.

பட்டினத்தடிகள், ஞானசம்பந்தப் பெருமானது இச்செயலையே வியந்து, தாம் பாடிய திருக்கழுமல மும்மணிக்கோவையில்,

என்று உரைக்கின்றார்.

இவ்வண்ணமே சம்பந்தர் கோலக்காவில் தாளம் பெற்ற செய்தியைப் பாராட்டி-யுரைப்பவர். அவர் திருவாயால் பாட்டிசைப்பக் கையால் தாளம் போடுவது கண்ட பரமன், அவர் கைநொந்திடு மென்று பொற்றாளம் தந்தார் என்று கூறுகின்றார். நம்பியாரூரர், "நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கும் உலகவர்முன் தாளமீந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளன்" என்று அருளியிருப்பது நாம் அனைவரும் தெரிந்த செய்தி, இவர் கூறுவதைக் காண்மின்:

என்று பாடுகின்றார். முத்துச் சிவிகை பெற்ற செய்தி யும், ஆவடு துறையுள் பொன் ஆயிரம் பெற்றதும் பரவப்படுகின்றன.

திருமருகலில் கணவன் விடந்தீண்டியதால் இறந்துபடக் கண்டு வருந்திய வணிகமகள் பொருட்டு நம் சம்பந்தர் அவ் விடம் தீர்த்து அவள் வருத்தம் போக்கிய செய்தி நம்பியாண்டார் நம்பிகளால் பல விடங்களில் பாராட்டப்படுகிறது.

என்று திருவந்தாதியும்,

என்று திருச்சண்பை விருத்தமும் சிறப்பித்துக் கூறுகின்றன.

திருவுலாமாலையில் இச்செய்தியை வேறொரு வகையால் விதந்து பரவுகின்றார். நம் ஞானசம்பந்தப் பெருந்தகை திருவீதி உலா வருகின்றார். இவர் நலம் கண்டு மகளிர் சிலர் கருத்திழந்து மெலிந்து தம்முட் சொல்லாடுகின்றனர். அமணரை வாதில் வென்று கழுவேற்றிய இவன் தன் மாலையை நமக்குத் தருவான் என்று நாம் கருதுவது பேதைமை என்ற கருத்துப்பட.

ஆயினர். அதுகேட்ட வேறு சிலர், அவரை மறுத்து, சம்பந்தப்பெருந்தகை இரக்கம் மிகவுடையர் என்று சாதிப்பாராய், மருகல் விடம் தீர்த்த செய்தியை எடுத்து,

இவ்வாறே, நம் சம்பந்தப்பெருமான் திருமயிலை யில் என்பைப் பெண்ணாக்கிய அருட்செயலைத் திருவருணைக் கலம்பகமுடையார் மிக்க நயமுறக் கூறிப் பாராட்டுகின்றார். ஒத்த அன்பால் பிணிக்கப் பட்ட ஒருவனும் ஒருத்தியும் இல்லிருந்து நல்லறம் புரிந்து வருகின்றனர். வருங்கால், அவனுக்குத் தன் கல்வியறிவைப் பெருக்கிக்கொள்வதற்கு வேட்கை மிகுகின்றது. நல்லாசிரியர் ஒருவர் சேய்மையில் இருப்பதை அறிகின்றான். அவர்பாற் செல்லவும் விரும்புகின்றான். கல்வி குறித்துப் பிரியக் கருதும் கருத்தைத் தன் மனைக்கிழத்திக்குத் தெரிவிக் கின்றான். அவள் சீரிய கூரிய அறிவுநலம் படைத் தவள். ஆதலால், அவள் அவனை நோக்கி,

என்று கூறுபவள், தன் பிரிவாற்றாமையும், ஆற்றாது . உயிர் நீங்கிய வழி மீட்டும் அதனை வருவித்துப் பொருந்துவிக்கும் அருட்கவி வேண்டும் என்பதை வற்புறுத்தலும், ஞானசம்பந்தர் என்பைப் பெண் ணாக்கிய நலமும் தோன்ற "என்பொரு பாவையாய் பாடிய பாவலர் போலவே நீரும் அருந்தமிழ் செப்பிடும் நீர்மை யறிந்திவண் ஏகுவீர்'' என்று உரைக்கின்றாள்.

இனி, நம் ஞானசம்பந்தப் பெருந்தகை பாடி யருளிய திருப்பதிகம் 16000 என்று நம்பியாண்டார் நம்பிகள் குறிக்கின்றார்கள். ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதியில்,

என்று ஓதுகின்றார். இக்கருத்தே, திருத்தொகையில்,

என்றும், திருவுலாமாலையில்,

என்றும் எடுத்தோதி வற்புறுத்துகின்றார்.

இப்பதிகங்களின் வகைகளையும் தம்முடைய பிரபந்தங்களில் நம்பிகள் காட்டியிருக்கின்றார். இசைக்குரிய பண்முறையே வரும் பதிகங்களைப் பதிகமென்றும், திருப்பாசுரத்தைப் பாசுரம் பல்பத்து என்றும், ஏனைச் சிறப்புடைய இயல்பமைந்த-வற்றை திருவிராகம், திருவிருக்குக்குறள், யாழ்மூரி, சக்கர மாற்று, ஈரடி முக்கால் என்றும் விரித்துரைக்கின்றார். திருவுலாமாலையில்,

என்று உரைப்பது காண்க.

இனி, ஞானசம்பந்தர் தம்முடைய திருப்பதி கத்துள் பாராட்டிய சைவப் பெருமக்கள் இவர் என்றும், அவர்களை இவ்விவ்வகையில் பாராட்டி யிருக்கின்றார் என்றும் நம்பியாண்டார் நம்பிகள் ஆராய்ந்து கூறுகின்றார். இப்பெருமக்களுள் ஞான . சம்பந்தரை நினைக்கும் போதே பாண்டிமாதேவியார் தாம் நம் மனக்கண்ணே முந்து நிற்பவர். நம்பிகளும் அம்முறையே திருத்தொகையின்கண்,

என்றும், முருக நாயனார், திருநீலநக்க நாயனார் என்ற இவர் தம் சிறப்பை ,

என்றும் உரைக்கின்றார். திருவந்தாதியில்,

என்று தொகுத் தோதுகின்றார்.

இங்ஙனம், ஞானசம்பந்தரால் பாராட்டப்பட்ட பெருமக்களை நம்பிகள் எடுத்தோதி வந்தாரே; அவரால் திருச்செங்காட்டாங்குடிப் பதிகத்துள் பாசுரந்தோறும் பாராட்டப்பெற்ற சிறுத்தொண் டரைப் பாடிற்றிலரே என்று நினைக்கலாம். அச் சிறுத்தொண்டற்கு நம் ஞானசம்பந்தர் ஒரு திருப் பதிகம் முழுதும் அமைத்த அமைதி நலத்தை நன்கு ஆராய்ந்து ஒரு சிறந்த கருத்தினை நாம் அறிந் தொழுகுமாறு நம்பியாண்டார் நவில்கின்றார். திருஞான சம்பந்தப் பெருந்தகையின் திருவருள் பெற வேண்டுவோர் சிறுத்தொண்டர் சிறப்பறிந்து பரவுதல் வேண்டும் என்பார்.

என்று பரிந்தோதுகின்றார்.

சுட்டுணர்வுக்கெட்டாத முதல்வனை நம் ஞானசம்பந்தப் பெருமான் சுட்டிக்காட்டிய திறத்தை வியந்த பட்டினத்தார், "தோடுடைய செவியன் என்றும், பீடுடைய பெம்மான் என்றும் கையாற் சுட்டிக்காட்ட " என்றாரன்றோ ; அதனையே நம்பி யாண்டார் நம்பிகள் வேறொரு திறத்தால் நமக்கு . உரைப்பாராய்,

என்று உரைக்கின்றார்.

இனி, ஞானசம்பந்தர் பாடியருளிய திருப்பதிகங் களின் பொதுக் கருத்தும் அவற்றால் மக்கட்குண்டான பயனும் சிற்சில இடங்களில் நம்பியாண்டார் நம்பிகள் நமக்கு அறிவுறுத்துகின்றார்.

என்பதனால், திருப்பதிகங்கள் பிறவிக்கடலை நீந்தற்குத் துணை செய்யும் என்று உணர்த்துபவர், திருக்கலம்பகத்தில்,

என்று மீட்டும் வற்புறுத்துகின்றார்.

இத்திருப்பதிகங்கள் முற்கூறியவாறு பிறவிப் பிணி கெடுத்தற்குப் பெருந்துணையாம் என்பதை .

என்று சண்பை விருத்தத்தில் வலியுறுத்தி, இவை பத்திநெறியை மக்கட்கு உணர்த்தி, அதுவே சிவனருளைப் பெறுதற்கு நேரிய பெருவழியாம் என்று பல பாசுரங்களால் நமக்கு அறிவுறுத்து கின்றார்.

ஆளுடையார். திருத்தொகையில், இப்பதிகங் களைப்பற்றிக் கூறலுற்ற நம்பியாண்டார் நம்பிகள், "கத்தித் திரிபிறவிச் சாகரத்துள் ஆழாமே, பத்தித் தனித்தெப்பம் பார்வாழத் தந்த பிரான்'' என்று உரைத்துப் பின்னர்,

என்றும்,

என்றும் திருச்சண்பை விருத்தத்தில்,

என்றும் கூறியுள்ளார்.

இனி, ஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகத்தை ஓதும்போது திருநனிபள்ளித் திருப்பதிகத் திருக் கடைக்காப்பில் "இடுபறை என்ற அத்தன் பியல் மேலிருந்து இன் இசையால் உரைத்த பனுவல், நடுவிருள் ஆடுமெந்தை நனிபள்ளியுள்க வினை கெடுதல் ஆணை நமதே' என்றும், கோளறு பதிகத் திருக்கடைக்காப்பில், "தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் , ஆனசொல் மாலை யோதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே” என்றும் அருளுவதைக் காணுந்தோறும் நமக்கு வியப்பும் இறும்பூதும் உண்டாகின்றனவன்றோ?

நனி பள்ளிக்குப் போம்போது ஞானசம்பந்தர், ''நாம் அத்தன் பியன் மேல் இருந்து இன்னிசையால் உரைத்த பாசுரம் பத்தும் ஓதுபவர் வினைகெடுவர்; அதற்கு நமது ஆணை " யென்பது காணும்போது, ''இச்சிறுபிள்ளை தன் தந்தை தோளில் இருந்து கொண்டு சொல்லும் இறுமாப்பு என்னே'' என்றெழும் நினைவை நம் சேக்கிழார் பெருமான் உடனே நம்மைத் தெருட்டிப் பணிவிக்கின்றார். தந்தை தோள்மேல் இருந்தார் என்றது பரமன் திருவடிக் கீழ் இருந்தார் என்பதை யுணர்த்தும்; திருவடிக் கீழ் எனவே, அவர் திருமுடிமேல் பரமன் திருவடியிருப்பது பெறப்படும். படவே, அவர் மனத்தே தம் முடியில் திருவடியிருப்பது கருதி நிற்கின்றாராம்; சேக்கிழார், "மாதவம் செய்தாதை யார் வந்தெடுத்துத் தோளின் மேல் வைத்துக்கொள்ள, நாதர்கழல தம்முடிமேல் கொண்ட கருத்துடன் போந்தார் ஞான முண்டார்" (ஞானசம். பு. 113) என்றும், திருநனிபள்ளி திருப்பதிகத் திருக்கடைக் காப்பில் "ஆணை நமதே'' என்றதை வியந்து, ''நாரியோர் பாகர். வைகும் நனிபள்ளியுள்குவார்தம், பேரிடர் கெடுதற்காணை நமதேனும் பெருமை வைத்தார்” (திருஞான. பு. 115 என்றும் உரைக்கின்றார்.

இவ்வாறு "ஆணை நமதே” என்னும் பெருமை மொழியை நன்கு கண்டு இறும்பூதெய்திய நம்பியாண்டார், திருத்தொகையில், ''முத்திப் பகவன் முதல்வன் திருவடியை, "அத்திக்கும் பத்தர் எதிர் ஆணை நமதென்னவலான்" என்று பாராட்டியுரைக் கின்றார்.

இங்ஙனம் அடியாரைப் பற்றும் வினைகளைக் கெடுத்தற்கும் கோள்முதலியவற்றால் எய்தும் தீமை கெடுதற்கும் ஆணையிட்டுக் கூறும் பெருமை படைத்த ஞான சம்பந்தப் பெருந்தகையாரை வழி படுவதும் சிவ வழிபாடே என்றும், அதனாற் பெறும் பயனும் சிவ போகமே என்றும் நம்பியாண்டார் நம்பி கூறுகின்றார். அப்பகுதியைத் தொடங்குவதற்கு முன் அகத்திணை நெறியில் அவரை நம்பிகள் பாடி யிருக்கும் திறம் சிறிது கூறுகின்றோம்.

ஞானசம்பந்தரைப் பாராட்டி நம்பியாண்டார் நம்பிகள் பாடிய புகழ் நூல்களில் பெரும்பான்மை யான பாட்டுகள் அகத்திணை எழிலும் விரவி யிருக்கின்றன. அவற்றை, திணையும் துறையுமாக வகுத்து ஆராய்தற்குக் காலம் இன்மையின் இரண் டொன்றே காட்ட முயல்கின்றோம்.

ஒருத்தி ஒரு தலைமகனைக் கண்டு அவன் நட்புப் பெற்றுக் களவொழுக்கம் பூண்டு ஒழுகு கின்றாள். அவள் அவனை இடையறாது கூடியிருப்ப தற்கு இயலாமையால் மேனி வேறுபடுகின்றாள். அவ்வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகிறது. அதனை அவள் தோழிக்குக் குறிப்பிக்க, அவள் செவிலிக்குத் தலைவிக்கும் தலைவனுக்கும் உண்டான தொடர்பினை உரைக்கின்றாள். இது கள் வொழுக்கத்தில் அறத்தொடு நிலையென்று வழங்கும். தலைவி புனத்தே இருக்குங்கால் யானையொன்று போந்து
அச்சுறுத்துகிறது. அதுகண்டு தலைவி அலமரு கின்றாள்; அப்போது தலைமகன் போந்து அவ யானையை வெருட்டியோட்டி அவளைக் காக்கின் றான். அந்நன்றி மறவாமல் அவள் அவன்பால் அன்புற்று மெலிகின்றாள் என்ற இக் கருத்தை, அத் தோழி உரைக்கத் தொடங்கி,

என்று உரைக்கின்றாள். இவ்வாறு அகனைந்திணை யொழுக்கமே பற்றி வருவன பல.

மகளைப் பேதுறுவித்தான் என நற்றாய் ஏசல் என்ற துறையில் நம்பியாண்டார் நம்பிகள் ஞான சம்பந்தப் பெருந்தகையைப் பிள்ளையென்ற நிலை யில் வைத்து அழகிய பாட்டொன்றைப் பாடுகின்றார்.

இதன்கண், "வெள்வளைவாங்கி" என்ற உடம்புநனி சுருங்கல்; "செம்பொன் கொடுத்தல்" என்றது பசலை பாய்தல். பிள்ளைகளன்றிப் பெரியோர் வெள் வளைக்கு மாறாகச் செம்பொன் தாரார் என்பதும், பேதையார்க்குச் செம்பொன்னைத் தெரிந்தவர் கொடார்; சிறு பிள்ளைகள் அப்பொன்னின் அருமை தெரியாராதலின், அவர் தான் கொடுப்பர், நீ இவற்றைச் செய்தனையாதலின், "பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கென்னார்". பிறர்க்கு என்றவிடத்து எச்சவும்மை தொக்கதாகக் கொள்ளின், எனக்கே யன்றிப் பிறர்க்கும் இது நன்கு தெரிந்துவிட்டது என்றாளாம். 'பிள்ளையாவது தெரிந்தது பிறர்க்கே' என்றதன்கண், "பிறரெல்லாம் இவ்வாறு காரணம் காட்டிப் பிள்ளையென நின்னை யேசுகின்றனர்; யான் நீ பெரியன் என்றே பேணிப் பரவுகின்றேன்; நீ நின் மார்பின் மாலையைத் தந்து என் மகள் கொண்ட பேதுறவையைத் தீர்த்தருள வேண்டும்" எனத் தாய் தார் வேண்டி நிற்கும் நிலையும் தோற்றுவிக்கும் நயம் காண்மின்.

ஞானசம்பந்தர்பால் உண்டான காதல் வேட்கையால் கண்ணுறக்கமின்றிக் கைவளை சோர்ந்து மேனி வேறுபட்டு இருக்கும் ஒருத்தியைத் தோழி , நெருங்கி எத்துணை வேறுபாடு எய்தினும் இவ்வாறு கைவளை சோர நிற்றல் நன்றன்று என்று
கூற, அவட்கு விடையிறுக்கும் அத்தலைவி.

என்று கூறுகின்றாள். இதன்கண் இரவு முழுதும் அவள் கண்ணுறக்கமின்றி யிருந்த குறிப்பை, தேர் ஒளித்தது, இருள் கூர்ந்தது, கோழி கூவிற்று என அந்திமாலையும், நடுவியாமமும் விடியற்காலமும் அக்கால நிகழ்ச்சி வாயிலாக உணர்த்துமாற்றால் தோற்றுவிக்கின்றாள். என்னோடு இருக்கும் தோழியாகிய நீ நன்கு உறங்கினை; என் கலக்கத்தை அறிந்திலை யென்பாள், ''ஆரும் உணர்ந்திலர்' எனமுன்னிலைப் புறமொழியாகப் புகல்கின்றாள். இனி, இதனால் வேறு ஒரு கருத்தும் குறிக்கின்றாள், என் கைவளை சோர்வது கண்டு நெருங்கியுரைக்கும் நீ, அச்சோர்வுக்கு ஏது வினையுணர்ந்து ஞான சம்பந்தன் பால் சென்று, தார் பெற்றுவர முயல் கின்றிலை யென்றற்கு, "ஆரும் உணர்ந்திலர்" என் கின்றாள். மேலும், இதனால், தாயர் முதலாயினோர் இவட்குற்ற வேறுபாட்டினை நன்கு ஓராது வெறியயர்தலும் கட்டுக் காண்பதும் பிறவும் வீணே செய்கின்றனர் என்பதும் பெறப்படும், உங்கள் உணர் வின்மையைக் கண்டு, அந்த ஞானசம்பந்தனாகிலும், வந்து கூடுதல் நினையானாயினும், தன் மாலை யாயினும் தருகின்றானோ எனின் அது தானும் இல்லை; அதனால் யான் சோர்ந்து மெலியாது ஆற்றியிருப்பது எவ்வாறு முடியும் என்பாள். "எங்ஙனம் யான் சங்கு தாங்குவதே " என்கின்றாள்.

தோழியின் துணை பெற்றுத் தலைவியொடு கூடி யொழுகும் தலைமகனைச் சேட் படுக்கலுற்ற தோழி, அவனை, "பகற்போது மறைந்தது; இங்கு , நில்லற்க'' என்று கூறுபவள், ஞான சம்பந்தப் பிள்ளையார் சிவபரம்பொருளின் திருமுன் நின்று அருள் பெறும் திறத்தை அழகு திகழக் கூறுகின்றாள்:

இதன்கண் ஞானசம்பந்தப் பிள்ளையார் பாதத்திற் கட்டிய கிண்கிணி சிறு குரல் மிழற்ற. திருவாயில் அமுதூறு நின்று திருப்பதிகம் பாட, திருக்கை அதற் கேற்பத் தாளம் போட, தம்மை மறந்து சிவனருளில் தோய்ந்து நிற்றலின் திருவடி அடி பெயர்த்துச் சிறு கூத்தாடத் தோன்றும் இன்பக் காட்சி நம் கண் முன் தோன்றுவது காண்மின்.

இவருடைய பாட்டுக்களில் அகப்பொருட்டுறை யில் இதுகாறும் எப்புலவராலும் காட்டப்படாத புதுப்புதுத் துறைகளும் கருத்துக்களும் பல்கியிருக் கின்றன. அவற்றை யெல்லாம் ஈண்டெடுத்துக் காட்டுவது வேண்டா கூறலாம். இவர் பாட்டுக்களை மட்டில் தனியே எடுத்து ஆராய்ந்து காண விரும்பு வோர்க்கு அவை பொருளாம்.

இனி, நம்பியாண்டார் நம்பிகள் ஞானசம்பந்தப் பெருமானைத் தனித்த முறையில் எடுத்தோதி நமக்கு அறிவுறுத்துவனவற்றைச் சிறிது கூறி என் சிற்றுரையை முடித்துக் கொள்ளுகின்றேன்.

முதற்கண், ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருநாமத்தை ஓதுவதே வேண்டுவ தென்கின்றார். ஒருவன் பெற விரும்பும் பேறுகள் அனைத்தையும் பெறுதற்கு அதுவே வழியென்பார்,

என்று கூறுகின்றார். பிறிதோரிடத்தில் இக் கருத்தைச் சிறிது மாற்றி,

என்று நமக்கு அறிவுறுத்துகின்றார். ஆகவே ஞான சம்பந்தர் என்ற திருப்பெயர் ஓதினார்க்கு உயர்நலம் பெறுவிக்கும் உறுதியுடைய தென்பது வற்புறுத்தினா ராயிற்று.

இனி, ஞான சம்பந்தப் பெருந்தகையின் திருவடியை அனைவரும் பரவிப் பணியவேண்டும் என்பார் அவற்றின் பெருமையைப் பல விடங்களில் பாராட்டிக் கூறுகின்றார். நினைவார் நினைவில் எழுந்தருளி இன்பத்தேன் பெருகுவது அவர் திருவடியின் மாண்பு என்பார்,

என்று திருமும்மணிக் கோவையிலும்,

என்று திருவந்தாதியிலும் பாராட்டி யிருக்கின்றனர். இவ்விரண்டு பாட்டுக்களிலும் ஞானசம்பந்தர் திருவடி சிந்தித்தற் குரியனவாம் என்று வற்புறுத்து கின்றாரன்றோ? சிந்திப்பதால் உண்டாகும் பயனே ஞானப்பேறு என்று சேக்கிழார் பெருமான் தெரிவிக் கின்றார். 'வாழ்க அந்தணர்' என்று தொடங்கும் திருப்பாசுரத்துக்கு அவர் பேருரை விரித்து அதன் முடிவில், அப்பேருரையினைத் தாம் எழுதுதற்குத் துணை செய்தது எந்தை ஞான சம்பந்தப் பெருந் தகையின் திருவடி ஞானமே என்பார், 'வெறியார் பொழிற் சண்பையர் வேந்தர் மெய்ப்பாசுரத்தைக், குறியேறிய எல்லை அறிந்து கும்பிட்டேனல்லேன்; சிறியேன் அறிவுக்கு அவர் தாம் திருப்பாதம் தந்த , நெறியே சிறிதுயான் அறிநீர்மை கும்பிட்டேன்ன பால்" என்று ஓதுகின்றார். ஞானசம்பந்தப் பெருந் தகையின் திருவடிப்பேறு ஞானப்பேறே என யாப்புறுத்தற்கு இதன்கண், அவர்தம் திருப்பாதம் தந்த நெறியென்று சேக்கிழார் பெருமான் கூறு கின்றார். சிவப்பிரகாச சுவாமிகளும் இத்திருவடிப் பேறு வீடு பேறே என்பார். ''பூவான்மலிமணி நீர்ப்பொய்கைக் கரையினியல், பாவான்மலி ஞானப் பாலுண்டு, நாவான், மறித்தெஞ் செவியமுதா வார்த்த பிரான் தண்டை , வெறித் தண் கமலமே வீடு" என்று ஓதியிருத்தலை நாம் நன்கு அறிகின்றோம்.

ஞானசம்பந்தர் திருவடி பணிவார் பெறும் பயன் ஞானமும் வீடும் என மேலே காட்டிய பெரு மக்கள் வழங்கிய நல்லுரையால் தெளிந்தோமா யினும், நம்பியாண்டார் கூறுவது காண்போம். அவரும் திருவடிப்பேறு சிவபோகப் பேறே என்பார்.

என்று அழுத்தமும் திருத்தமும் பொருந்தக் கூறு கின்றார். சிவபோகம் பெறுதல் எளிதன்றே; திருஞான சம்பந்தர் திருவடி வழிபாடு அதனைத் தருமென மிக எளிதாகக் கூறுகின்றீரே யெனின், "எளிது எளிதே" என வற்புறுத்துவாராய், பிறிதோரிடத்தில்,

என்று உரைக்கின்றார். இதனைக் கேட்டதும், நம்மனோர் மனத்தில், "அஃது எவ்வாறு இயலும்; ஞானசம்பந்தர்க்கு அடியோம் என்பதனால் சிவபோகம் பேறு எய்தும் என்பது எங்ஙனம் அமையும்?'' என்றெல்லாம் எண்ணம் எழுகிறது. அதற்கு நம்பியாண்டார் நம்பி நல்ல காரணம் கூறுவார்.

என்று கூறுகின்றார். இவ்வாறு எடுத்து மொழிந்தவர். இதற்குத் தக்க எடுத்துக் காட்டும் ஓதுகின்றார். எடுத்துக் காட்டும் அளவை வகைகளுள் ஒன்று.

அது,

என்பது.

இதனைக் கேட்குமவர் நெஞ்சில் தாமும் ஞானசம்பந்தர் திருவடி பரவி அப்பேரின்ப வாழ்வு பெறுதற்கு முயலவேண்டும் என்ற வேட்கை கொள்வர், நினைத்தலும் செய்வர். அந்நினைவு நெடிது செல்லாது இடையற்றுப் போதலும் உண்டு. அப்போது, தம்மை , நினையவொட்டாது தடுப்பது வினையென்னும் உணர்வு தோன்றி அவர் உள்ளத்தை அலைக்கும். அதனால் அவர் மனம் கலங்குவர். அக்கலக்கமறிந்தே, நம்பியாண்டார் நம்பிகள், "உங்கள் முயற்சியை முன்னை வினைப்பயன் போந்து இடையூறு செய்து கொடுப்பதாக எண்ணுகின்றீர்கள்; ஞான சம்பந்தன் திருவடி வழிபாடு அவ்வினைப் பகையைச் சிதைக்கும்; நீவிர் கவலுதல் வேண்டா '' என்பாராய்,

என்று ஓதி வினைப்பகையைக் கெடுத்தற்கு விரகு கூறித் தெருட்டுகின்றார்.

இவ்வாறு, திருஞான சம்பந்தப் பெருந்தகையின் திருவடி நினைந்து வழிபடும் நெறியில் நம்மை அறிய வுறுத்திக் கூட்டுவிக்கும் இச்சான்றோர் இவ்வகை யால் அடியராயினர் பெருமை இது எனப் பல பாசுரங்களின் வாயிலாகத் தெரிவிக்கின்றார். ஒன்று காட்டுதும்.

எனபது காண்க. இதன்கண் அடிபணியும் பெரியோர் பேரின்ப வாழ்வில் இனிதிருப்பரென்பதும், பணியாதார் நரகில் தளர்வரென்பதும் கூறி, பணியாதவரைப் புலையரென்று இழித்துரைப்பதும் காண்க.

இந்நிலையில் திருமாலும் அயனும் சிவபரம் பொருளின் திருவடியும் திருமுடியும் முறையே காண முயன்று அலமந்த செய்தியை நினைந்து, அவர் தாமும், நம் ஞானசம்பந்தர் திருவருளை நாடி யிருப்பின், அவர்கட்கு அவர் அவற்றைக் காட்டி யிருப்பாரென்பார்,

என்று கூறுகின்றார்.

இவ்வாறு மாலும் அயனும் காண்பதற்கரிய பரமனைத் தாம் எளிதிற்கண்டு, அதனோடமையாது தந்தைக்கும் காட்டியருளிய அருளாளரான ஞான சம்பந்தப் பெருந்தகையைத் தாம் எளிதில் பற்றிப் பரவுதற்கு நேர்ந்த நேர் பாட்டினைத் தாமே வியந்து,

என்று பாடி மகிழ்கின்றார். இம்மகிழ்ச்சி மிகுதியால், இனி ஞான சம்பந்தரை, யன்றிப் பிறரைப் பாடுதற்கு என் மனம் செல்லாது; ஆனைமேல் அம்பாரி கட்டிச் செல்லும் அரிய செல்வம் சிறந்த வாழ்வு தானே வந்தமைவதாயினும் அதனை வேண்டேன் என்று கூறுவாராய்,

என்று கூறுகிறார்.

இவ்வண்ணம் ஞானசம்பந்தர்பால் திண்ணிய அன்பராகுமிவர், இப்பாட்டின் கண் ஒருவரை யென்றது, சிவனடியாரல்லாத பிறர் ஒருவரையாகும் எனக்கொள்ளல் வேண்டும்; என்னை, திருநாவுக் கரசரைத் திருவேகாதசமாலை பாடிப் பரவியிருக் கின்றாராகலின். அல்லதூஉம் அவர் திருஞான சம்பந்தரொடு கூடியிருந்து படிக்காசு பெற்ற செய்தியை விதந்து, இவ்விரு பெருமக்களும் கூடி யிருந்த கூட்டத்தின் பயனே இன்றும் சைவவுலகு நிலை பெற்றிருத்தற்கு ஏதுவாயிற்றென்பார்,

என்று ஓதுகின்றார்.
-------------------

10. வினையுணர்வும் ஞானசம்பந்தரும் [#]

வினைத்தொடர்புள்ள சொற்கள் இந்நாளில் எல்லாருடைய பேச்சிலும் எல்லாக் காலத்தும் காணப்படுகின்றன. கற்றவர் கல்லாதவர், செல்வர் வறியர், இளையர் முதியர், ஆடவர் மகளிர் ஆகிய யாவரும் இன்பம் துன்பம் என்ற இருவகைக் காலத்திலும் இவ்வினையைப் பற்றிய பேச்சுக்களை வழங்குகின்றனர். இன்பம் துன்பம் என்ற இரண்டின் நுகர்ச்சிக்குக் காரணம் நுகர்வோரது வினையே என்ற உணர்வு நன்கு வேரூன்றியிருக்கிறது. துன்பமும் ஒருவனைக்கண்டு ஆறுதல் கூறும் வேறொருவனும் "இது முன்னை வினையின் பயன்" என்று மொழிவது இயல்பாக இருக்கிறது.
-----
[#] இது கரந்தைத் தமிழ்ச்சங்க இருபத்தெட்டாம் ஆண்டு விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவாகும்.

தமிழ் நூல்களிலும் இவ்விணையுணர்வு நன்கு விளங்கித் தோன்றுகிறது. மிகப் பழையதாகிய தொல்காப்பியம் முதல் இன்று தோன்றும் திரைப் பாட்டுவரையில் எல்லாப்பாட்டுக்களிலும் உரைகளிலும் வினை பற்றிய சொல்லும் சொற்றொடரும் பயின்று வருகின்றன. இந்நூல்களுள், வினைத்தொடர்பான மொழிகள், எல்லாவற்றிலும் விடத் தேவா ரத்தில் மாத்திரம் மிகுதியாகவும், தேவாரப் பெருமக்களுள் ஞானசம்பந்தர் திருப்பாட்டுக்களில் மிகப் பெரிதும் இடம்பெற்றுள்ளன. ஞானசம்பந்தர் திருப்பாட்டுக்கள் சுமார் 4200 உள்ளன; அவற்றுள், சுமார் 3600 திருப்பாட்டுக்களில் இவ்வினையுணர்வு பயின்று வருகின்றது.

இங்ஙனம், இவரது திருப்பாட்டுமட்டில் வினைத்தொடர்பான சொற்கள் இவர் போலும் பெரு மக்களின் அருட்பாடல்களில் அத்துணைப்பயில வழங்காமையின், இது பற்றிய பேச்சு , இவர் காலத்து ஓங்கிநின்றதாகல் வேண்டும். தேவாரத்துக்கு முன்னிருந்த நூல்களிலும், இத் துணைப் பெருவழக்குக் காணப்பட்டிலது. முன்னைய நூல்கள், இலக்கணம், இலக்கியம், சமயநூல் எனப் பகுக்கப்படும். இவற்றுள் இலக்கியங் களும் சமயநூல்களும் பிரிப்பின்றி ஒரு தன்மை யாகவே அமைந்திருக்கின்றன. நீதிநூல்களோ இடை இடையே சமயக் கருத்தும் கொண்டு நிலவுகின்றன.

இந்திய நாட்டு நூல் வரலாறு காண்பவர் வேதங் களே மிகப் பழைமை வாய்ந்தவை யென்கின்றனர். அவற்றில் மிகச் சிறிதாகவே வினையுணர்வு காணப் படுகிறது என்றும், வேத காலத்துக்குப் பின்னர் தான், இவ்வுணர்வு நாட்டில் பயில வழங்கிவருகிறது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். இவருட் சிலர், இவ்வுணர்வு வேதகாலத்துக்கு முற்பட்ட தென்றும் புத்த சமண சமயங்கள் நாட்டில் பரவத் தொடங்கிய பின்பே, இவ்வுணர்வு மிகுதியும் பயில்வ தாயிற்றென்றும் மொழிகின்றனர். நம் தண்டமிழ் நாட்டிலும், தொல்காப்பியம் முதல் தேவாரம் தோன்றிய காலம் வரையில், வினையுணர்வு மிக்க பயிற்சியின்றி யிருந்தது. ஞானசம்பந்தர் காலத்திற் றான் அஃதாவது இன்றைக்குச் சற்றேறக்குறைய 130 ஆண்டுகட்கு முன்பு தான், வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் வினையுணர்வையே அடிப்படை யாகக் கொண்டு எழுந்தவையாதலின், அவற்றின் தொடர்புடைய நூல்களை விடுத்து, ஏனையவற்றை நோக்கின், அவை தொல்காப்பியமும் சங்க விலக்கியங்களும் எனக் காணப்படும்.

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்ற மூன்று பாகுபாட்டதாகும். இதன்கண், எழுத்ததிகாரம், எழுத்தும். அது சொல்லின் கண் இடம்பெற்றுத் தொடர்புவுறுதலும் கூறுவது; அதனால், அதன்பால் வினையியல்பு கூறும் பான்மை இன்றாம். சொல்லதிகாரம் வினை யியல்பைக் கூறுகிறது. இது, பொருளின் புடை பெயர்ச்சியாகவும் வினையென்று சுட்டி, ''வினை யெனப்படுவது வேற்றுமை கொள்ளாது, நினையுங் காலைக் காலமொடு தோன்றும்'', "காலந்தாமே , முன்றென மொழிப்” என்பனவாய நூற்பாக்களால் விளக்கிக் கூறுகின்றது. பொருளதிகாரம், ஆண்மகன் ஒருவன், தன் ஆண்மை துணையாகக் கொண்டு செய்யும் பொருண்முயற்சியினை வினையென்று காட்டி, அச்செய்கை நிகழ்ச்சிகளையும் 'வினை' யென்றே வழங்குகின்றது. "வினைவயிற் பிரிந்தோன் மீண்டுவருகாலை, இடைச்சுரமருங்கிற்றவிர்தல் இல்லை , உள்ளம் போலவுற்றுழியுதவும், புள்ளியற் கலிமா வுடைமையான'' என வருதல் காண்க. பிற்காலச் சமய நூல்கள் வழங்கும் பொருளிலும் ஆசிரியர் தொல்காப்பியனார், இவ் வினையென்னும் சொல்லை, "வினையின் நீங்கி விளங்கிய அறிவின், முனைவன் கண்டது முதனூலாகும்' என்ற நூற்பாவில் வழங்கியுள்ளார்.

சங்கவிலக்கியங்களுள், பதினெண் கீழ்க்கணக்கு களுள் தொகுக்கப்பட்ட சில வொழிய, ஏனையவும், தொகை நூல்களும் அகம், புறம் என இருவகை யாகும். அவற்றுட் புறப்பொருள் வழியாகிய புறநானூறு முதலியன வினையுணர்வைக் கூறு கின்றன. வினை, நல்வினையும் தீவினையும் என இருவகைத்தாய் முறையே இன்பமும் துன்பமும் பயக்குமென்பதனை வினையறிவு மிக்க புலவர் கூறுவர். ஆகவே, இன்பம் துன்பமும் பயக்குமென்ப தனை வினையறிவு மிக்க புலவர் கூறுவர் ஆகவே, இன்பம் பயக்கும் நல்வினையே மக்கள் விரும்பும் மாண்புடையதாகலின், அறிஞர், நல்வினையைச் செய்க என்று விதிப்பதும், தீவினையைச் செய்யற்க என விலக்குவதும் செய்வர். "கல்பொரு திரங்கு மல்லற் பேரியாற்று, நீர்வழிப் படூஉம் புணை போலாருயிர், முறைவழிப் படூஉ மென்பது திறவோர், காட்சியிற் றெளிந்தனம்” (புறம் 192) எனவும், "வாழச் செய்த நல்வினையல்லது, ஆழுங்காலைப் புணை பிறிதில்லை ” (புறம் 367) எனவும் வருதல் காண்க . மேலும், இப்பெருமக்கள் பலரும் நலம் பயக்கும். நல்வினையையே விதந்து கூறியிருத்தலின், வினை யுணர்வு நல்லது செய்தற்கே சான்றோர்களால் பண்டைக் காலத்தில் மக்கட்கு வற்புறுத்தப் பட்டதென்பது தெரிகிறது. 'நல்லது செய்தலாற்றீரா யினும், அல்லது செய்தல் ஓம்புமின்' (புறம் 195) எனவும், "நன்று பெரிது சிறக்க தீதில்லாகுக" (ஐங் 9) எனவும் வருதல் காண்க. நல்வினை செய்தவர் இம்மையிற் புகழும், மறுமையில் துறக்கவின்பமும் பெறுவர் என நல்வினையின் நலமே குறித்து. "பெரும்பெயர் நும்முன், ஈண்டிச்செய் நல்வினை யாண்டுச் சென்றுணீயர், உயர்ந்தோருலகத்துப் பெயர்ந்தனன்'' (புறம். 174 ) என மாறோகத்து நப்பசலையாரும். "மயங்காது செய்தல் வேண்டுமால் நன்றே வானோர், அரும்பெற லுலகத்தான்றவர், விதுப்புறு விருப்பொடு விரிந்தெதிர் கொளற்கே" (புறம். 213) எனப் புல்லாற்றூர் எயிற்றியனாரும் பிறரும் அறிவுறுத்தி யிருக்கின்றனர். அகப்பொரு நூல்களும், இவ்வாறே , நல்வினை இம்மையில் இசையும் மறுமையில் துறக்கமும் பயக்குமெனக் கூறுகின்றன. 'வினை விளையச் செல்வம் விளைவது போல்” (திணைமா. 150-5 என வருவதும், பிறவும் காண்க.

இருமையும் பயக்கும் நல்வினை செய்தற்கு நல்லாற்றில் ஈட்டும் பொருளும், அதனைச் செய்தற் குரிய முயற்சியும் சிறந்து நிற்றலின், அவற்றைக் குறித்து ஆண்மக்கள் தம் வாழ்க்கைத் துணைவியரைப் பிரிந்தேகுதல் நலம் என்றும், அவர் செலவு வினை வயிற் செல்லும் செலவு என்றும் சான்றோர் விரியக் கூறியுள்ளனர். "வினையே ஆடவர்க் குயிரே' (குறுந். 135), "சேறும் நாம் எனச் சொல்லச் சேயிழை , நன்றெனப் புரிந்தோய் நன்று செய்தனையே, செயல்படுமனத்தர் செய்பொருட்டு அகல்வராடவர் அதுவதன் பண்பே '' (நற். 24), 'ஈதலும் துய்த்த லும் இல்லோர்க் கில்லெனச், செய்வினை கைம்மிக எண்ணுதி அவ்வினைக்கு, அம்மா வரிவையும் வருமோ, எம்மை யுய்த்தியோ வுரைத்திசினெஞ்சே" (குறுந். 63) என வருவன இதற்குப் போதிய சான்றாகும்.

இனி, ஆசிரியர் காவட்டனார் என்பவர், ''வசையும் நிற்கும் இசையும் நிற்கும். அதனால், வசை நீக்கி யிசைவேண்டியும், நசைவேண்டாது நன்று மொழிந்தும்” வாழ்தல் வேண்டும் (புறம் 359) என அந்துவன் கீரன் என்று தலைவற்கும், ஆசிரியர் குடபுலவியனார், "செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும். ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி, ஒருநீ யாகல் வேண்டினும் சிறந்த, நல்லிசை நிறுத்தல் வேண்டினும் மற்றதன், தகுதி கேளின் மிகுதியாள்" (புறம். 18) எனப் பாண்டியன் நெடுஞ்செழியற்கும் அறிவுறுத்தியனவும் பிறவும், "அந்தோ வினையே" என்று அழுங்கி மயங்காது செய்வினையைச் சிறக்க அச்சமின்றிச் செய்யவேண்டும் என்பதையே வலி யுறுத்தி விளக்குகின்றன. ஓரொருகால், ''நன்றி விளைவும் தீ தொடும் வரும்" (நற். 188) எனினும், அத்தது கண்டு அஞ்சாது வினை செய்தல் வேண்டும் ஒருவினையைச் செய்யுமிடத்து, இடும்பையும் இடுக்கணும் வந்து தீது செய்யுமாயினும், "வினையே யாவர்க்குயிர்'', ''வினைக் குறை தீர்ந்தாரி றீர்ந்தன்றுலகு", "சுடச்சுடரும் பொன் போல் ஒளி விடும் துன்பம் சுடச்சுட நோற்கிற்பவற்கு" "ஊழையும் உப்பக்கம் காண்பர்" என்றெல்லாம் சான்றோர் கூறிய பொருளுரைகள், அவற்றிற் கஞ்சு தலும், வினையில் மடங்குதலும் கூடா என்பதனையே வற்புறுத்துகின்றன.

இக்கூறியவாற்றால், வினையெனச் சான்றோர் எடுத்துக் கூறியது யாவரும் மடியின்றிச் செய்தற்குரிய இம்மையில் இசையும் மறுமையில் பேரின்பமும் பயக்கும் நல்வினையே யென்றும், அதனால், நலம் பயக்கும் நல்வினையே பண்டைச் சான்றோரால் நல்வினை , நன்று ஆள்வினை, வினையெனப் பல்லாற் நானும் விதந்து கூறப்பட்டதென்றும் அறிகின்றோம். "யாம் செய் தொல்வினைக் கெவன்பேதுற்றனை" (நற். 88) என்றாற் போல்வன , வினை செய்யுமிடத்து, எதிர்பாராமல் வரும் இடர்கட்கு உள்ளம் உடை யாமல் ஊக்கம் கோடற்கெழுந்தவை என்றும், இடுக்கண் வருங்கால் நகுக' என்றாற்போல்வன , "இன்பமும் இடும்பையும் உணர்வும் பிரிவும், நண் பகலமையமும் இரவும்போல, வேறுவேறியலவாகி மாறெதிர்ந், துளவென வுணர்ந்தனை" (அகம் 327) எனவுணர்ந்து, இவற்றைப் பொருள் செய்யாது , செய்வினையைக் கடைபோக ஆற்றுவது குறித்துப் பிறந்த அறவுரையென்றும், ''துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சம் துணையில்வழி'' என்றாற்போல்வன , உயிரின் வழி வினை நிகழ் தலுண்டேயன்றி, வினையின் வழி உயிர் இயங்குவ தில்லை என்றும் காட்டக் காண்கின்றோம். இதுவே தேவார காலத்திற்கு முன்னிருந்த சான்றோர் கொண்டிருந்த வினையுணர்வாகும்.

இதற்கிடையே, "காமஞ் சான்ற கடைக்கோட் காலை" மக்களொடு துவன்றிய கிழவனும் கிழத்தியும் சிறந்தது. பயிற்றல் வேண்டும் என்ற பண்டைய முறை மாறி, "குழவியிடத்தே” துறவு விரும்பி, "இன்னா தம்மவுலகம், இனிய காண்க விதன் இயல்புணர்ந் தோரே” என்றும், "ஓடியுய்தலும் கூடுமன், ஒக்கல் வாழ்க்கை தட்குமாகாலே" என்றும் வந்த உரை களால், உலக வாழ்வில் மக்கட்கு உவர்ப்பும், செய்யும் வினையாவும் துன்பமுடிவின் என்ற முடியும் மக்கள் கருத்தில் இடம் பெறத் தொடங்கின. முயற்சியுடையார்க்குத் தேறுதல் சொல்லி, ஊக்கம் கொளுத்தும் கருத்தாற் பிறந்த வினையுணர்வுகள், வினைக்கண் மனம் மடிந்து சோம்பித் திரிவார்க்கு அரணாகத் தொடங்கின. வினையே உயிர்கட்கு முதல் என்றும், வினைவழியே உயிர் இயங்குதற்குரிய தென்றும் மக்கள் பேசத் தொடங்கினர். வினைவழிப் பிறக்கும் இன்பமும் துன்பத்திற்கே ஏதுவென்றும், துன்பமே உயிர் உடலொடு கூடிப் பெறக் கடவ பயன் என்றும் சில சான்றோர் தெருட்டத் தொடங்கினர். இந் நிலையில், தமிழ் நாட்டிற்குப் புதிய வாய் வந்த சமண புத்த சமயங்களும் துணை செய்யத் தொடங்கின. யாவரும் எப்போதும், எச்செயலைச் செய்தற்கும், ''அந்தோ வினையே'' என்று அழுங்கி ஊக்கம் குன்றுவாராயினர்.

ஒருவன் தன் ஆண்மையால் முயன்று பெறக் கூடிய நல்லுண்டி, நல்லுடை, நல்லுறையுள் ஆகிய இவையாவும் முன்னை வினைப்பயனே; ''பண்டு செய்வினையலால் பரவு தெய்வ மொன், றுண் டெனில் தான் பயன் உதவ வல்லதோ?'' என்பன போன்ற கருத்துக்கள் எழுந்து, நாட்டில் ஆண்டவன் அருட்டிறத்தையும், அவனை வழிபடுவதன் நலத்தை யும் அசட்டை செய்யுமாறு தூண்டின. இக்காலமே நம் ஞானசம்பந்தர் தோன்றிய காலமாகும்; தன் உயிரறிவுக் குள்ள சிற்றுரிமையை நெகிழ்த்து, வினைக்கு அடிமை யாக்கும் சிறுமைக்காலம்; நலமும் தீங்கும், இன்பமும் துன்பமும் உயிர் தன் உரிமையறிவால் ஆண்டவன் திருவருளால் பெறுதல் கூடும் என்னும் உண்மை நெறியை மறைத்து நின்ற காலமாகும்.

ஆகவே, இக்காலம், நம் ஞானசம்பந்தர் தோன்றிய காலம், இற்றைக்குச் சுமார் சற்றேறக் குறைய 1300 யாண்டுகட்கு முற்பட்ட காலமாகும். இக்காலத்தில், வினையுணர்வுக்குத் தலைமையும், ஆண்டவன் திருவருட் சிறப்பிற்குக் கீழ்மையும் மக்கள் உள்ளத்தில் தோற்றுவிக்கும் புதுக் கொள்கை களும், புதுச் சமய நெறிகளும் கற்பித்து வந்தன. அதனால், நம் ஆளுடைய பிள்ளையார், வினை களையும், அவை பயக்கும் பயனையும், வினைத் தொடர்பைக் கெடுக்கும் பரமனது முதன்மையையும், பிறவற்றையும் விளக்கியருளும் கடன்மையுடையரா னார். அவரது அருட்பாடல்கள் பலவும் வினையின் தொடர்பறும் முறைமையை யுணர்த்தும் நோக்கமே பெரிதும் உடையவாயின.

வினைகள் யாவும் பண்டைவினை , நிகழ்வினை (செய்வினை), எதிர்காலவினை யென மூவகையாகும். அவையாவும் பரமன் திருவருள்வழி நிற்பார்முன் வலியழிந்து, தொடர்பற்றுக் கெடும் என்பது ஆளுடைய பிள்ளையார் மக்கட்கு அறிவுறுத்திய வினையுணர்வாகும். "தொல்லை வல்வினை தீர்ப்பர் சுடலை வெண்பொடி யணிசுவண்டர்'' (திருத் தெங்கூர்), "மெய்த்தன்னுறும் வினைதீர் வகை தொழுமின்" (ஆலந்துறை), "வெய்யவினை நெறிகள் செல்வந்தணையும் மேல்வினைகள் வீட்டிலுறுவீர்'' (மாகறல்) என்பன போல வரும் திருமொழிகள் வினைவகையினையும், அவற்றின் வலியின்மையை யும் உணர்த்துவனவாகும்.

வினைகளே உயிர்கள் நுகரும் இன்பதுன்பங் கட்கு ஏது வாகலின், ஆண்டவன் வேண்டப்படான் என்று கூறிய சமயக் கணக்கர் பலர் அக்காலத் திருந்தனர் என முன்பே கூறினோம்; அவர்களைத் தெருட்டுவார் போலச் சிலபல வுரைகள் பிள்ளையார் அருளியுள்ளார்.

என்றும்,

என்றும், இவ்வாறு பலவும் வருவன உள. வினைகள் அறிவில் பொருள்களாகலின், இவை தம்பயனைக் கொண்டு வினை முதலை நுகர்விக்கும் திறமுடைய அல்லவாகலின், அது செய்தற்குரிய அறிவுடைப் பொருள் ஆண்டவனேயென்றும், அதனால், அவனன்றி வினைமுதல் வினைப்பயனை நுகர்தல் கூடாமை கருதி , வினைப் பயன்களைக் கூட்டலும் பிரித்தலும் வல்ல அவனையே நல்குரவும் செல்வமும், துன்பமும் இன்பமுமாக உபசரித்துக் கூறியும், அவனுக்கு முதன்மையும் வினைகட்குக் கீழ்மையும் காட்டியும் நம் ஆளுடைய பிள்ளையார் தெருட்டியருளுகின்றார்.

வினைகள் தம் பயனை வினைமுதல் நுகருமாறு கூட்டும் அறிவுடையவல்ல வாயினும், அவ்வினை முதலைப் பற்றி விடாது தொடர்ந்து நின்ற, அவ்வுயிர் எத்துணைப்பிறவி யெடுக்கினும், பிறப்புத் தோறும் அதன்கட் கிடந்து தொடர்தல் குறித்து அவைகளை ''அருவினை'' யென விசேடித்தல் நம் நாட்டுச் சமயக்கணக்கர் மரபு. நம் ஆளுடைய பிள்ளையாரும், வினைகளை "அருவினை', யென்று விசேடிப்பாரா யினும், அவற்றின் அருமையினைச் சிதர்க்கும், தலைமை ஆண்டவற்குண்டென வலியுறுத்துவதை விடுவதிலர்.

என்பதும் பிறவுமாகிய திருப்பாட்டுக்கள் இவ் வுண்மையை நிலை நிறுவுகின்றன.

இனி, உயிர்களைப்பற்றி நிற்கும் வினைகளின் தொடர்பு கெடுதற்கு ஆண்டவனை வழிபடும் செய்கையே உரிய செய்கையாகும் என்பதைப் பல திருப்பாட்டுக்களில் வெளிப்படையாகவும், உள்ளு றுத்தும் ஞானசம்பந்தப் பிள்ளையார் தெருட்டி யருளுகின்றார். வெளிப்படையாகத் தெருட்டுதலைக் காட்டும் பாசுரங்கள் மிகவாய்ப் பல்கி யாவரும் காணக்கிடத்தலின், அவற்றை விலக்கி உள்ளுறுத் துரைக்கும் பாசுரங்கள் சிலவாய்ச் சிலரே காணத் தக்கவாய் இருத்தலின், அவற்றுள் ஒன்றைக் கூறுகின்றோம்.

நம் ஆளுடைய பிள்ளையார் சீகாழிக்கருகி லுள்ள திருக்கோலக்கா என்னும் திருப்பதிக்குச் சென்று, தம் மெல்லிய கைகளால் தாளம் போட்டு ''மடையில் வாளைபாய்' என்ற திருப்பதிகத்தைப் பாடியருளிய செய்தி தமிழ்நாடு நன்கறிந்ததாகும். ஆயினும், இப்பதிகத்துள் உயிரறிவு ஆண்டவனைப் பாடிப் பரவுதலாம் கலங்கி அருண்மணங்கமழ்ந்து, வினைப் பிணிப்புத் தளர்ந்து, அறியாமை நீங்கிப் பேரின்ப நுகர்ச்சிக் குரிமை யெய்தும் திறத்தை உள்ளுறுத்துரைக்கின்றார்.

என்பது முதற்பாசுரம். இதில், அடியார்கள் பரமானது அருள் நினைந்து பாடிப்பரவித் திளைத்தலால், அவர் தம் உயிரறிவு கலங்கி அருண் மணம் கமழுகின்றதென்பதனை, "மடையில் வாளை பாய, மாதரார் குடைதலால் நெய்யொடு குங்குமம் நிறைந்துநறுமணம் கமழும் பொய்கை" என்பதனால் குறித்தருளுகின்றனர்.

அருள் நினைந்து பரவிப்பாடியாடும் அடியார் உள்ளம் அவன் அருண்மணமே கமழ்தற்குரிய அவனது அருளை, அருள் நிலையை அடுத்த பாசுரத்தில்,
"பெண்டாம் பாகமாகப் பிறைச் சென்னிக் கொண்டான் கோலக்காவு கோயிலாக் கண்டான் பாதம் கையாற் கூப்பவே உண்டான் நஞ்சை யுலக முய்யவே”
என்று அருளுகின்றார். பெண்ணென்பது திருவருள், பெண்ணைப் பாகங் கொண்டதோடு பிறையைச் சென்னியிற் கொண்டதும் அருளே என்பதனைப் பிறிதோரிடத்தில், "முன்னுயிர்த் தோற்றமும் இறுதியு மாகி, முடியுடையமரர்கள் அடிபணிந்தேத்தப், பின்னிய சடைமிசைப் பிறைநிறைவித்த பேரருளாள னார் பேணிய கோயில்" "என்றும், பெண்ணைப் பாகம் கொண்டதும் உயிர்கட்கு அருள் செய்தற்கே என்பதை, ''ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருணல்கிச், சேணின்றவர்க் கின்னம் சிந்தை செய் வல்லான், பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர் காணும் கடல்நாகைக் காரோணத்தானே" என்புழியும் விளக்கியருளுகின்றார்.

இத்தகைய அருள்வள்ளல், தன்னை விரும்பிப் பாடியவழி , அடியார் வினைப்பிணிப்புப் பறையச் செய்யும் எளிமையுடையன் என்பதனை,

என்று கூறியருளுகின்றார். உயிர்களைப் பிணித்து நிற்றலின், வினைகளை ஈண்டு, 'பிணிகளானவே'' என்கின்றார். ''பாடுவாரிசைப் பல்பொருட்பயன் உகந்தன் பால், கூடுவார் துணைக் கொண்டதும் பற்றறப் பற்றித் , தேடுவார் பொருளானவன்" (தேவூர்) எனப் பிறிதோரிடத்து வெளிப்படையாகக் குறித் தருளுகின்றார்.

இங்ஙனம் பிணித்துக் கொண்டு நிற்கும் வினை களைத் தகர்க்கும் முறையினை அடுத்த பாசுரத்தில் மிக வருமையாகக் குறிக்கின்றார். பரமன் கையில் ஏந்தும் மழுப்படையின் வெம்மையாலும், மறி மானின் முழக்கத்தாலும் உயிரறிவைத் தழுவிப் பிணித்து நிற்கும் வினைகட்கு முதற்கண் தளர்ச்சி யெய்துகின்றதென்பார்,

என்று அருளுகின்றார். வினைப்பிணிப்பை விரைய நீக்கியவழியெய்தும் கேடுகருதி, பைய நீக்குவராதலின், அதுகுறித்து, அவனை, "ஏத்தி வாழ்மின்'' என அறிவுறுத்துகின்றார். பைய நீக்குவதே அவரது பான்மை யென்பதனைப் பிறிதோரிடத்தும், "செய்ய மேனி வெளிய பொடிப்பூசுவர், சேரும் அடியார் மேல், [#] மெய்ய நின்ற பெருமான்'' (புகலூர்) என மொழிந்தருளுகின்றார். ஏத்துமிடத்தும் இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மின் என்கின்றார். "துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி, மறக்குமா றிலாதவென்னைமையல் செய்து மண்ணின் மேல், பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்பு விட்டிருக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே" என்ற திருப்பாட்டிலும், இழுக்கிய வழி , பிறக்குமாறு காட்டுதலும், இழுக்காவழி, பிறப்பு விட்டு இறக்குமாறு காட்டுதலும் உண்மையின், இழுக்குகின்ற தென்னை' என்று வற்புறுத்துதல் காண்க.
-------
[#] அடியார் மேல் நின்றவினை பையப் பாற்றுவர் என இயையும்.

இவ்வாறு, தழுவிட்டுத் தளர்ச்சி யெய்திய வினை, நீங்கற்குரிய பாகம் பெறுவதற்கு உரிய முயற்சி, அவனைவிடாது பயிலும் பயிற்சியே யாகும் என்பார்,

என்று மொழிந்தருளுகின்றார். குயில் கூடிப்பாடி மகிழும் சோலை கூறவே, கோலக்காவில், அடியார் பலரும் சேர விருந்து அவன் திருவருளைப் பாடுதல் பெற்றாம். அடியாரொடு பயிலுதல் வேண்டும். அல்லாதார் அஞ்ஞானத்தை யுணர்த்துவார் "உரை தளர்ந்துடலார் நடுங்காமுனம், நரை விடையுடை யானிடம் நல்லமே, பரவுமின் பணிமின் பணிவா ரொடே, விரவுமின் விரவாரை விடுமினே'' என நாவரசப்பெருமானும், ''மறப்பித்துத் தம்மை மலங்களின் வீழ்விக்கும், சிறப்பிலார்தம் திறத்துச் சேர்வை - அறப்பித்துப், பத்த ரினத்தனாய்ப் பரன் நினைவினாலுணரும், மெய்த்தவரை மேவாவினை" என மெய்கண்ட தேவ நாயனாரும் தெருட்டி யருளுதலால் இவ்வுண்மையை அறிகின்றோம்.

இத்தகைய பயிற்சியால் நீங்குதற்குரிய பக்குவம் பெற்று வரும் வினைகள், பின்னர், அவன் திருவடி ஞானத்தால் வெடிபட்டு வீற்று வீற்றோடிவிடும்; ஆதலால், அத்திருவடியை அடைந்து வாழ்மின் என அடுத்த பாசுரத்தில், நீங்கற்குரிய வாய் வரும் வினை கள் அறவே நீங்கும் முறையைத் தெரிவிக்கின்றார்.

என்பது பாசுரம். இதன்கண் வெடிகொளல் என்பது சிதர்த்தொழிதல்; "கடிகாவில் கால்துற்றெறிய வெடிபட்டு, வீற்று வீற்றோடும் இனமயில் போல், கேளிர் பிரிந்தார் அலறுபவே'' (களவழி 40) என்பது னால் அறிக. மெல்ல நீங்கிவரும் வினைகள் மீட்டும் முன்னைப் பயிற்சியத்தால் மீளத் தோன்றா வண்ணம் கொடுக்க வேண்டியிருத்தலால், "வினையை வீட்ட வேண்டுவீர்" என விளித்து, "அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே" என்று அருளுகின்றார். இக்கருத்தையே, திருமாகறற்பதிகத்திலும்,

என்று அறிவுறுத்துகின்றார். மேல்வினைகளை வீட்டிய வழி, நின்ற வினையும் பற்றுக் கோடின்றிக் கெடும் என்றற்கு,

என்று பாடியருள்கின்றார். பாதம் நினைந்து தொழுமிடத்து, அதன் அழலொளி வினையிருள் எய்தா வகைக் கெடுத்தலின், அடியார்க்குத் துயர மில்லையென்பார் , "பாதம் கைகளால் தொழலார் பக்கல் துயரமில்லையே" என்றார். அழகாய் கழலான் அடிநாளும் கழலாதே விடலின்றித் , தொழலாரவர் நாளும் துயரின்றித் தொழுவாரே" (நெய்த்தானம்) எனப் பிறாண்டும் இதனையே தெருட்டுவர்.

நிழல் மிக்க சோலையின், வண்டினம் தேனுண்டு பண்பாடும் எனவே, அவன் திருவடி நீழலில் பெரும் போகம் துய்க்கும் மகிழ்வால், அடியார்கள் அவன் திருப்புகழ் பாடுதல் பெறப்படும். நாவரசரும், பரமன் திருவடி செந்தேன் பொழியும் என்பதனை, "சிந்திப்பவர்க்குச் சிறந்து செந்தேன் முந்திப்பொழிவன" என்றே மொழிந்தருளுகின்றார்.

இவ்வாறு, வினையியல்பும், அது பரமன் வழிபாட்டால் நீங்குமாறும், நம் ஆளுடைய அடிகள் வெளிப்படையாகவும், உள்ளுறுத்தும் தெரிவித் தருளிய போழ்தும், சிலர்பலர், அவ்வினையியல்பை யுணர்ந்தும் அயர்ந்திருந்தனர். அவர்க்கு நல்லறிவு கொளுத்துவார் திருநீலகண்டத் திருப்பதிகத்தில் அவர்தம் கொள்கையை மறுத்துப் பரமனை வழிபாடு புரியுமாறு நன்கு தெருட்டுகின்றார்.

என்பது அப்பாசுரம். இதன்கண், வினைமேற்பழி யேற்றி, தாம் நுகரும் பயன்யாவும் முன்வினையால் வந்தன என்பாரை நோக்கி, "அவ்வினைக் கிவ்வினை யாம் என்று சொல்லும் அதனை மட்டில் அறிந் திருக்கின்றீர்களே, அவ்வறிவால், அவ்வினையைக் கெடுத்தற்குரிய நெறியும் காண்டல் கூடும் என்பதை அறியா திருப்பது உமக்குக் குற்றமாகுமே" என்பார், "உய்வினை நாடா திருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே” யென்றார். கொடுத்தற்குரிய அந்நெறியும் வேறன்று; ஈதே என்றற்கு, "கைவினை செய்து எம்பிரான் கழல் ஏத்துதும்" என்றும், "அதுதவிர யாம் வேறு செய்தற்குரிய நெறியில்லோம்; ஏனெனில், நாம் அவ்வாண்டவனுக்கு அடிமை" என்பதனை வற் புறுத்த நினைத்து, "நாம் அடியோம்'' என்றும், அச்செயலால் நாம் தூய சத்துப் பொருளாதலின், அசத்தாகும் செய்வினைகள் வந்து சேர்வது இல்லையாம்” என்பார், "செய்வினை வந்தெமைத் தீண்டப்பெறா" என்றும், இதற்குச் சான்று "திருநீல கண்டமே" என்றும் தெருட்டியருளுகின்றார். ''சார்புணர்ந்து சார்பு கெட வொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரும் நோய்" என வள்ளுவப் பெருந் தகையும் வழங்கியிருக்கின்றார்.

இதுகாறும் கூறியவாற்றல், வினையுணர்வின் பயன் பரமன் திருவடியைப் பரவித் தொழுவதே யன்றிப் பிறிதில்லை யெனத் திருஞானசம்பந்த சுவாமிகள் தெருட்டியருளுகின்றார் என்பதாம்.

''பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத்
துறவியெனும் தோற்றோணி கண்டீர் - நிறையுலகின்
பொன்மாலை மார்பன் புனற்காழிச் சம்பந்தன்
தன்மாலை ஞானத் தமிழ்"
-----------------------

11. பட்டினத்துப் பிள்ளையார்

சைவத்திருமுறை பன்னிரண்டனுள் பதினோ ராந் திருமுறையிற் காணப்படும் நூலாசிரியன்மார் களான சான்றோர்களுள் பட்டினத்துப்பிள்ளை யாரும் ஒருவராவர். இவர் பாடியனவாகக் கோயில் நான்மணிமாலை, திருவிடைமருதூர் மும்மணிக் கோவை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திரு வேகம்ப முடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபாவொருபது என ஐந்து நூல்கள் பதினோராந் திருமுறையில் உள்ளன.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் காவிரிப்பூம்பட்டினத்தில் இவர் தோன்றி வளர்ந்து வாழ்ந்தவர்; இவர், பிற்காலத்தே துறவு பூண்டபின் சான்றோர்களால் பட்டினத்துப்பிள்ளையா ரென்று வழங்கப்படுவாராயினர் (திருவிடை. 30). இவர், காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த சைவ வணிகர் குடியில் கடல் வாணிகம் செய்து மிக்க செல்வம் பெற்ற செல்வரொருவருக்கு மகனாராவர். திருவெண்காடருடைய தந்தை பெயர் சிவநேசர் என்றும் தாய் பெயர் ஞானகலாம்பை என்றும் கூறுவர்.

திருவெண்காடர், உரிய காலத்தில் திருமணம் . செய்து கொண்டு, கடல் வாணிகம் செய்து, பெருஞ் செல்வராய் விளங்கினார். அவர்க்கு மருதவாண னென்றொரு மகன் பிறந்து, பதினாறாண்டளவும் இருந்து, பின் இறந்து போனான். அதனால் கவலை மிகக் கொண்ட திருவெண்காடர், திருவிடை மருதூரிலிருந்து வறுமை மிக்கு வருந்தி வந்த ஆதிசைவர் ஒருவருடைய ஆண்மகவை விலைக்கு வாங்கி மருதவாணனென்றே பெயரிட்டு வளர்த்து வந்தார். அவனும் அவருடைய உண்மை மகனாகவே வளர்ந்து சிறந்து கடல் வாணிகம் செய்து பெருஞ் செல்வம் ஈட்டித் தந்து, காதற்ற ஊசி யொன்றையும், 'காதற்ற வூசியும் வாராது காணும் கடைவழிக்கே' என்றெழுதிய ஓலை நறுக்கொன்றையும் கொடுத்து விட்டு வெளிச் சென்று மறைந்து போனான். அதுகண்ட திருவெண்காட ருள்ளத்தில் துறவு பிறந்தது. அந்நாளில் அவரிடம் தலைமைக் கணக்க ராய்ச் சேந்தனார் என்னும் சான்றோ ரொருவர் இருந்தார். வெண்காடர் தமது பெருஞ் செல்வத்தைப் பொது மக்கட்கு வழங்கி விடுமாறு சேந்தனாரைப் பணித்துக் கையில் ஓடும் அரையில் கோவணமும் கொண்டு வெளியேறினார். மருதவாணன் பிரிந்த சின்னாட்களில் வெண்காடருடைய மனைவியாரும் காலமாயினர். வெண்காடருடைய தாய்மட்டில் உயிரோடிருந்ததனால், அவர்க்கு வேண்டிய ஏற்பாட்டைச் செய்துவிட்டு, சிவபெருமான் எழுந் தருளும் திருப்பதிகட்குச் சென்று பரவிவழிபடும் செயலை அவர் மேற்கொண்டார். வீடுதோறும் சென்று ஓட்டில் உணவிரந் துண்டனர். அவருடைய உறவினர், வேந்தனைக் கொண்டும் வேறு தக்கோரைக் கொண்டும் அவர் உள்ளத்தை மாற்ற முயன்றனர்; சேந்தனாரைச் சிறையிடுவித்தனர்; திருவெண்காடருக்கும் நஞ்சு கலந்த உணவளித்துக் கொல்ல முயன்றனர்; ஒன்றாலும் திருவெண் காட்ருடைய உள்ளம் மாறவேயில்லை.

திருவெண்காடர், திருவிடைமருதூரில் சின் னாள் தங்கி இடைமரு திறைவனை வழிபட்டுக் கொண்டு வந்தார். அந்நாளில் அவருடைய தாயார் இறந்தனர்; அவர்க்குரிய இறுதிக் கடன்களைச் செவ்வே ஆற்றிவிட்டு மீளவும் திருவிடைமருதூர் சென்று சேர்ந்தார். அங்கே யிருக்கும்போது அவர் திருவிடைமருதூர் மும்மணிக்கோவையைப் பாடி னார். பின்பு அவர் சீர்காழி, தில்லை , காஞ்சிமாநகர், காளத்தி முதலிய திருப்பதிகளை வணங்கிக் கொண்டு வடநாடு சென்றார்.

வட நாட்டில் பத்திராசலப் பகுதியில் மாகாளம் என்னுமோர் ஊரை யடைந்து, ஒரு நாள் இரவு அங்கேயிருந்த பாழ்ங்கோயிலொன்றில் நிட்டை கூடியிருந்தார். அந்நாளில் அப்பகுதியைப் பத்திரகிரி யென்னும் குறுநில மன்னன் ஆண்டுவந்தான். அவனுடைய அரண்மனையில் களவு புரிந்த கள்வர் சிலர், திருவெண்காட ரிருந்த கோயிலுக்கு வந்து, தாம் திருடி வந்த அணிகலன்களுள் பதக்கமொன்றை யெடுத்து, அங்கிருந்த கழுத்திலிட்டுச் சென்றனர். கள்வரைத் தேடிவந்த காவலர் பட்டினத்துப்பிள்ளை யாரைக் கண்டு கள்வரெனக் கருதிக் கைக்கொண்டு சென்று கழுவேற்றத் துணிந்தனர். கழுமரத்தைப் பிள்ளையார் நோக்கினர். உடனே அஃது எரிந்து சாம்பராயிற்று. அதுகண்டு வியந்த காவலர் வேந்த னுக்குத் தெரிவித்ததும், பத்திரகிரி விரைந்தோடிவந்து பிள்ளையாரைக் கண்டு துறவு பூண்டு அவர்க்கு மாணவராய் அவர் நிழல் போல் தொடர்ந்து வரலாம் னார். இருவரும் திருவிடைமருதூரடைந்து இறை வனை வழிபட்டு வந்தனர். வருகையில் பத்திர கிரியாரை நாயொன்று சுற்றிக் கொண்டு திரிந்தது.

திருவிடைமருதூரில், ஒருநாள், பசியுற்று வருந்திய ஒருவர் பட்டினத்துப்பிள்ளையாரைக் கண்டு உணவு வேண்டி நிற்க, அவர் பத்திரகிரி யாரைக் காட்டி, அந்தச் சமுசாரியிடம் செல்க' என்றார். அது கேட்டதும், பத்திரகிரியார், தம்பால் இருந்த ஓட்டையெடுத்து, இதுவும் இந்த நாயுமன்றோ என்னைச் சமுசாரியாக்கின' என்று வருந்தி நாய்மேல் எறிந்தார். அது நாயின் மண்டையில் படவே நாய் இறந்து போயிற்று. சின்னாட்குப் பின் பத்திரகிரியும் இறைவன் திருவடியடைந்தார்.

முடிவில், பட்டினத்து அடிகள் திருவொற்றி யூர்க்குச் சென்று இறைவனை வழிபட்டு வந்தார். ஒரு நாள், கடற்கரையில் உள்ள நீர்நிலையில் ஆடை யொலிக்கும் ஏகாலிச்சிறுவர் விளையாடுவது கண்டார். அவரோடு தாமும் விளையாடலுற்று, அவர்கள் தம்மை ஓரிடத்தில் புதைத்தால் தாம் வேறோரிடத்தில் தோன்றிக் காட்சியளித்து இன்புறுத்தினார். இவ்வகையில் அவர்கள் தம்மை ஆழத்தில் புதைக்குமாறு செய்து, இறுதியில் அவர் காட்சி வழங்காது சிவலிங்கமாக மாறினார் என்பர்.

பிள்ளையார் சீர்காழியில் தங்கியபோது திருக்கழுமல மும்மணிக்கோவையும், காஞ்சி மாநகரில் திருவேகம்பமுடையார் திருவந்தாதியும், திருவொற்றியூரில் திருவொற்றியூர் ஒருபாவொரு பதும், தில்லையில் கோயில் நான்மணி மாலையும் பாடியருளினார்.

பிற்காலத்தே சுமார் இருநூறு இருநூற்றைம்பது ஆண்டு கட்கு முன்பு தோன்றிய துறவியொருவர் பட்டினத்துப் பிள்ளையென்ற பெயரால் நிலவினர். அவரும் சில பாட்டுக்களைப் பாடினர். பிற்காலத் தார் அவரையும் திருவெண்காடான பட்டினத்துப் பிள்ளையென்றே கொண்டு அவர் பாடல்களையும் பிள்ளையார் பாடலாகக் கருதிப் பேசலாயினர். உண்மை யாராய்ச்சி, இருவரையும் வேறாக்கி, இருவர் பாடல்களையும் வேறுபடுத்திக் காட்டிவிட்டது.

சிவனை வழிபடும் சைவர்களுக்கு வேதம், சிவாகமம், புராணம் முதலியன சமய நூல்களாகும். வேத நான்கும் இறைவன் திறமே மொழியும்; மொழியுங்கால் அவன் பெரியதிற் பெரியன் என்றும் சிறியதிற் சிறியன் என்றும் மொழியும்; (கோயில் 12). சிவாகமங்களுக்குச் சித்தாந்த மென்பதும் பெயர் ராகலின் அவற்றைச் சைவசித்தாந்த மென்றும், அவற்றை இறைவனே உபதேசித் தருளினன் என்றும் சைவர் கூறுவர்; இக் கருத்தையே பட்டினத்துப் பிள்ளையாரும், 'கைவல நெல்லியங் கனியது போலச், சைவ சித்தாந்த தெய்வ ஆகமத்தை, வரன்முறை பகர்ந்த திருமலர்வாய' (கழுமல , 13) என்றும், வேதம், மந்திரம், வேள்வி, இசை முதலியவற்றையும், ஞானசிவாகம் வகைக் கலைகளையும் ஒழுக்க நெறிகளையும், பத்தி நெறிகளையும் விளக்குவன கழுமல். 22) என்றும் கூறினர்.

இத்தத்துவ ஆராய்ச்சி நெறியால் தன்னை யறிவதும், அதனால் தலைவனான சிவனையறிவதும் வேண்டும் என்பர்; "தன்னை யறியத் தலைப்படும் தலைமகன்'' என்றும் சான்றோர் கூறுவர். அத் துறையில் சென்று தற்காண்டல் முயற்சியில் ஈடுபட்ட பிள்ளையார், உடலை, மயிர், தோல், புண், குருதி, எலும்பு, எலும்பிடையுள்ள மூளை விழுது, அதனுள் ஒழுகும் வழும்பு, புழு, மலம், நரம்பு, பிணி எனப் பகுத்துக்கண்டு, "இன்னது யானென் றறியேன் என்னை, எங்குந்தேடினன் யாதிலும் காணேன்" (திருவிடை. 13) என வுரைப்பர். உடற் கூற்றாராய்ச்சி யையும் தெரிந்து கொண்டு தெரியாதது காண்டல் வகையில் மயிர் தோல் முதலிய புறப்பொருளினின்றும் அகப்பொருளை நாடிக் காணும் முறை இவர் பால் அமைந்திருப்பதும், தசையைப் புண்ணெனத் திருவள்ளுவர் கூறியது கொண்டு, தாமும் புண்ணெனக் குறிப்பதும் குறிக்கத்தக்கனவாகும்.

இவ்வண்ணம் திருவருள் வாழ்வும் உலகியற் காட்சியும் இனிது பெற்று இறைவனைச் சிந்தையிற் கண்டு விளங்கும் பிள்ளையார், ஏனையோரைக் கண்டு மனமிரங்கி, 'எம்மனோர்கள் இறைவனாகிய கனியை) இனிதின் அருந்திச் செம்மாந்திருப்பச் சிலர் இதின் வாராது, மனத்தைப் பாழாக்கி, பொய்யும் பாவமும் கொடுமையும் துன்பமும் பெருக்கி, ''மரணம் பழுத்து நரகிடைவீழ்ந்து, தமக்கும் பிறர்க்கும் உதவாது, இமைப்பிற்கழியும் இயற்கையோ ராய்'' (திருவிடை 10) உள்ளனர் என இரங்கிக்
கூறுகின்றார்.

இனி, இவர்க்கு மாறாகக் கடுந்தவம் மேற் கொண்டு உடலை வருத்தும் பிறரையும் காண் கின்றார். அவர்கள் மனைவி மக்களைத் துறந்து காடு மலைகளையடைந்து மழையென்றும் வெயிலென்றும் பணியென்றும் பாராது நீர் பலகால் மூழ்கி, நிலத்திற் கிடந்து சடை புனைந்து , உடை துறந்து உண்ணா நோன்பு கொண்டும், நாயும் கிழங்கும், காற்றுதிர் சருகும் உண்டும் இயல்பாகவே தனர்தற்குரிய யாக்கையைத் தளர்வித்து "அம்மை முத்தியடைவதற் காகத், தம்மைத் தாமே சாலவும் ஒறுப்பர்" (திருவிடை 19). இவ்வாறன்றி, இல்லிருந்து நல்லன நுகர்ந்து, கொள்வன கொண்டு கொடுப்பன கொடுத்துப் பூசுவது பூசி, புனைவன புனைந்து "ஐந்து புலன்களும் ஆர ஆர்ந்து, மைந்தரும் ஒக்கலும் மகிழ மனமகிழ்ந்து. இவ்வகை" யிருந்தும், திருவைந்தெழுத்தை மறவாது சிந்தையைச் சிவன்பால் சேர்த்தியிருப்பார்க்கும் கடுந்தவம் செய்வோர் பெறும் பேரின்பம் இனிது எய்தும் என்று கூறி, இதனை விளக்குவாராய், "வல்லாவொருவன் கைம்முயன்றெறியினும், மாட்டா வொருவன் வாளா எறியினும், நிலத்தின் வழா அக் கல்லே போல, நலத்தின் வழார் நின் நாமம் நவின்றோரே” (திருவிடை 19) என்று கூறுவர். பிறிதோ ரிடத்தில், இவ்வுலகம் நின்னுடையது. இதன் கண் நிகழும் நன்மை தீமைகள் யாவும் நின்னுடைய வே;
ஆதலால், இதன் கண் வாழும் யான்.

என்று கூறுவதும், தாம் இறைவன் திருவருள் வழி நிற்றலால், தம்செயல் யாவையும் இறைவன் தன் செயலாய் ஏன்று கொள்ள வேண்டுமெனவும், தன்னை நினைத்தற்குரிய நெறியில் நினைக்குமாறு செய்ய வேண்டுமெனவும் வேண்டுவராய் 'மனம் மருண்டு புன்மையினினைத்துப் புலன் வழிப்படரினும் நின்வயின் நினைந்தே மாகுதல் நின்வயின். நினைக்குமோ நினைக்கப் பெறுதல் அனைத் தொன்றும் நீயே யருளல் வேண்டும்" (கோயில். 32) என்று கூறுவதும் பிறவும் அவர் சீவன் முத்தராய் வாழ்ந்த குறிப்பைப் புலப்படுத்துகின்றன.

இத்தகைய இயல்பினையுடையார்க்கு இறை வன் தொண்டராய்த் தொண்டு படுவதில் பெரு விருப்பும் இயற்கையாக வந்து அமைவனவாம். பெருவிருப்பத்தை "நின் சீரடியார் தம் சீரடியார்க்கு, அடிமை பூண்டு நெடுநாட்பழகி முடலை யாக்கை யொடு புடைபட்டொழுகி அவர் கால் தலை யேவல் என் நாய்த்தலையேற்றுக் கண்டது காணினல்லது ஒன்று உண்டோ மற்றெனக்குள்ளது பிறிதே'' (திருவிடை 7) என்பதனாலும், பெருமிதத்தை, ''அம்பலக் கூத்தனுக்கு அன்பு செய்யா மிண்டர் மிண்டித்திரிவார். எனக்கு என் இனி நான் அவன் தன், தொண்டர் தொண்டர்க்குத் தொழும்பாய்த் திரியத் தொடங்கினனே" (கோயில் 38) என்பதனாலும் வெளிப்படுத்துகின்றார்.

இப்பெற்றியோர்க்கு எதன்பாலும் விருப்பு வெறுப்புக் கிடையாது. அவர்கள் துறக்க வாழ்வும் நரக வாழ்வும், பிறர் கண்டு தம்மை நல்லரெனினும் தீயரெனினும், செல்வ வாழ்வும் வறுமை வாழ்வும் குன்றா இளமையே எய்தினும் இன்றே இறக்கலுறி னும் எல்லாம் ஒன்றாய்க் கருதி, “வேண்டலு மிலனே வெறுத்தலுமிலனே" (கோயில் 36 என்று இருப்பர்; ''பிறிதொன்றில் ஆசையின்றி இருந்தேன் இனிச் சென்றிரவேன் ஒருவரை யாதொன்றுமே” (திருவிடை 3) என்ற துணிவுடனே ஒழுகுவர்.

திருவெண்காடரான பிள்ளையார் காவிரிப் பூம்பட்டினத்துக் கடல் வணிகர் குடி முதல்வராய் விளங்கினவர் என்றதற்கேற்ப, அவருள்ளம் கடலிற் கலம் அமைத்துச் செலுத்தும் துறையில் நன்கு பயின்றிருந்தது. அதனால் உடம்பைக்கலமாகவும், தீயொழுக்கம், பொய்ம்மை பிணி இடும்பை முதலிய வற்றைச் சரக்காகவும், வினையை மீகாமனாகவும், கருப்பையைக் கடற்றுறை நகராகவும், புலன்களைச் சுறா மீனாகவும், பிறவியைக் கடலாகவும், துயரத்தை அலையாகவும், குடும்பத்தை நங்குரக் கல்லாகவும், நிறையைக் கூம்பாகவும் உணர்வைப் பாயாகவும் உருவகம் செய்வதும் கோயில் 16), பிறிதோரிடத்தில் உலகைக் கடலாகவும், உடம்பைக் கலமாகவும், தோலைப் பலகையாகவும், எலும்பை ஆணியாகவும், நரம்பைக் கயிறாகவும், முதுகெலும்பைக் கூம்பாகவும், காம் முதலிய குற்றங்களை நிறையாகவும், நெடுநீர் என்னும் குற்றத்தை நாங்குர நாணாகவும், மடியை நங்குரமாகவும் மனத்தைப் பாயாகவும் ஆசையைக் காற்றாகவும் தான் முதலிய குணங்களைத் தீவுகளாக வும் உரைப்பதும் (கழுமல 16), வேறோரிடத்தில், வளியும் பித்து முதலியவற்றைக் காற்றாகவும், நரையை நுரையாகவும், தோலைத் திரையாகவும், இருமலைக் கடல் முழக்காகவும், பசிவெகுளி முதலியவற்றைச் சுறா மீனாகவும், குடலைப் பாம்பாகவும், தசை யெலும்புகளைத் திடலாகவும், உடம்பைக் கடலாகவும், துப்புரவைச் சுழிகளாகவும், இறைவன் திருவருளை நாவாயாகவும், ஆர்வத்தைப் பாயாகவும், நிறையைக் கயிறாகவும், ஒருமை யுணர்வைக் கலத்தையியக்கும் பொறியாகவும், காமத்தைப் பாராகவும், சுருங்காவுணர்ச்சியைத் துடுப்பாகவும் (ஒற்றி 8) உரைப்பதும் இவர்பால் பெருகக் காணப்படுகின்றன.

இவர் காலத்தே கடலிற் செல்வோர் வட மீனைத் திசை விளக்காக மேற்கொண்டிருந்தமையை 'தூமச் சோதிச்சுடர்க் குற் நிறுத்தி' (ஒற்றி 8) என்றும், பொறிகள் அமைத்து வங்கத்தைச் செலுத்தின மையை, 'மன்னிய வொருமைப் பொறியினை முறுக்கி' (ஒற்றி 8) என்றும், 'இருளுறு பவ்வத் தெந்திரங்கடா அய், துன்று திரைப்பரப்பிற் குன்று பார்த் தியங்கியும்” (கோயில் 20) என்றும் வருவன வற்புறுத்துகின்றன. அந்நாளில் மக்கட்குத் திருமணம் செய்யும் வகையில் பெற்றோரே முற்பட்டு நின்றனர். மகட்குத் தக்க மணமகனைத் தேர்ந்து மணஞ் செய்து வைப்பது மகளைப் பெற்றோர் கடனாகும்; இதனை "தன்னைத் தேறி முன்னையோர் கொடுத்த நன் மனைக் கிழத்தி" (இடைமரு 7) என்பதனாலறியலாம். அத்திருமணக் காலத்தில் வந்து கூடும் செல்வர் மணமக்கட்கு மொழி யெழுதுவதாகிய வழக்கம் அடிகள் காலத்தே தோன்றி விட்டது. "திருமணம் புணர்ந்த ஞான்று... திருமணப் பந்தருள் அமரர் முன் புகுந்தறுகு சாத்தி நின், தமர் பெயரெழுதிய வரி நெடும் புத்தகத், தென்னையும் எழுத வேண்டுவல்” கோயில் 4) என்பது அவ்வழக்கினை எடுத்துக்காட்டு கிறது. வருவாயுள் ஆறிலொன்று அரசர்க்கு இறுக்க வேண்டிய முறை அடிகள் காலத்து மாறிவிட்ட தென்பது, "அரசு கொள்கடமை யாறிலொன் றென்னும் புரைதீர் முறைமை புதுக்கினை” (கழுமல 25) என்ற அடிகள் காட்டுகின்றன.

பட்டினத்தார் காலத்தே அவர்க்கு முன்னோர் சிலருடைய வரலாறுகளும் பல இனிய பழமொழி களும் மக்களிடை பயில வழங்கியிருந்தன. புத்த ராகிய சாக்கிய நாயனார் கல்லெறிந்து சிவனை வழிபட்டதும் (இடைமரு25), திருஞான சம்பந்தர் ஞானப் பாலுண்டு தோடுடைய செவிய னென்றும், பீடுடைய பெம்மான் என்றும் பாடியதும் கழுமல ), திருநாவுக்கரசரும் நம்பியாரூரரும் வித்தகப் பாடல் பாடியதும் (திருவிடை 28), பெருந்துறைப்பிள்ளை யாகிய திருவாதவூரரது பேரன்புநெறியும் (திருவிட 28), பெருஞ் செல்வத்தை அவமதித்துப் பேரந்த சிவவாக்கியர் சிறப்பும், வரகுணதேவரின் வான்புகழ் வரலாறும் பிறவும் பிள்ளையாரால் விதந்து கூறப்படுகின்றன. இவருள் ஞானசம்பந்தர் முதலிய மூவரையும் "வித்தகப் பாடல் முத்திறத்தடியர்'' எனவும், திருவாதவூரரைத் "திருந்திய அன்பிற் பெருந்துறைப்பிள்ளை'' எனவும், சிவவாக்கியரைச் 'சித்தமார் சிவவாக்கிய தேவர்' எனவும், வரகுணனை, 'பெரிய அன்பின் வரகுணதேவர்' எனவும் குறித் துரைப்பது வரலாற்றுண்மை பொதிந்த கட்டுரை யாகும்.

அந்நாளில் கற்றுவல்ல புலவர்க்கு அறிவா ராய்ச்சி வகையில் இன்பந்தந்தவை. ஏழிசைச்சூழல் போல் இனிய நுட்பம் பொருந்திய அகத்துறைப் பாட்டுக்களாகும். அத்துறையில் பிள்ளையார் பல பாட்டுக்களைப் பாடி வழங்கியுள்ளார். அவை நான்மணிமாலை மும்மணிக்கோவைகளில் உள்ள வற்றினும் மிகுதியாகத் திருவேகம்பமுடையார் திருவந்தாதியில் உள்ளன. அவற்றுள் "துணையொத்த கோவை" (73) எனவரும் பாட்டுத் திருக்கோவையார் கருத்தைத் தன்கட் கொண்டு விளங்குவது.

பிள்ளையாரால் இறைவனுக்குரிய மலைக் ளென , இமயம், கொல்லி , சிராமலை, விந்தம், மந்தரம், இந்திரம், நீலம், வெள்ளை , பரங்குன்றம், மகேந்திரம், வெண்குன்றம், செங்குன்றம், நெற்குன்றம், நெடுங் குன்றம், கழுக்குன்றம், முதுகுன்றம் (579) முதலியன குறிப்பிடுகின்றன. சிவனுக்குரிய ஊர்களென குற்றாலம், நெய்த்தானம், துருத்தி, அப்பர், வேள்விக் குடி, தோணிபுரம், பழனம், ஆரூர் , இடைமருது, திருச்சோற்றுத்துறை, நியமம், புகலூர், புறம்பயம், பூவணம், திருவண்காடு, பாச்சில், அதிகை, ஆவடுதுறை, நல்லம், நல்லூர், கடம்பூர், கடம்பந் துறை, புன்கூர், பாராய்த்துறை, எதிர்கொள்பாடி, அண்ணாமலை, வல்லம், தமாற்பேறு, பாசூர், அழுந்தூர், பெரும்பேறு, ஒற்றியூர், கச்சியேகம்பம், திருவோத்தூர், திருவாமாத்தூர், புலிவலம், வில்வலம், திருப்பனங்காடு, கொச்சை, மாகறல், காவை, கச்சூர், திருக்காரிகரை , திருவான்மியூர், திருவூறல், திருப் போந்தை, முக்கோணம், திருவாலங்காடு முதலியன குறித்தோதப்படுகின்றன. இவற்றுள் சேரக் கூறற் பாலவாகிய தில்லையையும் காளத்தியையும் தனியே நிறுத்தி, "நடனம்பிரான் உகந் துய்யக் கொண்டா னென்று நன்மறையோர், உடன் வந்து மூவா யிரவரிறைஞ்சி நிறைந்த உண்மைக், கடனன்றி மற்றறியாத் தில்லையம்பலம் காலத்தியாம், இடம் எம்பிரான் கச்சியேகம்பமே” (4) என்று சிறப்பித்துக் கூறுகின்றார். கயிலை யெழுந்தருளுமிடமும் தில்லை நடம்புரியுமிடமுமாயினும், 'கயிலை புல்லென விசும்பு வறிதாக" இறைவன் தில்லையில் நடம் புரிதலால் (கோயில். 32) தில்லையாத் தனித்தும், கயிலைமலை யெனப்படும் (A.R. 160 of 1922) சிறப்புடைமையின் திருக்காளத்தியைத் தில்லை யொடு சார்த்தியும் கூறினார் போலும்.

இனி, அவர் வழங்கும் பழமொழிகளைக் காண்டல் வேண்டும். பொற்குன்றம் சேர்ந்த காக்கை யும் பொன்னாம் என்பதும், இரத குளிகையால் செம்பும் பொன்னாம் என்பதும், கருடதியானிக்குக் கண்ணே மருந்து என்பதும், இரவி முன் இருள் நில்லாது என்பதும் பழமொழிகள்; இவற்றை ''ஏர்தரும் பொற் கிரிசேர் கருங்கொடியும், பொன்னிறமா மெனச் சொன்ன தொன்மொழியும், ஏதமில் நிறைமதிச் சீதளநிலவால், ஆருமெய்யுருப்பம் தீருமென்பதும், மொழிதரு மிரத குளிகை தற் சேர்ந்த காளிமச் சீருண நீளியற்காக, மாமெனக் கூறும் தோமறுமொழியும், கருட தியானம் மருடபவந்தோர், நோக்கினில் தவிரும் தீக்கடுவென்றலும், ஆயிரங் கிரணத் தலர் கதிர் முன்னம் பாயிருள் கெடுமெனப் பகர் பழமொழியும், அங்கண்மா ஞாலத் தெங்கணு மொப்ப இயலும்" கழுமல . 19) என்பர். கற்பசுவைக் கறப்பவரில்லை , எட்டிக் கனிக்கு ஏணியிடார், அரிசி வேண்டி உமி குற்றுவாரில்லை, வெறுங் களருழுது விதை விதையார் கழுமல். 22), தானே விழுவார் மேல் பார மேற்றலாகாது திருவிடை 5, முகம் பாகம் பண்டமும் பாகம் திருவேகம்ப. 15) என்பன முதலிய பழமொழிகளும் பிள்ளையார் பாட்டில் காணப்படுகின்றன.

பட்டினத்துப்பிள்ளையார் பெருஞ்செல் வத்தைத் துறந்த அருந்துறவியென்பதோடு முத்தமிழ்ப் புலமை பெற்ற வித்தகரென்பதை அவருடைய பாட்டுக்களே காட்டுகின்றன. மக்களுயிர் ஒவ்வொரு கணமும் இறக்கும் நிலையில் இருந்து கொண்டே சிற்றின்பம் விழைந்து விற்கிறதென்பது கண்டு, "நஞ்சு சூழ்பகுவாய் வெஞ்சினமாசுணம். தன் முதன் முருக்க நென்முதற் சூழ்ந்த, நீர்ச்சிறுபாம்புதன் வாய்க்கெதிர் வந்த, தேரையை வவ்வியாங்கு யான்முன், கருவிடை வந்த வொருநாள் தொடங்கி மறவாமறலி முன் பிறழ்பேழ்வாய். அயிற்றலையன்ன எயிற்றிடைக் கிடந்து" (கோயில் 8) வருந்துகிறேன் என்பது, மக்களைப் போலப் பிறந்திறந்துழலும் வானவர் முதலிய சிறு தெய்வ வழிபாட்டை இகழ்ந்து விலக்கக் கருதிய பிள்ளையார் வழிபடும் மக்களை பார்த்து, "புறவார்பசும்புற் கறவாக்கற்பசு, வாயிடைச்செருகித் தூயநீருதவி, அருஞ்சுவைப்பால் கொளப் பெருஞ் சுரைவருடும் பேதையர்" (கழுமல . 22) என்பது முதலிய உவமைகளை எடுத்தோதுவதும் பேரருட் பெருங்கடலாக இறைவன் இருப்ப, அவன் அருட்பேற்றுக்கிலக்காகாத மக்கள் செயலுக்கு இறைவன்பால் குற்றமில்லையென்பது விளக்க , ''முறியாப்புழுக்கல் முப்பழங்கலந்த, அறுசுவை யடிசிலட்டினி திருப்பப், புசியாதொருவன் பசியால் வருந்துதல், அயினியின் குற்றமன்று வெயிலில் வைத்து, ஆற்றிய தெண்ணீர் நாற்றமிட்டிருப்ப, மடா அவொரு வன் விடா அவேட்கை, தெண்ணீர்க்குற்றமன்று கண்ணகன்று, தேன்துளிசிதறிப் பூந்துணர்துறுமி, வாலுகங்கிடந்த சோலைகிடப்ப, வெள்ளிட வெயிலிற் புள்ளிவியர் பொடிப்ப, அடிபெயர்த்திடுவா னொருவன், நெடிதுவருந்துதல் நிழல் தீங்கன்றே" (திருவிடை. 16) என்பதும் பிறவும் அவரது புலமை வளத்தின் பொற்பை விளக்குவனவாம்.

சிவபெருமான் இன்னவுரு இன்ன நிறம் என்று அறியவாராத முழுமுதற் பொருள் ! "குறி குணம் கடந்தவன், உறைபொருள் எங்கணும் நிறை பரி பூரணம், அந்தமாதி முந்தையே தவிர்த்த அனாதி முத்தன், அளவையின் அடங்காது ஒளிர் சுகம்'' கழுமல . 28); சராசாராமனைத்தும் அவனிடையே தோன்றி அவனிடையே யடங்கும் கோயில் 24), எல்லாம் தன்னிடைத் தோன்றித் தன்னிடையே ஒடுங்கினும், சிவபெருமான் தான் பிறிதொன்றில் தோன்றாது வேறாய் நிற்பன் திருவிடை மும். 22; ஒற்றி .4); வேறாய் இருப்பினும், "ஏழுலகாகி எண்வகை மூர்த்தியோடு ஊழிதோ றூழி எண்ணிறந் தோங்கி, (ஒற்றி.1) எவ்வகைப் பொருளினும் ஒன்றாய் அவ்வப் பொருளாகவும் இருப்பான். ஒன்றாக இருப்பவன் வேறாய் நிற்பது, ஒன்றோடொன்றொவ்வாது வேறு பட்ட உயிர்கள் தத் தம் எல்லையில் இனிது ஒழுகப் பண்ணுதற்கு என்பாராய், "ஒவ்வாப் பன்மையுன் மற்றவர் ஒழுக்கம் மன்னிய... விரவியும் வேறாய் நின்றனை" ஒற்றி 4) என்று விளக்குகின்றார். இப்பரம் பொருள் இங்ஙனம் உலகுயிர்களோடு ஒன்றாயும், வேறாயும் இருக்குமாயினும், மூலமும் நடுவும் முடிவும் இன்றிக் காலங் கடந்து நிற்கும் கடவுள் என்று எடுத்து,

என்று உயிர்களின் அறிகருவிகம் கெட்டாமல் அகத்தே அவ்வப் புலப்பொருளாய்க் காட்சியளிக்கும் என விளங்கியுரைப்பர்.

இவ்வாறு உலக முழுதும் எல்லாம் தானேயாய் நிற்கும் கடவுளாகிய சிவபரம் பொருட்குச் சமயங்கள் பலவும் உரியன என்று கூறுவது சைவத்தின் தனிச் சிறப்பாகும். "அன்றென்றும் ஆ மென்றும் ஆறு சமயங்கள், ஒன்றோடொன் றொவ்வா துரைத்தாலும் என்றும், ஒரு தனையே நோக்குவார் உள்ளத் திருக்கும்" (இடைமருது. 17) எனவும், 'திருவமர் மாலொடு திசைமுகனென்றும், உளனேயென்றும் இலனேயென்றும், தளரானென்றும் தளர்வோனென் றும், ஆதியென்றும் அசோகின னென்றும், போதியிற் பொலிந்த புராண னென்றும், இன்னவை முதலாத் தாமறி யளவையின், மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப், பிணங்கு மாந்தர் பெற்றிமை நோக்கி, அணங்கிய அவ்வவர்க் கவ்வவையாகி யடையப் பற்றிய பளிங்கு போலும், ஒற்றி மாநகருடைய கோவே' (ஒற்றி. 2) எனவும் கூறிச் சமய வேற்று மையைக் களைவதில் பிள்ளையார் சிறந்து நிற்பர். உடம்பை மரக்கலமாகவும், வினைகளைச் சரக்காகவும் உலக வாழ்வைக் கடலாகவும் உருவகம் செய்யும் பிறிதோரிடத்தே, அடிகள் பல் வகைச் சமயங்களையும் கடற்றுறைகளாக, எடுத்துக் கூறுவது (கழுமல். 16) சமய வேற்றுமையில் ஒருமை காண முயலும் அடிகளது மனப்பான்மைத் தெரிவிக்கிறது.

இனி, சைவ புராணங்கள் சிவபெருமான் மாதொரு பாகனாய்க் கங்கையும் திங்களும் தாங்கிய சடைமுடியும், நெற்றி விழியும் நீலகண்டமும் எடுத்த பாதமும் தடுத்த கங்கையும் புலி யதளாடையும், சூலப் படையும் மழுப்படையும், ஆனேற னூர்தியும் ஆனேற்றுக் கொடியும் பிறவு முடையனாய்த் தோன்றும் தோற்றத்தை எடுத்தோதி, புர மெரித்ததும், தக்கன் வேள்வி தகர்த்ததும் , அயன் றலையைக் கொய்ததும், காமனைப் பொடித்ததும், காலனைக் காய்ந்ததும், பிறவும் விரித்துக் கூறுவனவாகும். இவற்றை யெல்லாம் பிள்ளையார் பல திருப் பாட்டுக்களில் விரித்தும் தொகுத்தும் அழகொழுகப் பாடியுள்ளார். மேலும், சிவபெருமான், திங்களைச் சூடுதல் ஆனேறு ஏறுதல் முதலிய செயல்களின் கருத்து இது வென்பாராய்.

என மொழிந்தருளுகின்றார்.

இனி, சிவநெறி பேணும் சைவர்களுக்குத் திருநீறும் திருவைந் தெழுத்தும் திருவக்கமணி மாலையும் சாதனங்களாகக் கூறுவர். இவற்றைப் பொருளெனக் கொள்ளாதார்க்குப் பிறவியினின்றும் வீடு பேறு கிடையா தென்பர். இதனை, பிறவி நோய், ''மாறும்படிக்கு மருந்துளதோ சண்பை வாணர் கொண்ட, நீறும் திருவெழுத் தோரைந்தும் கண்டியும் நித்த நித்தம், தேறும் பொருளென் றுணராத மாயச் செருக்கினர்க்கே ' (கழுமல . 21) என்றும், பெருவேந்த ராயினும், 'நன்னீறு நுதற் கிலரேல், என்றும் அரசும் முரசும் பொலியா இரு நிலத்தே' (திருவேகம்ப திருவந். 30) என்றும், 'காணீர் கதி யொன்றும் கல்லீ ரெழுத்தஞ்சும்' (திருவிடை. 12) என்றும் சிறப்பித் தோதுகின்றார்.

இச் சாதனங்களைப் பொருளாகக் கொண் டவர் சிவபெருமானை அகத்தும் புறத்தும் வழிபடும் இயல்பினராவர். புற வழிபாடு திருக் கோயிலில் இருக்கும் இறைவன் திருவுருவைச் சிவனெனவே தேறி நிறைந்த அன்புடனே நீராட்டிப் பூவிட்டு அருச்சிப்ப தாகும். நெஞ்சத்தில் திருவைந் தெழுத்தை நினைந்து அதன் வாயிலாக உள்ளத்தாமரையில் சிவனைக் கண்டு இன்புறுவதாகும் (கழுமல். 22).

புற வழிபாட்டை , 'பத்தியாகிப் பணைத்த மெய்யன்பொடு, நொச்சியாயினும், கரந்தையாயினும் பச்சிலையிட்டுப் பரவுந் தொண்டர்' (இடைமருது. 19) என்றும், 'போதும் பெறாவிடில் பச்சிலை யுண்டு புன லுண் டெங்கும், ஏதும் பெறாவிடில் நெஞ்சுண் டன்றே ' (கழுமல (12) என்றும் எடுத்தோதுவர். இவ் வழிபாட்டின் உறுப்பாக இறைவன் புகழ் கேட்பதும், காலை மாலைகளில் திருக்கோயில் வலம் வருவதும் திருக்கோயில் திருப்பணி செய்வதும் கோயில். 24) கூறப்படுகின்றன. அகவழிபாட்டின் கண் காமம் வெகுளி முதலிய குற்றங்களைப் நோக்கி, ஐம் பொறி களையும் ஒடுக்கி , அன்பும் அருளும் வாய்மையும் மேற்கொண்டு சிந்தைக்கண் சிவபெருமானை எழுந்தருள்வித்து வழிபடுவதாகும். இதனைப் பாழறையைப் பள்ளியறை யாக்கும் செயல் மேல் வைத்தும் கழுமல . 4), பாற்கடல் கடைந்து அமுதம் பெறும் செயல் மேல் வைத்தும் (கழுமல, 13) உருவகவணி நலம் திகழச் சொல்லோவியம் செய்து காட்டுகின்றார்.

உயிர்கள் ஞானம் பெற்று வீடு பேறடைதற்குரிய பக்குவமெய்துங்கால் சிவபெருமான் குருவாய் வந்து அருள் ஞானம் வழங்குவனென்றும் ஞானத்தால் பீடு கைகூடு மென்றும் சித்தாந்தமாகிய சைவாகமங்கள் கூறும். அதனை நம் பட்டினத்தார், 'மேற்படும் இதயப் பாற் கடல் நடுவுள், பரம்பரை தவறா வரம் பெறு குரவன், மருளற விரங்கி யருளிய குறி யெனும், நிந்தையில் கனக மந்தரம் நிறுவி, மாணறி வென்னும் தூணிடைப் பிணித்த, நேசமென்னும் வாசுகி கொளுவி , மதித்த லென்னும் மதித்தலை யுஞற்றிய, பேரா வின்பச் சீரானந்தப் பெறலரு மமுதம் திறனொடும் பெற்று, ஞானவாய் கொண்டு மோனமா யுண்டு, பிறப்பிறப்பென்னு மறப் பெரும் பயத்தால், பன்னாட்பட்ட வின்னாங்ககற்றி, என்னையுந் தன்னையும் மறந்திட், டின் மேல் டெய்துதற் பொருட்டே ' (கழுமல். 13) என்று கூறுகின்றார். இவ்வாறு திருவருள் ஞானத்தைக் குரவன் அருளப் பெற்ற வழி , மனத்திடைப் படிந்து கிடக்கும் இருள் நீங்கும்; உள்ளம் தெளிவுறும்; அத் தெளிவின்கண் இன்பம் பெருகும்; அது வழியே இதுகாறும் கண்டறியாத மகிழ்ச்சி மேலிடும்; இறைவன் பால் அயராத அன்பு தோன்றும் கழுமல். 6) என்று விளக்குகின்றார். மருள் எனவும் இருள் எனவும் இங்கே குறிக்கப் பெறுவன ஆணவம் கன்மம் மாயை என்று கூறப்படும்; அவற்றை, 'பேரிக - லாணவக் காரிருள்' எனவும், 'மின்றொடர் ) வல்வினை வன்றொடர்' எனவும், 'மாயைமா மாயை யாய் பேய்' (கழுமல. 13) எனவும் வகுத்துரைப்பர்.

இவ் வண்ணம் உணர்த்தப்படும் சிவ ஞானம் கைவரப் பெற்றவர், யாது குறித்தும் எவர்க்கும் அஞ்சுதலின்றி, மனைவி மக்கள் முதலிய சுற்றத் தொடர்பும் செல்வமும் பிறவும் பொருளென நினையாது திருவருளே நினைந்து இந்திரன் முதலிய இறையவர் பதங்களும் எண் வகைச் சித்தியும் தாமே வந்தபோதும் அவற்றை மறுத் தொதுக்கிக் கீளும் கோவணமும் உடுத்து ஒடொன்றைக் கையிலேந்தி இரந்துண்பதும், தரையில் படுத்துறங்குவதும் சால்பு குன்றாராய், மன்னுயிரனைத்தையும் மகவெனக் கருதி ஒக்கப்பார்க்கும் உயர் நிலைத் தொண்டராய் விளங்குவர்; அவர் வாழ்வின் முன் உலகியலிற் பெருஞ் செல்வம் பெற்று வாழும் பெரு வாழ்வு குளப்படி நீரும் அளப்பருந் தன்மைப் பிரளயச் சலதியும்' (இடைமருது. 7) போல ஒவ்வா இயல்பின தாம். இச் சான்றோர். தாம் பெற்று மகிழும் அருள் ஞானத்தால், தம்மை யுணர்ந்து, தம்மை யடிமை யாகவுடைய தலைவனாகிய சிவனை யுணர்ந்து ஏனை எல்லோரையும் இனி துணரும் சிவ ஞானச் செல்வராவர். 'தெய்வத் திருவருள் கை வந்து கிடைத்தலின், மாயப் படலங் கீறித் தூய, ஞான நாட்டம் பெற்ற பின் யானும், நின் பெருந் தன்மையுங் கண்டேன் காண்டலும், என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன், நின்னிலை யனைத்தையுங் கண்டேன்' திருவிடை. 13) என்று தாமும் அச் சிவ ஞானக் காட்சி பெற்ற சிறப்பைப் பட்டினத்தார் எடுத்துரைக்கின்றார்.

பட்டினத்தார் திருவருள் நாட்டம் பெறு முன்பெல்லாம் இறைவனை வேண்டுமிடத்து, 'பேதையேன் பாசத் தீவினை யகற்றித் திருவருட் செல்வம் பெருகுமாறுதவி அளித்தருள்' (கழுமல. 19) என வேண்டினர். அக் காலத்துக் 'கல்லா மனத்துப் புல்லறிவு தொடர' இல்லன் உள்ளனவாயும் உள்ளது காணப்படாமலும் காட்சி யளித்தன; 'திருவருள் நாட்டம் கருணையிற் பெறலும் யாவையும் பொய்யெனத் தோன்றின; சிவ பரம் பொருளே மெய்யெனத் தோன்றக் கண்டார். அதனை 'ஓவியப் புலவன் சாயல் பெற எழுதிய, சிற்ப விகற்ப மெல்லாம் ஒன்றித் , தவிராது தடவினர் தமக்குச், சுவராய்த் தோன்றும் துணிவு போன்றனவே' கழுமல.10) என்று விளக்குகின்றார்.

இறுதியில் அவர் ஞான நெறியில் முதிர்ந்து திருவருட் பெருஞ் செல்வராய்த் திகழ்ந்த காலையில், திருவொற்றியூர் இறைவனை நோக்கி, 'சேர்விடம் இன்னதெனத் திறப்படநாடி யடைதற்கு அரியவனே, நாடற்குரிய வாயில் எல்லாவற்றாலும் நாடினேன்; இனிச் செய்வதொன்று மறியேன்' என்று செயலற் றொழிகின்றார். அப்போது அவர், பெற்ற தாய் சேய்மையிலிருப்பினும் அழுத குழவி பாலுண்பது இயற்கை; அவ் வியல்பு தானும் அறியாது எண்ணில் ஊழி பிறவியின் மயங்கி' வாய்தல் (வாயில்) அறியாது மயங்கினேன்; கண்ணிலாக் குருடர்கண் பெற்றாங்கு நின் திருவருள் நாட்டம் பெற்றேன்; என்னை இப் பிறவியிற் 'கட்டிய நீயே அவிழ்க்கினல்லது, எட்டனை யாயினும் யான் அவிழ்க் கறியேன்' என் கருவி கரணங்களாக விளங்குவ எல்லாம், ஒன்ற நின் அடிக்கே ஒருங்குடன் வைத்து நின்றனன் தமியேன் நின்னடி யல்லது சார்வு மற்று, இல்லை (ஒற்றி .9) என்று உரைத் தருளுகின்றார்.

திருவெண்காடர் பெருஞ் செல்வப் பெரு வாழ்வு வாழ்ந்தவராகையால், அதன் பயனாக உலகியலில் செல்வ வாழ்க்கையின் இயல்பைத் தெளிவாக எடுத் தோதுகின்றார். 'வாழ்ந்தன மென்று தாழ்ந்தவர்க் குதவாது, தன்னுயிர்க் கிரங்கி மன்னுயிர்க் கிரங்காது, உண்டிப் பொருட்டாற் கண்டன வெஃகி, அவிழடு நர்க்குச் சுவைபகர்ந் தேவி, ஆரா வுண்டி யயின்றனராகி' பெரியோரைப் பேணாமை, சிற்றினச் சேர்க்கை, பிறன் மனை நயத்தல், பொருட் பெண்டிர் முயக்கம் முதலியன செய்து, நச்சி வந்த நல்கூர் மாந்தர்க்கு அக மலர்ந் தீவார் போல முகமலர்ந்து, இனிது மொழிந்தாங் குதவுதலின்றி, நாளும் நாளும் நாள் பல குறித்து அவரை வருத்துதலும், இம்மை மறுமை யில்லை யென நாத்திகம் பேசுதலும், செல்வத்தையே பெரியார் விரும்பித் தன்னையே வியந்து கொள்வதும் (திருவிடை 7) பெருஞ் செல்வ வாழ்வின் இயல்பு என இயம்புகின்றார். இவ்வாறே மகளிர் நலம் பாராட்டித் திரியும் மாக்கள் செயலையும் கோயில் . 15 ) எடுத்தோதி யிழிக்கின்றார்.

செல்வ வாழ்வு பெறுவோர் அதற்காக முயலும் பல்வேறு முயற்சிகளையும் நிரல்படக் கோத் துரைப்பதில் பிள்ளையார் நிகரின்றிப் பிறங்கு கின்றார். நிலத்தை உழுதுவிதை விதைத்துக் கார் வருமென்று விண்பார்த்திருப்பதும், கிளைஞர்களைப் பிரிந்து பொருள் வயிற் சேறலும், போருடற்றுவதும், கடலில் ஏந்திரம் கடாவிற் குன்று பார்த்து வங்கம் செலுத்துவதும், வேந்தர்க்குச் சோற்றுக் கடன் பூண்பதும், வேறு பல தொழிலில் முயல்வதும், வாட் போர் செய்வதும், அறியாதார்க்கு அறிவு கொளுத்துவதும், சொற் போர் செய்வதும், பாக்கள் புனைவதும், சொற்பொழிவு செய்வதும் கோயில். 20) மக்கள் செயல்களாகும் இவ்வாறு ஈட்டப் பட்ட செல்வம் நிலையின்றிக் கெடுவதையும் நன்கு கண்டு, 'கண்டன மறையும் உண்டன மலமாம், பூசின மாசாம் புணர்ந்தன பிரியும், நிறைந்தன குறையும் உயர்ந்த பணியும், பிறந்தன இறக்கும் பெரியன சிறுக்கும், ஒன்றொன்றொருவழி நில்லா' என்றும், செல்வம் கல்வி கொடை படை குலம் முதலிய வற்றால் உயர்ந்தவர்களும் இறந்தொழியக் கண்டு, 'செல்வமொடு பிறந்தோர் தேசொடு திகழ்ந்தோர், கல்வியிற் சிறந்தோர் கடுந்திறன் மிகுந்தோர், கொடையிற் பொலிந்தோர் படையிற் பயின்றோர் குலத்தி னுயர்ந்தோர் நலத்தினின் வந்தோர், எனையர் எக்குலத்தினர் இறந்தோர் அனையவர், பேரும் நின்றில்' (கோயில். 28) என்றும் உரைக்கின்றார்.

துறவு வாழ்வு முதிர முதிரப் பிள்ளையார்க்கு உலகியலின் பல் வகைக் கூறுகளையும் பகுத்து ஆராயும் ஆராய்ச்சி மிகுவதாயிற்று. யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை, இளமை நிலை யாமை முதலிய நிலையாமைகளை ஏனைத் துறவி களைப் போலவே கூறுகின்றாராயினும், மக்க ளுடைய செயல் வகைகளைத் தொகுத்து வகுத்தும் ஆராய்ந்த முதன்மை நம் பட்டினத்தாருக்கே உரியது. இளமை, மூப்பு, இறப்பு என்றவற்றின் விரைந்த வரவை யெடுத்தோதி, இவற்றையுடைய உடல் வாழ்வைக் கருதி மக்கள், செய்தன சிலவே செய்யா நிற்பன சிலவே' எனவும், 'அவற்றிடை நன்றென்ப சிலவே தீதென்ப சிலவே, ஒன்றினும் படாதன சிலவே' எனவும், இவற்றை ஒன்றொன்றாக நோக்கினும், ஒன்றாகச் சேரத் தொகுத்து நோக்கினும், உண்மை தெளிதல் மனத்திற்கு இயலுவதில்லை யாதலால், 'மனத்தின் செய்கை மற்றிதுவே' (கோயில். 32) எனவும் கூறுவது இதற்குப் போதிய சான்றாகும். இவ்வாறே உயிர்கள் பலவாய்த் தம்முள் பல் வேறு வகையால் ஒன்றினொன்று ஒவ்வாத வேற்றுமை கொண்டு நிலவுவதை 'யாக்கையி லியங்கும் மன்னுயிர், உருவினும் உணர்வினும் உயர்வினும் பணியினும், திருவினும் திறலினும் செய்தொழில் வகையினும், வெவ்வேறாகி வினையொடும் பிரியாது, ஒவ்வாப் பன்மை ' (ஒற்றி 4) என ஆராய்ந்து வகுத்துக் காட்டுவர்.

இவ்வாறு பொருள்களின் குணஞ் செயல் களைப் பகுத்துணர்த் துரைக்கும் பண்புடைப் புலமை சிறந்த பிள்ளையார், தத்துவ ஆராய்ச்சியில் தலைப்பட்டு மனத்தின் இயல்பும், அஃது இறைவன் வழிபாட்டில் அமைய வேண்டிய அமைதியும் கண்டு, ஓரிடத்தில் அழகுறக் கூறுகின்றார். பிறப்பு இறப்புக் களால் உயிர்கள் எய்தும் துன்பத்தை இறைவனொரு வனே அறிவன் ; பிறப்பற வேண்டின் இறைவனைப் பற்றியல்லது அது கைகூடாது; இறைவனைப் பற்றி நிற்றற்கு ஒன்றை வேண்டுதலும் வெறுத்தலும் ஆகிய இரு செயலும் உள்ளத்தின்கண் உண்டாதல் வேண்டும்; உள்ளமோ ஐம்புலன் வழி நின்று, தானல்லாத தொன்றைத் தானென நினையும் தன்மையதாகும். இது கொண்டு இறைவனை நினைப்பது எங்ஙனம் அமையும்? என்றோர் ஐயத்தை யெழுப்பி, எவ்வகையாலும், 'இறைவ, கருப்பம் கடத்தல் யான் பெறவும் வேண்டும், கடத்தற்கு நினைத்தல் யான் பெறவும் வேண்டும், நினைத்தற்கு நெஞ்சு நெறி நிற்கவும் வேண்டும்' (திருவிடை 4) என்று இறைவனை வேண்டியமைகின்றார்.

இவ்வாறு உவமைவகையான் மட்டுமன்றிக் கற்பனை வகையிலும் இவரது புலமை தலை சிறந்து விளங்குகிறது. திருவிடைமருதூரில் இவர் இருந்து வருகையில் அதன் இயற்கையழகு முற்றும் நன்கு கண்டிருந்தார். அதனால் அவ்வூரையும் அதனைச் சூழும் காவிரியாற்றையும் அழகுறப்புனைந்து கூறுகின்றார். "சந்தன சரள சண்பக வகுள , நந்தன வனத்திடை ஞாயிறு வழங்காது, நவமணி முகிழ்த்த புது வெயிலெறிப்ப, எண்ணருங் கோடியிருடி கணங் கட்குப், புண்ணியம் புரக்கும் பொன்னி சூழ்ந்த , திருவிடைமருது" (13) என்றும், தெருக்களின் சிறப்பை, "எழுநிலை மாடத்துச் செழுமுகி லுறங்க, அடித்துத் தட்டி எழுப்புவபோல், நுண்டுகிற்பதாகை கொண்டு கொண்டு கைப்பத், துயிலினீங்கிப் பயிலும் வீதித் திருமருது'' (25) என்றும் புனைந்து கூறுவர். சீகாழிப்பதி ஊழிக்காலத்தெழுந்த பெருவெள்ளத்தில் தோணிபோல் மிதந்த செய்தியைக் குறிப்பிட்டு, அது, ''காட்சியிற் பொலிந்த மாட்சிமை சிறந்த காழி' (19) எனவும், வேதம் போலும் கோபுரங்களும் சிவாகமம் போலும் மணிமேடைகளும், இந்திரன் போலும் எந்திரவாவிகளும் "எங்கணும் நிறைந்த வெங்குரு" (22) எனவும், தண்ணீர்ப் பந்தரும் அன்ன சத்திரங்களும் ஆடரங்குகளும் கலைபயில் கழகங்களும் மலர் மன்றங்களும் மணிநெடு வீதியுங்கொண்டு, "பூமக ளுறையுளாரமென விளங்கும், பெரும் புகழ்க் காழி'' (28) எனவும், செந்தளிரும் மதுமலரும் காய்த் திரளும் செங்கனியும் தாங்கி நிற்கும் மாமரத்தை, வயிரமும் நீலமும் மரகதமும் மாணிக்கமுமாகிய மணிகள் "கிடைத்த சீர் வணிகரிற் படைத்த மாந்தருவும்” (16) எனவும் அரமியத்தைப் புன்னைப் பொழி லெனவும் செய் குன்றைக் கொன்றைக் காவெனவும் மயங்கி மொய்த்த வண்டினத்தின் கரு நிறத்தால் இரவு வந்ததென மயங்கி ஆடவரும் மகளிரும் கூடியின் புறு வர் (கழுமல . 28) எனவும் கூறுகின்றார். திருவேகம்ப முடையார் திருவந்தாதியில் காஞ்சிமா நகரையும் அதனைச் சூழ்ந்த கச்சி நாட்டையும் பாராட்டி அந்நாட்டின் நீர் நில வளங்களைச் சிறப்புற எடுத்தோதுவர்; தேன் முரல விளங்கும் தடம் பொழிலும் (3) வன்மையிற் குன்றா மதிலும் (10) தடங் கமலம் பூங்குடை கொள்ளும் புனல் வயலும் (51) பிறவும் கொண்ட காஞ்சிமா நகர், அமராவதிக்கு நேராம் (86) என்று வியந்துரைப்பார். இவ்வாறே திருவொற்றியூர், "இரு நில மடந்தைக்கு முகமெனப் பொலிந்த ஒற்றிமா நகர்" (ஒற்றி என்பது முதலாகப் பல இனிய சொற்றொடர்களால் சிறப்பித் துரைக்கின்றார்.

இனி, பட்டினத்தடிகளுடைய பாட்டினைப் படிக்குங்கால் பண்டை நூல்களின் கருத்துக்களும் சொற்களும் படிப்போருள்ளத்திற் றோன்றி அவ ருடைய பரந்த கல்வி நலத்தைப் புலப்படுத்துகின்றன. ''எழுத்தி னுறழாது வழுத்து பொருளின்றிக் , குறிப்பொடுபடாது வெறித்த புன் சொல்லே, யாயினும் பயந்த தஞ் சேயவர் சொலு மொழி, குழலினும் யாழினு மழகிதா மது போல்" (கழுமல . 28) என்ற இது, "யாழொடுங் கொள்ளா பொழுதொடும் புணரா, பொருளறி வாராவாயினும் தந்தையர்க்கு, அருள் வந்தனவாற் புதல்வர் தம் மழலை' (புறம். 92) என்ற புறப்பாட்டையும், "குழலினிது யாழினிது என்ப தம் மக்கள், மழலைச் சொற்கேளாதவர்” (குறள்) என்ற திருக்குறளையும், "நெடுநீ ரென்னப்படுநெடு நாணில், தங்கிய மடியெனும் நங்குரம் சேர்த்தி” (கழுமல.16) என்பது "நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடு நீரார் காமக் கலன்" (குறள்) என்னும் திருக்குறளையும், "அடியொன்று பாதல் மேழிற்கு மப்புறம் பட்டது இப்பால் முடியொன்று இவ் வண்டங்களெல்லாங் கடந்தது'' (கோயில் . ) என்பது "பாதாள மேழினுங் கீழ்ச் சொற்கழிவு பாத மலர், போதார் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே" திருவெம்) என்ற திருவாசகத்தையும், ''அறிவும் சிந்தையும் ... சுவை யொளியூ றோசை நாற்றந் தோற்றம், என்றிவை முதலா விளங்குவவெல்லாம் ஒன்ற நின்னடிக்கே ஒருங்குடன் வைத்து, நின்றனன் தமியேன்" (ஒற்றி.9) என்பது, "எண்ண மே யுடல் வாய் மூக்கொடு செவி கண் என்றிவை நின்கணே வைத்து, மண்ணின் மேலடியேன் வாழ்கிலேன் கண்டாய்'' (வாழா) என்ற திருவாசகத்தையும் நினைப்பிக் கின்றன. இவ்வாறே ''நஞ்சுமிழ் பகுவாய் வெஞ்சின மாசுணம்” கோயில். 8) எனத் தொடங்கும் பகுதி திருஞானசம்பந்தருடைய , "செடி கொள் நோயாக்கை யம் பாம்பின் வாய்த் தேரை'' (திருவாரூர்) என்ற திருப்பாட்டை நினைப்பிக்கின்றது.

இனி, புலன்களைந்தனையும் அடக்க வேண்டு மெனவுரைத்த பண்டைச் சான்றோர்கள், அவற்றால் உண்டாகும் கேட்டினை நம் பட்டினத்தடிகளைப் போல் எடுத்துக்காட்டி வற்புறுத்தியோர் எவரும் மில்லை . இதனை, "அழுக்குடைப் புலன் வழி இழுக்கத்தி னொழுகி, வளைவாய்த் தூண்டிலி னுள்ளிரை விழுங்கும் பன் மீன் போலவும் (சுவை) மின்னும் விளக்கத்து விட்டில் போலவும் (ஒளி) ஆசையாம் பரிசத்தி யானை போலவும் (ஊறு) ஒசையின் விளிந்த புள்ளுப் போலவும் ஒசை), வீசிய மணத்தின் வண்டு போலவும் (நாற்றம்) உறுவ துணராச் செறுவுழிச் சேர்ந்தனை" கோயில் 28) என வருவதனாலறியலாம்.

இறைவனுடைய ஆணைக்கு ''விரையாக் கலியெனும் ஆணை" (கோயில் 4) என்று பெயர் கூறுவர்; இது திருமாணிகுழி, திருப்புறம்பயம் கல்வெட்டுக்களிலும் காணப் படுவது. தில்லைவாழ் அந்தணர்கள், சிவபெருமான் நடனம் உகந்து உலகுயிர்கள் உய்யுமாறு அதனை மேற்கொண்டா னென்ற காரணத்தால் தில்லையில் நிறைந்திருக் கின்றன (திருவேகம்ப 47) ரென்றும், அதனால் அவர்கள் தில்லைக் கூத்தப் பெருமானை "வாழ் வாகவும் தங்கள் வைப்பாகவும்" (கோயில் 34) வணங்குகின்றார்கள் என்றும் இயம்புகின்றார். அவ்வந்தணர்கள் தில்லைப் பெருமானை இன்றும் தங்கட்கு வாழ்வாகவும் வைப்பாகவும் கருதி வழிபடு கின்றனரென்பது அறிந்து இன்புறத் தகுவதொன்று.

திருவேகம்ப முடையார் திருவந்தாதியின் இறுதியில் தாம் பாடிய அந்தாதியின் செய்யுட் டொகை நூறு என்று கூறுவாராய், "தமக்கு அன்பது பெற்றுப் பதிற்றுப்பத்துப் பாடி வைத்தார் பரவித் தொழுதா மவர் பாதங்களே'' என்றும், இதற்கு அவையடக்காக, "போதம் பொருளாற் பொலியாத புன்சொற் பனுவல் களும், வேதம் பொலியும் பொருளாமெனக் கொள்வர் மெய்த் தொண்டரே'' (100) என்றும் கூறுவர். இவ்வாறு தொகை கூறுவதும் அவையடக்கத்தை நூலின் இறுதியிலுரைப்பதும் ஆகிய செயல் வகைகள், இவர்க்குச் சில ஆண்டுகள் முன்பிருந்த சேரமான் பெருமாளிடத்தும் காணப் படுதலின், இவை அக்காலத்து வழக்கம் போலும் என எண்ணவேண்டியிருக்கிறது.

இவர் காலத்தில் இவர் பால் தலைமைக் கணக்கராயிருந்த சேந்தனார் தில்லையிலிருந்து திருத்தொண்டு பல புரிந்து. திருவிசைப்பா திருப் பல்லாண்டுகளைப் பாடி இறைவன் திருவடி யடைந்தனர். பத்திரகிரியார் புலம்பல் எனப்படும் பாட்டுக்கள் பல பத்திரகிரியார் பேரால் வழங்குகின்றன.

இறைவன் ஆணைக்கு விரையாக் கலியென்று பெயரென்பது முதன் முதலில் பட்டினத்துப் பிள்ளை யாரால் குறிக்கப்படுகிறது. பின்பு இரண்டாங் குலோத்துங்கன் காலத்தில் திருமாணிகுழி, திரு வதிகை, திருப்புறம்பயம் முதலிய இடங்களில் உள்ள கல்வெட்டுக்களில் வழங்குவதாயிற்று. இக் கல் வெட்டுக்கள் வேந்தன் ஆணையைத் திருவாணை யெனவும் கோயிலார் ஆணையை விரையாக் கலியாணை யெனவும் இவ்வாணை பிழைத்தாரை முறையே ஊர்ச்சபையாரும் அடியார்களான ஆண்டார்களும் முறை செய்வரெனவும் திருமாணி குழிக் கல்வெட்டொன்றால் (S.I.I. Vol. VII. 785) அறிகின்றோம். திருப்புறம்பயத்தில் "விரையாக் கலிப்பெருந்தெரு" (Rajendra 1) என்றொரு தெருவுண்டென அவ்வூர்க் கல்வெட்டு (A.R. 153 of 1932) கூறுகிறது. திருவிரையாக் கலி திருக்கண்ணப்ப தேவர் ஸ்ரீ பாதம் (S.I.I. Vol. VIII. 319) எனத் திருவதிகைக் கல்வெட்டுக் குலோத் II) கூறுகிறது. உத்தம சோழன் கல்வெட்டொன்று விரையாக் கலி யென்றும் நிறைகோலைக் குறிக்கிறது திருப்புறம் பயம்.

திருஞான சம்பந்தர் முதலிய மூவரையும் இவர் முத்திறத்தடியர் என்றது கொண்டு பிற்காலக் கல்வெட்டுக்கள் "முத்திறத்தார்" (S.I.I. Vol. No. 225 ) என்றும், திருப்புறம் பயம் கல்வெட்டொன்று. "முத்திரத் தடியர்” (343 of 1927) என்றும் கூறுகின்றன.
-----------

12. திருப்பாசுரப் பேருரை விளக்கம்


என்பது பாசுரம். இஃது என்நுதலிற்றோ எனின், திருந்தா அமணர்தம் தீநெறிப்பட்டுத் திகைத்து நின்ற தென்னவன் தெரிந்துய்தற் பொருட்டு,

உணர்த்துதல் நுதலிற்று. அஃதாவது வேதங்களிலும் ஆகமங்களிலும் விதிவிலக்குகளால் நுவலப்படும் ஒழுக்க நெறியே உலகியலில் ஒழுகுவார்க்கும் உரித் தென்றும், அந்நூல்களுள் உணர்த்தப்பெறும் பல் வகை நெறிகளுள் உண்மை நெறியாவது சிவநெறி யென்றும் கூறியவாறாம். நூல், ஆகமங்கள். வேதம் பொது; ஆகமம் சிறப்பு. பொதுவும் சிறப்புமாகிய இந் நூல்கள் விதித்தன செய்தும் விலக்கியன் வொழித்தும் வாழ்வது உலகியல் என்பார், ''உலகியல் வேதநூல் ஒழுக்கம் என்பது'' என்றார். இவ்வொழுக்கத்தால் பெறப்படும் அறமுதல் நாற்பொருளையும் செவ்வே யறிந்து உறுதியெய்துவார்க்கு, அவரவர் தகுதிக் கேற்பப் பற்பல நெறிள் கூறப்படுதலின், அவற்றுள் உண்மைநெறியறிந்து ஒழுகும் முன்னைத் தவ முடையார் பொருட்டு, "நிலவு மெய்ந்நெறி சிவ நெறியது'' என்றும் கூறியருளினார். என்பது, என்று உண்மையறிந்த பெருமக்களால் சிறப்பித்துக் கூறப் படுவது என்றவாறு.

இத் திருப்பாசுரத்துக்குப் பேருரை வகுப்பான் ஒக்க ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள் இப்பாசுரத்தின் கருத்து ஈதென்பார், ''உலகியல் வேதநூல் ஒழுக்க மென்பதும் நிலவு மெய்ந்நெறி சிவநெறியதென்பதும்" என்று அருளிச்செய்தது கொண்டு இத்துணையும்
கூறப்படுவதாயிற்று.

இதுகாறும் கூறியதற்கியைய, ஸ்ரீ மாதவச் சிவஞான முனிவர், "வேதம் சிவாகமம் என இரு பகுதிப்பட்டது மூன்று வருணத்திற்கும் உரிமை யாதலும் நான்கு வருணத்திற்கும் உரிமையாதலும் பற்றி என நீலகண்ட பாடியத்திற் கூறப்பட்டது. 'வேதநூல் சைவநூல் என்றிரண்டே நூல்கள் வேறுரைக்கும் நூல் இவற்றின் விரிந்த நூல்கள், ஆதிநூல் அநாதியமலன் தருநூலிரண்டும் ஆரணநூல் பொதுசைவம் அருஞ்சிறப்பு நூலாம், நீதியினாலும் கர்க்கும் சத்திநிபாதர்க்கும் நிகழ்த்தியது நீண்மறையின் னொழிபொருள் வேதாந்தத், தீதில் பொருள் கொண்டுரைக்கும் நூல் சைவம் பிறநூல் திகழ்பூர்வம் சிவகாமங்கள் சித்தாந்தமாகும்' (சிவ. சித். 8:15) எனவும், 'உலகியல் வேத நூல் ஒழுக்கமென்பதும், நிலவு மெய்ந்நெறி சிவநெறியதென்பதும்' எனவும் கூறுபவாகலின் அங்ஙனம் தூலாருத்தி முறைமை பற்றிக் கூறுதலின் இருபகுதிப்பட்டது என யாம் கோடும்" என்று அறிவுறுத்தருளியிருப்பது காண்க.

இப்பாசுரத்தின் பொருள்

அந்தணர் வானவர் ஆனினம் வாழ்க - அறவோரும் தேவரும் ஆனினங்களும் இனிது வாழ்க; தண்புனல் வீழ்க - தண்ணிய மழை பொய்யாது காலந்தோறும் பொழிக; வேந்தனும் ஓங்குக - வேந்தனான பாண்டியனும் சிவஞான சிவவொழுக் கங்களால் மேம்படுக; தீயது ஆழ்க - தீமையினை யுடைத்தாகிய சமயம் ஒழிக; எல்லாம் அரன் நாமமே சூழ்க - எல்லா உயிர்களும் சிவபெருமான் திருப் பெயராகிய திருவைந்தெழுத்தினையே ஓதிச் சிறப்புறுக; வையகமும் துயர் தீர்க - நிலத்தே வாழும் மக்கள் இருமையினும் துன்பமின்றி வாழ்க என்றவாறு.

வேறு வேறு இனமாதல் பற்றித் தொகை கொடாது அந்தணர் தேவர் ஆனினம் என்றெண்ணி "வாழ்க" என்றார். காலந்தோறும் தப்பாது பெய்தா லன்றித் தட்பம் உண்டாகாமையின், "தண்புனல் வீழ்க'' என்றார். வேந்தனை "ஓங்குக" என்றதனால், அவன் ஓங்குதற்குரிய சிவநெறிக்கண் நில்லாமை யுணர்த்தியவாறாம். புறச்சமயம் என்றால், அயற் சமய மென்றாதல் கூறாது, அந்நெறி யொழுகுவாரது தீமை குறித்து, "தீயது" என்றார். எல்லா மென்றது, அத் தீநெறிக்கண் இன்றி அதனின் வேறாய நெறிநின்ற உயிர்களை யுளப்படுத்து நின்றது. திருவைந்தெழுத்துச் சிவபரம்பொருளை யுணர்த்துவதாதலின், அதனை "அரன் நாமம்" என்றும், சூழ்தல் நினைத்தலாதலின், நினைத்தும் ஓதியும் வாழ்க என்றற்கு "சூழ்க" என்றும் கூறினார். ஏகாரம், தேற்றம். வேந்தனும் வையகமும் என்புழி உம்மை எச்சப் பொருள். இனி, வேந்தனும் என்பதனைப் பிரித்து, வையகமும் என்பதனோடு இயைத்து, வேந்தனும் ஓங்குக வையகமும் துயர் தீர்க என்று நிறுத்திப் பொருள் கூறுவாருமுண்டு. ஆயினும், அவ்வாறு பொருள்கோடல் மரபன்மையின் ஈண்டுக் கிடந்தவாறே கொள்ளப்பட்டது.

சேக்கிழார் சுவாமிகள் அருளிய பேருரை :

இனி, இத்திருப்பாசுரத்துக்குப் பேருரை விரிக்க லுற்ற ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள், முதற்கண், "வாழ்க அந்தணர்,” என்று தொடங்கும் திருப்பாசு ரத்துக்குப் பொருள் கூறுவார்,

என்று உரைத்தருளுகின்றார்.

உரை : அந்தணர் தேவர் ஆனினங்கள் வாழ்க என்ற இந்த மெய்ம்மொழிப் பயன் - அறவோர்களும் தேவர்களும் பசுக்கூட்டங்களும் வாழ்க என்று ஆளுடைய பிள்ளையார் அருளிச்செய்த இந்த மெய்ம்மை சேர்ந்த திருமொழியின் பயன் யாது எனின்; உலகம் இன்புற - உலகில் உள்ள உயிர்கட்கு இன்பம் மிகவும்; சங்கரர்க்கு - சிவபெருமான் பொருட்டு ; சந்த வேள்விகள் முதல் - மறையோதிச் செய்யும் வேள்வி முதலாக முன்வந்த - முன்னை நாள் தொட்டு நடைபெற்றுவந்த; அர்ச்சனை வழிபாடு மன்னவாம் - மலரிட்டு அருச்சித்தலும் பிறவுமாகிய வழிபாடுகள் நிலைபெற நிகழவுமாம்
எ-று.

என்றது, ஆளுடைய பிள்ளையார் தாம் அருளிச் செய்த திருப்பாசுரத்தின் கண், வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் என்றது, உலகம் இன்புறுதற்கும் தொன்றுதொட்டுச் சிவபரம் பொருட்கு நடைபெற்று வந்த அருச்சனை முதலிய வழிபாடுகள் நிலைபெற்று நிகழ்தற்குமாம் என்று உரைத்தவாறாம்.

அந்தணர், அறவோர்; அவர் முற்றத்துறந்த முனிவராவர். திருவள்ளுவனாரும் அந்தணரென விதந்தோதப்படுபவர் இவரே யென்றற்கு “அந்தண ரென்போர் அறவோர்," என்று தெளிவித்துள்ளார். உலகில் மக்களை அனாதியே பிணித்து நிற்கும் மல கன்மக் கட்டுக்களை அறுத்தற்குத் துணையாக வந்த உடல் , கருவி, உலகு முதலியவற்றை நன்கு பயன்படுத்திக் கோடற்குரிய அறமுதல் நான்கினை யும் அவற்றிற்குரிய நன்னெறியினையும் உணர்த்தியும் ஒழுகியும் காட்டும் பேரருளாளராதலின் அவ்வருணி லையைச் சுட்டி "அந்தணர்,'' என்றார். அவரால் உலகம் பெறும் பயன் அவர் தாம் பெற்ற பயனே; அஃதாவது சிற்றின்பத் தொடக்ககன்று பேரின்பப் பெருவாழ்வில் திளைத்தாடுவது; அதுபற்றியே ஆசிரியர் - 'உலகம் இன்புற' என்றார். எனவே, அந்தணர் வாழ்க என்றது உலகம் இன்புறுதற் பொருட்டு என்ற வாறாயிற்று. இன்புறுதல், இன்பம் மிகுதல்; 'பார்மட்டும் இன்புறூஉம் இன்சொல வர்க்கு' (குறள். 94. பரி. உரை) என்றாற்போல.

செய்யப்படும் வேள்வியையேற்றுச் செய்வாரை அதன் பயனைத் தலைப்படுவிக்கும் தலைமை யுடைமையின் 'தேவர் வாழ்க' என்றார் என்றும், மறைமொழி கேட்டு மகிழ்ந்து போந்து வேள்வியில் நல்கப்படும் அவியுண்டு சிறப்பவராதலின், அவ் வேள்வியைச் "சந்த வேள்வி ,” யென்று சிறப்பித்தும் கூறினார். சந்தம், மறையோசை; வடசொற் சிதைவு. தேவர் பொருட்டுச் செய்யப்படும் வேள்விகளால் மழைவளம் பெருகுமென்பதனை அடுத்த பாட்டிற் கூறுதலால், வேத வேள்வி நிலை பெறுவது குறித்துப் பிள்ளையார் தேவர் வாழ்க என்றார் என்று ஆசிரியர் உரைக்கின்றார். பிறாண்டும் 'வேதவேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி, என வேத வேள்வி நிலைபெறுவதையே குறிக்கொண்டும் அதனால் விளைவது குறைவற்ற இன்பவாழ்வென்பார் பிள்ளையார். "மாதவர்களன்ன மறையாளர்கள் வளர்த்த மலிவேள்வியதனால், ஏதமதிலாதவகை இன்பமமர்கின்ற எழில் வீழிநகரே,'' (திருவீழி 5) என்றும் ஓதுவது காண்க. இனி சமண சமயச் செல்வாக்கு மிகுதியால் நாட்டில் வேத வேள்வி நிலைபேறின்றிக் கெட்டிருந்தமையின் அது நிலை பெறவேண்டிச் "சந்தவேள்விகள் மன்ன'' என்றா ரென்பதூஉமாம். ஆவடுதுறையில் இறைவன் அருளிய பொற்கிழியினைப் பிள்ளையார் தம் தந்தையார்க்குக் கொடுத்தபோது, ''ஆதிமாமறை விதியினாலாறு சூழ்வேணி, நாதனாரை முன் னாகவே புரியநல்வேள்வி, தீது நீங்க நீர் செய்யவுந் திருக்கழுமலத்து, வேத வேதியரனைவரும் செய்யவும் மிகுமால்,'' (திருஞான . 429) என்று உரைப்பதும்[#] இக்கருத்துக்களை வலியுறுத்துவது காணலாம்.
---
என்ற திருவாக்கு ஆளுடைய பிள்ளையாரின் குறிக்கோள்கள் இவை யென்பதுணர நிற்றல் காண்க.
----

சங்கரர் - சிவபெருமான். சங்கரன் - எவ் வுயிர்க்கும் சுகத்தைச் செய்பவன். சிவபரம் பொருட்குச் செய்யப்படும் திருப்பணிகளுள் தொன்றுதொட்டு வந்த அருச்சனை முதலிய வழிபாடுகள் சிறந்தவையாதலின், 'முன்வந்த அருச்சனை வழிபாடு" என்றார். பிள்ளையார் இக் கருத்தினைப் பல பதிகங்களில் "இருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும்”, “பத்தி மலர் தூவ முத்தியாகுமே," "கரும்பார் மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யுமிடம்" என்பன முதலிய பல திருவாக்குக்களால் எடுத்தோதுதலைக் காணலாம்.

திருமுழுக்குக்கு வேண்டும் நெய்யும் பாலும் தயிரும் முதலிய வைந்தும் தருவதுடன் அருச்சனைக் குரிய திருநீறும் தருவதால் 'அருச்சனை வழிபாடு மன்ன ஆனினங்கள் வாழ்க' என்று பிள்ளையார் அருளிச்செய்தாரென்றார்; "ஆனஞ்சாடும் முடி யானும் ஐயாறுடையடிகளே'' என்று பிறாண்டும் பிள்ளையார் கூறுவதுடன், அருச்சனை வழி பாட்டிற்கு வேண்டியவற்றுள் பலவற்றை நல்கும் பண்பு பற்றி, ஆவினையே பரமனாக உபசரித்து, "மணியே, ஆனே சிவனே அழுந்தையவர் எம்மானே யென மாமடம் மன்னினையே" (அழுந்தூர் 4) என்று உரைத்தருளுவது காண்க.

இதுகாறும் கூறியவாற்றால் பிள்ளையார் பாசுரத்தே 'அந்தணர் வாழ்க' என்றது உலகம் இன்புறுதற்கும், 'வானவர் வாழ்க' என்றது சந்த வேள்விகள் முதலியன மன்னுதற்கும், 'ஆனினம் வாழ்க' என்றது அருச்சனை வழிபாடு மன்னுதற்கும் என்றும் தெரித்துரைத்தவாறாம். அந்தணரைப் பிரித்துத் தேவரை ஆனினத்தோடு கூட்டி "மன்ன வாம்" எனப் பொதுமுடிபுகுந்து உரை வழங்கியது, அத்தேவரனைவரும் ஆனினத்தின் அங்கத்தே யடங்கியிருத்தல் பற்றியென வுணர்க. "துங்கவமரர் திருமுனிவர் கணங்கள் சூழ்ந்து பிரியாத, அங்க மனைத்தும் தாமுடைய வல்லவோ நல்லா னினங்கள்'' (சண்டே . 19) என ஆசிரியர் தாமே உரைத்திருப்பது காண்க.

இனி நிறுத்த முறையாலே, ஆளுடைய பிள்ளையார், "வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ," என்று மொழிந்தருளிய பாசுரப் பகுதிக்கு ஆசிரியர் பேருரை வகுத்தருளுகின்றார்.

உரை : வீழ்புனலாவது - மழை காலந்தோறும் பொய்யாது பொழிவது ; வேள்வி நற்பயன் - வேள்விகளால் உண்டாகும் நல்ல பயனாதலாலும்; நாளும் - நாடோறும்;. அர்ச்சனை - சிவபெருமா னுக்கு நடைபெறும் அருச்சனை வழிபாட்டுக்கு; நல் உறுப்பு ஆதலால் - சிறந்த பொருளாதலாலுமாம்; ஆளும் மன்னனை வாழ்த்தியது – நாட்டையாள் கின்ற வேந்தனை ஓங்குக என வாழ்த்தியருளியது; அர்ச்சனை மூளும் - அருச்சனை வழிபாடுகள் மிகுதற்கும்; இவை காக்கும் - அவை குன்றாதபடி காத்தற்கும் உரிய; முறைமையால் - முறைமையினை யுடையனாதலால், (எ - று).

''வீழ்த தண்புனல்'' என்று பிள்ளையார் அருளிய மெய்ம்மொழி விசும்பினின்று விழும் மழை யென்னும் பொருட்டென்பார், "வீழ்புனலாவது" என்றார். வீழ்க தண்புனல் என்று வாழ்த்தியருளவே மழை காலந்தவறாது பெய்யும் பெருமை பெறுவ தாயிற்றென்றற்குத் தொகை வாய்பாட்டால் "வீழ்புனலாவது" என்றாராயிற் றென்க. வீழ்புனல் வினைத்தொகை. இவ்வாறு மழையுளதாவது வேள்வியால் விளையும் நற்பயனென்றற்கு, "வேள்வி நற்பயன்" என்றார். பிள்ளையாரும், "அம்பரமாகி யழலுமிழ் புகையினா குதியான் மழை பொழியும், உம்பர்களேத்தும் ஓமமாம்புலியூர் உடையவர் வடதளியதுவே" (ஓமமாம். 2) என்று ஓதியருளுதல் காண்க, வேள்வியின் நற்பயனாய் நல்ல நீர் திருநீராட்டுக்கும் பூசனைப் பொருள்களைத் தூய்மை செய்தற்கும் பயன்படும் சிறப்புடைமை பற்றி, "அர்ச்சனை நல்லுறுப்'பென்றார். நீரை உறுப் பென்றதனால் ஏனைப்பூவணி, ஓப்பனை, புகையீடு, பராவல் முதலிய வழிபாடுகள் பலவும் இஃதில்வழிச் சிறவாமை பெற்றாம்; பெறவே, "வீழ்க தண்புனல்” என்ற மெய்ம்மொழி, வேள்வியால் விளையும் நற்பயன் மழை என்பதும், இறைவனை அருச்சித்து வழிபடுதற்கு இன்றியமையாதது என்பதும் உணர்த்தி நிற்றல் பெற்றாம். எல்லாவுயிர்கட்கும் இன்பம் செய்தல் பற்றி "நற்பயன்" என்றும், இன்றியமையாமை யினை வற்புறுத்தற்கு "நல்லுறுப்பு' என்றும் ஆசிரியர் சிறப்பித்தாரென வறிக.
இனி, பிள்ளையார் 'வேந்தனும் ஓங்குக" என்ற மெய்ம்மொழிக்குப் பொருள் கூறுவார், "ஆளும் மன்னனை வாழ்த்தியது" என்றார். பாண்டி நாட்டிற் பாண்டி வேந்தன் கேட்ப இத்திருப்பாசுரம் பிள்ளையாரால் திருவாய்மலர்ந்தருளப் பெறுதலின் பாண்டி நாட்டை யாளும் பாண்டி வேந்தன் ஓங்குக என்று தெரித்தோதிற்றிலராதலின், ஆசிரியர், "ஆளும் மன்னனை" எனத் தெரித்தோதினார். இருவழியும் பாண்டிநாடு எடுத்தோதப்-படாமையின், இடத்தா னும் காலத்தானும் பாண்டி வேந்தன் மேற்றாயினும், பொதுநிலையில் எல்லா நிலத்தும் எக்காலத்தும் நிலவும் வேந்தர்க்கும் அமைந்து மெய்ம்மையொளி திகழ நிற்பது உய்த்துணர்ந்து கொள்ளப்படும்.

இதுகாறுந் தான் நின்றொழுகிய அல்வழியின் நீங்கிச் சைவமாகிய நல்வழியில் நிற்கின்றானாகலின், பாண்டி வேந்தன் நெடிது ஓங்கவே அருச்சனை வழிபாடுகள் நிலைபெற நடக்குமென்றும், நிலைபெறு மென்னாது "மூளும்” என்றதனால், உலகமெங்கும் அவ்வழிபாடு பரவி நிலைபெறுமென்றும் கூறினா ரென வறிக. இவற்றின் நிலைபேறு அரசனது காவல் முறைமைக்கண் தங்குகின்ற தென்பார், ''இவை காக்கும் முறைமையால்" என்றார்.

வேள்வியால் தண்மழையும், - மழையால் அருச்சனை வழிபாடும் நிலவுமென்பதும், எனவே வேள்வியும் அருச்சனையும் நிலை பெறுமாறு காத்தல் அரசுமுறையென்பதும், அம்முறையினைக் குறை வின்றிச் செய்யும் வேந்தன் வாழ்தல் வேண்டும் மென்பதும் பிள்ளையார் உரைத்தருளிய மெய்ம் மொழியின் கருத்தாதல் அறிகின்றாம் , மற்று, அசை நிலை. வேள்வியும் மழையும் காரணமும் காரியமும் மாய் நின்று, அருச்சனையாகிய பயனை முடித் தமைதலின் "வேள்வி நற்பயன் வீழ்புனலாவது" என்று எடுத்துரைத்தாரென வறிக.

இனி, நிறுத்த முறையே, "ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே சூழ்க" என்ற பாசுரப் பகுதிகட்கு ஆசிரியர் பேருரை வகுத்தருளுகின்றார்.

உரை :- ஆழ்க தீயது ஒன்று ஓதிற்று - ஆழ்க தீயது எனப் பிள்ளையார் திருவாய் மலர்ந்தருளியது; அயல் நெறி வீழ்க என்றது - சைவத்துக்கு அயலதாகிய தீநெறி வீழ்க என்பது குறித்து நின்றது; வேறு எல்லாம் - அதனின் வேறாகிய நெறிக்கண் நிற்கும் உயிர்களெல்லாம்; அரன் பெயர் சூழ்க என்றது - சிவபரம்பொருளின் திருப்பெயராகிய திரு வைந்தெழுத்தை எண்ணுக என்று ஓதியருளியது; தொல்லுயிர் யாவையும் - அனாதி நித்தியமாகிய உயிரனைத்தும்; அஞ்செழுத்து ஓதி - அத்திருவைந் தெழுத்தையோதி; வளர்க - சிவனருட் செல்வர் களாய் வளர்ந்தோங்குவார்களாக எ - று.

“ஆழ்க தீயது" என்று பிள்ளையார் அருளிச் செய்த பாசுரப் பகுதிக்குப் பொருள் இஃதென்பார், "ஆழ்க தீயதென்றோதிற்று அயல்நெறி வீழ்க என்றது, என்றார். எனவே, தீயதென்றது அயல் நெறியை யென்பதும், அஃதாவது சைவத்துக்கு அயலதாய்க் கிளைத்திருந்த புறச்சமயநெறி யென்பதும் பெற்றாம். ஆழ்க தீயதென்பதிலுள்ள ஆழ்க என்றது, எஞ் ஞான்றும் கிளைக்காதவாறு புதைந்து கெடுக என்னும் பொருண்மைத்து என்பார். "வீழ்க என்றது'' என்றார். ஆழ்ந்து நோக்கிச் செல்வதொன்றினை வீழ்க்கும் என்பது செந்தமிழ் வழக்காதல்பற்றி வீழ்க என்று பொருளுரைத்தாரென வறிக.

"கொழுங்கொடி வள்ளிக்கிழங்கு வீழ்க்கும் மே” (புற.109) என்று பிறரும் வழங்கியிருத்தல் காண்க. வீழ்க என்ற பொருளுரை ஆற்றலால் மேலெழாமையை வற்புறுத்தல் உணரப்படும். இவ்வேறுபாடு காட்டற் கன்றே, ஆசிரியர், "வீழ்க தண்புனல்” என்ற திரு மொழிக்கு "வீழ்புனலாவது " என வேறு வாய் பாட்டால் பொருளுரைப்பாராயினதூஉமென வறிக.

"எல்லாம் அரன் நாமமே சூழ்க" என்றது, சைவ சமயத்தின் வளர்ச்சி குறித்து நிற்றலின், தீயதென்பது அதற்கு அயலதாகிய சமயத்தைக் குறித்து நிற்பது இனிது பெறப்படுதலின், அதனையெடுத்தோதாது, "அயல்நெறி” என்று உரைத்தொழிந்தார். இனி, அஃது அரன் நாமத்தைச் சூழாது சைவத்துக்கு மாறாய வற்றைச் சூழ்ந்து, அதற்கிடனாகிய வைதிக நெறியை யிகழும் தீமையுடைமையின், "தீயது'' என்றார்; ''வைதிகத்தின் வழி யொழுகாதவர், கைதவம் முடைக் காரமண்தேரர்" (ஆல். 2) என்றும், "மண்ணில் மறையோர் மருவு வைதிகமும்” (வீழி.6) என்றதனால் வைதிக மின்னதென்றும் பிள்ளையார் ஓதுதல் காண்க. அரன் நாமத்தைச் சூழாது பிறவற்றை யவர்கள் சூழ்ந்தன ரென்றற்கு, "குண்டமணராகி யொரு கோலமிகு பீலியொடு குண்டிகைபிடித்து, தெண்டிசையுமில்லதொரு தெய்வ முளதென்பர்'' (வீழி.10) என்று ஓதுதலாலறியலாம். சைவம் வேத நெறிப்பட்டதென்பது, ஆசிரியர், "விண்ணின் பயனாம் பொழி மழையும் வேதப்பயனாம் சைவமும் போல்" (சண்டே . 9) என்றும், 'வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறைவிளங்க" (ஞானசம். 1) என்றும் உரைப்பது காண்க. இனி, பிள்ளையாரால் காணப்பட்ட சமணர் பலரையும் "பொல்லா மனசமணர்" (கொடுங், 10) என்றும், ''நீதியறியாதார் அமண்கையர்" (புள் . ஆல. 10) என்றும், "கோது சாற்றித் திரிவார மண்குண்டர்" (சோற்று. 10) என்றும், "வெஞ்சொல் தஞ்சொல்லாக்கி நின்ற வேடமிலாச் சமணும்" (நெடுங்களம். 10) என்றும், ''பறிகொள் தலையினார் அறிவதறிகிலார்'' (வீழிமிழலை 10) என்றும் ஓதுதலின், அவர் மேற்கொண்டொழுகிய நெறியினைப் பிள்ளையார், "தீயது" என்றாரென்றலு மொன்று.

இனி, எல்லாம் எனப் பிள்ளையார் அருளிய திருமொழிக்குப் பொருள் கூறுவார் ஆசிரியர், ''வேறெல்லாம்" என்று உரைக்கின்றார். எல்லாம் என்றது சமண சமய மொழிந்த ஏனையெல்லாச் சமயங்களையும் எஞ்சாமல் தழுவி நிற்பது பெறப் படும். அவற்றைப் பிற எல்லாம் என்னாது வேறெல் லாம் என்று சிறப்பித்ததனால், சமண சமயத்தின் வேறாய், சைவத்திற் பிறவாய் நிற்கும் பல்வகைச் சமயங்களும் குறித்தவாறு உணரப்படும். சைவத்தைப் போல் வேத நெறியைத் தழுவி நெறியினும் முடிபிலும் வேறுபடும் பிற சமயங்கள், வேதநெறியினை அறவே மேற்கொள்ளாத சமண்சமயத்திற்கு வேறாதலின், இவ்வாறு தெரித்தோதல் வேண்டிற்று. எவ்வாற் நானும் இயைபில்ல தனையே வேறு என்ற சொல்லாற் சுட்ட வேண்டுமென்பது ஆசிரியர்க்குக் கருத்தால், அப்பூதியடிகள் தாம் நிறுவிய தண்ணீர்ப் பந்தர் முதலியவற்றிற்கு இட்ட பெயரைக் கண்டு நாவரசர், 'நும் பேர் எழுதாதே, வேறொரு பேர் முன்னெழுத வேண்டிய காரணம் என் கொல்" என்றார்க்கு, வேறு என்ற சொல்லாற்றலால் மிக வெகுண்ட அப்பூதியார், "மன்னவன் சூழ்ச்சி திருத் தொண்டின் உறைப்பாலே, வென்றவர் தம் திருப் பேரோ வேறொரு பேர்,'' என்று உரைப்பதனால் இனிது விளங்கும். தீயது எனப் பிள்ளையார் பொதுவாய்க் கூறினாரேனும், வேதவழக்கொடு படாத வேறு சமயம் பலவும் அதனால் அடக்கிக் கொள்ளப்படும். வேதத்தை ஓரொருகால் மேற் கொள்வதும் ஓரொருகால் கொள்ளாதொழிவதும் உடைய தார்க்கிகரும் பிள்ளையாரால் ஒரோவழி மறுக்கவும் படுகின்றனர்; தருக்கமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல், "இடுக்கண் வருமொழி கேளாதீசனையே ஏத்துமின்கள்" (கோளிலி . 10) என்று ஓதுவது காண்க.

"அரன் நாமமே சூழ்க' என்ற மெய்ம்மொழியில் நாமம் என்றது "நமச்சிவாய'' என்பதனை. இத் திருவைந்தெழுத்தினையே பரமனுக்குத் திருநாமம் என்பது. பிள்ளையார் தாமே, "நாதன் நாமம் நமச்சிவாயவே' (பொது. நமச்.1) என்றும், திருநாவுக் கரசர், "எந்தையார் திருநாமம் நமச்சிவாய" என்றும் ஓதியிருத்தலால் இனிதுணரப்படும். சூழ்தல், நினைத் தல். உயிர்கள் யாவும் உணருந்தன்மையுடையவை யாதலின், அவை தம் முணர்வின்கண் உணர்ந்து ஓதியுய்தற்குத் துணையாவது அத்திருநாமமே யென்பார், ''அரன் நாமமே சூழ்க'' என்றார். பிறாண்டும், "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது'' என்று பிள்ளையார் ஓதுவது காண்க. இப்பொருண்மொழி, உயிர்கள் உய்தி பெறுதற்பொருட்டு வழங்கியதொரு பேரருள் நெறியாதலை வற்புறுத்துவார், ஆசிரியர், இதற்கு உரை கூறலுற்றுத் "தொல்லுயிர்யாவையும் வாழி அஞ்செழுத்தோதி வளர்கவே" என்றார். தாம் அறிவுறுக்கும் மெய்ந்நெறிச் செம்பொருளாகிய இதனையறிந்து கடைப்பிடித்தற்குரிய உயிர்கள் அனாதி நித்தியமாதல் பற்றித் "தொல்லுயிர்" என்றும், அவ்வுயிர்வகை பலவும் அடங்க, "யாவையும்'' என்றும், இத்திருநாமம் நெஞ்சில் நிலவாதவழி, வாயாற் பிற பொருளில் மொழிகளைப் பேசிப் பிறப் பிறப்புக்களை எய்துவித்துக் கொள்பவாகலின், நெஞ்சின் செயலு மகப்பட, "ஓதி யென்றும் கூறினா ரென வுணர்க.

வாயால் ஓதுந்திறம் நெஞ்சம் சூழ்தலானாம் என்பது பற்றி இவ்வாறோதின ரென்றலுமொன்று. ''துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும், நெஞ்சம் நைந்து நினைமின்'' என்றோதிய பிள்ளையார், காதலாகி என்ற திருப்பாட்டில் 'ஓதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது' என்று ஓதுதலாலும், சிவஞான போதத்து ஒன்பதாம் சூத்திரத்தில் "விதியெண்ணும் அஞ்செழுத்தே'' என்று ஒதிய மெய்கண்டதேவர், தாம் உரைத்தருளிய பொழிப்பின்கண் "விதிப்படி உச்சரிக்க" என்றே யுரைத்தலாலும், ஓதுதல் என்ற தொழில் நெஞ்சின் நினைத்தற்றொழிலும் அகப் படுத்து நிற்றல் துணியப்படும். இக்கருத்தே, ஈண்டுப் பிள்ளையார் "சூழ்க” என்றதற்கு ஆசிரியர், "ஓதி வளர்க" என்றுரைத்த உரையின்கண்ணும் விளங்கி நிற்றல் தெளியப் படும். வாழி, அசைநிலை. ஆயினும் அஃது ஈண்டு, ஆசிரியர்க்கு அத்திருவைந்தெழுத்தின் பால் உள்ள ஆராவன்பினை வெளிப்படுத்தி, அதனால் உயிர்கள் பெறக் கடவதோர் ஆக்கத்தினை உணர்த்தி நிற்கிறது. திருவைந்தெழுத்தை ஓதினோர் தாம் அரனுக்கு அடிமையென்றுணர்ந்து அத் திருவைந்தெழுத்தாலமைந்த அவன் திருமேனியை இதயத்தே எழுந்தருளவித்தருச்-சித்தும் குண்டலியில் ஒமித்தும் புருவநடுவே கண்டு தியானித்தும் சிவ போகப் பேரின்பத்தே திளைத்தாடிச் சிறப்பரென்பது சான்றோர் முடி பொருளாதலின் 'ஓதுக" என்றே யொழியாது "ஓதி வளர்க" என்று ஆசிரியர் உரைத் தருளுவாராயினரென வுணர்க.

இனி, அயல் நெறியின் நீங்கிச் சிவத்தைச் சாரும் உயிர்சார்தற் கேதுவாகிய சிவஞானம் விளங்கிய வழியும், பண்டைப் பயிற்சியால் அந்நெறியினை வேம்புதின்ற புழுப்போல நோக்கிற்றையே நோக்கித் துயருறுமாதலின், அது நீக்குதற்கு ஓதியுய்க என்பார், "ஓதி வளர்க" என்றாரென்றுமாம்.

இனி, நிறுத்தமுறையானே பிள்ளையார் மொழிந்தருளிய "வையகமுந்துயர் தீர்க்கவே" என்ற பாசுரப் பகுதிக்கு ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள் பேருரை வகுக்கின்றார்.

உரை :- சொன்ன - மேலே திருவாய் மலர்ந் தருளிய "வாழ்க அந்தணர்" என்றற் றொடக்கத்துத் திருப்பாசுரத்து ; வையகமும் துயர் தீர்க்கவே என்னும் நீர்மை - வையகமும் துயர் தீர்க்கவே என்ற மெய்ம் மொழியின் கருத்து ; இகபரத்தில் - இம்மை மறுமை களில்; துயர்மன்னிவாழ் உலகத்தவர் - துன்பம் மிகுந்து வாழும் இவ்வுலகத்து மக்கள்; மாற்றிட - அத்துன்பங்களைப் போக்கி இன்பமெய்துவித்துக் கொள்ளற் பொருட்டு ; முன்னர் - முதற் பாசுரத்தி லேயே; ஞானசம்பந்தர் மொழிந்தனர் - எல்லாம் அரன் நாமமே சூழ்க அதனால் வையகமெல்லாம் துயர் நீங்கி வாழ்க என்று ஞானசம்பந்தப் பிள்ளையார் மொழிந்தருளினார் (எ - று)

உரை பெருகி நீட்டித்தலின், கடைப்பிடியும் இயைபும் தோன்ற, "சொன்னவையகமும் துயர் தீர்கவே,'' என்றார். "அரன் நாமமே சூழ்க," என்ற திருவுள்ளத்தால் , வையகமும் வாழ்த்தப் பெறும் அருமைப்பாடு நினைந்து "சொன்ன,'' எனச் சிறப்பித்தாரென்றலு-மொன்று. அயல்நெறி நின்றார் வீழ்க என்னாது, அந்நெறியே வீழ்க என்ற அருட்குறிப்பு, அரன் நாமமே சூழ்ந்து வாழும் மக்களேயன்றி ஏனையோர் வாழும் நிலவுலகுக்கும் சென்று, ஆங்கு வாழ்வார் தாமும் துன்பம் நீங்கி இன்பமெய்தி வாழ்க என்று கருதுதல் தெரிந்து, நமக்கு அறிவுறுத்துவார் ஆசிரியர், துயர்மன்னிவாழ் உலகத்தவர் அத்துயர் மாற்றி வாழ்தல் வேண்டி, "வையகமும் துயர் தீர்கவே,'' என்று அருளினார் என்று தெரிக்கின்றார்.

இனி, ''வையகமும்,'' என்ற சொல், ஆகு பெயரால் ஆண்டு வாழும் மக்களையே குறித்து நிற்கிற தென்பார், ''உலகத்தவர்,'' என்றும், இன்புறுக என்னாது "துயர்தீர்கவே,'' என்றதனால், உலகத்தவர் இருமையிலும் துன்பமே நுகர்கின்றனரென்றும், உரைத்தருளுகின்றார். இம்மை மறுமையென்ற இருவகை வாழ்விலும் உலகத்தவர் துன்பம்மிக்கு வாழ்வதால், அவர் துன்பம் நீங்கியுய்தல் வேண்டும் மென்ற திருவுள்ளத்தால் "துயர் தீர்க,'' எனப் பிள்ளையார் அருளிச் செய்தாராயிற்று. துயர் தீர்தலாவது, அத்துன்பம் எய்தியவழி, அதற்குப் - பரிதலும் பிறவும் செய்யாது அது தம்மைப்பற்றி நிற்கும் வினை மாசு கழுவவந்த மாண் பொருள் எனக்கொண்டு, துன்பம் பயக்கும் பிறவினைகளைச் செய்யாது தம்மைக் காத்துக்கொண்டொழுகலாம். அதனால், துயரொழிந்து உயிர்கட்குத் துன்பமின்றாம் என்பார், 'மாற்றிட'' என்றார். மாற்றுதலாவது, "இன்னாமை யின்ப மெனக்கொளி னாகுந்தன், னொன்னார் விழையும் சிறப்பு'' (குறள். 630) என்றாற்போல, துன்புறுப்ப வந்தவினையை வினை மாசு கழுவவந்ததாக மாறி நினைத்தல்.

இம்மையிலும் மறுமையிலும் ஒருவன் நுகரும் இன்பங்கள் நிலைபேறின்றிக் கழிந்து மேலும் பிறப் பிறப்புக்கட்கு ஏதுவாகிய வினைகளை விளைவித்துத் துன்புறுத்தலின், "இகபரத்தில் துயர் மன்னிவாழ் உலகத்தவர்" என்றார். மறுமைக்கண் நுகரும் இன்பத் துன்பங்கட்கு நிலைக்களன் மண்ணுலகமேயாதல் பற்றி, ''துயர் மன்னிவாழ் + உலகத்தவர்" என்றார். மன்னுதல், மிகுதல்.

இவ்வாறு துயரிலே கிடந்து வருந்தும் உயிர்கள் அதனின் நீங்கியுய்தல் வேண்டுமென்ற அருளுள்ளத் தால் இவ்வுலகத்தவர் நினைக்கப்பட்டமையின், துயர்க்கேதுவாகிய வினைகளின் நீங்கி, இறைவன் திருவடியை வழிபட்டு வினையின் நீங்கி இன்புறுவர் என்பது கருதி, முதற்பாசுரத்தேயே பிள்ளையார் இதனை மொழிந்தருளினாரென்பார், ''முன்னர் ஞானசம்பந்தர் மொழிந்தனர்,'' என்றார். ஞான சம்பந்தமுடையராதலால், ஞானத்தால் சிவபரம் பொருளின் திருவருணெறி நின்றாரேயன்றி, நில்லாரும் பின்னர்த் தெளிந்து நிற்பர் என்னும் திருக்குறிப்போடு "முன்னர் மொழிந்தனர்" என்ப தொரு நயம் தோன்ற நிற்றல் காண்க. வினை நீக்கத் துக்கு இறைவன் திருவடி வழிபாடே ஏற்ற சாதனமாவதென்பார் பிள்ளையார்,

என்றும்,

என்றும்,

என்றும் பல படக் கூறித் தெருட்டுவது காண்க.
------------------

13.சேரமான் பெருமாள் பிரபந்தங்கள் [§]

சேரமான் பெருமாள் அருளிய பிரபந்தங்களைப் பற்றிச் சில கூறுதற்குமுன் அவர் வரலாற்றைப் பற்றிச் சிறிது கூறுவது முறையாகும். திருத்தொண்டர் புராணம் ஒரு பெரிய யாறு போல்வது. அவ்வாறு கயிலை மலையில் தோன்றி மண்ணிடையே பல நாயன்மார்களுடைய வரலாறு களாகப் பிரிந்து சென்று சிவ பரம்பொருளின் திருவருட் கடலில் சென்று சேர்கிறது. இதன் தோற்றுவாய் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாறாகும். இவ்வரலாறு திருமலையில் தோன்றித் தில்லை வாழந்தணர் புராணம் முதலாக வெள்ளானைச் சருக்க மீறாகப் பல ஆறுகளாகப் பிரிந்து சைவ வுலகில் பாய்ந்து சைவப் பயிரை விளைவித்துச் சென்று திருவருட் கடலையடைவதைக் காண்கின்றோம். இவற்றுள் ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் என்ற இருவர் புராணங்களாகிய யாறுகள் பெரியனவாகும். இவை தம்முள் கூடியும் பிரிந்தும் செல்வதோடு வேறு சிலவற்றோடு கலந்து பின் பிரிந்து செல்வதோடு வேறு சிலவற்றோடு கலந்து பின் பிரிந்து செல்கின்றன.
---
[§] திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீன மஹா சந்நிதானத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு.

சுந்தரமூர்த்தி சுவாமிகளின் வரலாறு மூலநதியாய்ப் படர்ந்து ஏயர் கோன் கலிக்காமர், சேரமான் பெருமாள் என்ற இருவர் வரலாறுகளுடன் கலந்து ஓடித் திருக்கயிலாயத் தையே அடைகிறது. கிழக்கே கடற்கரையில் தோன்றிய ஸ்ரீ சுந்தரர் வரலாறாகிய யாறு, மேற்கே சேர நாட்டில் தோன்றிய சேரமான் பெருமாள் வரலாறாகிய யாறு கிழக்கே ஓடிவந்து திருவாரூரில் தன்னோடு கலக்கக் கலந்து பாண்டி நாடெல்லாம் பாய்ந்து, சோழ நாட்டிற்கே திரும்பப் போந்து, மேற்கே சேர நாட்டிற்குச் சென்று, மீட்டும் திருவாரூருக்கு வந்து, பின்னரும் அம்மேலை நாட்டிற்கே சென்று, சிவனருட் கடலில் கலந்து ஒன்றுபடுகிறது. இவ்யாறுகளின் வரவும், இவை கொணரும் வளங்களும் நம் தமிழ்நாட்டிற்கு வழங்கிய நலத்திற்கும் அதனால் சைவ மக்கள் பெற்றுள்ள மேம்பாட்டிற்கும் அளவு காண்பது முடியாத செயலாகும்.

சேரமான் பெருமாள் இற்றைக்குச் சுமார் ஆயிரத்து நூறு ஆண்டுகட்கு முன் நம் நாட்டில் இருந்து ஆட்சிபுரிந்த அரசர் பெருந்தகையாகும். இவர் பெயர் பெருமாள் கோதையென்பது. சிவ வழிபாட்டில் இவர் இளமை முதலே ஊன்றிய உறுதி படைத்தவர்; செங்கோற் பொறையன் என்னும் சேர வேந்தனுக்குப் பின் சேரநாட்டிற்கு முடியுடை மன்னரானவர்; சிவபெருமான் அன்பராகிய பாணபத்திரர் பொருட்டுத் திருமுகம் விடுக்கப் பெற்றவர்; சிவபெருமான் திருவருள் காட்டத் திருவாரூரையடைந்து ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமி களைக் கண்டு அவரோடு பிரியா நட்புற்றவர். இந்நட்பின் பெருமை மிக்க சிறப்பானது. இதனைப் பின்னர்க் கூறுகின்றாம். இவர், சுந்தரமூர்த்திகளைத் தம் சேர நாட்டிற்கு அழைத்துச் சென்று பல நாள் தம்மோடு இருத்தி அவர்க்குப் பணி செய்யும் பேறு பெற்றவர்; மறுபடியும் அச் சுந்தரமூர்த்திகள் தாமே தம் நாட்டிற்கு வந்து பரமன் விடுத்த வெள்ளானை மீது கயிலைக்குச் செல்வதுணர்ந்து, அவர் யானைக்கு முன் தம் குதிரை மீதேறிக் காவல் புரிந்து செல்லும் கழிநலம் பெற்றார் ; கயிலையையடைந்து சிவ பெருமான் திருமுன் தாம் பாடிச் சென்ற திருவுலாப் புறத்தை அரங்கேற்றிச் சிவகணங்கட்குத் தலைவராம் செம்மை நிலை எய்தியவராவர்.

இனி, இவர் பாடியருளிய பிரபந்தங்கள் மூன் றாகும். அவை பொன்வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்மணிக்கோவை, திருக்கயிலாய ஞானவுலா என்பன. இவற்றுள் பொன்வண்ணத் தந்தாதி, தில்லையில் பாடி நடராசப் பெருமான் திருப்படிக் கீழ் அரங்கேற்றம் செய்யப்பெற்றது ; திருவாரூர் மும்மணிக்கோவை திருவாரூரில் ஸ்ரீ சுந்தரமூர்த்திகள் கேட்க அரங்கேற்றம் செய்யப் பெற்றது ; திருக்கயிலாய . ஞானவுலா திருக்கயிலாயத்தே சிவபரம்பொருளின் திருமுன் அரங்கேற்றம் செய்யப்பெற்றது. இவற்றின் நலம் காண்பதற்கு முன், நாம் இவற்றைச் செய்த ஆசிரியராகிய சேரமான் பெருமாளின் மனப் பான்மையைத் தெரிந்துகொள்வது நலமாகும். சான்றோர் செய்த நூல் நலம் காணப்புகுவோர் முதற்கண் அந்நூலைச் செய்த அச்சான்றோர் மனப் பான்மையைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று பெரியோர் கூறுவர்.

நூலாசிரியன் மனப்பான்மையை யுணர்தற்கு இருவகைக் கருவிகள் உண்டு. அவை அகக்கருவி, புறக்கருவி என்பன. அகக் கருவி அவர் செய்த நூலும், புறக்கருவி அவர் வரலாறுமாகும். நம் நாட்டுச் சான்றோர்களுள் பலருடைய மனக்கோளையறி தற்குப் புறக்கருவி போதிய அளவு கிடைப்பதில்லை. அகக்கருவியே பெரும்பாலும் கிடைப்பது. அதனால், நாம் அச் சான்றோர்களின் மனப்பான்மைகளுள் ஒரு பகுதியே காண முடிகிறது. மிகச் சிலர்க்கே இரு கருவிகளும் அமைந்திருக்கின்றன. அச் சிலருள் நம் சேரமான் பெருமாள் அருட்கருத்தை இருவகைக் கருவிகளையும் கொண்டு காண்பது இயல்கிறது.

புறக்கருவியாகிய இவரது வரலாறு தெய்வக் கவிநலம் சிறந்த சான்றோரால் செப்பமாக நமக்கு வழங்கப்பட்டுளது. சேக்கிழார் பெருமான் இவர் வரலாற்றைச் சேரமான் பெருமாள் நாயனார் புராணம், வெள்ளானைச் சருக்கம் என்ற இரண்டு பகுதிகளில் தெய்வமணக்கும் செய்யுட்களால் தீவிதாகச் செப்பியிருக்கின்றார். அச் செய்யுட்கள் நம் கருத்தை மிக விரைவில் ஈர்த்துக் கொள்ளும் சிறப்பு வாய்ந்தவையாதலின், நாம் மிக்க விழிப்போடு சென்று அவற்றின் வாயிலாகச் சேரமான் பெரு மாளின் திருவுள்ளக் கிடையைத் தேர்ந்து கொள்ள வேண்டும். இன்றேல், அத் தெய்வக் கவிகளின் தீஞ்சுவை நம் கருத்தை விழுங்கிக் கொள்ளும். சேரமான் பெருமாள் அரசராதற்கு முன் திரு வஞ்சைக்களத்தில் சிவபரம்பொருட்குத் தொண்டு புரியும் திருப்பணியில் ஈடுபட்டிருக்கின்றார். அக் காலத்தே அவர் உலகியல்பும் அரசியல்பும் ஆராய்ந்து தெளிந்து சிவத்தொண்டிலேயே உறைத்து நிற்கின் றார். அவர் இதனைச் சேக்கிழார் பெருமான், ''உலகின் இயல்பும் அரசியல்பும் உறுதியல்ல என வுணர்வார்" என்று கூறுகின்றார். இவ்வணர்வு நெஞ்சிலேயே நின்றொழியாது செயலின்கண்ணும் உருக்கொண்டு விளங்குகின்றது. நாடோறும் இவர், "புலரியெழுந்து புனல் மூழ்கிப் புனித வெண்ணீற் றினும் மூழ்கி", "திருப்பாட்டும் ஒருமை நெறியின் உணர்வுவர ஓதிப் பணிந்து ஒழுகுவது இக்கருத்தை வற்புறுத்துகின்றது. மேலும், இவர், செங்கோற் பொறையன் இறந்ததும் அரசுரிமை யெய்தியபோது, அமைச்சர் வந்து அரசேற்க வேண்டுங்கால், அரசின் மேல் விருப்பம் வையாது, "இன்பம் பெருகும் திருத்தொண்டிற்கு இடையூறாக இவர் மொழிந்தார்" என்று நினைந்து நிற்கின்றார். அமைச்சர் அரசுமுறை சிவ வழிபாட்டிற்கு இடையூறாகாது என்று பல படியாகக் கூறக்கேட்டு, "அன்பு நிலை வழுவாமை அரசு புரக்கும் அருள் உண்டேல்'', இறைவனை இடை பெற்றிடுவேன் என்று சொல்லி ஆண்டவனை வேண்டி, யாரும் யாவும் கழறுவன அறியும் அறிவு வன்மை பெற்றுக் கழறிற் றறிவாராவது இவருடைய திருத் தொண்டின் உறைப்பை நன்கு வற்புறுத்து வதைக் காண்கின்றோம். இவ்வாறு இறைவன் திருவருட் குறிப்பால் அரசு முறை ஏற்கும் இவரது மனப்பண்பு, சிவநெறிக்கண் ஊன்றி நிற்கும் ஒப்புயர் வற்ற மெய்யுணர்வினை நமக்குக் காட்டுகிறது. இவரும் பின்பு தாம் பாடிய பொன்வண்ணத் தந்தாதியில், "தனக்குன்றம்மா வையம் சங்கரன்தன் அருள் அன்றிப் பெற்றால், மனக்கென்றும் நெஞ்சிற் கடையா நினைவன்" (43) என்றும், "நானிலம் ஆளினும், நான்மறை சேர்மையார் மிடற்றான் அடிமறவா வரம் வேண்டுவனே' (98) என்றும் தம் மனக்கோளை விளங்க வுரைக்கின்றார்.

இவர் அரங்கேற்று உலா வரும் போது உடல் முழுதும் உவர் மண்ணூறி வெண்ணீறு சண்ணித்தாற் போல் ஒரு வண்ணான் தோன்றக்கண்டு, "உழையிற் பொலிந்த திருக்கரத்தார் அடியார் வேடம்" என்று நினைந்து அவனுடைய காலில் வீழ்ந்து வணங்கு வதும், அவன் மனம் மருண்டு, "அடியேன் அடி வண்ணான் என்று அஞ்சி நடுங்கி நின்றபோது, ''அடியேன் அடிச்சேரன்'' என்று மொழிந்து, "திருநீற்று வார வேடம் நினைப்பித்தீர்' என்று அவனை இனிது செல்ல விடுத்தலும், இவர்க்குச் சிவ பரம்பொருளின் மேல் இருந்த உண்மையன்பினை, அடியார் வழிபாட்டால் தெரிய விளக்குகின்றன. திருநீற்று வார வேடத்தில் இவர்க்கு இருக்கும் பேரன்பினை, அத்திருவந்தாதியில்,

என்று குறிக்கின்றார்.

இவர் அரசு கட்டிலேறி அரசுபுரிந்து வருங்கால், இவர் மனம் சிவ வழிபாட்டில் சிறிதும் திரியவே இல்லை . தாம் தம் மனம், சொல், செய்கை என்ற மூன்றையும் சிவ வழிபாட்டில் ஒன்றுவித்து, - நாளும் சிவபெருமான் திருவடிச் சிலம்போசை தமது சிவ பூசைக்கண் தம் திருச்செவியாரக் கேட்டுச் சிறந்து வருகின்றார். இவர் எண்ணமெல்லாம் சிவபெருமான் திருவடியிலேயே ஒன்றி நிற்கின்றன. இவற்றைச் சேக்கிழார் பெருமான், நன்கு கண்டு, நம் சேரமானுடைய அறிவு முற்றும், 'நீடும் உரிமைப் பேரரசால் நிகழும் பயனும் நிறைதவமும், தேடும் பொருளும் பெருந்துணையும் தில்லைத் திருச்சிற்றம் பலத்துள், ஆடுங் கழலே எனத் தெளிந்த அறிவு' என்றே அறிவிக்கின்றார். நம் சேரமானும் தம் திருவந்தாதியில், இதுவே தம் கருத்து என்பாராய், "நெஞ்சமே எரியாடி எம்மான், கடல் தாயின் நஞ்சம் உண்ட பிரான் கழல் சேர்தல் கண்டாய், உடல்தான் உள பயனாவ சொன்னேன் இவ்வுலகினுள்ளே" (13) என்றும், "முனியே முருகலர் கொன்றையினாய், என்னை மூப்பொழித்த கனியே, கழலடியல்லால் களைகண் மற்றென்றும் இல்லேன்'' (40) என்றும் கூறுகின்றார். இவ்வண்ணமே, நம்பியாரூரரை நினைப்பிக்கும் கருத்தால், பரமன் தன் திருவடிச் சிலம்போசையை ஒருநாள் இவர்க்குக் காட்டத் தாழ்த்தபோது, இவர், "அடியேன் என்னோட பிழைத்தது'' என்று உரைப்பவர், "ஆசையுடம்பால் மற்றினி வேறு அடையும் இன்பம் யாது" என்று கூறுகின்றார்.

சிவ வழிபாடு புரியும் தமக்குச் செங்கோலரசு தந்து, திருவடிச் சிலம்போசை காட்டிப் பரமன் அருள் செய்வது தம் திருத்தொண்டில் வழாதிருத் தற்கே என்ற கருத்து இவர் கருத்தில் நிலவிய வண்ணம் இருக்கிறது. பாணபத்திரர் திருமுகப் பாசுரம் பெற்று வந்து காட்டக் கண்டு அளவிலா இன்பத்தில் திளைத்த இவர் தம் அரசியற் பண்டாரத்தைத் தந்து, அரசுரிமையினையும் உடன் தருகின்றார். பாணபத்திரர் அமைதி கூர்ந்து, "அரசே, அரசு கோடற்க ஆணையில்லை" என்று உரைக் கின்றார். இவர் உடனே, தாம் அரசேற்றது பரமன் திருவருட் குறிப்புக் கொண்டேயாதலின், அதனை ஈவதும் அக்குறிப்பினாலன்றிக் கூடாதே; தாம் செய்தது தவறாயிற்றே என்று நினைந்து அஞ்சி அடங்குவார், "இறைவராணை மறுப்பதற்கு அஞ்சி பிசைந்தார்'' என்று சேக்கிழார் பெருமான் தெரிவிக் கின்றார். இச் செயலால் சேரமான் கருத்தில் ஒரு நல்லுணர்வு பிறந்தமை புலனாகிறது. தன்னை நினைந்து வழிபடுபவர்க்கு ஆண்டவன் வேண்டுவன வற்றைத் தந்தும் உணர்த்தியும் வழுவாவாறு திருத்திப் பணி கொள்கின்றான் என்பதைத் தெளிகின்றார். ''அரசு ஆணையில்லை '' என்ற பாணபத்திரர் விடை, உமக்கு அரசு நல்கிய இறைவன் அதனை நெகிழ்த்துப் பிறர்க்குக் கொடுத்துவிட ஆணையிடவில்லை என்று இவரைத் தெருட்டுகிறது. இவர் தெளிந்து அமை கின்றார். இதனைக் குறிப்பாக இவர் தம் திருவந்தாதியில், "தாமே அருள் செய்து கொள்வர் தம் பல்பணியே" (9) என்றும், "தாழ்சடையான் வஞ்சம் கடிந்து திருத்திவைத்தான் பெருவாகையே'' (11) என்றும், "புண்ணிய சூலத்தெம்மான், திருந்திய போது அவன் தானே களையும் நம் தீவினையே" (17) என்றும் இயம்புகின்றார்.

இனி, வண்ணான் தோற்றத்தைக் கண்டு அடியார் வேடம் எனக் கருதியதில் இருந்தே இவர்க்கு அடியார் பால் இருந்த அன்பின் மிகுதி நன்கு தெரிகிறது; ஆயினும் நம்பியாரூரர் பொருட்டுப் பரமன் சிலம்போசை தாழ்த்தது தெரிந்ததும், பரமன் அடியவர்பால் கொள்ளும் அன்பின் திறம் பெரிதும் விளங்கிவிடுகிறது. அப்போது இவர், நம்பியாரூரரைத் தாமும் கண்டு பணியவேண்டுமென்று வேட்கை கொள்கின்றார், "என்னே அடியார்க்கு இவர் அருளும் கருணை யிருந்தவாறு " என்று வியப்புண்டா கிறது. அதனால் அடியார் இணக்கம் தமக்குப் பேரின்பம் தரும் என்பது தெளிவாகிறது. அது குறித்துத் திருவாரூர் நோக்கி வருபவர் தில்லையம்பதி வந்து, சிவபரம்பொருளைக் கண்டு பேரின் பெய்து கின்றார். அங்கே தங்கியிருக்கையில் தமது நினைவு செயல் சொல் முழுதும் சிவ பரம்பொருளிடத்தே ஒன்றி நிற்பது உணர்ந்து பொன்வண்ணத் தந்தாதியைப் பாடியருளி அரங்கேற்றுகின்றார். அதன்கண் தம் கருவி கரணங்கள் சிவமயமாதலை உணர்ந்து, எடுத்து எடுப்பிலேயே, "தன்னைக் கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கு, பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ் வண்ணம் மேனி பொலிந்திலங்கும்” என்று புகலுகின்றார். மேலும், தாம் நம்பியாரூரர் என்னும் பெருந் தொண்டரைக் காண வந்திருக்கும் நினைவு நூன்முடிவில் எழ, அவர் காட்சி தமக்குச் சிவபோகத்தைத் தரும் என்று இவர் துணிகின்றார். அத்துணிவை,

என்று வெளிப்படுத்துகின்றார்.

இவ்வந்தாதியின்கண் இவர், தாம் இவ்வந்தாதி யைப் பாடிய காரணம், தம் கருவி காரணங்களைச் சிவத்தொண்டில் ஈடுபடுத்துதல், உடல் வாழ்வின் உயர்வின்மை, தொண்டு செய்யும் முறை, தொண் டினை யேற்றும் பரமனுடைய அருமை நிலை, அம்மையப்பனாய் எழுந்தருளும் திறம் , அட்ட மூர்த்தியாய் அமைத்தல், அகப்பொருட்டுறைகள், இங்கிதப் பாட்டுக்கள், இனிய சொல்லாடல்கள், இனிய காட்சிகள் எனப் பல பொருள்கள் பொதிந்து கிடக்கின்றன. அவற்றின் நலம் காண்டற்கு முயல்வோமாயின், இச் சொற்பொழிவு மிக நீட்டிக்கு மாதலின், வகைக்கொன்று காட்டி மேற்செல்கின்றேன்.

இவ்வந்தாதி பாடிய காரணம் கூறுவார், ஏனையோர் போல நூலின் தொடக்கத்திலோ முடிவிலோ கூறாது இருபது பாட்டுகள் பாடிப் பின்பு கூறலுறுகின்றார். முதற்கண் தமக்குக் கவிபாடும் வன்மையில்லையென்றும், பிறர் உரைத்தவற்றை யுரைப்பின் அறிஞர் ஏலார் என்றும், தாம் சொல்லுவன புன் சொற்களே என்றும், அவற்றை ஏற்றல் வேண்டும் என்றும் உரைப்பார்,

என்கின்றார். இத்துணைக் குறைபாடு கூறிக்கொள் வோர் பாடாதொழியலாமே என எழும் வினாவிற்கு விடை கூறுவார் போல், "அமரர் குழாம் நின்னைப் பொருள் மொழிகளால் போற்றிப் பரவக்கண்டேன்; அக்காட்சி என்னையும் பாடுமாறு ஊக்க அடி யேனும் பாடலுற்றேன்; மதி தோன்றி நிலவு பொழியும் மிடத்து மின்மினியும் ஒளிவிரிகிறதன்றோ '' என்பார்,

என்று விளம்புகின்றார். இவ்வாறு பாடிச் செல்பவர் எண்பது பாட்டுகட்கு மேல் பாடிவிடுகின்றார். மேலே பாடுமிடத்துச் சிறிது சோர்வு தோன்றுகிறது.
அப்போது, அவர்,

என்று பாடுகின்றார்.

அவர் தம் கருவி கரணங்களைத் தொண்டில் ஈடுபடுத்தும் திறம் நம்மனோரை அத்தொண்டில் ஈடுபடச் செய்யும் அறவுரையாக இருக்கிறது.

இவ்வகையில் நம்மை நோக்கி,

என்று இசைக்கின்றார்.

உடல் வாழ்வின் உயர்வின்மையைப் பலவகை யால் தெளிவிக்கின்றார்.

இவ்வகையில், ஏனைப் பெரியோர்களைப் போலத்தான் இவரும் பல பாட்டுக்களில் விரித் தோதுகின்றார். உடல் வாழ்வு நீடித்ததன்று; பலவகை யாலும் தேய்ந்து தேய்ந்து இறுவது என்பார்.

என்று கூறுகின்றார். ஏனையோர், "வேத நூற் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேனும்'' என வய தொல்லையை நூறாகக் கூற, இவர், அதனைக் குறியாது, "வேண்டிய நாட்கள்'' என்பது இவரது உலகியலுணர்வு மிகுதியை விளங்கக் காட்டுகிறது.

இனி, உடல் வாழ்வின் புன்மை உணர்ந்த வழி ஒருவர்க்கு இறைவன் திருவருளில் ஒன்றி நிற்கும் பெருவாழ்வின்கண் ஆர்வ முண்டாவது இயற்கையே. அதனைப் பெறுதற்கு இறைவனை வழிபடுவதன்றிப் பிறிதில்லை . அவ்வழிபாட்டின் திறம் கூறலுற்ற நம் சேரமான் பெருமாள்,

என்றும்,

என்றும், தொழுதல், பணிதல், நினைதல், அருச் சித்தல் முதலியவற்றின் நலம் கூறுதலுற்று,

என்றும் விரியக் கூறுகின்றார். இந்நெறிக்கண் இவர் கூறுவன பலவாதலின் இம்மட்டில் அமைகின்றோம்.

இவ்வாறு நாம் தொண்டு புரிந்தவழி அதனை யேற்று நிற்கும் பரமனுடைய அருமையை இனிது ஒதுகின்றார். அடியார் ஏத்துவதைப் பரமன் மிக விரும்புபவன் என்பார், ''ஏத்துக் கொலாம் இவர் ஆதரிக்கின்றது" (7) என்று கூறுவதை நோக்க, பரமன் மிக எளியன் என்று நாம் கருதலாம். ஆனால், அதனை மாற்றி, அப்பரமன் மிக அரியவர்; அவர் தம்மை நினைப்பவர் நெஞ்சினும் கண்ணினும் நிலவுகின்றார்; ஆயினும் அவர் தன்மை நம்ம னோர்க்கு உணர்வது என்பார், 'திரிதவர் கண்ணுள்ளும் உள்ளத்தினுள்ளும் திரிதரினும், அரிதவர் தன்மை அறிவிப்பது" (9) என்று அறிவிக் கின்றார். மேலும் அவ்வருமைப் பாட்டிற்குச் சான்று கூறுவார், அப்பரமன் அட்டமூர்த்தியாய் நிற்பவர் என்று அருளுகின்றார். "அலையார் புனல் அனல் ஞாயிறு அவனி மதியம் விண்கால், தொலையா உயிருடம்பு ஆகிய சோதி" (15) என்றும், "பாதம் புவனி சுடர் நயனம் பவனம் உயிர்ப்பு, ஓங்கு, ஓதம் உடுக்கை உயர்வான் முடி , விசும்பே உடம்பு, வேதம் முகம், திசை தோள்மிகு பன்மொழி கீதம்" (19) என்றும், இவரது இந்நிலையையுணர்ந்து பரவுபவர் சிவ லோகம் பெறுவர் என்று கூறலுற்று, "தவனே உலகுக்குத் தானே முதல் தான் படைத்த எல்லாம், சிவனே முழுதும் [#]என்பார் சிவலோகம் பெறுவர்” (5) என்றும் உரைக்கின்றார். ( [#]என்பார் - என்று நினைந்து வழிபடுபவர்.)

இப் பரமனே மும்மூர்த்திகளாயும் அம்மையப்ப னாயும் விளங்குகின்றார் என்பதை,

என்றும்,

என்றும் கூறியருளுகின்றார். பிற நலங்களைப் பின்னர்க் காண்குதும்.

இனி இப்பரமன் அடியார்க்கு அருளும் திறத்தை, "உற்றடியார் உலகாள ஓர் ஊனும் உறங்கு மின்றிப், பெற்றமதாவ தொன்றேனும் பிரான்" (34) என்றும், "கள்ளவளாகம் கடிந்து அடிமைப்படக் கற்றவர்தம் உள்ளவளாகத் துறுகின்ற உத்தமன்" (78) என்றும்,

என்றும் எடுத்தோதுகின்றார்.

இவ்வியல்பினனாதலின், இப்பரமன்பால் பகைப்பொருள் அனைத்தும் பகை நீங்கி ஒன்றி நின்று நிலவுவதொன்றே அவனது பரமாந்தன்மையை உணர்த்துகின்ற தென்பார்,
"ஆர்க்கின்ற நீரும் அனலும், மதியுமை வாயரவும்
ஓர்க்கின்ற யோரும் உமையும், உருவு மருவும், வென்றி
பார்க்கின்ற வேங்கையும் மானும், பகலும் இரவு மெல்லாம்
கார்க்கொன்றை மாலையி னார்க்கு உடனாகிக் கலந்தனவே" (50)

என்றும், இவ்வடிவத்தே உலகு முழுதும் ஒன்றி நிற்கிறதென்றற்கு,

என்று இசைத்தருளுகின்றார். இவ்வியல்பால், "ஈசனோ டாயினும் ஆசையறுமின்' என்ற கொள்கை மிக்க துறவிகளும் இவர்பால் தீரா வேட்கையரா கின்றனர் என்பார், ''தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரே, அடங்கிய வேட்கை
அரன்பால் இலர்" (64) என்று அறிவிக்கின்றார்.

இவ்வகைக் கருத்துக்கள் நிரம்பிய இப் பொன் வண்ணத் தந்தாதியைத் தில்லையில் அரங்கேற்றி உள்ளம் சிறந்த இவர், திருவாரூர் சென்று நம்பி யாரூரரைக் கண்டு அவர் நட்புற்று உள்ளம் சிறக்கின்றார்.

சேரமான் திருவாரூரையடைந்து நம்பி யாரூரைக் கண்டபோது, ஆராக் காதலுற்ற அவர் அடித்தாமரையில் முதற்கண் வீழ்ந்து வணங்கு கின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான் "சந்த விரைத்தார் வன்றொண்டர் முன்பு விருப்பினுடன் தாழ்ந்தார்" என்றும், "முன்பு பணிந்த பெருமானைத் தாமும் பணிந்து வரவேற்றனர் என்றும் கூறுகின்றார். இவர் இருவர்க்கும் உண்டான நட்பின் நலத்தை சேக்கிழார் பெருமான் நிரம்ப எடுத்து இயம்பு கின்றார். இருவரும் ஒருவரையொருவர் பணிந்து தழுவிக்கொள்ளும் செயலை,

என்றும், "ஒருவர் ஒருவரிற் கலந்த உணர்வால் இன்ப மொழியுரைத்து மகிழ்ந்தார் என்றும் கூறுகின்றார். இவ்வாறே பின்பு நம்பியாரூரர் இறுதியில் சேர நாட்டிற்குச் சென்று சேரமானைக் கண்டபோதும், இருவரும் பணிந்த செயலை, "சேரர் பெருமான் எதிர் சென்று, தலை நாட்கமலப் போதனைய சரணம் பணியத் தாவல் பல, கலைநாட்டமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனரால்" என்றும், "சிந்தை மகிழும் சேரலனார் திருவாரூரர் எனுமிவர்கள், தந்தமணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய், முந்த எழுங் காதலின் தொழுது " தழுவிக் கொண்டன ரென்றும், "ஒருவர் ஒருவரிற் கலந்து குறைபாடின்றி உயர் காதல் இருவர்" என்றும் உரைக்கின்றார்.

இவ்வாறு நம்பியாரூரருடன் உயர் காதல் நண்பராகிய சேரமான் அவருடன் திருவாரூர்ப் பரமனைக் கண்டு பணிந்து வழிபட்டு அவர் பேரில் தாம் பாடிய திரு மும்மணிக்கோவையை, அந் நம்பியார் இனிது கேட்க அரங்கேற்றம் செய்கின்றார். அக்காலத்தே அதன் நன்மை இனிது விளங்க நம்பியாரூரரை அரசர் கேட்பித்தார் என்று கூறும் சேக்கிழார், "திரு மும்மணிக் கோவை நாவலூர் தம் முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்" என்றே கூறுகின்றார்.

இப்போது, நாம், இத்திரு மும்மணிக்கோவை யின் நலம் சிறிது காணலாம். இதன்கண் முப்பது திருப்பாட்டுக்கள் உண்டு. இவை யாவும் அகப் பொருள் துறையிலேயே அமைந்திருக்கின்றன. திருவந்தாதியிலும் ஐம்பது பாட்டுக்கள் இவ்வகத் துறையே பொருளாகக் கொண்டுள்ளன. இவ்வகத் துறையில், அகனைந்திணைக்குரியன சிலவும், கடவுள் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கத்தன பலவுமாகும். திருவந்தாதியில் வருவன பலவும் அகனைந்திணை யல்லாதவை யாதலின், அவற்றை முதற்கண் சிறிது காண்போம்.

ஒருத்தி சிவபெருமானைக் கண்டு அவன்பால் கருத்திழந்து, உடல் மெலிந்து வளைசோர்ந்து வருந்து கின்றாள். அவள் தோழி போந்து ''நீ இவ்வாறு வளையும் கலையும் இழந்து நிற்பதால் பிறர் இகழும் பழியுண்டாகும்; நம் பெண்மைக்குரிய சிறப்பும் போம்" என்று கழறிக் கூறுகின்றாள்;

என்று உரைக்கின்றாள். தன்னால் பழியாவதும், பெண்மை நலம் போவதும் ஆகூழும் போகூழுமாம் என்ற கருத்தை எடுத்தோதி,

என்று விடையிறுக்கின்றாள். இப்பகல் நிகழ்ச்சி அவள் நெஞ்சையலைப்ப, இரவில் சிறிது கண்ண யர்ந்து கனவு காண்கின்றாள். அக்கனவில் பரமன் பலி வேண்டிவரத், தான் பலியிட்டு மேனி வேறுபடுவதாகவும், தாயார் தடுப்பதாகவும், தன்னைப் பரமன் அப்போது வாவென அழைப்பதாகவும் கண்டு கண் விழித்து வருந்துகின்றாள். இச் செயலைச் சேரமான்,

என்று பாடிக் காட்டுகின்றார்.

இங்ஙனம் கனாக்கண்டு வருந்தும் இவள் மெலிவு கண்ட அன்னை மிகவும் மனம் நொந்து, மகளைப் பார்த்து,

என்று சொல்லி அவலிக்கின்றாள். இம்மகள் பின்பு தன் தோழியை நோக்கிப் பரமன் பால் தூதுவிடக் கருதி, “தோழி, நீ பரமனிடம் சென்று என் மனநிலை மொழிந்து அவன் கூறும் மொழி கேட்டு வருதல் வேண்டும்'', என்பாள்.

என்று மொழிந்து விடுகின்றாள்.

இஃது இங்ஙனமாக, மகளிர் இருவர் ஒரு சொல்லாடல் நிகழ்த்துகின்றார்கள். ஒருத்தி, "இறைவன் முதற்கண் செற்றது காமனையே" என் கின்றாள்; மற்றவள் ''காலனையே முதற்கண் செற்றார்'' என்று கலாய்க்கின்றாள். அவர்க்கு நடுவாக நின்ற ஒருத்தி நேரே பரமனையடைந்து உண்மை துணிய முயன்று, அவன் ஒன்றும் உரையாமை கண்டு உரைப்பாள்,

என்றுரைத்து மகிழ்கின்றாள். இப்படியே, பரமனுக்குப் பலியிடச் சென்ற பெண்ணொருத்தி நிகழ்த்திய சொல்லாட்டினை நம் சேரமான்,

என்று இன்புறப் பாடி நம்மை மகிழ்விக்கின்றார். இத்திருவந்தாதிக்கண் இத்தகைய பாட்டுக்கள் பலவுள்ளன.

இனி, திருவாரூர் மும்மணிக் கோவைக்கண் வரும் முப்பது திருப்பாட்டுக்களும் அகனைத் திணைக்குரிய பாட்டுக்களாகவே உள்ளன. களவு வழியொழுகிக் கற்புக்கடம் பூண்டு நிற்கும் தலை மக்கள் வாழ்வில் தலைவன்பால் பிரிவு நிகழ்கிறது. வினையே ஆடவர்க்கு உயிராதலின் அவன் பிரிவதும் அறமாகின்றது. பிரிந்து செல்பவன், தான் கார்ப்பருவ வரவில் வருவதாகக் கூறித் தலைமகனைத் தேற்றிச் செல்கின்றான். அவளும் அவன் தெளித்த சொல் தேறியிருக்கின்றாள். ஆயினும், பிரிவுத் துன்பம் அவளை மட்டில் வருத்தாமல் இல்லை. அவள் வருந்துவதும் தோழி தேற்றத் தேறுவதுமாக இருந்து வருகின்றாள். தலைவன் குறித்த கார்ப்பருவம் வருகிறது; அவன் வருகின்றானில்லை . அதனால் தோழி, தலைவி ஆற்றாளாவள் என்று எண்ணி,

என்று சொல்லி வருந்துகின்றாள். பின்பு தலைமகன் போந்து கூடி இன்புறுகின்றான். அவன் மறுபடியும் பரத்தையிற் பிரிந்தொழுகுகின்றான். அத்தகை யோன் ஒருநாள் தன் மனைக்கு வந்தபோது தோழி முதலாயினார் வாயில் மறுக்க, ஆற்றாமையே வாயி லாக வந்தடைகின்றான். அடைந்தவன் தலைவியைத் தீண்டினானாக, அவள் புலந்து,

என்று உரைக்கின்றாள். பரத்தையை உயர்த்துக் கூறும் கருத்தால், அவர்களை "பொய்யார் தொழலும் அருளும் இறைகண்டம் போல இருண்டமையார் பூணாது பொய்யன்பு பூண்டு பரவினும் பரமன் அருள் புரிவது போல, பொய்யே ஒழுகினும் அம்மகளிர் நின்னையேற்பர்; யாம் ஏலேம்; அவர் பாலே செல்க என்பது கருத்து. "கற்பு வழிப்பட்டவள் பரத்தையேத்தினும் உள்ளத்தூடல் உண்டு' என்பது தொல்காப்பியம். இவ்வாறு தலைவி தலைவனைப் புலந்து பரத்தையரை உயர்த்திக் கூறியது பரத்தைக்கு எட்டுகிறது. அவள் தலைவியைப் புறனுரைக் கின்றாள். அச்செய்தி தலைவிக்குத் தெரிகிறது. தலைவி வெகுண்டு, " பரத்தையர் ஒருவரல்லர், பலர் உளராயினும் தலைவன் எனக்கே உரியனாவான்; எப்படியெனின், ஒரு குளத்தில் பல்லாயிரம் ஆம்பல்கள் நெருங்க மலர்ந்திருப்பினும், தாமரை ஒன்று உளதாகிய வழி, அக்குளம் தாமரைக்குளம் என்றே உரைக்கப்படும்'', என்ற கருத்துத் தோன்றத் தன் தோழியை நோக்கி, பரத்தைக்குப் பாங்காயினார் கேட்ப,

என்று நவிலுகின்றாள்.

இத்திரு மும்மணிக்கோவைக்கண் வரும் திருப் பாட்டுக்கள் பலவும் சங்கத் தொகை நூற்களில் காணப்படும் கருத்துக்கள் பலவற்றை உட்கொண்டு நிற்கின்றன. நிற்கின்றன.

என்ற இம் மும்மணிக்கோவைப் பாட்டுக் குறுந்தொகையில் வரும்.

என்ற பாட்டை நினைப்பிக்கின்றது. இவ்வாறே, ''பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி நட்டகல்லும் மூதூர் நத்தமும், பரன் முரம்பதரும் அல்லது படுமழை, வரன்முறையறியா வல்வெயிற் கானத்து" (16) என்பது அகநானூற்றையும், "புலமையிற் சாயல் பூங்குழல் மடந்தை, மனைமலி செல்வம் மகிழாளாகி, ஏதிலொருவன் காதலனாக" என்பது நற்றிணையை யும் பிற பிறவற்றையும் நினைப்பிக்கின்றன.

இன்ன நலம் சான்ற திருமும்மணிக் கோவையைப் பாடி, ''நன்மை விளங்க'', நம்பி யாரூரரைக் கேட்பித்த சேரமான் அவருடன் பல தலங்களையும் காணச் செல்கின்றார். செல்பவர் திருமறைக் காட்டில், நம்பியாரூரர் "யாழைப் பழித்து" என்னும் திருப்பதிகம் பாட, நம் சேரமான் திருவந்தாதியில், மறைக்காட்டீசனைப் பாடியுள்ள, "துயரும் தொழும் அழும் சோரும் துகிலும் கலையும் செல்லப் பெயரும் பிதற்றும் நகும் வெய்துயிர்க்கும் பெரும் பிணி கூர்ந்து, அயரும் அமர்விக்கும் மூரி நிமிர்க்கும் அந்தோ இங்ஙனே, மயரும் மறைக்காட்டு இறைக்காட்டகப்பட்ட வாணுதலே” (37) என்ற திருப்பாட்டை மோதுகின்றார். இதனைச் சேக்கிழார் பெருமான், "அருட்சேரர், சிறந்த அந்தாதியில் சிறப்பித்தனவே ஓதித் திளைத்தெழுந்தார்'' என்று பாடுகின்றார்.

பின்னர் இவர் நம்பியாரூரருடன் மதுரைக்குச் சென்று மதுரைச் சொக்கேசனைக் கண்டு பரவு மிடத்து, தமக்கு அப்பரமன் விடுத்த திருமுகப் பாசுரத்தால் செய்த திருவருளை வியந்து, "அடி யேனைப் பொருளாக அளித்த திருமுகம் கருணை, முடிவேது என்றறிந்திலேன்'' என்று சொல்லி மொழிதடுமாறி மனங்குழைகின்றார். இவ்வாறு நம்பியாரூரர் தோழமை பெற்றுச் சிறக்கும் சேர வேந்தர் அவருடனே திருவாரூர்க்கே திரும்ப வந்து சின்னாளிருந்து, அவரையும் உடனழைத்துக் கொண்டு தம் சேர நாட்டிற்குச் செல்கின்றார். வழியில் திருவையாற்றுக்குச் செல்லாவகையில் காவிரி பெருகக் கண்டு நம்பியாரூரரை வேண்ட, அவர் திருப்பதிகம் பாடியதும் காவிரியில் வழி யுண்டாகிறது. அதுகண்டு வியந்த வேந்தர் நம்பி யாரூரரை அடிபணிந்து போற்றுகின்றார். நம்பியாரூரர் இறைவன் சேரமானுக்குத் திருமுகம் விடுத்தும், திருச்சிலம்போசை காட்டியும் சிறப்பிக்கும் திறத்தை நன்கறிந்தவராதலின், காவிரி வழிவிட்டதும் அவர் பொருட்டே என்பது உணர்ந்து, அவரடியில் தாம் வீழ்ந்து வணங்குகின்றார். இதனை "நம்பி பாதம் சேரமான் பெருமாள் பணிய நாவலூர்ச், செம்பொன் முந்நூல் மணிமார்பர் சேரர் பெருமாள் எதிர் வணங்கி, உம்பரநாதர் உமக்களித்ததன்றோ '' என்று உரைத்து மகிழ்ந்தாரென்று சேக்கிழார் பெருமான் செப்புகின்றார்.

இவ்வாறு ஐயாறப்பன் திருக்காட்சி பெற்றுச் சிறப்பெய்திய இருவரும் பல தலங்களையும் தரிசித்துக் கொண்டு சென்று, சேரநாடு அடைந்து அந்நாட்டவர் எதிர்கொள்ளச் சேரவேந்தர் திருமனையை அடைகின்றனர். அங்கே பின்னர் அவருடன் தங்கிய நம்பியாரூரர், திருவாரூரில், வேந்தருடன் கூடி, நிலைச்செண்டு வீசல், பரிச் செண்டு வீசல், தகர்ப் பாய்ச்சல் காண்டல், கோழிப் போர் பார்த்தல் முதலியவற்றால் மகிழ்ச்சியுற்றது போல,

முதலியன கண்டு மகிழ்கின்றார். பின்பு நம்பியாரூரர் சேரமான் பால் விடைபெற்றுத் திருவாரூர்க்குப் புறப்படுங்கால், அவ்வேந்தர் பெருமான், "இன்று மது பிரிவாற்றேன், என் செய்வேன்'' என்று சொல்ல, நம்பியாரூரர், பண்டு சிவனருளியதுபோல், 'ஒன்றும் நீர் வருந்தாதே உமது பதியின்கண் இருந்து, அன்றினார் முனை முருக்கி அரசாளும்" என்று மொழிகின்றார். அக்காலத்து, அவர் தமக்கு அரசியலின்பால் பற்றின்மையும், அதனைப் புரிவது ஆண்டவன் திருவருள் வழி நிற்பதென்று கருதியிருந்த மையும் புலப்பட, "பாரோடு விசும்பாட்சி எனக் குமது பாதமலர்'' என்று சொல்லி, "தேரூரும் , நெடுவீதித் திருவாரூர்க் கெழுந்தருள, நேரூரும் மனக் காதல் நீக்கவும் அஞ்சுவன்" என்று மொழிகின்றார்.

திருவாரூர்க்குச் சென்ற நம்பியாரூரர், பின்னை யும் சேரமானை நினைந்து கொண்டு சேர நாட்டு மகோதைக்கு வருகின்றார். சேரமான் அவரை எதிரேற்று எல்லையிலா மகிழ்ச்சி மிகுகின்றார். "பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ?'' நம்பியாரூரர் திருவஞ்சைக்களம் போந்து தங்கிச் சிவபரம் பொருளின் திருமுன் நின்று திருப்பதிகம் பாடிச் சிறக்கின்றார். அங்கே இறைவன் விடுத் தருளிய வெள்ளானையேறிக் கயிலாயம் சொல்லத் தொடங்குவார் மகோதையில் இருந்த "உயிரெல்லாம் சாற்றும் மாற்றங்கள் உணர்பெருந் துணைவரை'' மனத்தில் நினைக்கின்றார். அதனையுணர்வால் உணர்ந்த சேரமான் தம்மருகு நின்ற குதிரை யொன்றின் செவியில் திருவைந்தெழுத்தையோத, அஃது அவரையேற்றிக் கொண்டு நம்பியாரூரர் ஏறி விண்வழிச் செல்லும் வெள்ளானையை யடைந்து வலம் வந்து அதற்கு முன்னே செல்கின்றது. அப்போது தான், நம்பியாரூரர்

என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளு கின்றார்.

திருக்கயிலையை இருவரும் அடைகின்றனர். சேர வேந்தர் மட்டில் வாயிலில் காவலரால் தடையுண்டு நிற்கின்றனர். பரமன் திருமுன் சென்று, கன்று பிரிந்த தன் தாயினையடைந்தது போல் அன்பு பெருகி வழிபட்டு முடிவில், "நீரணி வேணிய, நின் மலர்க் கழல்சாரச் சென்று சேரலன் திருமணி வாயிலில் புறத்தினன்" என்று விண்ணப்பிக்கின்றார். பரமன் வருவிக்கச் சென்ற சேரமான் பெருமாள், சிறிது சேய்த்தாகவே நின்று திருவடி பணிந்து நிற்கின்றார். அவரைக் கருணை நிறைந்த நோக்குடன், முறுவலித்து, இறைவன், "இங்கு தாம் அழையாமை நீ எய்தியது என்னை ?'' என்று வினவியருள், அரசர் பெருமான் மிக்க மதி நுட்பமமைந்த மொழிகளால், "அடியனேன் ஆரூரர். கழல் போற்றிப் புரசையானை முன் சேவித்த வந்தனன்; பொழியும் நின் கருணைத் தெண்திரைசெய் வெள்ளம் முன் கொடுவந்து புகுதலின் திருமுன்பு வரப்பெற்றேன்'' என்று செப்புகின்றார். அது கேட்கும் இறைவன் புன்னகை பூப்ப, சேரமான் மீட்டும் வணங்கி, ''பெருகு வேதமும் முனிவரும் துதிப்பரும் பெருமையாய், மருவு பாசத்தை யகன்றிட வன்றொண்டர் கூட்டம் வைத்தாய், உனை அன்பால் திருவுலாப் புறம்பாடி னேன் ; திருச்செவி சாத்திடப் பெறவேண்டும்" என்று வேண்டி நிற்கின்றார். இறைவன் இசைகின்றான்; இவரும் அத் திருவுலாப் புறத்தை இறைவன் திருமுன் ஓதுகின்றார்.

திருக்கயிலாய ஞானவுலா ஆதியுலா என்றும் திருவுலாப் புறமென்றும் சான்றோர்களால் பாராட்டப்படுகின்றது. இதனை ஆதியுலா என்று கூறுவதன் குறிப்பை நோக்கின், தமிழ் இலக்கியத் தொகையுட் காணப்படும் உலா நூல்களுள் இதுவே மிகத் தொன்மையும் முதன்மையும் வாய்ந்ததென்பது அணியப்படும். இவ்வுலா எழுவதற்கு முன் தமிழில் உலா நூல் ஒன்று இருந்ததாகத் துணிதற்குச் சான்று கிடைத்தியது. இப்போது காணப்படும் உலா நூல்களும் அவற்றின் இலக்கணங்களும் பெரும் பாலும் இவ்வுலா நூலிற்குக் காலத்தால் பிற்பட்டனவாகவே இருக்கின்றன.

பரமன் செவ்விய கோலமணிந்து தேவர் பலரும் பல சிறப்புடைய பணிகளைச் செய்ய, அவர் வேண்டுகோட்கிசைந்து உலா வருங்கால், அவனைப் பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாகவுள்ள மகளிர் பலர் கண்டு நயக்கின்றனர். அவர்கள் அனைவர்க்கும் அருள் நோக்கம் செய்து இறைவன் உலா வந்தமைகின்றான் என்பதே இதன் பிண்டித்த பொருளாகும். இதனைச் சிறிது விளக்கிக் காட்டுவோம்.

இப்பெருமான் சிவலோகச் சிவபுரத்துத் திருக்கோயிலுள் வீற்றிருக்கின்றான். தேவர் பலரும் வந்து அவனை வணங்கி, "எங்கட்குக் காட்சியருள்" என்று இரந்து கேட்கின்றனர். பரமன் அவ்வேண்டு கோட்கு இசைந்தருள், அவனையும் இறைவியையும் தேவர்களும் தேவமங்கையரும் நன்கு ஒப்பனை செய்கின்றனர். இந்திரன் முதலிய இறையவர் தமக் குரிய முறைப்படி சூழ்கின்றனர். முன் செல்வோர் முன்செல்ல, அருகு செல்வோர் அருகு செல்ல, திருவுலா புறப்பாடாகின்றது. சல்லரி, தாளம், தகுணிச்சம் முதல் முருடு ஈறாகவுள்ள பல்வகை வாச்சியங்கள் முழங்குகின்றன. இருது, யோகம், தவம் முதலாகக் குணங்கள் ஈறாகப் பலவும் வந்து

எனப் போற்றிப் பூமாரி பொழிய, பெருமான் உலா வருகின்றான். வீதியில் பேதை முதலாகப் பேரிளம் பெண் ஈறாகப் பல்வகை மகளிரும் தம்மையும் செவ்வே புனைந்து கொண்டு, பரமனைத் தம் கண்களாரக் கண்டு அறிவு சோர்ந்து அலமரல் எய்துகின்றனர். அவருள், "பேதைப் பருவம் பிழையா தாள், நன்றாகத் தாலி கழுத்தணிந்து, சந்தனத்தால் மெய்ப் பூசி, நீல அறுவை விரித்துடுத்து, புனையப் பெற்ற பந்தரில் பாவையொன்றை வைத்து விளையாடுகின்றாள். அவளை நோக்கி, "இப் பாவைக்கு, தந்தை யார்?' என்று ஒருத்தி வினவ, "இதற்குத் தந்தை ஈசன் எரியாடி" என்கின்றாள். இவள் பரமன் உலாவரக் கண்டதும், தன் பருவத்துக்கு ஏலாத காமக் குறிப்பு எய்துகிறாள்.

"பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத் தாள் ஒருத்தி, தோழியருடன் கூட மணலில் காம னுடைய உருவம் எழுதி விளையாடிக் கொண்டிருக் கின்றாள். அவ்வுருவில் காமன் வடிவு முடித்துக் கரும்பு வில்லும் மலரம்பும் தேரும் எழுதுங்கால், பரமன் வீதியுலா வந்து விடுகின்றான். அவள்,

"மங்கை இடம் கடவா மாண்பினாள்" ஒருத்தி, தன் பொற்கூட்டில் வைத்து வளர்க்கும் பூவைப் புள்ளோடு பேசி, அது சொல்லும் சொல் கேட்டு மகிழ்ந்து கொண்டிருக்-கின்றாள். வீதியில் பரமன் உலா வரவே, அவனுடைய சடாமகுடம் அவட்குக் காட்சியளித்தது. அக்காட்சியால் உள்ளம் கசிந்து கருத்திழந்து, அப்பரமனது,
இவட்குப் பின் மடந்தை யொருத்தி பரமன் அழகில் ஈடுபடுகின்றாள். அவளைத் தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்திய சீர் வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள்." என்று சேரமான் பெருமாள் சிறப்பிக் கின்றார். இவள் தோழியருடன் யாழிசைத்துப் பரமனது "மடல் வண்ணம்" பாடி மகிழ்கின்றாள். அக்காலை இறைவன் பவனிவரக் காண்கின்றாள். எண்ணம் அவன்பால் இமைகிறது.

"தன்னுருவம் பூங்கொன்றைத்தார் கொள்ளத்தான் கொன்றைப்
பொன்னுருவம் கொண்டு புலம்புற்றாள்.”

பிறிதோரிடத்தே அரிவையொருத்தி, வீணை யைப் பண்ணிப் பரமன்மேல் தமிழ் பாடத் தொடங்கு கின்றாள். அக்காலையில் இறைவன் விடைமேல் காட்சி தருகின்றான். அவள் கருத்து அழிகின்றது. தன் தோழியரை நோக்கி,
என்று மொழிந்து கொண்டு சென்று பெருவேட்கை தலைக் கொள்கின்றாள்; மேனி மெலிகின்றாள்; வளை நெகிழ்ந்தோடுகிறது; உடையும் சேர்கிறது. அதனால்,

வேறொருத்தி, அரிவைப் பருவம் உடையவள். அவள் தன் ஆய மகளிருடன் கவராடிக் கொண்டிருக் கின்றாள். அப்போது சிவபெருமான் உலா வரு கின்றான். அவன் சடைமுடி அவட்குத் தெரிகிறது. அவன்பால் அவட்குக் காதல் வேட்கை பெருகு கின்றது. அவள்,

இறுதியாகப் பேரிளம் பெண்ணொருத்தி உலாவரும் பரமனைக் காண்கின்றாள். அவளைப் பற்றிக் கூறும் சேரமான் பெருமாள்,

என்று பாராட்டுகின்றாள். இவள், தோழியரும் பணிப் பெண்களும் தன்னைச் சூழ இருந்து செய்வன செய்து சிறப்பிக்க,

என்று ஓர் எழிலுடைய வெண்பாவை விரித்துரைக் கின்றாள். அப்போது பரமன் அமரர்குழாம் தற்சூழ மாடமறுகில் உலா வருகின்றான். அவனைக் காணும் இவளும் வேட்கை மிகுந்து மனம் கரைந்து மெய் வெளுத்துப் பெருமயக்கம் உறுகின்றாள்.

இவ்வாறு பரமன் உலாவந்த வீதிகளில் பெண்களின் ஆரவாரம் பெரிதாயிற்று என்பார்,

என்று பெருமாள் வியந்தோதுகின்றார்.

இங்கே கூறிய மகளிர் எழுவருள் முதல் அறுவர், இவ்வுலகிற் காணப்படும் அறுவகை உயிர்கள் என்றும், பேரிளம் பெண் கடவுளரும் முனிவரான உயிரென்றும், இவ்வுலகங்களில் இறைவன் தன் ஐவகைத் தொழில் செய்து நிலவும் நிகழ்ச்சி கண்டு
இவ்வுயிர்கள் எய்தும் மன நிலையே இவ்வுலா வகையாகக் கூறப்படுகிறதன்று சான்றோர் கூறுப. இதனை விரிக்கிற் பெருகும்.

இவ்வுலாவிற் கூறப்படும் கருத்துக்கள் பல அந்தாதியினும் மும்மணிக் கோவையிலும் விரித்துக் கூறப்படுகின்றன. பேரிளம் பெண் பாடிய வெண் பாவையே, அந்தாதியில்,

என்று கூறியுள்ளார். இவ்வாறு பல ஒப்பு நோக்கிய வழிக் காணலாம்.

இனி, இச்சேரமான் இறைவனை இங்கிதமாகப் பாடிய பாட்டுக்கள் பலவாகும். பரமன் கங்கையைச் சடையில் கொண்டிருத்தல் கண்டும் உமாதேவியார் அக்கங்கையின் கீழ் உறைவிடம் பெற்றிருப்பதோ என்று நகையாடுவார்போல,

என்று உரைக்கின்றார். பரமன் சடைதீப்போல இருப்பதும், அதன்கண் கங்கையும் பிறையும் பாம்பும் உறைவதும் கண்டு

என்று இன்பக் காட்சி காண்கின்றார். அதன்பின், அப்பாம்பையும் பிறையையும் பார்த்து இன்ப வுரையாடி நம்மை மகிழ்வுறுத்துகின்றார். பாம்பு நெருப்புயிர்க்கும் என்றும், அதனால் அப்பிறை மேனி வெதும்பிக் கங்கையில் மூழ்கிக் குளிருமென்றும், உமாதேவியார் ஊடக்கண்டு உருகுமென்றும், பரமன் தீண்டலால் கலை நிறைந்து மண்ணையும் விண்ணை யும் விளக்குமென்றும் இவ்வாறு பிறை இறைவன் முடிமேல் இருந்தும் இன்பமும் துன்பமும் எய்துகிற தென்றும் கூறுவார்,

என்று விளம்புகின்றார், இறுதியாக, இவர் இறை வனும் தேவியும் கூடியிருக்கும் தோற்றம் கங்கையும் யமுனையும் கூடும் திரிவேணி சங்கமத்தையொத் திருப்பதைக் காட்டுவது மிக்க இறும் பூது பயப்ப தாகும்.

என்பது அப்பாட்டு. (இதன் கருத்தை 1943ம் ஆண்டு கல்கியென்னும் வெளியீட்டன் தீபாவளி மலரில் வெளியான திரிவேணி சங்கமப் படத்தையும் ஒப்பு நோக்கின் இதன் உண்மைத் தோற்றம் நன்கு தெளி வுறுத்தும். இவ்வாறு இங்கிதத் துறையில் இவை போலும் பல பாட்டுக்களை இவர் பாடியுள்ளார். இவை இன்பச் சுவையேயன்றி இவருடை மனக் காட்சியின் விரியும் விளங்க வுணர்த்துகின்றன.

இனி இவர் பாடிய கருத்துக்கள் பலவற்றைப் பல பெரும்புலவர்கள் மேற்கொண்டு தாம் பாடியவற்றுள் அமைத்துக் கொண்டிருக்கின்றனர். சங்கத் தொகை நூல்களுள் கடவுள் வாழ்த்தைப் பாடிச் சேர்த்த புலவர் பாரதம் பாடிய பெருந் தேவனார் பெரும் புலவர் என்பது உலகறிந்த செய்தி. அவர் நம் சேரமானுக்குக் காலத்தால் பிற்பட்டவர் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அவர், இவர் பாடிய, ''பாதம் புவனி சுடர் நயனம் பவனம் உயிர்ப்பு, ஓங்கு ஒதம் உடுக்கை, உயர்வான் முடி விசும்பே யுடம்பு, வேதம் முகம், திசை தோள், மிகு பன்மொழி கீதம்” (யொன். 19) என்ற பாட்டின் கருத்தை, நற்றிணைக்குத் தாம் பாடிச் சேர்த்த கடவுள் வாழ்த்தில்,

என்று உரைத்திருக்கின்றார்.

இதன் (நற்றிணைப் பாட்டின்) உரைகாரரான பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் அவர்கள், "ஏனைப் பூதமும் பிறவும் கூறிய அடிகள் சிதைவுற்ற மையின் வடமொழிச் செய்யுள் நோக்கிக் கூறலா யிற்று' என்று குறிக்கின்றார். இதனையும், "சுடர் நயனம்” என்ற சேரமான் திருமொழியும் வைத்து நோக்கின், இந்நற்றிணைப் பாட்டில் வரும் "பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக'' என்னும் அடி "படர்கதிர் மதியமொடு சுடர்கண்ணாக" என நிற்றல் வேண்டும் என்றும், அது முறையே, "ஞாயிறு திங்கள் நெருப்பு என்ற மூன்றும் கண்களாக" என்னும் பொருள் தருவதாம் என்றும், எனவே திகிரியோன் என்பது ஆணையுடையோன் என்றும் நாம் உணரலாம். அய்யரவர்கள் வடமொழிச் செய்யுளை நோக்கி, இத்திருமுறையை நோக்காது போயினர் போலும்.

இவ்வாறே சீவக சிந்தாமணி பாடிய திருத்தக்க தேவரும் இவர் பிரபந்தங்களிலிருந்து சில கருத்துக் களைத் தம் காவியத்தின் கண் மேற்கொண்டு கையாண்டுள்ளார். மகளுற்ற வேறுபாடு கண்டு ஆற்றாத நற்றாய் தலைவனைக் கழறல் என்ற கருத்தில், சேரவேந்தர்,

என்று கூறுகின்றார். ஒரு செயலே செய்த இருவருள் ஒருவர்க்கொரு வகையும் மற்றையோர்க்கு மற்றொரு வகையும் செய்து ஓரூர் இரண்டகம் காட்டினை என்ற கருத்தைத் திருத்தக்க தேவர் , சுரமஞ்சரி சீவகனைப் புலந்து கூறும் கூற்றில் வைத்து

என்று அமைத்துக் கொண்டிருத்தலைக் காண்மின்.

இம்மட்டோ! "இல்லாரை யெல்லாரும் எள்ளு வர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு” என்ற திருக்குறளை மகளிர் ஒப்பனைக் கண்வைத்து நயப்படுத்தும் செயல் முதற்கண் நம் சேரமான்பால் தான் காணப்படுகிறது. அவர், ஆதியுலாவின்கண்,
அரிவைப் பருவத்தாளின் ஒப்பனை கூறுமிடத்து,

என்று கூறுகின்றார். இதனைக் காணும் புலவர் எவர்க்குத் தான் வியப்புண்டாகாது போகும்! திருத்தக்க தேவர் இதனைக் கண்டதும் பெருவியப் புற்று, தாம் செய்த காவியத்தே இக்கருத்திலேயே வைத்து அமைத்துக் கொள்கின்றார். சீவகன் நகர வீதியில் உலாவந்த போது மகளிர் பலர் தம்மை ஒப்பனை செய்துகொண்டு தெருவில் வந்து நின்று அவனை நோக்குகின்றனர். அவ்வாறு வந்த மகளிரின் ஒப்பனையைக் கூறவந்த திருத்தக்க தேவர்.

என்று கருத்தும் இடமும் ஒப்புக்கொண்டிருத்தலை நன்கு காணலாம்.

இதனால், நம் சேரமான், பாணபத்திரர், நம்பியாரூரர் முதலாயினார்க்குப் பெருஞ் செல்வம் வழங்கியது போல, புலவர் பலர்க்கும் கற்பனைச் செல்வமும் கலைச் செல்வமும் வழங்கியிருப்பது அவர் பெருந்தகைமைக்கு ஏற்ற சான்று பகர்கிறது. இவ்வாறு, இவர் பாடியருளிய பிரபந்தங்கள் “ஆயுந் தோறும் தோறும் இன்பம் தரும்" அறிவு நிலைய மாதல் தெளியப்படும்.

இச்சேரமான் “வருகின்ற மூப்பொடு தீப்பிணிக் கூற்றம்” என்றலின், இவர் பொன்வண்ணத்தந்தாதி பாடி அரங்கேற்றிய காலத்தில், மூப்புப் பருவம் எய்துகின்ற வயதினராய் இருத்தலைக் காண்கின் றோம். இவ்வாறு இவர் பாடியவற்றை ஆராயின், பல அரிய பொருள்களைக் காண்டற்கு இடம் இருக்கிறது. இவர் பாடிய அகப் பாட்டுக்களில் அமைந்திருக்கும் உள்ளுறை நலம், உவம நலம் முதலிய பலவும் பேரின்பம் தருவனவாகும். அவை ஒரு புறமிருக்கச் சேரநாட்டுச் செண்டு விளையாட்டும் சிறு சோற்றுச் சிறப்பும் சீரிய ஆராய்ச்சிக்கு உரியதாகும். இவற்றை எழுதத் தொடங்கின் இது வரம்பின்றிப் பெருகு மென்றஞ்சி இம்மட்டில் நிறுத்திக் கொள்கின்றேன்.
---------------

14. திருவானைக்காவில் சோழர் திருப்பணிகள்

சோழர் என்ற பெயரைக் காணும்போது சங்க காலச் சோழரா, இடைக்காலச் சோழரா என்ற கேள்வி தமிழும் வரலாறும் பயின்றோர் உள்ளத்தில் எழும். சங்க காலம் என்பது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பிருந்து கி.பி. முதல் நூற்றாண்டு வரை நிலவிய காலமாகும். அக் காலத்தில் தமிழகம் சோழ பாண்டிய சேரநாடு என்று மூன்றாகப் பிரிந்து மூன்று தமிழ் வேந்தர் குடியினரால் ஆளப் பெற்று வந்தது. அந்நாளைய சோழரைச் சங்க காலச் சோழர் என்பர்; அவர்களைப் பற்றி அறிதற்குதவும் தமிழ் நூல்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும். அவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இருவகைப் பட்டுப் பதினெட்டாகவுள்ளனவாகும். இடைக் காலச் சோழர் பல்லவர் காலத்துக்குப் பின் தோன்றித் தமிழகத்தை ஆண்டவர். இவர்களை விசயாலயன் வழி வந்த சோழ வேந்தர் என்பது வழக்கம். இவர்களையும், இவர்கட்கு முன்னே விளங்கிய பல்லவர்களையும் அறிதற்கு உதவுவன கி.பி. 1880 முதல் இன்றுவரை சுமார் 100 ஆண்டு களாகப் படி எடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களும் செப்பேடுமாகவுள்ளன. இதுவரை சுமார் 25000 படிகள் கிடைத்துள்ளவெனினும், அன்புடைய மக்கள் அறிய வெளிவந்துள்ளவை சுமார் 5000 ஆகும்.

சங்க இலக்கியங்களில் தமிழகத்தின் வட வெல்லையாகக் கூறப்படும் வடவேங்கடத்தில் திருமாலுக்குக் கோயில் கிடையாது. இப்போது கோயிலுள்ள இடத்தில் புல்லி என்னும் வேந்தன் இருந்தான். அவனது ஆட்சி வேங்கடமலையடியில் சித்தூர் மாவட்டத்தின் மேலைப் பகுதியில் பரவி யிருந்தது. அப்பகுதியை ஆங்குக் காணப்படும் கல்வெட்டுக்கள் புலிநாடு என்று குறிக்கின்றன.

அதுபோல, காவிரியின் ஆற்றிடைக் குறை யாகிய திருவரங்கத்தில் திருமாலுக்கோ சிவனுக்கோ திருக்கோயில் இருந்ததாகச் சங்க இலக்கியம் கூறவில்லை. எனினும், சங்க காலத்தை ஒட்டி வாழ்ந்த இளங்கோவடிகள் காலத்தில் வேங்கடத் திலும் திருவரங்கத்திலும் திருமாலுக்குக் கோயில்கள் தோன்றிவிட்டன.

என்றும், இவ்வாறே திருவரங்கத்தில் திருமாலுக்குக் கோயில் தோன்றி அவர் கிடந்தவண்ணம் காட்சி யளிப்பதை,

என்றும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

அந்நாளில் வேங்கடக் கோட்டத்தில் திருக் காளத்தியும் திருவரங்கத்தில் திருவானைக்காவுப் இருந்ததில்லையோ எனின், இருந்திருக்கலாம். எடுத் துரைப்பதற்கேற்ற இயைபு வரலாற்று நிகழ்ச்சியில் இல்லாமையால், சமயக் காழ்ப்பிலாச் சான்றோ ராகிய இளங்கோவடிகள் கூறாமல் விட்டிருக்கலாம்.

கி.பி. ஏழாம் நூற்றாண்டில் விளங்கிய திருஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருக்காளத்தி திருவானைக்கா இரண்டையும் சிறப்பித்து இனிய இசைப் பாட்டுக்களால் சிறப்பித்திருக்கின்றார்கள்; இவ்வகையில் திருவானைக்கா மிக்க தொன்மை வாய்ந்து, புலவர் பாடும் புகழ்பெற்றது என்பது நன்கு மனங்கொள்ளற்-பாற்று.

திருவானைக்காவை இந்து அறநிலையத்தவரும் கல்வெட்டுத் துறையினரும் சம்புகேசுரம் என்றே குறிக்கின்றார்களே எனின், இது இடையிலே தோன்றிய மாற்றம். இடைக்காலச் சோழ பாண்டியர் ஆட்சி வீழ்ந்ததும், விசய நகர வேந்தரது ஆட்சி தமிழகத்தில் பரந்த இடம் பெற்றது ; முன்னைய ஆட்சியில் ஊர்தொறும் தோன்றித் திருக்கோயில் களைக் கண்காணித்து வந்த திருவுண்ணாழிகை யுடையார், மாகேசுரக் கண்காணிகள், ஊர் மகா சபையினர் மறைந்தனர். கோயில் பூசைத் திருப்பணிக் கெனச் சோழ பாண்டிய மன்னர் நிறுவியிருந்த சிவ வேதியர், பண்டு தொட்டு நிலவிய தமிழ்ப் பெயர்களை வடமொழிப்படுத்தும் புதிய புதிய கதைகளைத் தொடுத்தும் தொன்மை வரலாற்றை மறைக்கும் செயலை மேற்கொண்டனர். தமிழரல் லாத விசய நகர வேந்தரது ஆட்சி அதற்கு இடையூறு செய்யவில்லை; அடுத்து வந்த ஆட்சிகளும் அவ் வியல்பினவேயாக இருந்தமையின், வடமொழிப் படுத்தும் செயல் வெற்றி கண்டது. வழிபாடுகளும் செயல்வகைகளும் வடமொழியிலேயே சமைக்கப் பெற்றன. இன்னோரன்ன மாறுதல்களால் திரு வானைக்கா என்ற பெயர் பொதுமக்களிடையிலும், சம்புகேசுரம் என்ற பெயர் கற்றோர் சிலரிடையிலும் வழங்குகின்றன.

திருக்கோயில்கள், பல்லவர் காலத்தில் கருங் கற்களால் அமையும் திருப்பணிச் சிறப்புப் பெற்று, வழி வழி வந்த வேந்தர்களாலும் செல்வர்களாலும் கற்றளிகளாக உருக் கொண்டன. பண்டைய வேந்தர் ஆட்சிகளில் திருமாலுக்குக் கோயிலைச் சிவன் கோயிற்குள்ளேயே அமைத்திருந்தமையின், தனிக் கோயில்கள் அருகியே இருந்தன. திருமால் கோயிலைத் தன்னகத்தே கொள்ளாத சிவன் கோயிலுக்குச் சிறப்பில்லை; சிவாகமங்கள் அவ்வாறே விதிக்கின்றன. இச்சிவன் கோயில்கள் பலவும் அமைப்பிலும் வழிபாட்டிலும் பிற நிகழ்ச்சிகளிலும் சிவாகமங்களின் நெறியில் அமைந்தன என்பதைப் பல்லவர் காலக் குறிப்பேடுகளாலும், சேக்கிழார் முதலியோருடைய நூல்களாலும் அறிகின்றோம். எனினும், கிடைத்துள்ள பல்லாயிரம் கல்வெட்டுக் களில் ஒன்றிலேனும் இன்ன கோயில் இன்ன சிவாகமப் படி அமைந்தது என்ற குறிப்பே காணப் படவில்லை. அவ்வக் கோயில்களிற் பணிபுரியும் சிவவேதியர், காரணம், காமிகம், வாதுளம் எனச் சிவாகமங்களைக் கூறுகின்றனரேயன்றி அவற்றைக் காட்டென்றால் காட்டுவார் இல்லை.

இரண்டு மூன்று நூற்றாண்டுகட்கு முன் தோன்றிய அறிஞர் சிலர் வகுத்தளித்த செயல்முறை களை (பத்ததிகளை) ஆகம முறையாகக் கொண்டு சிவவேதியர் தம் கோயிற் பணிகளை (கிரியைகளைச் செய்து வருகின்றனர். உண்மையை ஆராய்ந்த போது, கழிந்த நூற்றாண்டுகளில் வைதிக வேதாந்திகள் "சிவாகமங்கள் பிரமாணமாகா" எனவும் "ஆகம் வழியொழுகுவோர் மூடர்'' எனவும் பழித்தும் இகழ்ந்தும் பேசியும் எழுதியும் வந்தமையாலும், அவர் கூட்டம் தொகை மிகுதியும் செல்வாக்கும் பெற்றிருந்தமையாலும் சிவவேதியர் தம்முடைய சிவாகமங்களைக் கைசோரவிட்டனர் என்பது தெரிந்தது. இந்நாளில் கிடைக்கும் சிவாகமங்களில் ஞானபாதம் கூறுவன வொழிய யோகபாதம் கூறுவன அறவே இல்லை எனலாம். கிரியா பாதம் கூறுவனவற்றுள் பல அவரவரால் காலப்போக்கில் பொருந்தாதனவும் வேண்டாதனவும் எழுதிச் சேர்க்கப்பட்டுப் போலிகளாய் ஒழிந்தன.

இனி, இக்கோயில்களில் பல்லவர், சோழர், பாண்டியர், விசய நகர வேந்தர், நாயக்க மன்னர் காலங்களில் நாட்பூசனைக்கும் திருப்பணிக்கும் எனப் பல நிவந்தங்கள் (Endowments) அமைந் துள்ளன. கருவறை சீர் செய்தல், மண்டபங்கள் அமைத்தல், கோபுரத்திருப்பணி, புறமதில் திருப்பணி, திருவாபரண முதலியன செய்தளித்தல் முதலிய திருப்பணிகள் மிகுதியாகச் செய்யப்பட்டுள்ளன. கோப் பெருஞ்சிங்கன் முதலிய காடவ குலத்தவர் செய்துவைத்துள்ள திருவாபரணக் கல்வெட்டுக்கள் அழகிய பாட்டுருவில் படிப்பவர் மனம் மகிழத்தக்க வகையில் உள்ளன. ஈங்கு எடுத்துக் கொள்ளப்படுவது திருவானைக்காவில் சோழ வேந்தர் செய்த திருப்பணியாகும்.

சங்க காலச் சோழ வேந்தருள் ஒருவன் சோழன் செங்கணான். இடைக் காலச் சோழர் காலச் செப்பேடுகள், பெருநற்கிள்ளி, கரிகாலன் முதலிய வேந்தர் வழியினன் இச் செங்கணான் என்று கூறுகின்றன. கழுமலப் போரில் சேரமானை வென்று அகப்படுத்திச் சான்றோரான பொய்கையார் பாடிய களவழி என்ற நூலை வியந்து சேரனை விடுவித்தான் என்று கலிங்கத்துப் பரணியால் அறிகின்றோம். இவ்வேந்தர் பெருமானுக்கு நல்லடி என்றொரு மகனுண்டெனச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

திருவானைக்காவில் நாவல் மரத்தின் அடியில் விளங்கிய சிவபெருமானுக்கு முதன் முதலில் திருக்கோயிலெடுத்தவன் சோழன் கோச் செங் கணான் என்று சேக்கிழார் தெரிவிக்கின்றார். இவ் வேந்தனை நம்பியாரூரர், "தென்னவனாய் உல காண்ட செங்கணார்" என்று சிறப்பிக்க, இவ் வர லாற்றைச் சிறிது விரித்த நம்பியாண்டார் நம்பிகள்,

என்று பாடிப் பரவியுள்ளனர்.

சுந்தரமூர்த்திகள், இச்செங்கணான், பிறப்பாற் சோழனானதொருபுறம் நிற்க, "தமிழ்கூறும் நல்லுல கத்தை"த் தென்னவனாகவும், சேரலனாகவும் ஆண்டமை புலப்பட, "தென்னவனாய் உலகாண்ட" என்று கூறுகின்றார். இதற்கொப்ப, இவன் கட்டிய சிவன் கோயில்கள், பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் இருந்துள்ளன. சேர நாட்டில் இவன் திருப்பெயரமைந்த தொன்மைச் சிறப்புடையவர்கள் இருப்பதே தக்க சான்று பகர்கிறது. 'தரணியில் நீடு ஆலயங்கள் பல செய்வித்தவன்'' என நம்பி யாண்டார் உரைப்பதும், திருமங்கை மன்னனார் தமது பெரிய திருமொழியில், "இருக்கிலங்கு திரு மொழிவாய் எண்தோள் ஈசற்கு எழில்மாடம் எழுபது" செய்தான் என்று விளம்புவதும் உண்மை யொளி பரப்புகின்றன.

செங்கணான் திருவானைக்காவில் சிவன் இருந்த வெண்ணாவல் மரத்தில் சிலந்தியாய் இருந்து மறுபிறப்பில் சோழனாய்த் தோன்றினான் என்றொரு வரலாறு உண்டு. இதனைத் திருநாவுக்கரசர்,

என்று தெரிவிக்கின்றார். இச்செய்தி, திருவானைக் காக் கோயிற் கல்வெட்டொன்றில் ஒரு தோப்புக்குப் பெயராய் "உள்ளூர் புதுப்புடை விளாகத்துச் சிலந்தியைச் சோழனாக்கினான் திருத் தோப்பு” (கல். தொ. 4, 426) என்று போற்றிய மக்களின் சமய வுணர்வின் சால்பை விளக்கி நிற்கிறது.

செங்கணான் திருவானைக்காவில் தொடங்கிய கோயில் திருப்பணி செங்கல்லாலும் மரத்தாலும் ஆகியிருத்தல் வேண்டும். அதன் அமைப்பு தென் னார்க்காடு மாவட்டத்துத் திருமுட்டம் சிவன் கோயில் போன்றிருக்கலாம் என் ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். இப்போதுள்ள கற்றளியில் காணப் படும் கல்வெட்டுக்களில் மிகப் பழமையானது முதற் பராந்தகனுடைய 40- ஆம் ஆண்டுக் கல்வெட்டு எனத் தெரிகிறது. இதற்கு முன்னைவாய்ப் படி எடுக்கப் பட்டவை என எவையும் காணப்படாமையால் இப்போதுள்ள கோயில் கி.பி. 907க்கு முன்னே கட்டிய தென்று தெரிய நிற்கிறது.

இடைக் காலச் சோழ வேந்தருள் ஆதித்தன் மகனாகிய முதற் பராந்தகனது. 40-ஆம் ஆண்டுக் கல்வெட்டொன்று இக்கோயிலில் உள்ளது; எனினும் அது குறையாகவும் சிதைந்தும் உளது; அதன்கண் ஆனைக்காவுடைய சிவபெருமான் மகாதேவ படாரர் என்று பெயர் குறிக்கப்படுகின்றார். தோன்று தலும் இறத்தலும் இல்லாதவர் என்ற பொருள் தரும் இச்சொல் இடைக்காலத்தில் சிவனுக்கு வழங்கியதில் வியப்பில்லை. இளங்கோவடிகளும் திருமுறையாசிரி யர்களும் சிவனைப் பிறப்பும் இறப்பும் இலாப் பெருமையன் எனப் பாராட்டியுள்ளனர். இவ் வேந்தன் கி.பி. 907-இல் சோழ அரசு கட்டிலேறிய வன். இங்குள்ள கல்வெட்டு, 40 - ஆம் ஆண்டையதாத லால், இது கி.பி. 947- இல் பிறந்தமை தெளிவாம்.

இப்பராந்தகனுக்குப் பின் வந்த சோழருள் முதல் இராசராசன், முதல் இராசேந்திரன் முதலில் யோர் மிக்க சிறப்பு வாய்ந்தவரா இருக்கவும் அவர்களுடைய கல்வெட்டுக்கள் இக்கோயிலிற் காணப்படவில்லை. இவ்வாறே பின்வந்த சோழர் காலத் திருப்பணிகளும் நிவந்தங்களும் இக்கோயிற் கல்வெட்டுக்களில் இடம் பெறவில்லை . 1917 ஆண்டில் கல்வெட்டுத் துறையினர் சிறு கல்வெட்டுக் களைப் படி எடுத்துள்ளனர். அவை அத்துறை யினரிடமே புதைந்து கிடக்கின்றன. இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் இக் கல்வெட்டுக்கள் வெளிவர முயல்வார்களானால் நன்று. வெளிப் படுத்தும் செயலை இடித்துரைத்து வற்புறுத்தினா லன்றி வெளியிடும் பணியை இந்தியப் பேரரசு மேற்கொள்வதாகத் தோன்றவில்லை.

முதற் குலோத்துங்கனது ஆட்சி 40- ஆம் ஆண்டில் வில்லவரையன் என்னும் தலைவன்
ஆனைக்காவுடைய பெருமானுக்குக் காளையூர்தி யொன்றைச் செய்து வைத்து, திருப்பணிக்காக நிலங்கள் சில விலைக்கு வாங்கிக் கோயிலுக்கு அளித்தான். (தொகுதி II எண். 76)

இரண்டாம் குலோத்துங்கன் மகனான இரண்டாம் இராசராசன் கி.பி. 1146 - இல் அரசனா னான். "தந்தையில்லோர்க்குத் தந்தையாகியும் தாயில்லோர்க்குத் தாயாகியும் மைந்தரில்லோர்க்கு மைந்தராகியும் மன்னுயிர்கட்கு உயிராகியும்'' நாட்டவர் வியந்து போற்ற வாழ்ந்தான் என இவனுடைய மெய்க் கீர்த்தி விளம்புகிறது. "மலை கொன்று பொன்னிக்கு வழி கண்ட கண்டன் வரராசா ராசன்" என்று தக்கயாகப் பரணி இவ்வேந்தனைப் புகழ்கின்றது.

இவ்வேந்தன் கி.பி. 1146- இல் அரசு கட்டிலேறி னான் என்பர். நான்கு ஆண்டுக்குப் பின் கி.பி. 1150 - இல் இவனது கல்வெட்டொன்று இத் திருவானைக்காக் கோயிலில் உளது. அதன்கண், அரையன் சுந்தனான வாணகோப்பாடி சேரமான் என்ற செல்வன் பூசைத் திருப்பணிக்காக ஊரவர் பால் நிலம் வாங்கிக் கோயிற்குக் கொடுத்தான். (27/1937-38)

மூன்றாம் குலோத்துங்கன் கி.பி. 1178 - இல் சோழ வேந்தராயினான். தன்னொடு மாறுபட்ட பாண்டிய சேரரை வென்று மேம்பட்டமை பற்றி இவன் திரிபுவன வீரதேவன் என்ற சிறப்பெய்தினான்.

என வரும் குடுமியான் மலைக் கல்வெட்டு, இவ்வேந்தர் பெருமானுடைய திருப்பணியார் வத்தைப் புலப்படுத்துகிறது. மேலும், சுந்தர மூர்த்தி களைச் சிவபெருமான், தோழனாகக் கொண்டது போல, இக்குலோத்துங்கனையும் திருவாரூர் இறைவன், "நம் தோழன்" எனச் சிறப்பித்தார் என்று திருவாரூர்க் கல்வெட்டொன்றால் அறிகின்றோம்.

சிவநெறிச் செம்மலாகிய இச்சோழ வேந்தன் கல்வெட்டுக்கள் சில திருவானைக் காத்திருக் கோயிலில் இருப்பது வியத்தகு செய்தியன்று.

இவனது 18-ம் ஆட்சியாண்டில் இராசராச தேவன் பொன்பரப்பினான வாண-கோவரையனும், சீயன் உடைய பிள்ளையான அளங்க நாடாள் வானும் தம்முள் வேறுபாடு நீங்கி ஒருவர்க்கொருவர் துணையாவதாக ஆணைக்காவுடைய அண்ணல் திருமுன் உடன்படிக்கை செய்து கொண்டனர். (483/1908)

இதற்கு அடுத்த ஆண்டில் மேலே கண்ட அரசியல் தலைவனான சீயன் உடைய பிள்ளையோடு தொண்டன் சேமனான இராசராச மூவரையன் துணையாவதாக உடன்பாடு செய்து கொண்டான். (480/1908)

இம் மூன்றாம் குலோத்துங்கனுக்குக் "கோனே ரின்மை கொண்டான்' என்ற சிறப்புப் பெயரும் உண்டாதலால், திருவானைக்காவில் காணப்படும் இவனது 21-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்கள், மதுரை யும் கருவூரும் பாண்டியன் முடித்தலையும் கொண்ட திரிபுவன சக்கரவர்த்தி என்பதோடு கோனேரின்மை கொண்டான் குலோத்துங்க சோழ தேவர் எனக் குறிக்கின்றன. கோனேரின்மை கொண்டான் என்ற சிறப்புப் பாண்டியர்களுக்கே சொல்லப்படுவது.

இவ்வேந்தனுடைய தலைமையதிகாரிகளில் மீனவன் மூவேந்த வேளான் முன்னிற்க, திருவா னைக்கா திருக்கோயிலில் இருந்து தொண்டைமான் வேண்டி விண்ணப்பிக்க, பழுவூரான இராசேந்திர சோழ நல்லூரில் சில நிலங்களையும் ஏனாதி மங்கலத்தில் சில நிலங்களையும் தொகுத்துக் குலோத்துங்க சோழன் பழுவூர் என்று பெயரிட்டுப் பழுவூருடையான் நக்கன் அறவன் என்பானுக்கு "ஜன்மக் கணியாகத் தருகின்றனர். மற்ற மூன்று கல்வெட்டுக்களில் இந்த ஏற்பாட்டின் சார்பாக வரி வகைகள் முறை செய்யப்படுகின்றன. (38-41/1937-38)

இச்சோழ வேந்தனுக்குப் பின் அரசு கட்டி லேறியவன் மூன்றாம் இராசராசன். இவன் கி.பி. 1216- இல் இளவரசாயவன். இவன் காலத்தில் திரு வானைக்காவில் பல கல்வெட்டுக்கள் தோன்றியுள்ளன.

இவனுடைய 20-ஆம் ஆண்டுக் கல்வெட்டுத் திருவானைக்காவை , பாண்டி குலாசனி வளநாட்டு பாச்சிற் கூற்றத்துக் கீழ்ப்புல்லாற்று சங்ககாலப் புல்லாற்றூர்; இது பில்லாறு எனவும் கல்வெட்டுக் களில் வழங்கும்) காரிசாத்தன் குறையிற் காணியுடை ஓடமுடையாரில், பொல்லாதான் செல்வனான பொன்னி மழநாடாள்வான், உடையான் நெஞ் சுண்டியான நெற்குப்ப அரையன், குன்றன் சீகயிலாய முடையானான திருவரங்க நாடாள்வான் என்ற மூவரும் கோயில் ஆதிசண்டேசுரக் கன்மிகளுக்கு (தருமகருத்தர்களுக்கு நிலம் விற்று விலைப்பிரமான இசைவுத் தீட்டு நல்குவதைத் தெரிவிக்கிறது.

இவ்வாறே 22- ஆம் ஆண்டுக் கல்வெட்டில், காரி சாத்தன் குறையில் காணியுடைய ஓடமுடை யாரில் கூத்தன் குன்றனான கீழாற்றூர் அரையன், இவன் தம்பி ஆரம்பூண்டான், இவன் தம்பி தாழி, விடங்கன் உடையனான மழநாட்டு விழுப்பரைய நாடாள்வான், இவன் தம்பி திருவரங்கன், பேராயிரமுடையான் ஆகியோர் கோயிற்கு நிலம் விற்று விலைப் பிரமாண ஓலையெழுதித் தருகின்றார்கள்.

24- ஆம் ஆண்டுக் கல்வெட்டில் போகைய தண்டல் நாயகர் ஆணைப்படி இருவர், கோயிற்கு நிலம் விற்று "திரவியச் செலவு கையீடு” தருகின் றார்கள். (13 - 4/1937-38)

29 - ஆம் ஆண்டிற் பிறந்த கல்வெட்டொன்று பாச்சிற் கூற்றத்துக் கீழ்ப்புல்லாற்றுத் துறையூருடை யான் அரையன் நித்த கல்வியாணனான பாண்டி ராசன், திருவானைக்காவுடைய நாயனார் கோயில் ஆதிசண்டேசுர தேவர் கன்மிகட்கு தங்களுடையதும் தங்கள் மாதாக்களதுமான நிலத்தை அவர் (மாதா) இறந்துபட்டமையின் தன்மதானமாகக் கொடுப் பதைக் கூறுகிறது. (337/8) வேறே இரண்டு கல் வெட்டுக்களில் பாச்சிற் கூற்றத்துக் கீழ்ப்புல்லாற்று இசனைக் குறையூரவரும், அவ்வூர் கழனி வாயிலுடை யான் அனுமனமுடையானும் அவன் தம்பி நம்பியும், திருவானைக்கா கோயிற்கு நிலம் தருகின்றார்கள். (338- 9/8)

இனி, காலம் புலப்படாதபடி இவ்வேந்த னுடைய கல்வெட்டுக்கள் சில இக்கோயிலில் உள்ளன. அவற்றிலும் ஆனைக்காவுடைய பெருமான் கன்மிகட்கு நிலம் விற்ற செய்தியே காணப்படுகிறது.

இவ்விடைக் காலச் சோழராட்சியின் வீழ்ச்சிக் காலத்து இறுதியில் இருந்தவன் மூன்றாம் இராசேந் திரன்; 1246-இல் இளவரசனாகி, அப்பொழுதே அரசினை ஏற்று நடத்தினான். இவனைச் "சமஸ்த ஜகதேக வீரன்" என்றும் "இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளிய மகா ராசாதிராச நரபதி' என்றும் மெய்க் கீர்த்திகள் புகழ்கின்றன. இவனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டொன்றில் திருவானைக்காத் திருக்கோயிலுக்கு அரையன் நித்திய கல்லியாணனான துறையூர் பாண்டியராயன் நிலம் தருகிறான் (29/1937-38)

ஆறாம் ஆண்டில் திருவானைக்காவுடைய அண்ணல் கோயிற்கெனத் திருநந்தவனம் அமைக்கப் படுகிறது. (4841908) அதே ஆண்டில் சிங்கண்ண தண்ட நாயகர் திருவானைக்காத் திருக்கோயிலில் சித்த வீச்சரத்தைக் கட்டி அதன் பூசைத் திருப்பணிக் கெனப் பாச்சில் கூற்றத்துத் திருவெள்ளறையில் சில நிலங்களைக் கொடுக்கின்றார். (73/1937-38)

இங்ஙனம் சங்க காலச் சோழனான செங்க ணான் முதல் இடைக்காலச் சோழர் பலரும் திரு வானைக்காவுடைய பெருமானுக்கு அரிய திருப்பணி புரிந்த திறத்தை ஒருவாறு கண்டோம். இப்பெரு மக்கலின் திருப்பணி நலங்களை அறிந்து கோடற் கேற்பப் பல்லாயிரக் கணக்கான கல்வெட்டுக் களையும் செப்பேடுகளையும் அரசின் கல்வெட்டுத் துறையினர் படியெடுத்துள்ளனரே யொழியப் பொது மக்கள் இனிதின் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் வெளியிடச் சுணங்குகின்றனர். இந்தியப் பேரரசு இவ்வகையில் கருத்தைச் செலுத்தியிருக்குமாயின் நம் தமிழ்நாட்டுக் கோயில்களின் வரலாறும் சிறப்பும் நாடறிய விளங்கியிருக்கும். கோயில் வரலாற்றிலும் தமிழினத்தின் சமுதாய வளர்ச்சி வரலாற்றிலும் தெளிந்த அறிவுடைய நன்மக்களைத் தேர்ந்தெடுத்து இந்திய அரசியற் பேரவைக்கு அனுப்பாத பெருங் குறையே, இன்று நாம் நமது வீழ்ச்சிக்குரிய காரணத்தை நினைந்து பார்க்க இயலாமைக்குரிய தடைகளுள் ஒன்றாகும். கல்வெட்டுத் துறையினர் தமது பணியைத் தொடங்கிச் சுமார் 100 ஆண்டுகள் ஆகின்றன; நாம் அரசியல் உரிமை பெற்றுச் சுமார் 25 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் நாம் நமது பழமையும் புதுமையும் கலந்த வாழ்க்கை வரலாற்றை உணர்ந்து செம்மை செய்து கொள்ளும் திறமின்றி, யிருப்பது, நினைக்கும் போது மனத்துக்கு மகிழ்ச்சி யாக இருக்கிறதா? எண்ணுமின்.
---------------

15. குமரகுருபரர் நல்கும் சமயவாழ்வு [#]

தமிழ்ப் பெருமக்களே!

நாட்டின் நலத்தை நினைப்பதிலே நம் எண்ணம் ஊன்றி நிற்கிறது. ஏன் ? நாட்டின் பெருமை நமக்கும் பெருமையைத் தருகிறது. ஆதலின், பொது வாகத் தமிழ்நாடு என்பதை விட்டுச் சிறப்பாக இங்குத் தென்பாண்டி நாட்டைச் சற்று உற்று நோக்குவோம்.
---
[#] 12 - 8 - 50 நெல்லையில் ஆற்றிய விரிவுரை. வித்துவான் அ. நவநீத கிருட்டின் பிள்ளையவர்கள் கேட்டெழுதியது.

தெய்வப்புலமைச் சேக்கிழார் பெருமான் பாண்டி நாட்டின் பழம் பெருமையைத் திறம்படப் பாராட்டினார். "நார்மன்னு சிந்தைப் பல நற்றுறை மாந்தர் போற்றும், பார்மன்னு தொன்மைப் புகழ் பூண்டது பாண்டி நாடு' என்பது அவர் தம் திருவாக்கு. தொன்மைப் புகழ் பூண்டது பாண்டிய நாடு' என்று போற்றினார். இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி வல்லுநர், புதைபொருள் ஆராய்ச்சி வல்லுநர் எல்லோரும் ஒருங்கே முதன் முதல் தோன்றிய நிலம் தென்பாண்டி நாடேயெனத் தெளிவுறப் பேசுகின்றனர்.

இத்தகைய தொன்மைத் தென்பாண்டி நாட்டின்கண் மிகப் பழமை வாய்ந்ததாய்த் திகழும் தெய்வமலை பொதியிலாகும். சிவன் வீற்றிருக்கும் கயிலையும், செந்தமிழ் முனிவன் தங்கும் பொதி யிலும் ஒத்த பெருமை யுடையன. கலையின் வடிவான பெருமுனிவன் அகத்தியன் நிலைபெற்று வாழும் நீடிய பெருமையுடையது இத் தென்பாண்டி நன்னாடு. இங்கே தமிழ்ச் சுவையளிக்கும் தண் பொருநையாறு பொய்யாத நீர் வளத்தைத் தந்து கொண்டிருக்கிறது. ஆற்று வளம் நாட்டிற்கு ஏற்றத்தை நல்கும். சோழ நாட்டைக் காவிரி நாடென்றே போற்றுவர். தென்பாண்டி நாட்டைத் தண்பொருநை நன்னொடு என்னலாம்.

கி.பி. 12- ஆம் நூற்றாண்டிலே சோழநாட்டை யாண்ட இராசேந்திரன் கங்கையாறு வரையில் படையெடுத்துச் சென்று வென்று இமயத்தில் தனது புலிக்கொடியை நாட்டினான். 'கங்கைகொண்ட புவிகாவலன்' என்று போற்றும் பெருமையுற்றான்.

கி.பி. 17-ஆம் நூற்றாண்டிலே தென்பாண்டி நாட்டில் தண்பொருநைக் கரையில் தோன்றிய குமரகுருபரர் கங்கை வரையிலும் தம்மை எதிர்த்த கவிஞரையெல்லாம் சொல்லாற்றலால் வென்று, காசிமன்னனையும் தன்னடிப்படுத்தினார்.

என்று கங்கைக்கரையில் நின்று முழங்கினார்.

கங்கைகொண்ட புவி காவலனாகிய சோழ வேந்தன் இமயத்தில் பொறித்த புலிக்குறி இன்று உண்டோ ? இன்றோ ? அறியோம். ஆனால், கங்கை கொண்ட கவி காவலராய குமரகுருபரர் காசியில் அமைத்த குமாரசாமிமடம் இன்றும் நின்று தமிழின் பெருமை பேசுகிறது ; சைவத்தின் தெய்வ மாண்பைத் தெரிக்கிறது; குமரகுருபரரின் பேராற்றலைக் கூறுகிறது.

ஒரு நாட்டுக்குப் பெருமை அந்நாட்டில் தோன்றிய சான்றோரால் ஆகும். திருமுனைப்பாடி நாட்டின் சிறப்பைக் குறிப்பிடப் புகுந்த சேக்கிழார் பெருமான்,

என்று வியந்து போற்றினார். 'நாவுக்கரசரும் சுந்தரரும் பிறந்தருளும் பெருமையுற்றது திருமுனைப் பாடி நாடு', என்று பாராட்டினார்.

நம் தென்பாண்டி நன்னாடோ குமரகுருபரரும், சிவஞான முனிவரரும் திருவவதாரம் செய்த பெருமையுடையதாகும். இருவரும் சைவத் தெய்வக் கவிஞர் பெருமக்கள். பிற்காலத்தில் குமரகுருபரரைப் போன்று கொழிதமிழ்ப் பாடல் பாடினார் எவருமிலர். அவர் வாக்கே தெய்வ வாக்கு என்று சொல்லத்தகும். அவரைப் போன்று பிற்காலத்தில் சிவஞான முனிவரே உரைவல்ல பெரியாராக விளங்கினார். அவர்தம் உரைபோன்று உரை வரைந்தார் பிற்காலத்து எவருமிலர். ஆகவே இவ்விரு பெரும் புலவர்களும் முறையே பாட்டாலும் உரையாலும் தமிழுலகுக்கு நிகரற்ற பணியாற்றினர்.

குமரகுருபரர் தோன்றிய காலத்தில்தான் மேனாட்டவரும் நம் நாட்டில் புகத் தலைப்பட்டனர். தென்பாண்டி நாட்டில் தான் முதன் முதலில் கிறித்தவ மதத்தைப் பரப்ப முற்பட்டனர். இத்தாலிய நாட்டினின்று நம் நாடு போந்த வீரமாமுனிவர் (Fr. Joseph Beski) கிறித்தவம் பரவச் சீரிய பணியாற்றத் தொடங்கிய காலம். இவர், நம் குமரகுருபர அடிகளாரிடம் மாணவராக இருந்து தமிழ் பயின்றார் என்றும் கூறுப.

இவர் காலத்தில் தென்பாண்டி நாட்டின் ஊர்தோறும் பெருங்கோயில்கள் எழுந்தன. பிற்காலப் பாண்டியர் பல சிவன் கோவில்களை ஆங்காங்குத் தோற்றுவித்தனர். திருப்புடைமருதூர், அத்தியான நல்லூர், அரிகேசரி நல்லூர் முதலிய இடங்களில் லெல்லாம் திருக்கோயில்கள் தோன்றின. அப்போது திருநெல்வேலியை ஆண்ட மன்னன், 'வென்று மண் கொண்ட பூதலவீர வீரமார்த்தாண்ட மாற வர்மன்' எனப்படுவான். இவன் தன் பெயரால் நெல்லைத் திருக்கோவிலில் 'வீரமார்த்தாண்ட மண்டபம்' என்றொரு மண்டபத்தை நிறுவினான். சோபான மண்டபம் ஒன்றைக் கட்டுவித்தான். அதுவே இன்று சோமவார மண்டபம் என்று வழங்கப்படுகின்றது. இம்மன்னன் காலத்தில்தான் நெல்லைத் திருக்கோவிலில் அறுபத்து மூவர் திருவுருவங்கள் வெண்கலத்தால் அமைக்கப்பெற்றன என்று கல்வெட்டொன்று சொல்கின்றது.

இவன் காலத்தில் நெல்லையில் சமயப் பணி யாற்றும் திருமடங்கள் இரண்டு சிறப்புறத் திகழ்ந்தன. தெற்குத் தேர்த்தெருவில் சேக்கிழார் மடமும், வடக்குத் தேர்த்தெருவில் மெய்கண்டார் மடமும் விளங்கின. சேக்கிழார் மடத்தில் இருந்து பயின்றவரே மெய்கண்டார் மடத்துக்குத் தலைவராய் வருதற்குத் தகுதி பெறுவர். அத்தலைவரின் தீக்கைப் பெயர் 'சத்தியஞான தரிசினி' என்பதாகும். சத்தியஞான தரிசினி யென்பது மெய்கண்டாரைக் குறிக்கும் திருப்பெயரே. இச்செய்தியை நெல்லைக் கோவில்
கல்வெட்டொன்று சுட்டுகின்றது.

இங்ஙனம் மன்னரும் செல்வரும் கோவில் களையும் மடங்களையும் நிறுவி, அவற்றின் வாயிலாகச் சமயப்பணியும் கலைப்பணியும் ஆற்றி வந்தனர். கோவில்களில் மக்கட்குச் சமய ஞானம் நல்கும் வியாக்கியான மண்டபங்கள் விளங்கின. ஆதலின், தென்பாண்டி நாட்டில் மக்கள் பால் மனமொழி மெய்மூன்றினும் சைவமணம் கமழ்ந்த காலம் அது. இத்தகைய நலங்கள் நிறைந்த காலத்தில் தான் ஞானசூரியனைப் போலக் குமரகுருபரர் திருவவதாரம் செய்தருளினார். பிறந்த குழந்தை அழுகிறது; ஆனால் ஓசையில்லை . ஐந்தாண்டு வரைக்கும் ஊமையாகவே யிருந்து செந்தில் கந்தவேள் கருணையால் வாய் திறந்து பேசலுற்றார். வாயினைத் திறக்கும்போதே 'முருகா எனத் திறந்தார். முருகன் திருவருளால் திருவாய் திறக்கப்பெற்ற குமரகுருபரர், முருகன் மீது மனமுருகிப் பாமாலை தொடுத்தார். முதன் முதல் அவர் பாடியது 'கந்தர் கலிவெண்பா ' என்னும் செந்தமிழ்ச் சிறுநூலாகும். ஐந்தாண்டுப் பருவத்தில் அருங்கவிதை பாடினார் என்று சொல்லுதல் எங்ஙனம் பொருந்தும்?

சீர்காழியில் தோன்றிய ஞானசம்பந்தர் மூன் றாண்டுப் பருவத்தில் முத்தமிழ்ப் பாடல் இசைக்க வில்லையா? இரண்டாண்டுப் பருவத்தில் மெய் கண்டார் திரண்ட சித்தாந்த உண்மைகள் பொதிந்த சிவஞான போதத்தைச் செப்பவில்லையா? அகத்தியர் அருள் வரத்தால் உதித்தருளிய சிவஞான முனிவர் ஐந்தாம் ஆண்டில் செந்தமிழ்ப் பாடல் பாடவில்லையா? இன்றும் பர்மாவிலே நாலாண்டுக் குழந்தையொன்று பெருங் கணக்குகளையெல்லாம் சொல்லியவுடனே விடை பகர்கின்றதே! இவை யெல்லாம் அரிதில் வாய்க்கப் பெற்ற திறங்கள். முந்தை நல்வினைப் பயனால் முன்னவன் தந்தருளிய அருட்டிறமாகும்.

நக்கீரன் நல்கிய திருமுருகாற்றுப் படைக்குக் குமரகுருபரரின் கந்தர் கலிவெண்பாவில் பொருள் காணலாம். அரிய சித்தாந்த உண்மைகள் நிறைந்த தத்துவநூல் கந்தர் கலிவெண்பா. சைவாகமங்களில் அத்துவப் பிரகரணத்தில் பேசப்படும் அத்துவாப் பகுதிகள் மிகமிக அருமை வாய்ந்தன ; எளிதில் எட்டமுடியாதன . அத்துவாக்களைப் பற்றி யறிவது, கந்தபுராணம் அட்டகாசப் படலத்திற்கு உரை காண்பது போலத்தான். சிறந்த சித்தாந்த வல்லாரும் அத்துவாக்களைப் பற்றிக் கேட்டால் சொல்ல அறியார். அத்தகைய அத்துவாக்களின் இயல்பைத் தெளிவுறத் தம் கந்தர் கலிவெண்பாவில் குமர குருபரர் கூறுகிறார். தெய்வத் திருவருள் கைவந்த மையின் அங்ஙனம் எடுத்துக்காட்டும் ஆற்றல் பெற்றனர்.

குமரகுருபரர், திருமுருகனைக் கண்களால் தரிசித்தார். அவனது திருக்கோலத்தை இனிய பாட்டால் தந்தார்.

யான் எனது என்பது அற்ற இடமே அவனது திருவடி , மோன பரமானந்தம் - முடி , ஞானம் - திருவுரு, இச்சை செயல் அறிவு - கண்கள், அருள் - செங்கை, இருநிலமே சந்நிதி, இங்ஙனமாக விளங்கும் தனிச் சுடர் என்று கண்டு கூறினார். தம்மைப் பேசுவித்த செயல் முருகனுக்கு அத்துணைப் பெருஞ்செயலன்று. ஆதலின் அதற்கு நன்றி செலுத்தல் முறைமையன்று என்று கருதிய கவிஞர், அவன் பால் வேண்டும் விண்ணப்பத்தைப் பாருங்கள்!

குமரகுருபரர் தம் காலத்துச் சமய நிலை, மொழிநிலை, ஆட்சி நிலை இவைகளையெல்லாம் அறிவிக்கும் நோக்குடன் அழகிய பாக்களைத் தம் நூல்களில் இடையிடையே தந்துள்ளார். எடுத்துக் காட்டாக ஒரு பாட்டைக் காண்போம்.

ஆங்கிலேயர் நம் நாட்டில் புகத் தலைப் பட்டார்கள். புறச் சமயக் கொள்கைகளை மக்கள் உள்ளத்தில் புகட்டினர். மதுரையில் தோன்றிய சிவாகமங்களும் செந்தமிழ் இலக்கியங்களும் அழிந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. கீழ்நாடு, மேல் நாட்டினர் ஆட்சிக்குட்பட்டுவிடுமோ என்ற பயம் மக்களிடையே எழுந்தது. களப்பிரர் என்னும் கலிப்பகைஞர் தமிழ்நாட்டைக் கைப்பற்ற முயன்ற னர். மறச்செயல்கள் நாட்டில் தாண்டவமாடத் தலைப்பட்டன. தமிழ் மன்னரின் அரசியலும் பெருங் குடியும் அழியத் தழைப்பட்டன. தமிழ் மன்னர் மூவருள் தலைசிறந்து விளங்கிய பாண்டியர், சோழருக்கொப்பாவர் என்று உணராதாரும் ஓத முற்பட்டனர். இத்தகைய கேடுகள் எல்லாம் தமிழ்நாட்டைச் சூழாவண்ணம் பாண்டிமகளாகத் தோன்றி அங்கயற்கண்ணி அரியாசனம் அமர்ந்து, மதுரைப்பதி தழையத் தழையுங்கொடியாய்த் திகழ்ந்தார் என்று குறிப்பிடுகிறார்.

கருவிலே திருவருள் வாய்த்த குமரகுருபரர், சமயஞானியாய் - தத்துவஞானியாய் - இலக்கிய ஞானியாய் - முற்றும் துறந்த முனிபுங்கவராய்த் திகழ்ந்து தெய்வத் தமிழ் மணம் கமழும் சைவத் திருக்கொடியைக் காசிமாநகரில் சென்று நாட்டிச் சிவனருள் பரப்பிய பெருமையை என்னென்பது!
------------------

16. உமாபதி தேவரான ஞானசிவ தேவர்

இற்றைக்குச் சுமார் 800 ஆண்டுகட்கு முன் நம் தமிழ் நாட்டில் சோழவேந்தரும் பாண்டி வேந்தரும் நாடு காவல் புரிந்து வந்தனர். சோழநாட்டில் கோவிராச கேசரிவர்மனான இரண்டாம் இராசாதி ராசன் ஆட்சிபுரிந்து வந்தான். அப்போது பாண்டிய நாட்டில் மதுரையில் பராக்கிரம பாண்டியனும் திருநெல்வேலியில் குலசேகர பாண்டியனும் இருந்து வந்தனர். சோழ பாண்டியர்கள் தம்முட் பூசலின்றி இனிதிருந்தமையின், நாட்டில் இன்பவாழ்வு நிலவிற்று.

அந்நாளில் ஈழநாட்டில் வாழ்ந்த ஈழ வேந்தர்கள் மிக்க செல்வாக்குடன் இருந்தனர். அவர்கள் பால் பொருளும் படையும் பெருகியிருந்தன. அதனால் அவர்கட்கு நல்ல புகழும் உண்டாகி யிருந்தது. ஈழ வேந்தரது படைப்பெருக்கம் "இடம் சிறிது" என்னும் நினைவை எழுப்பிப் பிற நாடுகளை வென்று அடிப்படுத்த வேண்டுமென்ற தமிழ் வேந்தியல் அவாவையோ, கடல் வாணிகத்தைத் தமக்கே உரிமையாக்கிப் பிறர் கலம் கடலிற் செல்லலாகாதெனத் தடுக்கும் சேரலர் செருக்கையோ அவர்கள் உள்ளத்தில் எழுப்பவில்லை. அதனால், அவர்கள் தம்மை யடைந்தார்க்கு உதவி புரியும் அந்த அளவில் அமைந்தொழுகினர்.

தொண்டை நாட்டில் மேலைப்பகுதிக்குப் பல்குன்றக்கோட்டம் என்ற பெயர் நிலவிற்று. தொண்டை நாடு முற்றும் சோழ வேந்தர் ஆட்சிக் குட்பட்டிருந்த தெனினும் இப்பகுதியில் படைவீடு என்னுமிடத்தைத் தலைநகராகக் கொண்டு சம்புவ ராயர் என்னும் குறுநில மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். அவர்கள் சோழ வேந்தர்கட்கு அவ்வப்போது வேண்டும் படைத்துணை செய்வர். இராசாதிராசன் காலத்தில் படைவீட்டிலிருந்து ஆட்சி செய்த சம்புவராயன் எதிரிலி சோழன் சம்புவராயன் எனப்படுவன்.

பாண்டிய நாட்டு மதுரையில் பராக்கிரம் பாண்டியன் இருந்து வருகையில் திருநெல்வேலிப் பகுதியிலிருந்து ஆட்சி செய்த குலசேகரன் பாண்டி நாடு முழுதிற்கும் தானே தனிவேந்தாக வேண்டு மென்ற ஆசை கொண்டான். அவனுக்குரிய நண்பர்கள், பாண்டிநாடு ஒரு வேந்தனாட்சியில் நிலவுமாயின் அதன் ஆக்கம் பெருகுமெனச் சொல்லி அவனை ஊக்கினர். குலசேகரன் படையும் பொருளும் பெருக்கினான். அவனுடைய மனக் குறிப்புப் பராக்கிரமனுக்குத் தெரிந்தது. தன்னையும் தனது ஆட்சியையும் காத்துக்கொள்ளும் முயற்சியில் அவன் ஈடுபட்டு ஈழவேந்தன் பராக்கிரம பாகுவைப் படைத்துணை புரியுமாறு வேண்டினான்.

ஈழ வேந்தன்பால் இலங்காபுரித் தண்டநாயகன் என்றொரு தானைத்தலைவன் இருந்தான். பெரு வலியும் ஆழ்ந்த சூழ்ச்சியும் அத் தண்டநாயகன்பால் இருந்தன. மறப்புகழ் வேட்கையே அவனது வடிவம். பராக்கிரமன் விடுத்த வேண்டுகோளைக் கண்டதும் தண்ட நாயகற்கு உள்ளம் பூரித்தது. ஈழ நாட்டின் மறப்புகழைத் தமிழகத்தில் நிலைபெறச் செய்தற்கு நல்லதோர் வாய்ப்பு உண்டானதாக எண்ணினான். பண்டைச் சோழ வேந்தரும் பாண்டி மன்னரும் ஈழநாட்டில் தங்கள் புகழொளியைப் பரப்பியிருப்பது அவனுள்ளத்தே பொறாமையுணர்வைத் தோற்றுவித் திருந்தது. இதனால் அவன் பராக்கிரமனுக்கு ஈழப்படை சென்று துணை புரிவது தக்கதே என்று ஈழவந்தனான பராக்கிரமபாகுவுக்கு எடுத்துரைத்தான். தொடக்கத்தில் பராக்கிரமபாகுவுக்குப் பராக்கிரம் பாண்டியன் விடுத்த வேண்டுகோளை ஏற்றற்கு உள்ளம் செல்லவில்லை. மேற்கே கேரள வேணாட்டு வேந்தர்களும் வடக்கே சோழவேந்தரும் பொருளாலும் படையாலும் சிறப்புற்று விளங்க அவர்கள் . துணையை நாடாது தன்னை நாடியது ஈழ வேந்தனுக்கு உண்மையிலேயே ஐயத்தை எழுப்பிற்று. இவ்வகையில் பராக்கிரமபாகு தன் துணைவரையும் ஏனைத் தானைத் தலைவர்களையும் ஆராய்ந்து இலங்காபுரித் தண்டநாயகன் தலைமையிலேயே பெரும் படையொன்றைச் செலுத்தத் துணிந்து அதற்கு ஆவனவற்றைச் செய்யுமாறு பணித்தான்.

பராக்கிரமன் ஈழவேந்தன் துணை நாடுவதையும், ஈழவேந்தன் துணை புரிதற்கு உடன்படுவதையும் திருநெல்வேலியிலிருந்த குலசேகரன் தெரிந்து கொண்டான். ஈழப்படை வந்து சேருவதற்கு முன்பே, பெரும்படை யொன்று கொண்டு சென்ற மதுரையை முற்றிப் பராக்கிரமன் காவலையழித்தான்; பராக்கிரமனுடைய படை குலசேகரன் படைக்கு ஆற்றாது சிதறிக் கெட்டது. தானைத் தலைவரும் போர் மறவரும் மூலைக்கொருவராய் ஓடிவிட்டனர். பராக்கிரமனும் அப்போரில் குலசேகரனாற் கொலையுண்டான்; அவனுடைய மனைவி மக்களும் குலசேகரன் வாட்கு இரையாயினர். உரிமை மகளிருள் சிலர் உயிர்தப்பி மலைநாட்டிற் புகுந்து மறைந்து வாழ்ந்துவந்தனர். அவரிடையே பராக்கிரமனுடைய புதல்வர்களுள் கடைசி மகனான வீர பாண்டியன் மறைவாக மலைநாட்டில் இருந்து வரலானான். இப்போரின் விளைவாகக் குலசேகரன் எண்ணம் நிறைவேறியது. பாண்டி நாடு இவனது ஒருகுடைக்கீழ் வந்தது. திருநெல்வேலியிலிருந்த குலசேகரன் மதுரை நகர்க்கண் பாண்டியரது அரசு கட்டிலேறி முடிவேந்தனாய் விளங்கலுற்றான்.

இந்நிலையில் இலங்காபுரித் தண்டநாயன் தலைமையில் புறப்பட்டுவந்த ஈழப்படை இராமேச்சுரக் கரையில் வந்து இறங்கியது. பராக்கிரமன் கொலையுண்டதும் குலசேகரன் மதுரையிலிருந்து அரசியல் நடத்துவதும் கண்ட தண்டநாயகன் மனம் சினத்தீயால் வெதும்பிப் புகைந்தது. கண்களில் தீப்பொறிகள் பறந்தன. இராமேச்சுரத்துக் கடற் கரையில் காவல் புரிந்திருந்த குறுநிலத் தலைவனை வெருட்டித் துரத்தினான். அதனைத் தனக்கு அடிப் படுத்திப் பாண்டிக்கரையில் இருந்த குந்திக்குளம் என்ற ஊரையும் கைப்பற்றிக் கொண்டான். குந்திக்குளம் குந்துகளம் என்றும் காணப்படுகிறது. இப்போது அது சமரங்கபுரத்துக்கண்மையில் கும்பிகுளம் என்று பெயர் கொண்டு விளங்குகிறது.

இலங்காபுரித் தண்டநாயகன் கடற்கரையைச் சார்ந்துள்ள பகுதியைச் சிறிது சிறிதாகக் கைப் பற்றுவதுகண்ட குலசேகரன், சுந்தரபாண்டியன் என்ற தலைவன் ஒருவரோடு படையொன்றை விடுத்து ஈழப்படையை ஈடழிக்க முயன்றான். பாண்டிப் படை வலியிழந்த பறந்தோடிவிட்டது; சுந்தரபாண்டியன் தோல்வியுற்றான். பின்னர்ப் பாண்டியராசன் என்பவர் தலைமையில் ஒரு பெரும் படை சென்றது. அது கண்டதும் தண்டநாயகன் தானை சீறியெழுந்து சினப்போர் புரிந்து பாண்டிய ராசனைப் புறந்தந்தோடச் செய்தது; அப்போரில் குலசேகரனுக்கு நெருங்கிய துணைவனாய் விளங்கிய ஆளவந்தான் என்னும் தானைத்தலைவன் போர்ப் புண்பட்டு மாய்ந்தான். குலசேகரன் உள்ளத்தில் அசைவு பிறந்தது. இலங்காபுரித் தண்டநாயனுக்குப் பாண்டிய நாட்டில் இடமும் வலியும் கிடைத்தன; எண்ணியவாறு போர்ப்புகமும் எய்துவதாயிற்று.

"பராக்கிரமனைத் தொலைக்கப் புகுந்து பராக்கிரமபாகுவின் பகையுண்டாக்கிக் கொண்டோம்; இனி இதனைக் கூடாதொழியின், பாண்டியர் குடியால் தமிழ்நாட்டிற்குட் பிற நாட்டினர் புகுந்து அரசு நிறுவினர் என்ற பெரும் பழியுண்டாமே" எனக் குலசேகரன் நினைத்தான். நாட்டில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த பராக்கிரமனுடைய தானை மறவர்களைத் தேடித் திரட்டினான். அந்நாளில் கொங்கு நாட்டில் குலசேகரனுக்கு மாமன் ஒருவன் ஆட்சி செய்து கொண்டிருந்தமையின் அவனுடைய படைகளையும் சேர்த்தான். பாண்டிப் படையும் கொங்கப் படையும் சேர்ந்துவரத் தானே அப்படையை முன்னின்று நடத்தி இலங்காபுரித் தண்ட நாயகனுடன் போர் தொடுத்தான்.

பராக்கிரமன் படை மறவர் உள்ளன்போடு போர் செய்யவில்லை; கொங்கப்படை அத்துணைப் படைப்பயிற்சியின்றி யிருந்தது. படையினது தொகை பெருகியிருந்ததே-யன்றி வலி பெருகவில்லை . ஈழப் படையில் கிளர்ச்சியும் மறமும் படை தொடுப்பும் கண்டவளவிலேயே குலசேகரன் படை வலிதளர்ந்து சிதையலுற்றது. பராக்கிரமனுடைய படைமறவருட் சிலர் ஈழப்படையுடன் கலந்து இலங்காபுரித் தண்டநாயகனுக்கே துணை செய்தனர். முதலில் குலசேகரன் தோற்றான். மதுரைநகர் தண்டநாயகன் கைக்கு வந்தது. அவன் மறச் சான்றோர்களை மலைநாட்டுக்குச் செலுத்திப் பராக்கிரமன் மகன் வீரபாண்டியனைத் தேடிக் கொணர்ந்து அவனையே பாண்டி வேந்தனாக்கினான்.

குலசேகரனோடு நடத்திய போரில் கீழை மங்கலம், மேலைமங்கலம் என்ற சிலவூர்கள் தண்டநாயகன் வசமானபோது அவற்றிற்குக் கண்டதேவமழவராயன் என்பவனைத் தலை வனாக்கினான்; தொண்டி, திருவேகம்பம் முதலிய பகுதிகட்கு மழவ சக்கரவர்த்தி யென்பவனைத் தலைவனாக்கினான். இவ்வாறே புறத்தே பாண்டி நாட்டவர்க்குச் சிறப்புச் செய்யினும் அந்த நாட்டு மக்கட்கு அத் தண்டநாயகன் மிக்க துன்பம் செய்தான். ஊர்களைச் சூறையாடினன்; வயல்களில் தீ வைத்தனன்; உயிர்க்கொலை பல புரிந்தனன். இதனால், அத் தலைவர்கள் தண்டநாயகன் காட்டும் அன்பில் ஐயமுற்றனர்; செய்யும் சிறப்பில் நம்பிக்கை இழந்தனர்.

இது நிற்க, படையிழந்து பரிபவப்பட்டோடிய குலசேகரன் தென்பாண்டி நாட்டுட் புகுந்து பெரும் படை யொன்றைத் திரட்டிக் கொண்டு வந்தான். அவன் வரவுகண்ட மழவராயனும் மழவசக்கரவர்த்தி யும் குலசேகரனோடு கூடிக் கொண்டு மதுரையை முற்றுவாராயினர். அதனால் பேரச்சம் கொண்ட வீரபாண்டியன் மதுரையை விட்டு ஓடிவிட்டான். தண்டநாயகனும் கடற்கரைப் பகுதிக்கோடி ஈழ வேந்தனைப்படை யொன்றைத் துணையாகச் செலுத்துமாறு வேண்டிக் கொண்டான். வேண்டிய வாறே ஈழநாட்டினின்றும் வந்த பெரும் புதுப் படையுடன் கூடி இலங்காபுரித் தண்டநாயகன் குலசேகரனை மறுபடியும் பொருது வென்று வெருட்டிவிட்டு வீரபாண்டியனுக்கு மதுரையில் முடிசூட்டி வெற்றிவிழா நடத்தினான். பின் பொரு கால் குலசேகரன் சீவில்லிப்புத்தூரருகே ஈழப்படை யொடு பொருது தோற்றுத் திருநெல்வேலிப் பகுதிக்குச் சென்று சேர்ந்தான்.

பன்முறை முயன்று வெற்றி பெறாமை ஒருபுறம் வருத்த, மற்றொருபுறம் தன் செயல்களால் ஏதில் ஈழப்படைக்குத் தமிழ் நாட்டில் ஏற்றமும் இடமும் உண்டானது குலசேகரனுக்குப் பெருவருத்தத்தைச் செய்தது. அந்நாளில் சேர நாட்டரசரினும் சோழ வேந்தரே உலகு புகழும் போர்ப்புகழ் எய்தியிருந்தனர். அவர்களால் தான் தமிழகத்தில் தனிப் புகழும் கெடாது நிலைபெற்றுவந்தது. குலசேகரன் அதனை எண்ணினான். இராசகேசரிவன்மனான இரண்டாம் இராசாதிராசன்பால் சென்று நிகழ்ந்தது முற்றும் அவனுக்கு நன்கு எடுத்து இசைத்தான்.

இரண்டாம் இராசாதிராசன் வேண்டும் அளவு தனிப் பெரும்படை யொன்றைக் குலசேகரனுக்குத் துணைபுரியுமாறு அனுப்பியிருந்தான். அப்படைக்குத் தலைவனாக எதிரில் சோழச் சம்புவராயன் மகனான திருச்சிற்றம்பலமுடையான் பெருமாள் நம்பிப் பல்லவராயன் என்பான் சென்றான். சோழர் படையின் தென்றிசைச் செலவு கண்ட மாத்திரை பாண்டியப் படை உடைந்தோடிற்று; பராக்கிரமன் மகன் வீரபாண்டியனும் முன்போல் ஓடிவிட்டான். சிங்களப்படை சிதறுண்டு போயிற்று. குலசேகரன் மதுரைக்குரியவனானான். இதனையறிந்த பராக்கிரம். பாகு மறுபடியும் இலங்காபுரித் தண்டநாயகனையும் சயதர தண்டநாயகனையும் இரு பெரும் படைகட்குத் தலைவராக்கித் தமிழ் நாட்டிற்குட் செலுத்தினான். ஈழப்படையும் குலசேகரன் தூசிப்படையும், தொண்டி, பாசிப்பட்டினம் என்ற இடங்களிற் கைகலந்து பொருந்தன. அவற்றுள் ஈழப்படையே வெற்றி பெற்றது. அதனால் அப்பகுதிகளில் வாழ்ந்த மறவர்களும் பிறரும் ஈழப்படைத் தலைவர்கட்கஞ்சி அவர்வழி நிற்பாராயினர். அவர்கட்குத் தலைவர் னான மாளவ சக்கரவர்த்தி யென்னும் ஒருவனுக்குப் பொன்னும் பொருளும் தந்து தமக்குத் துணையிருக்கு மாறு மனத்தைத் திரித்துக் கொண்டனர். அவரது படையும் வடக்கு நோக்கி முன்னேறுவதாயிற்று. திருச்சிராப்பள்ளிப் பகுதியைச் சேர்ந்த ஆலம் பாக்கத்தில் வாழ்ந்த சிவப் பிராமணர் சிலர் ஈழப்படை வடக்கு நோக்கி வருவது கேட்டஞ்சி ஊரை விட்டு ஓடத் தலைப்பட்டனர்.

பின்னர்ச் சென்ற சோழர் பெரும்படையுடன் பாண்டிப் படையும் கொங்கு நாட்டுத் தலைவர் விடுத்த கொங்குப்படையும் வந்து சேர்ந்தன. முப்பெரும் படையும் கடல் பெயர்ந்து செல்வது போல நம்பிப் பல்லவராயன் தலைமையில் செல்லலுற்றன. ஈழப்படை வடக்கே காளப்பேர் நோக்கி வந்து கொண்டிருந்தது.

தொண்டை நாட்டில் காஞ்சி மாநகரைச் சூழ இருக்கும் பகுதிக்கு எயிற்கோட்டம் என்பது பெயர். கங்கை பாயும் நாடாகிய கௌட தேசத்திலிருந்து சிவாச்சாரியார் பலர் தென்னாட்டிற்கு வந்து மடங்கள் நிறுவி, மக்களுக்குச் சிவதன்மங்களை சிவாகம நெறிகளை அறிவுறுத்தி வந்தனர். தீக்கை முறைகளை முதற்கண் உண்டாக்கினவர்கள் அவர்களே. கள சூரி வேந்தரும் மாளவ வேந்தரும் சோழ வேந்தரும் பிறரும் இம்மடங்கள் புரிந்த சிவப்பணியின் பொருட்டு ஊர்களும் விளை நிலங்களும் பொருளும் தந்து சிறப்பித்தனர். அவர்கள் நிறுவிய மடங்கள் கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய நாடுகளில் ஆங்காங்கு இருந்து சமயத் தொண்டு புரிந்தன. மக்கட்குச் சமயக் கல்வி கற்பித்தலும், மருத்துவச்சாலை நிறுவி உடற் குண்டாகும் நோய்களைப் போக்குவதும், காணார் கேளார் அனாதைச் சிறுவர்கள் ஆகியோரைத் தொகுத்து ஆதரித்து அறிவு நல்குவதும் இம்மடங்கள் செய்த சிறந்த பணிகள். இதனால் நாடாளும் வேந்தர் இம் மடங்களின் தலைவர் பால் ஞானவுரை கேட்டு மாணவரானது பெருஞ் சிறப்பெனக் கருதினர்; மாணவரான வேந்தர் சிலர் தம்மை மாணவரென் னாது புதல்வரெனவே கூறிக்கொண்டனர். சமயம் சிசேடம் நிருமாணம் எனப்படும் மூவகைத் தீக்கைகளையும் வேந்தர்கள் பெற்றனர். கள் சூரி கணபதி வேந்தன் தான் பெற்ற தீக்கை காரணமாகத் தன்னைத் தீக்கா குரவர்க்குப் புதல்வனாகவே கூறிக்கொண்டான். பெருவேந்தர்களை அடி யொற்றிக் குறுநிலத் தலைவர்களும் இவ்வாறு சிவதீக்கை பெற்ற "ஞானப் புதல்வர்களாய்'' விளங்கினர். சிவதீக்கை செய்து சிவதன்மங்களை அருளிய சிவாச்சாரியர் பலர் வேந்தர்கட்கு "ராஜ குரு" வாக இருந்தனர். சிவாச்சாரியர்களைச் சிவமென்றே கருதி வழிபட்டனர். இராசாதிராசன் காலத்தில் திருவொற்றியூரில் பெரியதோர் சைவமடம் இருந்தது. அதற்குத் தலைவர் சதுரானை பண்டிதர் ; அதனால் அது சதுரானை பண்டிதர் மடம் என்று பெயர் பெற்றது. அதன்கண் சிவாகமங்கள் மக்கட்கு உரைக்கப்பெற்றன. மடத்து ஆசிரியர் திருக்கோயில்களில் வியாகரணம் முதலிய கல்வி நெறிகளைக் கற்பித்தனர். இது கற்பிக்கும் மண்டபத்துக் வியாகரண தான மண்டபம் என்றும் பெயர். அம்மண்டபத்தில் திருவிழாக்காலங்களில் சதுரானை பண்டிதர் மடத்துச் சான்றோர், அங்கு வந்து கூடும் மக்களைத் தொகுத்துச் சமயச் சொற்பொழிவுகள் செய்தனர். அச் சொற்பொழிவு கட்கு நாடாளும் வேந்தரும் வந்திருப்பர். பங்குனி உத்திரவிழாவொன்றில் திருவொற்றியூரில் இராசாதி ராசன் வந்திருந்து கேட்க, சதுரானை மடத்து வாகீச பண்டிதர் என்பவர் ஆளுடைய நம்பிகளின் வரலாற்றைச் சொற்பொழிவு செய்தாரென அக் கோயில் கல்வெட்டொன்று கூறுகின்றது. இவ்வாறு நாட்டில் ஆங்காங்கு மக்கட்குச் சமயவறிவும் சமய வொழுக்கமும் மடத்துத் தலைவர்களால் கற்பிக்கப் பெற்று வந்தமை நாட்டு வரலாற்றைப் பயில்வோர் இல்லாமையால் மறைந்து போயிற்று. மடங்கட்கு அளவிறந்த பொருளும் தங்கட்குரிய அறத்துக்குப் புறம்பான தொழில்களும் உண்டாகவே, மடத் தலைவர்கள் ஏனைப் பெரிய பெரிய இல்லற மிராசுதார்களைப் போலத் துறவற மிராசுதார்களாய் விட்டனர்.

அந்நாளில் உமாபதி தேவரென்னும் சான்றோர் காஞ்சி நகர்க்குத் தெற்கில் ஏழெட்டுக்கல் தொலைவி லிருக்கும் மாகறல் என்னுமிடத்தில் மடம் ஒன்று நிறுவி மக்கட்குச் சிவதன்மங்களையும் சிவ ஞானத்தையும் அறிவுறுத்தி வந்தார். சிவஞானச் செம்பொருளை வரையாது வழங்கியது பற்றி அவரை ஞானசிவதேவரென்றும் மக்கள் பாராட்டிப் பரவினர். அப் பகுதிக்குத் தலைவனாகிய எதிரிலி சோழச் சம்புவராயன் அவர்பால் தீக்கை பெற்று அவர்க்கு ஞானப்புதல்வனானான். அவர் இனிதிருந்து தம்முடைய சமயப் பணிகளை நன்கனம் ஆற்றுதற் பொருட்டுப் பொன்னும் பொருளும் மிகுதியும் நல்கினான். அவர் செய்யும் வழிபாட்டு முறைகளில் சம்புவராயன் உள்ளத்தில் மிக நம்பிக்கை யிருந்தது. அவர் எண்ணுவது எண்ணியவாறே நிகழுமென எண்ணினான். எத்தகைய அரசியல் நிகழ்ச்சிக்கும் அவருடைய அறவுரையும் அறிவுரை யும் அவனுக்கு வேண்டியிருந்தன.

இந்நிலையில், சோழவேந்தன் பணிமேற் கொண்டு தன் மகன் பல்லவராயன், பாண்டியன் குலசேகரன் பொருட்டுச் சோழர் படைத் தலைவர் னாய்ச் சென்றிருப்பதும், போகும் ஈழப்படையை எதிர்த்து நிகழ்வதும், தொடக்கத்தில் பாண்டிப்படை ஈழப்படைக்குத் தோற்றதும் பின்பு கொங்குநாட்டுத் தானை வந்து சோழர் படையுடன் கூடிப் பாண்டிப் படைக்குத் துணையாய்ப் போர்த்தொடுத்திருப்பதும் எதிரிலிசோழன் கேள்வியுற்றான். ஈழப்படைத் தலைவர்கள் தாம் வென்ற பகுதிகளில் மக்களைக் கொன்றும், ஊர்களைத் தீக்கிரையாக்கியும் கோயில் களைச் சூறையாடியும் கொடும்பாடு செய்வது சம்புவராயனுக்குத் தெரிந்தன. ஈழர்கள் செய்யும் கொடுஞ்செயல்களைக் கேட்குந்தோறும் சம்பவ ராயன் உள்ளத்தில் கலக்கம் தோன்றுவதாயிற்று. பாண்டிநாட்டு வடவெல்லைநோக்கி முன்னேறி வரும் ஈழப்படை சோழநாட்டிற்கும் புகுமோ என்றோ ரெண்ணம் தோன்றி அவன் மனத்தை அலைப்பதாயிற்று. இரவு பகல் கண்ணுறக்கம் இலனானான் எதிரிலிசோழச் சம்புவராயன்.

ஒருநாள் தன் மனக்கவலையை ஞான குருவாகிய ஞான சிவதேவரிடம் தெரிவிக்கக் கருதிப் படைவீட்டினின்றும் புறப்பட்டு எழிற்கோட்டத்து ஆற்பாக்கத்திற்குச் சென்றான். சம்புவராயனது வரவறிந்த ஞானசிவதேவர் அவனை அன்புகனிய வரவேற்று நல்வாழ்த்து வழங்கினார். வேந்தன் அவருடைய திருவடியில் வீழ்ந்து வணங்கி, அரசியல் உலகில் பாண்டி நாட்டுத் தலைவர்கட்கும் ஈழ நாட்டுத் தலைவர்கட்கும் இடையே போர் நிகழும் செய்திகளை விரிவாக எடுத்து மொழிந்தான்; முடிவில் தன் மனக்கவலையைத் தெரிவித்து, "இது எங்ஙனேயாமோ என்று விசாரம் தோன்றி வருத்துகிறதென்று முறையிட்டான்.

அது கேட்டதும் ஞானசிவதேவர் சம்புவராயன் உள்ளத்தில் நிகழும் அலமரலைப் போக்குவது குறித்து, அவர் பயின்றுள்ள புராண இதிகாசங்களில் கண்ட நிகழ்ச்சிகள் பல எடுத்தோதி ஆறுதல் மொழிந்து, திருவருளியக்கத்தின் சிறப்பையும், அதனையுணர்ந்து அதன்வழி நிற்பார்க்கு "இடும்பையும் இடுக்கணும் பரிவும் துன்பமும் கடும்பகற்பட்ட பனிபோல் மறைந்தொழியும்" என்ற திறத்தையும் சைவாகமங்கள் சைவத் திருமுறைகள் வாயிலாக எடுத்தோதித் தெருட்டினார். அவ்வுரைகளால் ஒருவாறு தெளிவுற்றானாயினும், ஞானாசிரி யரை மறுபடியும் வணங்கி, "ஈழப்படையாகிறது சாலவும் பாபகர்மாக்கள் நிறைந்தது; அவர்கள் சோழமண்டலத் தெல்லையிலே புகுதில் ஸ்ரீமகா தேவர் கோயில் உள்ளிட்ட தேவர்கள் கோயிலுக்கும் பிராமணருக்கும் ராஷ்டரத்துக்கும் அடங்க விரோத முண்டாகும்; இதற்குப் பரிகாரமாக ஜபஹோமார்ச் சனங்களால் எல்லாப் படியாலும் அவர்கள் அபிஷ்டம் அதம் பண்ணியருள வேண்டும்'' என்று வேண்டிக்கொண்டான்.

ஞான சிவதேவர் சம்புவராயனுடைய உள் வேட்கை தெரிய விளங்கியதும், தானும் மனம் தெரிந்து, "ஈழப்படையாகிறது, சாலாபாஷ்டருமாய்த் துர்ச்சனருமாய்த் திருவிராமேஷ்வரத்தில் தேர் கோயிலைத் திருக்காப்புக் கொண்டு பூஜைமுட்டப் பண்ணி அங்குள்ள ஸ்ரீ பண்டாரமெல்லாம் கைக்கள் பூசலிலே அறப்பட்டுத் துறப்புண்டு போம்படிக்கு அதிருஷ்ட முகத்தாலே வேண்டும் யத்னம் பண்ணு கிறோம்'' என்று சொல்லி இரண்டு நாட்குப்பின் சாம்புவராயன் முன்பிலே "அகோர சுபூஜை” யைத் தொடங்கினார். சம்புவராயனும் அந்தப் "பூஜை"யைத் தொடங்கி வைத்துவிட்டுப் படைவீடு சென்று சேர்ந்து போர்க்களத்தில் செயற்குரிய அரசியற் செயல்முறைகளைச் செய்து கொண்டிருந் தான். ஆற்பாக்கத்தில் ஞானசிவதேவரது "அகோரசு பூஜுை” இருபத்தெட்டு நாட்கள் நடந்தது.

இதற்கிடையே, பாண்டி நாட்டில் சோழ பாண்டியர் படையும் ஈழப்படையும் கடும் போர் புரிந்தன. ஈழப்படைத் தலைவர்கள் தொண்டி, தேனிப்பட்டினம், மானாமதுரை, நெட்டூர், சீவில்லி புத்தூர், வேலங்குடி, திருப்புத்தூர், விக்கிரமங்கலம் முதலிய இடங்களில் பாண்டிப்படையை வென்றும் வெருட்டியும் மேன்மையுற்றார்கள் : ஆயினும் நாட்டின் பல இடங்களிலும் சோழர் படையால் அலைப்புண்டு திரிந்தமையின் ஈழப்படை நாளடை வில் வலிகுன்றத் தலைப்பட்டது. இடையிடையே இருந்த உள்நாட்டுத் தலைவர்களின் ஆதரவைப் பொருள் கொடுத்து விலைக்கு வாங்கித் திரித்தது னால் ஈழத்தலைவர் பால் பொருட்குறைவும் உண்டாயிற்று. ஈழ நாட்டு மறவர் நாட்டு மக்கள் பால் அன்பின்றித் துன்பமே மிகச் செய்தமையால் மக்கட்கு அவர்கள் பால் வெறுப்பும் பகைமையும் இயல்பாகவே உண்டாய்விட்டன.

ஒற்றர்கள் வாயிலாக ஈழப்படைக் குளதாகிய குறைபாட்டினையுணர்ந்த சோழர் படைத்தலைவர் வேறொரு படையினைத் துணை செய்யவிடுமாறு சோழவேந்தனை வேண்டினர். வேண்டியவாறே பெரும்படை யொன்று விரைந்து வந்து சேர்ந்தது. சோழர் பெரும்படை புதிது வந்தணைந்த பெரும் படையுடன் ஈழப்படையை எதிர்நின்று தாக்கி அதனை ஈடழிக்கலுற்றது. மறத்தீக் கிளர்ந்தெழப் பொரும் தமிழ்ப் படைமுன் ஈழப்படை எதிர் நிற்கலாற்றாது உடைந்தோடலுற்றது. ஈழப்படைக்குத் துணை செய்த பாண்டித்தலைவர் சிலர் இருந்தவிடம் தெரியாதவாறு ஓடி ஒளிந்தனர். ஈழப்படை இதுகாறும் பெற்றுப் போந்த வெற்றியெல்லாம் பகற்கனவாய் மறைந்தழிந்தன.

இவ்வாறு நாடோறும் தமிழ்ப்படையை வெற்றிசிறந்து மிகுவது கண்ட குறுநிலத் தலைவர். பலரும் சோழர்படையில் பக்கம் நின்று துணை செய்வாராயினர். ஈழப்படைத் தலைவர்களான இலங்காபுரித்தண்ட நாயகனும் சயதர தண்ட நாயகனும் அவர்கட்குத் துணையாக வந்த தானைத் தலைவர்களும் இனி, இங்கே போர்புரிந்து வெற்றி பெறுவதென்பது இயலாது எனத் தெரிந்து தம் ஈழநாட்டிற்கு ஓடிவிட்டனர். பாண்டியன் குல சேகரனுடைய ஆட்சி நிலைபேறு கொண்டது.

இவ்வெற்றி நலத்தால் சோழவேந்தனான இராசாதிராசனது புகழ் பெருகிற்று. பாண்டி நாட்டு மக்கள் சோழவேந்தன் படை மறவரைப் பாராட்டி வாழ்ந்தனர் படைத் தலைவனான பல்லவராயன், சோழர்படைக்கு எய்திய வெற்றி நலத்தையும் வேந்தன் புகழ்ப்பெருக்கத்தையும் தன் தந்தைக்குத் திருமுகமெழுதித் தெரிவித்தான். எதிரில் சோழன் இன்பக்கடலில் மூழ்கினான். தமிழ்ப்படை பெற்ற வெற்றிக்கு ஞானசிவ தேவரது "அகோர சுபூஜை" காரணம் என எதிரிலி. சோழச் சம்புவராயன் எண்ணினான்; நேரே ஞானசிவர்பால் சென்றான்.

சம்புவராயன் வந்து சேருமுன் ஞானசிவ தேவருக்குச் செய்தி தெரிந்துவிட்டது. அவருக்கும் மகிழ்ச்சி மிகுந்தது. இறைவன் திருவருள் தான் இவ்வெற்றியை நல்கிற்றென அவரும் எண்ணி அத்திருவருளை வாழ்த்தினார். சம்புவராயனுக்கு ஞானசிவ தேவர்பால் பெருமதிப்பும் பேரன்பும் உண்டாயின. ஞானசிவ தேவருடைய திருவடிகளில் பன்முறையும் வீழ்ந்து வணங்கிப் பரவினான். முடிவில், அவரைக் கைதொழுது, "தேவர் செய்த அதிருஷ்டயத்னமாய் இப்படிப் பலித்தது; இதற்குத் தேவர் ஸ்ரீபாத பூஜையாக நான் தருவதை ஏற்றருள வேண்டும்,'' என்று இறைஞ்சினான். ஞானசிவ தேவர், சம்புவராயனை நோக்கி, "நீர் நமக்கு ஏதேனும் முன்பு குறைவாகச் செய்ததுண்டோ ? ஒன்றும் இல்லை ; எல்லாம் உம்முடையனவாக இருக்கின்றதே'' என்றார். “தேவர் பாத பூஜையாக இப்போது : ஏதேனும் தரவேண்டும் என்று என் உள்ளம் விரும்பு கின்றது" என்று சம்புவராயன் வற்புறுத்தவும் ஞானாசிரியர், "அவஸ்யம் ஏதேனும் தரவேண்டும் மென்றிருந்தால் ஆற்பாக்கமாகிற இந்த ஊரைச் செம்பினும் கல்லினும் வெட்டித் தருவது” என்று தெரிவித்தார்.

பின்னர்ச் சம்புவராயன், சோழவேந்தனது ஆணை பெற்று அவனது ஐந்தாமாண்டு நிகழ்ச்சி யாக, "ஜயங்கொண்ட சோழ மண்டலத்து எயிற் கோட்டத்து மாகறல் நாட்டு ஆற்பாக்கத்து நன்செய் புன்செய் அகப்பட விளை நிலம் நூற்றறுபத்தேழு வேலியும் எரிகோலும் நத்தமும் குட்டமும் கிணறும் மேனோக்கின மரமும் அகப்பட நாற்பாற் கெல்லை யுட்பட்ட நிலம் வெள்ளவாரிபணைக்கூலி தறிவிறை தட்டார்ப் பாட்டம் அந்தா ராயம் உட்பட ஆயமெல்லாம்கப்பட்ட ஏகபோகமாக இறையிலி யாகக் கொடதேசத்துத் தக்ஷிணராடத்துக் கங்கோஜி சவர்ண கோத்திர மகாமகேஸ்வர ஸ்ருதி ஸ்மிருதி சிந்தே காரநவஸ்யதன் மாஸ்தை உமாபதி தேவரான ஞானசிவ தேவர்க்கு நீர்வார்த்துக் கொடுத்துச் சூரிய சந்திரார்களுள்ள தனையும் செல்வதாகக் கல்லிலும் செம்பிலும் வெட்டிக் கொடுத்தேன் எதிரிலி சோழச் சம்புவராயனேன்,'' என்று கல்வெட்டுமாறு பணித்தான். இஃது ஆற்பாக்கத்துச் சிவன் கோயில் தென்சுவரில் இன்றும் யாவரும் காணக் காட்சி யளித்துக் கொண்டுள்ளது.
--------

This file was last updated on 08 March 2019.
Feel free to send the corrections to the .